Advertisement

அத்தியாயம் 24
நான்கு மாதங்கள் கடந்திருந்தது. அர்ஜுனும், மாலினியும் இறுதியாண்டுக்கு காலடி எடுத்து வைத்திருந்தனர். இருவரும் ஒன்றாகத்தான் பைக்கில் காலேஜ் சென்று வந்து கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் அர்ஜுனின் வண்டியில் ஏறுவதற்கே பயந்த மாலினி அவனோடு செல்லும் அந்த பயணத்தை ரசிக்கலானாள். அதை இன்ஸ்டாகிராம் தோழி கிருஷ்ணாவிடம் வேறு பகிர்ந்துகொள்ள சண்டே கூட வெளியே! செல்லலாமா? என்று வந்து நின்றான் அர்ஜுன்.
இருவருக்கிடையிலும் நல்ல தோழமையும், புரிதலும் இந்த சில மாதங்களில் ஏற்பட்டிருந்தது. ஒன்றாக சேர்ந்து படிப்பதும், யார் அதிக மார்க்ஸ் வாங்குவது என்ற போட்டியும் வேறு. போட்டியில் ஜெயிப்பவரின் விஷ்ஷை அடுத்தவர் நிறைவேற்ற வேண்டும் என்பது ஒப்பந்தம்.
மாலினி க்ரிஷ்னாக்காக எஞ்சினியரிங் சேர்ந்திருக்க,  அர்ஜுன் மாலினிக்காக எஞ்சினியரிங் சேர்ந்திருந்தான். அன்று காலேஜில் மாலினியை பாத்திராவிட்டால் இன்று மெடிசின் படித்துக்கொண்டிருப்பான். யாருக்காகவோ தேர்வு செய்திருந்தாலும் போட்டி என்று வந்தால் படித்துத்தானே! ஆகா வேண்டும்.
மொத்த மார்க்ஸையும் கூட்டி யார் முதலில் வருகிறார்கள் அவர்தான் ஜெயியிச்சதாக கணக்கில் எடுக்க வேண்டும் என்று மாலனி சொல்ல. “நோ நோ… ஒவ்வொரு சப்ஜெக்ட்டுலையும் யார் அதிக மார்க்ஸ் எடுக்குறாங்களோ! அவங்கதான் ஜெயிச்சாங்கன்னு அர்த்தம்” என்று அர்ஜுன் சொல்ல.
“அது எப்படி…? ஒரு சப்ஜெக்ட்டுல நான் அதிக மார்க்ஸ் எடுக்கலாம். இன்னொன்னுல நீ எடுக்கலாம். அப்படி பார்த்தா நாம ரெண்டு பேருமே! ஜெயிச்சவங்களாகிடுவோமே! இது போங்காட்டம்” என்று மாலினி உதடு பிதுக்க,
அவள் உதட்டை சுண்டி விட்டவனின் கண்களோ அவள் உதட்டின் மேலையே இருந்தது பெண்ணவளின் கவனத்தில் இல்லை. “நீ சரியான மக்கு மாலினி. டோடல் மார்க்ஸ் மட்டும் பார்த்தா… ஒரு விஷ்தான் பண்ண முடியும். இதுவே! எல்லா சப்ஜக்ட்டுலையும் வின் பண்ணிட்டா? எத்தனை விஷ் நீயே கணக்கு போட்டு பாரு. என்ன எரியர் வராம இருக்கணும்” என்று அவளை உசுப்பேத்தி விட்டிருக்க
தலையை தட்டி யோசித்தவளுக்கு அர்ஜுன் சொல்லும் பொழுது கண்கள் மின்னத்தான் செய்தது.
“இரு டா… உன் பாக்கெட் மணி பூராத்தையும் காலி பண்ணுறேன்” என்று விழுந்து விழுந்து படிக்கலானாள்.
“ம்ம்..” மர்மப்புன்னகையோடு அலட்டிக்கொள்ளாமல் அர்ஜுன் படிப்பதில் கவனமானான்.
