Advertisement

அத்தியாயம் 21
நிச்சயதார்த்தம் முடிந்து மஞ்சரி அறைக்கு வந்த பின் அவள் தோழிகள் சில அவளை கேலி செய்ய ஆரம்பித்துக்கொண்டிருந்தனர். மஞ்சரிக்கு முத்துப்பாண்டியின் பார்வையை வைத்து அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ! என்ற எண்ணம்தான் தோன்றியது.
ஆனால் அவள் எண்ணம் தவறு எனும் விதமாக தூங்க செல்லும் நேரத்தில் அவள் ஜன்னலை யாரோ தட்ட “இந்த நேரத்தில் யாரா இருக்கும்?” என்ற எண்ணத்தில் ஜன்னலை திறக்க முத்துப்பாண்டி நின்றிருந்தான்.
“மஞ்சு… எப்படி புள்ள இருக்கிய..” என்று கேக்க பதறினாள் மஞ்சரி
“மாமா யாராவது பாத்துபுட்டா வீண் பிரச்சினையாகும் சீக்கிரம் கிளம்புங்க” என்று சொல்ல
“உன் கூட சரியாய் பேச கூட முடியல அதான் புள்ள ரெண்டு வார்த்த பேசிட்டு போலாம்னு வந்தேன்” என்றவன் சின்ன வயசுல ஒண்ணா வளராதது எவ்வளவு வேதனையான விஷயம் என்பதிலிருந்து அவன் தான் பிடிவாதமாக அவளை திருமணம் செய்ய வேண்டும் என்பதாக சொல்லியதாக சொன்னான்.
“ஐயே! அதான் பொண்ணு பார்க்க கூட வரலையே!” என்று மஞ்சரி கிண்டல் செய்ய
“மாமா ஒரு சோலியா போய் இருந்தேன் புள்ள. அதான் வர முடியல” என்றான் அசட்டு சிரிப்போடு. அன்று அவன் எங்கும் செல்லவில்லை. வீட்டில்தான் இருந்தான். சொந்த பந்தத்தோடு மஞ்சரியை பெண் பார்க்க அனுப்பி விட்டு பூஞ்சோலையோடு கூடிக்குலாவிக் கொண்டிருந்தான்.
“சரி போய் தூங்குங்க உங்களுக்கு என்ன விட உங்க சோலி முக்கியமா போச்சில்ல” என்று ஜன்னலை சாத்தினாள் மஞ்சரி.
தாலி கட்டும் பொழுது விறைப்பாக அமர்ந்திருந்தான் முத்துப்பாண்டி. “என்ன நேத்து ராத்திரி வந்து அப்படி பேசிட்டு இப்படி உம்முனு இருக்காக” என்று மஞ்சரி எண்ணலானாள்.
திருமணம் முடிந்த கையேடு மணமகளை மணமகனின் வீட்டுக்கு அழைத்து செல்வதுதான் முறை. அங்குதான் மற்ற சடங்கெல்லாம் நடைபெற வேண்டும் என்றாள் வைஜயந்தி.
“கூடப்பொறந்த யாராவது இருந்தா கல்யாண பெண்ணோடு அனுப்பி வைக்கலாம். அதுவும் ஒத்த புள்ளையா போச்சு”
“தெரியாத இடத்துக்கா போறா? சொந்த அத்த வீட்டுக்கு தானே! போறா!”
“அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் கல்யாண சோலிய பார்க்கவே! நேரம் இருக்காது. அப்பத்தாக்கு அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியுமோ! என்னவோ!”  
“ஆமா ஆமா அங்கனயும் ஒரு பையன், இங்கணையும் ஒரு பொண்ணு. தங்கம் மாதிரி வைஜயந்தி பாத்துக்க மாட்டாளா?” என்று முத்துப்பாண்டியின் சொந்தங்கள் பேசிப்பேசியே! மஞ்சரியின் வீட்டாளுங்களை வரவிடாமல் தடுத்து அவளை தனியாக அழைத்து சென்றிருந்தனர்.
