Advertisement

அத்தியாயம் 25
“என்ன அக்காவும் தம்பியும் ஒரே கொஞ்சலா இருக்கு?” என்றவாறு கிருஷ்ணா உள்ளே நுழைய கோதை முழிக்கலானாள்.
“என்ன பொண்டாட்டி என்ன தூங்க வச்சிட்டு நீ என்ன இங்க பண்ணுற?” என்று மீண்டும் கேட்டவனின் பார்வை வசந்தின் கையிலிருந்த அலைபேசியில் விழ “ஹேய் இது அந்த போன் இல்ல” என்று கேட்க
“ஆமா இது என் போன்தான் மாமா. நீங்க அமெரிக்கால இருக்கும் பொது இந்த போன்ல இருந்து தானே உங்க கிட்ட நான் பேசினேன். அத தெரிஞ்சிக்கிட்டுதான் அக்கா என்ன அடிக்கிறா” என்ற வசந்த் கிருஷ்ணாவை பார்த்து கண்சிமிட்டி சிரித்தான். 
கோதைக்கு உள்ளுக்குள் ஆட்டம் காண தம்பியை முறைத்தவள் கணவனை ஏறிட என்ன சொல்வானோ என்ற பதட்டத்தில் வியர்வையும் பூக்க ஆரம்பித்தது.
“ஓஹ்… அப்போ மேடத்து தெரிஞ்சிருக்கு இது தம்பியோட போன் என்று. தெரிஞ்சிக்கிட்டுதான் கமுக்கமா நின்னியா?” கையைக் கட்டிக்கொண்டு அடிக் குரலில் சீறினான் கிருஷ்ணா.
“ஏன் மாமா நான் போன அனுப்பி வச்சிருந்தப்போ போன செக் பண்ணலயா? நானும் இவளும் நிறைய போட்டோஸ் எடுத்தோமே. இவ வேற செல்பியா எடுத்து தள்ளி இருந்தாலே” வசந்த் போட்டு வேற கொடுக்க
“ஓஹ்… ஓஹ்… அதான் மேடம் போன பார்த்ததும் தம்பிதான் என் கூட சேட் பண்ணதுன்னு தெரிஞ்சிக்கிட்டு எங்க செல்பியெல்லாம் பார்த்தா மாட்டிக்கிடுவேனோனு சத்தமில்லாம எல்லாத்தையும் அழிச்சிட்டீங்களா?” என்றவாறு கோதையின் காதை திருக 
க்ரிஷ்ணாவிடமிருந்து தப்பியவள் “எல்லாம் இவனால” என்று வசந்த்தை துரத்த ஆரம்பித்தாள்.
கோதையிடம் மாட்டிக் கொண்டவன் “விடுக்கா விடுக்கா வலிக்குது. ஏற்கனவே மாமா கிட்ட சொல்லிட்டேன்” என்று வசந்த் கத்த அது கோதையின் காதில் விழவில்லை.
“அவன விடு பூ…” என்று கிருஷ்ணா மனைவியை தடுத்து வசந்த் தன்னிடம் உண்மையை கூறியதாக கூற
“உண்மைய சொன்ன பிறகு இவன சும்மாவா விட்டீங்க?” எகிறினாள் கோதை.
“அடிப்பாவி” என்று வசந்த் கூறும் பொழுது
“நீ மட்டும் என்னவாம்? உன் கிட்ட இந்த விசயத்த சொன்னா அப்சட் ஆக்குவியோன்னு நான் யோசிச்சா தம்பி மாட்டிக்க கூடாதுனு போன்ல இருந்த செல்பி எல்லாம் சத்தமில்லாம தூக்கி இருக்க” என்றவன் முறைக்க
“பின்ன மத்த போட்டோஸ் கூட பேஸ்புக், டுவிட்டருல இருந்து சுட்டதுனு சொல்லலாம்  எடுக்குற எல்லா செல்பியையுமா? பேஸ்புக்ல போடுவாங்க? செல்பினா கொஞ்சம் யோசிப்பனு தோணிச்சு. அதான்” அசால்ட்டாக சொன்னவள் கணவனின் முறைப்படி எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
அக்கா திட்டினாலும், அடிச்சாலும் பாசமாக இருப்பது வசந்த்துக்கு புரிய “இது தெரியாம நான் முந்திரி கொட்ட போல உண்மையெல்லாம் சொல்லிட்டேனே” பொய்யாய் வருத்தப்பட கிருஷ்ணாவின் முகத்தில் புன்னகை விரிந்தது.
