Advertisement

அத்தியாயம் 12
தான் தான் கார்த்திக் அருகில் இரவு தங்கணும் என்று ஆருத்ரா அடம் பிடிக்க, 
“இன்னும் கல்யாணம் கூட ஆகல ஆரு சொன்னா கேளு” மேனகை அதட்ட அழ ஆரம்பித்தாள் ஆருத்ரா. 
தன்னவள் தன்னோடு இருந்தால் நன்றாக இருக்கும், என்று கார்த்திக்கின் மனம் கூவினாலும், அவள் அழுத அழுகையும், அவன் ஆதியிடம் பேச வேண்டியுள்ளதாலும்,  ஒருவாறு ஆருத்ராவை சமாதானப் படுத்தி மேனகையுடன் அனுப்பி இருந்தான் கார்த்திக். மேனகை சக்கரவர்த்தி என அனைவரும் சொல்லியும் ஏன் ஆதி சொல்லியே கேட்க்காதவள் கார்த்திக் சொல்லவும் அரைமனதாக கிளம்பி இருந்தாள். அவர்கள் சென்ற பின்  சோவென ஒரு மழையடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவ்வறை. 
அறையில் கவி, ஆதி, கார்த்திக்கை தவிர யாருமில்லை. ஆதி தான் பேச்சை ஆரம்பித்தான். 
“என்ன நடந்தது ப்ரோ” 
ஆதியின் அக்கேள்வியில் அவன் எதை பற்றி கேக்கின்றான் எனப் புரிய நேற்றிரவு ஆருத்ரா அழைத்து பேசியது கார்த்திக்கின் நியாபகத்தில் வரவே! கவியின் பார்வையும் ஆதியை தொட்டது. 
“என்ன கார்த்தி முகம் சுவிட்ச் போட்டா மாதிரி பிரகாசமா இருக்கு” 
“ஆருவ நினைச்சி சிரிச்சேன் அம்முமா…”  
“ம்.. தக்காளி…”
“நா நிறத்தை சொல்லல குணத்தை சொன்னேன். காலைல ஒரு குட் மார்னிங், மாலைல குட் ஈவினிங், நைட் தூங்கும் போது குட் நைட், மத்யானத்துக்கு குட் ஆப்டர் நூன்”   
“என்ன டா ஆச்சு உனக்கு? இதைத்தான் சொல்லுவாங்க? புதுசா சொல்லுற மாதிரி சொல்லுற?”
“புதுசா தான் இருக்கு. அவ ஒவ்வொரு தடவையும் கால் பண்ணும் போது டோசேர் னு சொல்லி பல தடவ பேசாம இருந்திருக்கேன். ஆனா ஒவ்வொரு தடவையும் கோபப்படாம “சரி கார்த்திக் நா அப்பொறம் கால் பண்ணுறேன். நீங்க பிசியா இருப்பீங்க” னு எஸ்.எம்.எஸ் பண்ணுவா. அவளுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்த்தி னு நினைக்கிறேன். இல்ல நா எப்போ போன் பண்ணாலும், பிசியா இருக்கேன், பிசியா இருக்கேன் னு சொன்னா செம்மயா திட்ட தொனனும் இல்ல. என்ன தான் சொல்லுறா னு போன அட்டென்ட் பண்ணி காதுல வச்சா.. வார்த்தைக்கு வார்த்த கார்த்திக் கார்த்திக் னு என் பேர சொல்லுறா”
கார்த்திக் ஆருத்ராவுக்கு பொறுமை ரொம்ப அதிகம் என்று நினைத்திருக்க, அது கார்த்திக்கிடம் மட்டும் தான் என்று அவனோ! அறியவில்லை. அவனிடமும் அவளின் பொறுமை எல்லை மீறும் போது…   
“அப்பொறம்” ஆவலாக  கவி
“நா என்ன கதையா சொல்லி கிட்டு இருக்கேன்” 
“நல்லாதானே போய் கிட்டு இருக்கு? வை மா?” கார்த்திக்கின் தோளில் தட்டிய கவி மேல சொல்லு எனும் விதமாக செய்கை செய்ய
“பிடிச்சிருக்கு அம்மு.. குழந்தைத்தனமா அவ பேசுற விதம், அவ பேசும் போது சிரிக்கிறது. எல்லாமே பிடிச்சிருக்கு, மனசு புல்லா அப்படியே நெறஞ்சி இருக்கிறா. யாருமில்லா நடு ரோட்டுல போய் கத்தனும் னு போல தோணுது” தனக்குள் தோன்றி இருக்கும் காதலின் அறிகுறிகளை உணராது  கார்த்திக் பேசிக் கொண்டே போக 
“ஓகே அப்போ அவ கூட வெளில போய் என்ஜோய் பண்ணு” ஏதோ தனக்கு தெரிந்ததை சொன்னாள் கவி.
