Advertisement

“ஐயோ… குட்டி பையா உங்கப்பா இவ்வளவு பயந்தவர்னு எனக்கு தெரியாம போச்சேடா…” கவி சிரிக்க, 
மருத்துவரின் ஆலோசனை படி மெதுவாக நடை  பயில மொட்டை மாடிக்கு மனைவியை அழைத்து வந்திருந்தான் ஆதி. 
“கிண்டல் பண்ணாத லயா… கத்தி குத்தி பட்டபோ நீ எவ்வளவு துடிச்ச அத பாத்து நம்ம பையன் எவ்வளவு துடிச்சிருப்பான். உங்க ரெண்டு பேருக்கும் ஆபத்து என்றதும் நான் எவ்வளவு துடிச்சேன். அது எனக்கு மட்டும் தான் தெரியும்” 
ஸ்கெனில் ஆண் குழந்தை என்று சொல்லவும் ஜமீனின் அடுத்த வாரிசை வரவேற்க ஏழாம் மாதம் வளைகாப்பு வைக்க வேண்டி இருந்த போதிலும் கவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒன்பதாம் மாதம் வளைகாப்பு வைப்பதென்று முடிவெடுத்திருந்தார் வரளிநாயகி. 
“இப்போவும் நடுங்கிக் கொண்டுதானே இருக்கீங்க. ஒரு முத்தம் கொடுக்க வலிக்குமான்னு யோசிக்கிறீங்க, கட்டி புடிச்சா வலிக்குமான்னு கேக்குறீங்க, முடியலடா… சாமி. எனக்கு வர கோபத்துக்கு உங்கள கடிச்சி வச்சிடுவேன்” பொய்யாய் மிரட்டினாலும் கணவனின் காதல் கண்டு கவியே மிரண்டுதான் போய் இருந்தாள். 
“முதல்ல பையன் எந்த பிரச்சினையும் இல்லாம பிறக்கட்டும். அப்பொறம் உன்ன வச்சிக்கிறேன்” அடங்கிக்கிருக்கும் ஆசைகள் கொஞ்சம் தலை தூக்க கண்களால் கவியை கபளீகரம் செய்யலானான். 
கணவனின் பார்வையில் கன்னங்கள் வெட்கத்தால் சிவக்க அவன் மார்பிளையே தஞ்சமடைந்தவளை வயிறு முட்டவும் 
“பாத்து பாத்து” என்று விலக்க 
“இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா?” முகம் சுருக்கினாள் கவிலயா.  
 
மொத்தத்தில் ஆரு, கவி உண்டானதில் இருவரின் படிப்பும் தான் கொஞ்சம் காலம் தடை பட்டது. குழந்தை பிறந்த பின் தொடரலாம் என்று முடிவெடுத்த இருவரும் வீட்டில் படிக்கவும் மறக்கவில்லை.
ஜனவரி மாதம் கவி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுக்க, மே மாதம் ஆரு ஒரு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானாள்.      
சில வருடங்களுக்கு பிறகு…..
ஆதிதேவ் ஆதி மற்றும் கவியின் செல்ல மகன்.  கவிநாதன் ஆரு மற்றும் கார்த்திக்கின் குட்டி வாலு. இருவருக்கும் நானு மாதம் இடைவெளி கவி கார்த்திக் போல் இருவரும் இணை பிரியாத தோழர்கள். 
தீப்தியின் படிப்பு முடிந்த கையேடு ஊரை கூட்டி திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தினார் கர்ண விஜயேந்திரன்.
சம்ப்ரீதி, சம்ப்ரியா சீனு மற்றும் தீப்தியின் கியூட் குட்டி பொண்ணுங்க. ஆதிதேவ், கவிநாதன் விட ஐந்து வயது சிறியவர்கள். ஆரு பட்ட அவஸ்தையால் கார்த்திக் இன்னொரு குழந்தையை பற்றி நினைத்தும் பார்க்கவில்லை. கவிக்கு சிசேரியன் செய்ததில் ஆதியும் ஒரு குழந்தையே போதும் என்று கண்டிப்போடு சொல்லி விட்டான். சீனுவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்க முறை பையன்கள் ரெண்டு ரெண்டு பொண்ணுங்க போதும் என்று அவனும் முடிவு செய்தான். கடவுளின் முடிவு? 