கோதை இருவரையும் தனியாக வெளியே கிளப்பாமல் இருந்தால் வசந்த் தான் கிருஷ்ணாவை அழைத்தது என்று சொல்ல அவனுக்கு சந்தர்ப்பம் அமையாமல் போய் இருந்திருக்கும்.
க்ரிஷ்ணாவோடு சரியாக பேச சந்தர்ப்பம் அமையாததால் தொண தொணவென்று பேசியவாறு இருந்த வசந்த் கிருஷ்ணாவை காலேஜில் முதன் முதலில் பார்த்ததையும் அவன் மீதான ஈர்ப்பையும் கூறி புகழ் பாட கிருஷ்ணா சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது கூட வசந்த் மேல் கிருஷ்ணாவுக்கு சந்தேகம் வரவில்லை. தந்தையின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு தானும் கோதையும் ஊர் திரும்பும் பொழுது ஏர்போட்டில் அவனை பார்த்ததாக கூறவும்தான் கிருஷ்ணாவுக்கு பொறி தட்டியது.
வசந்தின் சட்டையை பிடித்தவன் “டேய் சொல்லுடா… நீ தானே நான் அமெரிக்கால இருக்கும் பொழுது உங்க அக்கா போல பேசினது” என்று மிரட்ட
“நான் எங்க அக்கா போல பேசினேன். நீங்கதான் அக்கானு நினைச்சிகிட்டீங்க” என்றவன் நடந்தவைகளை சொல்ல தலையை பிடித்துக் கொண்டான் கிருஷ்ணா.
“ஏன் டா இப்படி பண்ண?” கிருஷ்ணா முறைக்க
“நீங்க என் அக்காவ காதலிக்கிறீங்க இல்ல. அப்பொறம் என்ன?” என்றவாறே வசந்த் கிருஷ்ணாவின் கைகளை சட்டையிலிருந்து எடுத்து விட
“நான் காதகலிக்கிறது இருக்கட்டும்டா  அவ என்ன விரும்பலைனா… எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகி இருக்கும்” என்றவனுக்கு யோசித்து பார்க்கவே பயமாக இருந்தது.
“எதுக்கு மாமா டென்ஷன் ஆகுறீங்க. அதான் மண்டபத்துல வச்சி ஆமா நான் இவரைத்தான் லவ் பண்ணுறேன். நான் தான் வர சொன்னேன்னு சொன்னாளே”
“அது உங்க குடும்ப பிரச்சினையால் சொன்னதுடா.. ஏன்டா நீ அவ கிட்ட உண்மைய சொல்லல”
“த்ரில் மாமா த்ரில் என்ன நடக்கும் எங்குற த்ரில் தான்” என்றவனை க்ரிஷ்ணாவால் முறைக்க மட்டும்தான் முடிந்தது.
ஆம் கிருஷ்ணாவை வர சொன்னதை கோதையிடம் கூற வசந்த்துக்கு சந்தர்ப்பம் அமையாமளா இருந்திருக்கும். வேண்டுமென்றேதான் கூறாமல் விட்டுவிட்டான்.
