Advertisement

அத்தியாயம் 17
மறு வீட்டு விருந்து, குலதெய்வ பூஜையன்று ஒரு வாரம் ஓடியிருக்க, வானதியின் அண்ணன்களின் குடும்பத்தோடு சித்தார்த்தின் அக்காவும், மாமாவும் மதுரையை நோக்கி பயணித்திருக்க,  சம்யுத்தின் குடும்பமும் டெல்லி திரும்பியிருந்தனர்.
கல்யாணத்துக்கென வந்த உறவினர்கள் அனைவரும் கிளம்பிய இரண்டாவது நாள், வாசலில் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தனர் சித்தார்த்தும், பித்யுத்தும் 
“என்ன மாமா கல்யாணத்துக்கு மட்டுமா லீவ் போட்டீங்க? இப்படி திடு திடுப்பென்று கிளம்பிட்டீங்க” ஆதி உள்ளே வந்தவாறே கேள்வி எழுப்ப அவன் பின்னால் வந்த கவியோ 
“என்ன அம்மாடா, ராணிமாட பெட்டி கூட இருக்கு? நீங்க ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க?” கேள்வி என்னமோ அன்னைகளுக்காக என்றாலும் கார்த்திக்கின் முகம் பார்த்து நின்றாள். 
அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. கல்யாணம் ஆனா பின்னும் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தானே! வீடு மாறி, வேலையையும் இந்த ஊருக்கே மாற்றம் செய்து வந்தது. இப்பொழுது தேவிமாவும், ராணிமாவும் எங்கே கிளம்பிவிட்டார்கள் என்று புரியாத பார்வையிலையே அமர்ந்திருந்தான் கார்த்திக்.
“எனக்கு ட்ரான்ஸ்பெர் கிடைக்கலப்பா…  கிடைச்ச உடன் வரேன். எனக்கு துணையாக ராணியையும் கூட்டிட்டு போறேன்” பொதுவாகவே அனைவருக்கும் வானதி சொல்ல அன்னையை நம்பாத பார்வை பார்த்த கவி கணவனை ஏறிடலானாள். 
அவன் தலையிட்டிருந்தால் வேலை மாற்றம் இலகுவாக கிடைத்திருக்கும். எல்லாம் சரி என்று தானே அன்னை சொன்னாள். அப்படியாயின் பொய் சொன்னாளா? ஏன் என்று கண்களில் கேள்வியுடன் அன்னையை பார்த்திருக்க மகளின் முகம் பார்க்க மறுத்தாள் வானதி.  
ஆருத்ராவோ அந்த இடத்திலேயே இல்லை தனதறையில் ஏதோ வேலையாக இருக்க, செல்பவர்களை வழியனுப்ப கூட வரவில்லை.  
“என்ன விஷயம் அத்த? இங்க இருக்க பிடிக்கலையா?”யோசனையாக ஆதி 
“அப்படி இல்ல மப்புள ட்ரான்ஸ்பெர்….”
“என் கிட்ட சொல்லி இருந்தால் உடனே நடந்திருக்குமே!  எல்லாம் சரி என்றதில் தானே நானும் அமைதியாக இருந்துட்டேன். நீங்க ரெண்டு பேரும் தனியா எப்படி” ஏதோ காரணம் இல்லாமல் வானதி ட்ரான்ஸ்பெர் வாங்கவில்லை என்று அவளின் முகபாவனையே சொல்ல அதற்கு மேலும் பேசாது அமைதியானான் ஆதி. 
போகும் வழியில் ஜமீனுக்கு சென்று அனைவரிடமும் விடை பெற்று விட்டே கிளம்பினார்கள் அனைவரும். வரளிநாயகியும்  கேள்வி எழுப்ப ஆதிக்கு சொன்ன அதே பதிலையே சொன்னாள் வானதி.  
ரயில் நிலையத்திற்கு ஆதி சென்றால் வீணான கூட்டம் கூடுமென்றும், பாதுகாப்பு கருதி அவனுடைய மெய்காப்பாளர்கள் தடுக்க, சீனுவும் ஏதோ ஒரு வேலையாக சென்றிருந்த படியால், கவியும், கார்த்திக்கும் மட்டும் சென்றிருந்தனர்.
