Advertisement

அத்தியாயம் 10
“கவி வா உள்ள போலாம். பனி வேற விழுது. போய்  தூங்கு” கவியின் கை பிடித்து கார்த்திக் எழுப்பிக் கொண்டிருக்க,  
“ஏன் கார்த்திக் நா தப்பா பேசிட்டேனா?” எழுந்து கொள்ளாமல் தலையை மட்டும் தூக்கியவாறு கவி. 
“தப்பா புரிஞ்சி வச்சிருக்குறத சரியா தான் பேசின” புன்னகைத்தவாறே கார்த்திக் 
“அவர் சொன்ன மாதிரி எல்லார் கிட்டயும் பேசி அவங்க மனசுல ஆசைகளை வளர்த்துட்டு திடிரென்று கல்யாணத்த நிறுத்த சொன்னா? எப்படி பீல் பண்ணுவாங்க? நா அவர் கிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்றவள் உடனே தனது அலைபேசியிலிருந்து ஆதியை அழைக்க அது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக தகவல் சொல்லியது. 
கவி அழைக்க மாட்டாளா என்று ஒவ்வொரு இரவும் ஏங்கித் தவித்த ஆதி இன்றோ அலைபேசியை தூக்கிப் போட்டதில் அது தூங்கி இருந்தது. 
“தேவி மா… சொன்ன உடனே ஆதியை பத்தி தரவா விசாரிச்சிட்டேன். என் கவி கட்டிக்க போன்றவர் இல்லையா? சொக்க தங்கம். எந்த ப்ளாக் மார்க்கும் இல்ல” கார்த்திக் எங்கயோ பார்த்தவாறே சொல்ல 
“அம்மாவை நம்பள, உன்ன கூட நம்பள, அட் லிஸ்ட் அவர் கிட்டயே  கேட்டிருக்கணும் அதையும் பண்ணல” கவி சோகமான குரலில் சொல்ல 
“இப்போவும் ஒன்னும் கேட்டு போகல” என்ற கார்த்திக் சீனுவுக்கு அழைப்பு விடுத்து ஸ்பீக்கர் மூடில் போட்டான். 
ஆருத்ராவை அழைக்க நினைத்தவன் அவளின் கொஞ்சல் மொழிகளை சமாளிக்க முடியாமல் போய் விடும் என்றே சீனுவை அழைத்தான். 
“ஹலோ மச்சான் என்ன என்ன தங்கச்சி குட் நைட் சொல்லாம தூங்கிட்டாளா? இருக்காதே! அவளாவது தூங்குறதாவது. நைட்டுல தானே ரெத்த காட்டேரிக்கு வேல” எடுத்த எடுப்பிலே சீனு கைவரிசையை காட்ட 
“மச்சான் நீங்க இன்னும் தூங்காம என்ன பண்ணுறீங்க? ஆதி எங்க?”
“அவனா… அவன் ரூம்ல இருப்பான். நானும் வாசுவும் டிவி பாத்து கிட்டு இருந்தோம் இப்போ தான் தூங்கணும். வாசு பாதியிலையே தூங்கிட்டான்” கூடுதலான தகவலையும் சொல்ல 
“வசதியா போச்சு” 
“என்ன சொன்னீங்க மாப்புள?”
“குடிச்சிருக்கிறீங்களா?”சந்தேகமாக கேட்டான் கார்த்திக் 
“லைட்டா….” என்றவன் “நீங்க சொல்லுங்க மாப்புள, இந்த நேரத்துல எதுக்கு கால் பண்ணீங்க?” 
“குடிச்சாலும் தெளிவா தான் பேசுறீங்க” 
“தா..ன்க்  யு ….” 
