Advertisement

அத்தியாயம் 29
ஜமீன் குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, ராணுவ குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருந்தனர். 
சம்யுத்திடம் பேசியவன் வானதியையும் சாந்தினியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர மேனகை புலம்பிக்கொண்டே இருக்க, இங்கே நடந்தது எதுவுமே அறியாமல் வந்த கார்த்திக் ஆருத்ரா, கர்ண விஜயேந்திரன் மற்றும் வரளிநாயகியை எழுந்து நிற்குமாறு சொன்னவன் ஆருத்ராவோடு சேர்ந்து காலில் விழ
“என்னப்பா….” 
“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்ற ஆரு விஷயத்தை சொல்ல எல்லாவற்றையும் மறந்து அனைவரும் சந்தோசமாக உரையாட ஆரம்பித்திருந்தனர். 
ஆதி கார்த்திக்கை கட்டித்தழுவி வாழ்த்து சொல்ல, ஆருவுக்கு வாழ்த்து சொன்ன தீப்தி மேனகை முறைத்த முறைப்பில் வெளியே சென்று அமர்ந்து கொண்டாள். 
சில மணித்தியாலங்கள் கடக்க, சீனுவை பார்க்க டாக்டர் அனுமதி வழங்க ஒவ்வொருவராக சீனுவை சென்று பார்த்து விட்டு வர வானதி செல்ல முற்படுகையில் மேனகை பிரச்சினை பண்ணவும், ராணுவ குடும்பம் ஒதுங்கிக் கொள்ள அப்பொழுதுதான் கார்த்திக்கு விஷயம் தெரிய வந்தது. கார்த்திக் மாத்திரம் உள்ளே சென்று சீனுவை பார்த்துவிட்டு வந்தான்.
ஒரு பிரச்சினை முடிவுக்கு வர இன்னொரு பிரச்சினை. ஒரு பெருமூச்சு விட்ட கார்த்திக் ஆதியிடம் வந்து அமர்ந்தவன். 
“ஆதி சீனுவை அடிச்சிட்டு பைக்குல போன ரெண்டு பேரையும் சீசீடிவி மூலம் கண்டு புடிச்சு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சிருக்கேன். கத்தியால் குத்தினவன் தான் கரும்பு காட்டுக்குள்ள புகுந்து எஸ் ஆகிட்டான். அவனை உன் ஆளுங்க தேடிகிட்டு இருக்காங்க. நைட் என்கிறதால கொஞ்சம் கஷ்டம். எப்படியும் விடியிறதுக்குள்ள ஆள் உள்ள இருப்பான். ஆனா சுபாஷ் தான் செய்ய சொன்னான்னு வாக்குமூலம் கொடுக்க மாட்டானுங்க”
“பைக்குல வந்தவனுங்க என்ன சொல்லுறானுங்க”
“உன்ன பார்க்க வந்த போது சீனு மரியாதையில்லாம பேசினானாம் அதனால அடிச்சானாம். கத்தியால் குத்தினவங்களுக்கும் இவனுங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லையாம்”  
“ஒஹ்… ஓஹ்.. லயா கண்ணு முழிக்கட்டும் சுபாஷுக்கு வைக்கிறேன் ஆப்பு”
“ஆதி அவன் சிங்கப்பூர் போய்ட்டானு சொன்னாங்களே! அவனுக்கு எப்படி நியூஸ் போய் இருக்கும்? அதுவும் நாம சென்னைல இருக்குறத தெரிஞ்சிதானே இங்க ஆள வச்சி இவ்வளவும் பண்ணி இருக்கானுங்க”
“ஏற்கனவே என்ன கண்காணிக்க ஆள் வச்சிருப்பான். சரியான டைம்ல பயன்படுத்திக்கிட்டான். டி.ஜி.பி. மூலமா விஷயம் போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தா நாம கம்பளைண்ட் கொடுத்த அன்னைக்கே அவனுக்கு தெரிஞ்சி இருக்கணும். இன்னைக்குத்தான் தெரிஞ்சிருக்கு. கண்டிப்பா அவன் இந்தியா வந்திருப்பான். டி.ஜி.பி. அவனை அரெஸ்ட் பண்ண மூவ் பண்ண போய் அது சம்பந்தமான யாராவதுதான் அவனுக்கு தகவல் சொல்லி இருக்கணும்”
“யு ஆர் ரைட். குமரகுரு பாதுகாப்பா இருக்கிறார். நான் விசாரிச்சிட்டேன்”
“இப்போவும் நம்ம மேல கண்ண வச்சிருப்பான். அதனால நம்பிக்கையான ஆட்கள் வேணும். உன் பிரென்ட் மிஸ்டர் தீரன் கிட்ட உதவி கேட்கலாம்ல”
“கண்டிப்பா பண்ணுவான். என்ன பண்ணனும்னு சொல்லு.” கார்த்திக் காதுகளை கூர்மையாக்க, வாசுவை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்ட  ஆதி தன் திட்டத்தை விவரிக்கலானான்.  
