Tuesday, April 16, 2024

    Manasukkul Mazhaiyaai Nee

    அத்தியாயம் - 18     மித்ராவுக்கு அவனில்லாத பொழுதை நெட்டித் தள்ள வேண்டியதாகி போனது. தினமும் போனில் அவன் எப்போது பேசுவான் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்.     இதுநாள் போலல்லாமல் இருவரும் ஒருவரிடம் ஒருவர் போனில் பேசுவதை சந்தோசமாய் அனுபவித்தனர். புதிதாய் காதலிப்பவர்கள் போல் உணர்ந்தனர்.     சைதன்யன் வேறு அவ்வப்போது ஏதாவது சொல்லி அவளை பேச்சிழக்க வைத்துவிடுவான். எப்போதடா அவன் வருவான்...
    அத்தியாயம் - 17     “சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க... அப்பா நைட்டே ஊருக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களை போய் பஸ் ஏத்திட்டு வந்திடுங்க” என்றாள்.     ‘நீ வந்து குளிப்பாட்டி விடு’ என்று மனதிற்குள் நினைத்ததை கேட்காமல் “சரிம்மா வந்திர்றேன்” என்று எழுந்து போனான்.     மித்ராவும் காலை உணவை முடித்து அவள் தந்தைக்கு பாரிமாறி முடித்திருந்தாள்.     “சாரி மாப்பிள்ளை... ஊருக்கு...
    அத்தியாயம் - 16     முதலில் தன் மாமனார் என்ன சொல்கிறார் என்றே புரியாதவன் அவர் சொன்ன விஷயம் புரிந்ததும் மனம் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தது.     இப்போது இருக்கும் சூழ்நிலையில் மித்ராவை தன்னுடன் வரச்சொல்லி அழைத்தால் அதற்கு வேறு ஒரு புது பஞ்சாயத்து வந்துவிடுமோ என்று பயந்துக்கொண்டு தான் அவளை அழைக்காதிருந்தான் சைதன்யன்.     அதுவுமில்லாமல் கடலூரிலும் அவன் வீடு...
    அத்தியாயம் - 15     அவள் வேலையை விடுவதற்கு ஒரு வாரம் முன்பு சைதன்யன் சென்னைக்கு வந்திருந்தான் எல்லோரையும் பார்ப்பதற்காக. மித்ரா எப்போதும் போல் முறுக்கிக் கொண்டிருந்தாள்.     அவளை தேடி வந்தவன் “மித்ரா...”     பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் அவள். “மித்ரா... நான் கூப்பிடுறது உனக்கு காதுல விழுதா!! இல்லையா!!”     “விழுது!! விழுது!!”     “விழுந்தா என்னன்னு கேட்க மாட்டியா??”     “நீங்க பேசுறது காதுல விழுந்திட்டு...
    அத்தியாயம் - 14     “உண்மையை தான் சொன்னேன் மித்ரா. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான் செபாஸ்டியன்.     “அப்போ அஷ்... அஸ்வினிக்கு உங்களை...” என்று அவள் முடிக்கவில்லை “அவ தான் வேற ஒருத்தரை விரும்புறாளே!!” என்று முடித்தான் அவன்.     “புரியலை செபாஸ்டியன் நீங்க என்ன சொல்ல வர்றீங்க ப்ளீஸ் எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க” என்றாள் மித்ரா.     “உங்களுக்கு தெரிஞ்சிருக்காதுன்னு...
    அத்தியாயம் - 13     “வாசல்ல யாரு இப்படி வண்டியை போட்டு முறுக்கிட்டு இருக்கறது” என்று சுஜி குரல் கொடுக்க “அவர் வந்திருக்கார்டி” என்றாள் மித்ரா பதிலுக்கு.     “அண்ணாவா இங்க வந்திருக்காங்களா??”     “ஹ்ம்ம் ஆமா”     “நீ லீவ் போட்டது சொல்லிட்டியா??”     “செபாஸ்டியன் சொதப்பிட்டான்” என்றவள் நடந்ததை தோழியிடம் ஒப்பித்தாள்.     “இதெல்லாம் உனக்கு தேவையா?? பேசாம அண்ணாகிட்ட நீ உண்மையை சொல்லியிருக்கலாம். போய் அவரை கூப்பிடு”...