“ஆதி என்ன படிச்சிருக்கான்?” நேரடியாகவே விசயத்துக்கு வந்தான் கார்த்திக் 
“அவன் ஒரு ஐ.ஏ.எஸ் பா… டில்லில படிச்சு பட்டம் பெற்றான். பஞ்சாப்ல போஸ்ட்டிங். போக இருந்தவனை மாமாவோட சாவுதான் ஊருக்கு இழுத்து கிட்டு வந்தது. இங்க வந்தா ஒரே பிரச்சினை”
கார்த்திக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அமைதியாக இருக்க கவி அதிர்ச்சியான முகபாவத்தை அப்பட்டமாக காட்டினாள். ஏதோ காலேஜ் வரைக்கு போய் இருப்பான். படிப்பை ஒழுங்கா முடித்திருக்க மாட்டான் அல்லது ஏதோ டிகிரி வாங்கி இருப்பான் என்றெண்ணி இருக்க ஆதி ஐ.ஏ.எஸ் என்றது சீனு சொல்வதை கவனிக்கலானாள். 
மாமா இறந்து பாடிய தூக்க முன்னே குளத்துல ஏதோ கலந்துட்டாங்க, பயிர்கள் செத்து போகுது, ரேஷன் சாமான் ஒழுங்கா கிடைக்கிறதில்ல. ஏகப் பட்ட கம்பளைண்ட். மாமா இருந்த வரைக்கும் ஊர் அமைதியாக இருக்க ஆதி எல்லாத்தையும் தனியா இருந்து பார்க்க வேண்டியதா போச்சு. 
எங்க போனாலும், அவன் கிட்ட போ.. இவன் கிட்ட போ.. னு இழுத்தடிக்க ஆரம்பிச்சாங்க, ஊருக்குள்ள ரெண்டு டாஸ்மார்க்க தொறந்து அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சாங்க, அந்த நேரத்துல தான் தாத்தா ஆதியை சுயேர்ச்சையா தேர்தல்ல நிக்க சொன்னாரு, அவன் முடியாது என்ன நிக்க சொன்னான். ஆனா அவன் இருந்தா தான் கரெக்ட்டா இருக்கும் னு எனக்கே பட்டது. கெஞ்சிக் கூத்தாடி அவனையே நிக்க வச்சிட்டேன். அப்பொறம் அதிரடியா இறங்கினோம்ல. இறங்கி அடிச்சு ஜெயிச்சிட்டோம்ல. ஆனா என்ன அவன் கனவுதான் நனவாகல. என்ன பண்ணுறது ஊரா… சொந்த விருப்பமா னு வரும் போது ஜமீன் பரம்பரை ஊருக்காகத்தான் உழைக்கணும்”  விரக்த்தியான குரலில் சீனு. 
அலைபேசியை அணைத்த கார்த்திக் “சரி வா.. வந்து தூங்கு. நா காலையிலேயே கமிஷ்னரை பாக்க போகணும்” 
கார்த்திக் அவ்வாறு சொன்னதும் கவி வராமல் கார்த்திக் செல்ல மாட்டான் என்று நன்கு அறிந்ததால் கவியும் எழுந்து அவனோடு கீழே சென்றாள்.
ஆதிக்கு கவியின் மேல் அப்படி ஒரு கோபம் திடீர் திடீரென்று கத்த ஆரம்பித்தான்  “அப்போ நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த அரசியல் தலைவர்களை பற்றி அவளுக்கு இதே எண்ணமா? அடியும் தெரியாம நுனியும் தெரியாம சீனுவும், வாசுவும் தான் தஞ்சை வரை சென்ற கார் பயணத்தில் மாட்டிக் கொண்டு முழித்தனர். 
கவி பல தடவ அலைபேசி அழைப்புகளை விடுத்தும் சீனுவை விட்டு பிசியாக இருப்பதாக சொன்னான் ஆதி. கடுப்பான கவியோ 
“ஏய் லூசு” கவி கத்த…
“இதுங்க சண்டைல என் தல உருளுது” சீனு மனதுக்குள் நொடித்தவாறே “கவி சிஸ்ட….ர்” 
“உங்க எம்.எல்.ஏ. கிட்ட சொல்லு மன்னிப்புக் கேக்கத்தான் போன் பண்ணேன்னு”
அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆதியின் முகமோ புன்னகையை பூசிக்க கொள்ள, 
“மன்னிப்பா.. அது என்ன முகத்துக்கு நேரா.. திட்டிட்டு மன்னிப்பு மட்டும் போன் ல கேக்குறா.. நேர்ல வர சொல்லு.. நேர்ல வர சொல்லு அவ கிட்ட சொல்லு” சீனுவை தூண்ட அது கவிக்கு நன்றாகவே கேட்டது.