 
சீனுவை பார்க்க முடியாமல் தீப்தி தவிக்க, மேனகையை மீறி சென்று பார்க்க மனம் வரமால் அமைதியாக அமர்ந்திருக்க, சாந்தினி அவள் கைகளை ஆறுதலாக பற்றிப் பிடித்திருந்தாள். 
மனம் கனத்திருந்தாலும், கண்கள் சிவந்திருந்தாலும் கண்ணீரை சிந்த விடக் கூடாதென்பதில் பிடிவாதமாக நின்றிருந்தாள். 
 
சீனுவுக்கு நினைவு திரும்பியதாக தாதி வந்து சொல்ல தீவிர சிகிச்சை பிரிவினுள் நுழைந்த டாக்டர் பரிசோதித்து விட்டு வந்து 
“சீனுவின் மனைவி யாருங்க” என்று கேட்க அனைவரும் முழிக்கலாயினர். 
“என்ன பேயறைஞ்ச மாதிரி பாக்குறாங்க” என்ற முகபாவனையை கொடுத்த மருத்துவர்  மாறி மாறி பார்க்க 
அவரருகில் ஓடிவந்த மேனகை “நான்தான் அவன் அம்மா… அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல டாக்டர். என் பையனுக்கு என்ன ஆச்சு” என்று புடவை முந்தியை வாயில் வைத்து அழ ஆரம்பிக்க, அனைவரும் மருத்துவரை சூழ்ந்துகொள்ள குழப்பத்தில் ஆழ்ந்தார் மருத்துவர். 
“என்ன டாக்டர் பிரச்சினை” ஆதி யோசனையாக கேட்க கார்த்திக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான். 
“அது வந்து… தலைல அடிபட்டத்துல அவருக்கு அவர் மனைவி மட்டும்தான் நியாபகம் இருக்கு. என் மனைவியை கூபிடுங்கனு சொல்லுறாரு. இந்தம்மா என்னடானா கல்யாணமே ஆகலானு சொல்லுறாங்க. வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டாரா?” என்று சொல்ல 
 ஆதியின் பின்னால் இருந்த தீப்தி அதிர்ச்சியாக பார்க்க கார்த்திக் ஆறுதலாக அவளின் கையை பற்றியவன் அழுத்த அவன் முகம் பார்த்தாள் தீப்தி. கார்த்திக் கண்சிமிட்ட, தீப்தி புருவம் உயர்த்த நாக்கை துருத்தியவன் “சும்மா” என்று சொல்ல தீப்தியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. 
“என்ன சொல்லுறீங்க டாக்டர்?” ஆதி யோசனையாக 
“எனக்கே ஒன்னும் புரியல சார்” என்று சொல்ல கார்த்திகால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. 
“சரி தீப்தி என்றது யாரு?”
“இதோ இவங்கதான்” ஆதி தீப்தியை அறிமுகப்படுத்த 
“நீங்க மட்டும் உள்ள வாங்க” என அவர் உள்ளே செல்ல தீப்தியை தள்ளிக் கொண்டு  முன்னால் சென்றாள் மேனகை. 
“நம்ம சீனுக்கு என்னப்பா ஆச்சு” வரளிநாயகி பதட்டமாக கேட்க 
“என்னனு தெரியல பாட்டி” ஆதி சொல்லியவாறு அவரை ஆதரவாக பற்றிக்கொள்ள கார்த்திக் சீனுவை பார்க்க சென்ற போது பேசியது நியாபகத்தில் வர தான் செய்தது சரி என்ற முடிவுக்கு வந்தான்.
கவியை பற்றி ஆதி வீட்டில் சொல்லாததுக்கும் சீனு தீப்தி திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? கவியை போலவே தீப்தியும் கார்த்திக்கு தங்கைதான் அவள் வாழ்க்கையில் பிரச்சினை வர விட்டு விடுவானா?