“நான் கூப்பிட வருவாளா?”
“கூப்பிட்டு பாரேன்..” என்றவள் கார்த்திக்கின் அலைபேசியை எடுக்க அது அடித்தது. திரையில் “ஒன் அண்ட் ஒன்லி பொண்டாட்டி” என்று ஆருவின் புகைப்படம் வரவும்    
“என்ன பா.. இது?” கவி 
“அன்னைக்கி பொண்ணு பார்க்க போனப்போ என் போன எடுத்து அவளே சேவ் பண்ணா” கார்த்திக் கொஞ்சம் வெட்கப் பட  
தான் இது போல் என்றுமே ஆதியிடம் பேசவில்லை என்ற எண்ணம் தோன்ற “நீ கலக்கு மச்சி” என்றவாறே அவர்கள் பேசட்டும் என்று அவ்விடத்தை விட்டு அகன்றாள் கவி. 
ஆருவின் கொஞ்சல் மொழிகளை ரசித்த பின் “ஆரு நாளைக்கு நாம ரெண்டு பேரும் வெளில போலாமா?” கார்த்திக் 
“என்ன போலீஸ்காரரே! எந்த போதி மரத்துக்கடியில ஞ்னோதயம்   பெற்றீங்க?”
“உனக்கு வர முடியாதுன்னா பரவால்ல ஆரு வேற ஒரு நாள்ல போலாம்” அவள் கிண்டல் செய்வதைக் கூட புரியாமல் “தான் ஏதாவது தப்பாக கேட்டு விட்டோமோ” என்று கார்த்திக் பேச
“சரியான மரமண்ட” தன்னவனை செல்லமாக திட்டியவாறே “நான் வர முடியாதுன்னு சொன்னேனா? என்ன நீங்க தான் ஹாஸ்டல் வந்து பிக்கப் பண்ணனும்” அதன் பின் ஆருத்ராவை பேச விட்டு அவளின் பேச்சை ரசிக்க ஆரம்பித்தான் கார்த்திக்.  
இங்கே கவியோ ஆதித்யாவுக்கு அழைப்பு விடுக்கவா? வேண்டாமா? என்று மனதோடு பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருந்தவள் “கவி யு கென் டு இட்” என்றவாறே ஆதிக்கு அழைப்பு விடுத்த கவி, ஹலோ சொன்னா என்ன சொல்வதென்ற பதட்டம் மேலோங்க அலைபேசியை துண்டித்தாள். 
சிறிது நேரத்திலையே கவியின் அலைபேசி அடிக்க திரையில் ஆதியின் எண் எம்.எல்.ஏ என்று மின்ன புன்னகை எட்டிப் பார்த்தாலும் வேறு பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அலைபேசியை காதில் வைக்க 
“என்ன டாக்டரம்மா.. எங்க நியாபகம் எல்லாம் வந்திருக்கு? சமூகத்துக்கு என்ன உதவி வேணும்” 
“நீங்க எப்பவுமே இப்படித்தான் பேசுவீங்களா?”
“என்னமா பண்ணுறது. யாரும் நலம் விசாரிக்க போன் பண்ண மாட்டாங்களே! ஏதாவது காரியம் ஆகணும் னா மட்டும் தான் போன் பண்ணுறாங்க. சரிமா…. நீ எதுக்கு போன் பண்ண” ஆதி என்னமோ உண்மையைத்தான்  சொன்னான். கவிக்கு தான் ஒரு தடவையாவது அழைப்பு விடுத்து அன்பாக பேசவில்லை என்பது உறுத்தியது. 
