Advertisement

அத்தியாயம் 18
சுபாஷ் சந்திரன் சென்னையில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர். வயது முப்பதுக்கு மேல்… மனைவி சாந்திபிரியா. காதல் திருமணம். இரண்டு பசங்க. காதல் கணவன் அன்பான தந்தை. வீடே கதி என்று இருக்கும் மருமகன். ஏழைகளுக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதன். இதுதான் சுபாஷ் சந்திரனின் வெளித்தோற்றம். 
உண்மையில் சுபாஷ் என்பவன் தான் உயிர்வாழ பிறரை வேட்டையாடும் ஒரு கொடிய மிருகத்தையும் ஒப்பிட முடியாத படி கொடூரமானவன். 
வாழ்க்கையில் சாதிக்கணும், கடுமையாக உழைத்து முன்னுக்கு வரணும் என்பது சுபாஷின் கனவாக இருக்க அவன் தேர்தெடுத்த வழி குறுக்கு வழி. அது சாந்தியை காதலித்து கல்யாணம் செய்து அவளுடைய சொத்துக்களை அடைவதே. 
படிப்பால் அவளுடைய கம்பனியில் வேலைக்கு சேர்ந்தவன் சில, பல திட்டங்களை தீட்டி சாந்திப்ரியாவை தனது வலைக்குள் சிக்க வைத்தவன் அவளே அவனை காதலிப்பதாக சொல்லவும் வைத்தான். 
சாந்திபிரியா பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் பார்ப்பவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகி. சாம்பசிவத்தின் ஒரே வாரிசு. அவளுக்கு என்ன பிடிக்கும் என்று அவளுக்கே தெரியாது. சுபாஷின் பெயரை பிடித்தே அவனோடு பேச ஆரம்பித்தாள். அவன் அழகை விட கம்பீரமும், நேர்கொண்ட பார்வையும் அவளை ஈர்த்தது. தானே வலியச் சென்று பேசினாலும் ஒதுங்கிப் போகிறவனை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது. சுபாஷின் நடிப்பில் தன்னிலை மறந்து அவனிடம் மனதை பறிகொடுத்து விட்டாள். 
அவனிடம் போய் காதலை சொல்லவும் சாந்தியை நன்கு அறிந்திருந்த சுபாஷ் மறுப்பேதும் சொல்லாது வேலையை விட்டு வெளியேற தந்தையிடம் போய் நின்றவள் சுபாஷ் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கலானாள். 
சுபாஷை இளமையானவன், கடுமையான உழைப்பாளி, பொறுப்பானவன். இளரெத்தம் சாதிக்கணும் என்று துடிப்பவன் இதுதான் சாம்பசிவம் அவனிடம் கண்டவைகள். நேர்மையான நல்ல மனிதரான சாம்பசிவம் சுபாஷுக்கு தனது ஒரே மகளை கட்டிக் கொடுக்க இரண்டு தடவை கூட யோசிக்கவில்லை. உடனே சம்மதம் சொல்லி கல்யாணத்தையும் பெரிய விழாபோல் கொண்டாடியவர். அனைத்து பொறுப்புக்களையும் மருமகன் வசமாக்கினார்.
ஒருவன் எவ்வளவு நாள் தான் நடிக்க முடியும்? சுபாஷ் பெண் பித்தனோ? குடிகாரனோ? சூதாடுபவனோ அல்ல மாறாக  அவனின் குறிக்கோள் பணம் மட்டுமே! அதை சம்பாதிக்க நேர்வழி இல்லையென்றால் குறுக்கு வழியில் செல்பவன். 
அவர்களுடைய மருந்துக் கம்பனியை இந்தியாவின் நம்பர் ஒன்னு கம்பனியாக மாற்றும் பொருட்டு அடுத்து இருக்கும் சிறு சிறு கம்பனியை கண்காணித்து அவர்களின் கண்டு பிடிப்புக்களை திருடினான். கேள்வி கேட்பவர்களை கொன்றும் விடுவான்.