கார்த்திக் உள்ளே செல்லும் பொழுது சீனு எழுந்து அமர கார்த்திக்கை கண்டு நன்றாக பேச 
“இதுக்குதான் மண்டை பாத்திரம், மண்டை பத்திரம்னு சொல்லுறது. என்னடா மாப்புள இப்போ எப்படி இருக்க” 
“நக்கலு” சீனு வலியோட சொல்ல 
“வெளில என்ன நடக்குதுன்னு தெரியுமா?”
“ஆடு, மாடு நடக்குதா?” சீனுவும் நக்கலாக கேக்க 
“தீப்தி வந்திருக்கா”
“ரவ்டி பேபி வந்திருக்காளா?”
“ஆனா உங்கம்மா உன்ன பாக்க விடமாட்டாங்க, கல்யாணத்த நிறுத்திட்டாங்க”
“என்னடா சொல்லுற” சீனு தலையில் கைவைக்க 
“சீ நடிக்காத உனக்கு ஒண்ணுமில்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு”
“நடிக்கத்தான்டா போறேன்” 
“என்ன பண்ண போற?”
“எங்கம்மா கல்யாணத்த நிறுத்தினா என்ன? ஹாஸ்ப்பிடல்ல இருந்து போகும் போது அவங்கள பாட்டியாக்குறேன்” சீனு ஆள்காட்டி விரலை உயர்த்தி சபதம் எடுக்க கார்த்திக் தலையில் அடித்துக் கொண்டான். 
டாக்டரையும் தள்ளிக்கொண்டு உள்ளே சென்ற மேனகை சீனுவை கட்டிக்கொண்டு அழ
“யாருமா நீ தள்ளி போ… ” என்று மேனகையை அந்நிய பார்வை பார்த்தவன் தீப்தியை கண்டு “பேபிமா… என்னடா ஆச்சு? கோலு எங்க?”
“கோலுவா? அதுயாரு” தீப்தி புரியாது கேக்க 
“நம்ம பாப்பா மா… அவனை பாக்காம நான் எப்படி இருப்பேன். அங்க எதுக்குமா… இருக்க இங்க வந்து மாமா பக்கத்துல உக்காருமா” உருகி வழிய மேனகையை தாண்டிச் சென்று சீனுவின் அருகில் சென்று அமர்ந்தவள் 
“ரொம்ப வலிக்குதா மாமா” என்று அவன் தலையை தடவ மேனகை “சீனு” என்று விசும்ப 
“யாரு பேபி இந்த அம்மா…பைத்தியமா?  யாரோ சீனுவாம். அவங்க பையனா? என்ன ஆச்சு அந்த பையனுக்கு செத்துட்டானா? இந்த அம்மாவ பார்த்தா அவன் லவ்வ பிரிச்சி அவனை வாழ விடாம பண்ணி இருப்பாங்கன்னு தோணுது. அதான் பைத்தியமா அலையுது” பொய்யாய் அனுதாபப் பட வாயை மூடிக்கொண்டு மேனகை அழ 
“இங்க பாருங்கம்மா அவரு மனசுல அந்த பொண்ணுதான் எல்லாம்னு பதிஞ்சு போச்சு, அவங்கள பிரிச்சா ஒருவேளை மூளை பாதிச்சு செத்துடுவாரு” சீனுவுக்கு கண்ணடித்த டாக்டர் வேடமிட்ட வார்டு பாய் சொல்லி விட்டு வெளியேற மேனகை அழுது கரையலானாள்.
“டேய் ஏன் டா… இப்படி பண்ணுற? பாவம் டா அத்த” தீப்த்தி சீனுவை அடிப்பது போல் கையை ஓங்கி விட்டு மேனகையை சமாதானப்படுத்த மேனகையும் புலம்பியவாறே தீப்தியை கட்டிக்கொண்டு 
“என் பையன விட்டுட்டுட்டு போயிடாதேம்மா நீ இல்லைனா அவனுக்கு ஏதாவது ஆகிடும்” என்று கதற தீப்திக்கு கட்டைவிரலை உயரத்துக் காட்டினான் சீனு.  
மேனகைக்கு கவியை பற்றிய உண்மையை மறைத்ததை விட கவிக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஆதியின் வாழ்க்கை என்னாவது என்ற பயம் தான் கோபமாக பேச வைத்திருந்தது. என்றுமே அடித்திராத அன்னை அனைவரும் முன்னால் அடிக்கவும் வீம்பாக கல்யாணத்தை நிறுத்துவதாக கூறியவள் கோபத்தை விடாது பிடித்திருந்தாள். 
