Advertisement

நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 09
” May I come in sir ” என்ற குரல் கேட்கவும் ,,”yes come in “என்று கம்பிரமான குரலில் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்த அவன் அதிர்ச்சியில் அப்படியே எழுந்து நின்று விட்டான்.
மீனுவிற்கு ஒன்றும் புரியவில்லை. தீடிரென்று எதற்காக இவர் என்னை பார்த்து எழுந்து நிற்கிறார் என்று ,,”ஒஒஒ நமக்கு மரியாதை கொடுக்குரதுக்காக தான் நிக்கிறாரோ” என்று அவளுக்கு அவளே கேள்வியும் கேட்டுக்கொண்டு பதிலையும் அவளே தன் மனதிற்கு கூறிவிட்டாள்.
மீனு இங்கே ஏதோ நினைக்க..,,ஆனால் அங்கு நின்றிருந்த செல்வாவின் நிலையோ விவரிக்க முடியாத படி இருந்தது….
தான் யாரை காண கூடாது என்று இந்த இரண்டு வருடங்களாக தான் உயிரோட இருப்பதையும் மறைத்து ,, தான் இறந்து விட்டதாக ஒரு பொய்யை சித்தரித்து மறைந்து வாழ்கின்றேனோ ,,அது இன்று தவிடு பிடியாகிவிட்டது. இன்று தன்னவளை காண நேரிடும் என்று அவன் ஒருபோதும் நினைத்திருக்கவே இல்லை .தன்னவளை கண்டதும் அவனால் சித்தரிக்க முடியாத ஒரு உணர்வில் சிக்கிக்கொண்டு பயத்திலும் ஆச்சிரியத்திலும் தன்னவளின் முன் சிலையாய் நின்று கொண்டு இருந்தான்.
மீனுவின் நிலை தான் பெரிதும் பாவமாக இருந்தது..,, இந்த இரண்டு வருடங்களில் தன்னவனை நினைத்து மட்டுமே வாழ்ந்து கொண்டு இருந்தவளுக்கு அவளது கண்ணீர் மற்றும் தனிமையில் அவளுக்கு துணையாக இருந்தது… தன்னவனை காணவே இயலாதா என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைத்தும் ..,, இது தன்னவன் தான் என்று கூட தெரியாத நிலை யாருக்கும் வர கூடாது….இவை எதுவும் அறியாமல் அவன் முன் நின்று கொண்டு செல்வாவின் கண்களையே பார்த்து கொண்டு இருந்தாள் மீனு…. அந்த கண்களில் அவளுக்கு ஏதோ ஒன்று அவன் சொல்வது போல் இருந்தது … ஆனால் அது என்னவென்று புரியாமல் தவித்தாள் அந்த அரிவையவள்.
இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமல் ,,அவர்களை சுயநினைவூட்டும் வகையில் செல்வாவின் தொலைபேசி அழைத்தது.
அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்….
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
அந்த பாடல் சிறிது நேரம் அடித்து விட்டு நின்றது ..,, மீனுவே முதலில் சயநினைவிற்கு வந்தாள்.
பின்னர்,,” சார் … சார்…”என்று அவள் சிறிதாக சத்தம் போட்டு கூறவே செல்வா சுயநினைவிற்கு வந்தான்.
“சாரி” என்று கூறிவிட்டு அவனது இடத்தில் உட்கார்ந்து கொண்டு மீனுவையும் உட்கார சொல்லவும்,, அவளும் பதிலுக்கு தனது நன்றியை கூறிவிட்டு தான் கொண்டு வந்த ஃபைலை அவனிடம் கொடுத்துவிட்டு அவளுக்காக கொடுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டாள் .
அவனுக்கு மீனுவின் நடவடிக்கையை கண்டு விசித்திரமாக இருந்தது… மேலும் அவனை யோசிக்க விடாமல் மீண்டும் அழைத்தது அவனது தொலைபேசி..
“எக்ஸ் க்யூஸ் மீ ” என்று கூறிவிட்டு தனது மொபைலை எடுத்து கொண்டு சற்று தள்ளி நின்று பேசினான்…
சிறிது நேரம் பேசிவிட்டு வந்த செல்வா ,”சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்” என்று கூறிவிட்டு அவள் கொடுத்த ஃபைலை ஆறாய தொடங்கினான்.
பிறகு,,அவளுக்கு சில பல கேள்விகளை கேட்க , அவளும் அதற்கு ஏற்றார் போல் பதில் அளித்தாள் .
