Advertisement

அத்தியாயம் 21
பச்சைமுத்துவுக்கும் வாசுவுக்கு நடுவே ஒரு கதிரையை போட்டு அதில் ஒரு பஞ்சு மூட்டையை கிடத்திய சீனு கட்டையால் அடிக்க வாசு அடித்தாங்க முடியாமல் கத்துவது போல் குரல் கொடுக்கலானான். 
பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து அடித்தவன் கை வலிக்கவே ஓய்வெடுக்க அமர்ந்து கொண்டான். பச்சைமுத்து கத்திக் கொண்டிருக்க வாசுவும் ஒரே வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அது “காப்பாத்துப்பா… காப்பாத்துப்பா… ” என்பது மாத்திரமே! 
சீனு ஆதி மற்றும் கார்த்திக் வரும்வரை தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, வாசு அவனுக்கு பலிப்புக் காட்டிக் கொண்டிருந்தான். 
“வீரியம் பெருசில்ல காரியம்  முக்கியம்னு கம்னு இருக்கேன் மவனே! போட்டேனு வை மண்டை ரெண்டா பொளந்துடும்” சீனு   உதட்டை அசைத்து மெதுவாக சொல்லியவாறு கட்டையை தூக்கி வாசுவுக்கு காட்ட நிஜமாகவே அலறிவிட்டான் 
“டேய் டேய் என் பையன ஒன்னும் பண்ணிடாதீங்கடா… எனக்கு இருக்குற ஒரே பையன்டா அவன். என்ன கேட்டாலும் கொடுக்குறேண்டா. அவன் என் குடும்ப வாரிசுடா… ” பச்சைமுத்து கத்த
“என்ன கேட்டாலும் கொடுப்பியா?” என்றவாறு அவர் முன்னால் அமர்ந்தான் கார்த்திக்.  
சுபாஷை பிடிக்க பச்சைமுத்துவை கடத்த வாசு திட்டம் போட்ட பொழுதே ஆதி சொன்னதுதான். ஆதி மற்றும் சீனு பேசினால் பச்சைமுத்து கண்டு பிடித்து விடுவார். கார்த்திக்கின் குரல் அவருக்கு பரீட்சயம் இல்லை. ஆதலால் கார்த்திக் மட்டும் அவரோடு பேசி சுபாஷை பற்றி அறிந்துக் கொள்ளட்டும். 
கார்த்திக்கின் அருகில் அமர்ந்த ஆதியும் என்ன கேட்க வேண்டும் என்று பட்டியலிட கார்த்திக் விசாரணையை ஆரம்பித்தான். 
“சுபாஷ் சந்திரன். அவனை பத்தி சொல்லு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீயும் செத்துப்போன மினிஸ்டர் நல்லதம்பியும் அவனை பார்க்க போய் இருக்கீங்க. இதோ இங்க இருக்கானே உன் மகன் அவன்தான் உங்களுக்கு தேர் ஓட்டிக்கிட்டு. சி…சி…  கார் ஓட்டிக்கிட்டு போய் இருக்கான். அதான் அப்பன் மகன் ரெண்டு பேரையும் தூக்கினேன். சொல்லு அன்னைக்கி என்ன பேசினீங்க” 
கார்த்திக் கேப்பே விடாமல் பேச பச்சைமுத்து வெலவெலத்துப் போய் ஏற்கனவே முத்து முத்தாக வியர்வையில் நனைந்து கொண்டிருந்தவர் அச்சத்தால் வியர்வையால் குளிக்கலானார்.  
அவரின் முகத்தை துணிப்பையால் மூடியிருந்தமையால் முகம் தெரியா விடினும் அவரின் உடல் மொழி அவரின் பயத்தின் அளவை காட்டிக் கொடுக்க, யோசனையில் விழுந்தான் ஆதி. 
“என்னய்யா மழைல நனைஞ்ச கோழிக் குஞ்சா மாறி இருக்க, சீக்கிரம் சொல்லு இல்ல உன் பையன போட்டுடுவேன்” கார்த்திக் வந்தமர்ந்த பின் வாசு அமைதியாக இருந்தவன் கார்த்திக் சொன்னதைக் கேட்டு மீண்டும் கதற ஆரம்பித்தான். 