    அத்தியாயம் - 12     “உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது, அப்போவே வந்துட்டேன்னு சொன்ன” என்றவன் பெட்டியை வைத்துவிட்டு மதுவை நோக்கி கைநீட்ட குழந்தை அவனிடம் தவ்வினாள்.     “ப்பா... ப்பா... வீட்டுக்கு” என்ற குழந்தையிடம் “வீட்டுக்கு தான் குட்டி போறோம். உங்கம்மா ஏன் இப்படி உம்முனாமூஞ்சி மாதிரி வர்றா. அப்பா ஊருக்கு வந்ததுல அம்மாக்கு பிடிக்கலியா” என்று...
    அத்தியாயம் - 11     வீட்டிற்கு வந்த மித்ரா மதுவை உறங்க வைத்துவிட்டு மாமியாரும் அவளுமாக சாப்பிட்டப்பின் அவள் மடிக்கணினியை எடுத்து அலுவலகத்திற்கு மறுநாளைக்கு விடுப்பு சொல்லி இமெயில் அனுப்பி வைத்தாள்.     மனம் முழுதும் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தது. உடனே அவனுக்கு அழைத்து பேச வேண்டும் என்று தோன்ற கணவனுக்கு அழைத்தாள். எப்போதும் போல் முதல் அழைப்பிலேயே எடுத்தவன்...
    அத்தியாயம் - 10   வளைகாப்பிற்கு வாராதவன் அவள் ஊருக்கு சென்று பத்து நாட்கள் கழிந்த பின்னே நேராக மதுரைக்கு பிளைட் பிடித்து வந்து சேர்ந்தான்.     மாமனாருக்கு மட்டும் அழைத்து விபரம் சொல்லியிருந்ததால் மருமகனை அழைக்க அவர் விமான நிலையத்திற்கே வந்து விட்டார். மருமகனை அழைத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்று இறங்கினார் சொக்கலிங்கம்.     வாசலில் வண்டி ஏதோ வந்து...

    Manasukkul Mazhaiyaa Nee 9

    அத்தியாயம் - 9     அழைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அஸ்வினியே தான். மித்ரா அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்தது அவளை பார்ப்போமோ என்று எண்ணியே!!     விதி யாரை விட்டது அவள் கண்ணிலேயே விழுந்துவிட்டாள். மித்ரா அவள் பேச்சு காதில் விழாதவள் போல் அவள் புறம் பார்க்காமல் அடுத்து நின்றிருந்தவரிடம் பேச ஆரம்பித்தாள்.     “மித்ரா எதுக்குடி என்னை...
    அத்தியாயம் - 8     முதல் இரண்டு மாதம் அவன் சொன்னது போல் வீட்டை நிர்வகிப்பது அவளுக்கு திணறலாகவே இருந்தது. திருமணத்திற்கு முன் கூட அவள் அன்னையுடன் இருந்து அதையெல்லாம் கவனித்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருந்திருப்பாள்.     நன்றாக விவரம் தெரிந்த வயதில் வெளியூரில் சென்று படிக்க ஆரம்பித்தவளுக்கு அதிலெல்லாம் அதிக விவரமில்லாமல் போனது. அவள் அக்கா திரிவேணி தான் எப்போதும்...
    அத்தியாயம் - 7     அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.     “நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.     ‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை  நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாமலா’     ‘உங்க மேல நம்பிக்கை வரணும்ங்கறதுக்காக தான் நடந்துதா எல்லாமே!! கடைசியில் என்னை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா’...
    அத்தியாயம் - 7     அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.     “நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.     ‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை  நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாமலா’     ‘உங்க மேல நம்பிக்கை வரணும்ங்கறதுக்காக தான் நடந்துதா எல்லாமே!! கடைசியில் என்னை நீங்க புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா’...
