Wednesday, May 15, 2024

    VVT 19 2

    VVT 19 1

    VTM 18 2

    VTM 18 1

    VTV 17

    Vaanam Vasappadum Thooram 1

    வானம் – 16 “உன் மனசுல என்னடா நினைச்சுட்டு இருக்க... இப்ப வந்திடறேன்னு வண்டியை எடுத்திட்டுப் போயிட்டு நைட்டு அவ்ளோ நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்ற... சாயந்திரம் தன்யாவுக்கு உடம்புக்கு முடியாமப் போயி டாக்டர் கிட்டப் போகலாம்னா வண்டி இல்ல... இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டேன்...” கொஞ்சம் கோபமாவே சொன்னான் பரத். “ஏன், எனக்கு எங்கயும் போக வேண்டாமா......
    “எனக்கு ஒரு வண்டி வாங்கித் தா... என்னை அங்க விடு... இங்க விடு...” என்று எரிச்சலோடு நடந்து கொள்ளத் தொடங்கினான். அடிக்கடி பணம் கேட்டு அன்னையை நச்சரித்தான். பரத் வட்டி கட்ட வைத்திருந்த பணத்தைக் கூசாமல் குடிக்க எடுத்துவிட்டு எடுக்கவே இல்லை என்று சாதித்தான். ஓரளவுக்கு கால் சரியான பின்னும் வேலைக்கு செல்வதை யோசிக்காமல்...
    வானம் – 15 பரத் எந்தப் பக்கம் சென்றாலும் விதி விரட்டி அடித்து கோல் போட்டது. எத்தனை பிரச்சனை கொடுத்தாலும் இவன் சலிக்காமல் சமாளிக்கிறானே என மேலும் மேலும் பிரச்சனைகளைக் கூட்டிக் கொடுத்தது. சனிக்கிழமை தோறும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டான். மாதாமாதம் அவனது நட்சத்திர நாளுக்கு கோவிலில் பூஜைக்கு கொடுத்தான். ஆனாலும் அவனது சனி தோஷம்...
    வானம் – 14 இந்த முறை அமிர்தவள்ளியின் மௌன யுத்தம் ஒரு மாதம் தொடர்ந்தது. நந்தினி ஒரு நாள் முழுதும் முகத்தைத் தூக்கி வைத்தாலும் அடுத்த நாளே அனு கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள். மகனிடம், அதை வாங்கி வா... இதை வாங்கி  வா... என்று சொல்ல வேண்டியே ஒரு வாரத்தில் மௌனத்தை முடித்துக் கொண்டவர்,...
    “என்னங்க, இவங்க எல்லாம் சீனத் துறவிங்க போல இருக்காங்க... இவங்க எப்படி இந்தியாவுல இப்படி ஒரு பெரிய கோவிலைக் கட்டினாங்க... அதும் இங்க மட்டுமே ஆயிரக்கணக்கான துறவிங்க இருப்பாங்க போலருக்கு...” அனு பரத்திடம் கேட்க, முன்னமே அந்தக் கோவிலைப் பற்றி விசாரித்து வைத்திருந்தவன் அதைப் பற்றிக் கூறினான். “இவங்க எல்லாம் தலாய்லாமாவின் கருத்துகளைப் பின்தொடர்ந்து இந்தியாவுக்கு...
    வானம் – 13 அனுவுக்கு கையில் தையல் பிரித்து காயம் ஆறி இருந்தாலும் விரல்கள் இயல்புக்கு திரும்பவில்லை. பிசியோ பயிற்சிகள் செய்தும் பெரிதாய் பலனளிக்கவில்லை. அடுத்த முறை செக்கப் சென்றபோது இதை டாக்டரிடம் கூறினர். “மெயின் நரம்பை தையல் போட்டு ஜாயின்ட் பண்ணிட்டாலும் ரொம்ப குட்டியா இருக்கற உணர்வு நரம்புகள் சிலநேரம் இணைக்கப்படாம விட்டுப் போயிருக்கலாம்... மறுபடி...
    வானம் – 12 அப்போதெல்லாம் அலைபேசி வசதி இல்லாததால் கடிதம் மூலமாகவே தகவல் பரிமாற்றம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை அனுவின் தந்தையிடமிருந்து கடிதம் வரும். எல்லாரின் நலனையும் விசாரித்து எழுதி இருப்பார். பொதுவாக யாரிடமும் குறை கண்டு பிடித்துப் பழக்கம் இல்லாத அனுவுக்கு வீட்டில் நடப்பதை எல்லாம் தந்தையிடம் சொல்லவும் பிடிக்கவில்லை. சொன்னாலும் அவர் வருத்தப்பட்டு பரத்திடம்...
