Advertisement

அத்தியாயம் 7
“இந்த கல்யாணம் நடக்க கூடாது” கவி ஆள் காட்டி விரலால் அவளையும், ஆதியையும் மாறி மாறி காட்டியவாறே சொல்ல 
தனது இருகைகளையும் கோர்த்து முழங்கையை மேசையின் மீது ஊண்டி தாடையை புறங்கையில் மேல் வைத்து கவியையே கண் சிமிட்டாமல் மெளனமாக பாத்திருந்தான் ஆதித்யா.
அவனின் எத்தனை வருடக் கனவு. காணாமல் போய் விட்டது என்றிருந்த கனவு உயிர் பெற்று அழகோவியமாக அவன் கண்முன் அமர்ந்திருக்கின்றாள் அவனின் காதல் தேவதை.
“என்ன இவன் இப்படி சைட் அடிக்கிறான். கல்யாணம் பண்ண போற பொண்ணு என்ற என்னமோ!” ஆதித்யாவின் பார்வையால் ஒருநிலையில்லாமல் கவியின் மனம் தடுமாற “ஹலோ சார். நா சொன்னது புரிஞ்சுதா?” 
“இப்போ எதுக்கு நம்ம கல்யாணத்த மட்டும் நிறுத்த சொல்லுற?” கோபம் கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆதித்யா கேக்க 
“ஒரே குடும்பத்துல அண்ணனையும், தங்கையையும் கல்யாணம் பண்ணுவதா தான் முடிவு பண்ணி இருக்கோம். மாப்புள நீங்க என்றால் கார்த்தி, என் உறவு மாறிடும்” ஆதித்யாவை  குழம்பினாள் கவி.  
“இங்க பாரு லயா சொல்றத தெளிவா சொல்லு” 
“அன்னைக்கி ரெஸ்டூரண்ட்டுல உங்க கிட்ட என்ன சொன்னேன்” 
“என்ன சொன்ன” ஆதி திருப்பிக் கேக்க 
“மறதிக்கு பொறந்த மன்மதனா இருக்கான். இவனையெல்லாம் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுத்தவங்கள சொல்லணும்” என்று முணுமுணுத்தவள் “என் அப்பா அண்ட் சித் அப்பா ஆச நானும், கார்த்திக்கும் கல்யாணம் பண்ணிக்கணும் என்கிறது, நானும் அவனும் திக் பிரெண்ட்ஸ் அதனால ஒரே குடும்பத்துல அண்ணன், தங்கையை நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செய்திருக்கிறோம் னு சொன்னேனே” 
“ஆமா சொன்ன” 
“தக்காளிக்கு நீங்க மாமா மகன்னா என் கண்டிஷன் மீறின மாதிரி இல்ல. அதான் கல்யாணத்த நிறுத்த சொல்லுறேன்” 
“கார்த்திக், ஆரு கல்யாணத்தையும் சேர்த்து நிறுத்தணுமா?” 
“இல்ல இல்ல இல்ல….. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களே! அந்த கல்யாணம் நடக்கட்டும். நம்ம கல்யாணம் நடக்க வேணாம்” 
“புரியல ஏன் நம்ம கல்யாணம் நடக்க கூடாது” 
“ஒரே குடும்பத்துல அண்ணனையும், தங்கச்சியையும் கல்யாணம் பண்ணா தான் எனக்கும், கார்த்திக்கும் பொறக்க போற குழந்தைகளை கல்யாணம் பண்ணி வச்சி எங்க அப்பாக்களுடைய ஆசையா நிறைவேத்தலாம்” முகம் கொள்ளா புன்னகையில் கவி சொல்ல மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் ஆதித்யா. 
“இவள பார்த்த அன்னைக்கே மனச பறி கொடுத்தது தெரியாம, அத உணரும் போது படிப்பு முக்கியமாக தோன இவளை தேடாம விட்டது தப்பா போச்சு. அதுக்கு பிறகு அப்பாவோட திடீர் மரணம், ஏகப்பட்ட பிரச்சினை தலைமேல் இருக்க கல்யாணமே வேணாம் னு இருந்த என்ன தேடி வந்து தரிசனம் கொடுத்து, வானதி மேடம் பொண்ணா அவதாரம் எடுத்து, கல்யாணம் கைகூடுற நேரத்துல கேட்ட போடுறாளே! இவள…” ஆதித்யா கவியை முறைக்கவும் முடியாமல், தலையில் கைவைத்து அவளையே பாத்திருக்க 
“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ… என்ன யோசிக்கிறீங்க?”
