Advertisement

அத்தியாயம் 22
அசந்து தூங்கும் மஞ்சரி எழுந்துகொள்ளவே! காலை ஏழு மணி ஆகி விடும். அவள் எழுந்துகொள்ளும் பொழுது பாண்டி வீட்டில் இருக்கானா? இல்லையா என்று தெரியாது.
“சீக்கிரம் சீக்கிரம் இத சாப்பிட்டு வேலைய பாரு” என்ற வைஜயந்தியின் குரல்தான் அவள் காதில் கேக்கும்.
“இருங்க அத்த சாமி கும்பிட்டுட்டு வரேன்” என்றால்
“எந்த சாமியும் வந்து உன்ன இங்க இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போகும்னு கனவு காணாத” என்று இளக்காரமாக பேசுவாள் வைஜயந்தி.
“மாமா எங்க?” முத்துப்பாண்டிக்கு வீட்டில் நடப்பவைகள் தெரியுமா? தெரியாதா? என்ற சந்தேகத்தில் கேட்டால் “அவனுக்கு கல்குவாரியில ஏகப்பட்ட வேலைகள் இருக்கு காலையில போனா ராத்திரிதான் வாரான் உன்ன பாத்துகிட்டு இருக்க முடியுமா?” என்பாள்.
வைஜயந்தியின் பதிலில் பாண்டிக்கு வீட்டில் நடப்பவைக்கல் தெரியாது என்றுதான் எண்ணி இருந்தாள் மஞ்சரி.
அப்படியே! தற்செயலாக பாண்டி அவளை பார்த்தாலும் “எப்படி இருக்க மஞ்சு. ரொம்ப சோர்வா தெரியிற? ஒழுங்கா சாப்பிடுறியா என்ன?” என்று அன்பாக கேட்டும் வைப்பான். அவனுக்காத்தான் பொறுமையாக இருந்தாள் அவனே! பொய்த்து போய் விட்டான்.  
இந்த மூன்று மாதத்தில் அவன் அவளிடம் அவ்வாறு கேட்டது இரண்டு தடவைகள்தான். கேட்க்கும் பொழுதே! அவ்விடத்துக்கு வந்த வைஜயந்தி “இங்கன என்ன பேச்சு வேண்டி கிடக்கு, வெளிய சோலி இருக்குனு சொன்னியல போ…” என்று மகனை துரத்தி விட்டாள்.
சமீபகால உணவு பழக்க வழக்கத்தால் மஞ்சரியின் சுவை நரம்புகள் மரத்து போய் இருந்தன. அவள் உண்ணும் உணவுகளை தவிர வேறு உணவுகளை உட்கொண்டால் வாந்தியெடுக்கலானாள். உடலும் மெலிந்து போசாக்கு குறைபாடோடு உடலும் பலவீனமாக காணப்பட்டாள். மனதில் இருந்த தைரியம்தான் அவளை இத்தனை நாள் நடமாட வைத்திருந்தது.
வைஜயந்தி கதவை பூட்டிக்கொண்டு சென்றதும் என்ன நடக்க போகிறது என்று அவளுக்கு புரிந்து போனது. உயிரை மாய்த்துக்கொண்டாலும் அவளை விடப்போவதில்லை. அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி விடுவார்கள். அவள் உயிரோடு இருப்பது ரொம்பவும் முக்கியம்.
பாண்டி அறைக்குள் வந்ததும் அவள் உடலில் அப்படி ஒரு வெறி வந்தது. அவனை அடித்துக் கொல்லும் வெறி. அவனிடமிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணம் ஓட. மனதில் தெம்பிருந்தாலும் உடலில் பலமில்லை. கண்கள் வேறு சொருகிக்கொண்டு வருகிறது. அதனாலயே! அவனிடம் மாட்டிக்கொண்டாள் மஞ்சரி.
