Advertisement

அத்தியாயம் 23
அதீசனுக்கு என்ன பேசுவது, மஞ்சரிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே! புரியவில்லை. என்ன மாதிரியான கஷ்டங்களையெல்லாம் அனுபவித்திருக்கிறாள்.
“சாரி வாராகி. நான் மட்டும் அன்னைக்கே! ஊட்டில வச்சி உன் கிட்ட பேசி இருந்தா உனக்கு இப்படி எல்லாம் நடந்திருக்காது” என்று வருந்த
“எல்லாம் அவவங்க விதிப்படிதான் நடக்கும். விடுங்க, நடந்ததையே! நினைச்சி கிட்டு இருந்தா நம்மளால வாழ முடியாது”
“ஆமா நீ படிச்சிருந்தும் அந்த வீட்டுல அந்த அம்மா சொல்லுற வேலைய கஷ்டப்பட்டு செஞ்சி கிட்டு பொறுமையா இருந்திருக்க, அப்போவே! அந்தம்மா மண்டைய உடைச்சிருந்திருக்கணும்” கோபம் தெறித்தது அதீயின் குரலில்
“அவங்க என் சொந்த அத்த. பல வருஷமா பகையால பிரிஞ்சிருந்த குடும்பம் இந்த கல்யாணத்தாலதான் ஒன்னு சேர்ந்தது. ஒத்த பையன பெத்து வச்சிருக்காங்க, எங்க மருமக முந்தானைல முடிஞ்சிக்குவான்னு சில்லியா பண்ணுறாங்க. அவங்களே! புரிஞ்சிக்குவாங்க, மாமா பாவம் அவருக்கு வீட்டுல நடக்குறது எதுவும் தெரியாதுன்னு நெனச்சி ஏமாந்துட்டேன்” பெருமூச்சு விட்டுக்கொண்டாள் மஞ்சரி.
“உங்க அப்பா அம்மா வந்தப்போ அவங்க கிட்டயாச்சும் சொல்லி இருக்கலாம்ல” அதீசன் கோபமாக கேக்க
“ஏற்கனவே! இருந்த பகையால நிம்மதி இல்லாம இருந்தாங்க. இத சொல்லி அவங்களையும் கலங்கடிக்கணுமா? நம்ம அத்த தானே! பாத்துக்கலாம் என்று இருந்துட்டேன்” என்றாள்.
“உங்க அப்பா தொழில்ல பிரச்சினை பண்ணுறதும், உன் மானத்த விலை பேசுறதும் நீ அவன் கூட வாழணும்னு இப்போ புரியுது. நல்லவேள புருஷனோட வாழப்போறேன்னு தப்பான முடிவ எடுக்கல”
“இரவுல விழுந்த குழியில பகல்ல விழுறவன் முட்டாளுனு எங்க அப்பத்தா சொல்லும். அதான் முன்னெச்சரிக்கையா இருந்தேன்” என்று சிரிக்க
அவள் கன்னம் கிள்ளியவன் “இரு விடியட்டும் உன் பாட்டிய வச்சிக்கிறேன். இவ்வளவு நடந்த பிறகு அவனுக்கு சொத்த எழுதி கொடுத்திருக்கு” அதீசன் பொரும
“அப்பத்தா என்ன செய்ய? ஒரு பொண்ணு புருஷன் கூட வாழலைனா ஊரு கண்டதையும் பேசும். அவன் நடிச்ச நடிப்பும் அப்படி. எங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வைக்கத்தான் பாதி சொத்த அவன் பேரலையும் மீதியை என் பேரலையும் எழுதி வைச்சாங்க”
“நல்லவேள எல்லா சொத்தையும் அவன் பேர்ல எழுதி வைக்கல”  
“சொத்து போனா போகுது. அவனால நிம்மதி இல்லாம இருந்தேன்” என்றாள் மஞ்சரி.