“இவ கிட்ட காதலை சொல்ல ஒரு கணம் போதும் ஆனா ஏத்துக்கவும் மாட்டா, நம்பவும் மாட்டா. பாட்டிய பேசுயே காவுக்குற மாதிரி இவ கிட்டயும்  நம்ம ப்ரோபோமன்ஸ்ஸ காட்டிட வேண்டியது தான். ஆதி ஸ்டார்ட்….” மனதுக்குள் ஒத்திகை பார்த்தவன்
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்
காதல் சொல்ல இது நேரம் இல்லை என்று நன்கு உணர்ந்தவனாக மனதை அடக்கிக் கொண்டு “இல்ல ஆருக்கு அண்ணன் சீனு இருக்கான். உன்ன அவனுக்கு பேசி முடிக்கலாமான்னு யோசிக்கிறேன்” ஆதித்யா என்னமோ கோபமாக தான் சொன்னான். 
சீனு என்றதும் கடுப்பானவள் “என்ன விளையாடுறீங்களா? எனக்கு மாப்புள பார்க்க நீங்க யாரு”
“அதான் மா அண்ணன், தங்க. மாமான், மச்சான், குழந்தைங்க… கல்யாணம்” ஆதித்யா அடுக்கிக் கொண்டே போக 
“வில் யு ஸ்டாப்”
“அட கொஞ்சம் இரு மா.. நா பேசி முடிக்கிறேன்” கையை நீட்டி கவியை தடுத்தவன் “உங்கப்பா, கார்த்திக் அப்பா ஆசைய நீங்க ரெண்டு பேருமே நிறைவேத்தி இருக்கணும். அத விட்டுட்டு உங்க பசங்க மேல திணிக்கிறீங்க. அவங்களும் வளர்ந்து வேற யாரையாவது காதலிக்கிறோம் னு வந்து நின்னா என்ன பண்ணுவ? உங்க அப்பா, அம்மா எடுத்த முடிவ தானே எடுப்பீங்க? அப்போ நீ சீனுவை கல்யாணம் பண்ணா என்ன? என்ன கல்யாணம் பண்ணா என்ன? எதுவுமே மாறாதில்ல?” நீளமாக பேசி கவியை யோசிக்க வைத்தான் ஆதித்யா. 
“என்னென்னமோ சொல்லுறீங்க….”
“என்னென்னமோ இல்ல மா… உண்மைய சொல்லுறேன். ரெண்டு குடும்பமும் உக்காந்து கல்யாணம் பேசிகிட்டு இருக்கும் போது நாம கல்யாணம் பண்ண மாட்டோம் னு சொன்னா? என்ன உணர்வாங்க? நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சந்தோஷத்துல இருக்குற ஆரு, கார்த்தியை பத்தி நினைச்சி பாத்தியா? என் பாட்டி வேற இந்த வருஷம் முடிறதுக்குள்ள என் கல்யாணத்த பண்ணனும் னு சொல்லுறாங்க, இப்போ போய் பொண்ணுக்கு என்ன புடிக்கலைனு சொன்னா மனசோடஞ்சி போய்டுவாங்கல்ல. உன் ஆசைய பத்தி மட்டும் யோசிக்காம, மத்தவங்களளையும் கொஞ்சம் நினை” கவியை பேசவோ, யோசிக்கவோ விடாது அவனது வழக்கமான பேச்சால் கவரச் செய்தான் ஆதித்யா. 
ஆதித்யா சொல்வதெல்லாம் அக்கணம் சரி என்று தோன்ற மௌனமானாள் கவிலயா.
அந்த பக்கமாக உள்ள பால்கனியில் அமர்ந்திருந்த ஆருவோ புடவை முந்தியின் நுனியை திருக்கியவாறே வெக்கப்பட்டு கார்த்தியின் முன்னாள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். 
