Advertisement

அத்தியாயம் 8
“கார்த்திக் சித்தார்த் ஏ.சி. பி ஒப் ஹிட் அண்ட் ரன் டிபார்ட்மென்ட்” என்ற முழுப் பெயருடன் வந்திருந்தது அந்த வெள்ளை உறை கடிதம். அது அவன் இன்னும் மூன்று மாதங்களில் தஞ்சைக்கு மாற்றப்பட போகும் செய்தியை தங்கி வந்த  கடிதம். கார்த்திக் விரும்பியே கேட்டிருக்க உடனே கிடைக்கும் என்று அவனே நினைத்து பார்க்கவில்லை. இதற்க்கு பின்னால் ஆதி இருப்பதை அறியாமல் வானதியை அழைத்து விஷயத்தை கூற 
“முதல்ல ஆதிக்கு போன் பண்ணி நன்றி சொல்லிடு கார்த்தி” என்று சொன்ன பிறகுதான் அவனுக்கும் “அட ஆமா எம்.எல்.ஏ சாரை எப்படி மறந்தேன்” என்று தோன்ற உடனே ஆதிக்கு அழைத்தான்.
சீனு தான் முதலில் பேசினான். அவனோடு சில நிமிடங்கள் பேசிய பின்னே அலைபேசி ஆதியின் கைக்கு சென்றது. 
“சொல்லுங்க ப்ரோ. என்ன அப்பொய்ன்மெண்ட் ஆடர் கைக்கு வந்திருச்சா” சிரித்தவாறே ஆதி.
“தேங்க்ஸ் ப்ரோ. உங்க கிட்டயே நேரடியா கேட்டிருக்கலாம். உண்மையிலயே மறந்துட்டேன்” கார்த்திக்கும் புன்னகையுடன்.
“அட பரவால்ல ப்ரோ. உங்க பிரெண்ட விட்டுட்டு இருக்க மாட்டீங்க னு தான் இந்த ஏற்பாடு. உங்கள என் பக்கத்துலயே வச்சிக்கிற மாதிரி போஸ்டிங் போட்டிருக்கேன் பரவால்லையா?” 
“இட்ஸ் ஓகே ப்ரோ”
“இல்லனா பொம்மு என்ன உண்டு இல்ல னு ஒரு வழி பண்ணிடுவா”  
“பொம்மு…” 
“அட நம்ம ஆரு தான். உங்க அம்மு இங்க பொம்மு. ஆ.. கார்த்தி ஆரு கிட்ட கொஞ்சம் போன்ல பேசுங்க. கட்டிக்க போன்றவை கிட்ட கௌரவம் பார்த்தா ஆகாது. புரியுதா..”
“கொஞ்சம் பிசி  அதான்…” கார்த்தி இழுக்க 
“எவ்வளவோ பிசினாலும் ஒரு நாளைக்கு ஹாப் அண்ட் அவர் ஆச்சும் அவ போடுற மொக்கைய கேளுங்க இல்லனா என் காது ஜவ்வுதான் கிழியுது”
உண்மையிலயே கார்த்திக் ஒரு ஹிட் அண்ட் ரன் கேசில் மும்முரமாகத்தான் இருந்தான் ஆதி சொல்வது போல் அரைமணித்தியாலம்  நிமிடமாவது பேச முடியாமல் இல்லை. ஏதோ ஒரு தயக்கமும், என்ன பேசுவதென்ற குழப்பபமுமே ஆருவிடம் பேச விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.    