    “ஏய் அனு, என்னடி லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க...” கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தவன் பிளேடைப் பிடித்திருந்த கையைப் பிடித்து மாற்ற, அனு சற்று அழுத்தமாய் மணிக்கட்டில் பிளேடைப் பதிந்திருந்ததால் அது சர்ரக்... என்று கிழித்துக் கொண்டு வந்தது. அவள் அவனை பயப்படுத்த நினைத்து அப்படி செய்ய, அவன் அவள் கையை மாற்ற முயன்றதில்...
    “என்ன பரத், பட்டாசு கைல வச்சு வெடிப்பாங்களா... கவனமா இருக்கக் கூடாதா...” என்று கரிசனத்துடன் கேட்டுவிட்டு,  “பாங்குல இருந்து உன்னைக் கேட்டுட்டு வந்திருந்தாங்க... லோனுக்கு அஞ்சாறு மாசமா டியூ கட்டலையாமே... நீ போயி பார்க்கலன்னா ரெக்கவரி நோடீஸ் அனுப்பப் போறதா சொன்னாங்க...” என்றான். “ம்ம்... நடுவுல வேற செலவு வந்திருச்சு மது அண்ணா...” “சரி... நாளைக்கே பாங்கு...
    வானம் – 11 அன்று தீபாவளி. ஊரே பண்டிகைக் கொண்டாட்டத்தில் இருக்க மதிய சமையலை தடபுடலாய்த் தயார் செய்து காலையில் வெளியே சென்ற அண்ணன், தம்பியின் வரவுக்காய் காத்திருந்தனர் பெண்கள். அனு நடக்கத் தொடங்கியிருந்த தன்யாவுக்கு புதிய உடுப்பு அணிவித்து அழகாய் புறப்பட வைத்து கணவனுக்காய் காத்திருந்தாள். நேரம் செல்லச் செல்ல மனதுக்குள் ஒரு பதைபதைப்பு கூடிக் கொண்டே...
    வானம் – 10 அனுவுக்கு சுகப்பிரசவம் ஆதலால் இரண்டாவது நாளே வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். மருமகளின் பத்தியத்துக்கு எந்தக் குறையும் வைக்காமல் அமிர்தவல்லி நன்றாகவே கவனித்துக் கொண்டார். அனுவின் அப்பாவும், சித்தியும் அனு வீட்டுக்கு வந்த மறுநாளே பெயர் சூட்டு விழாவுக்கு வருவதாக சொல்லி கிளம்பி விட்டனர். அஸ்வினுக்கு பத்து மாதம் ஆகியிருந்தது. டாக்டரிடம் எத்தனை...
      வானம் – 9 அடுத்த மூன்று நாட்கள் கொடுமையும் வெறுப்புமாய் கழிந்தன அனுவுக்கு. காலையில் பரத்தும் அலுவலகம் சென்றுவிட்டு மாலையில் தான் வருவான். முகம் கொடுத்துப் பேசக் கூட ஆளில்லாமல் தனிமையின் வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.   பரத் மாலையில் வந்தாலும் முகத்தை கடுகடுப்புடன் வைத்திருந்த அன்னையையும், உர்ரென்று காணாதது போல் இருக்கும் அக்காவையும் காணப் பிடிக்காமல் அருகில்...
        வானம் – 8 அடுத்து மணமக்கள் விருந்துக்கு ஒவ்வொரு சொந்தமும் அழைக்க எல்லா இடத்துக்கும் அம்மா, அக்கா, தம்பி சகிதம் சென்று வந்தனர். ஒரு மாதம் முடிந்து நந்தினியின் பிரசவத்திற்காய் மருத்துவமனையில் சேர்த்திருக்க கையில் பணம் இல்லாமல் பரத் திணறினான். கவலையுடன் யோசனை முகமாய் அமர்ந்திருந்த கணவனின் அருகில் வந்தவள் அவனை அழைத்தாள்.   “பரத்..... என்ன யோசிக்கறிங்க....”...