“குடும்ப பிரச்சினைக்காக மட்டும் ஒன்னும் அவ உங்கள லவ் பண்ணுறதா சொல்லல. அவளுக்கும் உங்கள பிடிச்சிருக்கு. அன்னைக்கி பிளைட்டுல ஏறினதுல இருந்து உங்களை பத்திதான் பேசிக்கிட்டே வந்தா. உண்மைய சொல்லனும்னா திட்டிகிட்டே வந்தா. நானும் பார்க்க நல்லாதானே இருக்கான் லவ் பண்ண வேண்டியது தானேனு சொன்னேன். பார்க்க நல்லா இருந்தா முன்ன பின்ன தெரியாதவன லவ் பண்ணுவாங்களா? உண்மையா லவ் பண்ணுனா தேடி வரட்டும்னு சொன்னா. அதான் நீங்க வந்து நின்னதும் உடனே ஏத்துக்கிட்டா”
“என்னடா சொல்லுற? உங்க அக்கா இதெல்லாம் என்கிட்டே சொன்னதே இல்லையேடா..” கிருஷ்ணா ஆச்சரியமும் ஆனந்தமும் கலந்தது உணர்வில் மிதக்கலானான்.
“அவ அப்படித்தான் மாமா நொய் நொய்னு பேசுவா சொல்ல வேண்டியத சொல்ல மாட்டா” என்று வசந்த் சிரிக்க
“அதான் நம்மள சீண்டி கிட்டே இருந்தாளா?” என்ற கிருஷ்ணாவுக்கு மனைவின் மேல் மேலும் காதல் பெருக உடனே அவளை பார்க்க வீடு செல்ல வேண்டும் போல் இருந்தது.
அத்தனையும் கூறிய வசந்த் அலைபேசியை பற்றி கோதைக்கு தெரியும் என்று கூற மறந்தான்.
வசந்த்தை அவசரப்படுத்தி கோதை கூறிய பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு வந்தால் வீட்டில் ராதை அபரஞ்சிதாவின் மகள் என்ற உண்மையை கண்ணபிரான் கூறியதில் பூகம்பமே வந்தது போல் வீடு மாறி இருந்தது.
மனைவியிடம் காதல் மொழி பேச வந்தவனுக்கு வசந்த்தான் தன்னிடம் பேசியவன் என்று கூறினால் கோதை எப்படி ரியேக்ட் செய்வாள் என்ற அச்சம் முளைக்க ஆரம்பித்திருக்க, அவளுக்கு ஏற்கனவே உண்மை தெரிந்திருக்கிறது என்பதை அறிந்து கிருஷ்ணா பொய்யாய் முறைத்துக் கொண்டிருந்தான்.
“வசந்த்தான் உங்கள அழைத்ததுனு கண்டு பிடிச்சிடீன்களே இப்போ எதுக்கு முறைச்சிகிட்டு திரியிறீங்க” என்று கோதை சிரிக்க
“அக்காவும் தம்பியும் கூட்டு களவாணிங்கடி உங்க ரெண்டு பேரையும் சும்மா விடக் கூடாது” என்றவாறே இருவரினதும் காதை திருக்கலானான்.
சில வருடங்களுக்கு பின்
“ஏன்மா… கனகுக்கு மாத்திரை கொடுத்தியாம்மா?” என்றவாறே ஞானவேல் உள்ளே நுழைந்திருக்க,
“ஆமா மாமா தூங்குறாரு” என்றாள் வத்சலா.
“எப்படி இருந்தவன் கடைசில இப்படி படுத்த படுக்கையாகிட்டான்” மருமகனை நினைத்து கொஞ்சம் கவலையாகவே செல்வராஜ் சொல்ல
“உசுரோட இருக்கானே” என்ற ஞானவேல் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை. 
தேர்தலில் அருள்வேல் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்று இருந்தான்.
மகனுக்கு தெரியாமல் கட்ச்சி உறுப்பினர்களை சந்தித்து தன்னை துணை முதலமைச்சர் பதவியில் அமர்த்தும்படி கனகவேல் கேட்டுக் கொண்டு தான்தான் துணை முதல்வராக போகும் இறுமாப்பில் இருக்க, அவருக்கு எவரும் ஓட்டு போட்டிருக்காதது அதிர்ச்சியை கொடுத்தது.
“என்னப்பா தான்தான் துணை முதல்வராக உக்கார போறோம் என்று பகல் கனவு கண்டுக்கிட்டு இருந்தீர்களா?” என்று அருள்வேல் கிண்டல் செய்ய
பல்லைக் கடித்த கனகவேல் “என்னடா பண்ணி தொலைச்ச?” என்று உறும ஆரம்பித்தார். 
