Advertisement

நினைவினில் நிறைந்தவளே…
அத்தியாயம் 08
வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் “உங்க மேல சத்தியமா நீங்க சொல்ற கண்டிஷன்னுக்கு நான் நோ சொல்ல மாட்டேன் போதுமா .. இப்போதாவது அது என்ன கண்டிஷன்னு சொல்லுங்க” என்று கோபத்துடன் முடித்தாள் மீனு…
“சரி நான் என்ன கண்டிஷன்னு சொல்றேன் “என்று சுசிலா சொல்ல ,,அதை ஆர்வமாக மூவர் கவணிக்க தொடங்கினர். ஒன்று மீனு இன்னொன்று ராஜன் அண்ட் அந்த மூன்றாவது யாருன்னு ( நீங்க படிக்கும் போது தெரியவரும் )
“மீனு மா நானும் உங்க அப்பாவும் எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்காக தான் இருக்கும் . அதுனால தான் நான் இந்த விஷ்யத்த உன்கிட்ட கேட்காமலேயே முடிவு பண்ணிட்டோம்‌ “என்று பீதியை கிளப்ப
“அம்மா சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுமா” என்று பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு கூறினாள்.
“நான் உனக்கு ஒரு நல்ல இடம் பாத்திருக்கேன் மா ,,இந்த வாரத்தில உன்ன பொண்ணு பாக்க வரேன்னு சொல்லிருக்காங்க ..இந்த விஷ்யம் உன்னோட அப்பாக்கு கூட தெரியாது ..நீ சரின்னு சொன்னா ,,அவுங்கள பொண்ணு பாக்க வர சொல்றேன்.. நீயும் வேலைக்கு போக நாங்க சம்மதிக்கிறோம் “என்றார் சுசிலா.
“ஏன் மா ..!!நீ இத சொல்றதுக்கு தான் இவ்ளோ சீன் போட்டிங்களா .. நான் கூட நீங்க எதாவது பெருசா சொல்ல போறீங்கன்னு நினைச்சேன்” என்று சாதர்னமாக சொன்னாள் தன் கடந்த கால வாழ்க்கை நினைவில்லாததாள்.
“சரி டி ..இந்த விஷ்யத்த எப்படி சொல்றதுன்னு யோசிட்டே இருந்தேன்..ஆனா நீ இந்த விஷ்யத்த சாதரனமான விஷ்யம் மாதிரி பேசிட்டு இருக்க “என்று கூறிவிட்டு ,, “மாப்பிள்ளை வீட்டு காரவுங்கள வர சொல்லட்டுமா மா மீனு “என்று தயங்கியபடியே கேள்வி கேட்டார் .
“சரிங்க மா மாப்பிள்ளை வீட்டு காரவுங்கல வர சொல்லுங்க ,, எனக்கு புடிச்சிருந்துச்சின்னா மட்டும் தான் நான் ஓகே சொல்லுவேன் “என்று திட்ட வட்டமாக கூறிவிட்டாள்.
“சரி டா…!!! இதுக்கு நீ சம்மதிச்சதே எங்களுக்கு பெரிய விஷயம் மா” என்று கூறிவிட்டு அவளை அணைத்து கொண்டார் சுசிலா.
இதை எல்லாம் எதர்ச்சியாக கதிர் கேட்கும் படி நேர்ந்தது.. அவன் வந்த சுவடே இல்லாமல் வெளியே சென்று விட்டான்.
“சரி மா .. நீங்க சொன்னதுக்கு நான் ஓகே சொன்னேன்ல ..அப்ப நான் போட்ட அப்பிளிக்கேஷனையும் ஏத்துகிறது” என்றாள் மீனு.
“சரி டா…!!!நீ வேலைக்கு போகலாம்.இதுக்கு நாங்க எதுவும் சொல்ல மாட்டோம் ” என்றார் சுசிலா…
“தேங்க் யூ சொமச் மா…!!! லவ் யூ “என்று சொல்லி விட்டு கண்ணத்தில் இதழ் பதித்து விட்டு அவளது அறைக்கு ஓடி விட்டாள்…
“ஏங்க நம்ம பொண்ணு இப்போ பழைய படி இருக்கிறத பாக்கும் போது சந்தோஷமா இருக்குங்க …” என்றார் சுசிலா.
