Uravaal Uyiraanaval
அத்தியாயம் 5
நேரம், காலம் பார்த்து விஷயத்தை சொன்னாலும், தடாலடியாக சொன்னாலும், ரியாக்ஸன் என்னமோ ஒண்ணுதான் என்று அறிந்தவனாக ஒருவாறு ஆதித்யா வீட்டில் விஷயத்தை போட்டுடைத்தான். "இங்க பாரு ஆதி. ஆரு எனக்கு ஒரே பேத்தி. நீ ஆருவைத்தான் கல்யாணம் பண்ணனும். நீ சொல்லுறது போல எவளோ ஒருத்திய இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர...
அத்தியாயம் 7
"இந்த கல்யாணம் நடக்க கூடாது" கவி ஆள் காட்டி விரலால் அவளையும், ஆதியையும் மாறி மாறி காட்டியவாறே சொல்ல
தனது இருகைகளையும் கோர்த்து முழங்கையை மேசையின் மீது ஊண்டி தாடையை புறங்கையில் மேல் வைத்து கவியையே கண் சிமிட்டாமல் மெளனமாக பாத்திருந்தான் ஆதித்யா.
அவனின் எத்தனை வருடக் கனவு. காணாமல் போய் விட்டது என்றிருந்த கனவு...
அத்தியாயம் 8
"கார்த்திக் சித்தார்த் ஏ.சி. பி ஒப் ஹிட் அண்ட் ரன் டிபார்ட்மென்ட்" என்ற முழுப் பெயருடன் வந்திருந்தது அந்த வெள்ளை உறை கடிதம். அது அவன் இன்னும் மூன்று மாதங்களில் தஞ்சைக்கு மாற்றப்பட போகும் செய்தியை தங்கி வந்த கடிதம். கார்த்திக் விரும்பியே கேட்டிருக்க உடனே கிடைக்கும் என்று அவனே நினைத்து பார்க்கவில்லை....
அத்தியாயம் 10
"கவி வா உள்ள போலாம். பனி வேற விழுது. போய் தூங்கு" கவியின் கை பிடித்து கார்த்திக் எழுப்பிக் கொண்டிருக்க,
"ஏன் கார்த்திக் நா தப்பா பேசிட்டேனா?" எழுந்து கொள்ளாமல் தலையை மட்டும் தூக்கியவாறு கவி.
"தப்பா புரிஞ்சி வச்சிருக்குறத சரியா தான் பேசின" புன்னகைத்தவாறே கார்த்திக்
"அவர் சொன்ன மாதிரி எல்லார் கிட்டயும் பேசி அவங்க...
அத்தியாயம் 13
அந்த மருத்துவமனை இரவின் மடியில் இருக்க, கார்த்திக்கின் அறையில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது.
"இல்ல ப்ரோ அது பொம்முவ நோக்கி வீசின கத்தியில்ல உன்ன நோக்கி வீசின கத்தி" ஆதி உறுதியாக சொல்ல
"எப்படி சொல்லுற?" கார்த்திக் தான் ஒரு போலீஸ் என்று கேள்வி கேட்டு வைக்க
"பொம்முவ இங்க படிக்க அனுப்பும் போதே அவ பாதுகாப்புக்கு...
அத்தியாயம் 15
"ரொம்ப சந்தோசமாக இருக்கு பித்யூ..." பித்யுத்தின் அண்ணன் சம்யுக்த் பித்யுத்தை அணைத்தவாறே "கவிய கார்த்திக்குகே கல்யாணம் பண்ணி கொடுப்பனு நெனச்சேன். ஆனா நீ இப்படி பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா என் பொண்ண கார்த்திக்கு கட்டிவச்சிருப்பேன்"
"போங்க டேட் கார்த்திக் எனக்கு ராக்கி ப்ரோ" தனது குட்டை முடியை சிலுப்பியவாறு தீபிகா சினுங்க
சத்தமாக சிரித்த சம்யுக்த் "உன்...
அத்தியாயம் 24
கவி கருவுற்றிருந்த செய்தியால் ஜமீன் விழாக்கோலம் பூண்டிருந்தது. கொள்ளுப்பேரன் வரப்போகும் மிதப்பில் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு ஊருக்கே உணவு பகிர்ந்துக்க கொண்டிருந்தார் கர்ண விஜயேந்திரன்.
