Advertisement

ஜாலியா ஒரு எபிலாக்

ஆறேழு வருடங்களுக்கு பிறகு …

ரங்கப்பாவும் தாமோதரும் நூற்றியெட்டு திவ்ய தேச யாத்திரை சென்றிருந்தனர். மதிம்மா இரு வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்திருந்தார்.

ஆரவ்-விற்கு அவனது தாய் தந்தை குறித்து தெரிய வந்திருந்தது, அவன் அதை இலகுவாக எடுத்துக் கொண்டான். அவன் மட்டுமல்ல, விதுவுமே. பிள்ளைகளை பொறுத்தமட்டில் அவர்கள் நண்பர்கள் பிறகுதான் சகோதரர்கள். (முதலிலேயே அப்படித்தானே அறிமுகம்). இத்தனை வருடங்களில் இன்னமும் ஒன்றியிருந்தனர்.

சசி.. மொட்டை மாடியில் இருந்த சோலார் பேனலில், போன வார விடுமுறையில் ஆரவ் + விது விட்ட பட்டம் படர்ந்திருக்க, அதை அகற்ற நானூறாவது முறையாக நறுமுகை சொல்லி ஓய்ந்திருக்க…, மாலையில் பெரிதாக எதுவும் வேலையில்லாமல் இருக்க.., சரி மாறுதலுக்கு மனைவி சொன்னதை செய்துதான் முடிப்போமோ என்று மாடிக்கு வந்திருந்தான், கூடவே அவனுக்கு பிடித்த மாடி தோட்டத்தையும் மேற்பார்வையிட.

சோலார் பேனலின் குப்பையை அகற்றி, தோட்ட செடிகளின் களைகளை நீக்கும் போது விது வந்தான். உடன் ஒரு பெண்ணும். விது சசியப் போலவே நல்ல வளர்த்தி, அந்த பெண்ணும் வளர்த்தியாக இருந்தாள். நல்ல வசதி என்று அவளது உடல் வாளிப்பு சொல்லியது. இருவரும் பள்ளி சீருடையில்.

“ப்பா”

“சொல்லு விது?”, புதியவளைப் பார்த்து, “ஹாய் வாம்மா”, என்று விட்டு விதுவிடம் ‘யார்டா இது?’ என்று கண்ணால் கேட்டான்.

“இது வசுப்பா, நம்ம ஸ்கூல்ல தான் படிக்கறா”

“ஓஹ். சரி அம்மாவை பாக்க வந்தீங்களா? இல்ல கம்பைன்ட் ஸ்டடியா?”

“ப்பா வசு டென்த்”

“ஓ! ஓகே அதுக்கு நா என்னடா பண்ணனும் ஏதாவது பிராக்டிகல்ஸ்  அட்ஜஸ்ட் பண்ணனுமா? அதெல்லாம் உங்கம்மா பண்ண மாட்டாங்களேடா?”

“அதெல்லாம் இல்ல டாட், நானும் வசுவும் சம்மர் ஹாலிடேஸ்-க்கு பெங்களூரு போலாம்னு இருக்கோம்”

மகன் விளையாடுகிறானா? என்று அவனை ஏறிட்டு பார்த்து, “ரெண்டு பேரும்..?”, அழுத்திக் கேட்டான்.

“ம்ம். ரெண்டு பேர் மட்டும்…”, மிக அழுத்தமாக விது.

சசியின் வயிற்றில் சின்னதாய் ஒரு பிசையல். “…?”, ஏன் என்பது போல கேள்வியாய் மகனை நோக்க…

“அங்க நம்ம பிளாட் இருக்கில்லப்பா? அங்க தங்கலாம்னு இருக்கோம், வி ஆர் பிளானிங் டு ஸ்டே டுகெதர்”

சசியின் கையில் இருந்த பூவாளி, கீழே கிடந்த சம்மட்டியின் மீது பொத். ,”வாட்?!!!!”.