மனைவியின் மேல் காதலா? மோகமா? அவளிடம் மாத்திரம் அடங்குபவன். குழந்தைகள் அவனுடைய இரத்தம் என்பதால் பாசம் காட்டுகின்றானா அது அவனுக்கே வெளிச்சம்.  
மருமகனிடம் எல்லா பொறுப்புகளையும் விட்டு விட்டு கோவில், குளம் என்று இருந்த சாம்பசிவத்துக்கு மருமகனின் செய்கைகள் தகவலாக வர அதை பற்றி அவனிடம் நேரடியாகக் கேக்க அவரை ஆக்சிடண்டில் கொல்ல திட்டமிட்டவன் அவன் நினைத்தது போல் செய்து முடிக்க, அவனது திட்டத்தில் தீயை வைத்து கண்டு பிடித்து சாம்பசிவத்திடமே கார்த்திக் சொல்ல சுபாஷுக்கு எதிரியாகிப் போனான் கார்த்திக்
தன்னை கொல்ல துடிக்கும் மருமகனிடமே  சென்று நடந்த விபத்தைக் கூறி விசாரிக்கும் படி சொல்ல உண்மையை அறிந்துக் கொண்டால் மாமனாரால் தனக்கு என்றுமே பிரச்சினை என்று சாம்பசிவத்தை கொன்றே ஆவதென்ன உறுதி எடுத்தான். 
சாம்பசிவம் நேர்மையான மனிதர். பணம் பணம் என்று அழைபவரும் அல்ல. மகள் காதலிக்கிறாள் என்றதும் சுபாஷின் திறமையையும், நேர்மையையும் மாத்திரம் பார்த்தவர் அவன் அனாதையென்றோ! ஏழை என்றோ! குளம், கோத்திரம் என்று எதையும் அலசாமல் எல்லா சொத்தையும் அவன் பெயரிலையே எழுதி வைத்தவர். அதுவே அவனுக்கு வினையாவது அறியாமல் சுபாஷ் தன் இஷ்டத்துக்கு ஆடிக்கொண்டிருந்தான். 
மருமகனிடம் சொல்லி ஒரு மாதமாகியும் எந்த விசாரணையும் நடைபெறாததால் அதை பற்றி சுபாஷிடமே கேட்டார் சாம்பசிவம். 
அதற்கு அவன் போலீசில் சொல்லி விசாரித்தால் வீண் பிரச்சினை, பிரைவட் டிடெக்டிவ் வைத்து விசாரித்ததாக சொன்னவன் அவர் சென்ற வண்டி அவனுடைய வண்டியென்பதால் அவனை கொல்ல சதி நடந்திருக்கக் கூடும் என்றும் அவரின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லையென்றும் அவரை நம்ப வைத்தான். 
அவரும் அவனை முழுவதுமாக நம்பி அவனுடைய பாதுகாப்புக்கு ஆட்களை ஏற்படுத்தி விட்டு நிம்மதியாக நடமாட, ஒரு நண்பனின் மகனின் திருமணத்துக்கு கோயம்புத்தூர் சென்ற இடத்தில் வண்டி மோதி இறந்து விட்டார். 
விமானத்தில் கோயம்புத்தூர் சென்றவருக்கு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து தனியாக வண்டியை ஓட்டிச் செல்லும் நேரம் பார்த்து திட்டமிட்டது போல் வண்டியை விபத்துக்குள்ளாகி கொலை செய்தான். அவனின் அடியாலோ! கையாலோ! செய்திருந்தாலும் சூத்திரதாரி அவனே! 
“என்ன எம்.எல்.ஏ சார் அந்த சுபாஷோட பைல இப்படி மொறச்சு பார்த்துக் கொண்டு இருக்கிறீங்க” சீனு ஆதியை சீண்ட உள்ளே நுழைந்தான் கார்த்திக். 
“வா கார்த்தி உக்காரு” 
“என்ன ப்ரோ பெரிய யோசனையாக இருக்கிறீங்க” அமர்ந்தவாறே கார்த்திக் கேள்வி எழுப்ப 
சுபாஷின் கோப்பை அவன் கையில் கொடுத்தவன் “படி” சென்று சொல்ல 
படித்து விட்டு அதை மூடி வைத்தவன் “என்ன போட்டுத்தள்ள நாள் பார்த்துக் கொண்டு இருக்கிறவன் இவனா?” 
