Advertisement

அத்தியாயம் 20
டிடெக்டிவ் கொடுத்த கோப்பை ஆராய்ந்துக்கொண்டிருந்தான் அதீசன். அதில் முத்துப்பாண்டி தங்கராசின் அக்கா வைஜயந்தியின் மகன் உட்பட அவர்களுக்கு இருந்த பகை. அதை மறந்து மஞ்சரியை திருமணம் செய்தது அதன் பின் முத்துப்பாண்டியை மஞ்சரி கொலை செய்ய முயற்சி செய்ததாக கேஸ் பதிவாகி இருந்தது. வக்கீல் லதா சுப்ரமணியம் மஞ்சரியின் கேஸை கையிலெடுத்து மஞ்சரிக்கு விவாகரத்து வாங்கிக்கொடுத்தது மட்டுமல்லாது முத்துப்பாண்டி மஞ்சரியை கற்பழிப்பு செய்ய முற்பட்டதால் தற்பாதுகாப்புக்காக அவனை தாக்கியதாக வாதாடி அவளை வெளியே! கொண்டு வந்தது என்பதுவரை தெளிவாக இருந்தது.
அதைப்படித்த அதீசனுக்கு அதிர்ச்சி தாளவில்லை. கட்டிய மனைவியை கற்பழிக்க முயற்சி செய்தானா? மஞ்சரி முத்துப்பாண்டியோடு சுமூகமான வாழ்க்கையை வாழ்ந்திருப்பாள். அவனுடைய கள்ளத் தொடர்ப்பை கண்ணால் பார்த்தவள் விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்திருப்பாள் என்றுதான் அதீ எண்ணி இருந்தான்.  மஞ்சரி அவனோடு எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தாள் என்ற சந்தேகம் முதன் முறையாக அதீசனுக்கு ஏற்பட்டது.
அதை யாரிடம் கேட்டு அறிந்துக்கொள்வது? மஞ்சரியிடம் கேட்க பயமாக இருந்தது. அவள் மறக்க நினைக்கும் பல சம்பவங்கள் முடிந்துப் போன அத்தியாயமாக அவள் வாழ்வில் இருக்க, அவளிடமே! கேட்டு ஆரிய புண்ணில் அசிட் பாச்சியது போல் அவள் மனதை கீறி விட அவன் விரும்பவில்லை.
சொல்ல நினைத்திருந்தால் அவளே! சொல்லி இருப்பாளே! சொல்லு, சொல்லு என்று அவளுக்கு உதவி செய்யவேணும் அவளை துன்புறுத்த அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. யாரிடம் கேட்பது என்று சிந்தித்துக்கொண்டிருந்தவனின் முதுகில் அடித்தான் ஸ்டீவ்
“என்ன பாஸ் அதான் இப்போ தங்கச்சி கூட தூங்க எந்த பிரச்சினையும் இல்லல. இன்னும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்று வார
“ஆமா தூங்க மட்டும்தான் முடியும்” என்று முணுமுணுத்தவன் ஸ்டீவின் கையில் கோப்பைக் கொடுத்து நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டான்.