“எஸ் டாட். நாங்க ரெண்டு பேரும் ஸ்டேட் லெவல் ஸ்விம்மர்ஸ், அங்க போயி ப்ராக்டீஸ் பண்ணி நேஷனல் லெவல் தென் ஒலிம்பிக்ஸ் போனும்னு ஐடியா இருக்கு”

சசிக்கு அப்பாடா என்று இருந்தது, ஆனாலும் இன்னும் அவனது லப் டப் வேகமாகத்தான் இருந்தது. “அதுக்கெல்லாம் ஹாஸ்டல் இருக்குடா, இப்போதான நீ நைன்த். டென்த் முடி, அப்பறம் போலாம்”.

“நோ டாட், வசு போறதா பிளான் பண்ணிட்டா, அவங்கப்பாவும் ஓகே சொல்லிட்டார். எனக்கு நீங்க ஸ்கூல் அரேன்ஜ் பண்ணுங்க, நானும் இவளோட ஜாயின் பண்ணிக்கறேன், வசு சிஸ்டர் நிரு என்னோட க்ளாஸ் மேட், அவ டென்த் முடிச்சிட்டு எங்களோட வந்துடுவா, அவ ஏற்கனவே IT கம்பெனீஸ்-க்கு பிரீலான்ஸ் கோடிங் பண்ணிட்டு இருக்கா, சோ எங்க ஃபர்தர் ஸ்டடிஸ் அங்கதான்”

“எஸ் டாட், நானும் அங்கதான் லா படிக்க போறேன்”, சொன்னது ஆரவ். இவர்கள் மூவரும் பேசும்போதே வந்திருந்தான்.

சின்னவன் தந்த அதிர்ச்சி போதாது என்று பெரியவன் அவன் பங்குக்கு குண்டு போட.., “லா வா? ஏன்டா?” அதிர்ச்சியாக கேட்டான்.

“நா பொலிடீஷியன் ஆகப்போறேன்பா”.

“வாட்?!!!!!”

“எஸ் டாட்,  எங்கள மாதிரி யூத் அரசியலுக்கு வர்றதுதான் சரி. எங்களுக்கு ஒரு குரூப் இருக்கு. லா நான், சின்ஹு பொலிட்டிகல் சயின்ஸ், இலக்கியா எக்கனாமிஸ், விதார்த் மேனேஜ்மேண்ட் எடுத்து படிக்க போறோம். எங்க எதை மாத்தணும்-னு டோட்டலா ஸ்டடி பண்ணிட்டு, டீப்பா இறங்கப்போறோம். அடுத்த பதினைஞ்சு வருஷத்துல நாங்க நேஷனல் லீடர்-ஸா இருப்போம்”, சொன்ன ஆரவ் கண்கள் தீவிரத்தை உணர்த்த…

ஐயோ இவனுங்க எனக்கு மேல இருக்காங்களே? திட்டமெல்லாம் தெளிவா இருக்கே? “கட்சி ஏதாவது ஆரம்பிச்சிட்டீங்களா?”, சசி.

“ப்பா, அதெல்லாம் பழைய டெக்னிக், ஏதாவது நேஷனல் பார்ட்டி -ன்னு யோசிச்சு வச்சிருந்தோம், இப்போ நிரு அப்பா கிட்ட பேசினதுல எந்த பார்ட்டில சேரணும்னு முடிவு பண்ணிட்டோம்”

“ஹா? யாரடா அவரு?”

“********* யோட ஜெனரல் செகரட்டரி, டாட்.., பாலிடிக்ஸ்-ல இருக்கணும்னா  முதல்ல நமக்கு நாலெட்ஜ் வேணும், அடுத்து பவர். அறிவு வளத்துக்க படிப்போம், கூடவே ரெண்டு  நேஷனல் பார்ட்டியையும் அப்ஸர்வேஷன் பண்ணுவோம், எங்க எங்களுக்கு சாதகமா இருக்கோ அங்க போவோம்”

“இந்த பாலிசி கொள்கை?”

“டாட், எந்த காலத்துல இருக்கீங்க? எந்த கட்சிக்கும் கொள்கைல்லாம் ஒன்னும் கிடையாது டாட், ஜஸ்ட் பவருக்கு வரணும் அதான் எல்லா கட்சியோட பேசிக் கொள்கை, ஓகே?”

