Advertisement

அத்தியாயம் 4
ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஆதித்யாவின் எண்ணமெல்லாம் வானதி தேவியை சந்தித்த போது பேசியவைகளே மனதில் உழன்றது. 
சீனு விசாரித்ததில் கார்த்திக்கின் தந்தை சித்தார்த் மற்றும் கவியின் தந்தை பித்யுத் இருவரின் நட்பு, மற்றும் ஆசை வரை தோண்டித் துருவி இருக்க ஆருவின் ஆசை  நிறை வேறுமா என்ற சந்தேகம் தோன்ற அவனின் ஒரே நம்பிக்கை வானதி தேவியாகிப் போனார். 
வானதி தேவி விவசாயத்துறையில் பி.எச்.டி பெற்று தற்போது இன்றைய இந்தியாவின் ஏழைகளின் பசியையும், வறுமையையும் போக்க இயற்க்கை விவசாயம்  மற்றும், குறுகிய இடத்தில் பலதரப்பட்ட மரம் செடி கொடிகளை வளர்ப்பது எப்படி என்ற ஆராச்சிக் குழுவில் அங்கம் வகிப்பவர்.
ஆதித்யா காலேஜ் படிக்கும் போதே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்க, அது சம்பந்தமாக டில்லியில் புகழ் பெற்ற விவசாய கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றும் போது வானதி தேவியை சந்தித்து பேசியும் இருக்கின்றான். வேறு துறையில் இருக்கும் ஆதித்யாவுக்கு விவசாயத்தின் மீது இருக்கும் பற்றும், தமிழன் என்ற ஒரே காரணமும் வானத்திற்கு போதுமானதாக இருக்க அவர்களின் உறவு நல்ல முறையில் தொடர, சில சமயம் காலேஜ் மாணவர்களுக்காக ஊக்கமளிக்கும் பேச்சாற்ற ஆதித்யாவை அழைப்பாள் வானதி. 
அவனின் அழகும், கம்பீரமும், ஆளுமையான பேச்சும் மாணவர்களை கட்டிப் போட்டதும் மட்டுமல்லாது வருங்கால ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற மரியாதையும் அவன் மேல் வைத்து, அவனின் வசீகர பேச்சை கேட்கவெனவே கூட்டம் கூடும். 
ஐ.ஏ.எஸ் பரிட்ச்சை அதன் பின் தந்தையின் இழப்பு என்று கிட்டத்தட்ட நான்கு, ஐந்து வருடங்கள் தொடர்ப்பு விட்டிருக்க, டில்லியில் வசித்த வானதி தேவியை கவியின் அன்னையாக சென்னையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்க வில்லை.
வானதி தேவியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தவன் பெர்சனல் என்று குறிப்பிட்டிருக்க, கல்யாண விஷயம் என்றறியாதவர் ஆபீசிலையே சந்திக்குமாறு சொல்ல ஆதித்யாவுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், ஒரு எம்.எல்.ஏ என்று அறிந்தும் உடனே சந்திக்காமல் நேரம் ஒதுக்கி அவரின் நேர்மையை பறைசாற்றி இருக்க வானதியை நினைத்து பெருமை அடைந்தான். 
குறிப்பிட்ட நேரத்தில் வானதி தேவியை ஆதி சந்திக்க அங்கே தஞ்சை எம்.எல்.ஏ வாக அவனை எதிர் பார்க்காத முகபாவத்தை காட்டி அதன் பின் இன்முகமாக நலம் விசாரித்தவர் அவனின் ஐ.ஏ.எஸ் கனவு என்னானது என்று ஆரம்பித்து அவனின் இன்றைய சாதனைகள் வரை அலசி விட்டே அவன் வந்த காரணத்தை விசாரித்தார்.
அவன் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவர். “இல்ல ஆதி என் கணவரும் சித்து  அண்ணாவும் ஆசப் பட்ட ஒரே விஷயம் கவி, கார்த்தி கல்யாணம் தான். இந்த விசயத்துல நா ஒன்னும் பண்ண முடியாது” உடனே மறுத்தார். 
நேற்று ரெஸ்டூரண்ட்டில் கவி, கார்த்தியை சந்தித்ததையும் கவி பேசியதையும் சொன்னவன் “நீங்க பலவந்தமான கல்யாணம் பண்ணி வச்சாலும் அவங்க சந்தோசமா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? நிச்சயமாக இருக்காது. அவங்க உறவை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க ப்ளீஸ்” என்றவன் வேறெதுவும் பேசாது எழுந்துக்க கொள்ள 
“உங்களுக்காக நா ஒரு தடவ என் கணவர் கிட்ட பேசுறேன்” என்ற வானதி வணக்கம் வைக்க ஆதியும் இந்த முகமாகவே விடை பெற்றான். 