தீரனிடம் பேசி ஆதியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கார்த்திக் ஒன்றும் அமைதியாக இருக்கவில்லை. சாம்பசிவத்தை கொல்ல முயற்சி செய்வதை கண்டு பிடித்ததற்கே தன்னை கொல்ல பார்த்தவன். அவனை அடையாளம் கண்டு கொண்டு விட்டதாக தெரியவந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆபத்து என்று புரிய அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்து, வெளியே செல்லும் கவி, ஆருத்ராவின் பாதுகாப்பை தன் கைக்குள் கொண்டு வந்தான்.  
சென்னையில் போல் வெவ்வேறு காலேஜ் இல்லாமல் ஒரே காலேஜாக இருக்க அவர்களை பிக்கப், டிராப் என்று தானே பார்க்க “நீ போலீஸ்காரனா? பாடிகார்ட்டானே? தெரியல கார்த்தி” கவி கிண்டலடிக்க, 
கணவனோடு தனியாக பயணிக்க முடியாமல் கூடவே கவி வருவதை பிடிக்காமல் முகத்தை சுருக்கினாள் ஆருத்ரா. கணவனோடு பைக்கில் செல்ல ஆசைப் பட்டாலும் காரிலேயே செல்ல நேர்வதால் அதற்கும் காரணம் கவி என்று கணவனிடம்  பொருமினாள் 
அவளின் உள்ளக் குமுறலை புரிந்துக் கொள்ளாமல், ஆபத்தை பற்றியும் கூற விருப்பமில்லாமல் ஆதியின் வேலை பளுவையும், இருவரும் ஒரே இடத்துக்கு செல்வதற்கு எதற்கு இரண்டு வண்டி என்று கூறலானான். 
இன்று ஆதி அழைக்கவும் தன் எதிரியை கண்டு பிடித்தாயிற்று என்று புரிய அவனை என்ன செய்யலாம் என்று தான் ஆதியின் முகம் நோக்கி அமர்ந்திருந்தான்.
“எனக்கு சென்னைல போஸ்ட்டிங் கிடைக்கும் என்று நினைத்து சென்னையில் உள்ள எல்லா துறைகளையும் அலசி ஆராய்ந்ததில் சுபாஷின் பெயரும், அவனின் மருந்து கம்பனியை பற்றியும் ஏகப்பட்ட புகார்கள். போஸ்ட்டின் பஞ்சாப்ல கிடைச்சதும் நான் கலைக்ட் பண்ண தகவல்களை சென்னைக்கு வரும் கலெக்டர் கிட்ட கொடுத்துட்டேன். அதன் பிறகு அப்பாவின் திடீர் மரணம். நான் எம்.எல்.ஏ ஆனது எல்லாம்… அப்பவே அவனை பத்தி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல. சொந்த மாமனாரையே கொன்னு இருக்கான். அவனை எப்படி பிடிக்கிறது? ஒன்னும் புரியல” ஆதி நெற்றியில் ஆள்காட்டி விரலை தேய்க்க 
“சொத்து பூரா அவன் பேர்ல தானே இருக்கு? அப்போ எதுக்கு மிஸ்டர் சாம்பசிவத்த போடணும். அவனை புரிஞ்சிக்கிறதே கஷ்டமா இருக்கு. வில்லங்கம் புடிச்ச வில்லனால்ல இருக்கான்” சீனு கோப்பை எடுத்து மீண்டும் படிக்கலானான். 