“சரி எப்படி சம்பாதிப்பீங்க ?”, அம்மா நறுமுகை. இத்தனை நேரமாக கணவனைக் காணாமல் தேடி மேலே வந்தவள், யூத் பாலிடிக்ஸ் என்று ஆரவ் பேசுவதை கேட்டபடி வந்திருந்தாள்.

“ஆங்… அதையும் யோசிச்சு வச்சிருக்கோம், நிரு வில் எர்ன் பார் மீ”

“….”, சசி முழிக்க… “நிருவா?”, யாரது என்பது போல நறுமுகை மகனைக் கேட்டாள்

“யா மாம், எங்களுக்குள்ள ஒரு அக்ரீமெண்ட், நான் எர்ன் பண்ற வரைக்கும் அவ குடுக்கறதெல்லாம் நான் 3 பங்கா திருப்பி கொடுக்கனும்னு”

“ஏன் நாங்க குடுக்க மாட்டாம?”, சசி.

“நோ, நீங்க குடுத்துட்டு சொல்லி காமிப்பீங்க &  எங்களுக்கும் திருப்பி தரணும்னு அர்ஜ் இருக்காது. அதனால கடன் தான் கரெக்ட்”

“….”, பெற்றவர்கள் திருத்திருத்தனர்.

“ஏய் அதையும் சொல்லிடு..”, விது அண்ணனை தூண்ட…, இன்னும் என்ன என்பது போல சசி & இவா பிள்ளைகளை பார்த்தனர்.

கீற்றாக வெட்கம் ஆரவ் முகத்தில். “டாட்..,  ஐயம் இன் லவ் வித் நிரு”

“ங்கே…..!”,  சசி முழித்தான், நறுமுகை திகைத்தாள்.

“சோ ஆம் ஐ டாட், நான் வசு வை மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். of course, எங்க கேரியர்ல சாதிச்சதுக்கப்பறம்தான்… “, இது விது.

“ஆ……………. !”, நறுமுகை ஜெர்க்காகி இரண்டு கைகளாலும் திறந்திருந்த வாயை மூடினாள்.

சில நொடிகள் டிக் டிக் டிக் மட்டும் கேட்டது, உன்னிப்பாய் கேட்டபோது, அது கடிகார டிக் டிக் டிக் அல்ல, இவா & சசியின் இதயத்துடிப்பு. ஊரே கேட்கும் அளவுக்கு பட பட வென அடித்தது.

முதலில் தெளிந்த சசி.. “ஹே…!”, ஒரு நாள்ல எத்தனை ஷாக்?.. “அடேய்.. உங்களுக்கு பதினாலு பதினஞ்சு வயசுதாண்டா ஆகுது..”

“சோ வாட் டாட்? இதுதான் டேட்டிங் பண்ண சரியான வயசு.. இல்லையா?”, சொன்னது விது சசியின் செராக்ஸ்-சாக.

நறுமுகை விதுவின் பேச்சில் முகம் கடுத்து அவனைப் பார்த்து, “டேய்.. என்னடா பேச்சு இது? டேட்டிங் அது இதுன்னு?, முதல்ல உங்க கோல் (goal) அச்சீவ் பண்ணுங்க, அப்பறம் டேட்டிங்.. லவ்..  மேரேஜ் ல்லாம் பாக்கலாம், அதுக்குள்ள வேற ரூட் மாறுச்சு பின்னிடுவேன் பின்னி”, அரட்டி..

ஆரவ்-வை பார்த்து, “நீ என்னடா? லா- ங்கிற? பாலிடிக்ஸ்-ங்கிற? … ஹ்ம்ம். முதல்ல +2 வ ஒழுங்கா முடி, லா படிக்கணும்னா இங்கயே படிக்கலாம் இல்லனா சென்னைல படிக்கலாம், இதென்ன வெஸ்டர்ன் கன்ட்ரியா? பொண்ணுங்க பசங்க சேர்ந்து இருக்கறதுக்கு? ஒழுங்கா இல்ல… தோல உரிச்சிடுவேன்” , முடித்து அடுத்து அந்த பெண்ணை நோக்கி திரும்பினால் இவா..