 “என்ன ப்ரோ கேள்வி கேட்ட உடனே கனவு காண போயிட்டீங்க? தரைக்கு வாங்க” ஆதியின் பேச்சு கார்த்திக்கோடு என்றாலும் பார்வை முழுவதும் கவியின் மேல் இருந்தது. 
ஆருவை அழைத்துக் கொண்டு முதன் முதலாக வெளியே செல்வதால் முதலில் கோவிலுக்கு செல்லலாம் என இருவரும் முடிவு செய்து அந்த முருகன் கோவிலை அடைந்தனர். 
வெளியே அரச்சனைத்தட்டையும் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றவர்கள் வேலனை கண்மூடி வணங்க 
“வேலா என் கார்த்திக்கோடு முதல் முதலா உன்ன பாக்கத்தான் வந்தேன். நான் கார்த்திக்கூட சந்தோசமா வாழனும், எங்க ரெண்டு பேருக்கிடையிலும் சண்டையென்பதே வரக் கூடாது, அவருக்கு எல்லாமா நான் மட்டும் தான் இருக்கணும். எக்காரணத்தை கொண்டும் அவர்கிட்ட இருந்து என்ன பிரிச்சிடாத” ஆரு தன்பாட்டுக்கு வேண்டுதல்களை அடுக்க,
“உன் பொறுமையில் தான் உன் சந்தோசம் இருக்கு மகளே!” அந்த சிங்காரவேலன் அவளை பார்த்து குறும்பாக சிரித்தான்.
கார்த்திக் கண்களை திறக்க ஆருத்ரா இன்னும் கண்மூடி வாயால் ஏதோ முணுமுணுத்தவாறு வேண்டிக் கொண்டிருந்தாள். அவளின் கண்மணியோ மூடிய கண்களுக்குள் நர்த்தனமாட அவளின் ஜிமிக்கி கம்மலும் சேர்ந்து ஆடியது. அந்த இளங்காலை பொழுதுல் சூரியனின் கதிர்கள் அவளின் முகத்தில் விழ அவளின் மேனியின் நிறத்தை இன்னும் தூக்கிக் காட்ட கார்த்திக் ஆருவையே! கண்சிமிட்டாமல் பாத்திருந்தான். 
“டேய் கார்த்திக் அடங்கு இது கோவில்” அவனின் மனசாட்ச்சி நியாபகப்படுத்தவும் முயன்று தன் பார்வையை திருப்ப அங்கே ஒருவன் இவர்களை பாத்துக்க கொண்டிருப்பது கார்த்திக்கின் கண்களில் பட்டது. 
கார்த்திக் அவனையே பாத்திருக்க, சாமி கும்பிட்டவன் அகன்றான். “கார்த்திக் ரொமன்ஸ் பண்ண வேண்டிய நேரத்துல போலீஸ் ஆகுறியே! தனக்கு தானே புலம்ப, அவனின் போலீஸ் மூளையோ தானாக இயங்கி கண்களை சுழலவிட, சந்தேகப்படும் படியாக யாரும் இல்லை. 
“யாரை தேடுறீங்க கார்த்திக்” ஆருத்ராவின் கேள்விக்கு தலையசைத்து மறுத்தவன் 
“ஒண்ணுமில்ல வா… இப்போ எங்க போலாம்?” 
“ம்ம்.. முதல்ல வண்டிய  எடுங்க போகிற போக்குல யோசிக்கலாம்”  
இருவரும் பேசியவாறு வெளியே வந்து வண்டியில் அமர்ந்து கார்த்திக் வண்டியை கிளப்பும் போது பக்கவாட்டிக் கண்ணாடியில் கோவிலுக்குள் இருந்தவன் தெரிந்தான். அவன் கார்த்திக்கை பார்த்தவாறே யார் கூடயோ அலைபேசியில் உரையாட வண்டியை நிறுத்தி இறங்கவும் அவனும் இறங்கவே கார்த்திக்கின் போலீஸ் மூளை “எதுவோ சரியில்லை” என்று எச்சரிக்க, அவனிடம் சென்று என்ன எது என்று விசாரிக்க அவன் கார்த்திக்கை தள்ளி விட்டு ஓட முனைந்ததில் கார்த்திக் அவனை அடிக்க அவனோ கத்தியை எடுத்து குத்த முயல கார்த்திக் சுதாரித்து விலகியும் கத்தியின் நுனிப்பகுதி வயிரை கீறிவிட்டது.
