Friday, March 29, 2024

    Kathal Casatta

    கசாட்டா 11: காணாமல் போனதாகக் காதலை தேடிக் கொண்டிருக்கும் நீ அது உனக்குள்ளே ஒளிந்து கிடப்பதை என்று அறிவாயோ? சென்னையின் அந்தப் புகழ் பெற்ற நட்சத்திர உணவகத்தில் ராகுல் காத்துக் கொண்டிருக்க அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான் கௌதம். “மச்சான் வந்து ரொம்ப நேரம் ஆச்சாடா..?” என கேட்டபடியே ராகுலுக்கு எதிரே...
    சாட்டா 10: வெண் பஞ்சு நெஞ்சம் கூடப் பாறாங்கல்லாய்க் கனக்கிறது உன் காதல் எனை விட்டு நீங்கிய நொடி! சென்னை மாநகரம் தனக்கே உரிய பரபரப்புடன் தனது நாளை தொடங்கியது.சிதம்பரம் குடும்பமும் ராகவன் குடும்பமும் சென்னையை வந்தடைந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு ஆண்கள் ஒரு பக்கமும்,...
    கசாட்டா 9: வெந்நீரில் நீந்தும் மீன்கள் உயிர் பிழைப்பது கடினம்! அது போல உன் சுடும் கண்ணீரை கண்ட பின் நான் வாழ்வது கடினம்! தன் தோள் சாய்ந்திருந்த மதியை லேசாக அணைத்தவாறே கௌதமின் நினைவுகளும் கடந்த காலத்திற்குப் பயணமானது. அன்று ராகிங் செய்த மதுவை திட்டிய பின் தொலைப்பேசியில் பேசிக் கொண்டே சென்ற...
    கசாட்டா 8: இரண்டு வருடங்களுக்கு முன் : “தாமு…! மதி எங்க இன்னும் குட்டிமா தூங்குறாளா..? “ என தாமரையிடம் கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தார் ராகவன். “இன்னைக்குப் பரிட்சை முடிவு வருது… காலையிலயே எழுந்திருச்சு கோவிலுக்குப் போயிருக்கா..! “ என்று சொல்ல, “ரிசல்ட் நினைச்சு ரொம்பப் பயந்துட்டா போல… சரி நிம்மதியா சாமி கும்பிட்டுட்டு வரட்டும்…“ என மகளைப்...
    கசாட்டா 7: வேதனை கொண்டு வாடிகிடந்த என் மனம் மறுநொடி வாசம் வீசுகிறது உன் காதலின் வரவால்! ஆதவனின் வருகையால் முதலில் கண்விழித்த கௌதமின் கண்களில் போர்வையைக் கழுத்துவரை மூடிக் கொண்டு குழந்தையைப் போல் சுருண்டு படுத்துக் கொண்டிருந்த மதியை கண்டதும் நேற்று இரவு நடந்தவை கண்முன் விரிய தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். காலை...
    கசாட்டா 6: என் இருவிழி உறங்கிய போதும் உறங்கவில்லை உன்னில் நான் கொண்ட காதல் கனவிலும் நீ..! குடும்ப உறுப்பினர்களின் கேலியும் கிண்டலும் அவர்களைத் துரத்த அங்கிருந்த அறைக்குள் வந்ததும் ஒப்புக்காய் தன் முகத்தில் ஏந்திய புன்னகையையும் சேர்த்தே துரத்தினான் கௌதம்… அறையின் வாசலில் கையைப் பிசந்து கொண்டு நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் நின்றிருந்தாள்...
    கசாட்டா 5: கண்ணாம்பூச்சி ஆட்டம் கட்டவிழ்ந்ததும் முடிந்துவிடும் உன் மேல் நான் கொண்ட காதல் கட்டையில் எரியும் போதும் நீங்காதடி..! கௌதமும் மதியும் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதில் வீடே மகிழ்ச்சியில் திளைத்தது. கிருஷ்ணா ஆச்சியோ மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தார். இனி எந்தப் பிரிவும் உறவுக்குள் ஏற்படாது என நம்பினார். நினைப்பதெல்லாம் நடந்து விடுமா??...
    கசாட்டா 4: நம்மில் வேற்றுமை பல இருந்தாலும் ஒற்றுமையாய் கைகோர்க்க வைக்கும் உணர்வே காதல்..! ராகவன் அமைதியை தத்தெடுத்துக் கொண்டு பலவித யோசனைகளின் பிடியில் தத்தளித்துக் கொண்டிருக்கத் தாமரையோ எப்படி தொடங்குவது..? என்ன சொல்வது..? என்று புரியாமல் கைகளைப் பிசைந்த வண்ணம் அமர்ந்திருந்தார். சில மணி நேரம் இதே நிலை நீடிக்க , மௌனத்தைத்...
    கசாட்டா 3: வெண்ணிலா வெளிச்சம் போகும் இடமெல்லாம் தொடர்வதைப் போல உனை எப்போதும் தொடரும் என் காதல்..! ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் பொன்னொளியை வீசி அதிகாலை பொழுதை ஆதவன் ஆக்கிரமித்த நேரம் “வேதகி “இல்லத்தில் அனைவரும் மனதில் நிறைவோடு கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். வேதா “கிருஷ்ணா கோவிலுக்குத்...
    கசாட்டா 2: காத்திருந்து எதிர் பார்த்திருந்து பெறுவதல்ல காதல்! பெற்ற பின்பு காத்திருப்பதும் கடைபிடிப்பதுமே காதல்! “ஏங்க என்ன இன்னும் பிள்ளைங்க வரக் காணோம்” என்று வாசலுக்கும் வீட்டுக்கும் நடை பயின்று கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி. ”வந்துருவாங்க..! முதல்ல நீ ஒரு இடத்துல உட்காரு…“என வேதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார் வரும் சத்தம் கேட்டதும்...
    கசாட்டா 1: நரை கூடி போகும் நேரம் நடை தளர்ந்து போனாலும் தீராதடி உன் மேல் நான் கொண்ட காதல்..! சூரிய மொட்டு அவிழ்ந்து அதன் ஒளிக்கற்றை பரவத் தொடங்கிய அந்த அதிகாலை பொழுதில் குற்றாலம் நகரம் அதற்கே உரிய இயற்கை எழிலோடு காட்சியளித்தது. அந்த நகரில் ஒரு அழகிய தோட்டத்திற்கு நடுவே அமைந்த “ வேதகி ” இல்லத்தில் “ஐந்து...
    error: Content is protected !!