“ஒகே மிஸ்.அஞ்சனா! யூ மே லீவ் நௌவ்” என்று கூறிவிட்டு அவளது ஃபைலை அவளிடம் நீட்டினான்…அதை வாங்கிய மீனு “தாங்க் யூ சார்” என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள் .
அவள் சென்ற பாதையை பார்த்து கொண்டே இருந்த செல்வாவிற்கு… மீனு தன்னை கண்டும் எதுவும் ரியாக்ட் செய்யாமல் இருப்பதை கண்டு அச்சம் ஏற்பட்டது . பாவம் அவனிற்கு இந்த விடயம் தெரியவில்லை போல ..இது அவளிற்காக கடவுள் கொடுக்க பட்ட மறு பிறவி மாதிரி என்று ….
மீனு‌ அந்த அறையை விட்டு வெளியே வந்த பிறகு தனது கால்கள் மட்டும் அதன் போக்கில் நடந்து சென்று ஒரு கதிரையின் முன் நின்றது. பிறகு மீனு அதில் உட்கார்ந்து கொண்டாள் . ஆனால் அவளது மனமோ செல்வாவின் கண்கள் கூற நினைத்ததை மட்டுமே யோசித்து கொண்டிருந்தது.
அவளை மேலும் யோசிக்க விடாமல் ‌ஒரு குரல் அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்தது….
“ஹே மீனு மா..!! என்ன ஆச்சு??ஏதோ பலத்த யோசனையில் இருக்க போல?? ஏன் மா இன்டர்வியூ சரிவர பண்ணலையா ” என்று கதிர் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டு இருந்தான்.
ஆனால் இவன் கேட்ட கேள்வி அனைத்தும் காதில் மட்டுமே விழுந்தது தவிர அவள் மூளைக்கு எட்டவில்லை.
“மீனு மா “என்று அழுத்தி கதிர் கூப்பிடவும் , “சொல்லுங்க கதிர் ..!!!இப்போ என்கிட்ட என்ன கேட்டிங்க “என்று மீனு அவன் கேட்ட கேள்வியை திரும்பவும் கேட்க,,
“எந்த உலகத்துல இருக்கிங்க மேடம்” என்று கலாய்க்கும் நோக்கில் அவன் கேட்க ,,
அதை புரியாத மீனு ” இல்ல கதிர் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு வேலை கிடைக்குமா இல்லையான்னு “என்று தன் மனதில் இல்லாத ஒன்றை அவனிடம் சொன்னாள்.
கதிர் அவளிடம் “அதெல்லாம் உனக்கு வேலை கிடைக்கும் ..நீ எதப் பத்தியும் யோசிச்சு மனச குழப்பிக்காத சரியா “என்க
அதற்கு அவள்” இல்லை ‌கதிர் இங்க எனக்கு காம்பெடிட்டிவா வந்தவுங்க எல்லாருமே ரொம்ப டல்ண்ட்டா இருக்காங்க… அதுனால தான் கொஞ்சம் பயமா இருக்கு “என்று சொல்ல
” நீ உன்னோட பெஸ்ட் கொடுத்துருக்கிற அதுக்கான பலன் கண்டிப்பா உனக்கு கிடைக்கும் “என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே ரிஸப்ஷனிஸ்ட் அவர்களிடம் வந்து “ok guyss you leave now and have ur lunch..will announce the result by 3:30 ..So u can reach here at 3:15” என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டாள்.
“மீனு மா வா நாம கேண்டின் போய் எதாவது சாப்பிட்டு வரலாம் “என்று கூற அவளும் சரி என்று சொல்லிவிட்டு அவனுடன் நடந்து சென்றாள்.
இவை அனைத்தையும் செல்வா எதர்ச்சியாக பார்க்க நேர்ந்தது. பின்னர் தனது கேபின்க்கு சென்று தனது வேலையை பார்க்க தொடங்கினான்.
கேண்டின் சென்று மதிய உணவை சாப்பிட்டு விட்டு சிறிது பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து செல்வா அங்கே வர..,, கதிர் செல்வாவின் பெயர் சொல்லி அழைக்க ..உடனே செல்வா அவர்கள் இருந்த டேபிலிற்கு வந்தான். மீனுவோ அவன் வருவதை அறிந்து தலை குனிந்து உட்கார்ந்து கொண்டாள்.
