Advertisement

அத்தியாயம் 3
சென்னையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர் சீனு, ஆதித்யா மற்றும் ஆருத்ரா. 
அவளுக்கு பிடித்த அசைவ உணவுகள் கடை பரப்பி இருக்க, ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தாள் அவள். 
“சாப்பிடுறது பாரு? சோத்த பார்த்து பல வருஷம் ஆனா மாதிரி” சீனு அங்கலாய்க்க 
“டேய் அண்ணா கண்ணு வைக்காத?”
“சாப்பிட்டு, சாப்பிடு நல்லா பண்ணு மாதிரி ஆகிட்ட இதுல கண்ணு வைக்காதான்னு வேற சொல்லனுமா? இன்னும் கொஞ்சம் சாப்ட்டா த்ரிஷ்டி பூசணிக்கா சைசுக்கு வந்துடுவ அப்பொறம் நம்ம ஊருல புதுசா கட்டுற சினிமா தியேட்டர் வாசல்ல நிக்க வைக்கலாம்” சீனு கண்களுக்குள் அக்காட்சியை பார்த்த வாறு சொல்ல 
“நீயும் தான் சோளக்காட்டு பொம்மை மாதிரி நிக்குற? நா ஏதாவது சொன்னேனா?” 
அதான் இப்போ சொன்னியே? சொல்லிட்டு சொன்னேனா? சொன்னேனா? னு கேள்வி வேற” கடுப்பில் அவளின் முடியை பிடித்திழுக்க, 
“ஆ..” என்று கத்தியவள் “மாமா முதல்ல இந்த எருமையை வெளிய போக சொல்லுங்க” சாப்பாட்டை வாயில் நிறைத்துக் கொண்டு சொல்ல 
இவ்வளவு நேரமும் அமைதியாக தன் வேலையில் மூழ்கி இருந்த ஆதித்யா கையிலிருந்த கோப்பை மூடி விட்டு “இன்னமும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறீங்க வெக்கமா இல்ல” இருவரையும் முறைக்க, 
“இதுல வெக்க பட என்ன இருக்கு மச்சான். இவ சாப்பிடுறது நிறுத்தட்டும் நானும் பேசுறத நிறுத்துறேன்” சீனு மேசையில் தாளம் போட்டவாறே சொல்ல 
“டேய் ஒரு எம்.எல்.ஏ யோட பி.ஏ மாதிரியா பிகேவ் பண்ணுற?” ஆதித்யா கடிய 
“தப்பு மச்சான். இப்போ நாம ஒபிசியலா வரல. பேமிலி கெட்டுகெதர். போர்மல் ட்ரெஸ்சுல வந்திருக்கோம்” சீனு நியாபகப் படுத்த 
“எக்ஸ்கியூஸ் மீ” 
ஒரு பெண் குரலுக்கு மூவருமே திரும்பிப் பார்க்க அங்கே கவி நின்று கொண்டிருந்தாள்.
“நா இங்க உட்காரலாமா?” அனுமதி கேட்டாலும் கிடைக்கும் முன் அமர்ந்து விட்டாள். 
கார்த்தி அவளிடம் கட்டிய பெட்டில் அவன் தோற்றுப் போக ஐஸ் கிரீம் வாங்கித் தர சொன்னவள் இந்த ரெஸ்டூரண்ட்டுக்கு அழைத்து வந்திருக்க, அங்கே மேன்லியாய்  அமர்ந்திருந்த ஆதித்யாவை கண்டு “வாவ்” என்றவள் ஆருத்ராவை கண்டு “சூப்பர்” அண்ணன் தன்கையானு விசாரிப்போம்” என்று கார்த்திக்கிடம் கூறி அவனை ஐஸ் கிரீம் வாங்க அனுப்பி விட்டு இவர்களுடன் வந்தமர்ந்தாள். 