“ஆமா சுசி …!!!நீ சொல்றது உண்மைதான் . ஆனாலும் இப்போ இவளுக்கு பழைய ஞாபகங்கள் எதுவும் இல்லையே..இந்த நேரத்துல போய் நாம மாப்பிள்ளை பாக்குறது சரியா” என்று ஆமோதிக்கும் விதத்தில் ஆரம்பித்து கேள்வியில் முடித்தார் ராஜன்.
“இல்லங்க அவளுக்கு இன்னும் ரெண்டு மாசத்துள கல்யாணத்த பண்ணியே ஆகனும்ங்க ..என்னோட பொண்ணுக்கு எதாவது ஆச்சின்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு ஒரு பெரு மூச்சு விட்டாள் சுசிலா.
“அப்படியே உன்ன அடிச்சேன்னா பாத்துக்கோ .. நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகாது சரியா …நீ இப்படி பேசிட்டு இருக்கிறத நம்ம பொண்ணு கேட்டா எவ்வளவு ஃபீல் பண்ணுவா…அவளே இப்ப தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கா..அத நாமலே கெடுத்த மாதிரி இருக்க கூடாது சரியா” என்றார் ராஜன்.
“சரிங்க நான் இனி இப்படி பேச மாட்டேன்” என்றார் சுசிலா.
“என் பொண்டாட்டி நான் சொன்னோன்ன எப்படி கற்பூரம் மாதிரி புரிஞ்சி கிட்டா” என்றார் ராஜன்.
” போதும் நீங்க பேசினது…எனக்கு நைட்டுக்கு சமைக்கிற வேலை இருக்கு நான் போறேன்” என்று சொல்லி விட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார் சுசிலா.
கதிர் மீனு வீட்டிற்கு வந்த சுவடே தெரியாமல் தான் வண்டியை எடுத்து கொண்டு வேகமாக சென்றான்.
எங்கு போவது என்று தெரியாமல் மதுபான கடைக்கு சென்று வண்டியை நிறுத்தினான்.
மது வாசமே உணராத கதிர் இன்று மதுபான கடைக்கு முன் நின்று கொண்டு இருக்கிறான்.
வண்டியை நிறுத்தி விட்டு நேராக கடைக்குள் சென்று ஒரு மதுபான பாட்டிலை வாங்கி வந்து ஒரு இடத்தில் அமர்ந்தான்.
அந்த மதுபான பாட்டிலை மீனுவாக நினைத்து புலம்பி கொண்டு இருந்தான் கதிர்…
மதுபான பாட்டிலை திறந்து இரண்டு சிப் குடித்தவுடன் குமட்டி கொண்டு வந்ததால் அந்த பாட்டிலை அப்படியே போட்டு விட்டு வண்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்.
வீட்டின் பெல்லை அடித்தான் கதிர்.அவனை காத்திருக்க வைக்காமல் அவன் அன்னை புவனா வந்து கதவை திறந்தார்.
அவனது முகத்தை பார்த்த புவனாவிற்கு எதுவோ சரியாக படவில்லை. புவனாவை கடந்து செல்லும் போது அவருக்கு மதுவின் நாற்றம் தென் பட ,” கதிர் குடிச்சிருக்கியா ” என்று கட்டுக்கடங்கா கோபத்தில் கேட்க,
அம்மா” அ…அ…..அது….அது …வந்து….” என்று இழுக்க ,, அவன் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது.
“எங்க இருந்து டா உனக்கு இந்த பழக்கம் வந்துச்சி…உன்ன வேலைக்கு தானே கோயம்புத்தூர் அனுப்புனேன்..அங்க போய் நீ இத தான் கத்துகிட்டு வந்தியா டா” என்று கேள்வி கேட்டார் புவனா.
“அம்மா  சாரி மா …இனி இப்படி நடந்துக்க மாட்டேன்.. நீங்க மட்டும் தான் மா என் கூட இருக்கிங்க நீயும் என்ன விட்டு பொய்டாத மா..என்னால அத தாங்கிக்க முடியாது தெத்துருவேன் மா…”என்று பிதற்றினான்.
“லூசா டா நீ.. நான் உன்ன விட்டு எங்க போக போறேன் சொல்லு.. நான் உன்ன பெத்த அம்மா டா..,, என் கண்ணு முன்னாடியே இப்படி செத்து போறேன்னு சொல்லிட்டு இருக்க .. இதுக்கு நீ எனக்கு ஒரு விஷ பாட்டுல் வாங்கி கொடுத்துறு நானும் சந்தோஷமா என் பையன் வாங்கி கொடுத்ததுன்னு சொல்லி செத்து போறேன்” என்றார் புவனா.