இத்தனை வருட பகையையும் மறந்து வைஜயந்தி தனது அண்ணன் மகளை மருமகளாக்கிய செய்தி ஊர் பூரா பரவி இருக்க மணப்பெண்ணைக் காண ஊர் மொத்தமும் வீட்டு வாசலில் கூடி இருக்க வேறு வழியில்லாது மஞ்சரியை அழைத்து சென்று பூஜை அறையில் தீபத்தை ஏற்ற சொல்லி மணமக்களை இறைவனை வணங்க சொல்லி எல்லா சடங்குகளையும் செய்யலானாள் வைஜயந்தி. இதில் பூஞ்சோலைக்குத்தான் திட்டு வேறு விழுந்தது.
“உன்ற என்ன சொல்லிட்டு போனேன். எல்லாம் எடுத்து வைக்க சொல்லிட்டு தானே! போனேன். எதையும் எடுத்து வைக்கக் காணோம்” என்று ஆரம்பிக்க,
“அவ கண்ணாலம் ஆகாத பொண்ணு இல்ல அவளுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது” என்று ஒரு பாட்டி சிரிக்க முத்துப்பாண்டி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.
அவனை முறைத்தவாறே பூஞ்சோலை வைஜயந்தி சொல்வதையெல்லாம் ஒவ்வொன்றாக செய்யலானாள். 
முதலிரவுக்கு மஞ்சரியை அறையில் விட்ட வைஜயந்தி “பாண்டி வந்துடுவான் சத்த நேரம் இருமா. ஒரு சோலியா வெளியே போய் இருக்கான்” என்று விட்டு செல்ல
“மாமனுக்கு கல்யாமண்ணைக்கும் அப்படி என்ன வேல” என்று யோசனைக்குள்ளானாள் மஞ்சரி.
மாடியில் மஞ்சரி பாண்டிக்காக காத்துக்கொண்டிருக்க கிழே உள்ள அறையில் அவன் குடித்துக்கொண்டிருந்தான். அவன் மடியில் பூஞ்சோலை.
முதலிரவு அறைக்கு செல்ல வந்த பாண்டியை தடுத்து நிறுத்திய வைஜயந்தி “எங்க டா மவனே! போற?” என்று கேக்க
“என்ன ஆத்தா புரியாம கேக்குற?” என்று அன்னையை முறைக்க
“நானும் பாத்துக்கிட்டுத்தான்ல இருக்கேன். பொட்டச்சிய பாத்ததுல இருந்து உன் பார்வையும் சரியில்ல, போக்கும் சரியில்ல. என் முன்னாடி ஒரு பார்வை பாக்குற, நான் பாக்காத போ வேற மாதிரி பாத்து வைக்கிற இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? நான் உன்ன பெத்த ஆத்தல. பழியெடுக்க கல்யாணம் கட்டிக்கிட்டு குடும்பம் நடாத்த உத்தேசமோ! அவ நெனப்பே! உனக்கு வரக்கூடாதுல. மலடி… மலடி என்ற பெயர் தான்ல அவளுக்கு மிஞ்சனும். அவ இந்த வீட்டு வேலைக்காரில. உனக்கு இன்னமொரு கல்யாணம் நடக்கும் வரைக்கும் பொறுமையா இருல. அதுக்கு அப்போரமா நீ அவளை என்ன வேணா பண்ணிக்க. போ.. இப்போ போய் குடிச்சிட்டு படுத்துக்க” அடிக்குரலில் சீற
தனதறைக்குள் புகுந்து குடிக்க ஆரம்பித்திருந்தான். நிச்சயதார்த்தத்தின் போதே! மஞ்சரியின் அழகில் மதி மயங்கித்தான் போய் இருந்தான் பாண்டி. சர்வ அலங்காரத்தோடு பார்த்ததால் என்று நினைத்துக்கொண்டு தலையை உலுக்கிக் கொண்டான். அவளிடம் நல்ல விதமாக நாலு வார்த்தை பேசி வைத்தால்தான் காரியம் கை கூடும் என்று யாரும் அறியாமல் அவளை அணுகி பேசியும் இருந்தான். வைஜயந்தி அவனை முறைத்துக்கொண்டு இருப்பதனால் மணமேடையில் விறைப்பாக நின்றிருந்தான்.  