 
“ஹாய் ஐயம் கவி. மெடிக்கல் ஸ்டுடென்ட். அது என் பிரெண்டு பேரு கார்த்திக். போலீஸ்ல இருக்கான்  I.P.S . நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கையா?” அவளுக்கு தேவையான விவரத்துக்கான கேள்வியை தொடுக்க,
“ஆமா இவளுக்கு அண்ணன் நான். எனக்கு தங்கை இவ. எனக்கு மச்சான் இவன். அவனுக்கு நா மாப்புள. நாங்க மூணு பேரும் அண்ணன், தங்கச்சி மாப்புளதான்” கடகடவென சீனு சொல்ல அவன் சொன்னதெதுவும் புரியாது குழம்பினாள் கவி. 
திடீரென வந்தவள் அனுமதி கேட்டுவிட்டு அனுமதி கிடைக்கும் முன்பே அமர்ந்து விசாரிப்பதை ஆதித்யா புருவம் உயர்த்தி பார்த்தாலும், அடுத்த நொடி அவன் கண்கள் அவளைத்தான் ரசித்துக் கொண்டிருந்தது. 
லூஸ் ஹயர் ஆனாலும் முகத்தில் விழாதவாறு வாரி காதோரம் ஒதுக்கி இருந்தாள். ஒரு லோங் ஸ்கர்ட் அண்ட் பிளவுஸ் தான் அணிந்திருந்தாள்,  எலுமிச்சை நிறம் தான் கண்ணு கூடு சின்னதா, சிரிக்கும் போது அழகா, சின்ன உதடுகள். எடுப்பான நாசி, முத்து போன்ற பற்கள் சிரிச்சி பேசும் அழகே தனிதான். அன்று பார்த்த அதே முகம்.
“சார் ஒன்னும் பேச மாட்டாரா?” ஆதித்யாவை ஏறிட தனது பார்வையை மாற்றிக் கொண்டவன் 
“நீங்க தான் சொல்லணும்”  என்ன சொல்வதென்று புரியாமல் எதோ சொல்ல மனம் திறந்தாள் கவி.
“அது ஒண்ணுமில்ல சார் எங்க வீட்டுல எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வைக்க பாக்குறாங்க” அலுப்போடு அவள் சொல்ல ஆதியின் இயதயத்தில் பாம் வெடித்தது. 
“ஆனா நாங்க ரெண்டு பேரும் திக் பிரெண்ட்ஸ். கல்யாணம் பண்ணா சரிவராது. ஆனா தேவிமா என்ன சொல்லுறாங்கன்னா நா ஒருத்தனையும், கார்த்தி ஒருத்தியையும் கல்யாணம் பண்ணா எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் நாம பார்த்துக்க முடியாதாம்.  நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுறது தான் சரி னு சொல்லுறாங்க. ஆனா நான் பிரில்லியண்ட் இல்ல, ரொம்ப யோசிச்சு ஒரு முடிவெடுத்தேன் ஒரே குடும்பத்துல அண்ணனையும் தங்கையையும் கல்யாணம் பண்ணா நானும் கார்த்தியும் பிரிய வேண்டியதில்லை பாருங்க எப்படி என் ஐடியா” பிளவுஸில் இருந்த குட்டி காலரை இழுத்து விட்டவள் ஆதித்யாவின் முகம் பார்க்க, 
“தங்கச்சிக்கு நா எங்க போறது” என்ற பார்வைதான் அவனிடம். தான் ஏன் அவன் கேட்டதும் மனக்குமுறலை கொட்டி விட்டோம் என்று கவி உணரவே இல்லை.