பாண்டியின் கைகள் அவள் தேகம் தீண்ட அவள் பெண்மை விழித்துக்கொண்டதோடு,  ஆழ் மனமும், மூளையும் சேர்ந்து விழித்துக்கொண்டது. இந்த கேடுகெட்டவனின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றது. இந்த  குடும்பத்தாரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பது மட்டுமே! அவள் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
கடவுள் அவளை கை விடவில்லை. பாண்டி அவள் உடைகளை களைந்துக்கொண்டிருக்கும் நேரம், அவள்  அவன் மண்டையை உடைத்திருந்தாள். ஆனால் அவளால் அசைய முடியவில்லை. அவன் அவள் மேலையே! சரிய அவளால் அவனை தள்ளி விடக்கூட உடலில் பலமில்லை. மாதவிடாயில் வந்த இரத்தப் போக்கு வேறு அவளை மேலும் பலவீனப்படுத்தி இருக்க, மனச்சோர்வும் தாக்க, மஞ்சரியும் மயக்கத்துக்கு சென்றிருந்தாள்.
இதை எதையும் அறியாமல் மஞ்சரியின் கற்பு சூறையாடப்பட்டிருக்கும் என்று கனவு கண்டுக்கொண்டு வைஜயந்தி வெளியே காவல் காத்துக்கொண்டிருந்தாள்.
விடிந்ததும் கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி. இரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்த இருவரையும் கண்டவளுக்கு யாருக்கு அடிபட்டிருக்கும் என்பதையே! முதலில் புரிந்துக்கொள்ள முடியவில்லை. பாண்டியின் குருதி மஞ்சரியின் மேல் இருக்க, மஞ்சரியின் கரையும் கட்டிலில் இருந்தது.
அரைகுறை ஆடையில் இருந்த மஞ்சரியும், நிர்வாணமாக இருந்த பாண்டியும் இரத்த வெள்ளத்தில் இருந்தாலும் தான் நினைத்தது நடந்து விட்டதாக இறுமாப்புக் கொண்டாள் வைஜயந்தி.
பூஞ்சோலையை கத்தி அழைத்தவள் டைவரை அழைக்க சொல்லி இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்தான்  பாண்டிக்கு அடிபட்ட உண்மை தெரியவந்தது.
மருத்துவமனையிலிருந்து போலிஸுக்கு தகவல் பறந்திருக்க, போலீஸ் விசாரணை ஆரம்பமாக, உடனே! வைஜயந்தி மஞ்சரித்தான் பாண்டியை தாக்கியதாக வாக்குமூலம் கொடுக்கலானாள்.
மஞ்சரி கண் முழித்ததும் விசாரணை என்ற பெயரில் கைதாகி காவற்கூடத்தில் அடைக்கப்பட்டாள்.
மனநோயாளியான மனைவி. தூங்கிக் கொண்டிருந்த கணவனை தாக்கி கொலை முயற்சி என்று செய்திகளில் பரபரப்பாக ஒளிபரப்பட்டுக்கொண்டிருக்க, அந்த செய்தி வக்கீல் லதா சுப்பிரமணியம் கண்ணில் பட்டது.
அக்ஷராவை அழைத்து “மீடியா எதுவேனாலும் பரப்புக்காக போடுவாங்க. நமக்கு வேண்டியது உண்மை மட்டும். முதல்ல அந்த பொண்ண பத்தி அந்த பொண்ணோட ஊர்ல விசாரிங்க, கடைசியா அந்த பொண்ணுகிட்ட விசாரிங்க” என்று சொல்லி இருந்தார்.
ஆனால் அக்ஷரா மஞ்சரியின் ஊர்காரர்களை மாத்திரம் விசாரிக்கவில்லை. பாண்டியின் ஊர்காரர்களையும் சேர்த்து விசாரித்திருந்தாள்.
பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேக்கும் வக்கீல் லதா சுப்பிரமணியம் மஞ்சரியை அணுகியது. மஞ்சரியின் பக்கம் சிறிதளவேனும் நியாயம் இருப்பின் அவளை விடுவித்து பாண்டிக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க மட்டுமே! ஆனால் பல திடுக்கிடும் தகவல்களை இந்த கேஸ் உலகத்துக்கு கொடுத்திருந்தது.
கோட்டில் வைஜயந்தி சிறப்பாக நடித்தாள். தனது மருமகளுக்கு புத்தி சுவாதீனம் இல்லையென்றும். தன்னை தானே! வருத்திக்கொள்வதாகவும். அவள்தான் மகனை காயப்படுத்தியதாகவும் கூறினாள்.
நீதிபதியிடம் வைஜயந்தியின் குடும்பத்துக்கும் தங்கராசுவின் குடும்பத்துக்கும் இருந்த பகையை தெளிவாக விளக்கிய வக்கீல் லதா திருமண பேச்சை வைஜயந்திதான் எடுத்ததாகவும், மஞ்சரிக்கு திருமணத்துக்கு முன் எந்த மனநோயோ! புத்தி சுவாதீனமற்ற தன்மையோ! இருக்கவில்லை என்றும் மஞ்சரி ஒரு படித்த பட்டதாரி என்றும் நிரூபித்திருந்தார். அப்படியானால் திருமணத்துக்கு பின்னால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். மாமியாரின் வீட்டில் என்னதான் நடந்தது என்ற கேள்வியை முன் வைக்க நல்லாத்தான் பார்த்துக்கொண்டதாக அடித்துக்கூறினாள் வைஜயந்தி.
பாண்டி வந்திருக்கவில்லை. தலையில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனை வசமாகி இருந்தான்.
“நீங்க பார்த்துக்கொண்ட லட்சணம் உங்க மருமகளோட கையிலையே! தெரியுது. யுவர் ஓனர் இந்த பெண் கல்லுடைத்திருக்கிறாள். தண்ணீர் இறைத்திருக்கிறாள். ஒழுங்கான சாப்பாடு போடவில்லை. சத்து குறைபாடு உள்ளது என்று மருத்துவ அறிக்கை வேறு சொல்கிறது. இது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இது உங்கள் கண்முன் இந்தப்பெண்ணின் இப்போதைய தோற்றம்” என்று சொல்ல நீதிபதி அந்தப் பெண்ணா? இந்தப் பெண் என்று கண்ணாடியை சரி செய்து பார்கலானார்.
“ஐயோ நான் எந்த வேலையும் சொல்லவில்லை. அவளாகத்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள். சாப்பிட வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை” என்று வைஜயந்தி நீலிக்கண்ணீர் வடிக்க,
“அற்புதம். திறமையான நடிகை” உள்ளுக்குள் மெச்சிக்கொண்டாலும் லதா வாய் திறக்கவில்லை.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் அனைத்தும் மஞ்சரிக்கு சாதகமாகத்தான் இருந்தன. ஒரு பெண் கணவனுக்காக விரதமிருப்பாள். அசைவம் கூட சாப்பிடாமல் இருப்பாள். இப்படி உடல் பலவீனமாக தன்னை வருத்திக்கொள்ள மாட்டாள்.
பெண் என்பவள் குடும்பத்தின் உயிர் நாடி என்பதை அவள் அறிவாள். விரதம் இருந்தாலும் சத்தான ஆகாரங்களை உட்கொள்வாள். அப்படியே! அவள் தவற விட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அதை கவனித்து செயல் படுத்துவார்கள் வைஜயந்தி சொல்வது கதை என்று நன்றாக புரிந்தது.    
மஞ்சரி ஒரு மனநோயாளி என்று வைஜயந்தியின் வக்கீல் வாதாட மஞ்சரி வீட்டில் யாரையும் காயப்படுத்தவுமில்லை. தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளவுமில்லை. அவள் உடலில் எந்த காயங்களுமில்லை. என்ற மருத்துவ அறிக்கையை முன் வைத்த லதா எதிர்தரப்பு வக்கீலின் வாதத்தை உடைத்தார்.
