Advertisement

அத்தியாயம் 12 3

கனடா போன சசி, இந்தியா திரும்புவதாக சொன்ன மூன்று மாதங்கள்.. ஆறாகி பின்  ஏழானது. அப்போதும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் செட்டில் செய்து வருவதற்கு மேலும் பத்திருபது நாட்களானது.

இடைப்பட்ட நாட்களில் சசி, போனில் அனைவரிடமும் (நறுமுகையின் குடும்பத்தினர்) நன்றாக பேசி பழகியிருந்தான். கனடாவில் இருந்த நவநீத்-த்ற்கு தன்னிடம் இருந்த அவனுக்கு உபயோகப்படும்படியான பொருட்களை தந்து விட்டு வந்தான், சசி. கூடவே போனஸாக இவனிடம் பனி புரிந்த ஜப்பானிய பெண்ணை (ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு,  அவளுக்கு இந்தியனைத்தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு ஒரு இது. உன்னை மட்டும் அவளுக்கு பிடிச்சதுன்னு வச்சுக்கோ நீ செம லக்கி, இங்க இருக்கறதா இருந்தாலும் சரி, இந்தியா போறதா இருந்தாலும் சரின்னு அட்ஜஸ்ட் பண்ற டைப். கொஞ்சம் கொங்கு தமிழும் தெரியும்), அறிமுகப்படுத்தி வைத்தான்.

ரங்கப்பாவின் மாடி வீட்டை சசி சென்ற மூன்றே மாதத்தில் தயாராகிவிட, அது நறுமுகையின் வீடானது. தாமோதர், சமையல்காரர் மணி உட்பட அனைவரும் அங்கே வந்தாயிற்று. தாமோதர் ரங்கப்பா நன்பேண்டா தோஸ்த் ஆனார். ரைஸ் மில், நில புலன்களை இருவருமாக மேற்பார்வையிடுகின்றனர்.

மதிநாயகி, இப்போதும் ரங்கப்பா இல்லாதபோது காஃபி குடிக்கிறார், இருக்கும்போது அவருடன் குறுக்கெழுத்து புதிர் அவிழ்க்கிறார். பேரன்களிடம் ஆங்கிலம் மற்றும் செல் தொழில் நுட்பம் கற்கிறார். ஆரோக்கியம் பரவாயில்லை.

இன்னமும் விது ரங்கப்பாவை கேட்காமல் ஏதும் செய்வதில்லை, ஆரவ்-வும் அப்படியே. சனி ஞாயிறு காலை விடியல் ஆர்பாட்டமாக இருக்கும். இரு மகன்கள் எழுவதே சசியின் குரலில்தான். கிட்டத்தட்ட முழு நாளும் தூங்கும் நேரம் தவிர ஸ்கைப்பில் மூவரும் செலவழித்தார்கள். வல்லி, காலை பிள்ளைகள் இருவருடனும் பள்ளி சென்று வருகிறாள், சசி இவா இருவரின் உறவிலும் பெரிதாக எவ்வித மாற்றங்களும் இல்லையெனினும், வார இறுதியை நறுமுகையும் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தாள். மூவரும் அடிக்கும் லூட்டிக்காக என்று அவளுக்கவளே சமாதானம் சொன்னாலும், சசியை பார்ப்பதற்காக என்று ஓரத்தில் மனசாட்சி முரண்டியது.

ஒரு நல்ல மழை நாளில் கனடாவை விட்டு திருச்சி வந்து சேர்ந்தான் சசி சேகரன். இன்ன தேதியில் வருகிறேன் என்று சொன்னதிலிருந்தே நறுமுகைக்கு படபடப்பாக  இருந்தது, வி. நிலையத்தில் அவனது முகம் பார்த்ததும் எழுந்த நிம்மதி, அதை சொல்ல வார்த்தையில்லை, ஆனால் வெளியே காண்பிக்கவும் இல்லை, சிறு தலையசைத்து + புன்னகையோடு உணர்வுகளை நிறுத்தினாள். ஆரவ் விது இருவரும் ஓடிச் சென்று தந்தையை கட்டிக் கொண்டனர். வழியெங்கும் இருவரும் மாறி மாறி சசியோடு பேசி வீடு சேர்ந்தனர்.