 சடங்கு எல்லாம் பெண் வீட்டில்தான் செய்வார்கள் இன்று இரவே மஞ்சரியை அனுபவித்து விட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவனை ஊருக்கு அழைத்து வந்திருந்தனர். சரி யாராவது கூட வருவார்கள் என்று பார்த்தால் யாரும் வரவில்லை. அன்னையின் கண்களுக்கு சிக்காமல் அறைக்குள் நுழைய முட்பட்டால் மாடிக்கு செல்ல விடாமல் படியிலையே! தவம் கிடக்கிறாள். சரி வீட்டுக்குள்தானே! இருக்கிறாள் எங்கே! சென்று விடப்போகிறாள் என்று நினைத்து விட்டான் பாண்டி. 
“டாங்” என்ற சத்தத்தில் திரும்பியவன் பூஞ்சோலை முறைத்துக்கொண்டு இறைச்சிப் பொரியல் அடங்கிய தட்டை வைப்பதை கண்டு
“என்ன சோலை ரொம்ப சூடா இறுக்கிய போல?” என்று கேக்க
“அவைங்கள கண்ணாலமே! கட்டிகிட்டிக்க இல்ல. அப்போ நா யாரு உங்களுக்கு” என்று மூக்கை சிந்த
“ஏய் சும்மா அழுவதா டி. நீ இந்த வீட்டை பொறுத்தவரைக்கும் வேலைக்காரி. ஆனா எனக்கு எஜமானி. அவ ஊரை பொறுத்தவரைக்கும் எஜமானி எனக்கு வேலைக்காரி புரியுதா?”
“அந்த கிழவி எனக்கு ஒண்ணுமே! தெரியாத மாதிரி பேசுது. நீங்க வேற அந்த பார்வை பாக்குறீக” என்று முறைக்க,
“உனக்கா டி ஒன்னும் தெரியல? இம்மாம் பெரிய உருவத்தையே! உன் முந்தானைய முடிஞ்சி வச்சிருக்கியே”
பூஞ்சோலையில் கன்னங்கள் சிவப்பேற “குடிச்சா போய் தூங்குங்க உளறாதீக” என்றவாறு கதவை நோக்கி நடக்கலானாள்.
அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவன் “எங்க டி ஓடப்போற? இன்னக்கி எனக்கு மொதலிரவு டி” என்று அவளை ஆழ
“ஐயே நமக்கு இது எத்தனையாவது இரவு? மொதலிரவாம் மொதலிரவு” என்றவள் அவள் மீசையை பிடித்து இழுத்தாள். 
மாடியில் மஞ்சரி பாண்டிக்காக காத்திருந்து காத்திருந்து தூங்கிப் போய் இருக்க, அவனோ! பூஞ்சோலையோடு தூங்காது இரவை கழித்துக்கொண்டிருந்தான்.
நடுஜாமத்தில் பூஞ்சோலை பாண்டியின் அறையை விட்டு பூனை நடை போட்டு தனதறைக்கு வந்து தூங்க, ஆறு மணியளவில் வைஜயந்தி கத்துவது கேட்டது.
“இந்த அம்மா எதுக்கு இப்போ காலங்காத்தால கத்துறாங்கனு தெரியலையே!” என்றவாறு எழுந்து அடுக்களைக்கு செல்ல
“இந்த டி இந்த கஞ்சிய சாப்பிடு” என்று அவளுக்கு தினமும் கொடுக்கும் சத்து மா கஞ்சியை கொடுக்க சக்கரை சேர்ந்திருந்த கஞ்சியை வாயில் ஊத்திக்கொண்டாள் பூஞ்சோலை.
அதன் பின் இருவரும் காலை உணவை தயாரிக்கும் வேலையில் இறங்கி இருக்க, இருவருக்கிடையில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.
“நீ போய் வாசல் தெளிச்சு கோலம் போடு”
“உங்க மருமக எப்போ எந்திரிப்பாங்க?” பூஞ்சோலைக்கு பாண்டி இரவில் சொன்னது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்க வைஜயந்தி எதுவும் சொல்லவில்லையே! என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது.