“அப்போ இங்க மாப்புள பாக்குற படலம் நடக்குதா? நல்லா பாருங்க எப்படி இருக்கேன்” சீனு அவனின் சர்ட் காலரை முன் பக்கமாக இழுத்து விட்டு சொல்ல 
“ஐயோ நா இவரை சொன்னேன்.  அண்ணா… இவர் தங்கச்சி கூட பெங்களுர் தக்காளி மாதிரி கார்த்திக்கு பொருத்தமா இருக்கா” கவி  சீனுவை அண்ணா னு சொல்லி விட 
“ஹாஹாஹா உங்க கார்த்திக்கு இந்த தஞ்சாவூர் பூசணிக்கா தான்னு முடிவு பண்ணிடீங்கன்னா? நான் தான் உங்களுக்கு புருஷனா ப்ரோமொடேட் ஆக வேண்டி இருக்கும் பிகோஸ் அது என் சிஸ்டர் இது என் மச்சான்” சீனு இளிக்க 
கவி வந்ததிலிருந்தே உளறுவதாக பாத்திருந்த ஆருத்ராவும், இவன் சரக்கடிக்க நா சைடு டிஸ்சா கல்யாணம் பண்ணனுமா” என்று சீனுவின் மேல் வெறி வர  
“டேய் அண்ணா அவங்க தான் லூசு மாதிரி பேசுறாங்கன்னா நீயும் ஏண்டா” ஆரு சீனுவை முறைத்துக் கொண்டிருக்க 
“ஏய் யாரப்பாத்து லூசு னு சொன்ன பல்ல பேர்த்துடுவேன்” கோபமாக கவி எழுந்துக் நின்று கொள்ள 
“நல்லா வந்த கல்யாணத்துக்கு மாப்புள பார்க்க, என் மாமா கேக்குதா உனக்கு”
“ஏன் உன் மாமாக்கு நான் பொருத்தமா இல்லையா? இப்போ சொல்லுறேண்டி உன் மாமனை நான் தான் காட்டுவேன். எவ வரான்னு பாக்கலாம்” கோபத்தில் கவி வார்த்தையை விட அவளை ஒரு சின்ன புன்னகையினூடாக பார்த்திருந்தான் ஆதித்யா.
“மச்சான் குழாயடி சண்டையை விட கேவலமா சண்டை போடுவாங்க போல இருக்கு ஏதாவது பண்ணு” ஆதித்யா பேசும் முன்பே கையில் ஐஸ் கிரீமோடு வந்து சேர்ந்தான் கார்த்திக். 
“ஏய் அம்மு என்னடா பிரச்சினை” வந்தவன் ஆதித்யாவை முறைக்க, 
“இந்த தக்காளி என்ன லூசுன்னு சொல்லுறா?” கவியும் குழந்தையாக அவனிடம் முறையிட அவன் பார்வை ஆருவின் பக்கம் செல்ல, அவளோ அப்பாவிக் குழந்தையாக முகத்தை வைத்துக் கொண்டு “நா சொல்ல’ என்னும் விதமாக நிற்க, 
“இங்க என்ன தான் நடந்தது” என்று மீண்டும் ஆதித்யாவை பார்த்தான் கார்த்திக். 
“நத்திங் ப்ரோ சின்ன மிஸ் அண்டஸ்ட்டாண்டிங் வேற ஒண்ணுமில்ல” ஆதித்யா புன்னகைக்க 
“இவன் கண்ணுக்கும் இந்த சீனு தெரிய மாட்டான் போலயே!” சீனு நொந்து நூட்லஸ்சாகி பீல் பண்ண
“டேய் கார் கீ திருடண்ட அம்மா கிட்டயே மை போட்டு பக்குறியா வாடா போலாம்”  கவி கார்த்திக்கை இழுக்க 
“கார்த்திக் சார். ஐஸ் கிரீம் கொடுத்துட்டு போங்க” ஆருத்ரா தான் நெளிந்தவாறே  கேட்டாள். 
“இங்க ஒரு மினி யுத்தமே நடக்குது, சாப்பிடறதுலயே  குறியா இருக்காளே! பத்துரூவா ஐஸ் கிரீம் அத வாங்கிக் கொடுக்க எங்களுக்கு துப்பில்லாத மாதிரி பிச்சை கேக்குறா.  இவளை கல்யாணம் பண்ணிக்க கொடுத்தா குடும்பம் நடுத்துவாளா?” சீனுவின் மைண்ட்  வாய்ஸ் ஏகத்துக்கும் கவுண்டர் கொடுத்தது.