ஒன்பது பாடத்தில் ஆறு பாடங்களில் அர்ஜுன் அதிக மார்க்ஸ் வாங்கி இருக்க மீதி மூன்றில்தான் மாலினி அதிக மார்க்ஸ் வாங்கி இருந்தாள். இரண்டு பாடத்தில் போட்டார் பாஸ்தான். எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சாலும் அந்த ரெண்டு பாடம் மட்டும் மண்டையில் ஏறவே! மாட்டேங்குது. ஒவ்வொரு தடவையும் எரியஸ் கியர் பண்ணவே! டைம் சரியாகுது என்று புலம்பலானாள்.
அர்ஜுன் எந்த அலப்பரையும் செய்யவில்லை. “சரி விடு மாலனி அதான் மூணு சப்ஜெக்டுல நீ பாஸ்ட் வந்துட்ட இல்ல. அதுவும் இந்த தடவ நோ எரியர். கடைசி வருஷத்த டென்ஷன் இல்லாம படிக்கலாம். சொல்லு உனக்கு என்ன வேணும்” என்று தாராள மனப்பான்மையோடு நடந்துக்கொள்ள மாலனிக்கு அவனை ரொம்பவும் பிடித்துத்தான் போனது. 
ஒரு மாதம் லீவ் இருக்கிறது அந்த ஒரு மாதம் என்ன செய்ய போகிறோம் என்று இருக்கு என்று அலுத்துக்கொண்டவளை பார்த்து “சரி உன் விஷ் என்னனு சொல்லு நிறை வேத்திடலாம்” என்றான்.
“நீ தானே! வின் பண்ண. உன் விஷ் தானே! பாஸ்ட் புல்பில் பண்ணனும்” என்று மாலனி கேக்க
“உனக்கு ஜஸ்ட் மூணே மூணு விஷ் தானே! நீ சொன்னா… உடனே! நிறை வேத்திடலாம். எனக்கு ஆறு விஷ் இருக்கே!” கையைக் கட்டிக்கொண்டு சொன்னவனின் புன்னகை மட்டும் மாறவே! இல்லை.
மாலினிக்கு அவன் புன்னகையில் இருந்த விஷமம் புரியவில்லை. “அதுவும் சரிதான்” என்றவள் முதல் விஷ்ஷாக கேட்டது தியேட்டர் சென்று படம் பார்க்க வேண்டும் என்று.
ஸ்கூல் செல்லும்வரை தந்தை எங்கும் தனியாக அனுப்பியதில்லை. என்றும். காலேஜ் சென்றால் வாழ்க்கையை நன்றாக என்ஜோய் பண்ணலாம் என்று எண்ணி இருக்க, காலேஜ் செல்ல ஆரம்பிக்கும் பொழுதே! க்ரிஷ்ணாவுடனான திருமண பேச்சு. அன்றிலிருந்து தந்தை எங்குமே! அழைத்து செல்லவில்லை என்று சொன்னவள். காலேஜ் விட்டால் வீடு. வீட்டிலிருந்து காலேஜ் இதுதான் அவளுடைய வாழ்க்கை என்றாள்.
அர்ஜுனுக்கு அவளை நினைத்து பாவமாக இருந்தது. “ஓகே” என்று சாதாரனனமாக சொன்னவன் “அடுத்தது என்ன” என்று கேக்க
“மெரினா பீச் போலாம்”
“ஓகே நெக்ஸ்ட்” என்று ஏறிட தலையை தட்டி யோசித்தவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
“முதல்ல இந்த ரெண்டு விஷ்ஷையும் நிறைவேத்தலாம். லாஸ்ட் வன்ன லாஸ்ட்டா பாத்துக்கலாம்” என்று சொல்ல அர்ஜுன் அவளை தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்து சென்றான்.
காலையில் போலாமா? மதியம் போலாமா இல்ல இரவு போலாமா? என்று கேட்டதுக்கு “என்ன லூசு மாதிரி கேக்குற? தியேட்டர்ல எப்போ படம் போட்ட என்ன? இருட்டுலதானே! பாக்க போறோம்” என்றாள் மாலினி.