“என்ன மா பேசுறீங்க… நான் இருக்கும் போது ,, நீங்க இப்படி பேசுறது எல்லாம் ரொம்ப தப்பு மா..இனி இப்படி பேச மாட்டேன்னு சொல்லுங்க இல்ல இல்ல சத்தியம் பண்ணுங்க “என்று தனது இடது கையை நீட்டினான்.
” நான் இப்படி பேச மாட்டேன்..,,அதே மாதிரி இனி நீ குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடு டா” என்றார் புவனா.
“சரி மா .. நான் சத்தியமா இனி குடிக்கவே மாட்டேன் மா….” என்றான்.
“அப்போ சரி வா  ..வந்து சாப்பிடு” என்று அவனை டைனிங் டேபிளிற்கு அழைத்து சென்றார் புவனா…
“அம்மா உன் கையில சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு… ஊட்டி விடு மா ப்ளிஸ் “என்று தன் அன்னையிடம் கெஞ்சினான் கதிர்.
ஒரு தட்டில் சாப்பாடு போட்டு ஊட்டி விட்டார் புவனா. பிறகு கதிரை அவன் அறையில் படுக்க வைத்துவிட்டு வந்து அவரும் அவர் அறையில் உறங்க சென்று விட்டார்.
அடுத்த நாள் காலையில் அழகாக புலர்ந்தது ..
செல்வா அலாரம் வைத்து ஆறு மணிக்கே எழுந்து ரெப்ஃபிரஷ் ஆகி கீழே வந்தான்.
“என்னடா இன்னைக்கு சீக்கிரமே எழுந்துரிச்சிட்ட” என்று கேள்வி கேட்டார் லதா.
“ஆமாம் மா ..!!! இன்னைக்கு ஆஃபிஸ்ல ஒரு இன்டர்வியூ இருக்கு மா‌..அத நான் தான் போய் பாக்கனும் .. அதான் சீக்கிரம் எழும்பிட்டேன் “என்றான் செல்வா.
“சரி டா..!! கொஞ்சம் நேரம் இரு இப்போ தான் டீ போட போறேன். டீ போட்டுட்டு தரேன் , அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணு செல்வா “என்றார் லதா.
செல்வா டிவி பார்க்க தொடங்கிய சிறிது நேரத்தில் டீ கொடுத்தார் லதா. அதை வாங்கி குடித்துவிட்டு டிவியை ஆஃப் செய்து அவனது அறைக்கு செல்லும் போது அர்ஜுன் கீழே வந்துகொண்டு இருந்தான் .
செல்வாவும் அர்ஜுனும் ஒரு பார்வையையும் சிறு புன்னகையையும் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
மேலே அறைக்கு வந்தவுடன் தன் மொபைலை எடுத்து சிறிது நேரம் வாட்ஸப் மற்றும் முகநூல் யூஸ் பண்ணிவிட்டு இறுதியாக மீனுவின் புகை படத்தை பார்த்து பின் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் செல்வா.
இங்கே மீனு நல்லா இழுத்து போர்த்திக்கொண்டு  தூங்கி  இருந்தாள்.
சுசிலா மீனு அறைக்குள் வந்து,,”ஹே மீனு ..!!! எந்திரி எவ்ளோ நேரம் டி தூங்குவ ..,,எந்திரி மீனு” என்று அவளை உழுக்க ஆரம்பித்தார்.
“அம்மா ஒரு டூ மினிட்ஸ் மா ப்ளிஸ்” என்றாள் மீனு .
“ஒழுங்கு மரியாதையா எழுந்திருச்சிடு ..,, இல்லன்னா என்ன நீ பத்ரகாளியா தான் டி பாப்ப,,நைட் நீ எவ்ளோ டார்ச்சர் பண்ண” என்று பொய்யான கோபத்துடன் அவளை எழுப்ப முயன்றார்…
“நாம நைட் அப்படி என்ன பண்ணோம்ன்னு இந்த அம்மா அத ஒரு மேட்டரா சொல்லிட்டு இருக்காங்க  “என்று யோசிக்க தொடங்கினாள் மீனு.
“அம்மா சீக்கிரம் டின்னர் கொண்டு வா மா..” என்று மீனு டைனிங் கேட்பிலில் இருந்து கத்தி கொண்டு இருந்தாள்.
“இரு டி வரேன் .எனக்கு என்ன பத்து கையா இருக்குது , ரெண்டு கை தான் இருக்கு…,, ஒவ்வொரு வேலையா தான செய்ய முடியும் ”  என்று சமையலறையில் இருந்து கத்தினாள் சுசிலா.