“டேய் மாமா” என்று கத்தியவாறு ஆதிதேவ் மற்றும் கவிநாதன் உள்ளே வந்தனர். சீனு அப்பாவை “டேய்” போட்டு அழைத்திருக்க கடவுள் அவனை “டேய்” போட இரண்டு குட்டி வாலுங்களை அனுப்பி இருந்தான் போலும். 
“வாங்கடா மாப்பிள்ளைங்களா… ஸ்கூல் போய் வரும் போது நேரா என் பொண்ணுங்கள பார்க்க வரீங்க, யாரு அம்முவை கட்டிக்க போறீங்க? யாரு பொம்முவை கட்டிக்க போறீங்க?”
“போ… மா அம்மு {சம்ப்ரீதி} எனக்கு குட்டி தங்கை” நாதன் சொல்ல 
“பொம்மு {சம்ப்ரியா} எனக்கு குட்டி தங்கை” தேவ் சொல்ல 
“போங்கடா… போக்கிரிங்களா… என் பொண்ணுங்களைத்தான் கட்டிக்கணும் இல்ல… இந்த மாமனோட மறுபக்கத்தை பாப்பீங்க” ஆள் காட்டி விரலை உயர்த்தி வசனம் பேச இரு வாலுகளும் அவன் பின்னாடி வந்து நின்று “பார்த்துட்டோம்” என்று விட்டு  இரண்டே வயதான மாமன் பொண்ணுங்களோடு விளையாட ஓடி விட்டனர்.  
“என்னடா மாப்பு பசங்க இப்போவே உஷாரா இருக்காங்க போல” ஆதி சிரிக்க 
“கவி சிஸ்டர் கார்த்திக்கை சம்மந்தி ஆக்கியே ஆகணும்னு சொன்னாங்க கடவுளா பாத்து ரெண்டு பேருக்கும் பையன கொடுத்து எனக்கு ரெண்டு பொண்ணுங்கள கொடுத்தானுக்கு சந்தோச பட முடியல தங்கச்சின்னு சொல்லுறானுங்க. இவனுங்கள வச்சி கிட்டு என் பொண்ணுங்களுக்கு எப்படி மாப்ள தேடுறது”
“இவருக்கு இதேதான்னா பேச்சு. சொன்னா கேக்க மாட்டேங்குறாரு” குடிக்க கையில் ஜூஸோடு வந்த தீப்தி முறைக்க  
“ஏன் டா… பிஞ்சு மனசுல நஞ்ச விதைக்கிற? வளர்ந்ததும் என்ன செய்யணுமோ அவங்களே! சரியான முடிவெடுக்கும் படி தைரியமா குழந்தைகளை வளர்ப்போம் டா” 
“அப்படிங்குற… ஆமா கார்த்திக் எங்க?”
“சார் தான் இப்போ டி.எஸ்.பி ஆகிட்டாரே. டியூட்டி முடிஞ்சி வீட்டுக்கு வரவே டைம் சரியாகுது. வாசு எங்க? வண்டி ரெடியா?”
“இந்த மீத்தேன் பிரச்சினை பெரும் பிரச்சினைப்பா…” என்றவாறு இருவரும் வெளியேறினர்.
“என்ன டி.எஸ்.பி சார் இதான் வீட்டுக்கு வர நேரமா?” ஆரு சிரித்த முகமாக கேட்க 
“என்னடி… கோபமா பேச வேண்டிய டயலாக்கை எல்லாம் சிரிச்சி கிட்டே பேசுற” அவளை இழுத்தனைத்த கார்த்திக் இதழ் முத்தம் வைக்க 
“முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க… எங்கல்லாம் சுத்திட்டு வரீங்க, நோய் கிறுமியெல்லாம் இருக்கும். என்ன கிஸ் பண்ணுறது கவிய கிஸ் பண்ணுறதுனு அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்கள அடி பின்னி எடுத்துடுவேன்”  
“நீ டாக்டரானாலும் ஆன ரொம்ப பண்ணுறடி…” என்றவாறே குளித்து விட்டு வந்தவன் சாப்பிட ஆரம்பிக்க ஆருவும் அமர்ந்து சாப்பிடலானாள். 