“வேணாம் சார் வேணாம் சார்… விட்டுடுங்க சார். எங்கப்பா நீங்க என்ன கேட்டாலும் சொல்லிடுவாரு சார். அப்பா சொல்லிடுப்பா… பெரிய பெரிய கத்தியெல்லாம் வச்சிருக்காருப்பா… சொல்லிடுப்பா… போய்டலாம்” 
 போனில் கவனம் சிதறாமல் பேசுபவனை பார்த்த சீனு “உலக மகா நடிப்புடா சாமி….” கையை மேலே தூக்கி வணங்கியவன் வாசுவின் காலை தொட்டு கும்பிடுவது போல் கைகளை சுழற்றி கும்பிட வாசுவும் நக்கலாக காலாலையே ஆசீவாதம் செய்து சீனுவை வெறுப்பேத்தினான். 
“சொல்லுறேன் சொல்லுறேன். என் பையன ஒன்னும் பண்ணிடாத” பச்சமுத்து கதற 
“அது உன் கைலதான் இருக்கு. சுபாஷ் சந்திரன்” கார்த்திக் பெயரோடு நிறுத்திக் கொள்ள பச்சமுத்து ஆரம்பித்தார்.
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மினிஸ்டர் நல்லதம்பி கட்ச்சி நிதிக்காக  ஒருத்தர பார்க்க சென்னை போகணும் என்று வர சொன்னாரு. ரகசிய மீட்டிங் என்று சொன்னதும் என் பையனைத்தான் வண்டிய ஓட்ட சொன்னேன். 
சென்னை போகும் வரையில் நாம சந்திக்க போறவர் யாரென்று அவர் சொல்லவேயில்லை. அங்க போன பிறகுதான் அவர் சுபாஷ் சந்திரன் என்று எனக்கே தெரிஞ்சது.
“நீ சொல்லுறதெல்லாம் நம்புற மாதிரியே இல்லையே” கார்த்திக் கிண்டலாக சொல்ல 
அவன் குரலில் பதறியவர் “நெஜம்தான். நான் பொய் சொல்லல”
“சரி போனீங்க என்ன பேசினீங்க?” ஆதி விசயத்துக்கு வரும் படி செய்கை செய்ய உடனே கேள்விக்கு தாவியிருந்தான் கார்த்திக். 
“அவர் எங்க கட்ச்சிக்கு நிதி உதவி செய்வதாக சொன்னாரு வேற எதுவும் இல்ல” அவரின் சிறுபிள்ளை தனமான பதிலில் ஆதியின் முகத்தில் புன்னகை மலர 
“எங்கயோ இடிக்குதே? ரகசிய மீட்டிங்னு சொன்ன இப்போ நிதி உதவி என்று சொல்லுற? உண்மைய சொல்லு…. ” கடைசி வாக்கியத்தை கர்ஜனையாக சொன்னவன் யாரிடமோ சொல்லுவதை போல் “என்னடா பாத்துக் கிட்டு நிக்குற இவன் பையன போடு”
கார்த்திக் சொல்லவும் சீனு மீண்டும் பஞ்சு மூட்டைக்கு பன்ச் கொடுக்க,வாசுவும் அலற ஆரம்பித்தான். 
“வேணாம் வேணாம் சொல்லிடுறேன்… சொல்லிடுறேன்..” சுயநினைவோடு இருந்திருந்தால் உளறி மாட்டிக் கொண்டிருக்க மாட்டார் நல்லதம்பியின் மரணம் அவரை நிலைகுலைய செய்து மரண பயத்தைக் காட்டியிருக்க உளறிக் கொட்டி மாட்டிக் கொண்டார் பச்சைமுத்து. 
“தஞ்சைல மருந்து ரீசர்ச் சென்டர் ஒன்னு கட்டணும் என்று சொன்னாரு”
“இங்கேயா? சென்னையில இல்லாத வசதியா இங்க இருக்கு” அறியாதவன் போல் வினவ 
“இல்ல மருந்துக் கம்பனி…”
“இவன் சரிப்பட்டு வர மாட்டான் அப்பன் பையன் ரெண்டு போரையும் போடு…நாம நம்ம வேலைய பார்ப்போம்” யாரிடமோ சொல்வது போல் முகத்தை திருப்பி சொல்ல 
கலவரமடைந்த பச்சைமுத்து “சத்தியமா எனக்கு தெரியல ஐயாவை அவன் கொல்லுவான்னு எனக்கு தெரியல மினிஸ்டர் சாகும் போதுதான் சொன்னாரு. சத்தியமா எனக்கு தெரியல” உளறியவாறே அழ ஆரம்பித்தார். 