“டாக்டர்கிட்டயும் வக்கீல் கிட்டயும் பொய் சொல்ல கூடாதுனு சொல்வாங்க, அந்த லாயருக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கும் நாம ஏன் அவங்க கிட்ட கேக்க கூடாது” என்று ஸ்டீவ் கேக்க
“நண்பேன்டா” என்று அவனைக் கட்டிக்கொண்டவன் “அதான் உன் பிரெண்டு அந்த ஜூனியர் லாயர் இருக்காங்களே! அவங்க கிட்டயே! கேட்டுக்கலாம்” என்றான் அதீசன்
“யாரு அந்த கருப்பு பன்னி கிட்டயா? வேற வினையே! வேணாம். ஓவரா ஸீன் போடுவா” ஸ்டீவ் மறுக்க
“ஏன் டா நீ வெள்ளையா இருக்குறதால பாக்குறவங்க எல்லாம் கருப்பா? அதுவும் அந்த பொண்ண பன்னினு சொல்லுற? உன் மூஞ்ச கண்ணாடில பாத்திருக்கியா? நீதான் வெள்ளப் பன்னி” என்று அதீசன் திட்ட
“ஏன் டா? அவ உன் தங்கச்சியா? அக்கா பொண்ணா? மாமன் மகளா? இப்படி வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வர?” நண்பனை ஸ்டீவ் முறைக்க 
“அந்த பொண்ணு என் பொண்டாட்டிக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தெய்வம் டா.. தெய்வம்.  என் வாழ்க்கைல ஒளியேத்தி வச்ச குத்து விளக்கு” அதீசன் சிலாகிக்க
“இதெல்லாம் ஓவர் மச்சி.. அவ ஒன்னும் பண்ணல லதா மேடம்தான் பண்ணாங்க” உதடு சுளித்தான் ஸ்டீவ்
“பெரிய லாயர் எல்லாம் வாதாடுவாங்க, ஜூனியர் தான் டா கேஸ படிச்சி கஷ்டப்பட்டு பாயிண்ட்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி வைப்பாங்க” அதீசன் அக்ஷராவை விட்டுக்கொடுக்காது பேச
“என்ன மாதிரின்னு சொல்லு. உனக்காக நன் கஷ்டப்படுறேன். பேரும் புகழும் உனக்கு மட்டும்” தருணத்தில் கொட்டினான் ஸ்டீவ்
“அதுக்காக சொத்துல பங்கா டா தர முடியும்?” என்று அதீசன் சிரிக்க நண்பனை நன்றாக முறைத்தான் ஸ்டீவ் 
“உண்மையிலயே! அந்த ஜூனியர் லாயர் பார்த்து நன்றி சொல்லணும். என் வாழ்க்கைல விளக்கேத்தி வச்ச தெய்வம் டா தெய்வம்” ஸ்டீவை சீண்டவேன்றே அதீசன் மீண்டும் ஆரம்பிக்க
“ஏன் கோயில் கட்டி கும்பிட்டேன். அவ மூஞ்சியும் மொகரக்கட்டையும்” என்று அக்ஷராவை திட்டும் பொழுது அவன் அலைபேசி சிணுங்கி குறுந்செய்தி வந்ததாக சொன்னது.
அதை வாசிக்க, “டின்னர் சாப்பிட்டியா?” என்று கேட்டிருக்க இவனும் “ஆ.. சாப்பிட்டேன்” என்று பதில் அனுப்பவும் மறுபுறத்திலிருந்து “ஓகே குட் நைட்” என்று மெஸேஜ் வந்தது.
“என்ன டா மச்சான் ஒரு பொண்ணுகிட்ட விழுந்திட்ட போல” என்று அதீசன் வம்பிழுக்க,
“பொண்ணா? பையனானு தெரியல? சாப்டியா? என்ன பண்ணுறான்னு கேட்டு மெஸேஜ் பண்ணுறாங்க நானும் பதில் அனுப்பிகிட்டு இருக்கேன்” என்றவன் அதீசனுக்கு காட்ட அது அக்ஷராவின் எண் என்று கண்டுகொண்டவன்
“யாரோ ஒரு பொண்ணு உன் மேல கண்ணு வச்சிட்டான் மச்சான். சீக்கிரம் மின்கிளாக வாழ்த்துக்கள்” என்று சொல்ல
“பொண்ணா? எனக்கு இங்கிலாந்துலதான் பொண்ணு பார்க்கணும்னு நினச்சேன்” என்றான் கிண்டலாக
தன்னுடைய தோல் நிறத்தையும் முடியின் நிறத்தையும் கண்டு பழகினாலும், தமிழன் சென்று அறிந்த பின் இவனுக்கு எதோ! தோல் வியாதி என்று ஒதுங்கியவர்கள்தான் அதிகம். இதில் எந்தப்பெண் இவனை காதலிப்பாளாம். என்றுதான் கிண்டல் செய்தான்.  
“சரி நாளைக்கு போய் அந்த ஜூனியர் லாயர மீட் பண்ணி மஞ்சரியோட கேஸ் பைல் கிடைக்குமான்னு கேளு”
“அத போன்லேயே! கேட்கலாமே!”
“இவன் ஒருத்தன் இப்படியே போனா சிங்களாத்தான் இருக்கணும்” முணுமுணுத்தவாறே “சொன்னதை மட்டும் செய் டா” என்று கத்த
“போறேன். போய்த் தொலைறேன். அவ ஓவரா பேசினா சப்புன்னு அறஞ்சிட்டுதான் வருவேன்” என்றவன் தூங்கப் சென்றான்.
அதீசன் அறைக்குள் வரும் பொழுது மஞ்சரி புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“தூங்கலையா?”
