Tamil Novels
Ninai Saranadaithen kanamma Precap 5
இத்தனை வருடங்களில் இப்படி ஒரு நாள் வரும் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லையே. கிடைக்காது என்று எண்ணி இருந்த தன் அன்னையின் பாசம் கிடைக்க அவனுக்கு அந்த நேரத்தை விட மனதே இல்லை....
தன்னையே கட்டுப்படுத்த முடியாத நிலையில் உணர்ச்சி வசப்பட்டு போனவன் தன்னையும் அறியாமல் "அம்மா "...
ஜாலியா ஒரு எபிலாக்
ஆறேழு வருடங்களுக்கு பிறகு ...
ரங்கப்பாவும் தாமோதரும் நூற்றியெட்டு திவ்ய தேச யாத்திரை சென்றிருந்தனர். மதிம்மா இரு வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்திருந்தார்.
ஆரவ்-விற்கு அவனது தாய் தந்தை குறித்து தெரிய வந்திருந்தது, அவன் அதை இலகுவாக எடுத்துக் கொண்டான். அவன் மட்டுமல்ல, விதுவுமே. பிள்ளைகளை பொறுத்தமட்டில் அவர்கள் நண்பர்கள் பிறகுதான் சகோதரர்கள். (முதலிலேயே...
அத்தியாயம் 24
நான்கு மாதங்கள் கடந்திருந்தது. அர்ஜுனும், மாலினியும் இறுதியாண்டுக்கு காலடி எடுத்து வைத்திருந்தனர். இருவரும் ஒன்றாகத்தான் பைக்கில் காலேஜ் சென்று வந்து கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் அர்ஜுனின் வண்டியில் ஏறுவதற்கே பயந்த மாலினி அவனோடு செல்லும் அந்த பயணத்தை ரசிக்கலானாள். அதை இன்ஸ்டாகிராம் தோழி கிருஷ்ணாவிடம் வேறு பகிர்ந்துகொள்ள சண்டே கூட வெளியே! செல்லலாமா? என்று வந்து...
முதலா முடிவா – 8
“அரவிந்த், எங்கடா புடிச்ச இந்த சாக்பீஸை? எழுதவே மாட்டேங்குது?”
விஷ்வா ஒரு விரலால் சாக் கட்டியை மேலிருந்து கீழே வருடினார். கண்ணுக்கு சட்டென்று புலப்படாத, சாக் கட்டியை சுற்றி வட்டமான ஒரு சின்னஞ்சிறிய மேடு அதன் நடுவில் இருந்ததை விரலால் உணரமுடிந்தது. அதை உற்று கவனித்தவர், குச்சியின் மேல் பாகத்தை கெட்டியாய்...
அத்தியாயம் 12 3
கனடா போன சசி, இந்தியா திரும்புவதாக சொன்ன மூன்று மாதங்கள்.. ஆறாகி பின் ஏழானது. அப்போதும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் செட்டில் செய்து வருவதற்கு மேலும் பத்திருபது நாட்களானது.
இடைப்பட்ட நாட்களில் சசி, போனில் அனைவரிடமும் (நறுமுகையின் குடும்பத்தினர்) நன்றாக பேசி பழகியிருந்தான். கனடாவில் இருந்த நவநீத்-த்ற்கு தன்னிடம் இருந்த அவனுக்கு உபயோகப்படும்படியான...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 09
" May I come in sir " என்ற குரல் கேட்கவும் ,,"yes come in "என்று கம்பிரமான குரலில் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்த அவன் அதிர்ச்சியில் அப்படியே எழுந்து நின்று விட்டான்.
மீனுவிற்கு ஒன்றும் புரியவில்லை. தீடிரென்று எதற்காக இவர் என்னை பார்த்து எழுந்து நிற்கிறார் என்று ,,"ஒஒஒ நமக்கு...
அத்தியாயம் - 28
சில வினாடி அமைதிக்குப் பின் ஆன்ம இணைப்பில், “இளவரசி…” என்றது பவளனின் குரல்.
பவளனைத் தொடர்பு கொள்ள நினைத்து அவனை அழைத்துவிட்ட போதும் அவந்திகா, அவன் உடனே தொடர்பில் பேசக் கூடுமென்று எண்ணவில்லை. அதனால் அவன் குரல் கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் முகம் மலர்ந்தது.