“அம்மா ரொம்ப பேசாத .. ரொம்ப பேசுனிங்கான டையட் ஆய்டுவீங்க .. அப்பறம் வேலை ஃபாஸ்டா செய்ய முடியாம போய்டும் மா ..சோ அமைதியா இருந்து எல்லா வேலையும் சீக்கிரம் செஞ்சு எனக்கு டின்னர் கொண்டு வருவீங்களாம் “என்று கலாய்க்கும் விதத்தில் கூறினாள் மீனு.
உடனே அவளை நோக்கி தோசை கரண்டி பறந்து வந்தது…
“அம்மா இப்போ நான் என்ன சொல்லிடேன்னு அடிக்கிறது வெப்பன் தூக்கி போடுற.. கரக்ட் டைம்க்கு எனக்கு டின்னர் தரல .இதுல நீங்க அடிக்க வந்து டைம் போக்கிட்டு இருக்கிங்க ” என்றாள் மீனு.
“அடியே உனக்கு இப்போ டின்னர் வேண்னும்னா அமைதியா இரு ,, இல்லன்னா உனக்கு டின்னர் கட்” என்றார் சுசிலா.
“நான் எப்பவோ அமைதி ஆகிட்டேன் பா” என்று ஒற்றை விரலை எடுத்து வாயில் வைத்து கொண்டாள்.
இதை எல்லாம் பார்த்து சிரித்து கொண்டு இருந்தார் ராஜன். ஆனால் அன்னை பெண் சில்மிஷயத்தில் கலந்து மூக்கை உடைத்து கொள்ள அவர் விரும்பவில்லை.
பிறகு அனைவருக்கும் டிஃபன் தட்டில் எடுத்து வைத்து தானும் சாப்பிட உட்கார்ந்தார் சுசிலா.
மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்…
“அம்மா நான் தூங்க போறேன் . நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி விடு மா …”
“சரி டி எழுப்பி விடுறேன் ..நீ போய் தூங்கு” என்றார் சுசிலா.
“சரி மா என்று நாலு அடி முன்னே எடுத்து வைத்தவள் ,, திரும்பவும் தன் அன்னையின் புறம் திரும்பி,, அம்மா நான் நாளைக்கு கொஞ்சம் வெளிய போகனும் சீக்கிரம் எழுப்பி விடு மா ” என்றாள்.
“சரி டி எழுப்பி விடுறேன் நீ போய் தூங்கு” என்றார் சுசிலா…
“சரின்னு சொல்லிவிட்டு” மீனு அவள் அறைக்கு சென்று விட்டாள்.
பிறகு சுசிலாவும் ராஜனும் உறங்க சென்றார்கள்..
மீனு திரும்பவும் கீழே இறங்கி வந்து,, “அம்மா நாளைக்கு கொஞ்சம் வெளிய போகனும் சீக்கிரம் எழுப்பி விடு மா” என்று கூறிவிட்டு திரும்பி நடக்க தொடங்கின அடுத்த நொடி திரும்பி ,,
“இல்லமா நீ தூங்கிட்டனா என்ன பன்றது ,,உன்னோட போன் கொடு மா நான் அலாரம் வச்சி தரேன் ..அது உன்ன எழுப்பும் நீ வந்து என்னை எழுப்பிட்டு போமா “என்று கூறிவிட்டு அவள் அன்னையின் மூகத்தை பார்த்தாள்,, கோவத்தில் முகம் சிவந்து காணப்பட்டது.
“ஏன் டி ..!! இதுக்கு நீ உன்னோட போன்ல அலாரம் வைச்சா என்னடி ” என்க “அய்யோ அம்மா என்னோட போன்ல அந்த ஆப்ஷனே இல்லமா” என்றாள்.
“அடியே யாருக்கிட்ட டி பொய் சொல்ற” என்று முறைத்து பார்க்க
“அய்யோ ஆத்தி இனி இங்க நான் நின்னேன்னா பஸ்பம் ஆகிடுவேன் எஸ்கேப் மீனு “என்று நினைத்து ஒரே எட்டில் ஓடி விட்டாள்.
“அய்யோ நாம நைட் இவ்ளோ பண்ணிருக்கோமா” என்று நினைத்து கொண்டே பெட்ஷீட்டை முகத்தில் இருந்து விலக்கினாள்.