“சரி ப்ரோ நான் பேசுறேன்” 
“ஆ… அப்படியே உங்க பிரெண்டுக்கும்  என் கூட பேச சொல்லி அட்வைஸ் பண்ணுங்க. வீட்டுல உள்ள எல்லார் கிட்டயும் கடல போடுறா.. என் கிட்ட மட்டும் பேச மாட்டேங்குறா..” குரல் கொஞ்சம் விரக்தியாக ஒலிக்க “என் போனுக்கே கூப்பிட்டு அத்த கிட்ட கொடுங்க எம்.எல்.ஏ சார் னு சொல்லுறா.. ஆகா மொத்தம் குடும்பத்துல இருக்குற எல்லாரையும் உறவு முறை சொல்லி கூப்டுறா.. ஆனா கட்டிக்க போற என்னை மட்டும் ஒதுக்கி வைக்கிறா..” கடுப்பாக வந்தது ஆதியின் குரல். 
ஒரு எம்.ஏ.ஏ வாக ஆதியின் உயரம் கார்த்திக்கு நன்கு தெரியும். அவன் கவியுடன் பேச எடுக்கும் முயற்சியும் அவள் வழி வெட்டுவதும் தெரியும். ஆருவுடன் அவன் பேச மறுக்கும் காரணங்களே! கவிக்கும் இருக்கும் என்றெண்ணி இருந்தான்.
“சரி ப்ரோ நா பேச சொல்லுறேன்” 
“ஒன்னும் வேணா நா போன் பண்ணா அடென்ட் பண்ணி காதுல வைக்க சொல்லுங்க” ஆதி சொன்ன விதம் கார்த்திக்கு சிரிப்பை மூட்ட 
ஆர்த்மார்த்தமாக “தேங்க்ஸ் ப்ரோ” என்றான்
“ஹலோ ஹலோ நெஸ்ட் சண்டே ஜவுளி வாங்க போறோம், மண்டே நகை வாங்க, அப்படியே கல்யாண பத்திரிகை அச்சடிக்க கொடுக்க போறோம். உங்கள நீங்க ப்ரீயா வச்சிக்கோங்க அப்பொறம் பொம்மு என் தலையை தான் உருட்டுவா.. உங்க பிரெண்டையும் மறக்காம கூட்டிட்டு வாங்க” 
“தேவிமா.. சொன்னாங்க ப்ரோ. கவியும் பாட்டியை பார்க்கணும் னு ஆவலா இருக்கா” 
“ஏன் போன் ல பேசுறது பத்தாதாமா? அங்க வந்தும் செல்லம் கொஞ்சனுமா?” 
“நீங்க அவ கிட்டயே கேளுங்க ப்ரோ. ஐம் லிட்டில் பிசி ரைட் நவ்” என்றவன் அலைபேசியை துண்டித்தான். 
“நல்லா நழுவ தெரிஞ்சி வச்சிருக்கான்” ஆதி கடுப்பாக அலைபேசியை தூக்கிப் போட்டான். 
ஆதி நினைத்திருந்தால் துணி, நகை, ஏன் கல்யாண பத்திரிகை வரை வீட்டுக்கே வரவழைத்து வாங்கி இருப்பான். ஆனால் அவனின் தேவதையின் தரிசனம் அவனுக்கு கிட்டுமா? அதனாலயே! பாட்டி சொன்ன நல்ல நாளில் இரு குடும்பமும் ஜவுளி வாங்க கிளம்பினர். 
அந்த ஐந்து மாடி கட்டிடம் ஜவுளிகளின் ராஜாங்கமாக ஜொலித்தது. கீழே உள்ள தளம் முழுக்க பிறந்தது முதல் ஐந்து வயது வரையான குழந்தைகளுக்கும், ரெண்டாவது தளம் பாண்ட், ஷார்ட். டீ ஷார்ட் என்று அனைத்து ஆண்களின் உடைகளும், மூன்றாவது தளம் பெண்களுக்கான ஆடைகளும், நான்காவது தளம் கல்யாண பட்டு சாரிகள், வேட்டிகள், பார்ட்டி வெயர்ஸ் என்றும் ஐந்தாவது தளம் பெண்களுக்கான உள்ளாடைகள் மற்றும் நைட்டி போன்றவைகளும் என்று பெயர்பலகையில் இருந்தது. 