அவள் பட்ட வேதனைகள் சொல்லிலடங்காதது. விவாகரத்து வாங்கி வந்து விட்ட உடன் எதுவும் முடிந்து விடவில்லையே! ஊரும் பேச வீட்டிலும் அழுத்தம் கொடுக்க, படிக்காத பெண்ணாக இருந்திருந்தால் இதுதான் என் வாழ்க்கை என்று முத்துப்பாண்டியோடு வாழ்ந்திருப்பாள். அல்லது பூஞ்சோலை எடுத்த முடிவை தேடிக்கொண்டிருப்பாள். அவள் கற்ற அறிவு மாணவர்களை போய் சேர வேண்டும் என்று நினைத்திருக்கிறாள். அதீசன் அவளை காதலாக பார்த்தவாறு அணைத்துக்கொள்ள
அவனை தடுத்தவள் “இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் என்னைக்கும் நினைக்கல. குழந்தைகளுக்கு கல்வியை புகட்டி கிட்டு கடைசிவரைக்கும் இருந்திடலாம்னுதான் முடிவு பண்ணேன். நீங்க என் வாழ்க்கைல வந்ததால எல்லாம் மாறிப்போச்சு” என்று அவன் முகம் பார்க்க,
“என்ன மாறிப்போச்சு? ஒண்ணுமே! மாறல நமக்கு இன்னும் பாஸ்ட் நைட் கூட நடக்கல” சோகமாக சொல்வது போல் தனது ஆசையையும் கூறலானான் அதீ.
உணர்ச்சிபூர்வமாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது இப்படி சட்டென்று சொல்வான் என்று எதிர்பார்க்காத மஞ்சரியின் முகம் செவ்வானம் கொண்டது. அதீயின் முகத்தை பார்ப்பதையே! தவிர்க்கலானாள்.
அதிக்கு சிரிப்பாக இருந்தது. அவளை மேலும் சங்கடப்படுத்தாமல் “சரி வா தூங்கலாம்” என்று சொல்ல
சரியென்று தலையாட்டியவாறே மறுபுறம் வந்து படுத்துக்கொண்டவள் எதோ நினைவு வந்தவளாக அதீயின் புறம் திரும்பி “ஆமா எனக்கு விவாகரத்து ஆனது தெரிஞ்சு தானே! என்ன கல்யாணம் பண்ணீங்க? உங்களுக்கு ஏற்கனவே! தெரியுமா?” என்று கேக்க
அன்று அவனுக்கு இருந்த மனநிலையை கூறியவன் “நீ வேற ஊருக்கு வந்த பிறகுதான் உனக்கு டிவோர்ஸ் ஆனா விஷயமே! தெரிஞ்சது. கல்யாணமாகி உங்க வீட்டுக்கு வரும் போது என் மனசுல என்ன ஓடிக்கொண்டிருந்தது என்று தெரியுமா? “அம்மா” என்று கூப்பிட்டுக்கிட்டு ஒரு குட்டி மஞ்சரி படிய தாண்டி ஓடிவந்து உன்ன கட்டிபிடிச்சிகிட்டு தூக்க சொல்வானு” என்றவன் சிரிக்க மஞ்சரிக்கும் சிரிப்பாக இருந்தது.
“என் கேஸ்தான் எல்லா டிவிலையும், பேப்பருலையும் வந்துச்சே நீங்க பார்க்கல”
“அப்போ நான் சிங்கப்பூர் போய் இருந்தேன்”  என்றவன் அவள் கையை பற்றிக்கொண்டு தன்கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.
“உனக்குத்தான் என்ன பிடிச்சிருந்ததே! நான் கல்யாணம் பண்ண கேட்டப்போ ஏன் கண்டபடி பேசி கல்யாணத்த நிறுத்த பார்த்த அதுவும் உனக்கு டிவோர்ஸ் ஆகிருச்சுனு தெரிஞ்சிதானே! நான் கல்யாணம் பண்ணிக்க போனேன்” கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்திருந்தது அவன் குரலில்.