 ஒரு கணம் திகைத்த அனைவரும் “என்ன சொல்கிறார் இவர்” என்ற பார்வையோடு ஆதி வாசுவை ஏறிட 
“அப்பா… அழாதேப்பா… என்ன நடந்ததுன்னு சொல்லுப்பா…” இவ்வளவு நேரமாக நடித்துக் கொண்டிருந்தவனின் குரல் கலங்க 
அழுதவாறே “மோசம் போய்ட்டேண்டா… அந்த சுபாஷ் கட்சிக்கு நிதி உதவி செய்றேன்னு உள்ள வந்து மினிஸ்டர் கொன்னுட்டான் டா என்னையும் கொல்லாம விட மாட்டான்” 
“என்னப்பா உளறுற…. முதல்ல இருந்து சொல்லு?” 
“எந்த பிஸினஸ்மேனும் அவங்களுக்கு ஆதாயம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாங்க, தேர்தல் வரும் பொழுது மந்திரிங்க கேட்காமாலையே நிதி உதவி எங்குற பேர்ல காச அள்ளி கொடுக்கிறதா இருந்தா அவங்க ஆட்ச்சிக்கு வந்த பிறகு தொழில்ல கொள்ள லாபம் பார்க்க போறாங்கன்னு அர்த்தம். 
கட்ச்சிக்கு நிதி உதவி செய்வதாகவும், அது சம்பந்தமாக பேச சென்னை வரும் படி சுபாஷ் சொல்லி இருக்க, நல்லதம்பியும் என்ன கூட்டிக்கிட்டு போனாரு. அங்க போன நேரத்துல கட்ச்சிக்கு எவ்வளவு பணம் வேணும்மாளும் தரேன்னு சொன்னவர், ஏதோ அவர் மருந்து கம்பனி சம்பந்தமா தஞ்சைல ஆரம்பிக்கனும்னு   சொன்னாரு. அதுக்கு மினிஸ்டர்… தேவசகாயம் ஐயா சம்மதிக்க மாட்டார்னு சொன்னாரு.  
அதுக்கு அந்த சுபாஷ் அதற்காகத்தான் காசு செலவழிக்கிறேன். இவரு இலக்ஷன்ல ஜெயிச்சா நான் நினைச்சது நடக்குமில்ல னு தெனாவட்டா பேசினான். ஏற்கனவே அது சம்பந்தமா ஐயா கிட்ட பேசி இருப்பான் போல ஐயா மறுத்து பேசி இருக்குறாரு போல அதான் எங்க கட்ச்சிக்கு உதவுவது போல உள்ள வந்து எங்க கட்ச்சிய வெற்றி பெற செஞ்சி அவன் தேவையை நிறைவேத்திக்க பாத்திருக்கான்.
இது புரியாம நானும் தேர்தல்ல நான் நின்னாலும் வெற்றி பெறுவது கஷ்டம் தான். அப்படியே வெற்றி பெற்றாலும் மக்கள் ஐயா சொன்னா கேப்பாங்கனு சொன்னேன். கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு அத நான் பாத்துக்கிறேன்னு சொன்னாரு. அப்பொறம் நாங்க ஊருக்கு வந்தோம். 
தேர்தலுக்கு நெருங்கி வர்ற நேரம் தான் ஐயா ஆக்சிடண்ட்டுல இறந்தார். அந்த நேரத்துல பதவி ஆச என் கண்ணை மறச்சிருச்சு. ஆழமா சிந்திக்கல. அடி மட்ட தொண்டனாக இருந்து கட்ச்சில வளர்ந்தவன் நான் அதனாலயே கட்ச்சிய விட்டும் போக முடியல. அப்பொறம் தான் அய்யாவோட மகன் தேர்தல்ல நின்னு ஜெயிச்சாரு. 
“யோவ் என்னய்யா சுபாஷ பத்தி சொல்ல சொன்னா சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுற” கார்த்திக் குறுக்கிட 
“அப்பாவை கொன்னது அந்த சுபாஷா….” கர்ஜனையாக ஒலித்தது ஆதியின் குரல்.