ஆலம் சுற்றி வரவேற்றார், தில்லைநாயகி. “சின்னத்த, நல்லாயிருக்கீங்களா?”, சசி வட இந்திய பாணியில் அவர் கால் தொட்டு வணங்கி எழுந்தான். நறுமுகை அப்படிசெய்து பார்த்திருந்தால், சசியும் அப்பழக்கத்தை பின் பற்றினான். அதில் கொஞ்சம் லஜ்ஜையான தில்லை, “அய்யோ, இதெல்லாம் எதுக்கு மாப்பிள்ளை?” என்று விட்டு முகம் நிறைந்த புன்னகையோடு, “நல்லாயிருக்கேன் மாப்பிள்ளை, வாங்க வாங்க உங்களுக்காக அக்கா வெயிட் பண்றா”, என்று மதிநாயகியிடம் கூட்டி சென்றார்.

அங்கே அத்தையோடு ரங்கப்பாவும் இருந்தார், கூட அப்பா தாமோதரும். அனைவரையும் அதே போல் கால் தொட்டு வணங்கிய சசி, மதிம்மாவின் கை பிடித்து நலம் விசாரித்தான். ‘அட வணங்காமுடிகூட வணங்குதே’, ரங்கப்பா m.v., பின் பொதுவாக பெரியவர்களிடம் பேசி முடித்து அவனது வீட்டுக்கு (மாடிக்கு) சென்றான் சசி.

அன்று கிடைத்த அவகாசத்தில் அவனறையில்  மனைவியை அணைத்து கை வளைவில் கொண்டு வந்து.., “எப்படி இருக்க?”, என்றான், சின்ன நெற்றி முத்தத்தோடு.

நறுமுகை கஷ்டப்பட்டு முகம் மாறாமல் காத்து.., “அப்படியேதான் இருக்கேன்”, சொன்னாள்.

“டூ யூ மிஸ் மீ?”

“ம்ம். கொஞ்சம்”, நிறைய ஆனால் கொஞ்சம் என்று பொய் சொன்னாள்.

“நான் உன்னை நிறைய நிறைய மிஸ் பண்னேன், யூ நோ, நான் வீகென்ட் ஆனா அவ்ளோ காலைல போன் பண்றதே உன்ன பாக்கத்தான், லேட்டாச்சுன்னா நீ பெட்-ல இருக்க மாட்டியேன்னு அவசரமா கால் பண்ணுவேன்”

‘பொய், வெறும் ‘ஹாய் இவா’ அவ்ளோதான் உன் ரியாக்ஷன், நான் இருக்கறது கூட தெரியாம உன் பசங்களோட வம்பளந்திட்டு இருப்ப’, மனதோடு திட்டி அவனை வெறித்தாள்.

“நீ பசங்களுக்கு தலை வாரும்போது, சாப்பாடு போடும்போது பாத்துட்டே இருப்பேன், எப்படா இங்க வருவோம்? நீ சர்வ் பண்ணி சாப்பிடுவோம்னு நினைச்சிப்பேன்”

‘ஒரு தடவ கூட சொன்னதில்ல, சொல்றத விடு, பேசியிருக்கியா? நல்லா இருக்கியா? சாப்டியா ஸ்கூல் போனியா-ன்னு தான உன் கேள்வில்லாம்?, இப்போ கேக்கற மிஸ் பண்ணியா-ன்னு? நேர்ல தான் பேசுவ?  எதுக்காக இந்த வழிசல் ன்னு தெரியும் போடா’, “டோன்ட் bluff சசி, நா சென்னைல இருந்த அந்த இம்மெச்சூர் இவா இல்ல, நீ சொல்றதெல்லாம் நம்பறதுக்கு”, எரிந்து விழுந்தாள்.

சசி தனது பிடியை விடுவித்ததும், ‘ஆமா ஏதாவது சொன்னாபோதும் தள்ளி நின்னுடுவான்’, அவனை விட்டு தள்ளி நின்றாள். நறுமுகையை புரியாது பார்த்தவனின் கவனத்தை ஆரவ் விது வந்து கலைத்தார்கள்.