“என்ன இவ இப்படி வெக்கப் படுறா….கவி தக்காளி னு பேர் வச்சது கரெக்ட்டா பொருந்துது இப்படி சிவந்து போய் இருக்கா..” கார்த்திக்  ஆருவையே பாத்திருக்க மேலும் சிவந்தாள் ஆருத்ரா. 
கார்த்திக்கின் எல்லா பேச்சும் கவியோடுதான் என்றிருக்க, நண்பிகள் என்றும் நெருங்கிய தோழிகள் அவனுக்கு கிடையாது. காதல் என்று அவன் முன் நின்ற பெண்களில் சிலர் கவி, கார்த்திக் நெருக்கத்தை பார்த்தே ஒதுங்கியும் உள்ளனர். கார்த்திக்கு பெண்களின் மேல் மதிப்பு இருந்ததே தவிர காதல் என்று வழிந்தது கிடையாது. அது அவனின் தலையாய கடமையாக கவியை பாதுகாப்பதனாலையே! 
தனக்கு கல்யாணத்துக்கு பாத்திருக்கும் பெண் என்றோ, அவளின் ஆசைகள் என்னவென்றோ அறிய முற்படாமல் அவனின் சிந்தனையோ கவி, ஆதி என்ன பேசுவார்கள் என்று இருக்க, அவன் முன்னாள் அமர்ந்து சிவந்து கொண்டிருந்த ஆருத்ரா அவனை திரும்பி பார்க்க செய்திருந்தாள்.  
“நீயும் மெடிசின் செய்வதாக சொன்னாங்க கவியோட காலேஜா?” ஏதோ கேக்க வேண்டும் என்று கார்த்திக் கேக்க, 
“இல்ல..” என்றவள் அவன் முகம் பார்க்காமலையே! அவளுடைய காலேஜில் பெயரை சொல்ல மண்டையை ஆட்டினான் கார்த்திக். 
“கவிக்கு சாக்லட் ஐஸ் கிரீம் பிடிக்கும். உனக்கு?”
“வெண்ணிலா” 
“கவிக்கு தளபதி தான் பிடிக்கும்”
“எனக்கு தல” 
“கவிக்கு மழைல நனஞ்சி  கிட்டே சைக்கிள் ஓட்ட பிடிக்கும்” 
“எனக்கு மழை பிடிக்காது” ஆருத்ராவின் முகம் சுருங்கியது. 
“கவிக்கு நல்லா ஆடத்தெரியும்”
“கவி நல்லா பிரட் புட்டிங் செய்வா” 
“கவிக்கு ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக் னா ரொம்ப இஷ்டம்” கார்த்திக் தன்னையும் அறியாமல் கவி.. கவி.. கவி.. புராணமே பாடிக்கொண்டிருக்க, ஆருத்ராவின் மனதில் கவியின் மீது கோபம் முளைத்து, கத்த வேண்டும் போல் இருக்க, இவ்வளவு நேரமும் வெட்கத்தால் சிவந்து கொண்டிருந்தவள் கோபத்தால் சிவக்க ஆரம்பித்தாள். மேசையில் மேல் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து மடமடவென அருந்தி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். 
“ஹே ஆர் யு ஓகே? 
“எஸ். உங்கள பத்தியும் சொல்லுங்க கார்த்திக்” தன்மையாக ஒலித்தது ஆருவின் குரல். 
 
“எனக்கென்ன என் கவிக்கு என்னெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் எனக்கும் புடிக்கும்” புன்னகைத்தவாறே கார்த்திக் 
“சுத்தம்” வாய் விட்டே  முணுமுணுத்தாள் ஆருத்ரா.
இங்கே பெரியவர்கள் அமர்ந்து நிச்சயதார்த்தத்தை எப்போ எங்கே வச்சிக்கலாம். கல்யாணத்த எப்போ செய்யலாம் என்ற பேச்சு வார்த்தையில் இருக்க 
“நிச்சயதார்த்தத்தை கல்யாணம் அன்னைக்கி முதல் நாள் வைத்துக் கொள்ளலாமா? மாப்பிள்ளையும் பிஸியான ஆளு, என் வீட்டுக்காரரும், கார்த்தியோட அப்பாவும் வர வேண்டி இருக்கே!” வானதி ஆலோசனையாக கேக்க 
அதுதான் சரி என்று பட்டது கர்ண விஜயேந்திரனுக்கு. 