    வானம் – 7   இரவு உணவு முடிந்து பெரியவர்கள் எல்லாம் அங்கங்கே செட்டிலாக பரத்தின் நண்பர்கள் மணமக்களை தனியே விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.   “பரத்.... நீ ஒரு பாட்டுப் பாடு....” எனவும், அவன் அழகாய் ஒரு ஹிந்தி பாட்டை பாடினான். பரத் அழகாய் பாடுவான்.   “அனு.... நீயும் ஒரு பாட்டுப் பாடு..... அப்பதான் உங்களைப்...
      வானம் – 6   அடுத்து வந்த நாட்கள் கனவோடும் கற்பனையோடும் நகர கல்யாண நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அனுபமா. வழக்கம் போல் தொலைபேசி உரையாடலும் கடிதமும் அவர்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தன.   எல்லாருக்கும் புதிய ஆடைகள், நகைகள் வாங்குவது பத்திரிகை வைப்பது என்று பெரியவர்கள் பரபரப்பாய் இருக்க மனம் முழுதும் கல்யாணக் கனவுகளை சுமந்திருந்தாலும் கல்யாண செலவுக்காய்...
    வானம் – 5   கடிதத்தைப் படித்து முடித்ததும் கண்ணீரில் நிறைந்த கண்கள், “பரத்தோட முன்கோபத்தைப் பத்தித் தெரிஞ்சும் அவசரப் பட்டுட்டியே அனு....” என்று தன்னையே சாட நொந்து கொண்டாள்.   அந்த கடிதம் முழுதும் அவன் கோபத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளால் நிறைந்திருந்தது. எப்போதும் என் செல்ல அனுக்குட்டிக்கு என்று அன்பாய்த் தொடங்கும் அழைப்பு காணாமல் போயிருந்தது.   அனு,   “என்ன நினைத்து...
    வானம் – 4   “உனக்கு வாடா போடான்னு கூப்பிட்டா பிடிக்காதாமே.....”   கிண்டலாய் கேட்டவளை அதிர்ச்சியுடன் நோக்கினான். “கூப்பிட்டா என்னடா பண்ணுவே.....” கேட்டு முடிப்பதற்குள் அவளது இதழ்கள் அவனது இதழால் சிறை பிடிக்கப்பட்டிருந்தது. முதலில் அதிர்ந்து திணறியவள், அவனை உதற முடியாமல், மனம் கவர்ந்தவனின் முதல் முத்தத்தில் அடங்கி கிறங்கிப் போனாள்.   வெளியே நின்று எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவனது...
      வானம் – 3   தடதடவென்று ரயில் ஓடிக்கொண்டிருக்க, மரங்களும் செடிகளும் மலைகளும் கடந்து காட்சிகள் நீண்டு கொண்டிருந்தன. அனுவின் மனம் முழுதும் பரத்தை சந்திக்கப் போகும் சந்தோஷத்தில் இருந்தது.   அடுத்தநாள்  அவர்கள் புதிய வீட்டு கிரகப் பிரவேசமாயிற்றே. அனுவின் குடும்பம் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.   ரயிலைக் காட்டிலும் வேகமாய் அவள் மனது பரத்தைக் காணப் பறந்து கொண்டிருந்தது....
        வானம் – 2   எத்தனயோ நாட்களாய் காணத் துடித்த மாமன் மகன் பரத் தான் அவன் என்பதை வலி நிறைந்த அந்தப் பார்வை உணர்த்த எல்லோரும் இருந்ததால் தயக்கத்தோடு பார்த்தாள் அனுபமா. அவள் தன்னை வேதனையோடு பார்ப்பதை உணர்ந்த பரத்தின் கண்கள் தந்தையை இழந்த வலியை அவளோடு பகிர்ந்து கொள்ளத் துடித்தது. தனக்காய் தன் தந்தை...
      வானம் – 1   “பிருந்தாவனம்”   கறுப்பு கிரானைட் கல்லில் தங்கக்கலரில் மின்னிய வீட்டுப் பெயரை ஆசையோடு தடவிக் கொண்டே துணியால் துடைத்துவிட்டாள் அனுபமா. வாசல் தெளித்து சின்னதாய் கோலமிட்டு புன்னகையுடன் முன்னில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.   “என் துளசிக்குட்டி பெருசா வளர்ந்துட்டாளே.... நிறையப் பூ எல்லாம் விட்டு தளதளன்னு பார்க்க என் கண்ணே பட்டிரும்போல...
    error: Content is protected !!