“நாளைக்கு திங்கக்கிழமை இல்லையா? அதான் நாளைக்கு நடாத்த வேண்டிய பாடத்தை கொஞ்சம் பாத்துக்கிட்டேன். தேவையானதை எடுத்து வச்சிக்கிட்டேன்” என்றவாறு மஞ்சரி கட்டிலின் புறம் நடக்க,
அவள் கையை பிடித்து கட்டிலில் அமர்த்திய அதீசன் “வாராகி உன்ன நான் ஏன் மஞ்சரினு கூப்டாம வாராகினு கூப்டேருனு தெரியுமா? வாராகினா தேவதை. நீ என் வாழ்க்கைல வந்த தேவதை வாராகி” என்று அவள் கைக்கு முத்தமிட அவள் மேனி சிலிர்த்ததோடு கண்களும் கலங்கியது.
கோப்பை படித்தபின் மனம் விட்டு பேசிவிடுவது என்ற முடிவோடுதான் அதீசன் அறைக்கே! வந்தான். காதலிக்கிறேன், மூன்று வருடங்களாக தேடிக்கொண்டு இருந்தேன் என்று சொல்வதெல்லாம் பெரிய விஷயமில்லை.. காதலை உணர்த்துவதும், புரியவைப்பதும் தான் சிரமமான விஷயம். அது வார்த்தைகளால் மட்டுமன்றி செய்கைகளாலும் நிரூபிக்க வேண்டிய விஷயம்.
மஞ்சரி வந்து பேசட்டும் என்று அமைதியாக இருந்தால் எவ்வளவு காலம் அமைதியாக இருக்க வேண்டி இருக்குமோ! என்றுதான் மனம் திறந்தான்.
“தெரியும் அப்பா பார்த்துப் பார்த்துதான் எனக்கு அந்த பேர வச்சாரு” என்றவள் “நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்கல்ல” என்று அதீசனை ஏறிட்டு “உங்க குடும்பம் ரொம்ப அன்பான குடும்பம். என்னால எந்த பிரச்சினையும் வந்திடக் கூடாது. உங்க அப்பா நம்ம கல்யாணத்த ஏத்துக்க மாட்டாருல்ல. உங்கம்மா வேற நடிக்கிறாங்க. எனக்கு அது சரியா படல” தன் மனதில் உள்ளதை பட்டென்று சொல்லி விட்டாள்.
“ஓஹ்..” என்றவன் சிரிக்க ஆரம்பிக்க “நான் என்ன காமெடியா பண்ணேன்” என்று பார்வையாலையே! கேட்டவாறு கணவனை முறைக்கலானாள்.
“எங்க மம்மி நடிக்கிறது எங்க டேட்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? எல்லாம் தெரியும்” என்றவன் மீண்டும் சிரிக்க,
“நிஜமாத்தான் சொல்லுறீங்களா?”  நம்ப முடியாத பார்வையை பார்த்தாள் மஞ்சரி.
“உனக்கு எங்க டேட் பத்தி தெரியாதில்ல. அவர் என் வயசுல ரொம்ப பிலே பாயாதான் இருந்திருக்கிறார். எல்லாம் மம்மிய பாக்குறவரைக்கும்தான். நேரடியா தாத்தா கிட்ட போய் பொண்ணு கேட்டிருக்கிறார். தாத்தாவும் பெரிய பணக்காரர்தான். அப்பாவைப் பத்தி விசாரிச்சிட்டு. காசு இருந்தாலும் உன் நடத்த சரியில்ல. எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அவ கல்யாணத்துக்கு பிறகு கண்ண கசக்கிட்டு வந்து நிப்பா.. அவ கண்கலங்கினா என்னால தாங்க முடியாது. யு ஆர் ரிஜெக்டட்னு சொல்லி வெளிய அனுப்பி வச்சிட்டாரு. டேடியால மம்மிய மறக்க முடியல. மம்மி கிடைக்க மாட்டாங்கன்னு பைத்தியம் பிடிக்காத குறைதானாம். ஒரு வருஷம் எதிலையும் பிடிப்பிலாம சுத்திகிட்டு இருந்தவர தாத்தாவே! கூப்பிட்டு மம்மிய கல்யாணம் பண்ணி வச்சிட்டாராம்”
மஞ்சரி புரியாது பார்க்க “என்ன புரியலையா? டேடியோட நடவடிக்கைகளை கவனிச்சு இவன தவிர என் பொண்ண யாராலயும் நல்லா பாத்துக்க முடியாதுனு தாத்தாவே! முடிவு பண்ணிட்டாரு போல. அதுல டேட் ஒரு பாடத்தை காத்துக்கிட்டாராம்.  மம்மி கிடைக்கலன்னு டேடி குடிக்கு அடிமையாகவுமில்லை. வேற லேடீசை தேடி போகவுமில்லை. மம்மி நினைப்பாகத்தான் இருந்தாராம். அதனாலதான் அவருக்கு மம்மி கிடைச்சங்களாம். சோ ஒரு விசயத்துல உண்மையா, நேர்மையா இருந்தா அது கிடைக்கும்.