ஆதியின் அன்னையும், கர்ண விஜயேந்திரனையும் தவிர மற்ற அனைவரும் வந்திருக்க, கவியின் குடும்பம் அப்பாக்கள் இன்றி மின் தூக்கியின் முன் நின்றனர். அனைவரும் நலம் விசாரித்து கொண்டிருக்கும் போதே 
“அப்போவே வந்துட்டீங்க னு போன் பண்ணீங்களே! ப்ரோ” ஏன் லேட் என்பதை கார்த்தி ஆதியிடம் இவ்வாறு கேக்க
“பொம்முவை அவ ஹாஸ்டல் போய் கூட்டிக் கிட்டு வர கொஞ்சம் லேட் ஆச்சு” ஆதி சொல்ல ஆரு கார்த்திக்கை முறைத்துக் கொண்டிருந்தாள். 
கார்த்திக் வந்து அழைத்து செல்வன் என்று ஆரு எண்ணி இருக்க அவனோ! வீட்டாரோடு வரும் படி சொல்லி விட்டான். அந்த கோபத்தில் தான் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். 
கவி வரளி நாயகியோடு ஐக்கியமாகி விட ஆதியோ அவளை ஏக்கமாக பார்த்து வைத்தான்.
“முதல்ல கல்யாணத்துக்கும், நிச்சயதார்த்தத்துக்கும் பொண்ணு மாப்பிளைங்களுக்கு பட்டு புடவை, பட்டு வேட்டி சட்டையை வாங்கிடலாம். அப்பொறம் மத்தத பார்க்கலாம்” வரளி பாட்டி சொல்ல அனைவரும் ஏக மனதோடு ஒத்துக் கொண்டு மின்தூக்கியில் நுழைய சீனு கடை முதலாளியை சந்த்தித்து தஞ்சை எம்.எல்.ஏ அவருடைய கல்யாணத்துக்கு துணி வாங்க வந்திருப்பதாக தெரிவிக்க அவர்களை ராஜ மரியாதையுடன் வரவேற்றனர் கடை ஊழியர்கள். 
உங்களுக்கு பிடிச்சதை பாருங்க என்று வரளி நாயகி மணப் பெண்களுக்கு உத்தரவிட ஆருவும், கவியும் கடையையே புரட்டிப் போட்டு ஆரு ஐந்து புடவையையும் கவி ரெண்டே ரெண்டு புடவையையும் தேர்ந்தெடுத்திருந்தனர். 
ஆரு தேர்வு செய்த ஐந்தையும் கார்த்திக்கிடம் கொடுத்தவள் தனக்கு எது அழகா இருக்கும் என்று கேட்டு அவனையே செலெக்ட் பண்ண சொல்ல தனக்கு புடவையை பற்றி ஒன்னும் தெரியாது என்றவன் கவியின் கையில் இருந்த புடவைகளை கண்டு “அம்மு உன் செலக்சன் சூப்பர்” என்று பாராட்ட ஆருவின் கோபம் கவியின் மேல் திரும்பியது. 
“என்ன கார்த்திக் இப்படி பண்ணுறீங்க? அங்க பாருங்க உங்க வருங்கால மனைவி என் வருங்கால மனைவியை முறைக்கிறத” ஆதி கார்த்திக்கின் தோள் தொட்டு திருப்பிக் காட்ட 
“சத்தியமா எனக்கு புடவையை பத்தி ஒன்னும் தெரியாது” 
“முதல்ல போய் ஆரு கைல இருக்குற புடவைல ஒண்ண எடுத்து அவ கைல கொடுத்து இது நல்லா இருக்குனு சொல்லுங்க”  கார்த்தியை அனுப்பி விட்டு கவியிடம் வந்த ஆதி 
“என்ன ரெண்டு புடவை மட்டும் கைல வச்சிருக்க” 
“கல்யாணத்துக்கு ஒன்னு, நிச்சயதார்த்தத்துக்கு ஒன்னு”
“அப்போ சாந்திமுகூர்த்தத்துக்கு நா செலெக்ட் பண்ணுறேன்” என்று கண்ணடிக்க கவி அவனை முறைப்பதையும் பொருட்படுத்தாது “இது நலங்குக்கு நல்லா இருக்குமில்ல. கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாளே நம்ம குலதெய்வ கோவிலுக்கு போகணும். அப்போ இந்த ப்ளூ சாரியை கட்டு. மெகந்தி பங்க்சனுக்கு புடவையோ? லெஹன்காவா? உன் இஷ்டம். இன்னும் என்ன பங்க்சன் இருக்குனு பாட்டிகிட்டு கேட்டுட்டு வரேன்” என்றவன் வரளி நாயகியை நோக்கி நடந்தான். 