தங்களது குடும்பம் மட்டுமே இருக்கின்ற படியால் கவியும், கார்த்திக்கும் வானதியிடம் மாறி மாறி கேள்விகளை குடைந்துக் கேட்டும் மௌனமாகவே இருக்க பொறுமை இழந்த கவி தான் 
“சரி நீ போ உன் ட்ரான்ஸ்பெர் வேலையை என் கணவர் பார்த்துக் கொள்வார்” என்று விட்டாள்
ரயிலில் வந்ததும் முதல் வகுப்பில் சித்தார்த்தும், பித்துத்தும் ஒரு பக்கமாகவும் வானதியும், ராணியும் மறு பக்கமாகவும் அமர்ந்துக் கொண்டனர்.
சித்தார்த்தும், பித்யுத்தும் ஒரு மாத விடுப்பில் வந்திருக்க கல்யாண சடங்குகள் அனைத்தும் முடிந்த உடனே! வானதி ஊருக்கு கிளம்பலாம் என்று சொல்ல கேள்வியாக அவளை ஏறிட்ட பித்யுத்துக்கு அவள் ஒழுங்கான பதிலை கொடுக்கவில்லை. 
ராணியும், சித்தார்த்தும் மறு பேச்சின்றி கிளம்ப, ரயில் கிளம்பிய பின்னாவது வானதி சொல்வாளா என்று எதிர்பார்த்தான் பித்யுத். ஆனால் அவள் மௌனமாகவே வர 
“வானதி இந்த சம்பந்தம் நீ பார்த்து முடிச்சது. ஏதாவது பிரச்சினை இருந்தால் கண்டிப்பா நீ இதற்க்கு சம்மதிக்க மாட்டாய். கவியும், கார்த்திக்கும் ஒன்னு சேரனும் னு எங்க ஆச ஆனால் அவங்க ரெண்டு பேரும் ஆசைப்படலையேன்னு தான் அரேஞ் மேரேஜுக்கு சம்மதிச்சோம். என்ன பிரச்சினைனாலும் சொல்லு” சித்தார்த் தன்மையாக கேட்க 
தன் முகபாவனையே எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடுமோ என்றஞ்சியவாறே! உண்மையை சொல்லலாமா? வேண்டாமா என்ற யோசனையில் வானதி விழ
“ராணி நீயாவது சொல்லு. என்ன நடந்தது? சம்மந்தி வீட்டுல ஏதாவது தப்பா பேசிட்டாங்களா?” பித்யுத் ராணியை ஏறிட வானதியின் அனுமதியின்றி வாய் திறக்க மறுத்தாள் ராணி. 
“இப்போ ரெண்டு பேரும் பேசலைனா… நான் மிஸ்டர் கர்ண விஜயேந்திரன் கிட்டயே கேட்டுக்கிறேன்” பித்யுத் கோபமாக அலைபேசியை கையில் எடுக்க, 
அவன் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கிய வானதி “இப்போ என்ன உண்மை தெரிஞ்சாகணும் உங்களுக்கு? சின்னன்ச் சிறுசுங்க தனியா இருக்க ஆசப் பாடுவாங்க, நீங்க ரெண்டு பேரும் கிளம்பி காஸ்மீர் போயிடுவீங்க அப்பொறம் நானும் ராணியும் தான் தனியா இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்ப முன் ஒரு எட்டு மதுரைக்கு போய் அப்பா கூட ரெண்டு நாள் தங்கலாம் னு பார்த்தா ஆளாளுக்கு கேள்வி கேக்குறீங்களே! சரியான ரோதனயா போச்சு” வானதி முகத்தை சுருக்க, 
“இவ்வளவு தானா… இத சொல்ல எதுக்கு இம்புட்டு யோசிக்கிற, உனக்கு உன் அப்பாவை கொஞ்சனும், நான் என் பொண்ண கொஞ்ச கூடாதென்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு இருந்தியாக்கும்” பித்யுத் கொஞ்சும் மொழியில் பேச 
“அடங்க மாட்டீங்களா?” கண்ணாளையே! அச்சுறுத்தல் விடுத்தாள் வானதி. 