“ஹாய் கதிர்…!!! “என்க ,,
“டேய் நல்லவனே என்ன இந்த பக்கம் .,,நீ இந்த பக்கம்லாம் வர மாட்டியே டா “என்று நக்கலாக சொல்ல ,
அவனோ “இல்ல மச்சி கொஞ்சம் தல வலி அதான் காஃபி குடிக்கலான்னு வந்தேன்” என்று மீனுவை பார்த்து கொண்டே சொல்ல ,,
இதை கவனித்த கதிர் “இவுங்க நேம் அஞ்சனா நீ எப்படியும் மார்னிங் இன்டர்வியூ பண்ணிருப்ப அதனால நேம் தெரிஞ்சிருக்கும்” என்க ,,”அவன் உன்கிட்ட கேட்டானா டா எருமை” என்று மனதில் திட்டி கொண்டு இருந்தாள். ஆனாலும் தலை நிமிர்த்த வில்லை.
பிறகு ,மீனுவிடம் திரும்பி “இவன் செல்வராகவன் நாங்க எல்லாம் செல்வான்னு சொல்லி தான் கூப்பிடுவோம் .இந்த கம்பெனில பெரிய போஸ்ட்ல இருக்கான். இப்போ இவன் என்னோட பாஸ் மட்டும் இல்ல என்னோட ஃபிரண்ட்டும் கூட “என்று அவன் சொல்லி முடிக்க ,,அப்போது தான் மீனு தன் தலை நிமிர்ந்து அவனை பார்த்து சிநேகமாய் சிரித்து விட்டு,,அவனுக்கு முன் கை நீட்டி “ஃபிரண்ட்ஸ் “என்று சொல்ல பாவம் செல்வாவிற்கு‌ தான் தலை வெடிப்பது போல் இருந்தது.அவள் இன்னும் கை நீட்டி கொண்டு இருப்பதை பார்த்து செல்வா ஃபிரண்ட்ஸ் என்று கூறி அவளுக்கு கை குழுக்கினான்.
“சரி டா மச்சி ..நீ போய் காஃபி ஆடர் பண்ணிட்டு வா “என்று கதிர் கூற அவனும் சரியென்று சொல்லிவிட்டு காஃபி ஆடர் பண்ண சென்று விட்டான்.
சிறிது நேரத்தில் மூன்று காஃபி கப்புகளுடன் வந்த செல்வா கதிர் பக்கத்தில் இருக்கும் கதிரையில் அமர்ந்து கொண்டான்.
“டேய் இப்போ எதுக்கு டா எங்களுக்கும் சேர்த்து காஃபி வாங்கிருக்க .நாங்க இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்டோம் ..நீ உனக்கு மட்டும் வாங்கிட்டு வர வேண்டியது தானே” என்க “இல்ல கதிர் உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் காஃபி குடிச்சா எனக்கு தான் டா வயிறு வலிக்கும் ” என்று சிறு பிள்ளை போல் சொல்ல ,இதை கேட்ட மீனுவோ சிரிக்க தொடங்கினாள் .
“ஏங்க இது கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரில “என்று கேட்க அவன் அதற்கு “இல்லை” என்று பதில் அளித்தான்.
“சரி நீங்க ரெண்டு பேரும் இந்த காஃபிய வாங்கி கோங்க ..”என்று கூறி அவர்கள் கையில் திணித்தான் .
பிறகு மூவரும் காஃபி குடித்து முடித்துவிட்டு சென்றனர்.
செல்வா இனியும் இங்கு இருக்க முடியாது என்று நினைத்து கொண்டு தனக்கு வேலை இருக்கு என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து விடை பெற்று கொண்டு அவனது கேபினுக்குள் புகுந்து கொண்டான்.
“சரி மீனு ..!!இப்போ டைம் 3 ஆகுது . இன்னும் ஹாஃப் அன்னார்ல ரிசல்ட் வந்துரும்.. அதுவரைக்கும் இங்கயே வெயிட் பண்ணு மா.. எனக்கு இப்போ வேலை இருக்கு .. நான் இன்னும் இங்க நிக்கிறத மட்டும் செல்வா பார்த்தா என்ன நல்ல நல்ல வார்த்தைகளால் புகழ்ந்து தள்ளிடுவான் மா” என்க “சரிங்க கதிர் நீங்க போய் வேலைய பாருங்க “என்று சொல்ல அவளுக்கு பாய் சொல்லிவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டான்.
மீனு அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டு ரிசல்ட்டிற்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தாள்.
##########
சுபா தனது அறையில் உட்கார்ந்து கொண்டு பாட்டு கேட்டு கொண்டு இருந்தாள்.