“நான் உங்க மகன் இல்லையா? உங்க வழியேதான் பின் பற்றினேன். என்ன புரியலையா? பணம். பணம் கொடுத்து அவங்கள வாங்கிட்டேன். நான் சொன்னவரைத்தான் துணை முதலமைச்சராக உக்கார வச்சிருக்கேன். என் சொல் பேச்சு கேக்குற ஒரு தலையாட்டி பொம்மையை” என்றவன் சிரிக்க கனகவேலால் எதுவும் பேச முடியவில்லை.
“நான் சொன்னதுதான் மூட்ட முடிச்ச கட்டிக்கிட்டு ஊர் போய் சேருங்க” என்றவன் அவரை கண்டுகொள்ளாது பாதுகாப்பு படையோடு கிளம்பி இருந்தான்.
முன்னாள் முதலமைச்சர் கனகவேல் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தார். பதவியில் இருக்கும்வரைதான் பாதுகாப்பு எல்லாம். அருள்வேல் நினைத்திருந்தால் ஏற்பாடு செய்திருக்கலாம் செய்யவில்லை.
கட்ச்சியில் தன்னை பொருத்திக்கொள்ள கனகவேல் முயன்று தோற்றுக்கொண்டே இருந்தார். பதவி மோகம் அவரை விடவே இல்லை. 
அப்படி முயற்சி செய்து கொண்டிருந்தவரை லாரி அடித்து தூக்கி இருந்தது. யார் செய்தார்கள் என்று அருள்வேளால் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கனகவேல் செய்த பாவத்தின் விளைவு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார்.
“நான் சொன்ன போதே ஊருக்கு போய் இருந்தா இப்படி நடந்திருக்காது” என்று அருள்வேல் கவலையாக சொல்ல
“நீதானே என்ன லாரி வச்சி தூக்க பார்த்தது?” என்று அவனையே கேட்டார் கனகவேல்.
“இந்த ஜென்மத்துல நீங்க திருந்த மாட்டீங்க” என்றவன் அவரை வத்சலாவிடம் அனுப்பி வைத்திருந்தான்.
யசோதா கணவனுக்காக அழ, “அம்மா நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்?” என்று தாஜா செய்த்து யசோதாவை அவனோடு தங்க வைத்துக் கொண்டான்.
முதல்வர் மனையில் இருந்தால் பாதுகாப்பு படையோடு ஊர் சுற்ற வேண்டும் தன்னுடைய தொழிலுக்கு அது சாத்தியமில்லை என்று கிருஷ்ணா மனைவியோடு தனியாக வீடெடுத்து செல்ல யசோதாதான் பதறினாள்.
“ராஜமாதா நீ அண்ணன் கூடவே இருந்துக்க. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. என்ன என் பொண்டாட்டி நல்லா பாதுபா” என்று கிருஷ்ணா வசனம் பேசலானான்.  
அவன் அப்படி சொல்வதற்கு காரணமும் அன்பழகி மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பதுதான். அருள்வேல் அரசியலில் முழுமூச்சாக இறங்கி இருக்க வீட்டை கவனிக்க அவனுக்கு நேரம் பத்தவில்லை என்று யசோதா குறை பட்டுக்கொண்டிருக்க, இந்த நேரத்தில் அன்னையை அழைத்து செல்ல கிருஷ்ணாவுக்கு மனம் வரவில்லை.
“ஆமா உனக்கு டீ கூட போட தெரியாது. அவளுக்கு சமைக்கத் தெரியாது. ரெண்டு பேரும் எப்படித்தான் குடும்பம் நடத்த போறீங்களோ” என்று முறைக்க
“சமையலுக்கு ஆள் வச்சிக்கிறோம் அத்த” என்ற கோதை யசோதாவின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள்.