“இவன் காதல் ஏவுகனையெல்லாம் வீசுறான் ராணி நமக்கு சேதாரம் வந்துடும் வாம்மா நாம அந்த பக்கம் போலாம்” சித்தார்த் கிண்டல் செய்தவாறே வெளியே செல்ல  
“இருடா மச்சான் நானும் வாறன் இந்த பூதனி கிட்ட என்ன கோர்த்து விட்டுடாத” என்றவாறே பித்யுத்தும் கிளம்ப 
“என்ன பூதனி னு ரெண்டு பேரும் தம்மடிக்கவா போறீங்க, போயிட்டு வாங்க வச்சிக்கிறேன்” வானதி மிரட்ட 
“வந்தவனை வச்சிக்காம ஊருக்கு கிளப்பிட்ட  நீயெல்லாம் வாய் சவுண்ட் மட்டும் தான்” அதற்கும் பதில் சொல்லியவாறே பித்யுத் சித்தார்த்துடன் சென்று விட 
“அக்கா நல்லவேளை சொல்லல… எங்க நீங்க சொல்லிடுவீங்களோ னு பயந்துட்டேன்” ராணி சொல்ல அவளின் வாயை பொத்தியிருந்தாள் வானதி. 
“ஏன் ட… பித்யு…. நீயெல்லாம் மிலிட்டரி னு குரலை உயர்த்தாத, பொண்டாட்டிய அதட்டி விசாரிக்க தெரியல உன்னெல்லாம்.. எதுக்கு சமாளிச்ச?” சித்தார்த் யோசனையாகவே கேக்க
“சொல்ல கூடிய விஷயமாக இருந்தா சொல்லி இருப்பா. சொல்ல கூடாதென்று தான் தடுமாறினா. அவளுக்கு அந்த கஷ்டத்தை கூட கொடுக்க மனசு கேக்கல அதான் சமாளிச்ச்சேன். சொல்லணும் னு தோணுறப்போ அவளே சொல்லுவா”
“சரியான பொண்டாட்டி தாசனா இருக்கியே! உன்னயெல்லாம் என் நண்பன்னு சொல்லிக்கிறதுல அவ்வளவு பெருமை எனக்கு” சித்தார்த் பித்யுத்தின் தோளில் தட்டியவாறே சிரிக்க, பித்யுத்தும் சிரிக்கலானான்.
“ஏன் டா… கார்த்தி அப்படி என்ன விஷயமாக இருக்கும் அம்மா ட்ரான்ஸ்பெர் வாங்காம இருந்தாங்க?” இதே கேள்வியை மாற்றி மாற்றி குறைஞ்சது நூறு தடவையாவது கார்த்திக்கிடமும், வானதியிடமும் கேட்டது தான் ஆனால் கவிக்கு பதில் தான் கிடைக்கவில்லை. 
“என்ன கேட்டா.. நானே காண்டுல இருக்கேன். எல்லாம் சரி, சரி னு சொல்லிட்டு இப்படி விட்டுட்டு போய்ட்டா? ராணிமா கையால சாப்பிடாம தூக்கமே வராது” 
“போடா.. சோத்து மூட்ட  உன் பொண்டாட்டிய சமைச்ச சொல்லி சாப்பிடு. என் ராணிமாவை வேல வாங்க பாக்கிறியா?” 
கார்த்திக்கின் வண்டியை ஒரு வண்டி தொடர்வது அவன் போலீஸ் கண்களுக்குள் சிக்க, அந்த வண்டியை பற்றிய தகவல்களை திரட்டுமாறு அலைபேசியில் குறுந்செய்தி அனுப்பிவிட்டே  கார்த்திக் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, அவனின் தோளில் அடிக்கலானாள் கவி. 
கவி இந்த விஷயத்தை லேசில் விட மாட்டாள் என்று தோன்றவே அவளை திசை திருப்ப சொல்லியது சரியாக வேலை செய்யவே கார்த்திக்கும் வேறு பேச்சை ஆரம்பிக்க வீடு வரை அவர்களின் பேச்சு நீண்டது. 
நாட்கள் அதன் பாட்டில் நகர கவிலயா ஜமீன் குடும்பத்தில் பக்காவா ஐக்கியமாகி இருந்தாள். காலையில் காலேஜ், ஆஸ்பிடல், படிப்பு, என்றும் மாலையில் இளவரசியோடு தோட்டத்தில் உலாவருவதும், இரவில் கணவனோடு பொழுதை கழிப்பதும் என்று பரபரப்பாகவே அவள் வாழ்க்கை சந்தோசமாக நகர ஆதியும் மனைவியோடு நேரம் செலவழித்தவாறே தனது வேலைகளில் மூழ்கி இருந்தான்.