“இன்னக்கி அவ எந்திரிக்கிற நேரத்துக்கு எந்திரிக்கட்டும். நாளைல இருந்து காலங்காத்தால எந்திருப்பா. நீ ஒரு வேல பண்ணு. அவ கிணத்துலதான் குளிக்கணும். குளியலறைக்கு போனா. வெளியால குழாயை மூடிடு. இப்போ போய் கோலத்தை போடு” என்று அதட்ட விட்ட போதும் என்று பூஞ்சோலை ஓடி இருந்தாள்.
மஞ்சரியும் எட்டு மணியளவில்தான் எழுந்து வந்திருந்தாள். குளிக்க சென்றால் குளியலறையின் குழாயில் தண்ணீர் வரவில்லை. பூஞ்சோலை சிரித்த சிரிப்புக்கு அப்பொழுது அர்த்தம் அவளுக்கு புரியவில்லை. கிணத்தில் நீர் இறைத்து குளித்து விட்டு வந்தாள்.
கை வலியோடு வந்தவள் காபி கேட்டதும் வைஜயந்தியின் பேச்சு ஒரு மாதிரி இருந்தது. அதை கூட மஞ்சரி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
பாண்டிக்கு பூஞ்சோலையிடம் காபி கொடுக்கவும் “என்ன இது” என்று பார்த்தவள் எதுவும் கேட்கவில்லை. மகனின் பார்வை சரியில்லை எங்கே மஞ்சரியிடம் மயங்கி விடுவானோ! என்று பாண்டியை அவளிடம் ஆரம்பத்திலிருந்தே! வைஜயந்தி நெருங்க விடவில்லை.
காலை சாப்பாடாக பழைய சோற்றை கொடுக்கவும் “சரி மீதம் இருந்ததை வீட்டு பெண்கள் தானே! சாப்பிடுவார்கள்” என்று அதை சாப்பிட்டாள்.
வேலையென்று வைஜயந்தி மஞ்சரிக்கு கொடுத்து. சாதாரணமாக வீட்டுப்பெண்கள் பார்க்கும், துணி துவைக்கும் வேலையோ! வீடு பெருக்கும் வேலையோ! கிடையாது. வீட்டு பின்னாடி கல்லு மலையை குடைவதை.
  
ஆம்! முத்துப்பாண்டியின் வீட்டை கட்டும் முன் அந்த நிலம் ஒரு கல்லு மலை. மலையை உடைத்து  வீடு கட்டி இருக்க பின்னாடி கொஞ்சம் எஞ்சி இருந்தது. வைஜயந்தி மஞ்சரிக்கு அதைத்தான் உடைக்க சொல்லி இருந்தாள்.
அதிர்ச்சியடைந்த மஞ்சரி “நான் எப்படி அத்த அத உடைக்க முடியும்? முன்ன பின்ன பண்ணி இருந்தா கூட பரவால்ல” என்று சொல்ல
“பாதி மலையை நான்தான் உடைச்சேன். இதோ இவளுக்கு ஒரு கை ஒழுங்கா வேலையே! செய்யாது இல்லனா இவளுக்குத்தான் சொல்லி இருப்பேன். வெளியாளுங்கள கூப்பிட முடியாது ஏன் நா அதுல வைரம் இருக்குனு பாண்டியோட தாத்தா சொல்லி இருக்காரு” என்று ரகசியமாக சொன்னாள்.
தங்கத்துக்கு வைரத்துக்கும் ஆசைப்படாத பெண்களே! இந்த உலகத்தில் இல்லை. இதை சொன்னாள் மஞ்சரி ஓடிப்போய் உடைக்க ஆரம்பிப்பாள் என்று எண்ணினாள் வைஜயந்தி.
ஆனால் அவள் ஒன்றை மறந்தாள். மஞ்சரி படிக்காத பெண்ணில்லை. படித்த பெண். தங்கம் வைரம் எல்லாம் அவள் பெரிதாக மதிக்க மாட்டாள் என்று.