“ஒரு ஆணுக்கு திருமணம் என்றால் ஒரு பொண்ணு கூட மட்டும்தான். என்ன மாதிரியான பெண்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீங்க தியாகிங்களா கூட ஆகிடலாம். ஆனா ஒரு பெண்ணுக்கு திருமணம் என்கிறது ஒரு ஆண் கூட மட்டுமில்ல அவன் குடும்பத்தையும் அவ தாங்கணும், சமாளிக்கணும். நீங்க வேற உங்க வீட்டாளுங்க சம்மதமில்லாம என் கழுத்துல தாலிய கட்டிடீங்க.
நம்மாளுங்க ஜாதி பாப்பாங்க, அது இல்லனா ஏழை பணக்காரன் என்ற ஸ்டேட்டஸ் பாப்பாங்க, எதுவுமே பார்களானாலும் மகன் கல்யாணம் பண்ணிகிட்டாவ ஏற்கனவே கல்யாணமானவனு தெரிஞ்சா எந்த பெத்தவங்கதான் ஏத்துப்பாங்க? உங்கம்மா எனக்கா உங்க அப்பாகிட்ட நடிக்கிறாங்க. என் பிளாஷ்பேக் தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க?”
மனதில் உள்ள எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் மஞ்சரி. அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் குறைந்திருந்தது. மனிதர்கள் எந்த நொடியில் மனம் மாறுவார்கள் என்று சொல்ல முடியாது. அதீசனுக்காக அவளை ஏற்றுக்கொண்ட அவன் குடும்பம் அவளை பற்றின உண்மைகளை அறிந்துக்கொண்டபின் அவளை ஏற்றுக்கொள்வார்களா? நியாயமான கேள்விதான். அதற்கு பதில் அவன்தான் சொல்லவேண்டும்.
அவள் சொல்வது அவனுக்கு நன்றாக புரிந்தது. என்னதான் ஆணுக்கு பெண் சமானவள், நிகரானவள் என்று வியாக்கியானம் பேசினாலும். எல்லா விஷயத்திலும் பார்க்கும் கோணமும் வேறு, கொடுக்கப்படும் நீதியும் வேறுதான்.
“நீ இப்படி சொல்லுறது சரியில்ல. இப்போ நான் உங்க வீட்டுல வந்து தங்கி இருக்கேன். அப்போ என்ன வீட்டுல ஒருத்தனா பார்க்க மாட்டீங்களா?” இறுக்கமான சூழ்நிலையை இலகுவாக்க கேலியாக கேட்டான் அதீ.
அதற்கும் அவள் “புது மாப்பிள்ளையோ! பழைய மாப்பிளையோ! பொண்டாட்டி வீட்டுல கவனிப்பு என்றைக்கும் ஒரு மாதிரிதான் இருக்கும். பெண்களுக்கு அப்படி இல்ல”
“சரி நாளைல இருந்து அய்யாவோட ப்ரோபோமன்ஸ்ச பாரு”
“என்ன பண்ண போறீங்க? நாளைல இருந்து சமைக்க போறீங்களா?” என்று சிரிக்க,
“எனக்கு சமைக்க எல்லாம் தெரியாது. உன்ன உக்கார வச்சி ஊட்டி விடுறேன்” என்றவன் சிரிக்கலானான்.
“உங்கள…” என்றவள் அதீயின் தோளில் அடிக்க 
அதீ மஞ்சரி எதிர்பார்க்காத நொடி அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
மஞ்சரி விலகவில்லை. அவளுக்கும் அந்த அணைப்பு தேவைக்காக இருந்தது.
அவள் நெத்தியில் மென்மையாக முத்தமிட்டவன் “ரொம்ப லேட் ஆகிருச்சு வாராகி. இத பத்தி காலைல பேசலாம். ரொம்ப யோசிக்காத, எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று சொல்ல மஞ்சரியும் அவன் கைவளைவுக்கு நிம்மதியாக உறங்கலானாள்.