ஒருவரின் வீண் பிடிவாதம் பலரின் வாழக்கையை இவ்வாறுதான் கேள்விக்குறியாக்குரியது. ஆருவுக்கு எங்கிருந்து இவ்வளவு பிடிவாத குணம் வந்திருக்கும் என்று புரிந்து கொண்ட கார்த்திக் அதை உடனே சீனுவின் காதில் போட மகனின் வாழ்க்கையை விட, உயிரை விட பெற்ற அன்னைக்கு வேறு என்ன வேண்டும்? முறைத்துக் கொண்டிருந்தவளிடமே சரணடைந்து விட்டாள் மேனகை.
கார்த்திக் வெளியே உள்ள அனைவருக்கும் உண்மையை சொல்ல சீனுவுக்கு ஒன்றுமில்லை என அறிந்த பின் நிம்மதி அடைந்தவர்கள் மேனகையை சீனு வழிக்கு கொண்டு வந்து விடுவான் என அமைதியானார்கள்.
“பார்த்தியா கார்த்தி என் நிலைமையை? வாட் பாயெல்லாம் டாக்டரா நடிக்கிறான் கண்டு கொள்ள கூட முடியல” ஆதி நொந்தவாறு சொல்ல 
“இந்த மாதிரி நேரத்துல தான் மனச ரொம்ப திட்டமா வச்சுக்கணும், மூளையை இன்னும் ஷார்ப்பா வச்சுக்கணும்”
“அது சரி. ஆமா நீ எப்படி இப்படி இருக்க?”
“போலீஸ் என்பதால இருக்கும். கூடவே மிலிட்டரி பாமிலி இல்லையா” கார்த்திக் கண்ணடிக்க 
“இருக்கும், இருக்கும். நீ இருந்ததால நிறைய வேல உடனடியா நடந்தது. தேங்க்ஸ் டா தம்பி” என்ற ஆதி கார்த்திக்கை அணைத்துக்கொண்டு ஆர்த்மார்தமாக சொல்ல 
“நமக்குள்ள என்ன ப்ரோ” என்றவனின் மனமோ நிறைந்திருந்தது. 
 
ஆறு மணித்தியாலங்களாக கவியின் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த பின்னும், பசி, தூக்கம் மறந்து அந்த விடியற்காலை பொழுதில் அனைவரும் ஒவ்வொருத்திக்கில் அமர்ந்திருந்தனர். பித்யுத் வந்து சேர காலை பத்து மணியாகும் என்று தகவல் சொல்லி இருந்தான். 
 
ராணியும், கவியும் தீவிரசிகிச்சை பிரிவில் இருந்தனர். ராணி இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் கண்விழிப்பாள் என்று கூறிய டாக்டர் கண்விழித்ததும் சாதாரண அறைக்கு மாற்றுவோம் என்றும் கவி மூன்று நாட்களுக்கு தீவிரசிகிச்சை பிரிவில் இருப்பாள் என்றும் மதியம் கண்விழிப்பாள் என்றும் கூறிச்சென்றார். 
ஆதிக்கு கவி கண்விழித்து பேசும்வரை எந்த வேலையும் ஓடவில்லை கார்த்திக்தான் அடிக்கடி பேச்சுக்கொடுத்து உடனடியாக நடக்க வேண்டியவைகளை செய்வித்தான். 
அதன் படி தீரனை அழைத்து பேசியவன் கண்டிப்பாக சுபாஷ் சந்திரன் தனிவிமாத்தில் தான் இந்தியாவை அடைந்திருக்கவேண்டும் தமிழ் நாட்டில் தனிவிமானங்கள் தரையிறங்கும் இடங்களையும், சீசீடிவி காட்ச்சிகளையும் கவனித்து தற்பொழுது சுபாஷ் எங்கே இருப்பான் என்று கண்டறியுமாறு கேட்டுக்கொண்டான். 
சீனு சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்தான். தீப்தியை தன் அருகிலையே அமர்த்திக் கொண்டவன் நாடகத்தை தொடர்வதை விடவில்லை. கவிக்கு நடந்தது சீனுவுக்கு தெரியவில்லை. சொன்னால் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்று சங்கடப்படுவான், அவன் இருக்கும் நிலைமைக்கு இப்பொழுது சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தவர்கள் சொல்லாமல் விட்டுவிட்டனர்.