“என்ன முட்டாள்தனம்” என்று எண்ணிய மஞ்சரி “அத்த வைரம் எல்லாம் நிலத்துக்கடிலதான் கிடைக்கும்” என்று சொல்ல
“நீ எனக்கு சொல்லி தரியா? ஐயோ ஐயோ வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி இப்படி பரம்பரை சொத்தை கிடைக்காம பண்ண பாக்குறாளே! என்று ஒப்பாரி வைக்க மஞ்சரிக்கு வைஜயந்தியின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. எந்த வைரமும் அங்கு இல்லை என்று நிரூபிக்கவே! அவள் அந்த கல்லை உடைக்க ஆரம்பித்தாள்.
ஆனால் மஞ்சரி அறியாதது. வைஜயந்தி அறியாமையால் சொல்லவில்லை. அறிந்தே! அவளை கஷ்டப்படுத்தத்தான் சொல்லி இருந்தாள் என்று. அதை அறிந்துகொள்ளவும், புரிந்துக்கொள்ளவும் அதிக நாட்கள் தேவைப்படவில்லை. காரணம் மஞ்சரி ஒன்றும் வெகுளி கிடையாது. பாசத்துக்கு கட்டுப்பட்டாலும் ஏமாளி கிடையாது. அவள் கற்ற அறிவு அவளை விழிப்பாகத்தான் வைத்திருந்தது.
கல்யாணமாகி வந்து மறு வீட்டுக்கு போன போது வீட்டில் ஒரு வாரம் இருக்கலாம் என்று எண்ணி இருக்க, உண்டு முடித்த உடன் வைஜயந்தி தவறி கிணத்தில் விழுந்து விட்டதாக செய்தி வந்தது.  பதறியடித்துக்கொண்டு வந்தாள் வைஜயந்தி கட்டோடு படுத்திருந்தாள். இரண்டு நாளில் எழுந்து நடமாடவும் ஆரம்பித்தாள்.
தினமும் காலையில் அவளுக்கு பழைய சோறுதான் உணவாக கொடுக்கப்பட்டது. இரவைக்கும் அதேதான். ஒரு கூட்டு அல்லது பொரியல். எந்த அசைவமும் உணவில் சேர்க்கப்படவில்லை. பகல் உணவாக மோர் மட்டும். அதுவும் தண்ணியாக இருக்கும். சம்யலறையில் உணவு சமைத்ததற்கான அறிகுறிகளும் இல்லை. அவள் சமைகின்றேன் என்றால் அதற்கும் அனுமதி இல்லை.
பூஞ்சோலை காய்கறிகளை வெட்டுவதையும், ஆட்டுக்கறி வெட்டுவதையும் கண்டிருக்கிறாள் சமைக்கும் மனமும் வீசும் அனால் கண்ணில் தென்படாது. அவர்கள் சாப்பிடுவதும் இவளுக்கு தெரியாது.
காபி, டீ, குளிர்பானம் இப்படி எதுவும் கண்ணில் கூட காட்ட மாட்டார்கள். விடிந்தால் சாப்பிட்டு விட்டு பின்னாடி உள்ள கல்லு மலையில் கல்லுடைக்க போனால் சூரியன் மறையும் பொழுது கிணத்தில் நீர் இறைத்து குளித்து விட்டு வருபவளுக்கு பழைய சோறு காத்திருக்கும்.
சாப்பிட்டு விட்டு வேறு எதையும் சிந்திக்கக் கூட நேரமிருக்காது. கல்லுடைத்தது, நீர் இறைத்தது என்று கையும் காய்த்து, கை வலி வேறு தூங்கினால்தான் அடுத்த நாள் வேலை பார்க்க முடியும்.
தங்கராசு அவளுக்கு செய்த மிகப் பெரிய நன்மை அவளை படிக்க வைத்தது. பாசம் என்ற ஒற்றை சொல்லுக்குத்தான் பெண்கள் அடிமையானவர்கள். ஏமாற்றவும் படுகிறார்கள். அது ஆண்களால் மட்டுமல்ல. பெண்களாலும்தான். பேச்சியம்மாள் மீது வைத்த பாசத்தால்தான் முத்துப்பாண்டியை திருமணம் செய்த்துக்கொண்டாள்.