“இது சிஷ்டருக்கு கேட்டிருக்கும்… நான் ரிப்பீட் போர்ட்கஸ்ட்  பண்ணி வாங்கிக் கட்டிக்கவா?” சீனு ஆதியை முறைக்க, 
“அன்னைக்கி நைட்டே போன் பண்ணேன். போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கு எரும” 
“யாரை இப்போ எரும எங்குறா?” ஆதி கடுப்பாக 
சீனு “என்னை டா…” நெஞ்சில் அடித்து சொல்ல 
“நா தனியா.. தஞ்சாவூர் வரணுமா…” கவி கத்த 
“தனியா ஒன்னும் வரவேணாம்… கேக்குற மன்னிப்பை கல்யாணத்து அப்பொறம் கேளு. தண்டனைக்கும் தயாரா இரு” ஆதி இரட்டை அர்த்தத்தில் பேச 
அதை புரிந்துக் கொள்ளாத கவி “சரியான இம்ச டா..” என்றவாறே அலைப்பேசியை அனைத்தாள். 
“டேய் நீங்க சண்டை போடுங்க, சமாதானம் ஆகுங்க. நடுவுல என்னை எதுக்குடா… இழுக்கிற? ஆனாலும் நீ கேடி டா… போன்ல மன்னிப்பு கேட்டா சார் ஏத்துக்க மாட்டாரோ எல்லாம் ஸ்ட்ரைட் டீலிங்கா?” சீனு ஆதியை வார 
“போடா.. போடா.. போய் வேலையை பாரு டா…” அவனை அங்கிருந்து துரத்தியடித்தான் ஆதி.
அன்றிரவு அலைபேசியை தூக்கிப் போட அது அனைந்திருந்தாலும், காலையில் உயிர்ப்பித்த போது கவியின் எண்ணிலிருந்து அழைப்புகளும், “சாரி” என்ற குறுஞ் செய்தியும் வந்திருக்க, ஆதியின் மனதில் சாரல் அடித்தது. ஆனாலும் அவளை சீண்டவும், கோபமாக இருப்பதாக காட்டிக் கொள்ள அடிக்கடிக் கத்த சீனுவும் கவியிடம் “ரொம்ப கோபமாக இருக்கான்” என்று சொல்ல அதை நம்பி கவி அடிக்கடி தொடர்ப்பு கொள்ள அவளின் குரலைக் கேட்டு மகிழ்ந்தான்.  
“இந்த இடம் தானே!” ஆட்டோவில் வந்திறங்கிய இருவரில் ஒருவர் கேக்க 
“ஆமா சார் நீங்க கேட்ட ஆபீஸ் இதுதான். உள்ள போங்க”
உள்ள வந்தவர்களை வரவேற்று அமர வைத்து “அப்பொண்ட்மென்ட் இருக்கு தானே” வானதியின் பி.ஏ. கேக்க “ஆமாம்” என்பது போல் தலையசைத்தவர்கள் அங்கே இருந்த வரிசையில் அமர்ந்து கொண்டனர். 
“அண்ணே! வந்த வேல ஒழுங்கா.. நடக்குமா? இந்தம்மா பண்ணி கொடுப்பாங்களா?” தம்பி அண்ணனிடம் கேக்க,
“அந்தம்மா.. டில்லில இருந்தவங்க தமிழ் பொண்ணு என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் நாட்டுல வேல பார்க்கணும் னு எத்தனையோ முறை ட்ரான்ஸ்பெர் கேட்டும் கொடுக்காம… கடைசில கஷ்டப்பட்டு தான் இங்க மாற்றலாகி வந்திருப்பதாக நம்ம எம்.எல்.ஏ. சங்கரபாண்டி ஐயா.. சொன்னாரே! மதுரைல இருந்து வரோம் கண்டிப்பா பண்ணி கொடுப்பாங்க” அண்ணன் சொல்ல தம்பி கேட்டுக் கொண்டான். 
