Tamil Novels
நிழல் 5
”ப்பா, ஃபைவ் ஃபோர்ஸ் ஆர் எத்தனை பா, மிஸ் கேக்குறாங்க பா, சொல்லுங்க பா, ப்பா மிஸ் அடிப்பாங்க பா, ப்ளீஸ் பா சொல்லுங்க பா, ப்பா ப்பா அடிக்குறாங்க ப்பா, எனக்கு வலிக்குதுப்பா, சொல்லுங்க பா, ஃபைவ் ஃபோர்ஸ் ஆர் எத்தனைப்பா, “ என்று தூக்கத்தில் அழுதுகொண்டிருந்தாள் மாயா.
“மாயா இங்க பாரும்மா,...
நிழல் 4
”ஹாய் மாயா, எவ்வளவு நேரமா கூப்பிடுறேன், காதிலயே வாங்க மாட்றீங்க, ஃப்ர்ஸ்ட் டே இன் ஆஃபீஸ் அப்படி என்ன சிந்தனை…”
நான்கைந்து முறை கேட்டு எந்த பதிலும் வராததால் குரலை சற்று உயர்த்திக் கேட்டான் கௌதம்.
அவன் போட்ட சத்தத்தில் சுயநினைவுக்கு திரும்பிய மாயா அத்தனை அருகில் கௌதமை பார்க்கவும், அதிர்ந்து இரண்டடி பின்னே சென்றாள்.
“ஹேய்...
40
“ஒரே பேரு தான் உன் பிரச்சனையா அதுக்காக தான் இதெல்லாம் செஞ்சியா?? நீ சொல்றது உனக்கே சின்னப்பிள்ளைத்தனமா தெரியலை”
“உனக்கு மட்டுமில்லை எங்கம்மா அப்பான்னு எல்லாருக்கும் அதே எண்ணம். என்னோட வலி உங்களுக்கு விளையாட்டா தெரியுதுல. நான் பொறாமையில இப்படி நடந்துக்கறேன்னு நினைக்கறீங்க அப்படித்தானே”
“நீ தான் ஜெயிக்க போறேன்னு சொல்லிட்டு அது நீ இல்லை இன்னொருத்தன்னு...
நிழல் 3
நம் மனநிலையை தீர்மானிப்பதிலும், தீவிரமான எண்ணங்களை மறக்கவைப்பதிலும், மறந்து போனவற்றை நினைவூட்டுவதிலும் வாழ்விடங்களுக்கு பெரும்பங்கு உண்டு.
நிதசர்னத்தில் பெரும்பான்மையாக ஒத்துப்போகும் இந்த கூற்று மாயாவின் வாழ்விலும் எதிரொலித்தது. மாயா உட்கொண்ட மருந்தின் வீரியத்தில் அவள் உறங்கிக் கொண்டிருக்கையில் இரவோடு இரவாக தங்கள் வீட்டை காலி செய்துவிட்டு கோவையிலிருந்து ஊட்டிக்கு வந்திருந்தனர் அவள் பெற்றோர்.
அவளின் மனநிலைக்கு...
நிழல் 3
நம் மனநிலையை தீர்மானிப்பதிலும், தீவிரமான எண்ணங்களை மறக்கவைப்பதிலும், மறந்து போனவற்றை நினைவூட்டுவதிலும் வாழ்விடங்களுக்கு பெரும்பங்கு உண்டு.
நிதசர்னத்தில் பெரும்பான்மையாக ஒத்துப்போகும் இந்த கூற்று மாயாவின் வாழ்விலும் எதிரொலித்தது. மாயா உட்கொண்ட மருந்தின் வீரியத்தில் அவள் உறங்கிக் கொண்டிருக்கையில் இரவோடு இரவாக தங்கள் வீட்டை காலி செய்துவிட்டு கோவையிலிருந்து ஊட்டிக்கு வந்திருந்தனர் அவள் பெற்றோர்.
அவளின்...
அத்தியாயம் 4
பெண்குழந்தையோ! ஆண்குழந்தையோ! தந்தை தன் மீது அன்பு செலுத்துவது போல் பிற குழந்தைகள் மீது அன்பு செலுத்துவத்தைக் கண்டால் பொறாமை படும். அதுவே சம வயது குழந்தை என்றால்?
கோபம் கொள்ளும் பிஞ்சு மனம் தான் என்ன செய்வதென்று அறியாமல் பேசும், சில நேரம் விபரீதமான வேலைகலைக் கூட செய்து வைக்கும். சாம்பவிக்கும் இந்திரா...
