Thursday, April 25, 2024

    Mullai Vendan

    அத்தியாயம் - 15   “ஏன்க்கா இப்படி ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கிறே??” கேட்டது குமுதா.   “அது ஆடு இல்லைடி வடை திருடுன காக்கா மாதிரின்னு சொல்லு” என்று தங்கையை திருத்தினாள் அமுதா.   முல்லையோ இன்னமும் ஏதோ யோசனையில் இருக்க அவளை பிடித்து அமுதாவும் குமுதாவும் உலுக்கினர்.   அவளோ ‘ச்சே எப்போ பார்த்தாலும் நான் சாப்பிடும் போதே இவர்கிட்ட மாட்டிக்கிறேன். என்னை...
    அத்தியாயம் - 14   நாளையோடு அவள் கடைசி பரீட்சை முடியப் போகிறது. இத்தனை நாட்கள் கல்லூரிக்கு சென்று வந்ததில் அவள் எண்ணங்கள் அவ்வப்போது தடைப்பெற்றிருந்தது.   இதோ படிப்பும் முடிந்துவிட்டது. அதன் பின் என்ன நடக்கும் என்று கொஞ்சம் கலக்கமாக கூட இருந்தது அவளுக்கு.   வீட்டிற்கு வந்தவர்களும் அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பிவிட்டனர். ஏமாற்றமாய் போனது முல்லைக்கு, அவனை பற்றி...
    அத்தியாயம் - 13   முல்லைக்கு இப்போதெல்லாம் வேந்தனின் நினைவு தான். ஏனென்று புரியாவிட்டாலும் அவன் தன் கணவன் என்று மனதில் எங்கோ அழுத்தமாய் பதிந்தது.   அவளிடம் கடைசியாய் பேசிச்சென்ற பின் அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அவன் ஊருக்கு சென்று ஒரு மாதமும் ஓடிப்போயிருந்தது அப்போது.   முல்லைக்கோ ஒரே குழப்பம் ‘நிஜமாவே ஊருக்கு போயிட்டாரா?? இல்லை என்னை சும்மா...
    அத்தியாயம் - 12   ரயிலில் ஏறியதில் இருந்து வேந்தனுக்கு ஒரே யோசனை. ரயிலுக்கும் நமக்கும் ஏதோ பெரிய பந்தம் இருக்கிறது போலும்.   இவளை நான் வெளியில் சந்தித்த நேரத்தை விட ரயிலில் இவளுடன் இருக்கும் நேரம் தான் அதிகமாக இருக்கிறது.   ராஜமும் அபியும் இருப்பதால் அவன் பார்வையை கையில் இருந்த மொபலை பார்ப்பதில் செலவழித்தான்.   கொஞ்சம் போரடிப்பது போல் தோன்ற...
    அத்தியாயம் - 11   தினமும் அவன் அங்கு நின்றது தான் மிச்சம் முல்லை வந்தபாடாயில்லை. ஆயிற்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகப்போகிறது. அவளை பார்க்கவே முடியவில்லை.   ஒரு வேளை இந்த பக்கமாக வரமாட்டாளோ என்ற எண்ணம் தோன்ற அருகே இருக்கும் கல்லூரி எதுவாயிருக்கும் என்ற யோசனை அவனுக்கு.   மறுநாள் அந்த பெரிய பேருந்து பணிமனைக்கு சென்றான். அவன் எண்ணம்...
    அத்தியாயம் - 10   டெல்லியில் யாழ்வேந்தனின் அறையில்   ஆயிற்று அவன் இங்கு வந்து தன்னைப்போல இரண்டு மாதம் ஓடிவிட்டது. மகிழ் லண்டனில் இருந்து வரப்போவதாக முதல் நாள் கண்மணி சொல்லியிருந்தார். அவனுக்குமே அவன் வரவை குறித்து சந்தோசமே!!   அவனுக்கு தெரியும் இந்நேரம் மகிழ் வீட்டில் இருப்பவர்களை ஒருவழி செய்திருப்பானென்று. ஏன் தன்னைத்தேடி அவன் இங்கேயே வரக்கூடும். அவன் எண்ணியது...
    அத்தியாயம் – 9   மூன்று மாதத்திற்கு பின்...   லண்டனில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்து பின் அங்கிருந்து பெங்களூர் செல்லும் விமானம் பிடித்து வந்திருந்தான் அவன்.   விமான நிலையத்தில் இருந்து அவன் உடைமைகளை செக்அவுட் செய்து வெளியில் வர கரிகாலனும் கண்மணியும் நிற்க அவர்களுக்கு கையசைத்தான் அவன்.   “ஏங்க அங்க வர்றாங்க!!” என்று கணவரின் தோள் தட்டி சொன்னவர் மகனை...
    அத்தியாயம் – 8   கையில் எதையோ பிடித்துக் கொண்டு வந்தான். ‘அவருக்கு சாப்பிட ஏதோ வாங்கிட்டு வந்திருக்கார் போல’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே வந்தாள்.   இருக்கைக்கு வந்து அமரவும் அவனும் அவளை இடித்துக்கொண்டு வந்திருந்தான்.   அவனை தேடி அவள் வாயிலுக்கே வந்திருந்ததை பார்த்திருந்தான். உள்ளுக்குள் லேசாய் ஒரு மகிழ்ச்சி சுரக்கத்தான் செய்தது. ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.   இருக்கையில்...
    அத்தியாயம் – 7   அவன் ஜன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ள அவள் வேறு வழியில்லாமல் பக்கத்தில் அமர்ந்தாள்.   ரயில் கிளம்பியதுமே அவளுக்கு பசிக்க தொடங்கியது போலிருந்தது. அன்னை வேறு அவளுக்கு பிடிக்குமே என்று பூரி கிழங்கை கொடுத்திருந்தார்.   அவள் போதும் போதும் என்று சொல்லச் சொல்ல நிறைய பூரியை சுட்டு வைத்திருந்தார். அது ஏன் என்று இப்போது...
    அத்தியாயம் - 6   “அம்மா நான் ஊருக்கு போகணும்மா... நாம இன்னைக்கு நைட் கிளம்புவோமா... எனக்கு வெள்ளிக்கிழமை வைவா இருக்கும்மா”   “அப்புறம் ரிவிஷன் இருக்கும், அப்புறம் பைனல்ஸ்மா” என்று ராஜத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தமுல்லை.   “வசந்தி அம்மா இங்க இருந்து கிளம்ப இன்னும் ஒரு வாரம் ஆகும். நீ ஒண்ணு பண்ணு உனக்கு டிக்கெட் எடுத்து கொடுக்கறேன், பகல்...
    அத்தியாயம் – 5   அவளிடம் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு நின்றிருந்தவரை “உட்காருங்க” என்று சொல்லி கட்டிலை காட்டினாள்.   “நீ இங்க வந்து என் பக்கத்துல உட்காரும்மா” என்றார்.   “இல்லை பரவாயில்லை”   “பார்மாலிட்டி எல்லாம் வேணாம் நீ வா” என்று கை காட்டினார் அவர் அருகில் அமருமாறு..   அதற்கு மேல் எதுவும் மறுப்பு சொல்லாமல் சென்று அமர்ந்தாள்.   அங்கு சிலநொடி கனத்த...
    அத்தியாயம் – 4   வேந்தனின் செய்கையை தூரத்திலேயே பார்த்து விட்டிருந்த கண்மணி வேகமாய் வருவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.   கொஞ்சம் கூட யோசிக்கவில்லை அவர், அங்கேயே அவனை மாறி மாறி அறைந்தார்.   “என்னடா நினைச்சுக்கிட்டு உன் மனசுல?? என்ன காரியம் செஞ்சு வைச்சிருக்கே??” என்றவருக்கு கோபமும் அழுகையும் வந்தது.   தன் கணவரை திரும்பி பார்க்க கரிகாலன் ஒன்றும் சொல்லாமல் பார்த்திருந்தார்....
    அத்தியாயம் - 3   “என்னப்பா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். பதில் சொல்லாம போறே??” என்றவருக்கு அவனை அடையாளம் தெரிந்திருந்தது சற்று முன்பு தான் கரிகாலன் தன் மகன் வருவான் என்று சொல்லி அவன் புகைப்படத்தை அவரிடம் காட்டியிருந்தார்.   அவன் நின்று அவரை திரும்பிப்பார்த்து முறைத்தான். அதற்குள் அங்கு ஓரமாய் அமர்ந்திருந்த அவன் அன்னை வேகமாய் எழுந்து அவனருகில்...