ஆதி நொடியில் தேர்வு செய்த புடவைகளை பார்த்தவள் “நல்ல ரசனை” என்றவாறே தன் மேல் வைத்து பார்க்கலானாள். 
சீனுவும், வாசுவும் அவர்களுக்கான துணிகளை எடுக்க ஆண்கள் பகுதிக்குள் சென்றிருக்க, ராணியும், வானதியும், தங்களுக்கும், சம்மந்தி வீட்டாருக்கும் துணிகளை வாங்க, வரளி பாட்டியின் உத்தரவு படி மேனகையும், சக்கரவர்த்தியும் அவர்களின் சார்பாக துணிகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். 
“ஆருத்ரா..” கார்த்திக் அழைக்க 
முதல், முதலாக தன் பெயரை அழைக்கின்றான் என்ற சந்தோச பூரிப்பில்லையே திரும்பிய ஆருவுக்கு இரட்டிப்பு சந்தோசமாக அவளின் கையை பிடித்து கண்ணாடியின் முன் நிறுத்தி அவள் தேர்வு செய்திருந்த புடவைகளை அவளின் மேல் வைத்து பார்த்து  “நல்லா இருக்கு” என்று கார்த்திக் புன்னகைக்க இவ்வளவு நேரமும் ஆருவின் மனதில் இருந்த சஞ்சலம் மறைந்தது. 
ஆதி என்னமோ ஒரு புடவையை கையில் கொடுக்கத்தான் சொன்னான். ஆருவின் சுருங்கிச் சிவந்த முகம் கார்த்திக்கின் மனதை பிசைய அவனையறியாமளையே அவளின் கைப்பிடித்து எல்லா புடவையையும் வைத்து பார்த்து நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டான். 
ஆதி வரளி நாயகியோடு பேசி கொண்டிருக்க அவன் தோள் உரச அருகில் அமர்ந்த கவி  அவன் மடியில் சில புடவைகளை வைக்க புருவம் உயர்த்தியவன் அவளின் செய்கைகளை ரசிக்க ஆரம்பித்தான்.
அவளோ அவனைக் கண்டு கொள்ளாது “பாட்டி இது அத்தைக்கு, {ஆதியின் அன்னை இளவரசி}  இது உங்களுக்கு” என்று இரண்டு புடவைகளை காட்ட புடவையை கையில் வாங்கிய வரளி நாயகி ஆதியை பார்த்து மனநிறைவாக புன்னகைக்க,  அவனோ அவன் லயாவை சைட் அடித்துக் கொண்டிருந்தான். 
“சரி வாங்க உங்களுக்கும், தாத்தாக்கு எடுக்கலாம்” கவி ஆதியின் கைபிடித்து தூக்க அவளின் பின்னால் சென்றவனின் மனமோ சிறகில்லாமல் வானில் பறந்தது. 
ஆருவுக்கு உள்ளாடைகள் சிலது வாங்க வேண்டி இருக்க “கார்த்திக் நா ஐந்தாம் தளம் வரை போய் வரேன். நீங்க இருங்க” நாசூக்காக சொன்னவள் நகர 
“நானும் வரேன் கவிக்கும் வாங்க வேண்டி இருக்கு” அவன் சாதாரணமாக சொல்ல கவி கார்த்திக்கின் உறவின் மேல் முதல் முதலாக ஆருவுக்கு சந்தேகம் உருவானது. 
