Saturday, April 27, 2024

    KAANALO NAANALO KAATHAL

    அத்தியாயம்- 18   நேற்றைக்கெல் லாங்குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக் காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரகநோய்க்கு மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி     - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     கைபேசி அடிக்குமா என ஆதி அவ்வப்போது அதை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாய் இருந்ததை பார்த்த அர்ஷிதா குறுநகையுடன் சென்றுவிட்டாள்.     குந்தவையாக போன் செய்வாள் என்று தோன்றவில்லை...
    அத்தியாயம்- 17   உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்ம மென்று பிறந்தாலும் பேராசை யாகாது அஃத றிந்தும் சலுகைக் காரர்க் காசையானே னிப்போது     - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     சில நிமிடங்கள் அங்கு கனத்த அமைதி நிலவியது. வானதி பேசாமலே இருக்க “என்ன வானதி லவ் பண்ணுறியா?? அதை எப்படி என்கிட்டே சொல்றதுன்னு...
    அத்தியாயம்- 16   சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் - புனை பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை கொண்டாட - நய நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே - அணி ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே.   - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     நாட்கள் அதன் போக்கில் விரைந்து செல்ல குந்தவை ஆதியின் உறவில் சில மாற்றங்கள் ஆரம்பித்தது....
    அத்தியாயம்- 15   பூவென்ற பாதம் வருடி வருடிப்  புளக முலையை நெருடி நெருடி ஏவென்ற கண்ணுக்கோ ரஞ்சனம் தீட்டி எடுத்த சுருளு மிதழா லிடுக்குவள் வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின் ஆவென் றொருக்கா லிருக்கா லுதைப்பள் அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம்   - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     “என்ன இங்க சண்டை... என்ன இங்க சண்டை...” என்று கரகாட்டக்காரன் கோவை...
    அத்தியாயம்- 14   தரைப்பெண்ணுக் கணிபோல் வந்த தமனியக் கொடியே மாதர் துரைப்பெண்ணே வசந்த வல்லி  சொன்னபேதை மைக்கென் சொல்வேன் வரைப்பெண்ணுக் காசை பூண்டு வளர்சங்க  மறுகி னூடே நரைத்தமா டேறுவார்க்கோ நங்கைநீ மயல்கொண் டாயே. - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)   குந்தவையை அலுவலகம் கொண்டு விட்டுச் செல்ல வந்தவனை ஒரு நிமிடம் நிற்குமாறு கூறியவளை “என்ன விஷயம்...” என்று கேட்டான் ஆதி.     “இல்லை என்னோட வேலை...
    அத்தியாயம்- 13   வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு மயக்கமதாய் வருகுதையோ மோகம்என்பது இதுதானோ - இதை முன்னமே நான் அறியேன்! ஓ! ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற அன்னைசொல்லும் கசந்தேனே தாகம் அன்றிப் பூணேனே - கையில் சரிவளையும் காணேனே. - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     அன்று குந்தவையின் உறவினர் பெண்ணொருத்தியின் திருமண வரவேற்பு விழா ஆதிக்கும் குந்தவைக்கும் தனியே அழைப்பு விடுத்திருந்தனர்.     குந்தவையின்...
    அத்தியாயம்- 12   பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத் தவர்கொடுத்த பிரமை யாலே மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றே னுனக்குமதி  மயக்கந் தானோ கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா ருடன்கூடிக்  காந்திக் காந்தி விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண்ணிலாக் கொடும்பாவி  வெண்ணி லாவே... - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     “டேய் ஆதி... ஆதி...” என்று கத்தியே விட்டான் ஜோதிஷ். “என்னடா எதுக்கு இப்போ கத்துற...” என்றான் ஆதி.     “நான் இவ்வளவு நேரம்...
    அத்தியாயம்- 11   குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து  மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்  அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்  மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் ஆண்டாள் (நாச்சியார் திருமொழி பாடல்)     விழித்ததும் அவசரமாக எழுந்து அமர்ந்தவன் “என்னாச்சு...” என்றான்.“விடிஞ்சிருச்சு... நீங்க ஆபீஸ் போக வேண்டாமா???” என்றவள் “காபி” என்று நீட்ட...