ஆனால் அதீசனுக்கு தான் தூக்கம் வரவில்லை. இவ்வளவு நடிக்கும் பாண்டி மஞ்சரிக்கு கல்யாணமானதை அறிந்து அமைதியாக இருக்க மாட்டான். அவன் அடுத்த மூவ் என்னவென்று தெரியாது. என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்று எண்ணியவாறே! தூங்கியும் போனான் அதீ.
அதீசன் கண்விழிக்கும் பொழுது மஞ்சரி அருகில் இல்லை. சூரியனும் கிழக்கு வானில் நன்றாக உதயமாகி இருந்தான்.
“சொல்லாம்கொள்ளாம ஸ்கூல் போய்ட்டாளா?” என்றவாறு மணியை பார்க்க எட்டு என்றுதான் காட்டியது. “எட்டு மணிதானா?” என்று நினைக்கும் பொழுதே! அலைபேசி அடித்தது. தந்தை அழைப்பதாக காட்டியவனுக்கு இயக்கி காதில் வைத்தான்.
“குட் மோர்னிங் டேட்”
“வெரி குட் மோர்னிங் மை சன். என்ன ஊருக்கு போய் சேர்ந்திட்டியா?
“ம்ம் வந்துட்டோம் டேட்” என்றவனின் மனதோ! காலையிலையே! தந்தை அழைத்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றுதான் யோசிக்கலானது.
“நான் இன்னக்கி யாரை சந்திச்சேனு உன்னால கெஸ் பண்ண முடியுமா?” என்று சங்கரன் புதிர் போட
கண்ணை மூடி ஒரு கணம் யோசித்தவனின் கருவிழி அங்கும் இங்கும் அசையாலானது. “காரணமில்லாமல் காலங்காத்தால போனாப்போட்டு இவர் இப்படி பேச வேண்டிய அவசியமில்லை. அவர் சந்தித்த நபர் அவருக்கும் எனக்கும் தெரிந்த தொழில் சம்பந்தப்பட்டவரா?” தன் மனதிடம் கேட்க 
“இல்ல. அவர் குரலில் நக்கல் இருந்தது. பிஸ்னஸ் கைகூடின சந்தோஷமில்லை. புது பிஸ்னஸ் வந்திருந்தா மெயில் வந்திருக்கும் எந்த நோட்டிபிகேஷனும் இருக்கலையே!”
“யாரு? யாரு? யாரு?” என்றவன் கண்ணை திறக்கும் பொழுது உதடுகள் கேலியாக வளைந்தது.
“என்னடா கண்டு புடிச்சிட்டியா? இல்லையா?” சங்கரனின் குரலில் கேலி கொட்டிக்கிடக்க
“முத்துப்பாண்டி” என்ற அதீசன் சத்தமாக சிரிக்கலானான்.
அதீசன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பாண்டிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கூட இருந்தவர்களோ! இரவோடு இரவாக வீடு புகுந்து அதீசனை வெட்டி சாய்த்து விட்டு மஞ்சரியை தூக்கலாம் என்று சொல்ல கண்டிப்பாக அப்படி செய்வேன் என்று அதீசன் எதிர்பார்ப்பான் காத்துக்கொண்டிருப்பான். போனால் எங்க உயிர் மிஞ்சாது என்றான் முத்துப்பாண்டி.