ஆருத்ராவின் முகம் பார்த்த கார்த்திக் எதுவும் பேசாமல் கையில் இருந்த ஐஸ் கிரீமில் இரண்டை கொடுத்து விட்டே கவியோடு நகர்ந்தான். 
“ஏன் டி அறிவு கெட்டவளே! குடும்ப மானத்த அழிக்கவென்றே பொறந்திருக்கியே! கேவலம் பத்துரூபா ஐஸ் கிரீமுக்காக பிச்சை கேக்குற” சீனு சினிமா பாணியில் டயலொக் சொல்ல 
“பத்து ரூபனாலும் புருஷன் கையாள சாப்ட்டா ஒரு கோடி பொரும்”  ஐஸ் கிரீமை சுவைத்தவாறே ஆருத்ரா
“என்ன மச்சான் இவ? வீட்டுல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க பேசிக்கிறாங்க, இவ யாருன்னே தெரியாத போலீஸ்காரனை புருஷன் எங்குறா?” ஆதியிடம் பொரிந்த சீனு ஆருவிடம் திரும்பி “இப்போ உனக்கு என்ன பிரச்சினை? பேசாம மச்சானை கட்டிக்கிட்டு வீட்டோடு அடங்கி இருக்க பாரு” ஒரு அண்ணனாய் மிரட்டினான். 
ஆனால் ஆருவிடம் எந்த ஒரு எதிர்ப்பும் இருக்கவில்லை. அவளோ ஐஸ் கிரீமை ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டு கொண்டிருந்தாள். அவளின் அமைதியே அவளின் தீவிரத்தை எடுத்துக் காட்ட ஆதித்யா யோசனைக்குள்ளானான். 
“மாப்புள இவ நடத்துகிறது சரியில்ல பாட்டிய மீறி இவ நினைக்கிறது நடக்காது. சொல்லி புரியவை” சீனு ஆதித்யாவிடம் முறையிட 
“நான் பேசுறேன். நீ ரொம்ப டென்ஷனா இருக்க கொஞ்சம் வெளிய இரு” சீனுவை வெளியே அனுப்பியவன் ஆருத்ராவின் புறம் கதிரையை திருப்பி போட்டு காலை அகற்றி கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு  அவள் முகத்தை நேருக்கு நேராக பார்க்கும் படி அமர்ந்துக் கொண்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான். 
“என்ன மாமா  எதுவுமே கேக்காம அமைதியா என் முகத்தையே பாத்துக் கொண்டு இருக்கீங்க?என்ன கேக்கணுமோ  தயங்காம கேளுங்க” முகத்தை விறைப்பாய் வைத்துக் கொண்டு ஆரு பேச 
பக்கத்துல எங்கயாவது போகணும் என்றாலே யாராவது துணை வேணும். காதல்னு வந்துட்டா ரொம்பதான் தைரியம் வருது பொண்ணுங்களுக்கு. அப்போ நீ பேசணும் னு சொன்ன விஷயம் இதுதான் இல்லையா”  ஆதி சிரித்தவாறே சொல்ல 
“வாழ்க்கை பிரச்சினை மாம்ஸ்” ஆருத்ராவும் சிரித்தாள்.
“சரி எங்க? எப்போ? எப்படி? மீட் பண்ண?” ஆதியின் பார்வை கூர்மையாக 
“அது ஒன்னும் இல்ல மாமா ஹாஸ்ட்டல்ல இருந்து எகிறி குதிச்சு தல படத்துக்கு நைட் ஷோ பாக்க பிரெண்ட்ஸ் கூட போனோம்” அசால்ட்டாக சொல்ல போலியாக அதிர்ச்சியாவது ஆதித்யாவின் முறையானது. 
