Saturday, April 27, 2024

    Neethaanae Thaalaattum Nilavu

    அத்தியாயம் இருபது: நான்கு மாதங்கள்............ மிக கடுமையான நான்கு மாதங்கள்.......... ராஜியும் செந்திலும் மிகவும் சிரமப்பட்டு கடந்த மாதங்கள்.......... செந்திலுக்கு கைகளில்  வலியிருக்க, அதை பார்த்து மனதினில் வலியெடுத்தது ராஜிக்கு....... அவர்களின் வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்தை பற்றி நினைக்க கூட முடியாத நாட்களாக செந்திலுக்கு இருந்தன. நிறைய வலியை அனுபவித்தான். அது அவனை அவனுக்குள்ளே ஒடுங்கச் செய்தது.  ராஜியும் அவனை புரிந்தவளாகவே...
    அத்தியாயம் பத்தொன்பது: செந்தில் ராஜியின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிள் ஆக இரு தரப்பிலும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து நடந்தது. தேவிகா டிஸ்சார்ஜ் ஆகி ஒரே வாரத்தில் நடந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டே இந்த வரவேற்பை நடத்தினான் செந்தில். சாமான்யத்தில் ராஜி ஒத்துக்கொள்ளவில்லை. அன்று அவனின் அன்னை ராஜியை ஓடிப்போனவள் என்று சொன்ன ஒரு வார்த்தையை...
    அத்தியாயம் பதினெட்டு: திருமணம் முடிந்து அவர்கள் நேரே சென்றது தேவிகா அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடலுக்கு தான். அசோக் ரூமிற்கு வெளியேயே நின்றுக் கொள்ள........ செந்திலும் ராஜியும் சீனியப்பனும் ரூமின் உள்ளே நுழைந்தனர். அங்கே தேவிகா உறங்கிக்கொண்டிருக்க அண்ணாமலை  அமர்ந்திருந்தார். கதவை திறக்கும் சத்தம் கேட்டதுமே அங்கே பார்த்த அண்ணாமலை ராஜி உள்ளே வருவதை பார்த்தார். கண்கள் பளிச்சிட சந்தோஷமாக அவளைப்...
    அத்தியாயம் பதினேழு: சீனியப்பன் நடுவில் வந்து தடுக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ யாருமே அறியார். அண்ணாமலையின் மீது கோபத்தோடு பாயப்போனான் செந்தில்.  ராஜி காணவில்லை என்ற செய்தி கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தான் செந்தில். தன்னிடம் ஆறுதல் தேடி வந்தவளை தானும் வதைத்து விட்டோமோ என்ற எண்ணமே காரணம்.   அண்ணாமலையை நேரில் பார்க்கவும் அது...
    அத்தியாயம் பதினாறு: தேவிகா அதிர்ந்து விழித்தது சில நொடிகளே உடனே சமாளித்துக் கொண்டார். “இல்லை, இது சரி வராது”, என்றார். “ஏன் ஏங்க்கா சரிவராது........... நீங்க என்னை வெச்சு ஆகாஷை பார்க்கறீங்களா”, “அது எப்படி நீ இல்லாம பார்க்க முடியும், உன் தம்பி தானே அவன்”, “இருக்கலாம், அது மட்டுமே அவன் செஞ்ச தப்பு. வேற நீங்க அவன்கிட்ட எதுவும் குறைக்...
    அத்தியாயம் பதினைந்து: ஆகாஷின் குரலில் இருந்த கடுமை ராஜியின் கோபத்தை அதிகப்படுத்தியது........ “இப்போ நீ என்ன சொல்ல வர்ற”, என்றாள் பதிலுக்கு அவளும் கடுமையாக....... “நீ என் அக்காவை கேள்வி கேட்கற வேலையெல்லாம் வெச்சிக்காத......... உனக்கு ஏதாவது கேட்கணும்னா உங்கப்பாவை கேளு, அதைவிட்டுட்டு.....”, என்றவனால் ஆத்திரத்தில் மேலே பேசவே முடியவில்லை. இவளுக்கு தான் புத்தியில்லை என்றால் இவ்வளவு பெரிய பெண்ணை...