உண்மைதான் மாலையே ஸ்டீவோடு வீட்டையும் தோட்டத்தையும் சுற்றி விட்டு வந்த அதீசன். “என்ன டா முள்வேலிய நம்பி இருக்காங்க. ஏழடுக்கு மதில் சுவரை எழுப்பனுமா இல்லையா?” என்று சொல்ல
“பாண்டி என்ன தீவிரவாதியா? இது என்ன மிலிட்டரி கேம்பா?” என்று ஸ்டீவ் கிண்டல் செய்தவாறே “ஊருல எல்லாம் இப்டித்தாண்டா… சுவரெழுப்புரத எல்லாம் வீண் செலவா பார்ப்பாங்க, நம்மள மீறி என்ன நடந்திட போகுதுனு விட்டுடுவாங்க”
“இப்போ என்னடா பண்ணுறது?” என்று அதீசன் கேக்க
“இந்த ஸ்டீவ் இருக்க பயமேன் தோழா..” என்றவன் கரண்டு கம்பத்துக்கு ஒரு வயரை இறுக்கி அதை முள்வேலிக்கு பொருத்தி இருந்தான். “எவனாச்சும் வந்தான் செத்தான் டா”
“டேய் மிருகங்கள் ஏதாச்சும் மாட்டிக்க போகுது டா” என்று அதீசன் கலவரமடைய
“அதுங்கள சேப்பா அடச்சீ வைப்பாங்க காலைலதான் விடுவாங்க. நீ வா” என்றவன் தங்கராசுவையும், பொன்னுத்தாயியையும் அழைத்து அவன் பண்ணி வைத்ததைக் காட்டி காலையில் எழுந்ததும் என்ன பண்ண வேண்டும் என்றும் கூறி இருந்தான்.
“அவன் ஒரு தொட நடுங்கி மாப்புள. அவன் வர மாட்டான். துப்பாக்கியை கண்டு இந்த நேரத்துக்கு ஊர விட்டு ஓடியிருப்பான்” என்ற பொன்னுத்தாயி தூங்க செல்ல தங்கராசுவுக்குத்தான் நிம்மதி இல்லாமல் போனது.
“ஷாக் அடிச்சா செத்துடுவானோ?” என்று அச்சப்பட்டவாறே அதீசனிடம் கேக்க 
“சாக எல்லாம் மாட்டன் மாமா பயப்படாம போங்க” என்று சொன்னதும் தான் தங்கராசு நிம்மதியாக தூங்க சென்றார்.
“ஏன் டா உயிர் போகாதுனு சொல்லுற?”
“செத்து தொலையட்டும் டா… இவனெல்லாம் உயிரோட உலகத்துக்கு பாரமா இருந்து என்ன சாதிக்க போறான். அடுத்தவனை டாச்சர் பண்ணுறவன் கரண்டு கன்பத்துல அடிபட்டு செத்தான்னு இருக்கட்டுமே!”
“எலி பொறியில சரியா சிக்கினா கருகி சாகும். பார்க்கலாம்”
இவர்கள் நினைத்ததற்கு மாறாக முத்துப்பாண்டி வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன். மஞ்சரியை பற்றிய உண்மைகளை அறிந்துக்கொண்டால் அதீசனின் வீட்டார் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கணித்து வாகையை சந்திக்க முயன்றான். ஆனால் வாகையை சந்திக்க அவனால் முடியவில்லை.
சரி சங்கரனை சந்திக்கலாம் என்று காரியாலயத்துக்கு சென்றால், பாண்டியின் தோற்றத்தை பார்த்து காவலாளிகள் அவனை உள்ளே! விடவில்லை. எப்படியாவது சங்கரனை சந்தித்தே! ஆகவேண்டும் என்ற முடிவோடு ஒரு ஹோட்டல் வாசலில் மீட்டிங்கை முடித்துக்கொண்டு காருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தவரிடம் “உங்க மகன் கல்யாணம் பண்ணி இருக்குறது என் பொஞ்சாதிய” என்று கத்த ஆனந்துக்கு கண்ணசைத்த சங்கரன் கிளம்பி சென்றிருந்தார்.
ஆனந்தின் முன்னாடி அமர்ந்து அழுது கரைந்தான். மஞ்சரி தன்னை ஏமாற்றி விட்டதாகவும். அதீசனின் பணத்துக்காக இப்பொழுது அவனை திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும். அதீசனை அவளிடமிருந்து காப்பாற்றும் படியும் கெஞ்சினான்.