“என்ன சுவரேறி குதிச்சியா? போறத பகல்ல போக கூடாதா?” அவள் செய்தது பெரிய தப்பில்லை என்பது போல் ஆதி பேச 
“த்ரில் மாமா த்ரில். இந்த வயசுல செய்யாம வேற எப்போ செய்ய” கூலாக ஆரு சொல்ல 
“இருந்தாலும் நீ ரொம்ப வளர்ந்துட்ட டி பொம்மு” 
ஆருத்ரா வரளி பாட்டிக்கு பயந்து அடங்கி  இருந்தாலும் சில்மிஷங்கள் செய்வதில் அவளை மிஞ்ச முடியாது. தேவசகாயம் இறந்த அதிர்ச்சியால் ஆருவை மீட்டெடுக்கத்தான் அவளை சென்னையில் கல்லூரியில் படிப்பை தொடர சேர்த்தான் ஆதி. அவள் இந்த மாதிரி ஏதாவது பண்ணுவாள் என்று அறிந்து தான் இருந்தான். அமைச்சர் நல்ல தம்பியின் மேல் சந்தேகம் இருப்பதனாலையும், ஆரு வேறேதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாமலும் இருக்க, அவளுக்கு தெரியாமளையே அவளை கண்காணிக்க இருவரை ஏற்பாடு செய்து தான் இருந்தான் ஆதி. 
அவர்கள் சொன்ன தகவலில் ஆரு சுவரேறிக் குதிச்சு சினிமாக்கு சென்றதும் போலீசில் மாட்டிக் கொண்டதும்  இருந்தது. “ஆகா அன்னைக்கி அவளை பிடித்து நிறுத்தியது கார்த்திக்” ஆதி நொடியில் கனக்குப் போட ஆரு சொல்வதில்  கவனமானான். 
“அன்னைக்கி சினிமா பார்த்துட்டு வரும் போது போலீஸ் செக்கிங் பண்ணி கிட்டு இருந்தாங்க, நா வண்டிய நிறுத்தாம மெதுவா எஸ் ஆகா பார்த்தேன் அப்போ கார்த்தி தான் வண்டிய நிறுத்தினார்”
“எதுக்கு வண்டிய நிறுத்தாம போன? சினமா டிக்கட்டை காட்ட வேண்டியது தானே!” ஆதி யோசனையாக சொல்ல 
“ஹிஹிஹி நா லைட்டா சரக்கடிச்சிருந்தேன். ஒரு ஸ்மால் டின் பியர் தான் வேறொன்னும் இல்ல. ட்ரங் அண்ட் ட்ரைவ் ல புடிச்சிட்டா? அதான் எஸ் ஆகா பார்த்தேன்” ஏதோ சாதித்ததை போல் ஆரு  சொல்ல மானசீகமாக தலையில் கை வைத்தான் ஆதி. 
“குடிகார பாவி… குடும்ப மானம் காத்துல பறக்குது..” சீனு பொம்மு பேச்சை கேட்டிருந்தால் கண்டிப்பாக இதை சொல்லாமல் இருக்க மாட்டான் என்று ஆதிக்கு தோன்றிய வேளை, “நா ஊர் ல இருக்குற ரெண்டு கடையையும் மூட முயற்சி செஞ்சு கிட்டு இருக்கேன். என் வீட்டுலயே ஒருத்தி குடிக்கிறானு ஊர் மக்களுக்கு தெரிஞ்சது சாணியை கரைச்சி ஊத்துவாங்க” கொஞ்சம் கடுமையாகவே வந்தது ஆதியின் குரல். 
அதை பொருட்படுத்தாது ஆரு தொடர்ந்தாள். “கார்த்தி தான் என்ன புடிச்சாரு அதுவும் எப்படி நா ஸ்பீடா போக, அவரு ஓடி வந்து என் இடுப்புல கை போட்டு அப்படியே என்ன தூக்கி, அணைச்சி புடிச்சிட்டாரு” ஆரு கண்கள் மின்ன சொல்ல 
சொடக்கிட்டு அவளை அழைத்து நடப்புக்கு கொண்டுவந்தவன்  “வண்டிக்கு என்ன ஆச்சு?” 