அவர்களின் முறை வரவும் உள்ளே செல்ல தலை கவிழ்ந்தவாறே வானதி கண்ணாடி அணிந்து ஒரு கோப்பை பாத்திருக்க அவர்களை தலை நிமிர்த்தி பார்க்காமலையே!   கையால் “உக்காருங்க” என்று செய்கை செய்தவாறே சொல்ல அக்குரலில் ஆடிப்போயினர் அண்ணனும், தம்பியும்.  
அங்கே அமர்ந்திருந்தது அவர்களின் அன்புத் தங்கை வானதி. எந்த தங்கை படிக்க கூடாதென்றும், வீட்டோடு அடங்கி இருக்கட்டும், என்று அடித்தார்களோ!  அதே தங்கை இன்னு எட்ட முடியாத உயரத்தை தொட்டு விட்டாள். 
கண்கள் கலங்க பேச வார்த்தையில்லாது அவர்கள் வானதியையே பாத்திருக்க, தலை நிமிர்த்தாமலையே! அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வராது போகவே! தலையை உயர்த்தி பார்த்தவள் கண்டது அங்கே அமர்ந்திருக்கும் சகோதரர்களை. 
சந்தோஷமும், அதிர்ச்சியும் ஒன்று சேர எழுந்துக்க கொண்டவளின் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்க்க, 
“அண்ணா…” என்று கூவியவாறே அவர்களை நெருங்க அவள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்ததை  அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தனர். 
“என்ன அண்ணே! இத்துணை வருஷம் கழிச்சது பாக்குறோம் நல்லா இருக்கியா என்றாவது கேக்க மாட்டீங்களா?” 
“மேடம் நாங்க வந்தது எங்க விவசாய நிலங்களை காப்பாத்தி கொடுங்க னு கேக்க” கைகளை பின்னால் கட்டியவாறே மூத்தவன் திருமூர்த்தி சொல்ல,  சின்ன அண்ணன் மகாதேவனும் அமைதியாகவே இருந்தான். 
வானதி கெஞ்சி, கதறி பேசிப் பார்க்க, அவர்கள் மனம் இளகாது விறைப்பாகவே நின்றனர். வானதியும் செய்வதறியாது கையை பிசைந்துக் கொண்டு கதிரையில் அமர கதவை உடைக்காத குறையாக காக்கி சட்டையில் உள்ளே நுழைந்தான் கார்த்திக். 
“மதுரை சிங்கம் ரெண்டும் வருவாங்கனு ஆதி சொன்னான். கிழட்டு சிங்கங்களா இருக்காங்க” என்றது அவன் பார்வை. 
“என்ன மேடம் நல்லா இருக்கிறீங்களா?” பேச்சுத் தொனியில்  பெரிய மாற்றம் இருக்க கண்ணடித்து வானத்திற்கு இங்கே நடப்பதை கண்டு கொள்ள வேண்டாம் என்று கண்ணாளையே செய்தி சொன்னவன், வானதியின் அருகிலையே கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டு 
“பார்க்க, அழகா இருக்கிறீங்க, நிறைய படிச்சிருக்குறீங்க என்ற திமிரு… மின்னின்ஸ்டர் காசு கொடுத்தாலும் வாங்காம அந்த இடத்துல இயற்க்கை விவசாயம் தான் பண்ணுவேன்னு ஆடம் பிடிக்கிறாங்களாமே! பாவம் உங்க புருஷன் வேற மிலிட்டரில இருக்காரு. பொண்ணு வாழ வேண்டிய பொண்ணு. உங்களுக்கும் கூட பொறந்தவங்க னு யாருமில்லாம அனாதையா இருக்கிறீங்க. என்ன நடந்தாலும் கேக்க நாதி இல்ல. இப்போ கூட உங்கள சுட்டுட்டு…” கார்த்திக் சொல்லியவாறே அவளின் நெற்றியில் துப்பாக்கியை வைக்க  வானதியின் இரு அண்ணன்களும் “ஏய்…” என்று கத்த
“என்ன மேடம் அடுத்த தடவ இலக்சனுல நிக்க போறீங்களா? வெள்ளை வேட்டி சட்டைல ரெண்டு அடியாளுங்கள வேற வச்சிருக்குறீங்க?”