நான் இத்தாலிக்கு படிக்க போகும் போது டேடி எனக்கு சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா? நம்ம மனசுக்கு பிடிச்ச பொண்ணு ஒருநாள் நம்ம லைப்ல வருவா, அதுவரைக்கும் நாம சந்திக்கிற பொண்ணுக கிட்ட இருந்து விலகி இரு. பணம் இருக்குனு தெரிஞ்சா நம்ல தேடி வரவங்களும் இருக்காங்க, பணம் இருக்குறதால நம்ம மனசும் எது வேணாலும் செய்யலாம்னு அலைபாயும். நீ போற ஊரும் எந்த கட்டுப்பாடும் கிடையாது சோ மனச கட்டுப்பாடோடு வச்சிக்கு சொன்னாரு.
டேட் கிட்ட நான் எதையும் மறைச்சது கிடையாது. எனக்கு பொண்ணு பாக்குறதா சொன்னபோவே! உன்ன பத்தி சொல்லி கொஞ்சம் டைம் கொடுங்க தேடிப்பாக்குறேன்னு சொன்னேன். உனக்கு ஆறு மாசம் டைம். அதுக்குள்ள கண்டு பிடிக்கலைன்னா நான் சொல்லுற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னாரு. மம்மி நடிக்கிறது தெரியும் அவங்க மேல இருக்குற லவ், ஏன் எங்க மேல இருக்குற பாசம்தான் அவரோட அமைதிக்கு காரணம்” என்றான்.
கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்த மஞ்சரி “எனக்கு விவாகரத்தானது தெரிஞ்சா அவர் அமைதியா இருப்பாரா?” என்று கேக்க
“உன் லைப்ல என்ன நடந்ததுன்னு ஸ்டீவ்க்கு கண்டு பிடிச்சி சொல்ல சொன்னேன். ஆனா அவனுக்கு முன்னாடி டேடித்தான் இந்த பைலை எனக்கு கொடுத்தாரு” என்றவன் ஒரு கோப்பை மஞ்சரியின் கையில் கொடுக்க அதிர்ச்சியடைந்தவள்
“உங்க டேட் ஒன்னும் சொல்லலையா?”
“என் டேடி பணத்துலயே! பிறந்து வளர்ந்தவரு.  அதனால சில கொள்கைகளை அவரால விட முடியல. ஏழைகள் என்றா அவர் பார்வையின் கோணமும் வேற அத என்னால மாத்தவும் முடியாது. என் மேல இருக்குற பாசத்தால எங்க நான் தப்பான பொண்ண லைப் பாட்னரா சூஸ் பண்ணிட்டேனோன்னு பயம் அவருக்கு இருந்தது. சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்ட கோபம் வேற. ஆனாலும் உன் மேல அவர் அந்த கோபத்தை காட்டல இல்ல. ஆனா நீ தான் என் லைப்ன்னு அவருக்கு தெளிவா சொல்லிட்டேன். 