மௌனம் பேசும் மொழிகூட அழகடி
ஆயுள் நீல அது போதும் வருடி
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்
புது மொழி அதை உடைத்தெறி
வெள்ளை பூவே
நீ எந்தன் நிலவடி
எந்தன் வானை மறைகின்ற அழகி
உந்தன் உயிரை என் சுவாசம்
தொடுதேனா கூறடி வந்து கூறடி
என்ற பாடல் வரி ஒழிக்க தொடங்க ,, அவளுக்கு ஏனோ அர்ஜுன்னின் ஞாபகம் வந்தது. அன்று அவன் செய்த செயலில் சுபாவை வெட்கம் வந்து ஆட்கொண்டது மட்டும் அல்லாமல் அந்த நாளை நோக்கி அவளது மனம் சென்றது.
இன்று எப்படியாவது அர்ஜுனிடம் நான் எதற்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேன் என்று கூறிட வேண்டும் என்று நினைத்து கொண்டு ஹாலில் அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்த அவளுக்கோ வெறும் கொட்டாவி மட்டுமே வந்தது. “அய்யோ எனக்கு தூக்க தூக்கமா வருதே “என்று மனதில் நினைத்து கொண்டு “சரி டிவி பார்க்கலாம் “என்று நினைத்து டிவியை ஆன் பண்ணி sun music வைத்து விட்டு ஃபிரிட்ஜில் இருந்து ஸ்னாக்ஸை எடுத்து கொண்டு சோஃபாவில் வந்து அமர்ந்தாள்.
11:30 மணிக்கு மேல் வீட்டின் பெல் சத்தம் கேட்கவும்.., வேகமாக கதவை திறந்தாள். அங்கே அர்ஜுன் மிகவும் சோர்வுடன் காணப்பட்டான்.
” ஹே சுபா ..!!!நீ இன்னும் தூங்கலையா ” என்று அக்கறையுடன் கலந்த காதலில் அவளிடம் கேட்டான்.
அதற்கு சுபா “உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கேன் ” என்று புன்னகையுடன் கூற..,,
“ஹே நீ எனக்காகவா இவ்ளோ நேரம் காத்திகிட்டு இருக்கியா “என்று காதல் மின்ன கேட்க…
அவனை பார்த்து பதில் கூற முடியாமல் தலையை குனிந்து கொண்டு “ஆமாம்” என்றாள்.
அவளுடைய வெட்கத்தை கண்டு அவளை சீண்ட நினைத்தது அவனது மனம். ஆனால் அவள் இவனின் மனதை அறியாமல்,, “சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சீக்கிரம் ரெஃபிரஷ் ஆகிவிட்டு கீழே வாங்க “என்று கூற…
அவனோ “இல்ல நீ சாப்பாட்டை என்னோட ரூம்க்கே எடுத்துட்டு வா “என்று சொல்லி விட்டு வேகமாக அவனது அறைக்குள் புகுந்து கொண்டான் அவளது பதிலை கூட எதிர்பார்க்காமல்.
அவளும் அவனுக்கான சாப்பாட்டை எடுத்து கொண்டு வேகமாக அர்ஜுன் அறைக்கு சென்றாள்.
அவனது ரூமில் பார்த்தால் அவனை காண வில்லை..,, குளியலறையில் தண்ணி சத்தம் கேட்கவும் அவன் குளிக்கிறான் என்று புரிந்து கொண்டு அவனது அறையை விட்டு செல்லும் நேரத்தில்” சுபா” என்று அவனது குரல் அவளை தடுத்து நிறுத்தியது.
“சுபா இருக்கியா?? இல்லையா??? “என்று உள்ளே இருந்து கேட்க…
  ” இருக்கேன் இருக்கேன் சொல்லுங்க எதுக்கு கூப்பிட்டிங்க ”  என்று சிறு பயத்துடனே பதில் அளித்தாள்.
“சுபா மா.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு மா ப்ளிஸ் “என்று குளியலறைக்குள் இருந்து சொல்ல..,,
” சொல்லுங்க அர்ஜுன் என்ன ஹெல்ப் வேணும் “என்று சுபா கேட்க..,,
அதற்கு அர்ஜுனோ ” கடமை அழைக்குதுனு வேகமா பாத்ரூமுக்கு வந்துட்டேன்னா சோ டவல் எடுக்க மறந்துட்டேன்  . கொஞ்சம் எடுத்து கொடு டா “என்று அர்ஜுன் சொன்னவுடன் சுபா சிரித்து விட்டாள் .
“சிரிக்காத சுபா” என்று  பல்லை கடித்து கொண்டு சொன்னான்.
“சரி சரி சிரிக்கல” என்று சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டே சொன்னாள்.
“எனக்கு ரொம்ப பசிக்குது மா கொஞ்சம் டவல் தரியா” என்றவுடன் “இருங்க கொண்டு வந்து தரேன்” என்று வேகமாக வாட்ரோப் திறந்து டவல் எடுத்து வந்து கதவை தட்டினாள் சுபா.