தேவசகாயம் தந்தை மாத்திரமல்லாது என்றுமே ஆதிக்கு நல்ல வழி காட்டியாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும் திகழ்ந்தவர். மக்கள் நலனை கருதியே வாழ்ந்தவர். பதவிக்காகவும், தேர்தலில் அவரை வெற்றிபெற முடியாமல் நல்லதம்பிதான் சாலை விபத்து போல தோற்றமளிக்க செய்து அவரைக் கொன்றிருக்கக் கூடும் என்று ஆதி எண்ணியிருக்க, சம்பந்தமே இல்லாத ஒருவன் குறுக்கிட்டு அவரை கொல்ல வேண்டியதன் நோக்கம் என்ன? அதை அவன் அறிந்து கொள்ளும் வேகம் எழ பச்சைமுத்துவின் சட்டையை பிடித்து உலுக்க, ஆதியை கட்டுக்குள் கொண்டு வருவது அனைவருக்கும் பெரும் பாடானது. 
அங்கே ஆதியை எதிர்பார்க்காத பச்சைமுத்து ஆடிப்போக வாசுதான் அவரை உலுக்கி பேச வைத்தான். அவர் சொன்னவைகளை கேட்ட ஆதியின் இரத்தம் கொதிக்கலானது. 
“பதவி..,பதவி.., பதவி.. அது மட்டும் கைல இருந்தா என்ன வேணாலும் செய்யலாம்னு தானே ஆடுறீங்க, விட மாட்டேன் ஒருத்தனையும் விட மாட்டேன், என் அப்பாவை கொன்னவனை விடவே மாட்டேன்” கத்தியவாறே கதிரையில் தொப்பென்று அமர்ந்தவன் புலம்பியவாறே இருக்க, 
“சென்னைல நடந்த கட்ச்சி மீட்டிங்க்கு போன நேரம் மினிஸ்டர் போதைல சுபாஷ் தான் ஐயாவை கொன்னான்னு உளறிட்டாரு அதுக்கு அடுத்த நாளே அவரை போட்டுட்டான். அவர் சொல்லும் போது நானும் கட்ச்சில இன்னும் மூணு பேர் மட்டும் தான் இருந்தோம். மினிஸ்டர் இறந்து ஒரு வாரம் கூட இல்ல சிவம் கிணத்துல விழுந்து இறந்துட்டான். உண்மை தெரிஞ்ச எல்லாரையும் சுபாஷ் தான் கொல்லுறான்” தன் உயிரே போனது போல்  அச்சத்தின் உச்சியில் இருந்தார் பச்சைமுத்து.
வாசுவுக்கு பச்சைமுத்துவை வீட்டுக்கு அழைத்து செல்லும் படி கூறிய ஆதி சீனுவோடு சோர்வாகவே வீடு வந்து சேர்ந்தான். 
வழக்கத்துக்கு மாறாக நேரம் தாழ்த்தி வீடு வந்த கணவன் எதுவுமே பேசாது படிகளில் ஏறுவதைக் கண்டு கவி யோசனையாக அவனுக்கு அருந்தவென காபி எடுத்து செல்ல அவள் வரும் ஓசை கேட்டு கண்களை இறுக மூடிக் கொண்டான் ஆதி. 
வழக்கமாக மாலையிலையே வீடு வருபவன் இளவரசியோடும், தன்னோடும் தோட்டத்தில் சிறிது நேரம் கழிப்பவன் இன்று வந்ததும், வராததுமாக தூங்குவது மனதை பிசையவே அவன் நெற்றியில் கை வைத்து பார்க்க ஜில்லென்று இருக்கவே நிம்மதியாக உணர்ந்தவள் தலையை பிடித்து விடலானாள். 
தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருந்ததுதான் அதற்காக உள்மனம் கூவியது போல் நடந்து விட்டதை தாங்கும் சக்தியோ! அதை வீட்டாரிடம் கூறும் சக்தியோ! ஆதிக்கு இல்லை. அதனாலயே நேரம் சென்று வீடு வந்தவன் சாப்பிடவும் பிடிக்காமல் படுத்துக்க கொள்ள மனைவி வந்து சாப்பிட அழைப்பாளென்று கண்களை மூடிக்கொள்ள அவளின் அக்கறையில் அன்னை சொன்னது போல் “சொன்னால் தான் காதலா” என்று மனம் அவள் பால் சாய கவியின் மடி மீது தலை வைத்து இடுப்பைக் கட்டிக் கொண்டான் ஆதி. 