    அத்தியாயம் பதினான்கு: ராஜிக்கும் செந்திலின் நினைவுகளே......... அவளுக்கு நன்றாக புரிந்தது செந்தில் தன்னை தவிர்க்கிறான என்று . அவனே தவிர்க்கிறானே நீ எதற்காக இப்படி அவன் பின்னோடு போகிறாய் என்று மனம் ஒரு புறம் சொல்ல.......... மற்றொரு புறம் மனம்அதையெல்லாம் காதிலேயே போடாமல் அவனின் நினைவுகளிலேயே உழன்றது. தந்தை ஒரு புறம் எதிர்ப்பை காட்ட செந்திலின் புறம்...
    அத்தியாயம் பதிமூன்று: ராஜி வெளியே வந்த போது செந்திலின் அம்மா அன்னபூரணியும் அசோக்கும் அப்போதுதான் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரின் முகமும் கூட ராஜியை எதிர்பார்க்கவில்லை என்று காட்டியது. ஏனென்றால் அவ்வளவு சுலபமாக அவர்கள் பக்கம் எல்லாம் திருமணம் ஆகாத பெண்கள் ஒரு வாலிபப்பையனை தனியாக வந்து பார்ப்பது என்பது மிக அரிது. ஸ்னேகிதிகளோடு வருவதோ.... பெற்றோர்களோடு...
    அத்தியாயம் பன்னிரண்டு: என்ன தான் வேகமாக போனாலும் செல்லும் தூரத்தை கடந்து தானே ஆகவேண்டும். அவர்கள் சேலத்தை அடைய நாற்பது நிமிடங்கள் ஆயிற்று. அங்குள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையை அடைந்தனர். இவனின் நிலைமையை சொன்னவுடனே வேகமாக வந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்து கொண்டு போனர்.    அப்போது தான் அசோகிற்கு ஞாபகம் வந்தது.......... “அப்பா, அவன்கிட்ட பணம்...
    அத்தியாயம் பதினொன்று: ரீவர்வியு மிர்றர் வழியாக ராஜி செந்திலின் கண்கள் சந்தித்தது சில நொடிகளே. உடனேயே செந்திலின் கண்கள் விலகிவிட்டது. ராஜி பயணம் முழுவதும் அவ்வபோது அவனை பார்த்தாலும் பின்பு செந்திலின் கண்கள் ராஜியின் புறம் திரும்பவேயில்லை. ராஜிக்கு அவன் வேண்டுமென்றே தான் பார்க்காமல் இருக்கிறான் என்று நன்கு புரிந்தது. இங்கே இருப்பதே இரண்டு பேர்........... அதெப்படி சாதாரணமாக...
    அத்தியாயம் பத்து: செந்திலுடன் பேசிவிட்டு வந்து சரியான எரிச்சலில் இருந்தாள் ராஜி. “கொஞ்சம் கூட அடங்கவே மாட்டேங்கிறானே. ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டேன்னு நக்கல் வேற..... ஆளையும் பாரு அவனையும் பாரு”, என்று மனதிற்குள் சற்று நேரம் அவனை நினைத்து பொருமினாள்.  மறுபடியும் அவளின் அம்மாவை தேடிய ராஜி அவரின் ரூமிற்குள் இருக்கிறாரா என்று பார்க்க போனாள். உள்ளிருந்து...
    அத்தியாயம் ஒன்பது: “நீங்க யாரு? என்ன நடக்குது இங்கே?”, என்ற ராஜியின் கேள்விக்கு ஒரு நொடியே தயங்கினான் ஆகாஷ். அடுத்த நொடியே.......... “உங்க அப்பா சொல்வார் ராஜி...... அவர் சொன்னதுக்கு அப்புறம் நீ என்கிட்ட கட்டாயம் பேசணும் ப்ளீஸ்....... நீ என்ன மாதிரி நினைச்சாலும் என்கிட்ட பேசணும்”, “நீ பேசறது அவர் செய்கையை நான் நியாயப்படுத்தனும் அப்படின்றதுக்காக...
    அத்தியாயம் எட்டு: ஆகாஷின் செல்வ நிலையை பற்றி மனதில் எழுந்த உணர்வுகளை கட்டாயமாக ஒதுக்கி தள்ளி வேலையில் ஈடுபட்டான் செந்தில். உள்ளே வந்த ராஜியையும் ஆகாஷயும் ஆர்வத்துடன் பார்த்தார் அண்ணாமலை. இருவரின் முகத்தில் இருந்தும் எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதை விட அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றே அவருக்கு தெரியவில்லை. எல்லாம் சரி வருமா என்றும் அவருக்கு புரியவில்லை. “சரி...