“பேசாம வேலைய ரிசைன் பண்ணலாம்னு தோணுது’
“ஏன் பொண்டாட்டி கை நிறைய சம்பாதிக்கிறா உக்காந்து சாப்பிடலாம்னு நினைப்போ” ஆரு கண்சிமிட்ட 
“நைட்டு பத்து மணி தாண்டி தான் வீட்டுக்கு வரேன். தேவிமா, ராணிமா கூட உக்காந்து பேச கூட நேரமில்லை. கவி வேற அப்பா..அங்க போகணும், இங்க போகணும்னு சொல்லுறன் என்னால எங்கயும் கூட்டிட்டு போக முடியல” 
“இதான் பிரச்சினையா? பத்து நாளைக்கு ஒருநாள் இல்ல ரெண்டு வாரத்துக்கு ஒருநாள் லீவு போடுங்க”
“சொல்லுறது ஈஸி செய்யுறது கஷ்டம்மா”
“வேலைய விட்டா மட்டும் சந்தோசமா? நிம்மதியா இருந்துடுவீங்களா?” 
“முடியாதுதான்”
“அப்போ அத பத்தி பேச கூடாது”
“ஆமா நீ மட்டும் எப்படி… வீட்டையும் பாத்துகிட்டு ஹாஸ்பிடலும் போய்ட்டுவர?”
“எனக்கு ஒண்ணுக்கு ரெண்டா மாமியாருங்க இருக்காங்கப்பா” நைட்டியில் இல்லாத கலரை தூக்கி விட கார்த்திக் சந்தோசமாக புன்னகைத்தான். 
அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் “நீங்க போங்க நான் எடுத்து வைக்கிறேன்” என்று ராணி வர 
“நான் வைக்கிறேன் அத்த…”
“போமா.. போய் உன் புருஷன கவனி. ரெண்டு பேரும் வேல வேலைனு அலையிறீங்க பேசவாவது டைம் இருக்கா?” 
“தேங்க்ஸ் அத்த…” என்றவள் ராணியின் கன்னத்தில் முத்தமிட்டு கணவனின் கையணைப்பில் மாடியேறலானாள். 
வானதி கூறியது போல் ஆரு மருத்துவமனைக்கு செல்ல வீட்டையும், பேரனையும் வானதியும், ராணியும் கவனித்துக்கொள்ள கணவனை கவனிக்க அவளால் நேரமொதுக்க முடிந்தது. இதுவே பெரியவர்கள் வீட்டில் இல்லையென்றால், தனிக்குடித்தனம் சென்றிருந்தால் அவளால் தனியாக சமாளிக்க முடியாதென்பதை நன்றாக உணர்ந்த ஆரு உறவுகளோடு உயிராக கலந்து பழக கணவனின் உயிராகிப்போனாள்.  
“என்ன லயாமா… தூங்காம இன்னும் என்ன செய்யுற?” 
“எம்.எல்.ஏ. சார் பையன் புக்ஸ் எல்லாம் கண்ட எடுத்துள்ள போட்டு இருக்கான் அதெல்லாம் எடுத்து வைக்கிறேன்” முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சொல்ல 
“உனக்கு இன்னும் என்மேல கோபம் போகலையா?  எட்டு வருவருஷமா நைட்டானா இப்படி மூஞ்ச தூக்கி வச்சிக்கிற.”
“எனக்குதான் ஒண்ணுமில்ல ஒரு பொண்ணு பெத்துக்கலாம்னு சொன்னேனே! கேக்கமாட்டீங்கல்ல” 
“ஒன்னும் போதும் டி… நாட்டோட சனத்தொகையை எக்கச்சக்கமா இருக்கு. படிச்சிட்டு வேலை வாய்ப்பு இல்லாம இளைஞ்சர்கள் அடுத்து என்ன செய்யுறதுனு யோசிக்கிறாங்க”
“ரூமுக்குள்ள வந்தா அரசியல்வாதி மாதிரி பேசுறத நிறுத்துங்க” 
“நிறுத்திட்டா போச்சு” என்றவன் கவியை இழுத்து மடியில் அமர்த்திக்கொள்ள 
“விடுங்க என்ன. சமாதான படுத்த ஒன்னும் வேணாம்”
“எட்டு வருஷமா அதைத்தான் டி பண்ணிக்கிட்டு இருக்கேன்” 
“எனக்கு பொண்ணு வேணும்” 
“தத்தெடுத்தக்கலாமா?”