வானதி ஒரு தடவையாவது முயற்சி செய்கிறேன் என்று சொன்னாலும் கவி கார்த்தியை அவர் நன்கு புரிந்து தான் வைத்திருக்கிறார். இந்த சம்பந்தத்தை மறுக்க அவருக்கு எந்த காரணமும் இருக்காது அப்படி அவர் சம்மதித்து விட்டால் வரளி நாயகியை எவ்வாறு சம்மதிக்க வைப்பதென்று அவன் யோசிக்கலானான். பாவம் கவியை சம்மதிக்க வைப்பதெப்படி என்பதை மறந்து விட்டான்.
“ராணி மா…”  கேட்டினுள் வண்டியை உருட்டிக் கொண்டு வந்தவாறே கவி ஆர்ப்பரிக்க, என்றும் போல் அவளுக்காக காத்திருந்த அவளின் செல்ல ராணிமா கேட்டை பூட்டினார். 
“இன்னைக்கு என்ன பண்ணி இருக்கீங்க? பெருங்குடல் சிறு குடலை பிராண்டுது” எந்நாளும் போல் சொல்லியவாறே வண்டியை நிறுத்தியவள் அவரின் தோளில் கை போட்டுக் கொண்டு உள்ளே செல்ல 
“இன்னைக்கி வாழைப்பூ வடை செஞ்சி இருக்கேன். கைய நல்லா சோப்போட்டு கழுவு. அப்போ தான் தருவேன்” என்றவர் டி தயாரிக்க பாத்திரத்தை அடுப்பில் வைத்தார்.
அவரிடம் செல்லம் கொஞ்சியவாறே கை கழுவாமல் சாப்பிட்டு விடுபவளை டாக்டராக போற இப்போவாச்சும் கை கழுவிட்டு சாப்பிடு” கிண்டலாக சொல்லிக் கொண்டிருந்தவர் இப்பொழுதெல்லாம் கை கழுவாவிடின் சாப்பாட்டை கண்ணில் காட்டாமல் இருக்க கவியும் சமத்தாக போய் கை கழுவி விட்டு வந்தாள். 
அவள் முன் வாழைப் பூ வடைதட்டை வைத்தவர் டீயையும் வைக்க “என்ன ராணிமா இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்கீங்க? நீங்க செல்லமா வளர்க்கிற துளசிச் செடில இலை ஏதும் உதிர்ந்து போயிருச்சா” சாப்பிட்டவாறே அவரை வம்புக்கு இழுத்தாள் கவி. 
கவி ராணி என்கின்ற  ராணிலதாவுக்கு பெறாத மகள். டில்லி ரயில்வே ஸ்டேஷனில் கட்டிய கணவன் விட்டுச் சென்றதில் அனாதையாக அமர்ந்திருந்தவரை அன்பால் அரவணைத்தவள் தான் கவி. வானதி கண்டிப்பாக இருப்பதாலையே அவளோடு ஒட்டாதாத கவி ராணியுடன் நன்கு ஒட்டிக் கொள்ள வெகுளியான ராணியும் கவியின் அன்பில் கரைந்தே போனார். 
“ஏன் கவி  தேவி சொல்லுறத போல நீ கார்த்தியையே கல்யாணம் பண்ணா என்ன?” 
“நீங்களும் அம்மா பேச்சு கேக்க ஆரம்பிச்சிட்டீங்களா?” சாப்பிடுவதை நிறுத்தியவள் அவரை முறைக்க ராணியின் முகம் உடனே சுருங்கியது. 
“ராணிமா… இங்க பாருங்க, கார்த்தி எனக்கு பிரிண்டு மட்டும் தான். அவனை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது. நானும் அவனும் இந்த விசயத்துல தெளிவா இருக்கோம். தேவிமா தான் புரிஞ்சிக்காம பேசுறாங்க. உங்களையும் பிரைன் வாஷ் பண்ணிட்டாங்களா?” ராணியின் முக சுருங்கலை கண்டு சமாதானமாக கவி விளக்க 
“இல்ல தேவி சொல்லுறத போல நீ கார்த்தியையே கல்யாணம் பண்ணா நானும் உன் கூடவே இருந்திடுவேனே அதான் சொன்னேன்” கண்கள் கலங்கியவர் புடவை முத்தியால் கண்களை ஒற்றிக் கொள்ள 
அவர் அருகில் வந்த கவி அவரை கட்டிக் கொண்டு பிறந்த வீட்டு சீதனமாக என் ராணிமாவும் என் கூடவே வருவாங்கனு என்ன கட்டிக்க போறவன் கிட்ட சொல்லுறேன். ஒத்து கிட்டாதான் கல்யாணம் இல்லையா? வேற ஆள் பாக்க வேண்டியதுதான்” சிரித்தவாறே ராணியின் கன்னத்தில் முத்தம் வைக்க, பேருக்கு சிரித்து வைத்தார் ராணி.