வரளிநாயகியை பற்றி சொல்லவே வேண்டாம் கால்கள் தரையிலையே இல்லை. கவியை கவனிக்க வயதையும் மறந்து படிகளில் ஏறியும் இறங்கியும் சேவகம் செய்து கொண்டிருந்தார்.
வானதியும், ராணியும் கூட கார்த்திக், ஆருவோடு...
அத்தியாயம் 21
பச்சைமுத்துவுக்கும் வாசுவுக்கு நடுவே ஒரு கதிரையை போட்டு அதில் ஒரு பஞ்சு மூட்டையை கிடத்திய சீனு கட்டையால் அடிக்க வாசு அடித்தாங்க முடியாமல் கத்துவது போல் குரல் கொடுக்கலானான்.
பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து அடித்தவன் கை வலிக்கவே ஓய்வெடுக்க அமர்ந்து கொண்டான். பச்சைமுத்து கத்திக் கொண்டிருக்க வாசுவும் ஒரே வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்...
அத்தியாயம் 14
நீண்ட நாட்களுக்கு பின் வீடு வந்த இரு தந்தைகளோடும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் கவி. ஆதி பல தடவைகள் அலைபேசியில் அழைத்தும் பதில் வராது போகவே கார்த்திக்கை அழைக்க அவனும் ஆருவோடு பேசிக் கொண்டிருப்பதால் கவி தந்தைகளோடு இருக்கிறாள் என்று குறுந்செய்தியை தட்டி விட
"இன்னும் ஒரு வாரம் தானே அதற்குபின் நான் தான்...
அத்தியாயம் 12
தான் தான் கார்த்திக் அருகில் இரவு தங்கணும் என்று ஆருத்ரா அடம் பிடிக்க,
"இன்னும் கல்யாணம் கூட ஆகல ஆரு சொன்னா கேளு" மேனகை அதட்ட அழ ஆரம்பித்தாள் ஆருத்ரா.
தன்னவள் தன்னோடு இருந்தால் நன்றாக இருக்கும், என்று கார்த்திக்கின் மனம் கூவினாலும், அவள் அழுத அழுகையும், அவன் ஆதியிடம் பேச வேண்டியுள்ளதாலும், ஒருவாறு ஆருத்ராவை...
அத்தியாயம் 9
"இந்த பொம்பளைங்களோட ஷாப்பிங் போனாலே! நம்மளுக்கு செலவை இழுத்து வச்சி கழுத்த அறுத்துடுவாங்க. நா வரல. நீங்க போங்க. நா ஜாலியா டிவி பாத்துகிட்டு ஏசி ரூம்ல ஹாயா படுக்க போறேன்" சக்கரவர்த்தி வர்ஜனை பண்ண
"அப்படி என்ன ஷாப்பிங் பண்ணி கிழிச்சீங்க? கல்யாணமாகி இத்துணை வருஷத்துல எனக்கொரு நல்ல புடவை வாங்கி தந்திருக்கிறீங்களா?"...
அத்தியாயம் 11
கார்த்திக் கத்திக் குத்துப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். என்ற விஷயம் கேள்விப் பட்டு தஞ்சையிலிருந்து கிளம்பி இருந்தனர் ஆதியின் வீட்டார். தகவல் சொன்னது ஆருத்ரா. அவள் அழுத அழுகையில் கார்த்திக் இனி பிழைக்க மாட்டான் என்ற எண்ணமே அனைவருக்கும்.
மருத்துவமனை கட்டிலில் கண்மூடி படுத்திருந்தான் கார்த்திக். அவனது வலது கையை பற்றியவாறு ஆருத்ரா கண்ணீரில்...
அத்தியாயம் 19
கார்த்திக் கொலை வழக்கில் பிசியாக ஆதி சீனுவோடு சென்னைக்கு கிளம்பி சென்றிருந்தான். அது சுபாஷின் தொழில்களையும், அதில் அவன் செய்து வைத்திருக்கும் குளறுபடிகளை அலசி ஆராய்வதற்கே!
ஆதியின் செல்வாக்கை பயன் படுத்தி போலீஸ் புகார்களை பெற்றுக் கொண்டவன் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, தானே நேரில் சென்று அவர்களை சந்தித்து பல தகவல்களை திரட்டலானான்.
கவியோடு...
உறவால் உயிரானவள் 16
மெதுவாக கண்களை திறந்த கவி தான் எங்கே இருக்கின்றோம் என்று புரிய அன்னை சொன்னதும் நியாபகத்தில் வந்தது.