நொடியில் நடந்த சம்பவத்தால் ஆருத்ரா அதிர்ச்சியில் கத்த, கார்த்திக் மறுகையால் அவனின் கையை பிடித்து முறுக்கி கத்தியை கீழே தட்டி விட்டு கழுத்திலும், அவனின் மார்பிலும் இரண்டு அடிகள் கொடுக்க அவன் மடங்கிச் சரியும் போது காலால் ஒரு உதை விட்டவன் அவனின் கைகளை பின்னால் மடக்கி விளங்கிட்டிருந்தான். 
பிரதான சாலையில் அமைந்திருந்த கோவில் என்பதால் கூட்டமும் கூடி விட, போலீஸும் உடனே வந்தனர். அவனை லாக்கப்பில் அடைக்குமாறு சொன்ன கார்த்திக் கவிக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அம்பியூலன்ஸ்சும் வந்து சேர அழுது கொண்டிருந்த ஆருத்ராவோடு ஏறியவன் மருத்துவமனைக்கு வரும் போது மயங்கி இருந்தான். 
காயம் ஆழமாக இருக்கவில்லையானாலும் கத்தியில் விஷம் தேய்க்கப்  பட்டிருப்பதாக டாக்டர் சொல்ல வீட்டாருக்கு அதை பற்றி சொல்ல வேண்டாம் என கார்த்திக் கேட்டுக் கொண்டதில் அவன் ஒரு போலீஸ் என்ற ஒரே காரணத்துக்காக டாக்டரும் ஒத்துக்கொண்டிருக்க வீட்டாருக்கு இவ்விசயம் தெரியாமல் போனது. 
“என்ன சொல்லுற கார்த்தி” கவி அதிர்ச்சியாக கேக்க அந்த அதிர்ச்சி ஆதிக்கு இல்லை போலும் 
“டாக்டர் என்கிட்டே சொன்னார்” என்று ஒற்றை வரியில் சொன்னவன் “அவன் யாரு ஆள் என்று விசாரிக்க சொல்லி இருக்கேன். அது விசயமாத்தான் சீனு போனான் பாக்கலாம்” 
“எனக்கென்னமோ! அவன் என்ன குத்த வந்தவன் போல தோணல, ஆருவ தான் குத்த வந்திருப்பான். குத்த கூட வேணாம் சின்ன கீறல் போட்டாலே போதும் விஷம் தடவிய கத்தி என்பதால்” அதற்க்கு மேல் பேசவோ யோசிக்கவோ பிடிக்காமல் கார்த்திக் கண்களை மூட 
“ஆதி… ஆருவ கொல்லுற அளவுக்கு யாருக்கு அவ மேல என்ன பகை?” பதட்டமான கவி தன்னையறியாமளையே! ஆதியின் கைகளை பிடித்திருந்தாள். 
ஆதித்யாவுக்கு மினிஸ்டர் நல்லதம்பியின் வேலையாக இருக்குமோ! என்ற எண்ணம் இருந்தாலும் கவியை பயமுறுத்த விரும்பாமல்
“எனக்கென்னமோ! அவன் கார்த்திக் விசாரித்ததில் தான் குத்திட்டு ஓட பாத்திருப்பான்னு தோணுது அம்மு” என்றவன் அவள் கைகளை விலக விடாது தன் இரு கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான். 