கவி அவரின் செல்ல மகளாகிப் போக அவளின் திருமண கனவுகளை கவி காண்கிறாளோ இல்லையோ ராணிமா அவளுக்காக காண்கிறார். அடிக்கடி கவியிடம் ஒரு ராஜகுமாரன் தான் உன்ன கட்டிக்க போறான் என்பவர், கவி, கார்த்தி கல்யாணம் பற்றி வீட்டில் பேசியதும் கவி மறுக்க அவள் பக்கம் பேசிக் கொண்டிருந்தவர் கல்யாணம் ஆனால் கவி புகுந்த வீடு செல்ல வேண்டுமே! அவளை பிரிந்து தன்னால் இருக்க முடியுமா? என்ற கேள்வி எழ அவளிடம் மெதுவாக சொல்லிப் பார்க்க அவளோ! அவளின் கூற்றில் உறுதியாக நின்றாள். 
குடும்பத்தை என்னாது தன் சுகம் தான் பெரியது என்று சுயநலமாக இருக்கும் அண்ணனுடன் கூட பொறந்த பாவத்துக்காக அவன் கல்யாணம் பண்ணி கூட்டிக் கிட்டு வந்த அண்ணி என்பவளின் குத்தீட்டி சொற்களுக்கு பயந்து வாய் திறவாத அப்பாவி ஜீவன் தான் ராணிலதா. ஒரு பெங்காலிப் பெண். 
தன் மகள் படும் பாட்டை பார்த்து எப்படியாவது அவளை கல்யாணம் பண்ணிக்க கொடுத்தால் போதும் என்று அவளுடைய தந்தையும் சரியாக விசாரிக்காமல் அவளை பிடித்து விட்டது என்று சொன்ன மாப்பிளை வீட்டாருக்கு பொண்ணை கட்டிக் கொடுக்க, அவனோ ராணியின் அப்பாவித்தனத்தையும், வெகுளியான பேச்சையும் கண்டு தனக்கு பொருத்தமில்லாதவள் என்று டில்லி ரயில்வே ஸ்டேஷனில் அமரவைத்து அவளின் வாழ்க்கையிலிருந்தே சென்றிருந்தான். 
தனியாக அமர்ந்திருந்தவள் மக்கள் கூட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்க எட்டே வயதான கவி தான் ராணியை கண்டு அவளோடு முதலில் பேசினாள். சிறுமி என்பதால் அவளோடு சகஜமாக பேசிய ராணி திரும்பாத திரும்ப சொன்னது “அவர் இங்கயே இருக்க சொன்னார் இப்போ வந்து விடுவார்” என்பதே! 
அவளின் பேச்சிலையே பித்யுத்துக்கு புரிந்து விட்டது போனவன் வர மாட்டான் என்று. ரயில்வே காவல்நிலையத்தில் புகார் செய்து விட்டு ராணியை தங்களோடு அழைத்து சென்றது கவியின் குடும்பம். 
ராணியின் சிறு தகவலோடு போலீஸின் உதவியோடும் ராணியின் தந்தையிடம் பேச தலையில் அடித்துக் கொண்டு அழுத்தவர் “அவளை நீங்களே கூட்டிட்டு போங்க ரெண்டு வேளையாவது சாப்பிட்டு நன்றாக இருக்கட்டும்” என்று விட கவியோடு ஒட்டிக் கொண்ட ராணியும் மறுக்காது இவர்களோடு வந்து விட்டாள். தந்தையின் இறப்புக்கு மட்டும் ஊர் சென்றவர் அதன் பின் செல்லவே இல்லை. 
தேவியோடு சேர்ந்து தோட்டக்கலையை கற்று வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பது ராணியின் பொழுதுபோக்காக, மறுமணத்தை  மறுத்து விட்டார். அவரை அவர் போக்கிலையே விட்டு விட்டனர் கவியின் குடும்பம்.  