நிழல் 2
அவளோடு எப்போதும் சண்டை போட்டுத் தான் அவனுக்குப் பழக்கம். மாயாவும், ருத்ரனும் ஒரே இடத்தில் அதுவும் அமைதியா இருக்கிறார்கள் என்றால் அது அதிசயம் தான். காரணம், இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.
மாயா பள்ளியில் சேர்ந்த சில நாட்களில் ருத்ரவிநோதனும் சேர்ந்திருந்தான். இருவருமே இதற்கு முன்பு படித்த பள்ளியிலிருந்து பாதியில் வந்து...
இருளிலும் பின் தொடரும்…
நிழல் 1
நிசப்தமாய் இருந்த அந்த மிகப்பெரிய அறையில் பூட்ஸ் காலணிகளின் சப்தம் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது. “டக் டக் டக் “ என்ற ஓசை அவளின் படபடப்பை இன்னும் அதிகமாக்கி வியர்வைத் துளிகளைச் சொட்ட வைத்தது.
மனதின் பயத்தை துளியும் வெளியே காட்டக்கூடாது என்ற வைராக்கியம் மெல்ல மெல்ல கரைந்து...
அத்தியாயம் - 51
வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75 பரி அரசை சேர்ந்த மனித யாளிகளும் தேர் மற்றும் பறக்கும் சக்கரம் மூலமாக பரி அரசிலிருந்து கிளம்பியிருந்தனர்.
அவர்கள் தரை...
”நா இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன், நேத்து ஃபீஸ் கட்டமுடியலைன்னு டென்சனா இருந்தேன், இன்னிக்கு அந்த பிரச்சனை சரியாயிடுச்சு, யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஃபிஸ் கட்டியிருக்கார். கடவுளே அவர் நல்லாயிருக்கணும், நான் படிச்சு முடிச்சு சம்பாதிச்சு அந்த பணத்தை கண்டிப்பா திருப்பிக் குடுத்திடுவேன் அப்ப தான் என்னை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு அவர் உதவி...
கல்யாணக் களைப்பு நீங்க, ஷவரை திறந்துவிட்டு அதில் நின்றபடி கண்மூடி மைவிழி முகத்தை விழித்திரையில் வரைந்து கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா.
எவ்வள்வு நேரம் நின்றிருப்பானோ தெரியாது, உடல் மனம் அனைத்தும் குளிர்ந்து உதறல் எடுக்கும் வரை நின்ரிருந்தவன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு குளித்து முடித்து வெளியே வந்தான்.
“குளிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷம் போதாதாடா…. எவ்வளவு நேரமா...
அத்தியாயம் 3
சகாதேவன் திருமண பேச்சை எடுத்ததும் மகாதேவனின் குடும்பத்துக்காக மட்டும் கதிர்வேலன் இந்திராவை திருமணம் செய்து கொள்ளவில்லை.
வாரம் ஒருநாள் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க பெரிய வீட்டுக்கு செல்பவனுக்கு துடுக்குத்தனமான இந்திராவின் தரிசனம் கிட்டும். அவன் மனம் அவனறியாமல் அதை ரசிக்க ஆரம்பித்திருக்க, ஒருநாள் அவன் செல்லும் பொழுது அவள் அழுது கொண்டிருப்பதையும், அவனை கண்டதும்...
மயிலிறகு பெட்டகம் 15
அன்று எதுவுமே பிடிக்கவில்லை அனுரதிக்கு! எதைப் பார்த்தாலும் எரிச்சலாய் இருந்தது. வீட்டில் வேறு கல்யாணக்களை கூடி ஒரே குதுகலமாய் இருக்க எதையும் முகத்தில் காட்டாமல் இயல்பாய் நடப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.
தேவையான பொருட்களை எடுத்துவைத்து விட்டு வெளியே வந்தவள் தன் பையை காரில் வைத்துவிட்டு எதிர்வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கே அனைவரும் கிளம்பி...
அத்தியாயம் - 36_1
“என்ன சொல்றீங்க? நிஜமாவா?” என்று அவன் அதிர்ச்சியை வெளியிட்டான் சிவா.