சிரிப்பை அடக்கிய அர்ஜுன் “உண்மைதான். உன் கிட்ட கேட்டது என் தப்புதான் என்றவன். காலை படம் பார்க்க அழைத்து சென்றிருந்தான். இடைவேளையின் போது குடிக்க மட்டும் குளிர்பானம் வாங்கிக் கொடுத்திருக்க, கொறிக்க எதுவும் வாங்கிக் கொடுக்கவுமில்லை. அவனை முறைத்தவாறே அமர்ந்திருந்தவள் படம் ஆரம்பித்தபின் அதில் லயித்தாள்.
வெளியே வந்தவளை உணவகத்துக்கு அழைத்து சென்று அவளுக்கு பிடித்தமான உணவுளை வாங்கிக் கொடுக்க, தனக்கு கொறிக்க வாங்கிக் கொடுக்காததற்கு காரணம் புரிந்தது. அவற்றை சாப்பிட்டிருந்தால் அவளால் மத்திய உணவை நினைத்துப்பார்க்க முடிந்திருக்காது.
சந்தோஷமாகவே! உணவுண்டவள் தியேட்டரில் படம் பார்த்த அனுபவத்தையும், படத்தை பத்தியும் மட்டுமே! பேச “நான் எங்க படம் பார்த்தேன்” என்று முணுமுத்துக்கொண்ட அர்ஜுன் அவள் பேசுவதை கேட்டு மண்டையை ஆட்டிக்கொண்டிருந்தானே! தவிர பதில் சொல்லவில்லை.
அதன் பின் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்று சுற்றி விட்டு அங்கிருந்த கேம் சென்டரில் விளையாடியவர்கள். கொஞ்சம் பொருட்கள், துணி என்று வாங்கிக்கொண்டு ஐந்து மணியளவில் கடற்கரைக்கு வந்தனர்.
ஏழு மணிவரை அலையோடு விளையாடி விட்டு வீடு செல்லலாமா? என்று அர்ஜுன் கேக்க 
“என்னோட மூணாவது விஷ் இருக்கு. ஒரு லோங் டிரைவ் போலாம்” என்றாள் மாலினி.
“இன்னைக்கின்னு பார்த்து கார்ல வந்தேனே!” என்று அர்ஜுன் “இப்பொழுது என்ன செய்வது?” என்ற ரீதியில் பார்க்க
“நோ ப்ரோப்ளம் கார்லயே! போலாம்” என்று சொல்ல
“அப்போ டின்னரும் வெளியிலையே! சாப்பிடலாமா?”
“ஓகே எங்கயாச்சும் ரோட்டு கடைல சாப்பிடலாமா?”
“நாலாவது விஷ்ஷா?” என்று அர்ஜுன் புருவம் உயர்த்த
“ஆமால்ல. மூணும் கேட்டு முடிச்சிட்டேனே!” உடனே சோகமானாள் மாலினி. அவள் இப்படி வெளியே வந்து பலநாட்கள் ஆகியிருந்ததுதான் அதற்கு காரணம்.  
அர்ஜுன் “சரி வா போலாம்” என்றதும் சந்தோஷசமாகவே! பயணத்தை அனுபவித்தாள்.
வாகை அழைத்து எங்கே இறுக்கிண்றீர்கள்? வீட்டுக்கு வர எண்ணம் இல்லையா? என்று கேட்ட பின்தான் அவசர அவசரமாக உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பி இருந்தனர்.
வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்திய பின்னும் மாலினியின் சந்தோசமான மனநிலை. அப்படியேதான் இருந்தது. வாழ்க்கை இப்படியே! இருந்து விடாதா என்று எண்ணியவாறே! கதவை திறக்க போக
“ஹலோ மேடம் எங்க போறீங்க? என்னோட விஷ்ஷ  புல்பில் பண்ணாம போறீங்க?” என்று அர்ஜுன் குறும்பாக கேக்க
“ஓஹ்… சாரி.. என்ன உன் விஷ்”
“ஆறு விஷ்ல முதல் விஷ் கிஸ். குட் நைட் கிஸ் டேலியும் நீ எனக்கு கு நைட் கிஸ் கொடுத்துட்டுதான் தூங்க போகணும்”
அதிர்ச்சியானவள் “நீ சீட் பண்ணுற, இப்படியெல்லாம் விஷ் கேக்க முடியாது. அதென்ன தினமும்” குரல் உள்ளே! போக
“நான் எங்க சீட் பண்ணேன். நான் தெளிவாகத்தான் சொன்னேன். தினமும் தூங்க போக முன் குட் நைட் கிஸ் வேணும்”
“அதெல்லாம் முடியாது” மாலினி ஒரேயடியாக மறுக்க,
“பாத்தியா உன் விஷ் எல்லாம் புல்பில் ஆனதும் என்னோட விஷ்ஷ தூக்கி ஏறியிற” அர்ஜுன் சோகமாக சொல்ல
“அப்பாவியா, சோகமா இருக்குற மாதிரி சீன போடாத, சகிக்கல. கொடுத்து தொலைக்கிறேன்” என்ற மாலினி அர்ஜுனின் கன்னம் நோக்கி குனிய சட்டென்று அவன் அவள் புறம் திரும்ப இருவரின் உதடுகளும் உரசிக்கொள்ள மின்சாரம் தாக்கியதுபோல் விலகப் போனவளை தன்னோடு சேர்த்தணைத்து முத்தமிடலானான் அர்ஜுன்.
“வண்டி வந்த சத்தம் கேட்டது என்ன ரெண்டு பேரும் இன்னும் உள்ள வரல” என்றவாறு வாகை வெளியே வர
குறுக்காக கையை நீட்டி தடுத்த அனி “எங்க போறீங்க” என்று கேக்க
“அர்ஜுனோட வண்டி வந்த சத்தம் கேட்டுச்சு. இன்னும் உள்ள வரல”
“இப்போ நீங்க வெளிய போனா… உங்களுக்கு மந்திரிக்க வேண்டி இருக்கும் பரவாலையா?”
அர்ஜுனுக்கு ஒண்ணுமே! தெரியாதுன்னு சொல்லும் வாகை அதிர்ச்சியில் உறைவாள் என்பதைத்தான் அனி அவ்வாறு கூறி இருந்தாள்.
“என்ன டி உளறுற?”
“போமா.. போ… போ டேடிய கவனி” தள்ளாத குறையாக வாகையை உள்ளே அழைத்து சென்றிருந்தாள்.
“என்ன டா… இங்க வந்து உக்காந்து இருக்க? ஏதாவது பிரச்சினையா?” என்றவாறு தம்பியின் அருகில் வந்தமர்ந்தான் ஆனந்த்.
சின்ன வயதிலிருந்தே! தந்தை அடித்தால், அன்னை திட்டினால், அல்லது ஆனந்தத்தோடு கோபித்துக்கொண்டால் சந்தோஷ் தனியாக தோட்டத்தில் உள்ள கல் பெஞ்சில் அமர்ந்து விடுவான். அவனை சமாதானம் செய்வது வீட்டாருக்கு போதும் போதும் என்றாகி விடும்.
ஸ்கூல் செல்லும்வரை இந்த பழக்கம் சதோஷுக்கு இருந்தது. காலேஜ் சென்ற பிறகு முற்றாக மாறி விட்டான்.
ரொம்ப நாளைக்கு பிறகு இன்று அதே! இடத்தில் அமர்ந்திருப்பவனைக் காண ஆனந்துக்கு மனம் பொறுக்கவில்லை. வீட்டுக்குள் கூட நுழையாமல் தம்பியின் அருகில் அமர்ந்து விட்டான்.
“பிரச்சினைதான் பெரிய பிரச்சினை. எங்க நீ இப்படியே! இருந்திடுவியோன்னு வீட்டுல அம்மா கண்ண கசக்குறாங்க, அப்பா புலம்புறாரு. அதனால என்னால விழி கூட சந்தோசமாக இருக்க முடியல” பட்டென்று சொன்னவன் அண்ணனின் முகத்தை விடாது பாத்திருந்தான்.
கண்களை கூர்மையாக்கி தம்பியை பார்த்தவன் “இப்போ என்ன என்ன பண்ண சொல்லுற?”
“நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கிறதா? உத்தேசம்” அண்ணனின் கேள்விக்கு கேள்வியையே! பதிலாக கேட்டு வீட்டிலுள்ள பிரச்சினைக்கு இதுதான் தீர்வு எனும் விதமாக பேசினான் சந்தோஷ்.
“நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க பிரச்சினை தீர்ந்திடும். எனக்கு பிரச்சினை ஆரம்பமாகுமே!” என்ற ஆனந்த் புன்னகைக்க
“பெரிய மாமாக்கு இப்படியெல்லாம் பேச வருமா” என்று விழிக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்த நான்கு மாதங்களில் விழி சந்தோஷை பற்றியும் அவனது குடும்பத்தாரை பற்றியும் நன்றாக புரிந்துக்கொண்டிருந்தாள். 
வாணிக்கு பெண் குழந்தை இல்லாததால் விழியை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டாள். மாணிக்கவேல் “அவள் படிக்கிற பொண்ணு வீணாக அவளுக்கு வேலை சொல்லி கொடுக்கிறேன் என்று வீட்டு வேலை வாங்காதே!” என்று மனைவியிடம் கூறி இருக்க,
“ஓஹ்.. ஒஹ்.. உங்க தங்கச்சி பொண்ணுகிட்ட எங்கம்மா எந்த வேலையும் வாங்கக் கூடாதுனு இப்படியொரு கதையா?” என்று சந்தோஷ் சிரிக்க,  
“எனக்கு எந்த வேலையும் செஞ்சி பழக்கமும் இல்ல அத்த” என்றவாறு உணவு மேசையில் விழி அமர, ஆனந்த் அந்த பேச்சுக்களில் கலந்துக்கொள்ளாமல் சாப்பிட்டவன் காரியாலயத்துக்கு கிளம்பி இருந்தான்.
வாணி பெரிய மகனை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்ள, “அவனை பத்திதான் தெரியுமே! விடு வாணி” என்று மாணிக்கவேல் சமாதானப்படுத்த சந்தோஷ் அன்னையிடம் செல்லம் கொஞ்சி விட்டு விழியோடு காலேஜுக்கு கிளம்பி இருந்தான்.
“எக்ஸாம் வருது மேடம் படிக்கீறீங்களா? இல்ல  காலேஜ் போனா போதும்னு சும்மா போயிட்டு மட்டும் வாரீங்களா?”
அந்த பணக்கார்கள் மட்டும் படிக்கும் காலேஜில் படிப்பதே! பெருமை என்று நினைத்துக்கொண்டிருக்கும் மனநிலையில் இருக்கும் பல மாணவர்களை சந்தோஷ் சந்தித்திருக்கின்றான். அதனால்தான் விழியிடம் அவ்வாறான ஒரு கேள்வியியை கேட்டிருந்தான்.
“இத்தனனாலும் அர்ஜுனுக்காக படிச்சேன்” என்று உண்மையை சொன்னவள் “இனிமேல் எனக்காக படிப்பேன்” என்றாள். அவளும்தான் காண்கின்றாள் மாலினியும், அர்ஜுனும் படிப்பதில் எவ்வளவு மும்முரமாக இருப்பதை. அர்ஜுன் அவளை பைக்கில் மட்டும் ஏற்றிச் செல்லவில்லை. படிக்க வேண்டும் என்று தனியாகத்தான் படிப்பான். தனியாக படித்தால்தான் அவனுக்கு படித்தது போல் இருக்கும் என்பான். எல்லாம் கூட இருப்பவரை பொறுத்து என்று விழி புரிந்துக்கொண்டாள்.