“கார்த்திக் என்ன பேசுற?” வானதி பொறுக்க முடியாமல் கேக்க அவள் சொன்னது அண்ணன்களின் காதில் விழ வில்லை. 
“டேய் யாராய் பாத்து டா… நாதி இல்லாதவ னு சொல்லுற?…….. அவளுக்கு சிங்கம் மாதிரி ரெண்டு அண்ணன்க இருக்காங்க.. கைய எடுடா…இல்ல சீவி விடுவேன் சீவி” திருமூர்த்தி  கத்த மகாதேவனோ! வேட்டியை மடித்துக் கட்டிக்க கொண்டு கார்த்திக்கை அடிக்க வர 
“சபாஷ்… தங்கச்சிக்கு ஒன்னுனா… அண்ணன்க கூட இருக்கணும் இத்துணை வருஷமா எங்க இருந்தீங்க?” கூலாக மேசையை தட்டியவாறே கார்த்திக்.
அடிக்க வந்தவனோ!  நின்று விட திருமூர்த்தி வானதியின் அருகில் வந்து வானதியை அணைத்துக் கொண்டு “என்ன பிரச்சினை” என்று கேக்க, வானதி முழிக்க 
“பெரியப்பா… தேவிமா கிட்ட என்ன கேக்குறீங்க? இங்க கேளுங்க?”  சொடக்கிட்டு  அழைத்தவனை சகோதரர்கள் இருவரும் வித்தியாசமாக பார்த்தனர்.
அதன் பின் தன்னை அறிமுகப் படுத்திக்க கொண்டு நல விசாரிப்புகளும், விருந்தோம்பலும் காரியாலயத்திலையே நடை பெற அவர்கள் வந்த வேலையும் மறந்து போயினர். 
ஆதித்யா வானதியின் குடும்பம் பற்றியும், சித்தார்த்தின் குடும்பம் பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டு இவர்களை எவ்வாறு ஒன்று சேர்ப்பது, கல்யாணத்தில் எல்லா சொந்த பந்தமும் இருக்க வேண்டும் என்று நினைத்து கார்த்திக்கிடம் தனது ஆசையையும், தான் தேடிக் கண்டு பிடித்த தகவல்களையும் சொல்ல, 
“சத்தியமா எங்களுக்கு இது தோணவே இல்ல” கவியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு சொல்ல 
புன்னகைத்த ஆதி “நான் என் கல்யாணத்துக்கு கூப்பிட்டா என்ன மதிச்சு அவங்க வருவாங்க, ஆனா… அத்தைய பாத்து பிரச்சினை வருமோ! கலக்கம் வருமோ! கல்யாணத்துக்கு முன்பே எல்லாம் சரியாகணும்” 
“என்ன பண்ணலாம் நீயே சொல்லு, நான் உனக்கு புல் சப்போர்ட்டா இருக்கேன்”  கார்த்திக் தோள் கொடுக்க, 
மதுரை எம்.எல்.ஏ. ஆதிக்கு வேண்டப்பட்டவராகிப் போக அவரிடத்தில் வந்த செல்வபாண்டியனின் விவசாய நிலங்களுக்கான பிரச்சினையை பற்றி ஆதியிடம் ஆலோசனைக்கு கேக்க, ஆதி வானதியை கைகாட்டி விட, வானதியை அணுகினர் சகோதரர்கள். 
அவர்கள் வரும் நாளை அறிந்துக் கொண்டு அவர்கள் வரும் முன் வந்து பக்கத்து அறையில் அமர்ந்திருந்த கார்த்திக் அவர்கள் உள்ளே சென்றதும் அவர்களின் பேச்சு வார்த்தையை கவனிக்க சகோதரர்கள் முறுக்கி கொள்ள அதிரடியாக இறங்கினான். 