ஒரு புன்னகையை மட்டும் சிந்தி விட்டு “உங்க வீட்டுல வேலைசெய்யும் பெண் பூஞ்சோலைக்கும் உங்க மகன் முத்துப்பாண்டிக்கும் என்ன உறவு?” என்று கேக்க
“என்ன உறவு? அண்ணன் தங்கையா பழகுறாங்க” என்றாள் வாய் கூசாமல்.
மஞ்சரி வைஜயந்தியை வெறுப்பாக பார்க்கும் பொழுது “அதை அந்த பெண்ணிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம்” என்று பூஞ்சோலையை கூண்டுக்கு அழைக்க மலங்க மலங்க விழித்தாள் அவள்.
பாண்டியோடு திருட்டுத்தனமாக உறவாடும் பொழுது இனித்தது. அது வைஜயந்திக்கு தெரிந்துதான் நடந்தது என்று நினைக்கும் பொழுது உடல் கூசியது.
“சொல்லுமா? முத்துப்பாண்டிக்கும் உனக்கும் என்ன உறவு?”
“அவர் எனக்கு அண்ணன் மாதிரிங்க” குரல் வெளியே! வரவே! இல்லை. வைஜயந்தி மிரட்டித்தான் அழைத்து வந்திருந்தாள். கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது.
“சரிம்மா நீ போ” என்று அவளை அனுப்பி வைத்த லதா நீதிபதியிடம் வைஜயந்தியின் வீட்டை சோதனையிட்டதில் கருத்தடை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதுவும் வைஜயந்தியின் அறையில்” என்று விட்டு வைஜயந்தியின் புறம் திரும்பி “இந்த வயசுல நீங்க பாவிக்கிறீங்களா? என்று கேக்க?”
தனது மானத்துக்கு களங்கம் என்றதும் கொதித்தவள் “சீ சீ என்ன பேசுறீக என்ற புருஷன தவிர நான் யாரையும் மனசால நெனைச்சி பார்த்ததும் கூட கிடையாது. அது என்ற மருமகளுக்கு வாங்கினது” என்று சொல்ல கோர்ட் வளாகமே! அல்லோலகல்லோலப்பட்டது.
“சைலன்ஸ” என்று நீதிபதி சுத்தியலை அடித்து அவ்விடம் அமைதியான பின்
“நீங்க எதுக்கு உங்க மருமக்களுக்காக வாங்கணும், பேரன் பேத்தியை பாக்குற ஆச இல்லையோ!” என்று யோசிப்பது போல் லதா பாவனை செய்ய
“ஏன் இல்ல. அதான் சொன்னேனே! அவ மனநலம் சரியில்லைன்னு அதான் இப்போதைக்கு வேணாம்னு கொடுத்தேன்” என்றாள் கொஞ்சமும் அச்சப்படாமல்.
“ஐயோ அதைத்தான் அந்த அம்மா இல்லனு நிரூபிச்சிட்டாங்களே!” மண்டையை பிச்சிக்கொண்டார் வைஜயந்தியின் வக்கீல்.
  
அவரை கேலியாக பார்த்தவாறு “அப்படியா” என்ற லதா அக்ஷராவிடமிருந்து வாங்கிய கோப்பை நீதிபதியிடம் கொடுத்து “இது மஞ்சரிக்கு வர்ஜின் டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட். ஷி ஈஸ் வர்ஜின். அண்ட் கருத்தடை மாத்திரைகள் பூஞ்சோலைக்கு யுவர் ஓனர்” என்று லதா முடிக்க முன்
“நான்தான் சொன்னேனே.. அவங்க ரெண்டு பேரு…” என்று வைஜயந்தி ஆரம்பிக்க
“கொஞ்சம் இருங்க வைஜயந்தி அம்மா நான் இன்னும் பேசி முடிக்கல” பூஞ்சோலை வேறு யாருமில்லை. வைஜயந்தி அம்மா வீட்டு டைவரோட சொந்த பேத்தி.