ஏதோ ஒருவனை விசாரிக்க சென்றதில் நடந்த கைகலப்பில் ஏற்பட்ட சாதாரண காயம் என்று கவி நினைத்திருக்க கொலை முயற்சியென்றதும் அவளின் உடல் உதற ஆரம்பித்தது. கவியின் கையை பிடித்திருந்த ஆதியும் அதை உணர 
“ஏய் அம்முமா.. ஒன்னும் இருக்காதுடா..” என்று ஆறுதல் படுத்த 
“கார்த்திக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா..?” கண்கள் கலங்கியவாறே ஆதியை ஏறிட கவியை ஆறுதல் படுத்தும் வேலையில் இறங்கினான்.  
இவர்கள் பேசுவது கார்த்திக்கின் காதில் விழ புன்னகைத்தவன் கவியை ஆதி தன்னை விட நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியுடன் கண்ணயர்ந்தான். 
கார்த்திக் கண்விழிக்கும் போது கவி ஆதியின் தோளில் தூங்கி இருக்க, ஆதி சீனுவோடு மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான். 
 கவி பிறந்ததிலிருந்தே அவளுக்கு எல்லாமாக தான் இருக்க இன்று அவள் ஆதியின் தோளில் உரிமையோடு சாய்ந்திருப்பது  கார்த்திக்கு கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது.
கவியை வாஞ்சனையாக பார்த்திருந்தான் கார்த்திக். கவி தன்னையறியாமளையே தூங்கி இருக்க, அவள் ஆதியின் இடது தோளில் தலை சாய்த்திருந்தாலும் ஆதியின் இடது கை அவளின் வலது கையேடு கோர்த்திருக்க, கவியின் இடது கையோ சோபாவின் கைப்பிடியை பிடித்திருந்தது. அவள் அசௌகரியமாக தூங்கிறாள் என்ற கவலை கார்த்திக்கு ஏற்பட  கவியை கட்டிலில் தூங்க வைக்கலாம் என்று எழுந்தமர அவன் புறம் திரும்பினார் சீனு, மற்றும் ஆதி. 
“என்ன கார்த்திக் ஏதாவது வேணுமா?”  தங்களுடைய பேச்சை நிறுத்தி ஆதி வினவ 
“அம்மு தூங்க கஷ்டப்படுறா அவளை தூக்கி கட்டில்ல வச்சா நிம்மதியா தூங்குவா?” சொல்லியவாறே தானே தூக்கி படுக்க வைக்க கவியின் அருகில் வந்தான் கார்த்திக். 
“வை ப்ரோ? அவளே தூங்கிக் கிட்டு இருக்குறதால என் தோளுல சாஞ்சி இருக்கா. எங்க நான் அசைஞ்சா  அவ கண்ணு முழிப்பாளோ னு ஒரு மணித்தியாலமா ஒரே பொசிஷன்ல உக்காந்து இருக்கேன். என் குட்டி சந்தோசத்தை கெடுக்குறதுலயே! குறியா இருக்கிறியே! முதல்ல நீ இருக்குற கண்டிஷனுக்கு வெய்ட் எல்லாம் தூக்கலாமா?”
ஆதி பேச ஆரம்பிக்கவும் முழித்த கார்த்திக் கடைசி வாக்கியத்தில் புன்னகைத்தவாறே “கவி கண்ணு முழிக்கட்டும் இப்போ நீ சொன்னதை போட்டுக் கொடுக்குறேன்” 
கார்த்திக் அவ்வாறு சொல்ல தான் என்ன சொன்னோம் என்று யோசித்த ஆதி “ஏன் டா… உனக்கு இந்த கொலவெரி” என்றவாறே சிரிக்க 
“மச்சான், மாப்புள தங்கச்சி எந்திரிச்சி பிறகு அவங்கள வீட்டுல விட்டுட்டு பேசலாம்” எப்பொழுதும் கிண்டலாக பேசும் சீனு இன்று சீரியஸ்ஸாக பேச யோசனைக்குள்ளானான் கார்த்திக். 
இரவு உணவோடு வானதி வர அப்பொழுது தான் கார்த்திக்கும் பசியை உணர்ந்தான். கவி ஆதியின் தோளில் தூங்குவதை பார்த்து விட்டு ஒரு புன்னகையை மாத்திரம் சிந்திய வானதி கார்த்திக்கு உணவை பரிமாறி ஊட்டியவாறே 
“மாப்புள, சீனு நீங்க ரெண்டு பேரும் இப்போ சாப்பிடுறீங்களா?” 