“ராணி அத்த உங்களுக்கு பொண்ணு இருக்கா?” சீனு மெதுவாக கேக்க 
“இல்லப்பா…கவி கார்த்திக் மட்டும்தான்” எதுக்கு கேக்குறாய் என்ற பார்வையை வீச 
“இருந்தா ஒரே மேடைல மூணு கல்யாணம் பண்ணி இருக்கலாம்” பெருமூச்சோடையே பேச்சுவார்த்தையை கவனிக்க, 
கல்யாணத்தை தஞ்சையிலுள்ள பெரிய மண்டபமான “மாங்கல்யம்” என்ற அவர்களுடைய சொந்த மண்டபத்திலையே வைத்துக் கொள்ளலாம் என்றும், அதற்க்கு முந்தின தினம் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும், தாலி, மெட்டி முதல் எல்லா நகைகள்  தொடக்கம் ஜவுளி வரை எங்கே வாங்க வேண்டும்,  யார் யாருக்கு, எவ்வளவு என்பதுவரை  பேசி முடித்தவர்கள் நல்லதொரு முகூர்த்த நாளை  குறித்து விட்டு சொல்வதாக வரளி பாட்டி கூற சரி என்றனர் ராணியும், வானதியும். 
ஜமீன் குடும்பத்துக்கு தேவசகாயத்தின் இறப்போடு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை போய் விட்டது. இளவரசி, தேவசகாயத்துக்கு பத்துக்கு, எட்டு  பொருத்தமும் பொருந்தி நீண்ட ஆயுளோடு, நோய் நொடி இன்றி வாழ்வார்கள் என்ற ஜாதகம் பொய்யாகி தேவசகாயம் திடீர் மரணமடைய இளவரசி நோயில் படுத்தார். அன்று முதல் மனம் விட்டு போன வரளி நாயகி ஜாதகம் பார்ப்பதையே விட்டு விட ஆதித்யா காதல் என்று வந்து நின்றதும் பெண்ணை பார்க்கலாம் என்று வந்தார். 
கர்ண விஜயேந்திரனுக்கு பேரன் சந்தோசமாக இருந்தால் போதும். “அவன் பாத்திருக்கும் குடும்பம் கண்டிப்பாக நல்ல குடும்பமாகத்தான் இருக்கும்” என்று பேரனின் மேல் அலாதி நம்பிக்கை வைத்தார். 
“பார்வையாலையே எடை போடும் வரளி நாயகிக்கு மிலிட்டரி குடும்பத்தின் மீது எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு நெருடல் அவர் மனதில் இருக்க, அது என்ன என்பது அவர் கண்களில் சிக்கவில்லை. கார்த்திக்கை பார்த்தவருக்கு “ஆருக்கு பொருத்தமான மாப்பிளைத்தான். நேர்மையானவனாகவும் இருக்கிறான்” என்ற திருப்பதி இருக்க, 
கவி குடும்பத்து ஏத்த மருமகளாக? குடும்பத்தையும், ஜமீனையும் கட்டி காப்பாளா என்ற சந்தேகம் அவருக்கு இருக்க கவியோடு தனியாக பேச வேண்டும் என்று அவர் கேக்கும் முன் அவளே கேட்டாள். 
“பாட்டி உங்களோடயும் தனியாக கொஞ்சம் பேசணும்” என்றவள் அவரை அறைக்குள் அழைத்து சென்றிருந்தாள். 
அவர்கள் தனியே உள்ளறையில் பேசும் போது வெளியே வீடியோ காலில் சித்தார்த் மற்றும் பித்யுத்துடன் ஆண்கள் அனைவரும் கல்யாண விஷயம்  பேசி அறிமுகமாய் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர். 
“மாம்ஸ் வரும் போது மிலிட்டரி சரக்கு கொண்டு வர மறந்துடாதீங்க, ரெண்டு பேச்சுலர் பார்ட்டி இருக்கு” சீனு கண்ணடித்து சொல்ல சித்தார்த் சிரித்தவாறே “சரி” என்றான். 