“அதுவா முக்கியம்? வண்டி விழுந்து கொஞ்சம் டேமேஜ் தான். மெக்கானிக் செட்டுல கொடுத்து சரி பண்ணிட்டேன்” வீம்பாக சொல்ல 
மேல சொல்லு ஆதி கையால் செய்கை செய்ய “வேறென்ன சொல்ல ஸ்ரிட் ஆபீஸரா பைன் கட்டிட்டு போ னு சொன்னாரு நல்ல வேல குடிச்சிருக்கேனான்னு செக் பண்ணல. நா குடிச்ச பியர் வசன வந்திருக்காது” முகம் சந்தோசத்தில் பூரிக்க, 
“இதான் அந்த மொக்க லவ் வந்த ஸ்டோரியா?” ஆதித்யா கடுப்பாய் சொல்ல 
“என்ன மாமா கலாய்க்கிற மாதிரி இருக்கு?” ஆரு முறைக்க 
” இன்னைக்கு அவன் உன்ன பார்த்தும் அடையாளம் தெரியல. சோ உனக்கு லவ் வந்தது கார்த்திக்கு தெரியாது. அவன் உன்ன லவ் பண்ணவும் மாட்டான் கவி சொன்னதை கேட்டல்ல” ஆதி நியாபகப் படுத்த 
“அது எனக்கு தெரியாது. நா கார்த்தியை விரும்புறேன். அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன். நீ ஏற்பாடு பண்ணு” முகத்தை சுருக்கியவாறே முந்தானை நுனியை திருக 
“முதல்ல போய் எச்சில் கைய கழுவு. துணில கறை பட்டிருக்கு” என்றவன் எழுந்து சீனுவை தேடித் செல்ல ஆரு வாஷ் பேஸன் பக்கம் சென்றாள். 
“என்ன சொல்லுறா?” சீனு கோபமாக கேக்க 
“அது தேறாத கேஸ் அவன் கிடைக்கலனா அவ சூசைட் பண்ணிக்க மாட்டா எங்க சாப்பாட்டுல விஷத்தை வைப்பா” ஆதி நொந்து போய் சொல்ல 
“மாப்புள எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல டா எதுவுமே அனுபவிக்காம அல்பாயுசுல போய் ஆவியா அலைய முடியாது. நீ தான் வீட்டுல பேசி அந்த பைத்தியத்துக்கு வைத்தியம்  செய்யணும்”  
“அப்படீங்குற? அப்போ பொம்முக்கு அண்ணனா அந்த போலீஸ்காரனை பத்தி விசாரி” என்றவன் காரில் போய் அமர்ந்துக் கொள்ள சீனுவும் ஆருவும் ஏற வண்டி ஆறுவின் ஹாஸ்டல் நோக்கி புறப்பட்டது.  
இங்கே கவி ஆருவைத்தான் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள். 
“அந்த தக்காளி என்ன லூசு னு சொல்லுறா? நீ பேசாம வர. கன்னத்துல ரெண்டு கொடுக்கணுமா இல்லையா?” கவி கத்திக் கொண்டிருக்க கார்த்திக் யோசனையில் இருந்தான். 
அவனிடமிருந்து சத்தம் வராது போகவே அவனை கவி உலுக்க “அவளை இதுக்கு முதல்ல எங்கயோ பாத்திருக்கேன். சட்டுனு நியாபகத்துல வர மாட்டேங்குது. பாக்க நல்லவளா தான் தெரியுறா” அவன் பார்த்த குற்றவாளிப் பெண்களில் அவள் இருக்க வாய்ப்பில்லை என்ற அர்த்தத்தோடு கார்த்தி சொல்ல கவிக்கு அது வேறு அர்த்தம் கொடுக்க சுறுசுறு வென அவளின் கோபம் கனன்றது. 
“டேய் நா என்ன சொல்லி கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லுற?” 
“சரி விடு கவி. எங்க போய்ட போறா? இந்த சிட்டில மீண்டும் சந்திக்க தானே போறோம் அப்போ வச்சி செய்வோம்” அவளின் தோள்கள் மீது கை வைத்து உலுக்க, கவியும் சந்தோசமாக புன்னகைத்தாள்.

Advertisement