“அதெல்லாம் சரிவராது. உன் கையாள சமைச்சி கொடுக்குற. அதுக்காகவே சீக்கிரமா சமையலை கத்துகிற வழிய பாரு” மாமியாராக மிரட்ட பவ்வியமாக தலையாட்டினாள் கோதை.
“அம்மா நான் ஒன்னும் டெஸ்டிங் எலி கிடையாது. அவ சமைக்கிறத சாப்பிட்ட செத்துக்கித்து போய்டுவேன்” நடுங்கியவனாக கிருஷ்ணா சொல்ல அவன் முதுகில் அடித்தாள் கோதை.
“நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனு சொல்லி சாப்பிடுற. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டியே இதுதான் உனக்கு தண்டனை” என்ற யசோதா சிரித்தவாறே செல்ல பாவமாக நின்றான் கிருஷ்ணா. 
அர்ஜுனோடு ஆரம்பித்த ஆட்டோமொபைல் கம்பனி நல்லபடியாக சென்றுகொண்டிருக்க, ரொம்ப நாள் கழித்து கணவனோடு பெற்றோரின் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக பெங்களூர் சென்று கொண்டிருந்தாள் கோதை.
கயந்திகா கண்ணபிரானின் மேல் இருந்த கோபத்தால் கண்ணபிரான் தன்னை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யுமாறு தனது வக்கீலை அணுகி இருந்தாள்.
ராதை பல தடவைகள் அழைத்தும் கயந்திகா அவளோடு பேசாததால் பயந்து போன அவள் யுவனுக்கு அழைத்து அம்மாவுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று அழ, வக்கீல் மூலம் விஷயமறிந்த யுவன்  ராதையை ஆறுதல் படுத்தி விட்டு அவளிடம் விஷயத்தை கூறாமல் வக்கீலை சந்திக்க சென்றான்.
கண்ணபிரானுக்கு எதிராக எந்த வழக்கும் தொடர வேண்டாம் என்றும், கண்ணபிரானை கடத்தி மிரட்டித்தான் கயந்திகாவுக்கு திருமணம் செய்ததுக்கான எல்லா ஆதாரமும் கண்ணபிரானிடம் இருப்பதாக கயந்திகாவிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டான்.
“அவர் கிட்ட ஆதாரம் இருக்குனு உங்களுக்கு எப்படி தெரியும் வக்கீல் சார்?” என்று கயந்திக்கா குதிக்க,
“எதிரியோடு ஆழம் தெரியாம நான் கால் வைக்க மாட்டேன் மேடம். மிஸ்டர் கண்ணபிரானோட வக்கீல் என் நண்பன் தான் அவர்கிட்ட சாடைமாடையா பேச்சுக்கு கொடுத்து தெரிஞ்சிகிட்டேன்” என்றதும் கண்ணபிரானை பழிவாங்க இருந்த ஒரே கதவும் மூடப்பட்டதும் மனஅழுத்தத்துக்கு ஆளானாள் கயந்திகா.
யுவன் சென்று அக்காவை அடிக்கடி பார்த்துக் கொண்டாலும் கண்ணபிரானை வந்து பார்க்குமாறு யுவன் அழைக்கவே இல்லை.
கண்ணபிரானுக்கு இழைக்கப்பட்டது அநீதி. அவரை மீண்டும் கயந்திக்காவின் பெயரை சொல்லி அழைக்க அவனுக்கு மனம் வரவில்லை.
கயந்திகா காலை, மாலை என்று பாராமல் குடித்து சுயநினைவே இல்லாமல் இருந்தவள் மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருநாள் இறந்தே போய் இருந்தாள்.
கிருஷ்ணாவின் வண்டி வீட்டின் முன் வந்து நின்றதும் யதுவீர்தான் “காஷ்வி வந்துட்டா…” என்று கத்தியவாறு முன்னால் ஓடி வந்திருந்தான்.
யதுவீர் ராதை மற்றும் யுவனின் செல்வப் புதல்வன்.