கர்ண விஜயேந்திரன் முறைக்க “என்ன தாத்தா முறைப்பு? மிலிட்டரி சரக்க கண்டதும் இளமை திரும்பி பேச்சுலர் பார்ட்டியை தொடக்கி வைக்க போறதே நீங்க தான்” அவரையும் வம்பிழுக்க 
“பாட்டியோட தல மாறஞ்சதும் உன் வாய் ரொம்ப நீளுது” அவரும் இயல்பாக பேச 
“நீங்களும் திட்டுறதென்றா திட்டிக்கோங்க சத்தியமா பாட்டி கிட்ட போட்டு கொடுக்க மாட்டேன்” அவர்களின் நெருக்கம் கார்த்திக்கும் புது உட்சாகத்தை கொடுக்க சகஜமாக பேசலானான்.
உள்ளே என்ன பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதோ என்ற டென்ஷனில் அமர்ந்திருந்தனர் வானதி, ராணி மற்றும் ஆரு. மேனகைக்கு எந்த ஒரு டென்ஷனும் இல்லை. “கவி ஏடா கூடமாக பேசி கல்யாணம் நின்று போனால் சந்தோசம் தான்” என்ற மனநிலையில் இருந்தாள் மேனகை. 
அறையினுள் வரளி பாட்டியின் முன்னாள் அமர்ந்திருந்த கவியோ! எவ்வாறு ஆரம்பிப்பது  என்ற யோசனையில் இருக்க, 
“எதுவானாலும் பட்டென்று சொல்லிடுமா… யோசிக்காத” 
“அது வந்து பாட்டி… அப்பாவும், சித் அப்பாவும் மில்டரியே கதி னு இருக்காங்க, தேவிமா.. விவசாயம் னு  இருப்பாங்க. ராணிமா நா இல்லாம தனியா இருக்க மாட்டாங்க” 
“என்ன உன் அம்மாவை சீதனமா கூட்டிட்டு வரேன்னு சொல்லுறியா?” 
“இல்ல… நெஸ்ட் இயர் ஹாஸ்பிடல் ப்ராக்டிஸ் தான் தஞ்சையிலையே சேர்ந்துடுவேன் அது ஒன்னும் பிரச்சினை இல்ல. கார்த்திக்கும் போஸ்ட்டிங்க நம்ம ஊருக்கே மாத்தி கிட்டு வந்திடுவான்” கார்த்திக்கை நன்கு அறிந்தவளாக சொல்லியவள் 
“அம்மாக ரெண்டு பேரும் தனியா இருக்கணும். நா சொன்னா கேக்க மாட்டாங்க. நீங்க சொன்னா வீடு பார்த்து கிட்டு தஞ்சையிலையே செட்டில் ஆகிடுவாங்க. அப்படியே நம்ம வீட்டு பக்கத்துல வீடும் பாத்தீங்கன்னா நல்லா இருக்கும்” 
கவி பேசப் பேச அவளை ரொம்பவே பிடித்துப் போனது வரளி நாயகிக்கு. அவரும் மகளாக இருந்து மனைவி, மருமகள்  தாய், மாமியார், பாட்டி என்ற பல பதவிகளில் இருந்தவர் தானே!  பெற்றவர்களை தனியாக விடாமல் அவர்களுக்காக சிந்திக்கும் மகள். ஒரு மகளாய் கவியின் மனம் புரிய “கண்டிப்பாக இவள் குடும்பத்தை நல்ல படியாக வழி நடத்துவாள்” என்று நம்பிக்கையும் வலுத்தது. அது மட்டுமல்லாது அவர்களை பிரித்து பார்க்காது இப்போதிலிருந்தே “நம்ம, வீடு, நம்ம ஊர்” என்று சொந்தமாகவே பேச “இவ தான் கரெக்ட்டான பொண்ணு” என்ற முடிவுக்கே வந்தார் வரளி நாயகி. 
“என்ன அம்மா பக்கத்துலயே இருந்தா கோவிச்சு கிட்டு அம்மா வீட்டுக்கு போக ரொம்ப வசதி னு நினைப்போ” சிரிப்பை மறைத்துக் கொண்டு பொய்யாக முறைத்தார்.   