ஐந்தாம் மடியை அடைய ஆரு அவஸ்தையாக கார்த்தியின் முன்னால் எப்படி சொல்லுவது, எவ்வாறு வாங்குவது என்று நெளிய அவனோ இந்த பிராண்ட் நல்லா இருக்கும், இது வெயில் காலத்துக்கு உகந்தது என்று ஆருவுக்கு கிளாஸ் எடுத்து கொண்டிருந்தான். அவளோ அவஸ்தையாக முக மாற்றத்தை மறைக்க பெரும் பாடு பட்டவாறே அவன் முகம் பார்க்கும் நேரமெல்லாம் இளித்து வைத்தாள்.  
கார்த்திக்கை பொறுத்தவரை அது ஒரு ஆடை அவ்வளவுதான். வெளியே தெரியும் படி அணியும் ஆடையல்ல அதனாலயே அதை உள்ளாடை என்கிறார்கள். ஹிட் அண்ட் ரன் டிபார்ட்மெண்டில் இருக்கும் அவன் நிறைய விபத்து நடந்த பெண்களை அம்பியூலன்சில் ஏற்றி நரஸ்சுக்கு உதவியாக இருந்திருக்கிறான். உயிரை காப்பாற்ற நினைப்பவனுக்கு ஆடையோ பெண்ணின் உடலோ! கண்ணுக்கு தெரியாது. விபத்தில் இறந்த பெண்களின் போஸ்டமோட்டம் செய்யும் இடத்திலும் இருப்பவன் அவன். அதனாலும் அவனுக்கு அவ்வாடைகள்  சாதாரணமாக தெரிய ஆருவால் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. 
மாதாந்த பிரச்சினையின் போது கவியுமே கார்த்திக்கை அழைத்து நாப்கின்ஸ் வாங்கி வரும் படி சொல்லுவாள். கவி, கார்த்திக் டில்லியில் சுதந்திரமாக வளர்த்தவர்கள் ஆண், பெண் பேதம் அவர்களுக்குள் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்பவர்கள். ஆனால் ஆரு தமிழ் நாட்டு கலாச்சாரத்தோடு வளர்ந்த பெண் அவளால் கார்த்திக்கை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. 
ஆனால் ஆதியோ அவர்களை நன்கு புரிந்து கொண்டான். நம்பர்கள் என்பதை தாண்டி அவர்களுள் வேரூண்டி இருக்கும் பாசப்பிணைப்பை கண்டு கொண்டான். அதையும் தான் அவன் லயாவின் மனதில் இடம் பிடிக்க காதலால் மட்டுமே சாத்தியம் என்பதை நன்கு உணர்ந்தான். அதற்க்கு லயா அவனை முழுமனதாக ஏற்று காதலிக்க வேண்டும். அவன் எடுக்கும் முயற்சிகளை முறியடிப்பதிலையே லயா இருக்க அவனும் தான் என்ன செய்வான்.  
குடும்பத்தில் உள்ளவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள், ஊரில் உள்ள வயதானவர்கள் என்று அனைவருக்கும் வாங்கிய பின்னே கடையை விட்டு அனைவரும் வெளியே வந்தனர். 
“காலை பத்து மணிக்கு உள்ள போனது இப்போ நாலு மணி ஆகிருச்சு பசி உயிர் போகுது” சீனு வயிற்றை பிடிக்க 
“பொய் சொல்லாதே நீயும் வாசுவும் வெளிய போய் நல்லா மொத்திட்டு தானே வந்தீங்க?” ஆதி குறும்பாக கேக்க 
“சிக்கன் குருமா வாசனை வருதா?” என்றவாறே சீனு கையை முகர்ந்து பார்க்க “அடப்பாவி” என்றனர் அனைவரும். 