   கார்த்திக்கும் வேலையில் சேர்ந்திருக்க, ஆருத்ராவும் தனது படிப்பை தொடர்ந்துக் கொண்டே தனியாக வீட்டையும் சமாளிக்கலானாள். 
“வீட்டு வேலைக்கு தான் ரெண்டு பேர வச்சிருக்கோமே! எதுக்கு நீ அங்கிட்டும் இங்கிட்டும் அலையுற” 
“சரியா போச்சு..  உங்களுக்கு அக்கியூஸ்டே பிடிக்கவே நேரம் சரி. நான் பார்க்கலைனா வேறு யார் பாக்குறதாம்? வேலைக்காரங்க கைல வீட்டு பொறுப்பை கொடுத்துட்டு நாம கண்ண மூடிக்கிட்டு இருந்தா.. அப்பொறம் பொருள் திருடறது, இங்க இருந்தே வீட்டுக்கு சமைச்சி கொண்டு போறதுன்னு அவங்க ராஜ்ஜியம் தான்”
“அதுக்குதான் வீட்டுல பெரியவங்க இருக்கணும், இதுவே என் ராணிமா இருந்திருந்தா ஒத்த ஆளா எல்லா வேலையையும் பார்த்திருப்பாங்க” கார்த்திக் பெருமூச்சு விட 
“அதானே பார்த்தேன் எங்கடா.. அம்மா புராணம் பாடலையே னு” மனதுக்குள் நொடித்தவாறே கணவன் அருகில் வந்து அவன் மடியில் அமர்ந்தவள் 
“பாத்திருப்பாங்க, பாத்திருப்பாங்க, அத செய்யாத, இத செய்யாத, நொடிக்கொருதரம் கார்த்திக் னு ஏலம் போட்டு உங்கள அவங்க கூடவே வச்சி வேல வாங்கி இருப்பாங்க, இப்போ பாருங்க நாம ரெண்டு பேரும் மட்டும், யார் தொந்தரவும் இல்ல. நம்ம பிரைவசி அப்படியே தான் இருக்கு” கார்த்திக்கின் கழுத்தைக் கட்டிக்க கொண்டு சொல்ல 
அவள் பேச்சுக்கு மறுத்து பேச வாய் திறக்கும் பொழுதே அவனின் அலைபேசி அடிக்க திரையில் தீரன் என்று மின்னியது. 
“ஆரு ஒரு நிமிஷம் முக்கியமான கால்” என்றவன் அவளை உதறாத குறையாக எழுந்து வேக நடையில் மறு அறையினுள் புகுந்து கதைவடைத்துக் கொள்ள 
“வேலை னு வந்தா பொண்டாட்டிய கண்ணுலயே தெரியல இல்ல. போன் பேசிட்டு இங்க தான் வரணும். வாங்க வச்சிக்கிறேன்” ஆருத்ரா கத்துவது கார்த்திக்கின் காதில் விழுந்தால் தானே! 
“சொல்லுடா மச்சான்” எடுத்த எடுப்பிளையே “டா..” போட
“மிஸ்டர் கார்த்திக் ஒரு ஹையர் ஆபிசர் இப்படித்தான் மரியாதையில்லாம பேசுவீங்களா? மெர்னஸ் என்னனு தெரியுமா? தெரியாதா?” தீரனின் கம்பீரமான குரல் ஒலிக்க, ஒருவேளை விஷ்வதீரன் தான் அழைத்தானோ என்று காதில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து திரையை பார்த்தவன் தீரன் என்று மாத்திரம் இருக்க, நண்பனின் குறும்பு புரிய 
“அப்படியா சார்? மரியாதை வேணும் னு இருந்தா உங்கண்ணன் போன் ல இருந்து  பேச வேண்டியது தானே!” கார்த்திக் கிண்டலடிக்க
“கொஞ்சம் கெத்தா பேச விட மாட்டியே!” 
தீரனும், கார்த்திக் ஒன்றாகத்தான் ஐ.பி.ஸ் ட்ரைனிங் முடித்தவர்கள்.  அகாடமியில் ஒன்றாகவே இருந்தவர்களுக்கும் நல்ல தோழமை நெடுநாளாக இருக்க, கார்த்திக்கை கொலை செய்ய முயற்சி செய்பவனை கண்டு பிடிக்க தீரனின் உதவியை நாடியிருந்தான்  கார்த்திக். 