வைஜயந்தி அம்மா ஊருல பெரிய குடும்பம். திருவிழா, கோவில், கல்யாணம்  இந்த மாதிரி விசேஷங்களுக்கு டைவரோட போவாங்க அதே! மாதிரி பூஞ்சோலையும் அவங்களோட போவா வருவா, தனியா எங்கயும் போனதில்லை. டைவர் செல்லப்பாதான், காய்கறி, மளிகை சாமான்கள், கறினு எல்லாம் கொண்டு வந்து கொடுக்குறாரு. அப்படி இருக்க பூஞ்சோலைக்கு பாண்டிய தவிர வேற்று ஆண்களோடு எந்த தொடர்பும் ஏற்பட வாய்ப்பும் இல்ல. வைஜயந்தி அம்மா பூஞ்சோலையா தவிர வேற யாருக்கும் கருத்தடை மாதத்தை கொடுக்கணும் என்ற அவசியமும் இல்லை. இதுல கொடுமை என்னனா யுவர் ஓனர் சொந்த தாத்தாகிட்ட சொல்லி பேதிக்கு கொடுக்க மாத்திரை வாங்கி வந்திருக்காங்க. அவரும் வயசானவரு விசுவாசம் இல்லையா? எதுக்குன்னு தெரியாம வாங்கிட்டு வந்திருக்காரு” என்று ஊர்க்கார்கள் சிலரையும் சாட்ச்சியாக நிறுத்தி இருந்தார். அக்ஷரா பக்காவா சாட்ச்சிகளை அழைத்து வந்திருந்தாள்.  
பூஞ்சோலைக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. வைஜயந்தி எல்லாம் அறிந்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாது பாண்டியின் வாரிசு தனது வயிற்றில் வளரக் கூடாது என்று கருத்தடை மாத்திரை வேறு கொடுத்தாளா?
“அடப்பாவிங்களா? என் பேத்தி வாழ்க்கையை என் கையாலையே! நாசமாக்கிட்டீங்களே!” என்று கதறினார் செல்லப்பா. அது என்ன மாத்திரை என்று அறியாமல் வாங்கி வந்தவருக்கு தெரியாதா? பேத்தி எவ்வளவு காலமாக உட்கொள்கின்றாள் என்று. அதனால் அவளுக்கு குழந்தை பாக்கியம் கூட இல்லாமல் போய் இருக்கும் என்ற அச்சம்தான் அவர் கதறலுக்கு காரணம். மஞ்சரிக்கு செய்த அநியாயத்து தக்க தண்டனை கிடைத்து விட்டதாக புலம்பியவாறு பூஞ்சோலையை தாக்க ஆரம்பித்தார்.
செல்லப்பாவின் கதறலும் அவர் வாயாலையே! சொன்னதும் போதாதா? அங்கிருந்தவர்களுக்கு உண்மை புலப்பட, பத்திரிக்கையாளர்களுக்கு பரபரப்பான செய்திகிடைத்த மகிழ்ச்சியில் கிளம்பி சென்றிருந்தனர்.   
அடுத்த ஹியரின் வருவதற்குள் எல்லாம் மாறி இருந்தது. அதிர்ச்சி தாங்க முடியாமல் பூஞ்சோலை தற்கொலை செய்து கொண்டிருந்தாள். மனமுடைந்த செல்லப்பா எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.
அடுத்த ஹியரிங்கில் பாண்டி கோர்ட்டில் நிறுத்தப்பட்டான். அவன் வைஜயந்திக்கு மேல் நடித்தான்.