“தனியா போய் சாப்பிட்டு வந்துருக்க என்னடா பழக்கம் இது” வரளி நாயகி கடிய 
“அதான் சாப்பிட்டுட்டு வரும் போது ஜூஸ் வாங்கிட்டு வந்தேனே. பத்தாததுக்கு கடைல வேற கொடுத்தாங்களே! ஏன் பத்தலையா?” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சீனு. 
“நடிக்காதடா” அவனின் தோளில் தட்டிய ஆதி “வாங்க போலாம். எல்லாருக்கும் தான் பசி” என்றவன் கவியை பார்க்க “சீக்கிரம் போலாம்” என்பதை கண்களாளேயே சொன்னாள். 
“வாசு நானும் கார்த்திக், ஆரு, லயா எல்லாரும் என் வண்டியிலையே வரேன். நீயும் சீனுவும் பெரியவங்களோடு வேன்ல வாங்க” உத்தரவிட்டவன் கவியின் கையை பிடித்து வண்டியின் முன் இருக்கையில் அமர்த்தினான். ஆருவும், கார்த்தியும் பின்னால் அமர்ந்துக் கொள்ள வண்டி வேகமெடுத்தது. 
“நாளைக்கு நகை வாங்க எங்க போலாம்?” ஆதி தான் பேச்சை ஆரம்பித்தான். 
“ஏற்கனவே பேசி முடிவாகிருச்சே எதுக்கு கேக்குறான்” என்ற பார்வையோடு கவி ஆதியின் புறம் திரும்ப அவளின் வலது கையை தன் இடது கையேடு கோர்த்து அருகில் இழுத்தவன் 
“உனக்கு ஸ்பெஷலா ஏதாவது வாங்கணும் னு இருக்கேன் என்ன வேணும் சொல்லு” ஆசையாக அவள் முகம் பார்க்க 
“ஊரடிச்சு உலைல போட்ட காசுலையா?” கையை உருவி இருந்தாள் கவிலயா. 
அவள் சொன்ன விதமும், தொனியும் ஆதி புருவ மத்தியில் முடிச்சோடு அவளை பார்க்க தன் இரு கைகளையும் மார்போடு கட்டிக் கொண்டவள் ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்க்கலானாள். 
பின்னாடி அமர்ந்திருந்த ஆருவோ கார்த்திக்கின் வலது கையை பிடித்து அவன் தோளில் சாந்து கண் மூடி அந்த குறுகிய கார் பயணத்தை ரசிக்க அவளின் நெருக்கம் கார்த்திக்கு தான் பெரும் அவஸ்தையாக இருந்தது. 
ஒருவாறு ஹோட்டலையடைய சீனுவோ ஏற்கனவே பேசி இருந்த வி.ஐ.பி. அறைக்குள் அனைவரையும் அழைத்து சென்று அமரவைக்க தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவரவர்கள் விருப்பம் போல் ஆடர் கொடுத்தனர். 
“என்ன பொம்மு கொஞ்சமா ஆடர் கொடுத்திருக்க, பார்சல் தனியா சொல்லவா?” சீனு ஆருவை வம்பிழுக்க, அவனை முறைத்தவள் 
“உண்மையிலயே பசிக்கல மனசு நிறைஞ்சி இருக்கு” பூரிப்போடு கார்த்திக்கை பார்த்து கூற ஆதிக்கும் அதே உணர்வுதான். 
என்றும் போல் கேலி கிண்டலோடு உணவுண்டவர்கள் ஆதி குடும்பம் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதாகவும் நாளை சந்திக்கலாம் என்று விடை பெற்றனர். சீனுவும், வாசுவும் ஒரே அறையில் தங்கிக் கொள்ள, ஹாஸ்டலுக்கு செல்லாமல் ஆரு வரளி நாயகியோடு. மேனகையும், சக்கரவர்த்தியும் ஒரே அறையில், ஆதிக்கு மாத்திரம் தனி அறை ஒதுக்கப் பட்டது. 