ஆனந்த் கையை கட்டிக்கொண்டு அவன் சொல்வதை ஒரு சிலை போல் உள்வாங்கிக் கொண்டிருந்தானே! தவிர ஒன்றும் பேசவில்லை. காரணம் அலைபேசி வழியாக சங்கரன் மறுமுனையில் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார். ஆனந்திடம் அவனை நாளைக்கு காலை குறிப்பிட்ட பார்க்கிக்கு வருமாறு சொன்னவர் அலைபேசியை துண்டித்து விட ஆனந்தும் தன் கடமையை சரியாக செய்து முடித்து கிளம்பி விட்டான்.
“ஒரு மனிசன் இந்த அழுகை அழுகிறேன். செல போல நிக்குறான். ஆறுதலா நாலு வார்த்த சொல்லுறானா பாரு” என்று ஆனந்தை திட்டியவாறே அவன் வாங்கிக் கொடுத்த குளிர்பானத்தையும் தொண்டையில் இறக்கிக் கொண்டு நாளைக்கு காலை சங்கரனிடம் என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்கலானான்.
ஏழு மணியளவில் பார்க்குக்கு வந்த சங்கரன் ஓடிக்கொண்டிருக்க ஆனந்த் அவரோடு ஓடியவாறு அன்றைய நாளில் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிக்கொண்டிருந்தான். சொன்ன நேரத்துக்கு பாண்டியும் வந்து சேர்ந்தான்.
“வணக்கம் சார்” பாண்டி பவ்வியமாக வணக்கம் வைக்க சங்கரன் தண்ணீர் அருந்தியவாறு அவனை எடைபோடலானார்.
“வணக்கம் சொன்னா பதில் சொல்லுறாங்களானு பாரு. இருக்கட்டு” பொருமியவன் சங்கரனின் முகத்தை பார்த்தவாறு நிக்க
“சரி சொல்லு என்ன சொல்லணும்” என்றவாறு அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தார் சங்கரன்.
பாண்டி அவரருகில் அமர முட்பட சங்கரன் பார்த்த பார்வையில் நின்று கொண்டே பேசலானான்.
ஆனந்த் அவரின் பின் புறம் நின்றிருக்க, நேற்று அவனின் முன் அழுதது போல் அழவில்லை. நேரடியாகவே! விஷயத்தை சொல்லி இருந்தான். அதற்கு காரணம் சங்கரன் அவன் பேச ஆரம்பிக்கும் முன் “உனக்கு அஞ்சி நிமிஷம் தான் டைம். என்ன சொல்லணுமோ! சொல்லு எனக்கு நிறைய வேல இருக்கு” என்று சொல்ல ஆனந்த் ஐந்து நிமிடங்களுக்கு டைமரை செட் செய்திருந்தான்.
“இந்த பணக்காரனுக்கு எல்லாம் சரியான கடிகாரத்துக்கு பொறந்தவனுகளா இருப்பானுக போல” என்றவாறுதான் சொல்லி முடித்தான்.
அவன் சொல்லி முடித்த உடன் அவன் கையில் ஒரு கோப்பை கொடுத்த சங்கரன் “இதுல என் பையனோட மனைவிய பத்தி இருக்கு. என் பையன் எந்த தப்பும் பண்ண மாட்டான் எங்குற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. நீ சரியான ஆம்பிளையா இருந்தா என் பையன் கூட மோது. உன்ன பத்தி விசாரிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. தேவ பட்டா ஆணி வேர்வரைக்கும் போய் விசாரிப்பேன்” என்று விட்டு ஆனந்தத்தோடு கிளம்பி இருந்தார்.
“சே… என்ன இவனுங்க இப்படி இருக்கானுங்க” வந்த வேலை நடக்காத ஆத்திரத்தில் ஊர் திரும்பினான் பாண்டி. அவன் சங்கரன் சொன்னதை உன்னிப்பாக கவனிக்க மறந்தான்.