பூஞ்சோலையில் மீது இருந்தது வெறும் ஆசை மட்டும்தான், மஞ்சரி மனைவி அவள் மீது காதல் கொண்டுதான் மணந்தேன் என்றான். மஞ்சரிக்கும் தனக்கும் நடுவில் நந்தியாக இருந்தது தனது அன்னை வைஜயந்திதான் அதனால்தான் அன்று குடி போதையில் பூஞ்சோலையோடு இருந்ததாக ஒப்புக்கொண்டான்.
அன்னை அழைத்து மஞ்சரியின் அறைக்கு செல்லுமாறு கூறியதும் என்ன நடந்தது என்று அறியாமல், யோசிக்காமல் சென்று விட்டதாகவும் கூறினான். ஆக மொத்தத்தில் மஞ்சரியையே! குழப்பினான். 
ஒரு நொடி மஞ்சரி அவனை அன்பாக நோக்க, உள்ளுக்குள் வெற்றிக்கொடியை நட்டுக்கொண்டான் பாண்டி.
“சரி பாண்டி கிட்டத்தட்ட கல்யாணமாகி நாலு மாசம் ஒரே வீட்டுல இருந்திருக்கீங்க, மஞ்சரி என்ன சாப்பிட்டா? எப்போ தூங்குவா? எப்போ என்திரிப்பா என்று கூடவா தெரியாது?” என்று லதா மடக்க
“அதான் சொல்லுதேன் வக்கீல் அம்மா. நான் காலைல கல்குவாரிக்கு போனா வர இரவாகும். வீட்டுல என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாதுங்க. என் ஆத்தா மஞ்சுவை பார்க்க கூட விடாது. எல்லாம் எந்தப்புத்தானுங்க. இப்படியெல்லாம் நடந்தது தெரிஞ்சா மஞ்சுவை அவ வீட்டுக்கு அனுப்பி வச்சிருப்பேன். ஆத்தா மேல வச்சிருந்த பாசம் என் கண்ண மறச்சிருச்சு” என்று கதறி அழலானான்.
மஞ்சரிக்கு பார்க்க முடியவில்லை. அவளும் அழ நீதிபதி நேரடியாகவே! அவளிடம் புருஷனோடு சேர்ந்து வாழ்கிறாயா என்று கேட்டிருக்க, இடையில் குறுக்கிட்டு லதா “என் காட்ச்சிக்காரர் குழம்பிய மனநிலையில் இருக்கிறார். அடுத்த ஹியரிங்கில் அவருடைய முடிவை சொல்வார்” என்று சொல்ல
நீதிபதியும் அடுத்தய ஹியரிங்கில் மஞ்சரியின் கருத்தைக் கேட்டு தீர்ப்பு வழங்குவதாக கூறி கோர்ட்டை கலைத்தார்.
பாண்டி அடுத்த ஹியரின் வருவதற்குள் மஞ்சரியை சந்திக்க முயற்சி செய்து கொண்டுதான் இருந்தான். வைஜயந்தி கோட் வாசலில் வைத்து பொன்னுத்தாயியிடம் “என் பையன் பார்த்துகோவான் டி” என் வாய் சவாலிட்டு சென்றிருக்க பொன்னுத்தாயிக்கு எதுவோ சரியில்லை என்று அடிமனதை அரித்துக்கொண்டிருக்க மஞ்சரியை சந்திக்க முத்துப்பாண்டிக்கு இடமளிக்கவில்லை.
மஞ்சரிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பாண்டி கதறிய கதறல் அவள் கண்ணுக்குள்ளயே! நின்றது.
“என்ன மஞ்சரி புருஷனோட சேர்ந்து வாழ முடிவெடுத்திட்டீங்க போல” என்றவாறு அவளருகில் அமர்ந்தாள் அக்ஷரா.
“எனக்கு ஒரே குப்பமாக இருக்கு. வீட்டுல நடந்தது எதுவும் மாமாக்கு தெரியல. அவர் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு தோணுது” என்றாள் மஞ்சரி.