குரலில் ஒரு பொழிவுடன், “பவளன் உங்களிடம் சிலது...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 8
மறுநாள் மாலையில் சுமித்ரா புதுப் பள்ளி கட்டிடத்திற்குக் கலாவதியை சந்திக்கச் சென்றாள். அப்போது பிரேமும் அங்கேதான் இருந்தான்.
கலாவதி அவளைக் கேள்வியாகப் பார்க்க... சுமித்ரா எடுத்ததும் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“மேடம், எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.” சுமித்ரா மகிழ்ச்சியாகச் சொல்ல... கேட்ட கலாவதியின் முகம்...
அத்தியாயம் - 27
ஆனால், “எட்டாவதாகவும் ஒன்பதாவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் தெரியவில்லை. ஒருவேளை, அவர்களின் உள்ளுறுப்பு பாதிப்புற்றிருக்குமோ?” என்று முகவாயில் கைமுஷ்டியாக்கி வைத்தவிதமாக அவர்களைக் கேட்டாள் அவந்திகா.
முகிலன், "வாய்பிருக்கிறது.” என்று அருகிலிருந்த அவந்திகாவின் தோள்மீது முன்பு யாளியாக இருக்கும்போது கைப்போடுவதுப் போலக் கைப்போட்டு, அவள்புரம் முகம் திருப்பி, “ஒருமுறை நீ கடைசி...
அத்தியாயம் 12 2
ரங்கப்பா சசியோடு பேசிய தினமே மனைவியிடம் அனைத்தையும் தெளிவாக கூறினார். அனைத்தையும் தெரிந்து கொண்ட மதிநாயகிக்கு மகளின் மேல் வருத்தம் வந்த போதிலும், இப்போது அதை நிவர்த்திக்க வாய்ப்பும் வந்துள்ளதே என்பதில் ஒரு ஆறுதல். கூடுதலாக, "இப்படி ஏதாச்சும் இருக்கும்னு நெனைச்சேன், இல்லன்னா ஒரே பொண்ணு வாழ்க்கைய நீங்க இப்படி அசால்டா...
அத்தியாயம் 23
அதீசனுக்கு என்ன பேசுவது, மஞ்சரிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே! புரியவில்லை. என்ன மாதிரியான கஷ்டங்களையெல்லாம் அனுபவித்திருக்கிறாள்.
"சாரி வாராகி. நான் மட்டும் அன்னைக்கே! ஊட்டில வச்சி உன் கிட்ட பேசி இருந்தா உனக்கு இப்படி எல்லாம் நடந்திருக்காது" என்று வருந்த
"எல்லாம் அவவங்க விதிப்படிதான் நடக்கும். விடுங்க, நடந்ததையே! நினைச்சி கிட்டு இருந்தா நம்மளால வாழ...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 7
சுமித்ரா விலக விலகத்தான் ப்ரேம் இன்னும் தீவிரமாக அவளைத் திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்குச் சுமித்ராவிடம் எந்தக் குறையும் இல்லை... அதனால் தினமுமே வந்து சுமித்ராவிடம் தன்னுடைய விருப்பத்தை மறைமுகமாகத் தெரியபடுத்தினான்.
அதே நேரம் சுமித்ராவும் மிகவும் தெளிவாக இருந்தாள். தான் பிரேமின் விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தால்... அது...
அத்தியாயம் 22
அசந்து தூங்கும் மஞ்சரி எழுந்துகொள்ளவே! காலை ஏழு மணி ஆகி விடும். அவள் எழுந்துகொள்ளும் பொழுது பாண்டி வீட்டில் இருக்கானா? இல்லையா என்று தெரியாது.
"சீக்கிரம் சீக்கிரம் இத சாப்பிட்டு வேலைய பாரு" என்ற வைஜயந்தியின் குரல்தான் அவள் காதில் கேக்கும்.
"இருங்க அத்த சாமி கும்பிட்டுட்டு வரேன்" என்றால்
"எந்த சாமியும் வந்து உன்ன இங்க...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 6
சுபத்ரா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் சென்று விட்டது. ஈஸ்வரி நினைத்தது போல் சுமித்ரா கல்யாணத்திற்குப் பணம் சேர்க்கத்தான் முடியவில்லை.