அதீசன் அறையை விட்டு வெளியே வரும் பொழுது மஞ்சரி குளித்து விட்டு தலை துவட்டிக்கொண்டிருந்தாள்.
“காபி சாப்பிடுறீங்களா?”
“நீயும் சாப்பிடுறதா இருந்தா எடுத்துட்டு வா… ரெண்டு பேரும் ஷேர் பண்ணி குடிக்கலாம்” என்று கண்ணடிக்க, உண்மையை அறிந்துகொண்ட பின் தன்னை விட மாட்டான் என்று புரிய தலையசைத்தவாறு சென்றாள் மஞ்சரி.
“என்ன மாப்புள எங்க கிளம்பிட்டீங்க” ஸ்டீவ் அழகாக ஆடையணிந்து வரவும் கேட்டான். அதீசன்.
“ஏன் டா… நீ தானே! நேத்து என்ன அந்த லாயர் பொண்ண பார்த்துட்டு வானு சொன்ன. போன் பண்ணி அப்பொய்ன்மெண்ட் கூட பிக்ஸ் பண்ணிட்டேன். இப்போ எங்க போறேன்னு கேட்டு கடுப்படிக்கிற?” என்று ஸ்டீவ் கத்த
“ஆகா… மீட் பண்ண சொன்னா டேட்டிங் போறது போல துணி போட்டிருக்கான். இல்லையே! இவன் இப்படி மடங்க மாட்டானே! உண்மையெல்லாம் தெரிஞ்சிருச்சுனு சொன்னா போக மாட்டான்”
“ஓகே டா போயிட்டு வா…” என்ற அதீசன் ஸ்டீவ் சமயலறைக்குள் நுழையவும் “எங்க டா அங்க போற?”
“ஏன் டா.. போற இடத்துக்கு சாப்பிட்டுட்டு போக விடுடா… எல்லாம் உன் கிட்ட சொல்லனுமா என்ன?”
“விளங்கும். கடைசிவரைக்கும் கல்யாணமாகாம சிங்கிளாகத்தான் இருக்கப்போற”
“டேய் என்ன டா சாபமெல்லாம் விடுற?” ஸ்டீவ் அதிர்ச்சியாக கேக்க
“போடா டேய்.. போ.. போய் அந்த பொண்ணோட வெளிய எங்கயாச்சும் சாப்பிடு. கையோட ஊரையும் சுத்திக் காட்டு”
“யாரு அவளுக்கா… எனக்கே! இந்த ஊரப்பத்தி தெரியல, என்னமோ! சொல்லுற சரி” என்றவாறு வெளியேறி இருந்தான் ஸ்டீவ்.
மஞ்சரி காபி கொண்டு வரவும் அதீசன் வாங்காது “நீ சாப்பிட்டு தரியா? இல்ல நான் சாப்பிட்டு தரட்டுமா என்று கேக்க,
“யாரு சாப்பிட்டு கொடுத்தாலும் மத்தவங்க சாப்பிடும் பொழுது ஆறிடும். அதனால நீங்களே சாப்பிடுங்க” என்றாள்
“என்ன எஸ்ஸாக பாக்குறியா? இப்படி உக்காரு” என்றவன் சாஸரில் கொஞ்சம் ஊற்றி இத குடி இன்னக்கி இது போதும்” என்று சொல்ல
“ஐயே! பூன குடிக்கிற மாதிரியே! இருக்கு” 
“இந்தா.. இந்தா.. அப்போ இதுல குடி என்று கப்பை நீட்ட”
மிரண்டவள் “இல்ல. இல்ல. எனக்கு இதுவே! போதும்” என்றவாறு மெதுவாக அருந்தலானாள்.
அவள் முழுவதும் அருந்தி முடித்த பின்தான் அதீசன் அருந்தவே! ஆரம்பித்திருந்தான்.