ரொம்ப நேரம் யோசிச்சவரு. உன் மனைவி வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு தெரியாது. அத நீ மாட்டு தெரிஞ்சிகிட்டா போதும் அதீ. அந்த பொண்ணு  பக்க நியாயத்தை கேக்காம எந்த முடிவுக்கும் வரக் கூடாது. அதே நேரம் நடந்த சம்பவங்களால் உங்க எதிர்கால வாழ்க்கைல எந்த பிரச்சினையும் வராம பாத்துக்கனு சொன்னாரு” என்றவன் புன்னகைக்க
“அப்படினா…”
“டேட் உன்ன என் மனைவியா பாக்குறாரு. மருமகளா ஏத்துக்க கொஞ்சம் டைம் தேவைப்படும். ஐ மீன் உன் கூட சகஜமா பேச. ஆனா மம்மி ஓவராக்ட்டிங் பண்ணதால இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம். மம்மிய இப்படி பாக்குறது பிடிச்சிருக்காம் கொஞ்சம் நாளைக்கு அப்படியே! இருக்க விடட்டுமாம்”
“ஐயோ.. அத்தைக்கு இது தெரியாதே! ஏதாவது பேசி மாட்டிக்க போறாங்க” என்றவள் பதற
“விடு வாராகி வயசு போன காலத்துல அவங்க எதோ விளையாடுறாங்க. நீ என் வீட்ட பத்தி ஒர்ரி பண்ணிக்காத. எந்த சூழ்நிலையிலும் என் மனைவியான உன்ன விட்டுக்கொடுக்க மாட்டாங்க. சரி வா தூங்கலாம். காலைல ஸ்கூல் வேற போகணும் இல்லையா?” என்றவன் தூங்க செல்ல
“இல்ல நான் உங்க கிட்ட சில விஷயங்களை மனசு விட்டு பேசணும்” என்றாள் மஞ்சரி.   
 “சொல்லு வாரககி என்ன சொல்லணும்” அதீசன் அவள் முகத்தையே! ஏறிட
“இந்த பைலை முழுசா படிச்சீங்களா? அதுல…. அதுல நான் பாண்டிய கொல்ல பார்த்ததாக கேஸ் கொடுத்தது இருக்குதா?” அச்சம் நிறைந்த விழிகளோடுதான் கேட்டாள் மஞ்சரி.
அவள் மீது எந்த தப்பும் இல்லை என்றாலும் பெண்கள் மீது தானே! இந்த சமூகம் குற்றம் சொல்லும். இந்த கோப்பில் உள்ளதை படித்து விட்டு அதீசன் அவளை தவறாக புரிந்துக்கொள்வானோ! என்று அச்சம் கொண்டாள் மஞ்சரி.
அவள் கையை ஆதரவாக பிடித்துக்கொண்ட அதீசன் “நீ கொலையே! பண்ணி இருந்தாலும் நான் உன் பக்கம் தான் நின்றிருப்பேன் வாராகி” என்று சொல்ல அவன் நெஞ்சில் சாந்து கொண்ட அவன் மனையாள் முத்துப்பாண்டியுடனான அவள் வாழ்க்கையை சொல்லலானாள்.  
பெண் பார்க்க முத்துப்பாண்டி வந்திருக்கவில்லை. வைஜயந்தி மட்டும் சொந்தபந்தங்களோடு வந்து இனிக்க இனிக்க பேசி பூவைத்து, தாம்பூல தட்டு மாற்றிக்கொண்டவள் ஊர் கோவிலில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும், திருமணத்துக்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தைதை வைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்துகொண்டு சென்றிருந்தாள்.
பேச்சியம்மாளுக்கு பேரனை பார்க்க முடியவில்லை என்ற மனக்குறை மட்டும் தான் மற்றப்படி பெண் பார்க்கவே! வைஜயந்தி தங்கம், வைரம், பட்டுப்புடவைகள் என்று மஞ்சரிக்கு ஏகப்பட்ட பரிசுகளோடுதான் வந்திருந்தாள். அதுவே! அவள் பகையை மறந்து விட்டாள் என்று இவர்களை நிகைக்க வைத்திருந்தது.
ஆனால் உண்மை அதுவல்ல. வைஜயந்தி எதையும் மறக்கவுமில்லை. அவளின் கணவனின் குடும்பத்தார் மறக்க விடவுமில்லை. முத்துப்பாண்டியையும் தகப்பனின் இறப்புக்கு தங்கராசுவை பழிவாங்கியே! தீர வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தே! வளர்க்கலாயினர்.
வைஜயந்திக்கு தன் சொந்த குடும்பத்தின் மீது இவ்வளவு துவேஷம் வரக்காரணம் சொத்து பிரச்சினை தான். திருமணம் செய்து கொடுக்கும் பொழுது சுந்தரேசன் சீர்வரிசையில் எந்த குறையும் வைக்கவில்லை. சொல்லப்போனால் அளவுக்கு அதிகமாகத்தான் தன் ஒரே பொண்ணுக்கு கொடுத்திருந்தார்.