“ஹலோ மாமா என் விஷயம் என்னாச்சு” ஆரு ஆதிக்கு அழைத்த உடன் கேட்டு விட 
“இப்போ தானே மனு கொடுத்து இருக்க மறு பரிசீலனை பண்ணி கிட்டு இருக்கேன்” ஆதியும் அவளை வெறுப்பேத்த 
“என்னது? இங்க பாரு மாமா கார்த்தியை மட்டும் எனக்கு கட்டி வைக்கல நா பொல்லாதவளாகிடுவேன்” 
“நீ ஏற்கனவே ராட்சசி மாதிரி தான் இருக்க இதுல இன்னும் மாறனும் நா ரேத்த காட்டிரியானா தான் உண்டு” ஆதியின் அலைபேசியை பறித்து சீனு சொல்ல ஆருவின் கோபம் சுறுசுறுவென ஏறியது. 
“டேய் அண்ணா என் சாபம் உன்ன சும்மா விடாது. கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம அலைய போற” 
“ஆமா இப்போ மட்டும் ஆறு பொண்ணுங்கள கை வளைவுல வச்சி சுத்தி கிட்டு இருக்கேன் பாரு. சாபம் விடுறாளாம் சாபம். நா எல்லாம் சாபம் விட்டா உனக்கு பத்து ஆண் கொழந்தைக்க பொறக்கணும் அதுங்க பின்னாடி நீ ஓடியே உன் உடம்புல இருக்குற மொத்த கொழுப்பும் குறையனும் னு சாபம் விடுவேன்” சீனு உளறிக் கொண்டிருக்க பல்லை கடித்தாள் ஆரு. 
அவனிடமிருந்து அலைபேசியை வாங்கிய ஆதி “கார்த்திக் உன்ன லவ் பண்ணுறதா இருந்தா நீ ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருப்ப. அவனை கரெக்ட் பண்ணா முடியாதுனு நல்லா புரிஞ்சதால என் மண்டைய உருட்ட ஆரம்பிச்சிருக்க. இங்க பாரு பொம்மு இந்த விசயத்த எடுத்தோம் கவுத்தோம் னு பண்ணா முடியாது. முதல்ல உன்ன பொண்ணு பாக்க வர அவங்க சம்மதிக்கட்டும் அப்பொறம் பாட்டி கிட்ட நா பேசுறேன். அவங்கள சமாளிக்கிறது கஷ்டம்னு உனக்கு நல்லாவே தெரியுமே! அப்பொறம் உன் அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க, உங்கப்பா சபைல பேசக் கூடாததை பேசி கல்யாணத்தையே நிறுத்துவார். நா தணியாத எவ்வளவு வேலையை தான் பாக்குறது. தாத்தா கிட்ட மட்டும் தான் பேசி புரிய வைக்க முடியும். உன் காதல் உண்மையா இருந்தா எல்லாம் நல்லதாகவே நடக்கும்” 
“அப்போ என் காதல் உண்மை இல்லைங்கிரியா?’ இவ்வளவு நேரமும் சொன்னதை விட்டு விட்டு ஒற்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்தாள் ஆரு.  
“முடியலடா சாமி” என்றவன் சீனுவிடம் அலைபேசியை கொடுத்து விட்டு தாத்தாவை காண சென்றான்.
“ஸ்… கார்த்தி” கவி மெதுவாக கார்த்தியை அழைக்க சாப்பாட்டு மேசையில் அமர்ந்து பசி வெறியில் ருசியறியாது உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவன் அவளின் அழைப்பு காதில் விழ “என்ன” என்ற பார்வையோடு மீண்டும் சாப்பாட்டில் கவனமானான். 
“இன்னைக்கு வீடு ரொம்ப அமைதியாக இருக்கு, ஹிட்லர் தேவி அவங்க ரூம்ல ஏதோ யோசனையிலையே இருக்காங்க. எனக்கென்னமோ இது சரியா படல. ஒரு வேல நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண ஒத்துக்கலைனா? பாய்சன் சாப்பிடுவேன், தூக்குல தொங்குவேன்னு மிரட்ட யோசிக்கிறாங்களோ” கவி கீழுதடை கடித்தவாறே யோசனையாக சொல்ல 
பசிவெறியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அவனின் தேவிமா சாப்பிட வராததை அப்பொழுதுதான் கண்டான். கவி சொன்னதை கேட்டு அப்படியும் இருக்குமோ என்று அவனின் சிந்தனை சென்றாலும், தேவி அந்தமாதிரி செய்யும் ஆளில்லை என்று அவன் அறியாததா? அடுத்த கணம் என்ன ஏதோ என்றவன் சாப்பாட்டு தட்டோடு அவரின் அறையினுள் நுழைந்திருந்தான் கார்த்திக். 