ராணியும் கண்விழித்த பின் அறைக்கு மாற்றப்பட்டிருக்க வானதியும், சாந்தினியும் அவளை கவனிக்கும் பணியில் இருந்தனர்.  ஆதி கர்ண விஜவேந்திரன் மற்றும் வரளிநாயகியை ஜமீனுக்கு அனுப்பி வைக்க, மேனகையும் சமைத்துக்கொண்டு வருவதாக கிளம்பி இருந்தாள். 
பித்யுத் வந்து சேர கவி கண் விழித்ததும் அவளை பார்த்து கையை பற்றிக் கொண்டு பேசிய ஆதி முதலில் சொன்னது குழந்தைக்கு ஒன்னும் இல்ல என்பதையே! கண்கள் கலங்க ஆதியை பார்த்தவள் வலியோடு புன்னகைக்க 
“லயா உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்கணும். அவன் நிறைய தப்பு பண்ணி இருக்கான். இப்போ விட்டா அவனை பிடிக்க முடியாம போய்டும். இப்போ நான் போகட்டுமா?” மனைவியின் அனுமதி வேண்டி நிற்க கண்களை மூடித்திறந்து சம்மதித்தாள் கவி.
கவியின் நெற்றியில் முத்தமிட்டு புன்னகையோடு விடை பெற்றான் ஆதி.
  
பித்யுத், சம்யுத் மற்றும் சக்கரவர்த்தியை மருத்துவமனையில் விட்டு ஆதி கார்த்தி வாசு மூவரும் கிளம்பி பெங்களுர் பயணித்தனர்.  
தீரன் சீசீடிவியை கண்காணித்து சுபாஷ்  பெங்களூரில் தனது தனி விமானத்தில் வந்திறங்கி தங்கி இருப்பதாக தகவல் சொல்லி இருந்தான். அத்தோடு அவன் எங்கு தங்கி இருக்கிறான் என்பதுவரை தீரன் சரியாக தகவல் சொல்லி இருக்க, சென்னை குற்றவியல் பிரிவின் டி.ஜி.பியை அழைத்து சுபாஷ் பேசியதையும், அவனுக்கு அரெஸ்ட் பண்ண போகிற விஷயம் தெரியும் என்பதையும் கூறிய ஆதி தன்னுடைய திட்டத்தை சொல்ல அவரும் “சரி” என்றவர் ஆதியை பெங்களுர் போகும் படியும் சுபாஷை அரெஸ்ட் பண்ண ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு விட்டு தானும் வருவதாக கூறினார். 
பெங்களூரில் சுபாஷ் தனது பங்களாவில் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். சிங்கப்பூரில் இருக்கும் பொழுது அரஸ்ட்பண்ண போகும் தகவல் வந்ததும் ஆதியை கொலை செய்யும் வெறியில் இருந்தவன் அவன் பாதுகாப்பு வளையம் அறிந்ததால் வீட்டார் மீது கவனம் செலுத்த அங்கும் பாதுகாப்புக்கு ஆட்கள் ஆதி ஏற்பாடு செய்திருந்தான். 
என்ன செய்யலாம் என்று யோசித்தவன் அங்கங்கே தன்னுடைய ஆட்களை சந்தேகம் வராத படி நிறுத்தியவன் சந்தர்ப்பம் அமையவே ஈவு, இரக்கமின்றி கொன்று விட சொன்னவன் பெங்களூரில் அமர்ந்து கொண்டு தன் குடும்பத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான். 
சிங்கப்பூரில் இருக்கும் பொழுதே மனைவியை அழைத்து பேசி வெளிநாட்டில் செட்டில் ஆகா வேண்டும் என்று கூற உடனடியாக முடியாததால் அதற்கான ஏற்பாடுகளை பண்ணி விட்டு, குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மூன்று நாளில் வருவதாக கூறி இருந்தாள் அவன் மனைவி சாந்திபிரியா. 
பெங்களுர் வந்தவன் மனைவிக்கு தகவல் சொல்லி குழந்தைகளுடன் வந்து சேரும்வரை காத்திருக்க, ஒரு வண்டி உள்ளே வரவும் “என்ன சாந்தி எவ்வள எர்லியா வாரா” என நினைத்தான் சுபாஷ். ஆனால் இறங்கியதோ ஆதியும் கார்த்திக்கும். 
