Advertisement

அத்தியாயம் 25
ஆதிக்கு ஊர் பிரச்சினை பத்தாதென்று கார்த்தி, ஆரு பிரச்சினை பெரிதாக மண்டையை குடைந்துக் கொண்டிருக்க, புதிதாக தந்தையை கொன்ற சுபாஷ் சந்திரன் வேறு எந்த நேரத்தில் எந்த மாதிரி பிரச்சினையை உருவாக்குவானோ என்று கலங்கடித்துக் கொண்டிருந்தான். அவனை தந்தையை கொன்ற வழக்கில் பிடித்து சிறையில் அடைப்பது கடினம் என்று அறிந்திருந்தவன் அவன் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் தவறுகளை அலசி ஆராயலானான். அதற்கு தடையாக இருந்த கார்த்தி, ஆரு பிரச்சினையும் ஒரு வழியாக முடிவுக்கு வர நிம்மதியாக உணர்ந்தவன் முழுமூச்சாக சுபாஷ் சந்திரனை ஒழிப்பதில் இறங்கி இருந்தான். 
ஒருவழியாக அவனுக்கு கிடைத்த துருப்புதான் சுபாஷ் சந்திரனின் மருந்துகள் கண்டு பிடிக்கும் மையத்தில் வேலை பார்த்த ஆராய்ச்சியாளர் குமரகுரு என்பவர். 
சுபாஷ் சந்திரன் பல விதமான கேன்சர் மற்றும் வைரசுகளுக்கு மருந்து கண்டு பிடிக்கிறேன் என்று ரீசேர்ச் சென்டர்களை திறந்து வைத்து ஆராய்ச்சு செய்து கொண்டிருப்பதும், தமிழக அரசு மாத்திரமன்றி, மத்திய அரசும் நிதி உதவி வழங்குவது அனைவரும் அறிந்த விடயம். 
அவனின் வைரஸ் ரீஷேர்ஸ் சென்டர்களில் ஒரு பகுதியான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ரீஷேர்ஸ் சென்டரில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தவர்தான் குமரகுரு. நேர்மையான மனிதர். அதுதான் சுபாஷ்  சந்திரனுக்கு தூக்கத்தை விரட்ட போதுமானதாக இருந்து கொண்டிருக்கிறது.  
புதிய மருந்து வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் இருந்த போது  இன்னொரு வைரஸை உருவாக்கி இருந்தனர் குழுவினர். அது ஆபத்தானது என்று கண்டு பிடித்த குமரகுரு அணித்தலைவரிடம் முறையிட 
“இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இயற்கையில் உருமாறுமா என்று நமக்கு தெரியாது.  இது கண்டிப்பாக ஆராய்ச்சிக்கு மட்டும் தான். வெற்றி பெற்றால் இன்ஃப்ளூயன்ஸா வைரஸை முற்றாக அழிக்கத்தான் இதை பயன்படுத்த போகிறோம்” என்று விட்டார். 
ஆனால் மிஸ்டர் சுபாஷ் அந்த வைரஸை தவறான முறையில் பயன் படுத்த எண்ணினார். அதை மக்களிடையே பரவ செய்து, மக்களை நோயாளியாக்கி  பாதிப்படைய செய்து அவரின் மருந்து மாத்திரைகளை விற்கும் வேலையில் இறங்க நினைத்தார். அவர் அணித்தலைவருக்கு பணம் கொடுப்பதையும், அதை பற்றி அறிக்கைகள் அடுக்கி வைக்கப்படும் அறையில் இரகசியமாக பேசியதை நான் தற்செயலாக செவிமடுக்க நேர்ந்த போது அந்த வைரஸை அழிக்க முடியாததால் அதை அபகரித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டேன். சுபாஷ் என்னை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கின்றான்” 
இதுதான் குமரகுரு கடைசியாக அலைபேசியில் தனது மனைவியை தொடர்பு கொண்ட போது சொன்ன தகவல். கூடவே யாரையும் நம்ப வேண்டாம் என்றும் கூறி இருந்தார். ஆதி சுபாஷை கைது செய்ய போகும் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும், அவன் திரட்டிய தகவல்களையும் கூறிய பின்னே அந்த பெண்மணி ஆதியின் மீது நம்பிக்கை வைத்து தனது கணவனை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். குமரகுரு எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்று மூன்று மாதங்களாக எந்த தகவல்களும் இல்லை. எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றே ஆதிக்கு புரியவில்லை. குழம்பி நின்றவனுக்குத்தான் விடிந்த உடன் நற்செய்தியாக மனைவி கருவுற்ற செய்தி கிடைத்தது. 