இதுவே படிக்காத பெண்ணாக இருந்ததால் அவள் ஆசைகள் குறுகி இருக்கும். வைஜயந்தி சொல்வதையெல்லாம் நம்பி இருப்பாள். முத்துப்பாண்டியை கடவுளாக எண்ணி இருப்பாள்.
மூன்று மாதங்கள் கடந்திருக்க, மஞ்சரியின் வீட்டிலிருந்து அவளை பார்க்க பெற்றோர்கள் வந்திருந்தனர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள் வைஜயந்தி.
“மஞ்சு.. மஞ்சுமா… உன்ற ஆத்தாக்கு கறி குழம்ப வை தாயி. அப்பாக்கு நாட்டு கோழியை வைத்தாயி. நீயும் அவங்க கூடவே! சாப்பிடு” என்று பாசமாக பேசுவாள்.  ஆனால் மஞ்சரியால் காரமாக அதையும் உன்ன முடியவில்லை.
“என்ன டி ரொம்ப உடம்பு இளச்சி போய் தெரியிற? மாசமா இருக்கியா?” என்று பொன்னுத்தாயி கேக்க
“அது ஒண்ணுதான் குறைச்சல்” பதில் எதுவும் சொல்லவில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது மஞ்சரிக்கு.
அவள் கையைக் கண்டு பதறிய பொன்னுத்தாயி “என்னடி கை இப்படி காச்சிருச்சு. ரொம்ப வேலையா?” அதற்கும் பதில் சொல்லவில்லை. மனம் சுணங்கியவாறுதான் தங்கராசுவோடு வீடு சென்றாள். செல்லும் வழியெல்லாம் எதுவோ! சரியில்லை என்று புலம்பியவாறுதான் சென்றாள்.
அவர்கள் வாசப்படியை கூட தாண்டியிருக்க மாட்டார்கள். “ஐயோ ஐயோ என் பையன் சம்பாதிச்ச காசெல்லாம் இப்படி விருந்து வச்சே கரைக்க வேண்டியதா இருக்கே” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் வைஜயந்தி.
மனம் விட்டுப்போன மஞ்சரி அமைதியாக கல்லுடைக்க சென்று விட்டாள்.
மஞ்சரியின் பெற்றோர்கள் வந்து சென்று ஒரு வாரத்துக்கு பின் மஞ்சரி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு எழுந்து அமர்ந்து விட்டாள்.
“சே இந்த பீரியட்ஸ் இப்படி நடு இரவில்தான் வந்து தொலைக்கணுமா?” கழிவறைக்கு செல்ல வேண்டும் தூக்கம் கெட்ட கோபத்தில் மெதுவாக படியிறங்க முனகல் சத்தம் கேட்டது. என்ன சத்தம் இது. என்று கூர்ந்து கேட்க முன்னறையிலிருந்துதான் சத்தம் வருகிறது என்று புரிந்துகொண்டவள். அந்த அறையில்தான் பாண்டி தங்கி இருப்பது தெரியும்.
 நிச்சயதார்த்தமன்று இன்முகமாக பேசியதோடு சரி. மறுவீட்டு விருந்துக்கு செல்லும் பொழுது வண்டியை டைவர் ஒட்டியதில் அமைதியாக வந்தவன் வரும் பொழுதும் அமைதியாகத்தான் வந்தான். அதன் பின் அவனை கண்ணில் காணவே! இல்லை. வைஜயந்தி ஏன் இவ்வாறு செய்கிறாள் என்று தெரியவில்லை. மகனையும் மருமகளையும் பிரித்து வைப்பதில் அவளுக்கு என்ன பிரயோஜனம்? பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டுதான் இவ்வாறெல்லாம் செய்வதாக எண்ணியவள் பாண்டியின் மீது கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளவில்லை. பாவம் மாமா அம்மாக்கும், பொண்டாட்டிக்கும் நடுவுல சிக்க முடியாம விலகி இருக்கிறார் என்றுதான் நினைத்திருந்தாள்.