“அப்பா.. அம்மா.. எப்படி இருக்காங்க?” வானதி சந்தோஷமாக கேக்க 
“அம்மா.. பத்து வருஷத்துக்கு முன்னாடியே!…” திருமூர்த்தியி குரலில் சோகம் இழையோட
“அப்பா.. நல்லா இருக்காரு”    மகாதேவன் உடனே சொல்ல 
சூழ்நிலையை சமப்படுத்த கார்த்திக் “கவிக்கு சொல்லணுமே! பெரியப்பாஸ்… வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் இருந்துட்டு தான் போகணும் சரியா” கட்டளையாக சொல்ல 
“இல்லப்பா… போட்டது போட்ட படியே வந்துட்டோம்” 
“உங்க வேலைய தேவி மா.. பக்கத்துல இருந்தே பண்ணி கொடுப்பாங்க அதுக்கு நான் கெரென்ட்டி. கவிய பாக்காம போனா… அவ சாமி ஆடுவா… அவ கிட்ட இருந்து என்ன காப்பாத்த வாங்க” 
கவி யார் என்ற விவரம் சொன்னவன் அவளுக்கு பேசி இருக்கும் சம்பந்தத்தையும் சொல்ல உச்சி குளிர்ந்தனர் கவியின் மாமன்கள். 
“அண்ணா… அப்பா கிட்ட பேசணும் போல இருக்கு நா பேசினா.. பேசுவாரா?” வானதி தயங்கிய படியே கேக்க 
“உன்ன பாக்க முடியலையே என்ற கவலையிலையே அப்பா.. பாதியாகிட்டாரு. நீ எங்கயோ நல்லா இருப்ப என்ற எண்ணம் தான் அவருக்கு”
“அப்போ எதுக்கு வெயிட் பண்ணுறீங்க உடனே போன் பண்ணுங்க” கார்த்திக் அவசரப்படுத்த, மதுரைக்கு அலைபேசி தொடர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. 
“ஹலோ நான் செல்வபாண்டியன் பேசுறேன்” இன்றும் அதே கம்பீரக்  குரலில் அவர் பேச 
“தாத்தா நான் கார்த்திக் பேசுறேன். எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? நான் நல்லா இருக்கேன். எனக்கு கல்யாணம் வச்சிருக்காங்க வந்து வாழ்த்திட்டு போங்க” அவரை பதில் சொல்ல விடாது கார்த்திக் பேசிக் கொண்டே போக 
“பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழையா… ஆனா நீ யார் புள்ள னு தெரியலையே!”
“எல்லாம் உங்க பொண்ணுக்கு பெறாத மகன் பேசுறேன் இருங்க உங்க பொண்ணு கிட்ட கொடுக்குறேன்” சுத்தி வளைத்து கார்த்திக் சொல்ல அவர் குழம்பி நிற்க, 
அலைபேசியை கையில் எடுத்த வானதி “அப்பா…” குரல் கம்மி வர பல ஆண்டுகள் கடந்தாலும் மகளின் குரல் மனதில் பதிந்திருக்க கண்டு கொண்டவர் 
“தேவி…” என்று அழைக்க அதன் பின் அலைபேசி வழியாக கண்ணீரும், துக்கமும், சந்தோஷமும், நல விசாரிப்புகளும் அரங்கேறின. 
சித்தார்த் மற்றும் பித்யுத்துடன் அலைபேசியில் பேசியவர்கள் கவியை காண வீட்டுக்கு செல்லலாம் என்றும், இரண்டு நாள் சென்னையிலையே தங்கி வந்த வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என்றும் வீட்டுக்கு புறப்பட 
“தேங்க்ஸ் ப்ரோ” என்று ஆதிக்கு ஒரு குறுந் செய்தியை தட்டி விட்டான் கார்த்திக். 
அதன் பின் ஆதிக்கு வந்த அலைபேசி அழைப்பில் கார்த்திக் வயிற்றில் கத்திக் குத்துப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன என்ற செய்தியே வந்தது.

Advertisement