Advertisement

அத்தியாயம் 12 1

தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தவர்களின் அருகே பாலோடு நின்றிருந்த நறுமுகை “ப்ப்பா. பால்”, என்றாள்.

“இப்படி வை வல்லி”, என்ற ரங்கப்பா, உட்கார் என்பதுபோல கை காண்பித்தார்.

நறுமுகை சசிக்கும், அப்பாவுக்கும் பால் கொடுத்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்ததும், இருவரையும் பார்த்து ரங்கப்பா.

“நீங்க ஊருக்கு போறதுக்குள்ள ஆரவ் கிட்டயும் விது கிட்டயும் சொல்லிடுங்க. அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரில. பாக்கலாம்” என்று சொல்லி நறுமுகையைப் பார்த்து, “ஆரவ் பிறந்தநாள் இன்னும் பத்து நாள்ல வருது, சசி அது வரைக்கும் இருப்பாரா கேளு, அப்படி இல்லன்னா நாளன்னிக்கு வாஸ்து நாள் வருது, மேல மாடி எழுப்பறதுக்குன்னு ஒரு ஹோமம் மாதிரி வச்சு சின்ன ஃபேமிலி கெட் டு கெதர் அரேன்ஜ் பண்ணலாம்ன்னு ஐடியா.நம்ம ஆளுங்க எல்லாரும் இவரை பாத்தா மாதிரி இருக்கும். ரெண்டு பேரும் பேசிட்டு சொல்லுங்க”, என்று விட்டு எழுந்தவர்.. வீட்டை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தபின் திரும்பி,

“உங்க லைஃப் உங்க இஷ்டம், அதைப்பத்தி எனக்கு கவலையில்ல, ஆனா விதுக்கு ஒரு அடையாளம் வேணும், உங்களால அவன் பின்னால யார் கிட்டயும் பேச்சு வாங்கக்கூடாது பாருங்க. நா உங்களை கொஞ்சம் போர்ஸ் பண்றதா தோணலாம், பட்..  எனக்கு உங்களை விட வித்யுத் முக்கியம்”, என்று விட்டு விடுவிடுவென உள்ளே சென்றுவிட்டார்.

அவர் போவதையே பாத்துக்க கொண்டிருந்த சசி..”ஹ்ம்ம். ஆங்ரி ஓல்ட் மேன்”, என்றான்.

சில நொடி அமைதியாய் இருந்து, “அவர் கோபத்துக்கு காரணமே நாந்தான்”

“நாட் நாந்தான், அது நாம.. ரைட்?”

“யா, கைண்ட் ஆஃப்”

“ஹ்ம்ம். எங்கப்பா என்னென்னவோ சொன்னார், ஆனா இவர் வேற மாதிரி சொல்றாரே?”

“உங்கப்பா என்ன சொன்னார்?”

“முதல்ல ரொம்ப திட்டினார், தென் சம் வேண்டுதல்.. தாயுமானஸ்வாமி டெம்பிள் போனும், வேஷ்டி புடைவை கொடுக்கணும், குலதெய்வம் கோவில் போனும்-னு உங்கப்பா ஏகப்பட்டது சொல்லிட்டு இருந்தராம்”,

“ஓஹ்!”

“ஆனா இப்ப நம்மகிட்ட ‘உங்க லைஃப் உங்க இஷ்டம்’ன்னு சொல்லிட்டு போறார்?”

“நீ நம்மள ஜஸ்டிஃபை பண்ணின இல்ல? அது அவருக்கு பிடிக்கல”

“ம்ம்…”, என்று சில நொடிகள் யோசித்தவன், “ஸ்டில் எனக்கு நாம பண்ணினது தப்பு மாதிரி தோணல, தட் வாஸ் தி ப்ராப்பர் ஏஜ் பார் டேட்டிங்”.

“இங்க அப்படி இன்னும் வரல..”