அதன் பின் சசியின் நாட்களை.. ஆரவ் + விது எடுத்துக் கொண்டார்கள். சசியின் வரவை ஒட்டி இருவரும் ஒரு வாரம் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருக்க.. நீச்சல் குளத்தில் கொட்டமடிப்பது, ஊர் சுற்றுவது, சினிமா, மால் செல்வது என சுற்றினார்கள். காலை சிற்றுண்டி சாப்பிட்டு வெளியே சென்றால், எப்போது வருகிறார்கள்? எப்போது சாப்பிடுகிறார்கள் நறுமுகைக்கு ஒன்றும் புரியவில்லை,  நறுமுகை விழித்திருக்கும் போது அவர்கள் இருந்தால், சாப்பாடு போடுவாள், எங்கே என்று போன் செய்தால், சசி, “நாங்க போட்டு சாப்படறோம் , நீ தூங்கு இவா”, என்பான். நறுமுகைக்கு தினசரி பள்ளி செல்ல அவசியமிருந்ததால் அது அப்படியே தொடர்ந்தது. இரவு உறங்கும்போதும் விது ஆரவ் இருவரும் ஆளுக்கொருபுறமாக சசியோடு படுத்துறங்க, முதல் சில நாட்கள் கண்டு கொள்ளாதிருந்த நறுமுகைக்கு நாள் செல்ல செல்ல கோபம் வந்தது.

இவர்கள் மூவருக்கும் நான் வேண்டாம் போல?, என்று மனதை உளப்பி முகம் தூக்கினாள். சசி இன்னமும் விதுவோடும் ஆரவ்வோடும் ஊர் சுற்றுவதால்,கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மதி நாயகி மகளை படித்து விட்டார்.

வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்போது, “வல்லி.. ரமா ஆன்ட்டி பொண்ணோட சீமந்தத்துக்கு போகணும்னு சொன்னியே? அப்படியே உன் பழைய மாங்கல்யத்தையும் நம்ம குல தெய்வம் கோவில்ல குடுத்துட்டு வந்துடேன், வேண்டுதலையும் முடிச்சா மாதிரி இருக்கும், அவங்க வீட்டு விசேஷத்துக்கு போனா மாதிரி இருக்கும்”, என்று ஆரம்பித்தார். ‘க்கும், அது ஒன்னு தான் குறைச்சல்’, மனதுள் நொடித்து, “அப்பறம் பாக்கலாம்மா”, சுரத்தின்றி பதில், நறுமுகையிடமிருந்து.

“ஏன்? அது ஏன் பெண்டிங்ல வைக்கணும்?, போயிட்டு வந்துடலாம்”, சசி.

“டாட்.. ரமா ஆன்ட்டி அவங்க வீட்டுக்கா? ஐயோ நாங்க வரலப்பா,”ஆரவ்.

“ஆமாடா நமக்கு லீவ் முடிஞ்சது, ஸ்கூல் போனும், போஷன்ஸ் எழுத வேண்டி இருக்கும். அந்த மேத்ஸ் மேம் திட்டும்டா”, என்று சொன்ன விது-வை முறைத்தாள் நறுமுகை. அவளது பார்வை வீச்சில் சட்டென்று, “மேத்ஸ் மேம் திட்டுவாங்கடா”, திருத்திக் கொண்டான்.

“சரி அப்போ நீங்க போயிட்டு வந்துடுங்க, என்னிக்கு பங்க்ஷன்?”

“சண்டே ப்பா”

“அப்போ காலைல கோவிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு ரமா அவங்க வீட்டு பங்க்ஷன் முடிச்சு சாயங்காலம் வந்துடுங்க”

‘இந்த மனுஷனா வச்சிக்கிட்டு?’ மதிநாயகி கணவனை யாருக்கும் தெரியாதவாறு முறைத்தார். “அதெல்லாமில்ல, வெள்ளிக்கிழமை தான் தாலி சாத்தறேன்னு வேண்டிகிட்டேன்”

ரங்கப்பாவுக்கு மனைவியின் முறைப்பைப் பார்த்தும் மண்டையில் பல்ப் எரிந்தது. “காலைலயா சாயங்காலமா?”