“போடா டேய் கல்யாணத்துக்கு சொல்லியும் வரல நீ” 
“டேய் போலீஸ்காரன் பொழப்ப பத்தி உனக்கு தெரியாதா? சரி சரி கூடிய சீக்கிரம் மீட் பண்ணலாம்” நண்பனை சமாதனப் படுத்த 
“யாரு நீ.. நான் தான் உன்ன வந்து பாக்கணும் நீயெல்லாம் வர மாட்ட. சரி சரி நான் கேட்டது என்னாச்சு”
கார்த்திக் தான் சம்பந்த பட்ட எல்லா சாலை விபத்துக்களையும் அலசி ஆராய்ந்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லையென்றதும் தீரனின் உதவியை நாடினான். அது எல்லா சீசீடிவி காட்ச்சிகளையும் அலசி ஆராய்வதே
அதன் படி சென்னை பிரபல தொழிலதிபர் சாம்பசிவம் ஆக்சிடன் கார்த்திக்கின் கண்ணில் வந்தது. கார்த்திக் ஒருநாள் டியூட்டி முடித்து வீடு செல்லும் பொழுது ஒரு கார் அவனை வேகமாக கடந்து செல்ல, இந்த நள்ளிரவில் அப்படியென்ன அவசரம் என்று பின் தொடர்ந்தவன் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வரவே வண்டியை நிறுத்தி பேசி விட்டு கிளம்ப பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக இருக்க,
நிதானமாக வண்டியோட்டியவனின் கண்களில் பாதையில் டயர் வழுக்கி பள்ளத்தில் விழுந்தமைக்கான அறிகுறி தெரியவே வண்டியை நிறுத்தி ஆராய,
வேகமாக சென்ற வண்டிதான் பள்ளத்தில் விழுந்து விட்டதென்று நினைத்து, உடனே அம்புலன்சுக்கு அழைப்பு விடுத்தவன் டார்ச்லைட்  வெளிச்சத்தில் மளமளவென பள்ளத்தில் இறங்க,  
வேகமாக சென்ற வண்டியோ எதிரே வந்த வண்டியோடு மோத போகவும் நொடியில் சுதாரித்து விபத்துக்குள்ளாகாமல் சென்றிருக்க, எதிரே வந்த வண்டிகக்காரனோ! சமநிலை தவறி எதிரே இருந்த பள்ளத்தில் விழுந்து விட்டான் போலும்.
கீழே இறங்கி ஆராய வண்டி ஒட்டிக் கொண்டு வந்திருந்த நபர் தொழிலதிபர் சாம்பசிவம் என்றும் அவருக்கு பலமான அடிகள் எதுவும் இல்லையென்று புரிய வண்டியிலிருந்து அவரை இறக்கி முதலுதவியும் செய்து அம்பியூலன்சில் ஏற்றி இருந்தான் கார்த்திக்.  
சாம்பசிவத்தை காப்பாற்ற போன இடத்தில் தனது அலைபேசி காணாமல் போய் இருக்கவும், அதை தேடி சென்ற கார்த்திக் நேற்றிரவு வழுக்கிச் சென்ற இருந்த டயர் அடையாளங்கள் காணாமல் போய் இருக்கவே! யோசனையாக பார்த்தவன் லைட்டரை எடுத்து டயர் அடையாளங்கள் இருந்த இடத்தில் பற்றவைக்க குப்பென்று தீ பற்றிக் கொண்டு டயர் அடையாளங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.
வேகமாக சென்ற வண்டியின் மீது வேகமாக சென்ற குற்றத்துக்காக வண்டியோட்டியை கைது செய்ய, அவனோ அவசரமாக மருத்துவமனைக்கு சென்றதாக சொல்ல, சாம்பசிவமும் அவனை விட்டு விடும் படி கார்த்திக்கை வேண்டி நிற்க, கார்த்திக்கும் சரியென்று விட்டான். 
 மேலும் இது விபத்தல்ல கொலை முயற்சி என்று சாம்பசிவத்திடமும், மேலதிகாரியின் காதிலும் போட்டவன், அதை விசாரிப்பது வேறு துறையென்பதால் மறந்தும் போனான்.