காலையில் மனைவிக்கு விடைகொடுத்தவன் மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கார்த்திக் அழைத்து கவி கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி கூறியதும் வீட்டாருடன் பகிர வரளிநாயகியின் உத்தரவின் படி அவளை காரிலையே ஜமீனுக்கு அழைத்து வந்தான். 
ஜமீனுள் நுழைந்த வேளையில் இருந்து  கவியை நடக்கக் கூட விடாமல் ஆளாளுக்கு பட்டிமன்றம் நடாத்த எங்கே கவியை கீழே தங்க வைத்து விடுவார்களோ! அவள் அணைப்பில்லாமல் தூக்கம் கூட வராதே! என்று உள்ளுக்குள் பதறியவன் கவியை மாடிக்கு தூக்கிச் சென்று கொஞ்ச நேரம் தனிமையில் இருக்கலாம் என்று என்ன பாட்டியின் உருவில் தடங்கல் வர சிரித்தவாறே அகன்றான். 
அதன் பின் அவன் வேலைகள் அவனனை இழுத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் மனைவியைக் காண வந்தவனுக்கு ஆள் மாற்றி ஆள் கவியை காவல் காப்பத்தைக் கண்டு கடுப்பானான்.  
சரி என்று பொறுமையை இழுத்துப் பிடித்திருந்தவன் இரவில் மொத்தமாய் மனைவியை கொஞ்சிக்கொள்ளலாம் என்று இருந்து விட சாப்பிட்டு மாடி ஏற போனவனை தடுத்த வரளிநாயகி மூன்று மாதங்களுக்கு கவியை விட்டு விலகி இருக்கும் படி கூறி சீனுவின் அறையில் தாங்கிக்கொள்ளும் படி சொல்ல முழித்தவனை இழுத்து சென்றிருந்தான் சீனு.  
“ஏன் டா எனக்கு மட்டும் இப்படி நடக்குது?” சீனுவும் ஆதியும் ஒரே நேரத்தில் சொல்ல 
“உனக்கென்னடா மாப்பு கல்யாணமான கையோட அப்பாவா ப்ரோமோஷன் ஆகிட்ட, என்ன பாரு இன்னும் கல்யாணம் கூட ஆகல போயும் போயும் ஒரு பொண்ண மனசுக்கு புடிச்சு போச்சேன்னு சந்தோச பட முடியல உறவு முறையில அவ எனக்கு தங்கச்சியா போய்ட்டாடா மாப்பு….” சீனு குலுங்கிக் குலுங்கி அழ கண்ணீர்தான் வரவில்லை.
“டேய் என்னடா குடிச்சிருக்கியா?” ஆதி தன் பிரச்சினையும் மறந்து சீனுவின் பிரச்சினையை விசாரிக்க 
“குடிச்சி மட்டையானா அவளை மறந்துடலாம்னு சரக்க கைல எடுத்தேண்டா மாப்பு… என் கண்ணு முன்னாடி வந்து குடி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடுன்னு தத்துவம் பேசுறாடா… அப்பொறம் எங்க குடிக்க? பாடில்லை மூன்று முறை தலையை சுத்தி தூக்கி போட்டுட்டேன்”
“என்னடா உளறுற” 
“ஏன் டா… மாப்பு எனக்கு மட்டும் இப்படி ஆகணும். ஆனா அவ என்ன மாமான்னு கூப்ட்டாலே டா… ஏன் டா… அப்படி கூப்பிட்டு என் மனசுல ஆசைய வளர்த்து, இப்போ அண்ணான்னு கூப்பிட்டா என் மனசு தாங்குமா? தாங்குமா? சொல்லுடா”
“லூசு மாதிரி உளறாம என்ன மேட்டருனு ஒழுங்கா சொல்லு” ஆதி அதட்ட தீப்தியை கிணத்தடியருகில் சந்தித்த சம்பவத்தை விலாவரியாக சொன்னவன். கார்த்திக்கின் பிறந்தநாள் விழாவின் போது அவளை அடையாளம் கண்டு கொண்டதையும் அவள் கவியின் தங்கை என்றும், கவியின் தங்கை தனக்கும் தங்கை முறை என்றும் கூறியவன் 
“தங்கச்சிய போய் எப்படி டா… லவ் பண்ண முடியும்?”