“அது எப்பவேனா, நம்ம வசதிப்படி போடலாம் ஆனா வெள்ளிக்கிழமை குடுக்கணும்”

“சரி, அப்போ ஃப்ரைடே மத்தியானம் கிளம்பி டெம்பிள் போயிட்டு, சண்டே அஃடர்நூன் வந்திடறோம், ஓகே?”

“டாட்.. வீகென்ட் ஸ்விம்மிங்?”, விது.

“நான் கூட்டிட்டு போறேன்டா”, தாமோதர்.

“அப்ப நாங்க இப்போவே எல்லா க்ளாஸ் ஒர்க்ஸ்-ம் ஒன்னொன்னா முடிச்சிடறோம் என்ன?”, பிள்ளைகள் இருவரும் பறந்தனர்.

திட்டமிட்டபடி சென்னை சென்று, நகைமுகைவல்லி அன்னைக்கு அவளது மாங்கல்யத்தை சமர்ப்பித்து, நறுமுகையின் சென்னை வீடு சேர்ந்தனர் இருவரும்.

அவள் கட்டியிருந்த பட்டுப் புடவையை மாற்ற, மாற்று உடையை நறுமுகை  அவளது வார்டு ரோபை திறந்து எடுக்க, சசி அவள் கை பிடித்து நிறுத்தி, “ஹாப்பி பர்த்டே”, என்று ஒரு நகைக்கடை டப்பாவில் இருந்த மோதிரத்தை கொடுத்தான்.

திகைத்து நிமிர்ந்தாள், நறுமுகை. கண்ணெதிரே என்றோ அவன் எழுதிய LUV IV பளீரிட்டது. அன்று இவனோடு கொண்டாடிய பிறந்த நாளுக்கு பின் அவள் பிறந்த நாள் என்ன எந்த விசேஷத்தையும் கொண்டாடுவதில்லை, அதைவிட பிறந்தநாளின்போது இவன் நினைவில் அழுததே அதிகம்.

மோதிரம் பார்த்தாள்,  ILU IV என்று பொறிக்கப் பட்டிருந்தது. நறுமுகையின் இதயம் தன்னிச்சையாய் அதன் துடிப்பை அதிகப்படுத்தியது. “தேங்க்ஸ்”, என்றாள், ஆனால் அதில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.

இந்த இவா உணர்ச்சி துடைத்த இவா சசிக்கு புதியவள். காலம் மாறுகிறதல்லவா? அன்றிருந்த இவா எதையும் துணிவோடு செய்பவள், இன்றிருக்கும் இவா விதுவின் தாய், சமூகக் கோட்பாடுகள் உணர்ந்தவள். நறுமுகை சசியை தள்ளி நிறுத்துவது அவனுக்கு வேதனையாக இருந்தது, கேட்டே விட்டான். “ஏன் டிஸ்டன்ஸ் மெயின்டேன் பண்ற இவா? வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”

“ப்ச். அதெல்லாம் ஒண்ணுமில்ல, ரிங் டிசைன் நல்லாயிருக்கு. எங்க வாங்கின?”

“பெங்களூர்-ல..”, ஆமாம் அந்த டப்பாவும் பெங்களூரின் பிரபல நகைக்கடை பேரைத்தான் தாங்கியிருந்தது. ஆனால் இவன் எப்போது பெங்களூர் சென்றான்?

“எப்படி?  நீதான் பெங்களூர் போவேயில்லையே..?”.

“…”, பதில் சொல்லாமல் மனைவியை ஆழமாக பார்த்துக் கொண்டு இருந்தான் சசி.

அவன் மௌனம் புரியாது, அவனை பார்த்த நறுமுகை,”சசி..?”, என்க..

நிதானமாக மூச்சை உள்வாங்கி, “ஹ்ம். இது இப்பல்ல, நாம சேர்ந்து இருந்தபோது வாங்கினது, என்கேஜ்மெண்ட் ரிங், தூக்கிப்போட மனசு வரல, மாத்த தோணல, அப்படியே  இருக்கட்டும்னு விட்டுட்டேன், இங்க வரும்போது கனடா வீட்ல எல்லாம் துடைச்சு எடுத்திட்டு வந்தேனா? அப்போ safe-ல இருந்தது, இட்ஸ் யுவர்ஸ்.”

