Advertisement

Ninai Saranadaithen kanamma Precap 5

இத்தனை வருடங்களில் இப்படி ஒரு நாள் வரும் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லையே. கிடைக்காது என்று எண்ணி இருந்த தன் அன்னையின் பாசம் கிடைக்க அவனுக்கு அந்த நேரத்தை விட மனதே இல்லை….
தன்னையே கட்டுப்படுத்த முடியாத நிலையில் உணர்ச்சி வசப்பட்டு போனவன் தன்னையும் அறியாமல் “அம்மா ” என்று அழைத்து விட்டான்.
அம்மா என்ற வார்த்தையில் பாசம் தவிப்பு வலி கவலை என பிரித்தெடுக்க முடியாத குரலில் நங்கையே ஒரு நிமிடம் ஆடிப் போனார்.
அவருக்கு தன் மகனின் நினைப்பு வந்தவுடனே ,அவன் எப்படி இருப்பான்.? எங்கு இருக்கிறான்.? என்ன பெயர் வைத்து இருப்பார்.?என்னை பற்றி தெரிந்து இருக்குமா.? இப்போது என்ன செய்து கொண்டு இருப்பான்.? என்று அவரது மகனின் நினைவில் உழன்று கொண்டு இருந்தவரை ,” அம்மா ” என்ற‌ அழைப்பு சுயநினைவை மீட்டு தந்தது.
“தம்பி ” என்ற வித்தியாசமான குரலில் அழைக்கவும் இத்தனை நொடி நேரம் தன் அன்னையின் கலவையான முகத்தையையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு “தன் அன்னை தன்னை மறந்திருக்க வில்லை ” என்று உறுதியாகவும் அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு..
“அம்மா காப்பி எனக்கா” என்று ஏக்கத்துடன் கேட்க
“ஹான் இந்தா பா ” என்று அவனிடம் கொடுத்தவர் ஏதோ மாயையில் ‌சிக்கிக்கொண்டது போல் காபியை கொடுத்து விட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார்.
நேராக அறைக்கு வந்த நங்கை , பீரோவை திறந்து தன் மகனுக்காக ஆசை ஆசையாக இத்தனை வருடங்களாக வாங்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து பார்க்க தொடங்கினார்.
கண்கள் கலங்க அதில் இருந்த ஒரு பெட்டியை எடுத்த நங்கை ,அதை திறந்து அதில் இருந்த பொருளை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்தம் கொடுத்தவாறே , ” எனக்கும் உனக்கும் இருக்கிற பந்ததுக்குக்கு சாட்சியே இது தான். இது இருக்கிறனால மட்டும் தான் நான் இன்னும் என்னோட உயிர கையில பிடிச்சி இருக்கேன். நீ என்னோட பையன்னு சொல்ற பந்தம் இது தான் ” என்றவரின் விழியில் நீர் அருவியாய் வழிந்தது.

******

“ஹே இப்போ எதுக்கு டி வண்டிய நிப்பாட்டுற..??” என்று பூங்குழலி பதறி போய் கேட்க
“ஹான் வண்டி பஞ்சர் ஆயிடுச்சி டி அதான் வண்டிய இப்படி ஓரமா நிப்பாட்டிட்டு இருக்கேன் ” என்று கூலாக பதில் கூறியவள் தன் பையில் இருந்த ஒரு கவரை கையில் எடுத்தாள்.
“என்னது டி இது ” என்று கேள்வியாய் நோக்க
“பச் கொஞ்சம் வாய மூடிகிட்டு இரு டி .எனக்கு வேற நேரம் இல்ல ” என்று சளித்துக் கொண்டாள்.
” என்னம்மோ பண்ணுற ஆனா என்ன பண்ணுறன்னு தான் தெரியல ” என்று பூங்குழலி அமைதியாக வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
***********
***********
இங்கே சதாசிவமும் வசிகரனும் வேலை விடயமாக வெளியூர் சென்று கொண்டிருக்க , அப்போது வசியின் மொபைல் சிணுங்க ,வண்டியை ஓரமாக நிப்பாட்டியவன் மொபைலை எடுத்து பார்க்க அதில் ஆதினி என்ற பெயர் திரையில் மின்னியது.
“யாரு பா மொபைல்ல ” என்று தன்மையாக கேட்க
“சார் மேடம் தான் கூப்பிடுறாங்க ” என்றவனின் மனமோ அவுங்களுக்கு என்னவோ ஏதோ என்று பயமாக இருந்தது.
“சரி தம்பி பாப்பாக்கு கூப்பிட்டு என்னென்னு கேளு பா “
“சரிங்க சார் ” என்றவன் அழைப்பேசியில் அவளது எண்ணிற்கு அழைக்க அதுவோ ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

Advertisement