“ம்ம்..கல்யாணி உயிரோட இருக்கும் போதே செய்யணும்னு நினைச்சேன்..அவ ஒத்துக்கலை..அவ போன பிறகு என்னோட கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயிடுச்சு..கௌரிக்கு நல்லது நடக்கறதைப் பார்க்கமாப் போய்ச் சேர்ந்திட்டா கல்யாணி..கௌரி எங்க பொண்ணு போல தான்னு எவ்வளவு சொன்னாலும் யாருக்கும் புரியறதில்லை..அதான் உலகத்துக்குப் புரியற...
அத்தியாயம் - 36_2
அவள் உடையின் ஈரத்தில் விழித்துக் கொண்ட கௌரி, கட்டிலிற்கு அருகே இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்க்க, மணி மூன்று. என்ன இது ஈரமென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில், அவளின் இடதுப் புறத்தை ஊற்று பார்க்க, அந்தப் புறம் படுக்கை விரிப்பு, அவள் இரவு உடை, சூர்யாவின் உடை மூன்றும் நனைந்து இருந்தது. ...
அத்தியாயம் 25
"என்ன அக்காவும் தம்பியும் ஒரே கொஞ்சலா இருக்கு?" என்றவாறு கிருஷ்ணா உள்ளே நுழைய கோதை முழிக்கலானாள்.
"என்ன பொண்டாட்டி என்ன தூங்க வச்சிட்டு நீ என்ன இங்க பண்ணுற?" என்று மீண்டும் கேட்டவனின் பார்வை வசந்தின் கையிலிருந்த அலைபேசியில் விழ "ஹேய் இது அந்த போன் இல்ல" என்று கேட்க
"ஆமா இது என் போன்தான்...
அத்தியாயம் –2
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்தார்கள் செல்லக்கிளியும்,தனலட்சுமியும்,...இருவரும் நெருங்கிய தோழிகள்...ஒரே தெருவாசிகள்
..அதோடு,செல்லக்கிளியின்,வீடுகளுள்,ஒன்றில்,வாடகைக்கு குடியிருப்பவள்...வீட்டில் தனலட்சுமி ,அவள் கணவன் உலக நாதன் இருவரும் தான்....பிள்ளைகள் கிடையாது.....சமீபத்தில்தான் குடிவந்தார்கள்.
..எனினும்,செல்லக்கிளியின்,மனதிற்க்கு நெருக்கமானவளாக மாறி விட்டாள்.....இருவரும் உணவு முதல் உணர்வு வரை பகிர்ந்து கொள்வார்கள்...இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதாம்....ஆகையால்,இருவரும் அக்கா என்றே அழைத்துக் கொள்வார்கள்..
.சாமி தரிசனம் முடித்து வெளிப்ப்ரகாரம் ...
மயிலிறகு பெட்டகம் 14
அண்ணனைப் பார்த்ததும் ஆசையாய் அருகில் ஓடியவள்,
“அண்ணா...”என்றழைத்தபடி அவன் கையை பிடித்துக்கொண்டாள். வெற்றிமாறனுக்கும் மகிழ்ச்சியில் கண்கள் பனிக்க, பாசமாய் அவள் தலையை தடவியவாறு,
“எப்படிடா இருக்க...” என்றான் லேசாய் கரகரத்த குரலில்,
“இதுவரை பாசமலர் படத்தை டீவில தான் பார்த்திருக்கேன். இப்போதான் நேரா பார்க்கிறேன்...அடடா...” என்றபடி வந்த விக்ரமை இவனா...
முகூர்த்தம் 26
வானதி அந்த காபி ஷாப்பிற்கு வந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. ஆனாலும் அவளை வரச்சொன்ன ஸ்ரீராம் இன்னும் வந்திருக்கவில்லை. இதற்குமேல் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று எழுந்தவளுக்கு, கண்ணில் பார்த்திராத யாரோ ஒருவர் அழைத்ததும் ஏன் வந்தோம் என்று இந்நொடி வரை புரியவில்லை.
முந்தினம் அறிமுகமில்லாத புதிய எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது....
அத்தியாயம் 24
க்ரிஷ்ணாவோடு சிரித்துப் பேசியவாறு உள்ளே நுழைந்த வசந்துக்கு ராதையின் சிவந்து வீங்கிய கன்னம் அவளை யாரோ அடித்திருக்கிறார்கள் என்று கூற, வேறு யார் அம்மாச்சியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் வடிவை முறைத்தவன் கோதையிடம் நடந்தது என்ன என்று கேட்கலானான்.
கோதை கூறியவற்றை கேட்டு அதிர்ச்சியடைந்தவன் ராதையின் அருகில் போய் அமர்ந்துக் கொண்டான். அவனுக்கு ராதையை...