“ஓஹ்.”, என்ன பதில் சொல்வது?

இருவரும் பகிர்ந்த அறைதான், பார்ப்பதற்கு அங்கிருந்த இருவருக்கும் இடையே தூரம் ஓரடி போலத்தான் தெரிந்தது. ஆனால் அது ஒன்பது+ வருட இடைவெளி, அதை இட்டு நிரப்ப என்ன செய்வது என்று இருவருக்கும் தெரியவில்லை.

அந்த ஓஹ்.. வில், இருந்த அந்நியத்தனம் சசியை எதோ செய்ய, “நீ.. நீ அன்னிக்கு பேசும்போது விதுக்காக எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு சொன்ன. நாம சேர்ந்தது விதுக்காக மட்டும்தானா? I mean…”

ஒரு பெருமூச்சோடு, “சசி… நீ என்ன கேக்கறன்னு புரியுது. ஆனா.. எனக்கே தெரில, எப்போ உன்கிட்ட பேசினாலும் ஒரு ஹெஸிடேஷன் இருந்துட்டே இருக்கு, சில டைம் நீ ஏன் பேச மாட்டேங்கிற-ன்னு தோணுது, சில நேரம் பேசினா கோவமா வருது”, சிறியதாய் சிரித்து, “ஒருவேளை பயமா கூட இருக்கலாம்”

சுசிக்கும் கண்ணை எட்டாத புன்னகை. “குட் ஜோக், நீ என்கிட்டே பயப்படறதா?”

சரி நம் மனதின் உளைச்சலை கேட்டுவிடுவோம் என்று சட்டென முடிவெடுத்த நறுமுகை, “ம்ம். ஒரு வேளை விது மாதிரி யாராவது இருப்பாங்களோ-ங்கிற பயமா இருக்கலாம்”,  கேட்டுவிட்டு சசியின் கண்களை பார்ப்பதை தவிர்த்தாள்.

அவளது கேள்வியில் முதலில் குழம்பி பிறகு கூர்மையானவன், “நோ, வாய்ப்பில்லை”, என்றான்.

“ஏன்? ரொம்ப சேஃப் -ஆ இருந்தீங்களோ?”, கேட்டவள் குரலில் கோபத்தோடு அப்பட்டமான பொறாமை தெறித்தது.

அவளது முக பாவத்தை பார்த்த சசியின் சிரிப்பு மெல்ல விரிந்து கண்களில் உற்சாகம் மின்ன “ஓஹ்.. தேங்க் காட்…”, என்றான்.

அவனது திடீர் உற்சாகத்திற்கான காரணம் தெரியாமல், கேட்டதற்கு பதிலும் சொல்லாமல் சிரித்த சசியை கேள்வியாய் பார்த்தாள்.(முறைத்தாள்)

“எஸ் ரொம்ப சேஃப்-ஆ… தனியா..  இருந்தேன், சோ இன்னொரு விதுக்கு வாய்ப்பில்லை”

இதழ் சுழித்து, “நம்பறா மாதிரி  இல்ல”

விரிய சிரித்தபடி, “நம்பு இவா நம்பு,”, நறுமுகையின் அருகே வந்திருந்தான்.

“ஒரு தடவ என் ஃப்ரெண்ட்  கம்பெல் பண்ணினான்ன்னு ஒரு பார்ட்டிக்கு போய், ரொம்ப ட்ரை பண்ணி ஒரு Florida பொண்ணு கூட டேட்டிங் போனேன், ஹ ஹ ஹ”

‘இதுல சிரிப்பென்ன வேண்டி இருக்கு?’, நறுமுகை m.v. சசியை கடுப்பாக பார்த்தாள்.