“கமான்.. இவங்களுக்கு தெரில-ன்னு வேணா சொல்லு, ஒத்துக்கறேன். லிவிங் டுகெதர்லாம் இங்க சகஜம்ன்னு நமக்கே தெரியுமே?”, என்றவன்…

“எனக்கு ஒரு விஷயம் புரியல, பேரெண்ட்ஸ்லாம் வெஸ்டர்ன் ஜாப் & கரன்ஸி வேணுங்கிறாங்க, கூடவே அந்த பழக்க வழக்கமும் சேர்ந்துதான் வருங்கிறது இவங்களுக்கு ஏன் புரியவேயில்லை? அதுவும் தவிர மாற்றம்ங்கிறதுதானா மாறாதது? “, சொல்லி நறுமுகையை பார்க்க.. அவளோ இவன் பேசுவதை காதில் வாங்கியதாகவே காண்பிக்கவில்லை. வேறெங்கோ தூரத்தில் இருந்த மரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த அவளது முகம் அன்று சண்டை நடந்தபோது இருந்ததுபோல் இறுக்கமாக இருந்தது. சசிக்கு அந்த நாள் நினைவில் வர, “அன்னிக்கு உனக்கு ஏன் அவ்ளோ கோபம் வந்தது?  ஆபிஸ் கால் பேசி முடிச்ச.. சரீ… அகெய்ன்.. நான் வீட்டுக்கு யார் யார் வந்தா? எவ்ளோ பேர் ஸ்டே பண்ணினாங்கன்னு சாதாரணமா தானே கேட்டேன்?. அப்பவும் நீ சரியா ரெஸ்பாண்ட் பண்ணல, என்னை ஒரு மாதிரி பாத்த. ரொம்ப கேவலமா ஒரு லுக். தட் வாஸ் இரிடேடிங். அப்போத்தான் நான் வேற விதமா கேட்டேன். என் கேள்விக்கு பதிலே சொல்லாம, வெளிய போ வெளிய போ-ன்னு ஹிஸ்டீரியாக்கா கத்த ஆரம்பிச்சி..”, கண் மூடி அன்று நடந்ததை மறுபடியும் நினைவில் கொண்டு வந்து, கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் நெற்றியில் தைலம் தேய்ப்பது போல தேய்த்தான்.

“ம்ப்ச். இப்போ எதுக்கு அது?, லீவ் இட்”, வெறுமையாக சொன்னாள்.

“நோ, எனக்கு தெரிஞ்சாகணும், அன்னிக்கு மட்டும் நாம பொறுமையா பேசி இருந்தா பிரச்சனையே வந்திருக்காது. எனக்கு நீ போட்ட சத்தம் இன்னும் டிஸ்டர்ப் பண்ணுது, அண்ட் தட் லுக்..”, புருவம் சுருக்கி கேள்வியாக சசி.

“சொன்னா புரியாது..”

“ப்ளீஸ்..”

“ஹூ..ம்..”, சசியின் கண்களை பார்த்து.., “ஐ ட்ரஸ்ட்டட் யூ சசி, யூ க்நொ? எங்கப்பாக்கு மேல உன்னை நம்பினேன். நீ சொன்னேங்கிற ஒரே ஒரு காரணத்தாலே நம்ம விஷயத்தை எங்கப்பாட்டேந்து மறைச்சேன். அவர் என்னை முழுசா நம்பினார், அவரையே நா ஏமாத்த ரெடியா இருந்தேன்னா அப்போ உன்னை எவ்ளோ தூரம்…?”, கண் மூடி ..”நீ கேட்ட கேள்வி.. தட் வாஸ் betrayal,  நம்ப முடில, நீ கேட்டதை என்னால டைஜஸ்ட் பண்ண முடில, தென் ஐ வாஸ் அவுட் ஆஃப் கண்ட்ரோல்”, கண் திறந்து சசியை பார்த்த நறுமுகையின் முகத்தில் செயற்கையாய் புன்சிரிப்பு. பார்த்த சசியின் மனம் வலித்தது.

“இவா..ஐ ம்.. “, “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில, நான் அப்போ ரொம்ப குழப்பத்துல இருந்தேன், சந்த்ரு வேற ‘பொம்பளைங்கள நம்பாதடா, லவ் லவ் ன்னு குழைவாளுங்க, அப்பறம் இன்னொருத்தனை தேடிப்பாங்க’ அப்டி இப்படின்னு கண்டபடி பேசினானா, தென் அந்த செக்ரெட்டரி.. உன்னோட பேச்சு. அது இதுன்னு என்னை ரொம்ப குழப்பிடுச்சு”.