இல்ல அத்த இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும்” ஆதி உடனே சொல்ல 
“மாப்பிளைக்கு கவி சிஸ்டர் எதிரிக்கும் வர பசி, தூக்கம் ஏன் வாஸ்ரூம் போக கூட தேவ வராது” ஆதியை வாரியவன்  “பகல் சாப்பிட்டதே நெஞ்சு வரைக்கும் இருக்கு நானும் அப்பொறம் சாப்பிடுறேன்” சீனு சிரிக்க 
“சிரிக்காதடா கவி எந்திரிக்க போறா” ஆதி சீனுவை அதட்ட 
“உன் கஷ்டம் உனக்கு. இப்போ உன்ன என்ன செஞ்சாலும் நீ அசைய மாட்டல்ல” சீனு கண்ணடிக்க 
“டேய் அடங்கு இவ மட்டும் எந்திரிக்கட்டும் உன்ன வைச்சி செய்றேன்” 
“நீங்க வேற மாப்புள தூங்கினா இடி காதுல விழுந்தாலும் எந்திரிக்க மாட்டா” வானதி சொல்ல தூங்கும் கவியை பார்த்தான் ஆதி. அவளோ புன்னகை முகமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
கவி கண்முழிக்கும் போது வானதி கார்த்திக்கு ஊட்டிய தட்டை கழுவ சென்றிருக்க, சீனு டி சாப்பிட்டுக் கொண்டிருக்க, கார்த்திக் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தான். கார்த்திக்கை கண்ட பின் தூக்கம் தூர ஓட யார் மேல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் மறந்து வாயையும் மூக்கையும்  அவன் சட்டையில் நன்றாக தேய்த்தவாறு உரசி விட்டே எழுந்துக் கொள்ள போனவள் ஆதி தான் அருகில் இருப்பதை கண்டு இவ்வளவு நேரமும் அவன் தோளில் தூங்கியது நியாபகம் வர “சாரி” என்று சொல்ல
“உரிமையுள்ள இடத்துல தூங்க எதுக்கு சாரி கேக்குற? அம்முமா…” காதல் நிரம்பிய குரலில் ஆதி சொல்ல வெக்கப்பட்டு தலைக்கு குனிந்தாள் கவி.  
 அன்றுதான் கவி இவ்வளவு வெக்கப்பட்டு கார்த்திக்கே பார்த்தான். ஆதியியும் ரசனையாக அவளையே பாத்திருக்க வானதி வரவும் அனைவரும் அட்டென்ஷனில் அமர்ந்தனர். 
“எந்திரிச்சிட்டியா? நைட் இங்கயே இருப்பியா? இல்ல வீட்டுக்கு வருவியா?” வானதி கொஞ்சம் கிண்டல் குரலில் கேக்க 
“வராம எங்க போக போறேன். வரேன்”  அன்னையின் கிண்டலுக்கான காரணம் புரிய தெனாவட்டாகவே சொன்னால் கவி.
“சரி சாப்பிடுறியா? வீட்டுக்கு போய் சாப்பிடுறியா?”  
“கார்த்திக் கூட யாரு தங்குறது..?” கவி ஆதியை ஏறிட 
“நாங்க இருக்கோம் சிஸ்டர் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” 
“அப்போ வீட்டுக்கு போய் சாப்பிடுறேன்” 
“சீனு வாசுவை வர சொல்லி அம்முவையும், அத்தையையும் பத்திரமா வீட்டுக்கு விட்டுட சொல்லு” 
“நானும்  கூட போகவா?” 
“வாசு பாத்துப்பான்” 
கவி மற்றும், வானதியின் தலை மறைந்ததும் “என்ன பிரச்சினை ப்ரோ? யாரு என்ன னு கண்டு பிடிச்சாச்சு?” கார்த்திக் கேள்வி எழுப்ப ஆதி சொல்ல ஆரம்பித்தான். 

Advertisement