அக்ஷராவை சந்தித்த ஸ்டீவ் மஞ்சரியின் கேஸ் பைலை கேக்க, திருதிருவென முழித்தவள்
“அத நான் கைல வச்சுக்கிட்டா அலையிறேன். அது சென்னை ஆபீஸ்ல இருக்கு” என்று சொல்ல
பல்லைக் கடித்தவன் “அப்போ என்ன எதுக்கு மீட் பண்ண வர சொன்ன?”
“ஹலோ… நீங்கதான் மீட் பண்ண முடியுமான்னு கேட்டீங்க. என்ன விஷயம்னு சொல்லி இருந்தா நான் போன்லேயே! சொல்லி இருப்பேனே!”
“நீதான் கேக்கலையே! கேட்டிருந்தா நான் சொல்லி இருப்பேன்” என்றான் கெத்தாக
தன் தவறை மறைத்துக்கொண்டு அழகாக பொய் சொல்பவைக் காண அக்ஷராவுக்கு சிரிப்பு வர சிரித்தும் விட்டாள். 
“என்ன ராட்சசிக்கு சிரிப்பு வருது” என்று ஸ்டீவ் யோசிக்க,
“நான் இப்போ சண்டை போடுற மூட்ல இல்ல. செம்ம பசில இருக்கேன். நைட்டும் ப்ரூட்ஸ் மட்டும்தான் சாப்பிட்டேன். வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்” என்று அழைக்க ஸ்டீவ்க்கு அந்த நொடி அவளை பிடித்துத்தான் போனது.
“ஏன் மேடம்கு சமைக்க நேரமில்லையோ!”
“இது என் சொந்த ஊர் கிடையாது. லாட்ஜுல தங்கி இருக்கேன். அங்க நான் எப்படி சமைச்சி சாப்பிடுறது. தெரியாத ஊரு வேற நைட்டுல வெளிய போகவும் பயமா இருந்தது” என்றவளின் குரலில் சிரிப்புதான் இருந்தது.
“என்னாம் பெரிய லாயரம்மாக்கு நைட்டுல வெளிய போக பயமா?” கேலியாகத்தான் சொன்னான்.
“வக்கிர புத்தியுள்ளவங்க கண்ணுக்கு பச்சை குழந்தைகளே! தெரியிறதில்ல. நான் லாயரென்றா தெரிய போறேன்? தெரியாத ஊர். தனியா வந்திருக்கேன்னு தெரிஞ்சா கண் சிமிட்டும் நேரம் மயக்க மருந்து கொடுத்து தூக்க முடியுமே!”
“உண்மைதான். அப்போ பகல்ல பண்ண மாட்டாங்களா?”
“குதர்க்கமாகவே! கேக்கணும்னு இருக்கீங்க போல. பண்ணுவானுங்க. பகல்ல வெளிச்சம், ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சான்ஸ் கம்மி. நைட் அப்படி இல்ல”
“சரி தற்காப்புக்கலைனு ஒன்னு இருக்கே! அத கொஞ்சம் படிச்சி வகிசி கிட்டா தான் என்னவாம்”
“ஹாஹாஹா… நான் கராத்தேள ப்ளாக் பெல்ட்”
“இது வேறயா? அப்போ எதுக்கு பய படுறீங்க”
“நான் பயம்னு சொன்னது எங்க அம்மாக்கு. எனக்கில்லை. அவங்க பாசம்தான் என்ன கட்டி போடுது. அங்க போகாதா.. இங்க போகாத.. அதனால போறதில்ல. சின்ன காயம் பட்டா போதும். நீ லாயரா? டிடெக்டிவ்வானு திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. வேலைய விட்டுட்டு வீட்டுல இருன்னு கத்த ஆரம்பிச்சிடுவாங்க, சோ கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்” கடைசி வாக்கியத்தை இரகசிய குரலில் அவன் புறம் குனிந்து காதுக்குள் சொல்ல அவள் பேச்சில் தன்னை தொலைத்துக்கொண்டிருந்தவன் அந்த ஹஸ்கி வாய்ஸில் மயங்கித்தான் போனான் ஸ்டீவ்

Advertisement