    அத்தியாயம்- 10   அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும் புருவத்தாள் – பிறர் அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப் பருவத்தாள் கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த சொல்லினாள் – கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)   இருவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஓடிவிட்டது, ஆதியால் அதை நம்பவே முடியவில்லை... இந்த ஐந்து நாட்களில் இருவரும் அதிகமாக பேசிக்...
    அத்தியாயம்-9     தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத் தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன் பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே. விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக் காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே   திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல், வெண்ணிலாவை பழித்தல்)   “சார் இங்க வாங்க சார்... கொஞ்சம் கேசுவல் போட்டோஸ் எல்லாம் எடுத்திடலாம்...” என்று அழைத்த புகைப்படக்காரனை...
    அத்தியாயம்-8     மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத  முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்  மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்  கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்   நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)   நடந்தது எல்லாம் கனவா இல்லை நிஜமா என்ற எண்ணம் அந்த புதுமணத்தம்பதிகள் இருவருக்குமே இருந்தது.இப்படி ஒரு தருணம் வரும் என்று அவர்கள் எண்ணியிருக்கவேயில்லை.     முன்தினம்...
    அத்தியாயம் –7   வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து  நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்  பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்  தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்   நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)   ஏனோ குந்தவைக்கு உறக்கம் வர மறுத்தது... காரணம் புரியாத பயமொன்று அவள் அடிவயிற்றில் தோன்றியது... அது மெல்ல மெல்ல முன்னேறி இப்போது அவள் நெஞ்சுக்குழிக்குள் வந்து...
    அத்தியாயம் - 6     மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாரா யணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!!   திருப்பாவை (ஆண்டாள்)     “என்ன மாமா விளையாடுறீங்களா... எனக்கு எதுக்கு மாமா இப்போ கல்யாணம்... முதல்ல அர்ஷுவுக்கு...
    அத்தியாயம் - 5     குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!   திருநாவுக்கரசர்   “டைம் ஆகிடுச்சு சந்துரு... அம்மா தேடுவாங்க... நாம இன்னொரு நாள் பேசுவோம்... நான் வேற இன்னைக்கு பஸ்ல தான்...
    அத்தியாயம் - 4     இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங் கொண்டையாள் - குழை ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்  கெண்டையாள் திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும் இதழினாள் - வரிச் சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு நுதலினாள்   இருவருமாக ஓரோர் சிந்தனையில் அலுவலகம் வந்து சேர்ந்தனர். அமைதியாகவே அவரவர் வேலையை பார்க்க சட்டென்று நினைவு வந்தவனாய் ஜோதி மற்றவனை நோக்கியவன் “ஆதி...” என்றழைத்தான்.     “ஹ்ம்ம் சொல்லுடா... என்ன விஷயம்...”     “நான்...
    அத்தியாயம் - 3     யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே     ஜோவும் அவனுமாக கடையை மூடும் வரை அங்கேயே இருந்தனர். ஆதி ஜோதிஷை ஒருவழியாக்கி இருந்தான். திடிரென்று அவனுக்கு ஞானோதயம் வந்தது. “ஜோ... தப்பு பண்ணிட்டேன் ஜோ... அர்ஷ்... வீட்டில அர்ஷு இருப்பாளே...”     “அய்யோ நான் எப்படி...
    அத்தியாயம் - 2     இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மன முந்திய தோவிழி முந்திய தோகர முந்தியதோவெனவே - உயர் சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப் பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண் டாடினளே     ஆதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது, ஏனோ அவன் எப்போதும் இதை முணுமுணுப்பான். காதலன் படத்தை...
    அத்தியாயம் - 1     மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன்எந்தை இணையடி நீழலே…     இளங்காலை பொழுது சன்னலின் வழியாக பின்புற தோட்டத்தில் இருந்து பறவைகளின் கீச்கீச்சென்ற சத்தம் அவள் காதில் தேனாய் ஒரு புறம் இசைக்க மறுபுறம் அவள் அன்னை பாடும் பன்னிரண்டாம் திருமுறை பாடல் அப்பர் பெருமானின் மாசில்...
    error: Content is protected !!