அவள் கதவை தட்டவும் ,, அர்ஜுன் கதவை திறக்கவும் சரியாக இருந்தது.சுபாவால் பேலன்ஸ் பண்ண முடியாமல் அதே சமயத்தில் தண்ணீர் சிந்தி இருந்ததால் வழுக்கி அர்ஜுன் மேலே சரிய .., அர்ஜுன் அவளது விழுக வருவதை தெரிந்து அவனது வலக்கையால் அவளது இடையை புடித்து நிற்க்க வைக்க முயற்சி செய்தான் ..
அவனது கைகள் தன்னை சுற்றி வளைத்தவுடன்..,,அவளுள் கரண்ட் பாசாவது போல் தோன்ற ..அவனது ஈர உடல் அவளுடன் உரசி கொண்டு இருக்கவும் அவளுக்குள் உஷ்ணம் அதிமாக இதய துடிப்பும் வேகமாக துடித்தது .அவளால் அதை தாங்க முடியாமல் நெளியவும் பேலன்ஸ் மிஸாகி  அவளுடன் சேர்ந்தே கீழே விழுந்தான்.
விழுந்த வேகத்தில் சுபா அவன் ‌கண்ணத்தில் இதழ் பதிக்குமாறு ஆகியது.. அவளது முதல் முத்தத்தை நினைத்து சிலிர்த்து இருந்தவன் ,, ஷவரில் இருந்து வந்த தண்ணீர் அவர்கள் இருவர் மீது படவுமே வேறு உலகில் இருந்து நிகழ் காலத்திற்கு வர ,உடனே இருவரும் பிரிந்து நின்றனர்..
சுபாவால் அர்ஜுனை பார்க்க முடியாமல் தவிக்க ,,அர்ஜுனோ அவளை விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்தான்.
அவளுக்கு வெட்கம் வந்து ஆட்கொள்ள,, வேகமாக அந்த இடத்தை விட்டு நகர பார்க்க ..அவளால் போக முடியாமல் போனது.

சுபா திரும்பி செல்ல எத்தனிக்க ,,அவளது கூந்தல் அர்ஜுனின் செய்னில் சிக்கிகொண்டது.அதை அவள் வேகமாக பிரித்தெடுக்க முயற்சி செய்ய அதற்குள் அர்ஜுன் அவனது கைகளை கொண்டு வந்து அதை அவனே எடுக்க முயற்சி செய்ய ,, சுபாவின் இதயம் வெளியே குதித்துவிடும் போல் இருந்தது.

அர்ஜுன் அதை பிரித்தெடுத்தவுடம் ,,அந்த இடத்தை விட்டு வெளியே வந்து வேகமாக அவளது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அர்ஜுன் சிரித்து கொண்டே அவனது வேலைகளை முடித்துவிட்டு சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை நினைத்து கொண்டே உறங்கி போனான்.

ஆனால் அவளால் தனது இதய துடிப்பின் வேகத்தை குறைக்க நினைத்து தோற்று போனாள்.பிறகு ஈர உடையை மாற்றி விட்டு வந்து படுக்கையில் படுத்தவள் சிறிது நேரம் கழித்து கண் அயர்ந்தாள் .
திடிரென்று “சுபா …சுபா ..” என்று அவளது அன்னை அழைக்கும் சத்தத்தை கேட்டு கனவில் இருந்து மீண்டு வந்தவள்,, அவள் அன்னையை நோக்கி சென்றாள்.
இங்கு மீனு அவர்களது பதிலுக்காக காத்திருக்க..,,Ms.Anjana என்று ஒரு பெண் அழைக்கவும் அவள் எழுந்து அந்த பெண்ணிடம் சென்று,” Yes I’m Anjana ” என்க
“congratulations mam you are selected for this post ..so come with me and get your appointment order .. ” என்று கூறிவிட்டு அவளுக்கான அபாயின்மெட் ஆடர்வை கொடுத்து விட்டு சென்றாள்.
அவள் வாங்கிக்கொண்டு வர ,,செல்வா அவள் எதிரில் வந்து நின்று,,”ஹே அஞ்சனா ..!! Congrats ‘என்று கை கொடுக்க அவளும் “தேங்க்ஸ்” என்று அவனுடன் சேர்ந்து கை குழுக்கினாள்.
பிறகு அவனிடம் இருந்து விடை பெற்று கதிர்க்கு ஒரு மெசேஜ் செய்துவிட்டு வீட்டிற்கு சென்றாள்…..

Advertisement