“இட்ஸ் ஓகே. ஜஸ்ட் லீவ் இட்”

“ஆனா ஒரு விஷயம் க்ளியர் பண்ணிடறேன், விது பத்தி தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்திருப்பேன். நான் உன்னை ஏமாத்தணும்னோ, வேற எப்படியோ நினைச்சோ உங்ககூட பழகல, இவா. அந்த சூழ்நிலை.. என் குழப்பம்.. அப்டி கேக்க வெச்சது”.

“புரியுது”

“ஆனா அப்போகூட நம்ம ரிலேஷன்ஷிப் சரி பண்ணிக்க நினைச்சு, ஒரு வருஷம் கழிச்சு உன்னை பாக்க வந்தேன், அங்க நவநீத் இருந்தான், சரி,  யூ மூவ்ட் ஆன்-ன்னு எனக்கு தோணுச்சு”

“ம்ம்”, எவ்வித உரணர்வுமின்றி நறுமுகையின் பதில்.

அவளை ஆழமாக பார்த்த சசிசேகரன், “இந்த இவா.. என்னோட இருந்த அந்த இவா இல்ல, அண்ட் நானும் அதே சசி இல்ல,  நான் சசி + ஆரவ், நீ இவா + விது. நிறைய மாற்றங்கள்”, தலையை திருப்பி தூரத்தில் இருந்த மரத்தை பார்த்து, “நம்ம  ரெண்டு பேர் கிட்டயும் அந்த.. அன்னிக்கி இருந்த லவ் இருக்கான்னு தெரில. பட், உங்கப்பா சொன்ன விஷயம் கரெக்ட், விதுக்காக, நாம ஹஸ்பென்ட் & வொய்ப்.. சேர்ந்திருக்கலாம். கொஞ்ச நாள் ஆரவ்-வை  அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நான் இங்க வந்துட்டா அவன் யாரையும் தேட மாட்டான். தென்… இங்க எப்பவும் போல வேலைல பிஸி ஆயிடுவேன். அப்பறம், கிட்ஸ் க்காக சேர்ந்திருக்கற முக்காவாசி இந்தைய கப்பிள்ஸ் லிஸ்ட்-ல நாமளும் வந்துடுவோம்”, அவளது செயற்கைச் சிரிப்பை அவளுக்கே திருப்பினான்.

சின்ன பெருமுச்சுடன் தலையை ஆமோதிப்பாய் அசைத்து, “ஆரவ் எனக்கு ஒரு பிரச்சனையே இல்ல, பாத்துக்கற அளவுக்கு அவன் சின்ன குழந்தையும் இல்ல”, அவனது லவ் குறித்த பேச்சை கவனமாக தவிர்த்தாள்.

“சோ லீவ் எக்ஸ்டெண்ட் பண்ண ட்ரை பண்றேன், கேட்டா கிடைச்சுடும்..”, எழுந்தவன், “நாம friends- ஆ இருக்க முடியுமில்ல?”

“வி ஹாவ் நோ அதர் கோ, இல்லையா? அட்லீஸ்ட் மத்தவங்களுக்காகவாவது? “.

“ஹூம்.”.., இருக்கையை விட்டு எழுந்து கொண்டு.. “யா. நாளைக்கு ஈவ்னிங் ஆரவ் & விதுவோட பேசணும்”

“ம்ம். பேசலாம்”, என்ற இருவருக்குமே முகம் தெளிவாக இல்லை. சசி சொன்னதுபோல இருவருக்கும் காதல் என்ன? துளி கடமை கூட இல்லை, வெறும் வெறுமைதான் இருந்தது.