சந்தோஷ் படிக்கும் அவளை தொந்தரவு செய்யமால், படிப்பதற்கு தன்னாலான உதவிகளை செய்யலானான். காலேஜ் விட்டு செல்லும் பொழுது மழை வந்தால் என்றுமே! அர்ஜுன் அவளுக்காக நின்றதில்லை. சந்தோஷ் குடையோடு வந்து நின்றான். சின்ன சின்ன விஷயங்களை கூட கவனித்து அவளுக்காக செய்யலானான். விழியும் சந்தோஷின் உதவியால் நன்றாக படித்து நல்ல பெறுபேர்களைத்தான் பெற்றிருந்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக விழியின் மனம் சந்தோஷின் புறம் சாய்ந்துகொண்டிருக்க, ஒருநாள் இடைவேளையின் போது அவனை சந்திக்கலாமே! ஒன்றாக உணவு உண்ணலாமே! என்ற எண்ணம் தோன்றியது. அவனோ! விரிவுரையாளர் என்ன காரணம் சொல்லி அவனை சந்திப்பது. இவள் அழைத்தால் வருவானா? பலவாறு சிந்தித்தவள் ஒரு புத்தகத்தை தூக்கிக்கொண்டு சந்தேகம் கேப்பது போல் அவன் முன்னால் போய் நின்றாள் அவளுக்கு முன்னால் மெடிக்கல் மற்றும் ஆட்ஸ் பெண்கள் அவனை சூழ்ந்துக்கொண்டு சந்தேகம் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
“இவன் எஞ்சினியரிங் ஸ்டுடண்ட்ஸ்க்குத்தானே ப்ரோபோசர். இவளுங்க இங்க என்ன பண்ணுறாங்க?” கடுப்பாகி எட்டிப்பார்த்தால்
சந்தேகம் கேக்கும் சாக்கில் அவனை சைட் அடித்து கொண்டு இருக்க அவனோ! கண்ணும் கருத்துமாக அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டிருந்தான்.
“யார் புருஷன யார் சைட் அடிக்கிறது?” கையிலிருந்த புத்தகத்தால் அவர்களை சாத்தியவள் கத்த
“ஏய் விழி என்ன பண்ணுற?” என்று சந்தோஷ் அவளை தடுக்க,
“இது என் புருஷன்” என்று அவனை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமும் வைத்தவள் “எனக்கு மட்டும்தான் சொந்தம் ஓடுங்க டி…” என்று கத்த சந்தோஷ் சுவாரஷ்யமான அவளை பாத்திருக்க,
“என்ன கல்யாணமாகிருச்சா.. அதுவும் ஸ்டூடன்ட் கூடயா?”  முணுமுணுத்தவாறு அவர்கள் நகர்ந்திருக்க, விழி விலகி விடாதவாறு இடையோடு சேர்த்தணைத்தவன் விழியின் கன்னத்தில் முத்தம் வைக்க “என்ன பண்ணுறீங்க” விழியின் உதடுகள் தந்தியடிக்க ஆரம்பித்தன.
“இப்போதான் என்ன உன் புருஷனா கண்ணுக்கு தெரியுதா? பொறா…….ம? இது தெரியாம உன் மனசுல எப்படி இடம் பிடிக்கிறதுனு யோசிச்சிகிட்டு இருந்தேன்” என்று சொல்ல
அப்பொழுதுதான் விழிக்கே! தான் செய்த காரியம் புத்தியில் உரைத்தது.
மணியடிக்கவே! மனமே! இல்லாமல் அவளை விட்டவன் “கிளாசுக்கு போ நேரமாச்சு” என்று சொல்ல விழியும் அவனை திரும்பித் திரும்பி பார்த்தவாறுதான் சென்றாள்.
விழியும் சந்தோஷத்தான் தனக்கானவன் என்று உணர்ந்துக்கொண்டாள். ஆனால் அதை அவனிடம் சொல்லத்தான் எதோ ஒன்று தடுத்துக்கொண்டிருந்தது என்பதை அந்த நொடியில் புரிந்துக்கொண்டாள்.
அதன்பின் வந்த நாட்கள் அவர்களின் நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்திதான் இருந்தது. செல்ல தீண்டல்களும், சின்ன முத்தங்களும் என்று சந்தோஷ் அளவோடுதான் விழியை நெருங்கி இருந்தான்.
“ஒருவேளை எக்ஸாம் இருக்குறதால விலகி இருக்கானா!” என்று எண்ணியவள் எக்ஸாம் முடிந்தும் எந்த முன்னேற்றம் காணாத அவர்களின் உறவை பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க, சந்தோஷ் வந்தால் பேசிக்கொள்ளலாம் என்று இருக்க, வெளியே சென்றவன் வந்தபாடில்லை.