    அத்தியாயம் ஏழு: அடுத்த நாள் ஆகாஷுடன் சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை ஊருக்கு அருகில் உள்ள சித்தர் கோவிலுக்கு பயணப்பட்டாள் ராஜ ராஜேஸ்வரி. அவர்களின் ஊரிலிருந்து காரில் ஒரு முக்கால் மணிநேரப் பயணம் அவ்வளவே.  இது எதற்கு தேவையில்லாதது என்பது போல தேவிகாவிற்கு தோன்றினாலும் அவருக்கு தெரியாததா என்று நினைத்து கணவரை மறுத்து பேசாமல் அமைதியாகத்தான் இருந்தார். அன்று காலையில் செந்தில்...
    அத்தியாயம் ஆறு: இவன் என்ன அவனை பார்த்து பயப்படுகிறான், அதனால் தான் அமைதியாக நிற்கிறான் என்று நினைத்தால்.......... இவன் என்ன கொஞ்சமும் பயம் இல்லாமல் இப்படி அவனை அடித்துவிட்டான். ஒரு அடி என்றாலும் என்ன அடி. இதில் கூட நின்றவர்களை வேறு சண்டைக்கு கூப்பிடுகிறான். அவர்கள் ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டனர். பெரிய ஆள்...
    அத்தியாயம் ஐந்து: செந்தில் ஏன் டீக்கடைக்கு வரவில்லை....... ராஜியால் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒருவருக்கொருவர் வேண்டாம் என்று நினைத்தாலும் நினைவுகள் அவர்களையும் மீறி அடுத்தவரை வட்டமிட்டது. செந்திலும் ராஜியும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு இருந்தனர். பஸ்ஸில் ஏறிய பிறகும் செந்திலின் நினைவாகவே இருந்தது ராஜேஸ்வரிக்கு......... அவனை காணாதது எங்கோ ஒரு மூலையில் ஏமாற்றமாக இருந்ததோ.  “ஒரு நாள்...
    அத்தியாயம் நான்கு: முதல் முறையாக ராஜியின் யோசனைகள் செந்திலை தாக்கின. எப்போதும் அவளை காதலிக்க வைப்பது எப்படி என்று மட்டுமே யோசிப்பான். அவனுடைய குறிக்கோள் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே. வேறு அதிகம் அவளை பற்றியோ அவளின் குணாதிசயங்கள் பற்றியோ அதிகம் நினைத்ததில்லை. இன்று அவளின், “நீ கீழே போ...... நான் வர்றேன்”, என்று அவனை...
    அத்தியாயம் மூன்று: ராஜேஸ்வரி தன்னை மிரண்ட விழிகளோடு பார்ப்பதை பார்த்தவன் அவளை பார்த்து கண்ணடித்தான். முதலில் அவனின் செயல் பார்த்து திகைத்தவள் பின்பு முறைத்தாள். அந்த முறைப்புக்கெல்லாம் அவன் அசருபவனாக தெரியவில்லை. அவளை பார்த்து தெரிந்தும் தெரியாமலும் புன்னகைத்தான். (அதென்ன தெரிந்தும் தெரியாமலும், அது அவளுக்கு தெரிந்தும் மற்றவர்களுக்கு தெரியாமலும்). அதை கவனியாதவள் போல ராஜேஸ்வரி திரும்பி போகப்...
    அத்தியாயம் இரண்டு: செந்தில் அவனின் வீட்டில் அமர்ந்து இரவு உணவு உண்டு கொண்டிருக்க அவனின் அன்னை அன்னபூரணி அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். செந்திலின் யோசனை முழுக்க ராஜ ராஜேஸ்வரியின் மேலேயே இருந்தது. எப்படி அவளை தன்னை காதலிக்க வைப்பது என்ற யோசனையிலேயே இருந்தான். அதுவும் இன்று அவள் நடந்து கொண்ட விதம் தன்னிடம் வாயை திறந்து...
             நீதானே தாலாட்டும் நிலவு   கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று……..   ஒரு கவிஞனின் சத்தியமான வார்த்தைகள்.......... நம் வாழ்க்கை துணையாக யார் வருவர் என்பது அவர் வரும்வரை நம்மால் சொல்ல முடியாது. நாம் என்ன தான் புத்திசாலிகளாக இருந்தாலும் நம் துணை இப்படி...
    error: Content is protected !!