“நீ ? ஓஹோ நீதான் வசுவா? நீச்சலுக்கு நெக்ஸ்ட் எங்க கோச்சிங் போனும்னு சொல்லு, ஸ்கூல் ஸ்பான்சர் பண்ணும், ஹாஸ்டல் செலவும் ஸ்கூலோடது. புரியுதா? எக்ஸாம்ஸ் மட்டும் எழுதினா போதும். அவங்களுக்கு சொன்னதுதான் உனக்கும்.  இனி எங்கயாவது உங்கள சேர்ந்தா மாதிரி பாத்தேன், TC -ல கான்டாக்ட் (conduct) சரியில்லன்னு போட்டு குடுத்துடுவேன். உங்கப்பா இல்ல யார் வந்தாலும் மாத்த மாட்டேன். மைண்ட் இட்”, என்று அந்த பெண்ணுக்கும் மண்டகப்பொடி நடந்தது.

“யெஸ் மேம்”, பூனை போல பதுங்கினாள் வசு.

ஆரவ்-வைப் பார்த்து, “நீ என்னடா நிரு கிரு ன்னுட்டு? அடி பிச்சிடுவேன். ஒழுங்கு மரியாதையா ஸ்டடிஸ் முடி, முளைச்சு மூணு இலை விடல, டேட்டிங் லவ்ன்னு.., அப்பா கிட்டயே பேசிட்டு..? ப்போடா”, விரட்டி விட்டாள்.

பிள்ளைகள் மூவரும் சடுதியில் காணாமல் போயினர்.

அவர்கள் போன திசையை பார்த்திருந்த சசி, “ஓஹ் மை காட்!!, இவங்க என்ன இவா இப்பவே இப்படி இருக்காங்க?”

“உன் பசங்க வேற எப்படி இருப்பாங்க?”, கணவனை பகடி செய்ய..

“ஆமா இந்த மேடம்தான் ஒழுங்கை குத்தகைக்கு எடுத்திருக்காங்க?”, சசியும் அவள் புறமாக சாய்ந்து கிண்டல் செய்தான்.

“ஏய்.. அத பத்தில்லாம் பேசக்கூடாது”, பாத்திரம் காண்பித்தாள்.

“ஓகே விடு..”, என்று விட்டு, சீரியஸாக, “சரி இவா, இப்ப திட்டி விரட்டி விட்டோமே, இவங்க நாம சொல்றத கேப்பாங்கங்கிற?”

“அவ்ளோ fool-ஆ நீ? நாம எப்பவாவது பெரியவங்க சொன்னத கேட்டோமா? அதெல்லாம் சொல்றத சொல்லிட்டே இருக்கனும், அவங்க பண்றத பண்ணிட்டேதான் இருப்பாங்க. நம்ம கடமை… சொல்வோம், அவங்க உரிமை செய்வாங்க. நீயும் நானும் அப்ப சொசைட்டி ஒத்துக்காததை, பண்ணலையா?.  தப்பு பண்னோம்தான், ஆனா நாம தப்பானவங்க கிடையாது, இவங்களும் தப்பு பண்ணலாம், ஆனா தப்பானவங்களா வர மாட்டாங்க”

“ஆஸ் யூ சே மை லவ். நம்புவோம், நம்ம சந்ததியை நம்புவோம், வருங்காலத்தை நம்புவோம்”..

தோளில் கைபோட்டு ஈஷிய கணவனை தள்ளி நிறுத்தி.. “கொஞ்சம் தள்ளி நின்னு நம்புவோம்…”, என்று சிரித்தாள் நறுமுகை / நகைமுகை வல்லி / சசியின் இவா.

************************

அப்பாடி.. ஒருவழியா கதையை முடிச்சிட்டேன்.

ஆதரவுக்கு நன்றி தோழமைகளே… விடை பெறுகிறேன்.

வணக்கம்.

 

 

Advertisement