வண்டி வந்த சந்தம் கேட்டு கணவன்தான் வந்து விட்டதாக எண்ணி அவனை தேடி வந்தவளின் காதில் ஆனந்தின் இந்த பேச்சு விழுந்திருக்க அங்கேயே! நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கலானாள்.
“சத்தியமா நீ யாரையாச்சும் லவ் பண்ணுறியான்னு கேக்க மாட்டேன்” என்று சந்தோஷ் சொல்ல
“ஏன் டா… நான் எல்லாம் லவ் பண்ண கூடாதா?”
“என்னது பெரியமாமா யாரையோ! லவ் பண்ணுறாங்களா?” விழி விழி விரிக்க, 
சத்தமாக சிரித்த சந்தோஷ் “என் மனசுல விழிய பத்தின எண்ணங்கள் வரும் போதே உன் கிட்டாதான் முதல்ல சொன்னேன். அப்போ கூட நீ எனக்கும் அத்த பொண்ணுதான். ஆனா எனக்கு அந்த மாதிரியான எந்த எண்ணமும் இல்ல. நடக்காத விசயத்துக்கு வீணா ஆசைப்படாதான்னு சொன்ன. எனோ! எனக்கு அவளை பார்க்கணும்னு தோணினா போய் பார்த்துட்டு வருவேன். அதற்கும் திட்டுவ. நீ பார்குறதே! அவளுக்கு தெரியல. எதுக்கு போறான்னு. அத்த பொண்ணுன்னு போய் பார்த்தேன். அப்பொறம் பிடிச்ச பொண்ணுன்னு போய் பார்த்தேன். ஒரு வயசுக்கு மேல விரும்புற பொண்ணுன்னு போய் பார்த்தேன். கடவுளே! என் மேல இரக்கப்பட்டு விழிய என் கிட்ட கொடுத்துட்டாரு போல”
விழியின் கண்களில் நீர் நிறைந்திருக்க, “இப்போ நீ என்ன சொல்ல வர” ஆனந்த் குறுக்கிட
“என்னதான் நாம அண்ணன் தம்பியா இருந்தாலும் ரெண்டு பேரும் எதையும் மறைச்சதில்ல. நீ யாரையாச்சும் லவ் பண்ணி இருந்தா சொல்லி இருப்பான்னு சொல்ல வரேன்” என்றான் சந்தோஷ்.
“கரெக்ட் தான். அப்படி யாரும் இல்ல”
“அப்போ அம்மாவ பொண்ணு பார்க்க சொல்லலாமா?”
“என்ன அவசரம். இன்னும் ஒரு வருஷம் போகட்டும்”
“ஒரு வருஷம் போனா என் பையன், இல்லனா பொண்ணோட போய் தான் பொண்ணு பார்க்க வேண்டி இருக்கும் பரவால்லையா?”   
“அப்படி இல்லடா.. நான் ஒரு கம்பனி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அது கொஞ்சமாச்சும் வளர ஒரு வருஷம் தேவைப்படும் இல்லையா அதான்”
“அதான் மேட்டரா… அதுனால என்ன? பொண்ணு பார்க்கலாம். கம்பனியும் ஆரம்பிக்கலாம். அண்ணி வந்த நேரம் எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்”
“சரி டா…” என்றவாறு ஆனந்த் உள்ளே செல்ல விழி ஓடி வந்து சந்தோஷை கட்டியணைத்திருந்தாள்.
“நிஜமாகவே! என்ன பார்க்க வந்தீங்களா? என்ன எபோல இருந்து லவ் பண்ணுறீங்க? ஏன் சொல்ல?” என்று விழி கண்ணீரோடு கேள்விகளை அடுக்க,
புன்னகைத்தவன் “அது… நீ பொறந்தப்போ உன்ன பார்த்தேனே அப்போல இருந்துன்னு நினைக்கிறேன்” என்றான் சந்தோஷ்.
விழியின் மனதோ சந்தோஷத்தால் நிரம்பி வழிய ஆரம்பித்தது.  

Advertisement