“படிச்ச பொண்ணுனாலும் சரி படிக்காத பொண்ணுனாலும் சரி தாலி கட்டினவன கண்மூடித்தனமான நம்புறாங்க. அன்னக்கி ராத்திரி பூஞ்சோலையோட உங்க புருஷன பார்த்த பிறகும் அவனை நம்புறீங்க பாருங்க உங்கள என்ன பண்ணலாம்” அக்ஷராகுக்கு கோபம் வந்ததில் பாண்டியை அவன் இவன் என்று பேசலானாள்.
“அது வந்து… அன்னைக்கி… மாமா குடிச்சிருந்ததா சொன்னாரு”
“நல்லா யோசிச்சு சொல்லுங்க, உங்க ரூமுக்கு வரும் போது தள்ளாடிக்கிட்டுதான் அவன் வந்தானா? இல்ல அன்னக்கி மட்டும்தான் அவர்க ரெண்டு பேரும் இருந்திருப்பாங்கனு நினைக்கிறீங்களா? ஐ மீன் கல்யாணத்துக்கு முன்னாடியே! அவங்களுக்குள்ள உறவு இருந்திருக்கு மெடிகள்ல விசாரிச்சதுல ஆறு வருஷமா கருத்தடை மாத்திரை வாங்குறதா சொன்னாங்க. அந்த பொண்ணையே! கல்யாணம் பண்ணி இருக்கலாம்ல. நடுவுல உங்க வாழ்க்கையையும் கெடுத்து, அந்த பொண்ணு வாழ்க்கையையும் நாசம் பண்ணி, அவ சாவுக்கும் காரணமாகிட்டாங்க” என்று அக்ஷரா தெளிவாக சொன்ன பிறகுதான் மஞ்சரிக்கு தான் செய்ய இருந்த தப்பு புரிந்தது.
 கோட்டில் மஞ்சரி தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கேட்க பாண்டி கதறி அழலானான். 
பூஞ்சோலை அறியாமல் கர்ப்பத்தடை மாத்திரைகள் கொடுத்து வந்தமைக்காகவும், அவளை தற்கொலைக்கு தூண்டிய காரணத்துக்காகவும் வைஜயந்திக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
எங்கே! தனக்கும் அதில் உடந்தை என்று சிறையில் அடைத்து விடுவார்களோ! என்று பாண்டி சட்டையை கிழித்துக்கொண்டு பைத்தியம் போல் மஞ்சரியிடம் ஓட அவனின் வக்கீல் மஞ்சரியின் மீதான அதீத காதலா விவாகரத்து வழங்கியது தாங்க முடியமால் பைத்தியமாகி விட்டதாக சொல்ல பாண்டி அரச மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டான்.
ஆறு மாதங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு அங்கு இருந்தவன் வெளியே வந்ததும் நேராக வந்தது மஞ்சரியைக் காணத்தான்.
கெஞ்சிப் பார்த்தான், காலில் விழுந்துப் பார்த்தான். ஒன்றுக்கும் மஞ்சரி அசையவில்லை.
அந்த காலத்து மனசியான பேச்சியம்மாளை மடக்கி காரியம் சாதிக்க எண்ணினான். அதில் வசமாக சிக்கிய பேச்சியம்மாள் தனது சொத்தில் பாதியை பாண்டிக்கு எழுதிக் கொடுத்து ஊரில் தங்க வைத்துக்கொண்டார்.
பூஞ்சோலையும் இறந்து விட்டதால் ஊரும் “அதான்  அவன் திருந்தி வந்திருக்கான் இல்ல. சேர்ந்து வாழலாம் இல்ல.” என்று மஞ்சரிக்கு புத்திமதி சொல்ல ஆரம்பித்திருந்தது.
எந்த காரணத்துக்கும் அவசரப்படக் கூடாதென்று முடிவோடு இருந்த மஞ்சரிக்கு எங்கே! அவள் இப்படியே! இருந்து விடுவாளோ! என்று தங்கராசுவும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.