"காலையிலையே எந்திரிச்சு, குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு உன் கையாள எல்லாருக்கும் காபி போட்டு குடுக்கணும்"
"காபி மட்டுமா? டிபன், லன்ச் எல்லாம் செய்யணுமா? அப்பொறம் வாச்சது ஒரு மருமக அடிமைனு நல்லா கொடும படுத்துவங்க" கவி...
அத்தியாயம் 17
மறு வீட்டு விருந்து, குலதெய்வ பூஜையன்று ஒரு வாரம் ஓடியிருக்க, வானதியின் அண்ணன்களின் குடும்பத்தோடு சித்தார்த்தின் அக்காவும், மாமாவும் மதுரையை நோக்கி பயணித்திருக்க, சம்யுத்தின் குடும்பமும் டெல்லி திரும்பியிருந்தனர்.
கல்யாணத்துக்கென வந்த உறவினர்கள் அனைவரும் கிளம்பிய இரண்டாவது நாள், வாசலில் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தனர் சித்தார்த்தும், பித்யுத்தும்
"என்ன மாமா கல்யாணத்துக்கு மட்டுமா லீவ் போட்டீங்க?...
அத்தியாயம் 29
ஜமீன் குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, ராணுவ குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர்.
சம்யுத்திடம் பேசியவன் வானதியையும் சாந்தினியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர மேனகை புலம்பிக்கொண்டே இருக்க, இங்கே நடந்தது எதுவுமே அறியாமல் வந்த கார்த்திக் ஆருத்ரா, கர்ண விஜயேந்திரன் மற்றும் வரளிநாயகியை எழுந்து நிற்குமாறு சொன்னவன் ஆருத்ராவோடு சேர்ந்து காலில் விழ
"என்னப்பா...."
"எங்களை ஆசிர்வாதம்...
அத்தியாயம் 20
சீனுவுக்கு அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க, இயக்கி காதில் வைத்தால் மறு பக்கம் மௌனமாகவே இருந்தது.
"என்ன என்ன வேல வெட்டி இல்லாதவன்னு நினைப்போ! விளையாட நான் தான் கிடைச்சேனா? வந்தேன்னு வை உன்ன பொளந்துடுவேண்டா"
"என்ன சீனு யார் கிட்ட மல்லு கட்டுற?" என்றவாறே உள்ளே நுழைந்தான் வாசு.
"யார்னே தெரியலடா காலைல இருந்து...
அத்தியாயம் 18
சுபாஷ் சந்திரன் சென்னையில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர். வயது முப்பதுக்கு மேல்... மனைவி சாந்திபிரியா. காதல் திருமணம். இரண்டு பசங்க. காதல் கணவன் அன்பான தந்தை. வீடே கதி என்று இருக்கும் மருமகன். ஏழைகளுக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதன். இதுதான் சுபாஷ் சந்திரனின் வெளித்தோற்றம்.
உண்மையில் சுபாஷ் என்பவன் தான்...
அத்தியாயம் 22
கார்த்திக் பதறியடித்துக் கொண்டு ஜமீனை அடைய மதில் சுவறுகளில் எரிந்து கொண்டிருக்கும் மின் குமிழ்களை தவிர மாளிகையையே கும்மிருட்டில் இருந்தது. காவல்நிலையத்தில் வேலை முடிந்தும் வீடு செல்ல மனமில்லாது அமர்ந்திருந்தவனுக்கு கவியின் அலைபேசியிலிருந்து குறுந் செய்தி வந்திருக்கவே! அதில் சீக்கிரம் ஜமீன் மாளிகைக்கு வரும் படி இருக்க என்ன விஷயம் என்று கேட்டு...
அத்தியாயம் 25
ஆதிக்கு ஊர் பிரச்சினை பத்தாதென்று கார்த்தி, ஆரு பிரச்சினை பெரிதாக மண்டையை குடைந்துக் கொண்டிருக்க, புதிதாக தந்தையை கொன்ற சுபாஷ் சந்திரன் வேறு எந்த நேரத்தில் எந்த மாதிரி பிரச்சினையை உருவாக்குவானோ என்று கலங்கடித்துக் கொண்டிருந்தான். அவனை தந்தையை கொன்ற வழக்கில் பிடித்து சிறையில் அடைப்பது கடினம் என்று அறிந்திருந்தவன் அவன் இப்பொழுது...