    Mullai Vendan 2

    அத்தியாயம் – 2   அருகில் ரயிலொன்று கிளம்பிச் சென்றுக் கொண்டிருந்தது. அந்த ரயிலின் ஆட்டம் போல் அவள் உள்ளமும் தடதடத்தது.   உடலில் ஒருவித நடுக்கம் பரவ அவனை பயத்துடன் ஏறிட்டாள் அவள். அவனோ அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னேறிச் சென்றுவிட்டான்.   அப்போது தான் அவளுக்கு உயிரே வந்தது. அப்பாடா அவனுக்கு என்னை அடையாளம் தெரியலை என்று...

    Mullai Vendan 1

    அத்தியாயம் – 1   வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே மாயமெலாம் நானறிவேனே வா வா ஓடி வா!!   “அம்மாஆஆஆஆ...” என்று கூச்சலிட்டாள் அவள்.   அவள் அன்னை அங்கு இல்லை வெளியே தண்ணீர் பிடிக்க சென்றிருந்தார்.   மீண்டும் அதே பாடல் ஒலிக்க இம்முறை அவளின் கோபம் சம்மந்தப்பட்டவனின் மேலே நேரடியாகவே பாய்ந்தது.   சமையலறையில் இருந்த பாத்திரம்...
    error: Content is protected !!