“அவன் மாமனாரையே போட்டான்னா… ஏகப்பட்ட கொலைல சம்பந்தப் பட்டிருப்பான்னு தோணுது” கார்த்திக் சொல்ல 
வண்டி சாவியை வைக்கவென உள்ளே வந்த வாசு சுபாஷின் போட்டோவைக் கண்டு “இது சுபாஷ் சார் இல்ல” என்று கையில் எடுத்துக் பார்க்க, ஆதியும் கார்த்திக்கும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 
“உனக்கெப்படி சுபாஷை  தெரியும்” ஆதி 
“அட செத்துப் போன மினிஸ்டர் நல்லதம்பி கூட அப்பா ஒரு நாள் இவரை பார்க்க போய் இருந்தாரு. நான் தான் வண்டி ஒட்டிக் கொண்டு போனேன்” வாசு அது ஒரு சாதாரண சந்திப்பாக நினைத்து கூற 
“என்னைக்கு போன?” கார்த்திக்
“என்ன பேசினாங்க?” ஆதி
ஆதியும் கார்த்திக்கும் ஒரே நேரத்தில் கேள்வி எழுப்ப 
“அது ரொம்ப நாள் அண்ணா.. உங்க அப்பா உயிரோட இருக்கும் பொழுது. ரெண்டு வருஷத்துக்கு மேலாகுது. என்ன பேசினாங்க னு தெரியல. என்ன வெளியவே நிக்க வச்சிட்டாங்க” வாசு பொறுமையாகவே பதில் சொல்ல 
“தந்தை இறப்பதற்கு முன்பா?” என்ற யோசனையில் ஆதி இருக்க, 
“அதற்கு பிறகு அவங்க மூணு பேரும் சந்திக்கவே இல்லையா? எக்ஸ் மினிஸ்டர் நல்ல தம்பி மட்டுமாவது சந்திச்சசிருக்க வாய்ப்பிருக்கு தானே? அன்னைக்கி சந்திக்க போகும் போது, சந்திச்சிட்டு வரும் போது உன் அப்பாவும், எக்ஸ் மினிஸ்டர் நல்ல தம்பியும் என்ன பேசிக்கிட்டாங்க” கார்த்திக் போலீஸாக மாறி கேள்விகளை அடுக்க, 
“அந்த நேரம் எலெக்சன் வருது ஐயாவும், எங்க அப்பாவும் தான் வேட்பாளராக நின்னாங்க, காட்ச்சிக் கூட்டம், தேர்தல் பத்திதான் ஏதோ பேசினாங்க. சரியா நியாபகத்துல இல்லனா…..  அப்பா போய் பார்க்கல ஆனா அந்த மினிஸ்டர் தனியா அவரை போய் பார்த்தாரானு தெரியல” வாசு மண்டையை சொரிய 
சீனு, கார்த்திக், ஆதி மூவரினதும் முகத்தில் குழப்ப ரேகைகளோடு யோசனை பாவத்தைக் காட்ட 
” வேட்பாளரா ஐயா நிக்குறதால நானும் எங்கப்பாவை ஒதிங்கிக்க னு சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். அந்த நல்லதம்பியோட பேச்சு கேட்டு ஆடித் தீர்த்துட்டாரு” வெறுமையான குரலில் வாசு
“அந்த சுபாஷோடு அன்னைக்கி என்ன பேசிக்கிட்டாங்க னு தெரிஞ்சா, அவனை அடக்க ஏதாவது க்ளூ கிடைக்கும்” 
“சுபாஷ் கிட்ட கேக்க முடியாது. மினிஸ்டர்  செத்துப் போய்ட்டான். இருக்குறது வாசு அப்பா பச்சமுத்து மட்டும்தான். அந்த ஆளு வாய் திறப்பானா?” சீனு வாசுவை பார்த்தவாறே கேக்க 
“மினிஸ்டர் கொலை பண்ணது யாரென்றே இன்னும் கண்டு பிடிக்கல” கார்த்திக் 
“ஆமா அண்ணா அந்த மினிஸ்டர் போனதிலிருந்து எங்கப்பா பித்து புடிச்சவர் மாதிரி இருக்குறாரு. கனவு கண்டு கத்துறாரு. அவரை சமாதனப் படுத்துறதே கஷ்டமா இருக்கு” வாசு கவலையாக சொல்ல 
“அப்பாவை நாட்டு வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போனியா?”   அக்கறையாக ஆதி
“பெரியய்யா கிட்ட விசயத்த சொன்னப்போ வைத்தியர் வந்து பார்த்துட்டு அப்பாக்கு அதிர்ச்சி, எதற்கோ பயந்து போய் இருக்கிறான் னு சொல்லி நல்லா தூங்கவும், மன அமைதிக்கவும் கசாயம் கொடுத்தாரு” 
“இந்த நிலைல அவர் கிட்ட ஒன்னும் விசாரிக்க முடியாதே!” ஆதி 
“அட நீங்க வேறண்ணா ஆமை கிட்ட இருந்து சிறகு கூட பறிக்கலாம் எங்கப்பா கிட்ட இருந்து ஒன்னும் வாங்க முடியாது. இப்போ அவர் இருக்குற மனநிலைமைல தான் விசயத்த கறக்க முடியும்”
“என்னடா சொல்ல வர” சீனு ஆவலாக வாசு தன் திட்டத்தை விவரிக்கலானான். 