“சரியான சாப்பாட்டு ராமனா இருக்கான் விட்டா தட்டையும் சேர்த்து முழுங்குவான் போல” என்றவளின் கண்ணுக்குள் சாப்பிட்டு கொண்டிருந்த ஆரு வர “தக்காளி தான் உனக்கு பொருத்தமா இருப்பா” வாய் விட்டே முணுமுணுத்தவள் “கவி அவ உனக்கு எனிமி அவளை போய் கார்த்திக் கூட” தலையை உலுக்கிக் கொண்டவள் கார்த்திக்கும், தேவியும் என்ன பேச போறாங்க என்பதில் கவனமானாள். 
“என்ன தேவிமா சாப்பிட வரமா என்ன யோசனை?” ஆதி சொன்னதில்லையே உழன்றவர் திடுமென கார்த்தியின் குரல் கேக்கவே “என்னப்பா……” 
“சாப்பிட வராம என்ன யோசனை னு கேட்டேன்” மீண்டு அதே கேள்வியை முன் வைக்க 
“நீ போலீஸ்காரனா இருக்குறதால இப்படி அக்கியூஸ்ட்  கிட்ட விசாரிக்கிறது போல கேக்க கூடாது. எனக்கும் பசிக்குது” என்றவர் தட்டோடு அமர்ந்து விட கவி அமைதியாக தலை குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 
கார்த்தியும் அவரின் அருகிலையே அமர்ந்து அவரின் பதிலுக்காக காத்திருக்க 
“நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணனும் என்கிறது என் ஆசையில்லை உங்க பெத்த அப்பாக்களின் ஆசை. நியாயமான ஆசையும் கூட. ஆனா நீங்க ரெண்டு பேரும் அத மறுத்தீங்க” சொல்லியவாறே தனக்கு பறிமாற்றிக்கொள்ள 
“இது தெரிஞ்ச விஷயம் தானே” என்று கவி கார்த்திக்கை பார்க்க அவன் அவளை கண்களால் சமாதானப் படுத்தலானான்.
“ஆனா எனக்கென்னமோ நீங்க ரெண்டு பேரும் உங்க மனச சரியா புரிஞ்சிக்கல அதனால ஆறு  மாசத்துக்குள்ள யாராவது ஒருத்தர் காதல்ல விழுந்தா அப்பா கிட்ட பேசுறேன்னு சொன்னே. மூணு மாசம் ஆகியும் ஒன்னும் நடக்கல. நீக்க லவ் பண்ணவும் இல்ல. உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் வேற யாரையும் லவ் பண்ணல”
“அதான் இன்னும் மூணு மாசம் இருக்கே” கவி பாய்ந்து சொல்ல அவளை முறைத்த வானதியின் பார்வை சொன்னது இன்னும் மூன்று வருடங்கள் சென்றாலும் நீ யாரையும் லவ் பண்ணா மாட்டாய் என்று. 
“அதனால நா ஒரு முடிவு பண்ணி இருக்கேன்” 
கார்த்தி, கவி இருவருமே ஒரே குரலில் “என்ன முடிவு”  
“நா பாக்குற மாப்புளைய கவியும், நா பாக்குற பொண்ண நீயும் கட்டிக்கணும்” 
“ப்…இவ்வளவுதானா. நா சம்மதிக்கிறேன். கவியும் சம்மதிப்பா” கார்த்திக் உடனே சொல்ல 
கவியின் சிந்தனையோ அன்னை தந்தையுடன் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை எடுத்தாரா? அப்பா சம்மதத்துடன் தான் சொல்கிறாரா? என்பதிலையே இருந்தது. 
“என்ன கவி யோசிக்கிற?” கார்த்தி அவளை உலுக்க 
“பாக்குற மாப்புளையும், பெண்ணும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களா இருக்கணும். நானும் கார்த்திக்கும் கடைசி வரைக்கும் பிரியவே கூடாது. அப்படினா எனக்கு ஓகே” தன்னுடைய முடிவை கவி சொல்ல, கார்த்திக் அவளை அன்பாக பார்த்திருக்க,  இவர்களின் உறவு எத்தகையது என்ற பார்வைதான் தேவியிடம்.

Advertisement