“ஒட்டி பொறந்த ரெட்டை குழந்தைங்க பாரு” கடுப்பான ஆதி 
“அவ ஒன்னும் உன் கூட பொறந்தவ இல்லையே! லவ் பண்ணு, கல்யாணம் பண்ணு”
“ஆனாலும் அவ கவி சிஸ்டரோட சிஸ்டர் டா…” 
“கவிகு அவ தங்க தான் ஆனா கூட பொறந்தவ இல்லையே!” 
“முடியாதே டா… கல்யாணம் பண்ணா உறவுமுறையெல்லாம் மாறிடுமே!”
“ஏற்கனவே மாறித்தான் டா இருக்கு” தீப்தியை பற்றிய உண்மையை அறிந்த படியால் ஆதி சீனுவை குழப்பவென்றே சொல்ல
“என்னடா சொல்லுற?”
“கல்யாணத்துக்கு முன்னாடி கவி என்ன சொன்னா?”
“என்ன சொன்னாங்க?”
“கார்த்திக்கும் கவிக்கும் பொறக்குற குழந்தைகளை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னாளா? இல்லையா?”
“ஆமா சொன்னாங்க” 
“அப்படினா கார்த்தி கவிக்கு அண்ணன். கார்த்திக் கவிக்கு அண்ணன்னா ஆரு எனக்கு தங்கச்சி, அப்போ தீப்தி உனக்கு” 
“மச்சினிச்சி”   
“ஆ… போ போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுற வழிய பாரு” 
“சரிடா மாப்பு தீப்தி நம்பர் சொல்லு” சீனு குஷியாக 
“இவன் லூசா…. இல்ல லூசு மாதிரி நடிக்கிறானான்னு தெரியலையே! சொல்லுறத எல்லாம் நம்புறான். ஒருவழியா தீப்தியை மனசுக்கு புடிச்சிருனு சொல்லுறான். எப்படி லாக் பண்ணுறது” ஆதியின் சிந்தனை ஒருகணம் அங்கும் இங்கும் ஊசலாடிய பின்
“ஆமாடா மாப்பு நாம தெளிவாக இருக்குறது போல நம்ம குடும்பம் தெளிவா யோசிக்குமா? உன் கல்யாணத்த பண்ணி வைக்குமா?” ஆதி யோசனையாக கேக்க 
“ஆமாடா… மாப்பு இந்த லூசுங்க பேசியே கல்யாணத்த நிறுத்திடுவாங்க” 
சீனுவை முறைத்த ஆதி “முதல்ல கவியோட பெரியப்பா உனக்கு பொண்ண கொடுக்க சம்மதிக்கணும் இல்லை” என்று விட்டு அவன் முகத்தையே பார்த்திருக்க 
“அந்தாளு சம்மதம் எனக்கெதுக்கு தீப்தி சம்மதம் கிடைச்சா போதும். நீ அவ நம்பரை கொடு” தெனாவட்டாக சொல்ல 
“அடப்பாவி… கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிதான் புலம்பிக்கிட்டு இருந்தான்” மனதுக்குள் சீனுவை அர்ச்சித்தவன் தீப்தியின் நம்பரை கொடுத்து விட்டு 
கவியை காண செல்வது எப்படி என்று யோசிக்க “கதவை திறந்து கொண்டு மாடிப்படிகளில் ஏறிப்போய் தான் வேறு எப்படி என்று உள்மனம் கூவ”
“வேற வினையே வேணாம் பாட்டி வாசலிலேயே பாயப்போட்டு படுத்துகிடப்பாங்க வேற வழியைத்தான் யோசிக்கணும் என்ற ஆதி குறுக்கும் நெடுக்குமாக நடை போட 
“என்னடா மாப்புள தூங்காம என்ன பண்ணுற?” சீனு அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு நீ இருப்பது எனக்கு இடைஞ்சல் என்று சொல்லாமல் சொல்ல 
“தூக்கம் வரல வாக்கிங் போறேன்” என்று அவனை முறைத்தவன் ஜன்னலை திறந்து குதித்திருந்தான்.
இரவில் வேட்டை நாய்கள் ஜமீனை காவல் காக்க அவைகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. ஆதி வீட்டாள் என்பதால் அவனருகில் வந்த ஒரு நாய் காலை சுற்றி விட்டு ஓட்டமெடுத்திருக்க சத்தமின்றி நடை போட்டவன் தனது அறை இருக்கும் பக்கமாக வந்து நின்று அண்ணாந்து பார்க்க இரண்டு மாடி என்றாலும் அந்த பால்கனியை அடைவது கடினம் என்று தோன்ற என்ன செய்வது என்று இடுப்பில் கைவைத்து யோசனையில் விழுந்தான். 

Advertisement