இவ்வளவு நேரமாகியும் கணவன் அறைக்கு வராததால் கவி வெளியே வர படிகளில் ஏறிக் கொண்டிருந்தான் ஆதி. 
அவளைக் கண்டு சிரித்தவன் அவளை தூக்கிக் கொண்டே அறைக்குள் சென்று தட்டாமாலை சுற்ற 
“விடுங்க ஆதி தல சுத்துது” கவி கத்த அதை கண்டுகொள்ளாமல் ஆதி சுத்தி விட்டே கீழே இறக்கி விட,  தலை கிறுகிறுவென சுத்த அவன் மேலையே விழுந்தாள் கவி 
“ஹேய் என்னாச்சு கவி” என்றவாறு அவளை தாங்கி கட்டிலில் அமர்த்த 
“என்னால இப்படியெல்லாம் சுத்த முடியாது தல சுத்தும் ராட்டினம் எல்லாம் ஏற மாட்டேன்” என்றவள் அவன் நெஞ்சிலில் சாந்து கண்மூடி அமர்ந்திருக்க வானதியை சந்தித்து பெண் கேட்ட பொழுது அவர் சொன்னது நியாபகத்தில் வரவே தன்னையே நொந்து கொண்டான் ஆதி. 
“சாரி” கவி 
“பரவால்ல உங்களுக்கு தெரியாம தானே பண்ணீங்க. எனக்கு எனக்கு.. இன்னொரு பிரச்சினையும் இருக்கு” தயங்கியவாறே சொல்ல 
“தெரியும். அத்த ஏற்கனவே சொன்னாங்க” அவள் பேசாமல் இருக்க வாயில் விரலை வைத்தவன் தலையணையில் அவளை படுக்க வைத்து தானும் அவள் அருகில் படுத்துக் கொள்ள 
“எப்போ?” அவன் முகத்தையே பார்த்திருந்தாள் கவி. 
அவள் முகத்தில் விழுந்திருந்த ஓரிரண்டு முடியை ஒதுக்கியவாறே “உன்ன பொண்ணு கேட்டு வந்தப்போ” 
“ஆமால்ல கல்யாணம் பண்ண போகும் போது மறைக்க கூடாதில்ல” விரக்தியாக புன்னகைக்க 
அவள் எண்ணம் புரிந்தவனாக “எனக்கு மட்டும் தான் தெரியும். வீட்டுல வேற யாருக்கும் தெரியாது” 
“தெரிஞ்சா என்ன ஏத்துக்க மாட்டாங்களா?” தொண்டையடைத்துக் கொண்டு வர 
“சே, சே.. அப்படியில்ல. உனக்கிருக்குறது பிரச்சினையே இல்ல. நீ நல்லா தானே இருக்க, தெரிஞ்சா உன்ன சங்கடமா பார்ப்பாங்க. நோயாளி மாதிரி கவனிப்பாங்க, அது உனக்கும் சங்கடமா இருக்கும். அதான் சொல்லல நீ மனச போட்டு குழப்பிக்காத. சரியா” குழந்தைக்கு சொல்லி புரிய வைப்பது போல் சொல்ல 
ஜமீனின் மருமகள் எந்த ஒரு உடல் குறையும் இல்லாது இருக்க வேண்டும் என்று கவியை ஆதியின் வீட்டார்கள் மறுத்திருப்பார்கள் என்று கவிக்கு நன்றாகவே புரிந்தது. கணவன் தன் மேல் கொண்ட காதலால் வீட்டாரிடம் மறைத்தது மாத்திரமன்றி அவர்களை பற்றி குறை கூறாமல் பேச சிரித்தவாறே “சரிங்க எஜமான்” என்று ஆதியின் மூக்கை பிடித்து ஆட்ட அவள் கையில் முத்தமிட்டான் ஆதி. 