    அத்தியாயம் - 6     மித்ராவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும் சைதன்யன் தன் கழுத்தில் தாலி கட்டப் போகிறான் என்ற எண்ணமே அவளை தூங்கவிடாமல் செய்தது.     அவள் மனம் அவன் அவர்கள் வீட்டிற்கு வந்து போன பின்னே நடந்தவைகளை அசை போட ஆரம்பித்தது. எல்லாம் ஒருவழியாய் பேசி முடித்து வந்தவர்கள்...
    அத்தியாயம் - 5     “என்ன சொல்றீங்க நீங்க??அப்படின்னு யாரு சொன்னது” என்றார் ஈஸ்வரி.     “நான் தான்ம்மா அப்பாகிட்ட சொன்னேன்” என்றதும் ஈஸ்வரி அவளை மீண்டும் அடிக்க கையை ஓங்கினார்.     “ஈஸ்வரி கொஞ்சம் இரு”     “இப்படி தான் எப்போ பார்த்தாலும் என் வாயை அடைக்கறீங்க. சின்ன வயசுல இருந்து பிடிவாதம் பிடிச்சு பிடிச்சு அவ நினைச்சதை சாதிச்சே பழகிட்டா, எல்லாத்துக்கும் நீங்க...
    அத்தியாயம் - 4     மித்ரா மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கவும் அவள் தந்தை அந்த கோச்சின் வாயிலில் நின்று அவளை நோக்கவும் சரியாக இருந்தது.     தந்தையை கண்டதும் மனம் மகிழ்ச்சியில் பூரிக்க “அப்பா” என்று சத்தமாக கூவினாள்.     “என்னாச்சுடா அப்பாவை பார்த்து மாசக்கணக்கானதும் தேடுதீங்களா?? குரல் உசத்தியா வருது” என்றவரின் குரலில் இருந்தது கண்டிப்பா இல்லை பெருமையா...
    அத்தியாயம் - 3     “உங்களுக்கு திடீர்ன்னு ஏன் இப்படி தோணுச்சு?? எனக்கு புரியலை??”     “என்னடா உங்க தோழியை விரும்பினானே இப்போ நம்மை கல்யாணம் பண்ணிக்க கேட்குறானே. இவன் ஆளு எப்படின்னு நினைக்கறீங்களா??”     “நீங்க ஆளு எப்படின்னு எல்லாம் நான் யோசிக்கலை. திடீர்ன்னு அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு. அவளை பழிவாங்க இப்படி எதுவும் யோசிக்கறீங்களா??     “முட்டாள்த்தனமா யோசிக்கறான்னு நினைக்கறீங்களா?? தெளிவா...
    அத்தியாயம் - 2     பலமாடி கட்டிடங்கள் உயர்ந்து நிற்க அதன் வாயிலில் வண்டியை சென்று நிறுத்தினான் சைதன்யன். அவனுக்கு வயது இருப்பத்தைந்து தான் இருக்கும்.     பார்க்க டிப்டாப்பாகவே இருப்பவன் அந்த பன்னாட்டு நிறுவன ஊழியர்களை கொண்டு வந்து விடும் வண்டியின் டிரைவர் என்றால் பார்ப்பவர்கள் நம்புவது சற்றே கடினம் தான். ஆனால் அது தான் அங்கு...
    அத்தியாயம் - 1     பொழுது மெதுவாய் புலர ஆரம்பித்திருந்த அதிகாலை நேரம் தெருமுனையில் அலுவலக வண்டியில் இருந்து இறங்கினாள் சங்கமித்ரா. இரவு நேரப்பணி முடித்து அப்போது தான் வந்துக்கொண்டிருந்தாள் அவள்.     வீட்டிற்கு நடையை எட்டிப்போட்டவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டின் வாயிலின் முன் நின்று தன் கைப்பையை துழாவி அவளிடம் வைத்திருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து...
    error: Content is protected !!