அவர்களை அங்கு எதிர்பார்க்காத முகபாவத்தை அப்பட்டமாக காட்டிய சுபாஷ் “வாங்க ஆதி சார் என்ன போலீசை கூட்டிட்டு வருவீங்கன்னு பார்த்த இப்படி தனியா வந்திருக்கீங்க?” கிண்டலாக வினவ 
“யாரு தனியா வந்தா நான் என் தம்பி கூட வந்திருக்கேன்” என்றான் ஆதி. 
“அது சரி அவரு போலீஸில்ல” 
சுபாஷின் ஆட்கள் ஆதியையும், கார்த்திக்கையும் பிடிக்க வர 
“விடுங்கடா… உள்ள வரட்டும் அவனுங்களே வந்து மாட்டி இருக்கானுங்க” என்றவன் ராஜமரியாதையோடு அழைத்து சென்று உள்ளே அமர வைத்தான். 
ஒரு பக்க சோபாவில் ஆதியும், கார்த்திக்கும் அமர்ந்திருக்க, மறு பக்கம் சுபாஷ் அமர்ந்திருக்க, அவனுடைய ஆட்கள் ஆதியையும், கார்த்திக்கையும் சுற்றி நின்று கொண்டனர். 
ஆதியோ, கார்த்திக்கோ எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
“என்ன ஆதி சார் உங்க பொண்டாட்டிய கொல்ல ஆளனுப்பியத்துக்கு என் சட்டையை புடிச்சி சண்டை போடுவீங்கன்னு பார்த்தா இப்படி சைலண்ட்டா இருக்கீங்க”
“அப்போ என் பொண்டாட்டிய குத்தினவன் உன் ஆளு. நீ சொல்லி தான் செஞ்சி இருக்கான். சீனுவை போட சொன்னதும் நீதான் இல்லையா?” ஆதி கொஞ்சமும் கோபமில்லாமல் பேச 
“சீனுவை மட்டுமில்ல கார்த்திக் வைப், உங்க பாட்டி எல்லாரையும் தான் போட சொன்னேன். மிஸ்பண்ணிட்டாங்க” கையை மேலே தூக்கியவாறு, காலை ஆட்டியவாறு சொல்லியவன் சிரிக்கலானான். 
“அப்போ எங்க அப்பா…”
“அதுவும் உனக்கு தெரிஞ்சி போச்சா….” என்றவன் ஆதியின் தந்தையை எதற்காக கொன்றான் என்பதை விலாவரியாக சொன்னான். 
“என்ன எதுக்கு கொல்ல முயற்சி செஞ்ச?” அமைதியாக இருந்த கார்த்திக் பேச 
“எதுக்குன்னு உனக்கு தெரியாதா? நீதான்  பெரிய பிஸ்தா போலிஸாசே கண்டு பிடிச்சிருப்பானு நினச்சேன்” என்றவன் மாமனாரை கொன்ற கதையையையும் கார்த்திக் அதில் எவ்வாறு உள்ளே வந்தான் என்பதையும் சொல்ல ஆரம்பிக்க, ஆதியும் கார்த்திக்கும் மெளனமாக வேடிக்கை பார்க்கலாயினர்.  
தன்னுடைய பணபலத்தில் இறுமாப்பு கொண்டிருந்த சுபாஷ் ஆள்பலமும் கூட இருக்க, தனியாக வந்து ஆதியும், கார்த்திக்கும் மாட்டிக்கொண்டதாக எண்ணி வாக்குமூலம் கொடுப்பதை அறியாமளையே உண்மைகள் அனைத்தையும் உளறிக்கொண்டிருந்தான்.
“சரி சரி கத சொல்லி டயர்டாகிட்டேன். இப்போ என் வைப் வேற வருவா நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்தா வீண் பிரச்சினை. தம்பிகளா அண்ணனுங்கள கவனிங்க” என்று சொல்ல 
“எங்களை கவனிக்கிறது இருக்கட்டும் உன்ன எப்படி காப்பாத்திக்க போற?” கார்த்திக் கிண்டலாக கேக்க 
“உங்க ரெண்டு பேர்கிட்ட இருந்தா?” சுபாஷ் சத்தமாக சிரிக்க 
“எங்க அக்கா கிட்ட இருந்து” என்ற கார்த்திக் “அக்கா… வாங்க எல்லாம் கேட்டுக்கிட்டுதானே இருந்தீங்க” சத்தமாக சொல்ல சுபாஷ் புருவம் உயர்த்த உள்ளே வந்த சாந்திப்பிரியா சுபாஷை கன்னம் கன்னமாக அறையலானாள்.
  

Advertisement