கல்யாணமான நாளிலிருந்து கவியும் ஆதியை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றாள். இளவரசியை கவணைப்பதிலிருந்து, தங்கள் தொழிலை கவனிப்பதும், ஒரு எம்.எல்.ஏவாக ஊருக்காக செய்யும் அனைத்திலும் எந்த குறையும் யாரும் சொல்லி விட முடியாது. 
சதா சிரித்துக் கொண்டே இருப்பவனுக்கு மனக் குறையே இல்லையா என்று கூட எண்ணி இருக்கிறாள். இதுவே முன்பென்றால் பணம் தான் கொட்டிக் கிடக்கே அவனுக்கென்ன குறை வந்து விடப் போகிறது என்று வாய் விட்டே சொல்லி இருப்பாள். இன்றோ அவன் இறுகிய பிடியும் மௌனமும் ஏதோ ஒரு விஷயத்தை மனதில் போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறான் இல்லா விடில் வீடு வந்தால் அவன் சத்தம் அடங்காதே! 
 மக்கள் பிரச்சினையா இருக்குமா? என்னவென்று கேட்கலாமா? கேட்டால் சொல்வானா? உனக்கு புரியாது என்பானோ? அவனே சொல்லும் வரை பொறுமையாக இருப்பதுதான் சரியா? கவியின் மனம் பலவிதமாக சிந்திக்க கைகளோ ஆதியின் தலையை இதமாக கோதி விட்டுக் கொண்டிருந்தது. அவனோ மனைவியின் அருகாமையில் அனைத்தையும் மறந்து ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லலானான். 
இந்த ஐந்து நாட்களில் பாதியாக இளைத்திருந்தாள் ஆருத்ரா “நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே! இன்னும் என்ன?” என்று கார்த்திக்கை தொடர்ந்தது அவள் பார்வை.
கணவன் முகம் கொடுத்து பேச மறுக்கின்றான். அவள் கையால் பரிமாறினால் தட்டை விசிறியடிக்கா விடினும்  உண்ண மறுக்கின்றான். ஒரே அறையில் தங்க மறுக்கின்றான். சிரிப்பை தொலைத்து நடை பிணமாக வீடு வருபவனைக் காணக் காண என்ன சொல்லி அவனை சமாதானப் படுத்துவதென்று அவளுக்கு புரியவில்லை. 
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு நல்ல நண்பனாக இருக்கக் கூடாதா? ஆதியும் அவளுக்கு அப்படித்தான். ஆனால் அவர்களிடம் சில எல்லைகள் இருந்தன. கவி கார்த்திக்கிடம் எந்த எல்லையும் இல்லை. கவிக்கு உள்ளாடைகள் எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு ஆருத்ராவின் மனம் தருணத்தில் நியாபகப் படுத்த 
“அதான் பொண்ணுன்னு சொன்னானே பொண்ணுக்கு எடுத்துக் கொடுக்கலாம் தப்பில்ல” தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவளின் மனசாட்ச்சியோ திருப்பி அவளை கேலி செய்தது 
“இதுக்குதான் வீட்டுல பெரியவங்கனு நாலு பேர் இருக்கணும். இப்படி உன் புருஷன் நடந்துக்கிறானே என்ன எதுன்னு கேட்டிருப்பங்கள்ல, அவனும் வீட்டுல பெரியவங்க இருக்காங்கனு ஒரே அறையிலையாவது தூங்கி இருப்பான்”
பெருமூச்சுவிட்டவள் “நான் யாரையும் வீட்டை விட்டு போங்கன்னு சொல்லவும் இல்ல. இங்க தங்க வேணாம்னு சொல்லவுமில்லை” மனசாட்ச்சியை அடங்கியதாக நினைத்து முணுமுணுக்க 
“எங்க… கண்ணாடி முன்னாடி போய் சொல்லு பார்க்கலாம். வேணும்னே வானதி அத்த காதுல விழும் படி உங்கம்மா கிட்ட என்ன சொன்ன? கார்த்திக்க கவிக்கு வேலைக்காரனா வச்சிருக்காங்க, கூடவே இருந்து அவனை அட்டையா உரியிறாங்க, அவங்கப்பாவும் கண்டுக்கிறதில்ல. உன்னையும் சேவகம் செய்ய சொல்லுவாங்க, அது இதுனு காது படவே பேசினியே! உங்கம்மா வெகுளிதான் ஆனா இந்த மாதிரி சகுனி வேல பாக்குறதுல கில்லாடி உனக்கு அட்வைஸ் பண்ணாம ஒத்தூத போய் அம்மாவையும் பையனையும் பிரிச்சிட்ட”  
“நானா பிரிச்சேன் சொந்த பையனா இருந்திருந்தா அந்தம்மா விட்டுட்டு போய் இருப்பாங்களா?”