தான் படித்த படிப்புக்கு ஊரிலுள்ள பாடசாலையில் சேர்ந்து கற்பிக்க, அதற்கும் “நாலெழுத்து படிச்ச திமிர்தான் புருஷன மதிக்காம அலையிறா, ஊரு உலகத்துல பண்ணாத தப்பையா பண்ணிபுட்டான்” என்று அவள் காதுபட பேச ஆரம்பித்திருந்தனர்.
வெறுப்பாக இருந்தது அவளுக்கு. இதே! தப்பை அவள் செய்து விட்டு வந்திருந்தால்? அவள் கணவன்தான் ஏற்றுக்கொள்வானா? ஊர் தான் இவ்வாறு பேசுமா?
அக்ஷராவை அலைபேசியில் தொடர்புக்கு கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். அவள் சொன்ன முடிவு மஞ்சரிக்கு பிடிக்கவில்லை. அதனால் பாண்டியின் உண்மையான முகம் ஊருக்கும் தங்கராசுவுக்கும், பேச்சியம்மாளுக்கும் தெரியவந்தது.
மஞ்சரியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். அதை அறிந்துக்கொண்ட பாண்டி “என்ற பொண்டாட்டிய நீ எப்படி பொண்ணு பார்க்க வரலாம்” என்று பிரச்சினை பண்ண
“அதான் விவாகரத்து ஆகிருச்சே” என்று மாப்பிள்ளை சொல்ல
“அவ எனக்குதாண்டா. இந்த ஜென்மத்துல என்ன தவிர வேற யாரையும் அவளை தொட விட மாட்டேன்” என்று மஞ்சரியை பார்க்க அவள் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.
“அவங்க என்னதான் கல்யாணம் பண்ணிப்பாங்க” என்று மீண்டும் மாப்பிள்ளை சொல்ல
“பண்ணிடுவியா? வெட்டி வகுந்துடுவேன்” என்று மாப்பிள்ளையிடம் சொன்னவன் மாப்பிள்ளையின் அப்பாவிடம் “யோவ் குடும்பத்தோடு உசுரோட இருக்கணுமானா ஒழுங்கா ஊர் போய் சேரு” என்று மிரட்ட அவர்கள் வெளியேறும் பொழுதும் பேச்சியம்மாள் சந்தோசம்தான் பட்டார்.
தங்கராசுவின் புறம் திரும்பியவன் “யோவ் மாமா உன்ற பொண்ணுக்கு மாப்பிள பாக்குறேன்னு பைத்திய காரத்தனம் பண்ணினேன்னு வை. கொன்னுடுவேன். எங்கம்மா கல்யாணமன்னைக்கே! குடும்பத்தோட சோத்துல வேஷம் வைக்கணுன்னுதான் சொன்னாங்க, நான்தான் பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டு வேலைக்காரியா வச்சிக்கலாம்னு சொன்னே” என்று உளறியவன் “மஞ்சு எனக்குதான்” என்று விட்டு வெளியேற தங்கராசுவும் பேச்சியம்மாளும் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டனர்.
பொன்னுத்தாயி தலையில் அடித்துக்கொண்டு அழ, மஞ்சரிக்கு பாண்டியின் உண்மை முகம் குடும்பத்தாருக்கு தெரிய வந்ததில் இனி தன்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்ற நிம்மதிதான் வந்தது.
தங்கராசுவும் எப்படியாவது மஞ்சரிக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கொண்டு தான் இருந்தார். அதை அறிந்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கே! சென்று மிரட்டி விட்டு வந்த பாண்டி தரகரையே! மிரட்ட ஆரம்பித்தான்.
விதியின் வசத்தால் மஞ்சரி அதிசனோடு சேர்ந்து விட்டாள். நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் மஞ்சரி.
           

Advertisement