“உடம்புக்கு முடியலையோ!” என்று எண்ணியவாறே கதவை தட்ட கையை ஓங்கிய நேரம் கிளிக்கி சிரிக்கும் சத்தம் கேக்க அதிர்ந்து நின்றாள் மஞ்சரி. அது பூஞ்சோலையில் குரல். ஆம். அவளே! தான். அடி வயிற்றில் இருந்த வலி பறந்து குளிர் பரவியது. என்ன நடக்கிறது இந்த வீட்டில்? இல்ல. மாமா அந்த மாதிரி கிடையாது. உடம்புக்கு முடியாம இருக்கும். அதனால பூஞ்சோலையா கூப்பிட்டு இருப்பாரு என்று மீண்டும் எண்ணினாள். அவள் மனம் கணவனானவை தப்பாக எண்ண இடம் கொடுக்க வில்லை. சராசரி மனைவியாக யோசிக்கலானாள்.
கதவை தட்டவும் தயக்கமாக இருக்க, அடுத்த அறை காரியலைய அறை அங்கிருந்து பார்க்கலாம் என்று எண்ணியவள் நொடியும் தாமதிக்காமல் அந்த அறைக்குள் நுழைந்திருந்தாள். முத்துப்பாண்டியின் அறைக்கும் காரியாலய அறைக்கும் வந்து செல்ல ஒரு கதவு பொருத்தப்பட்டிருந்தது. அதுவும் கண்ணாடிக் கதவு. முத்துப்பாண்டியின் அறை வெளிச்சத்தில் இருக்க, மஞ்சரி எல்லாம் தெளிவாக பார்த்து விட்டாள்.
வயிற்றை பிராட்டிக்கொண்டு வர வெளியே ஓடி வந்தவள் வாந்தியெடுக்கலானாள். இவ்வளவு நாளும் வைஜயந்தி செய்த எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தது கணவன் என்ற ஒருவனுக்காக. அவனே! பொய்த்துப்போனதில் வெகுண்டெழுந்தாள். இனி நொடி நேரமும் இந்த வீட்டில் இருக்கக் கூடாதென்ற முடிவுக்கு வந்தாள்.
இரவோடு இரவாக வீடு சென்றால், என்ன எது என்று கேப்பார்கள் ஊரைக் கூட்டி இருவரினதும் தொடர்பை கூறி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று எண்ணினாள்.
ஒரு முடிவோடு கழிவறைக்கு சென்று தனது தேவைகளை முடித்துக்கொண்டு அறைக்கு வர வைஜயந்தி அமர்ந்திருந்தாள்.
“இவங்க இங்க என்ன பண்ணுறாங்க” என்று யோசிக்க,
“என்ன டி எல்லாத்தையும் பாத்துட்ட போல? உனக்கு மாடில அறைக் கொடுத்ததே! நீ இதையெல்லாம் பார்க்கக் கூடாதுன்னுதான்”
வைஜயந்தி என்ன சொல்கிறாள் என்று புரியவே! மஞ்சரிக்கு ஒரு நொடி எடுத்தது. “சீ நீயெல்லாம் ஒரு தாயா? பெத்த புள்ளையாவே! கூட்டிக் குடுக்குற?”
“என் புள்ளக்கி என்ன டி குறைச்சல். ஆம்புள சிங்கம் டி. நீ கண்ண கசக்கி கிட்டு ஒரு மூலைல உக்காந்து அழுவனு நினைச்சேன். ஆனா நீ அப்படி பண்ணல. அப்போவே! புரிஞ்சது. நீ எதோ! பண்ண போறான்னு. என்ன டி பண்ண போற? சொல்லு டி..” என்று மஞ்சரியை அறைய
“ஊரைக் கூட்டி உன் மானத்தையும் உன் மவன் மானத்தையும் வாங்குறேன்”
“உன்ன யாரு நம்புவாங்க. அந்த பூஞ்சோலை சிறுக்கி எவன் கூடையோ! படுத்தானு சொல்லுவேன். என் மகன் கரு அவ வயித்துல உருவாகக் கூடாதுனு தினமும் காலைல அவளுக்கு கருத்தடை மாத்திரை கலந்த கஞ்சி கொடுக்கறேன்” பெருமையாக சொன்னாள் வைஜயந்தி.