“என்னது விட்டுட்டு போனாங்களா? அப்படியா நினைச்சி கிட்டு இருக்க? உனக்கு தனிமை கொடுத்துட்டு போனா…..நீ இன்னும் திருந்தல இல்ல. அனுபவிடி” மனசாட்ச்சி வசைபாட ஆருத்ரா கண்டுகொண்டாளில்லை 
கார்த்திக் வரும் அரவம் கேட்கவே எழுந்து நின்றவள் ஆர்வமாக பார்த்தவாறே சமையலறை பக்கம் செல்ல அவளை கண்டுகொள்ளாமல் மாடியில் தான் தற்பொழுது தங்கியிருக்கும் அறையினுள் நுழைந்தவன் தாளிட்டு குளித்து விட்டு கட்டிலில் சரிந்தான். 
“உனக்கு வேணாம்னா போ… அதுக்காக நன் சாப்பிடாம இருக்க முடியாது வீம்பாக சொல்லியவள் சாப்பிட ஆரம்பிக்க கண்களில் நீர் வழிய நின்றாள் ஆருத்ரா. 
அவள் கார்த்திக்கையும் புரிந்துக் கொள்ளவில்லை காதலையும் புரிந்துக்கொள்ளவில்லை. 
காதல் சுயநலமாக சிந்தித்தாலும், சுயநலமாக முடிவுகளை எடுக்காது. தனக்கு மட்டுமே, தன்னோடு மட்டுமே கார்த்திக் இருக்க வேண்டும் என்று ஆருத்ரா நினைத்ததில் தவறில்லை. ஆனால் அவன் மனதையும், உணர்வுகளையும் புரிந்துக் கொள்ளாது, அவனையும், அவன் சார்ந்தவர்களையும் காய படுத்தியதுதான் தவறு.
கார்த்திக் கண்ணீர் மல்க பேசியதும் உருகிப் போய் ஆருத்ரா உடனடியாக மன்னிப்பு கேட்டிருந்தாலும் அது அப்போதைய சூழ்நிலையில் கார்த்திக்கை அசைக்கவில்லை.  
தான் தான் மன்னிப்பு கேட்டு விட்டேனே இன்னும் என்ன பிடிவாதம் என்று ஆருத்ரா நினைக்க, 
கார்த்திக்கோ! தன்னைக் காதலித்தவள் புரிந்துக் கொள்ளாமல் தான் காதலித்தாளா? சரி… நெருங்கி பழக்கத்தான் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதற்காக சொத்துக்காக அவளை திருமணம் செய்ததாக சொல்வாளா? அதுவும் லஞ்சமே வாங்கத போலீஸ் நான் என்ன பாத்து” ஆதியிடம் பொறுமியவன் அவனின் சமாதான பேச்சுக்கள் எதையும் காதில் வாங்காது 
“கவியையும் என்னையும் சேர்த்து பார்த்து பல பேர் தப்பா நினைச்சி இருக்காங்க. என் கிட்ட லவ் சொல்லி அலைஞ்ச பொண்ணுங்களே நான் மறுத்த பின்னும். கவியோடு என்ன பார்த்துட்டு கேர்ள் பிரென்ட் இருக்கானு சொல்லி தொலைக்க வேண்டியதுதானேனு திட்டியும் இருக்காங்க. 
ஆருத்ரா என் பின்னாடி சுத்தினானு சொன்னியே அப்போ கண்டிப்பா கவிய என் கூட சேர்த்து பார்த்திருப்பா இல்ல. அப்போ மட்டும் அவ கண்ணுக்கு தப்பா தெரியலையா? கல்யாணம் ஆனா பின்… அதுவும் கவி உன் மனைவியா ஆனா பின் எப்படி அவ தப்பா பேசலாம்? முதல்ல உன் மனைவியை தப்பா நினைக்கிறதே தப்பு” ஆதியையும் ஏற்றி விட ஆதிக்குத்தான் மண்டையை பியித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. 
  
கார்த்திக் சொல்வதில் தவறில்லை. ஆரு பேசியது தான் தவறு. இவர்கள் வாழ்க்கையை எவ்வாறு சரி செய்வது ? 
  

Advertisement