முதல் காரணம் இன்னும் திலிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்து சுபத்ராவுக்கு ஆடி, தீபாவளி எனச் சீர் செய்யவே சரியாக இருந்தது.
சுமித்ராவின் சம்பளத்தை மட்டும் எடுக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டு வந்தனர்....
அத்தியாயம் 21
நிச்சயதார்த்தம் முடிந்து மஞ்சரி அறைக்கு வந்த பின் அவள் தோழிகள் சில அவளை கேலி செய்ய ஆரம்பித்துக்கொண்டிருந்தனர். மஞ்சரிக்கு முத்துப்பாண்டியின் பார்வையை வைத்து அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ! என்ற எண்ணம்தான் தோன்றியது.
ஆனால் அவள் எண்ணம் தவறு எனும் விதமாக தூங்க செல்லும் நேரத்தில் அவள் ஜன்னலை யாரோ தட்ட "இந்த நேரத்தில் யாரா...
நினைவினில் நிறைந்தவளே...
அத்தியாயம் 08
வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் "உங்க மேல சத்தியமா நீங்க சொல்ற கண்டிஷன்னுக்கு நான் நோ சொல்ல மாட்டேன் போதுமா .. இப்போதாவது அது என்ன கண்டிஷன்னு சொல்லுங்க" என்று கோபத்துடன் முடித்தாள் மீனு...
"சரி நான் என்ன கண்டிஷன்னு சொல்றேன் "என்று சுசிலா சொல்ல ,,அதை ஆர்வமாக மூவர் கவணிக்க...
அத்தியாயம் 12 1
தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தவர்களின் அருகே பாலோடு நின்றிருந்த நறுமுகை "ப்ப்பா. பால்", என்றாள்.
"இப்படி வை வல்லி", என்ற ரங்கப்பா, உட்கார் என்பதுபோல கை காண்பித்தார்.
நறுமுகை சசிக்கும், அப்பாவுக்கும் பால் கொடுத்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்ததும், இருவரையும் பார்த்து ரங்கப்பா.
"நீங்க ஊருக்கு போறதுக்குள்ள ஆரவ் கிட்டயும் விது கிட்டயும் சொல்லிடுங்க. அவங்க எப்படி ரியாக்ட்...
அத்தியாயம் 20
டிடெக்டிவ் கொடுத்த கோப்பை ஆராய்ந்துக்கொண்டிருந்தான் அதீசன். அதில் முத்துப்பாண்டி தங்கராசின் அக்கா வைஜயந்தியின் மகன் உட்பட அவர்களுக்கு இருந்த பகை. அதை மறந்து மஞ்சரியை திருமணம் செய்தது அதன் பின் முத்துப்பாண்டியை மஞ்சரி கொலை செய்ய முயற்சி செய்ததாக கேஸ் பதிவாகி இருந்தது. வக்கீல் லதா சுப்ரமணியம் மஞ்சரியின் கேஸை கையிலெடுத்து மஞ்சரிக்கு...
அத்தியாயம் - 26
அப்போது, “இளவரசி.” என்று ஆன்ம இணைப்பில் பவளன் அழைத்தான். அவந்திகாவின் முகம் அவளைச் சுற்றியிருப்பவர்களையும் மறந்து பிரகாசமானது.
இந்த 4 நாட்களில் மதியும் முகிலனும் உடன் இருந்ததாலோ என்னமோ அவந்திகா பவளனை மறந்தே போயிருந்தாள். எதிர்பாரத தருணத்தில் கேட்ட அவனது குரல் அவந்திகாவிற்கு அவன் கடைசியாக இங்கே வருவதாகச் சொன்னதை நினைவூட்டியது.
அவனிடம் அதுகுறித்து,“பவளன்....
அத்தியாயம் 11 2
இரவு வந்தது, பிள்ளைகள் இருவரும் வீட்டுப்பாடத்தை முடித்து உணவு உண்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா அம்மா சாப்பிட்டாயிற்று. அம்மாவிற்கு இரவுக்கான மருந்து கொடுத்து அவருக்கு பிடித்த பழைய பாடல்கள் அறையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே பாடல்கள் கேட்டுக் கொண்டே உறங்கி விடுவார். நடுவே ஏதேனும் தேவைப்பட்டால், அவர்...