“நேத்து நடந்தத நினைச்சு பாத்தாச்சான்னா கிளம்பி தொல்ல ,, எங்கேயோ போகனும்னு சொன்னல்ல “
“இந்த அம்மாக்கு மட்டும் எப்படி தான் தெரிஞ்சதோ  …சரி வா மீனு நமக்கு இன்னைக்கு முக்கியமான நாள் இது” என்று மனதில் நினைத்து கொண்டே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
கதிரால் எந்திரிக்க முடியவில்லை… தலைவலி வேறு அதிகமாக இருந்தது.. புவனா லெமன் ஜுஸ் எடுத்துட்டு வந்து அவனிடம் நீட்டினார் .
அவனும் அதை வாங்கி குடித்துவிட்டு வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான் கதிர்.
செல்வா வேகமாக ரெடியாகி கீழே வந்து சாப்பிட்டு விட்டு எப்பொழுதும் போகும் பூங்காவிற்கு போய் சிறிது நேரம் இருந்து விட்டு ஆஃபிஸ் சென்றான்.
மீனுவும் வேக வேகமாக கிளம்பி ஒரு ஃபைலுடன் கீழே வந்தாள்.
“அம்மா அப்பா ரெண்டு பேரும் கொஞ்சம் இங்க வாங்க “என்றாள் மீனு.
இருவரும் வந்தவுடன் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள்.
“நல்லா இரு மா ,,,இப்போ எதுக்கு மீனு எங்க கால்ல விழுகிற” என்று கேள்வி கேட்டார் சுசிலா.
“அம்மா நான் இன்னைக்கு இன்டர்வியூக்கு போறேன் , அதான் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டேன் ” என்றாள் மீனு…
“சரி மா .. நல்ல படியா இன்டர்வியூ பண்ணு மா “என்றார் சுசிலா. “All the best meenu kutty ” என்றவர் ஆதரவாக அவளை அணைத்து விடுவித்தார் .
“தேங்க்ஸ் பா” என்று கூறிவிட்டு ,,, சாப்பிட்டு விட்டு கிளிம்பி சென்றாள் மீனு.
நீ யாரை
சந்திக்க
வேண்டும்
என்பதை
காலம்
தான்
முடிவு
செய்கிறது….!!!!
கதிரும் வேகமாக கிளம்பி வேலைக்கு சென்றான்..
கதிர் வேலை நடக்கும் இடத்திற்கு சென்று இன்டர்வியூக்கு எல்லாம் சரியாக உள்ளதா என்று மேற்பார்வை பார்த்து கொண்டு இருந்தான்.
“எக்ஸ் க்யூஸ் மீ சார் ” என்று ஒரு குரல் கேட்க,, கதிர் திரும்பி பார்க்க அங்கு மீனு நின்று கொண்டு இருந்தாள்.
“நீ இங்க என்ன பண்ற மீனு “என்று புரியாமல் வினவினான் கதிர்.
“நான் இங்க இன்டர்வியூக்கு வந்துருக்கேன் ,,அது எங்க நடக்குதுன்னு கொஞ்சம் சொல்லு கதிர்” என்றாள் மீனு.
“1st floor ல நடக்குது.. சீக்கிரம் போ ஆல்ரெடி ஸ்டார்ட் ஆயிடுச்சி .. இன்னும் கொஞ்ச நேர்த்தில நானும் அங்க வந்துடுவேன் ..All the best meenu” என்று வாழ்த்தினான் கதிர்.
“தேங்க்ஸ் கதிர்” என்று கூறிவிட்டு மேலே சென்றாள்.
விதியின் விளையாட்டில்
யாரும் தப்பிக்க
இயலாது…..!!!
விதியை  வெல்ல
யாராலும் முடியாது….
விதியை வென்றவரும்
கிடையாது விதியை
நீ வென்றால்
அது தான் விதி….!!!
மீனு மேல் தலம் நோக்கி சென்று இன்டர்வியூ நடக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
தனது பெயர் வருவதற்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளது பெயரை அழைக்கவும்,,அவளது மனதில் இதுவரை ஏற்படாத உணர்வு ஏற்பட்டது..மீனுவிற்கு இவ்வளவு நேரம் இருந்த தைரியம் காத்தோடு காத்தாய் பறந்தது ….
பல உணர்வுகளையும் பயத்தையும் எடுத்து கொண்டு உள்ளே செல்ல அனுமதி கேட்டாள் மீனு..
May I come in sir என்ற குரல் கேட்கவும் ,,yes come in என்று கம்பிரமான குடலில் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்த அவன் அதிர்ச்சியில் அப்படியே எழுந்து உறைந்து விட்டான் .

Advertisement