ஆதியின் சிந்தனையோ… லயா ஏன் அப்படி சொன்னாள் என்றதில் இருக்க, ஆருவும் பால்கனியில் அமர்ந்து சிந்தித்து கொண்டிருந்தாள். ஆதியின் பால்கனி பக்கம் வந்தால் ஆரு அமர்ந்திருப்பது தெரியும். அவனும் காதில் ஹெட்டிபொனை மாட்டிக் கொண்டு வர ஆருவின் சிந்தனை கலைந்தது. 
“மாமா” 
“என்ன பொம்மு” 
“நா கார்த்திக்கை கல்யாணம் பண்ண எடுத்த முடிவு சரி தானே!” 
“நீ லயாவை முறைக்கிறதுலயே! தெரியுது அவங்கள இன்னும் நீ சரியா புரிஞ்சிக்கலன்னு” 
மனிதர்களை படித்த தேர்ந்த அரசியல்வாதி அவன். அவனுக்கு தெரியாத.. அத்தை மகளின் மனதில் ஓடுவது? 
“எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு”
“என்ன குழப்பம்?” கார்த்திக் ஏதாவது உளறி வைத்தானோ என்ற எண்ணத்தில் ஆதி. 
ஜவுளிக் கடையில் ஐந்தாம் மாடி நிகழ்வை சொல்ல ஆரு முடியாமல் திணற, அவளை பேசியே இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவன் விஷயத்தை வாங்கி இருக்க, 
“என்ன ஆரு நீ டாக்டருக்கு தானே படிக்கிற? ஒரு ஆண் உன் கிட்ட மருத்துவம் பார்க்க வந்தா எப்படி ஹாண்டில் பண்ண போற?” பதில் சொல்ல முடியாமல் ஆரு முழிக்க, 
“ஆரு காதல் னு வந்தா முதல்ல நம்பிக்கை வேணும் இல்லனா அந்த உறவுக்குள்ள விரிசல் வந்துடும். கார்த்திக், லயாவ பொறுத்தவரை அவங்க ரெண்டு பேருமே வேற வேற இல்ல ஒருத்தங்க. ரெண்டு பேருக்கும் வீட்டுல கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணது உனக்கும் தெரியும். வீட்டுலையே சம்மதம் சொன்ன பிறகு எதுக்கு வெளிய கல்யாணம் பண்ணுறாங்க? பிரெண்ட்ஷிப் தவிர அவங்களுக்குள்ள ஒன்னும் இல்ல. என்ன காதலையே! எங்களையோ புரிஞ்சிக்க ட்ரை பண்ணாம இருக்காங்க. அதனால நாம பண்ண வேண்டியது காதல் னா.. என்னனு அவங்களுக்கு கத்து கொடுத்து எங்களை காதலிக்க வைக்கிறது. ஓகே வா… இந்த மிஷன்ல பொறுமை ரொம்ப முக்கியம். என்ன புரிஞ்சுதா..” ஆதி ஆருவுக்கு தெளிவாகவும், அவள் சிந்தனையை தூண்டும் விதமாக பேசினான்.
ஆதி பேசும் போது கேட்டுக் கொண்டிருந்த ஆருவோ மண்டையை நன்றாக ஆட்டிவைத்தாலே ஒழிய ஆதி சொல்ல வருவதை புரிந்து கொள்ள முயற்சி செய்வாளோ? காதல் என்ற உணர்வு இருவர் மனதிலும் தோன்றினால் தான் கணவன், மனைவி உறவுக்குள் விரிசல் வராது, ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு மனம் ஒத்து வாழ முடியும். 
ஆதி சொன்னது போல் ஆரு பொறுமையை கடைபிடிப்பாளா? அல்லது வார்த்தையை விட்டு கார்த்திக்கின் மனதை ரணப்படுத்துவாளா? 

Advertisement