“ஆமா எம்.எல்.ஏ சார்கு குழந்தைனா ரொம்ப பிடிக்குமாமே! அந்த பேச்சையே காணோம்”
“அம்மா சொன்னாங்களா?” 
“அத்தையோட உத்தரவு நிறைய குழந்தைகளை பெத்துக்கணுமாம். சின்ன வயசுல நீங்க எனக்கு ஏன் தம்பி பாப்பா இல்ல,ஏன் தங்கச்சி பாப்பா இல்லனு சண்டை போடுவீங்களாமே!”
“ஹாஹாஹா ஆமா சீனு பய என்ன வெறுப்பேத்தவே! பொம்முவை தரமாட்டான். அதனால அம்மா கூட போய் சண்டை போடுவேன்” என்றவன் யோசனையாக “ஏன் கவி ப்ரெக்னன்ட் ஆனா ப்ரக்நன்சில ஏதாவது பிரச்சினை வருமா?” 
“நான் டாக்டர் பா… எந்த பிரச்சினையும் வராது. நாம நிறைய குழந்தைகளை பெத்துக்கலாம் ஓகே” கணவனின் கவலையை உணர்ந்து சொல்ல 
“அப்போ எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும் மொத குழந்தைக்கு வேலைய ஆரம்பிக்கலாம்” என்றவன் கவியின் பதிலையும் எதிர்பார்க்காது தன் வேலையை ஆரம்பித்திருந்தான்.  
இரண்டு நாட்களாக வாசு போட்ட திட்டத்தை செயல் படுத்த முடியாமல் காவல் நிலையத்தில் புதிதாக வந்த ஒரு கொலை வழக்கில் மூழ்கி இருந்த கார்த்திக் நாளை சரியான நாள் என்று நிம்மதியாக வீடு வர ஆருத்ரா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன பொம்மாயி ஒரே இங்லிஷ் பட பொம்மை மாதிரி மாறி இருக்க” அவளின் கன்னத்தைக்  கிள்ளியவாறே உள்ளே நுழைய 
“ரெண்டு நாளா வீட்டுக்கே வரல. பொண்டாட்டி காத்துக்கிட்டு இருப்பான்னு அக்கறை கொஞ்சமாவது இருக்கா? போன் போட்டா கூட எடுக்க மாட்டீங்க, அப்படி என்ன தல போற வேல அத்தான் கிட்ட கேட்டா பதிலில்லை சீனு வேற போன பிடுங்கி கட் பண்ணுறான்” பொரிந்துத் தள்ளிக் கொண்டே அவன் பின்னாடி வர 
அலைச்சலில் வீடு வந்தவனை இன்முகமாக வரவேற்காமல்  இப்படி நொய், நொய் னு பேசியே தலைவலியை ஏற்படுத்தியிருந்தாள் ஆருத்ரா. 
ஆருத்ரா ஒரு அடம்பிடிக்கும் குழந்தையென்று இத்தனை நாட்களில் புரிந்துக் கொண்ட கார்த்திக்கும் அவளிடம் எதிர்த்துப் பேசாது “ரொம்ப தலைவலிக்குது” என்று அவளை சரியாக புரிந்துக் கொண்டு சொல்ல 
அது சரியாக வேலை செய்தது பதறி துடித்தவள் அவனை இழுத்தமர்த்தி தலையை மெதுவாக பிடித்து விட கார்த்திக்கும் கண்மூடி அமர்ந்திருந்தான். 