இன்று தீரன் அனுப்பியிருந்த சீசீடிவி காட்ச்சிகளை பார்வையிட்ட பின் தான் இந்த சம்பவமே அவன் நியாபகத்தில் வந்தது. இதே போல் இன்னும் சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் என்று மேலும் தீரனின் உதவியை நாடியிருக்க, சென்னையில் சாலை விபத்தில் தப்பிய சாம்பசிவம் கோயம்புத்தூர் சென்ற பொழுது சாலை விபத்தில் இறந்திருந்தார். 
இதே போல் சமநிலை தவறி மரத்தில் மோதி தலையும், நெஞ்சும், ஸ்டேரிங் வீலில் பலமாக மோதியதில் உயிர் பிரிந்திருக்க வேண்டும் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை சொன்னது. 
“மச்சான் கண்டிப்பா அந்த ஆள போட்டிருப்பானுங்க னு தோணுது” கார்த்திக் உறுதியாக சொல்ல 
“ஆமா. டேய் டயர் மார்க்ஸ் எப்படி காணாமல் போய் இருக்கும்?” தீரன் கேள்வி எழுப்ப  
“பெயிண்ட் பண்ணுறப்போ  யூஸ் பண்ணுற டினர் இருக்கில்ல, பெயிண்ட்டை அகற்றவும், அமிலத்தை நீர்க்க செய்யவும் பயன்படுத்துவாங்க,  டயரோட சறுக்கல் அடையாளத்தை மறைக்கவோ! அழிக்கவோ! பயன் படுத்தி இருக்கான். சந்தேகத்துலதான் தீ வச்சேன் குப்புனு பத்திக்கிறுச்சு. 
நான் வண்டிய வளைவில் நிறுத்தி பள்ளத்துல இறங்கினது அவனுக்கு தெரியல, இருட்டுல என் வண்டியும் அவன் கண்ணுக்கு தட்டுப் பட்டிருக்காது, அதான் அவன் வண்டி அடையாளத்தை அழிச்சிட்டு போய் இருக்கான். அவனை பிடிச்சி விசாரிச்சப்போ அவசரமா ஆஸ்பத்திரிக்கு போனதா சொல்லவும் என் சந்தேகத்தை சாம்பசிவம் கிட்டயும், கமிஷனர் முத்துப்பாண்டி கிட்டயும் சொன்னேன். கொலை முயற்சி என் செக்சன் இல்ல என்கிறதால நான் ஒதுங்கிட்டேன்”
“ஆனா அவனுங்க ஒதுங்கல நீ கண்டு பிடிச்சதால உன்ன போட பாத்திருக்கானுங்க. கொஞ்சம் நாள் அமைதியா இருந்துட்டு மறு படியும் ட்ரை பண்ணுவாங்க” தீரன் சொல்ல 
“யாரென்று தெரியாத வரைக்கும் தான் அவன் ஆட முடியும். சாம்பசிவம் செத்தா யாருக்கு லாபமோ அவன் தான் இத பண்ணி இருக்கணும். இனி அவனை பிடிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்ல” 
“வேறேதாவது உதவி வேணும்னாலும் கேளுடா” 
“இருக்கவே இருக்காரு என் எம்.எல்.ஏ அண்ணன் அவரு மீதி வேலைய பார்க்கட்டும்” 
“சரிடா… கூடிய விரைவில் சந்திக்கலாம். பாத்து சூதானமா இரு” தீரன் அலைபேசியை அணைக்க ஆதியை சந்திக்க கிளம்பினான் கார்த்திக்.  
ஆதியை சந்த்தித்து தீரன் கூறிய தகவல்களை கூறவும், கார்த்திக்கையும், கவியையும் பின் தொடர்ந்து வந்த வண்டி திருடப்பட்ட வண்டி என்பதில் எங்கிருந்து ஆபத்து வருமோ என்று குழம்பிப் போய் இருந்த ஆதியும் தனக்கு கிடைத்த நுனியை இறுக்கிப் பிடித்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்து யார், என்ன என்பதையும் கண்டு பிடித்தான். கிடைத்த தகவல்கள் அவ்வளவு உவப்பாக தான் இருக்கவில்லை. 
   

Advertisement