“நிஜமாவா?”
“உனக்கு சம்மதம்னா ஒரு பொண்ணு இல்ல நூறு பொண்ணுங்க. இப்போதைக்கு நூறு. கூடலாம்…. கூடக் கூடாதுனு கடவுளை வேண்டிக்கிறேன்” 
“என்ன சொல்லுறீங்க?”
“ஷார்ட்டா சொன்னா ஒவ்வொரு விதத்திலையும் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள். ஒரு வயசுல இருந்து பதினாறு வயசு வரைக்கும். சில பேருக்கு பெத்தவங்க இல்ல சில பேருக்கு, அம்மா இல்ல, சில பேருக்கு அப்பா. பலருக்கு பெத்தவங்க இருந்தும் இல்ல. நல்ல உணவில்லை, படிப்பில்லை முக்கியமா பாதுகாப்பில்லை. அவங்களுக்கு…. நாம அம்மா, அப்பா” உணர்ச்சி மிக்க விஷயத்தை, நெஞ்சம் கணக்க சொன்னவன் அம்மா…அப்பா.. என்று சொல்லும் பொழுது ஆதியின் கண்கள் கலங்கி இருந்தது. 
கணவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட கவிக்கு ஏதோ ஒரு சம்பவம் ஆதியின் மனதை ரொம்பவே பாதித்திருப்பது  நன்றாக புரிந்தது. 
“கண்டிப்பா.. மருந்து, கவுன்சிலிங் எல்லா உதவியும் நானும் ஆருவும் பாத்துப்போம்” ஆதியின் தலையை கோதியவாறே பேச 
தலையை தூக்கி கண்களை கலக்க விட்டவன் “தேங்க்ஸ்  லயா. என்ன நல்லா புரிஞ்சி வச்சிருக்க, நடத்துகிற. என் உயிர் நீ” ஆர்த்மார்த்தமாக சொல்ல
“ஆரு கார்த்திக்கை லவ் பண்ணலைனா, நாம சந்திக்காமலையே போய் இருக்கலாம். உண்மையிலயே நீங்க என்ன லவ் பண்ணலைனா எங்க உறவு திருமணத்தில் தொடர்ந்திருக்குமா? உறவால் நெருங்கி என் உயிரிலேயே கலந்துட்டீங்க ஆதி. தேங்க்ஸ்” ஆதியின் நெற்றியில் முத்தமிட்டாள் கவி.
“லவ் யு லயா” என்றவன் உதடுகளை சிறையெடுக்க கவியும் பாந்தமாய் பொருந்திப்போனாள். 
ஆதிதேவ் மற்றும் கவிநாதன் கதவை திறந்து கொண்டு உள்ளே வர ஆதியும் கவியும் விலகி அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க அவர்களை தாண்டி வந்த இரு வண்டுகளும், கட்டிலில் ஏறி நடுவில் படுத்துக் கொண்டனர்.
பாடசாலை விடுமுறை நாட்களில் நாதன் தேவோடுதான் இருப்பான் அவர்களின் நட்பு அடுத்த கவி, கார்த்திக்கின் நட்பு போல் தொடரும். 
 குழந்தைகளை பார்த்து புன்னகைத்தவர்கள் இரு பக்கமாக வந்து அவர்களை அணைத்தவாறு தூங்க கவியின் கை மீது கை வைத்த ஆதி தட்டிக்கொடுக்க, ஆதியை பார்த்து மெல்லிய புன்னகையை சிந்திய கவி உதடு குவித்து பறக்கும் முத்தம் வைக்க, கண் சிமிட்டாமல் கவியையே பார்த்திருந்தான் ஆதி.
                            ஒரே ஒருமுறை கண்ணில் விழுந்து  
                             நெஞ்சில் ஓவியமாய் பதிந்து 
                              காதால் இரு மனமும் கலந்து 
                               உறவால் உயிரானாள்.
                                                             நன்றி
                                                               MILA

Advertisement