“காபி போடவா…”
“இஞ்சி காபி தலை வலிக்கு இதமா இருக்கும். பசி வேற குடலை பிராண்டுது நான் போய் குளிச்சிட்டு வந்துடுவேனாம். நீ போய் எல்லாம் மேசைல எடுத்து வைப்பியாம். சூடா காப்பிய குடிச்சிட்டு இரண்டு நாள் பெண்டிங்லங் இருந்த வேலைய பார்க்கலாம் சரியா” 
அவன் சொன்ன நிலுவையில் இருக்கும் வேலை என்னவென்று புரிய “கார்த்தீ” என்று அவன் நெஞ்சில் சாய வந்தவளை தடுத்து அவள் முகத்தை தன் முகம் நோக்கி இழுத்து  இதழ் முத்தம் செய்யலானான். 
முத்தம் நீண்டுக் கொண்டே போனது தவிர விலகும் எண்ணம் ஆருத்ராவுக்கும் இல்லை. அவளை விடும் எண்ணம் கார்த்திக்கும் இல்லை. 
பசி மறந்து, தலைவலி  பறந்து கார்த்திக் அவளோடு சோபாவில் சரிய ஆருத்ராவும் பெரியவர்கள் இருந்தால் தொந்தரவு. யாருமில்லாமல் தாங்கள் மட்டும் இருக்கும் வீட்டில் இதை தான் எதிர்பார்த்தாளோ! கணவனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க அவர்களை தொல்லை செய்யவென “டாங் டாங்” என அடிக்க ஆரம்பித்தது அந்த நடுக்க கூடத்தில் வீற்றிருந்த பெரிய மணிக் கூண்டு. 
இரவு பதினோரு மணி. பதினோரு தடவைகள் அடிக்க ஆருத்ராவை விட்டு விலகி இருந்தான் கார்த்திக் 
எரிச்சலாக எழுந்தமர்ந்தவள் “ஏன் டா” என்ற பார்வையோடு கணவனை ஏறிட 
“குளிச்சிட்டு வரேண்டி… ரெண்டு நாளா ஒரே யூனிபார்ம். இன்னைக்கி மோர்சரிக்கு வேற போய்ட்டேன்” என்றவன் அவளின் பதில் எதிர்பார்க்காமல் மாடிப்படிகளில் தாவியேற 
“ஐயோ முதல்ல நான் போய் குளிக்கணும்” அருவறுப்போடு அவனை பின் தொடர 
‘நீயெல்லாம் எப்படி டாக்கருக்கு படிக்கிறியோ” கிண்டல் செய்தவாறே குளியலறைக்குள் நுழைந்திருந்தான் கார்த்திக் 
குளித்து விட்டு இருவரும் உணவுமேசையில் அமர சில்மிஷங்களோடு உணவை முடித்துக் கொண்டபின் கார்த்திக் சமையல்கட்டில் அமர்ந்து அவளை சீண்டிக் கொண்டிருக்க கார்த்திக் கேட்ட இஞ்சி காபியை தயாரிக்கலானாள் ஆரு. 
இதுவே பெரியவர்கள் வீட்டில் இருந்தால் இப்படி எங்க வேணாலும் ரொமான்ஸ் பண்ண முடியுமா? என்பது தான் ஆருவின் மனதில் வந்து போனது. 
“இந்நேரத்துக்கு சமையல்கட்டுல என்ன வேல? போய் படுங்க” என்பதோடு  எது செய்தாலும் ஒரு குறுகுறு பார்வை பார்த்து வைப்பார்கள்.  ஒரு மாமியார் பத்தாதென்று இரண்டு மாமியார். இந்த தொல்லையெல்லாம் இல்லாம நிம்மதியாக உணர்ந்தாள். 
வாசல் மணி அடிக்கவே “இந்த நேரத்தில் யாரு” என்றவாறே கார்த்திக் கதவை நோக்கி சென்றிருக்க அவனுக்கு காபி கலந்துக்க கொண்டு வந்த ஆரு கண்டது கணவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு அழும் கவியை.

Advertisement