மறுநாள் மாலை. இருவரும் பிள்ளைகள் இருவரிடமும் விஷயத்தை பக்குவமாக தெரிவித்தனர். முதலில் அவர்கள் இருவரும் வாட்? ரியலி? என்று அதிர்ச்சியாக அதை எடுத்துக் கொண்டாலும் அடுத்த ஓரிரு நொடிகளில்.. “அப்போ நீ என் சிப்லிங்-ஆ?”, என்று ஆரவ் விதுவைப் பார்த்து கேட்க.., “ஆரூ, நீ என் அண்ணனா?”, என்று விது அவனைக் கேட்க.. “வாவ், நம்பவே முடிலடா”, என்று அவர்களுக்குள் பேசினார்கள். பின் நறுமுகை சசியிடம் சிறு சிறு விளக்கம் கேட்டனர். வீடு வந்ததும், அவனது வழக்கப்படி நேரே ரங்கப்பாவிடம் சென்று தகவல் தெரிவித்தான். “எனக்கு தெரியும்டா”, என்று அவர் புன்முறுவலோடு சொல்ல, “ஏன் எங்கிட்டதா முன்னாடியே சொல்லல?”, என்று சின்னதாய் பிள்ளைச் சண்டை போட்டார்கள் ஆரவ் & விது.

***************

சிறிது நேரத்திற்கு பிறகு, தோட்டத்தில் இருந்த பெரிய ஊஞ்சலில் அமர்ந்திருந்த நறுமுகை & சசியை தீவிர பார்வை பார்த்துக் கொண்டே ஆரவ் விது இருவரும் வந்தனர். எதிர்பார்த்திருந்ததால் ஓரளவிற்கு நறுமுகை & சசி தயாராக இருந்தனர்,

“மேம், நீங்க ஏன் என்னை டாட் கிட்ட விட்டு வந்தீங்க?”, ஆரவ். புருவம் சுருக்கி சீரியஸாக கேட்க, என்ன சொல்வதென்று நறுமுகைக்கு தெரியவில்லை.”கால் மீ மாம், ஆரூ..” நறுமுகை ஆரவ்-வை திருத்த நினைக்க..

அவளுக்கும் முன்பு சசி வேகமாக, “நான்தான் உன்னை தரமாட்டேன்ன்னு சொல்லிட்டேன் ஆரூ..”.

நறுமுகை அவனை ‘சமாளிப்புக்கு நன்றி’ என்பது போல பார்த்தாள்.

“ஏன் டாட்?”

“அப்போ நம்மகிட்ட பணம் இல்ல, சொல்லப்போனா எதுவுமே இல்ல, அங்க நல்லா சம்பாதிக்க முடியும். உங்க மேம் இந்தியாக்கு வந்தே ஆகணும்னு அடம் பிடிச்சாங்க, நான் நோ சொன்னேன், எங்கம்மாவை நான் பாத்துக்க போகணும்னு என்கூட ஒரே ஃபைட், அப்போ நிஜமா இவா-வ அனுப்பறத்துக்கூட என்கிட்டே மணி இல்ல, என்ன பண்றது? சரி உனக்கு அம்மா பாக்கணும்னா நீ மட்டும் போ சொல்லி திட்டிட்டேன்”

“ம்ம்.”, என்று சசியை கண்டனப் பார்வை பார்த்து, ” நீங்க என்னை அப்பறம் ஏன் மேம் தேடவேயில்ல?”, இந்த கேள்வி நறுமுகைக்கு.

“தேடினேன் ஆரவ், சசி வேற கம்பனி மாறினது எனக்கு சொல்லல, நானும் அம்மாவை கூட்டிட்டு மும்பை போயிட்டேனா.. அப்பறம்… விது வந்தானா.. அப்படியே போயிடுச்சி”,

“ஆரூப்பா, உங்களுக்கு நான் இருக்கறது தெரியாதா?”, விது.

மெல்ல மறுப்பாக தலையசைத்து, “தெரியாது..” சொன்னவனின் கண்களில் வலி.

“விது, எனக்கு உங்கப்பா மேல கோபம், அதனால அவங்களுக்கு சொல்லல”, இடையில் நறுமுகை குறுக்கிட்டாள்.