பூஞ்சோலைக்கு கருத்தடை மாத்திரை கொடுத்து வந்த வைஜயந்திக்கு தெரியாதா? மஞ்சரிக்கும் கொடுக்க. எல்லாம் மகன் மஞ்சரியியிடம் மயங்கி விடுவானோ! என்ற பயம்தான். பூஞ்சோலை வேலைக்காரி. அவளிடம் என்னதான் கூடிக்குலாவினாலும் இருட்டில்தான். வெளிச்சத்தில் உறவாட மாட்டான் என்ற நம்பிக்கைதான். ஆனால் மஞ்சரி பொண்டாட்டி. அந்த உறவுக்கு மஞ்சத்தாலி இருக்கே! அது செய்யும் மாயம் அளவில்லாதது.
அவளை இளக்காரமாக பார்த்து “சொல்லுற விதத்துல சொன்னா நம்புவாங்க” என்று மஞ்சரி சிரித்தாள். கல்யாண மான நாளிலிருந்து மஞ்சரி தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அதைத்தான் மஞ்சரி சொன்னாள்.
சட்டென்று வைஜயந்திக்கு புரிந்தது. “உன்ன விட்டு வச்சது தப்பு டி.. இரு டி வரேன்” என்ற வைஜயந்தி கதவை வெளியே பூட்டி விட்டு முத்துப்பாண்டியை சத்தமாக அழைக்க, இடுப்பில் ஒரு துண்டோடு அடித்துப் பிடித்து அறையை விட்டு ஓடிவந்தான் அவன்.
பூஞ்சோலை எட்டிப்பார்பது கண்ணில் பட்டாலும் கண்டுகொள்ளவில்லை. “நீ என்ன பண்ணுறியோ! எது பண்ணுறியோ! அவ இன்னக்கி கன்னிகழியனும்”
“என்ன ஆத்தா…” என்றவன் தலைய சொரிய
“போடா..” என்று கத்தினாள் ஆத்தாக்காரி.
முத்துப்பாண்டிக்கு என்ன நடந்தது என்று தெரியாது மஞ்சரி கிடைத்தால் போதும் என்று அறைக்குள் நுழைய வைஜயந்தி கதவை வெளியால் பூட்டி விட்டாள்.
அறைக்குள் நுழைந்த பாண்டிக்கு காணக் கிடைத்தது பத்தக்காளியாக நின்றியிருந்த மஞ்சரியைதான்.
“கிட்ட வராதீக” என்று மஞ்சரி கத்த
“மஞ்சு ஒண்ணுமில்ல டா. மாமா டா..” என்று இளித்தவாறு அவளை நெருங்க
மஞ்சரி பின்னாடி அடியெடுத்து வைக்கலானாள். பாண்டி அவளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க மஞ்சரி அவனை விட்டு விலகி ஒரு கட்டத்தில் அறைக்குள் ஓடி பிடித்து விளையாடவே! ஆரம்பித்து இருந்தனர்.
வேடனிடம் சிக்கிய புள்ளி மானாய் மஞ்சரி பாண்டியிடம் மாட்டிக்கொள்ள அவளை இழுத்துக்கொண்டு வந்து கட்டிலில் சரித்து அவள் மேல் படர அவள் மேனியெல்லாம் தகிக்க ஆரம்பித்தது. அருவருப்பில் எரிந்தவள் அவனை விட்டு விலக போராட அவள் கையில் அகப்பட்டது கட்டிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அலகாரப்பொருளான வெள்ளி சிலை. அதைக் கொண்டு பாண்டியின் தலையில் பலமாக அடித்து விட குபீரென இரத்தம் பாய மஞ்சரியின் கழுத்தின் மேலையே! மயங்கிச் சரிந்தான் முத்துப்பாண்டி.

Advertisement