“அது அட்டர் ஃபெயிலியர் , ஏன்னு கேக்காதே. ஹ ஹ”, “அன்னிக்கு ட்ரிக்ங்ஸ் முடிச்சிட்டு அவ வீட்டுக்கு போய்… ஹ்ஹ ஹ ஹா.. அஞ்சே நிமிஷத்துல, ஹ ஹ ஹ, நா என் லக்கேஜ் கூட வேணாம்னு.. ஹ ஹ.., ஏர் போர்ட்க்கு ஓடியே போயிட்டேன்”, என்று கண்களில் நீர் வர சிரித்தவன், நறுமுகையின் புருவ சுழிப்புடனான முகம் பார்த்து, சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்துகொண்டு அமைதியாக “உனக்கு அந்த பொஸசிவ்னஸ் அப்படியே இருக்கு, யூ ஸ்டில் லவ் மீ”, என்றான் சசி.

நறுமுகை சசியை நிமிர்ந்து பார்த்து, அவன் சொல்வது உண்மை என்பதால், “ஹ்ம்”, ஆமென தலையசைத்தாலும் இன்னமும் தெளியாத அவளது முகம் கண்டு, அவளுக்கு விளக்கும் விதத்தில், சீரியஸாக, “நா இங்கிருந்து போனதுலேர்ந்து அப்பா & சந்த்ரு-வை பாத்துக்கணும். தென் ஷீத்தல்.. மணி மட்டும்தான் மனசுல இருந்தது, அப்பதான் ஆரவ் வந்தான். கொஞ்ச நாள்ல அப்பாவையும் சந்த்ருவையும் இந்தியா அனுப்பிட்டேன். ஆனா அப்பறமும் பணத்தேவை இருந்தது, சோ வேலை..,  வேலை விட்டா ஆரவ்”.

“இப்போ ரெண்டு வருஷமாத்தான் தனியா இருக்கேன், அதுகூட  க்ரிஸ்மஸ் நியூ இயர் லீவுக்கு ஆரவ் பாக்க வந்துடுவேன். மத்த நாள்ல மோஸ்ட்லீ ஆன் ஸைட் சுத்திட்டு இருந்தாலும் வீகென்ட் ஆரவ் கூட தான். காலைல அவன் முழிக்கும் போது ஸ்கைப் வந்தா நைட் தூங்கற வரை அவனோடதான்”,  மீண்டும் சிரிப்பு, “தெறியாத்தனமா ஒரு friend இன்வைட் பண்ணினான்னு பார்ட்டி போயி.. அங்க யாருக்கோ வெயிட் பண்ணின பொண்ணோட டேட்டிங் போயி.. ஹ்ஹ”

நறுமுகையின் கைகளை பிடித்து, அவளைக் கண்ணில் நேர்கொண்டு பார்த்து, “நோ, விது மாதிரி இல்ல, இவா மாதிரி கூட யாரும் வர மாட்டாங்க, போதுமா?”, என்று தன் இனிய வாசமுள்ள மனைவியை கட்டிக்கொண்டான்.

அவர்கள் 9+ வருட இடைவெளி காணாமல் போனது.

திடீரென சசி.., “ஆனா இப்பகூட விது ஈஸ் எ சர்ப்ரைஸ் டு மீ”, எனவும்.. அவனது தோள் வளைவில் இருந்து நிமிர்ந்து பார்த்த நறுமுகை “வொய்?” என்றாள்.

கண்களின் குறும்பு மின்ன..ம் “நாம ஒரு ஒன் ஆர்…”, என்று சசி ஆரம்பிக்க.., என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து ‘நொட் ‘ என அவன் தலையில் குட்டினாள். “அவுச்.. தட் வாஸ் ஸ்ட்ராங்”, என்று தலையை தடவியபடி கூற.. நறுமுகை முகம் சிவந்து,  “யூ. யூ…”,என்று அவனை திட்டிக்கொண்டே இன்னமும் வேகமாக அடித்தாள்.

சிரிப்பை நிறுத்தாத சசி, “இவா நீ அடிச்சது ஸ்ட்ராங்-ஆ வலிச்சதுன்னு சொன்னேன், நீ என்ன நினைச்ச? ஹஹ்ஹஹ்ஹ..”

சந்திப்பிழை திருத்தப்பட்டது.

************

Advertisement