“இவா-ட்ட நான் நடுல பேசியிருந்தா தெரிஞ்சிட்டு இருப்பேன்”

சிறிது யோசித்து, “ஓ!” என்ற விது, “இட்ஸ் ஓகே..”, என்றான்.

விதுவின் அருகிருந்த ஆரவ் சசியைப் பார்த்து, “வாட் இஸ் தட் இவா?”, கேட்டான்.

“யெஸ் யெஸ் , வாட் இஸ் இட்?”, விது அண்ணனுக்கு ஒத்துப் பாடினான்.

சசிக்கு மெல்லிய கீற்றாக சிரிப்பு வர, அவனது முகம் பார்த்த நறுமுகைக்கும் புன்னகை.  ஒருவேளை விது & ஆரவ் பேர் பிடிக்கவில்லை என்று சொன்னால், சசி தனது இவா-வை மாற்றிக் கொள்வானா என்ன? இவளுக்கும் அவன் வேறு எப்படி கூப்பிட்டாலும் வித்தியாசமாக அல்லவா இருக்கும்?

“அது மாம் மோட நிக் நேம்.. உங்களுக்கு  புடிக்கலையா?”, என்றான் சசி.

எனக்கொன்றுமில்லை என்பதுபோல, “ம்ம்ம்.” என்று ஆரவ் தோளை குலுக்க.. “நைஸ்”, என்றான் சின்னவன். சிறுவர்கள் இருவரும் பெற்றவர்களை சிறிது நேரம் குறுகுறுவெனப் பார்த்தனர்.

என்ன என்பது போல சசி புருவம் உயர்த்திக் கேட்க.. ” நீங்க இனிமே சண்டை போட்டீங்கன்னா, எங்களை ஒன்னு ரங்கப்பா வீட்ல, இல்லனா தாத்தா வீட்ல விட்டுடனும். தனித்தனியா நோ. ஓகே யா?”, என்று விது கேட்டான்.

நறுமுகை விரிந்த புன்னகையுடன், “இனிமே தனித்தனியா இருக்கமாட்டோம். ஓகே?”, ஆரவ்-வின் கைவிரல்களுக்குள் தனது விரல்களை சேர்த்துப்பிடித்து, அவனை தோளோடு அணைத்தபடி சொன்னாள்.

சசியும் விதுவின் தலைகோதி, “யெஸ், நாமெல்லாரும் இனிமே ஒரே வீட்ல, ஒன்னாத்தான் இருக்கப்போறோம். ஓகே?”

“தாத்தா?”

“அவரும் இங்க வர்றேன்னு சொல்லிட்டார், மேல இப்போ கட்ட போறோமில்லையா?  அங்கதான் நாம இருக்கப்போறோம், உங்களுக்கு ஓகேவா?”

“அப்போ அந்த வில்லா வீடு?”

“அதை சினிமா, சீரியல் ஷூட்டிங்-க்கு வாடகைக்கு விட்டுடலாம், சரியா?”

“ஆனா, நாங்க ஸ்விம் பண்ணனும்னா?”, விது.

“அப்போ போலாம், நம்ம வீடுதான?, உனக்கு வேணும்னா அது சும்மாவே இருக்கட்டும். ஓகே?”

“இல்லலப்பா, நாம வீக்லி ஒன்ஸ் போலாம், சண்டே சண்டே”, என்று சசியிடம் கூறி, ஆரவ்வை பார்த்து, “என்ன ஆரவ்? ஓகேவா?”, கேட்டான். ஆரூப்பா-வை அவனையறியாமலே விது தவிர்த்திருந்தான். அவனது அப்பா அழைப்பில் சற்றே உணர்ச்சிவசப்பட்ட சசி மகனை நோக்கி கைநீட்ட, கிட்டே வந்து நின்றவனை மடியில் அமர வைத்துக் கொண்டான்.

நறுமுகை தோளோடு அனைத்துக் கொண்டிருந்த ஆரவ்-வை அவளருகே உட்கார வைத்தாள். மலைக்கோட்டை தாயுமானவர் சந்நிதி தாண்டி வந்த மந்த மாருதம் அந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பதுபோல தழுவி சென்றது.

Advertisement