“யாரு கோபிச்சு கிட்டு அம்மா வீட்டுக்கு போவா? உண்டு இல்லனு உங்க பேரான ஓட விடுறேனா இல்லையானு பாருங்க. சண்டைனு வந்தா நா அடி பின்னி எடுப்பேன். மில்டரிகாரன் பொண்ணாக்கும்” முகம் சிவக்க கவி 
“அடி ஆத்தி என் பேரன் கதி அதோ கதி தான்” என்று பொய்யாய் அதிசயித்து முகவாயில் கைவைத்தார் பாட்டி. 
“ஐயோ… பாட்டிய கலவரப்படுத்திட்டேன் போல இருக்கே! ஹிஹிஹி அது பாட்டி சும்மா பீலா உட்டேன். அடிக்கலாம் மாட்டேன்” நாக்கை துருத்தி அழகு காட்ட 
அவளின் முக வாயை தடவி நெற்றி முறித்தவர் “இப்போ தான் என் பேரனுக்கு எத்தவளா என் கண்ணுக்கு தெரியுற. இங்க வா..” என்று அவளை பக்கத்தில் அமர வைத்து கட்டியணைத்துக் கொண்டார் வரளி நாயகி.
அறையிலிருந்து சிரித்துப் பேசியவாறு பாட்டியும், கவியும் வர நிம்மதி பெருமூச்சு விட்டான் ஆதி. எங்கே பாட்டி கவியிடம் அவர்களின் காதல் கதையை கேட்டு வைப்பாரோ என்றஞ்சிக் கொண்டிருந்தவன் உண்மை வெளிப்பட்டால் கல்யாணமே! நின்று போய் விடும் என்ற பதட்டத்துடனையே அமர்ந்திருந்தான். 
நேராக ஆதியின் அருகில் வந்த வரளி நாயகி கவியை அவன் தோள் சேர நிற்க வைத்து இருவரின் கைகளையும் பிடித்து ஆதியின் கையின் மேல் கை வைத்து “என் பேரனை நீதான் நல்லா பாத்துக்கணும். இவ இன்றிலிருந்து என் பேத்தி இவள கண்கலங்காம பாத்துக்கணும்” என்று புன்னகைக்க
“தாத்தா பாட்டி பக்கத்துல நில்லுங்க” கர்ண விஜயேந்திரனை வரளி நாயகியோடு நிற்க வைத்தவன்  கவியோடு சேர்ந்து ஆதியும் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான். 
அவர்களை தொடர்ந்து கார்த்திக்கும், ஆருவும் ஆசிர்வாதம் வாங்க சீனுவும் ” சீக்கிரம் நல்ல பொண்ணா அமையனும் னு என்னையும் ஆசீவாதம் பண்ணுங்க” என்று அவர்களின் காலில் விழுந்து வணங்கினான். 
சுப முகூர்த்தம் மூன்று மாதங்களுக்கு பிறகு என்றிருக்க, கல்யாண நாளும் குறிக்கப்பட்டது. போனில் காதல் செய்யலாம் என்று ஆரு கார்த்திக்கு அழைத்தால் அவனோ “டியூட்டில இருக்கேன்” அப்பொறம் பேசுறேன் என்று நழுவிவிடுவான். 
“கல்யாணம் முடியட்டும்” என்று கருவிக்கு கொண்டாள் ஆருத்ரா. 
ஆதிக்கும் கவியோடு பேச ஆசையாக இருந்தாலும்  அவனின் வேலை பளு பகல் பொழுதை இழுத்துக் கொள்ள இரவில் இரண்டு நிமிடமாவது பேசலாம் என்று போன் செய்தால் ஒன்று அவளுடைய அலைபேசி பிசி என்று வரும் அல்லது அடித்து அடித்து ஓய்ந்து விடும். கார்த்திக்கிடம் கேட்டால் “தூங்குற” அல்லது “உங்க பாட்டி கிட்ட தான் பேசி கிட்டு இருக்கா” என்ற பதிலே வரும்
“கட்டிக்க போறவன் நான் இருக்கேன். என் கூட பேசாம பாட்டியோட பாச பயிரை வளக்குறா” கடுப்பானாலும் அவன் மனம் நிறைந்தது.
 
  

Advertisement