முத்துப்பாண்டி பிறந்து காது குத்துக்கு போன போது பேரனுக்கு சொத்தை எழுதுமாறு சம்பந்தமே! இல்லாமல் வைஜயந்தியின் கணவனின் வழியில் வந்த ஒருவர் பேச எனக்கு ஒரு மகன் இருக்கான். பொண்ணுக்கு எல்லாம் பண்ணிட்டேன். மத்ததெல்லாம் பையனுக்குத்தான் என்று சுத்தரேசன் கூறி விட அது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
அந்த விஷயத்தை பெரிதாக்கி வைஜயந்தியின் மனதிலும் விஷத்தை ஏற்றி விட்டிருக்க, திருவிழாவுக்கு சென்ற நேரம் பேச்சு வார்த்தை முற்றி சுந்தரேசனை கொன்று, தங்கராசுதான் வைஜயந்தியின் கணவனின் காலை வெட்டியதாக சொல்லி இரு குடும்பத்துக்கும் நடுவில் தீரா பகையை உண்டு பண்ணி இருந்தனர்.
தங்கராசுவை எந்த வழியில் பழிதீர்ப்பது? குடும்பத்தோடு கொன்று ஒழிப்பது சிறந்ததா? என்று வைஜயந்தி மகனோடு பேச்சு வார்த்தை நடாத்த
“இல்ல ஆத்தா.. அவன் ரேத்த கண்ணீர் வடிக்கணும். அதுக்கு நான் அவன் பொண்ண கட்டணும். அவ இங்கன வந்து ஒரு வேலைக்காரியா கஷ்டப்படுத்த பார்த்து உன்ற அண்ணன் துடிதுடிச்சி சாகட்டும்” என்றான் முத்துப்பாண்டி. 
திருமணத்துக்கு இரண்டு நாள் இருக்கும் பொழுதே! வைஜயந்தி சொந்தபந்தங்களை அழைத்துக்கொண்டு மஞ்சரியின் ஊருக்கு வந்து விட்டாள். தங்கராசுவும் தனது ஒரே மக்களின் திருமணத்தை சிறப்பாகத்தான் செய்திருந்தார்.
நிச்சயதார்த்தம், திருமணம் என்று மூன்று நாளும் ஊருக்கே! விருந்து வைத்திருந்தார். பகையை மனதில் வைத்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி வைஜயந்தி ஊர் முன்னாடி மானத்தை வாங்கி விடுவாளோ! என்ற சிறு அச்சம் தங்கராசுவின் மனதை நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டு இருக்கத்தான் செய்தது.
பொன்னுத்தாயியும் “இத்துணை வருஷமாக பகையாளியாக இருந்துட்டோம் அதான் அப்படி தோணுது. விடுங்க” என்று விட்டாள்.
எல்லா அச்சமும் முத்துப்பாண்டியை பார்க்கும் வரைதான். “மாமா” என்று கட்டிக்கொண்டு பாச மழையில் நனைய வைத்தவானை தங்கராசுவால் சந்தேக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
நிச்சயதார்த்தத்தின் போதுதான் மஞ்சரி முத்துப்பாண்டியை முதன் முதலாக பார்த்தாள். அவன் கண்கள் அவளை ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் பெரிதாக அவளுக்கு அவன் மீது ஈர்ப்பு வரவில்லை. அந்த நேரத்தில் அவள் மனதில் அதீசனின் முகம்தான் மின்னி மறைந்தது.
“என்ன சொல்லுற வாராகி? அப்போ உனக்கும் என்ன நியாபகம் இருந்திருக்கு. ஏன் அன்னக்கி கேட்டப்போ சொல்லல” மனைவியை தன்னிடமிருந்து பிரித்து செல்லமாக முறைத்தான் அதீ
“ஒரு பொண்ணுக்கு காதலிக்கிறேன்னு சொன்னா மட்டும் பத்தாது. என்ன நடந்தாலும் உன் கூட இருக்கேன் என்ற நம்பிக்கையை கொடுக்கணும். அப்போ நீங்க அந்த நம்பிக்கையை எனக்கு தரல”
“இன்னக்கி தந்துட்டேனா?” சின்ன சிரிப்பினூடே! கேக்க
“அதான் சொன்னீங்களே! நான் கொலை செஞ்சிருந்தாலும் என் கூட உறுதுணையா இருந்திருப்பேனு. அது போதும் என்றவள் மீண்டும் அவன் நெஞ்சில் சாந்துகொண்டு சொல்லலானாள். 

Advertisement