கோதைக்கே திருமணம் ஆகிவிட்டது. ராதை அவளுக்கே அக்கா அவளுக்கு இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றோம் என்று அபரஞ்சிதா புலம்ப,
யுவனும் தனிமரமாகத்தான் இருக்கின்றான் அவனுக்கும் ஒரு கால்கட்ட போடணும். அதுவும் என் கடமைதான் என்று கண்ணபிரானும் சொல்ல
“எதற்கு வேற வேற மப்புள, பொண்ண தேடுறீங்க, பேசாம இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடுங்க” என்றார் வடிவு.
கணவன் மீதான கோபம் எல்லாம் அபரஞ்சிதாவுக்கு கொஞ்சம் நாளிலையே தீர்ந்து போய் இருந்தது. அதற்கு ஒருகணம் ராதை அவளோடு செல்லம் கொஞ்ச ஆரம்பித்தது மட்டுமன்றி, மாதத்தில் என்றோ ஒருநாள் வரும் கணவன் கண்முன்னால் இருக்கும் பொழுது கோபத்தை இழுத்து பிடித்திருக்க முடியவில்லை.
யுவனை திருமணம் செய்ய சம்மதமா என்று ராதையிடம் கேட்ட பொழுது திருதிருவென முழித்தவள் “மாமா கிட்ட கேளுங்க” என்று விட்டாள்.
ஆனால் யுவனுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. உடனே சரி என்று தன் சம்மதத்தை கூற, அடுத்த முகூர்த்தத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
“அக்காகே கல்யாணம் ஆகிருச்சு நாம இன்னும் ஹனிமூன் போகல” என்று கோதை குறை பட
“போலாம் டி… அதுக்கு ஏன் முகத்தை சுருக்குற?” என்ற கிருஷ்ணா அவளை அழைத்துக்கொண்டு சுவிஸ்லாந்து சென்று வந்தான்.
சென்று வந்த அடுத்த மாதமே கோதை கருத்தரித்து அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்திருக்க காஷ்வி என்று பெயரிட்டிருந்தனர்.
யதுவீரின் சத்தத்தில் அனைவரும் வாசலுக்கு வந்து வரவேற்க நலவிசாரிப்போடு அனைவரும் உள்ளே சென்றனர்.
“ஒருநாள் முன்னாடியே வருவான்னு எதிர்பார்த்தோம் சரியா கல்யாண நாளன்னைக்கே வந்திருக்க” ராதை தங்கையை முறைக்க, கோதை கணவனை முறைக்கலானாள்.
“சரி விடு அவன்தான் பிசினு தெரியுமில்ல. எங்க கூடவே வந்திடுன்னு சொன்னேன் கேட்டியா?” என்று யுவன் சொல்ல
“ஆமா என்னையும் காஷ்வியையும் உங்க கூட அனுப்பிட்டு அவரு வராமலையே இருந்திருப்பாரு” என்ற கோதை “வசந்த் எங்க?” என்று கேட்க
“ஐயா எப்போ பார்த்தாலும் போன்ல கடல போட்டுக்கிட்டே  இருக்காரு. கூடிய சீக்கிரம் கல்யாண விருந்து போட வேண்டியதுதான்” என்று சிரித்தான் யுவன்.
“போய் குளிச்சிட்டு வாங்க அப்பொறம் பேசலாம்” என்று அபரஞ்சிதா அவர்களை அனுப்பி விட்டு மதிய உணவுகளை மேசையில் அடுக்கலானாள்.
அனைவரும் சாப்பிட அமரும் பொழுது “நான்தான் காஷ்வி பக்கத்துல உக்காருவேன்” என்று யதுவீர் சத்தம் போட
“அவ என் பிரெண்டு அவ கூட நான்தான் உக்காருவேன்” என்று சண்டை போடலானான் விபு.
விபு அர்ஜுன் மற்றும் மாலினியின் தவப்புதல்வன்.
“டேய் சண்டை போடாதீங்கடா” என்றவாறு கிருஷ்ணா காஷ்வியை  நடுவில் இருத்தி இருவரையும் அவளின் வலது இடது என்று அமர்த்தி உணவையும் பறிமாறினான்.
மூவரும் சென்னையில் ஒரே பாடசாலையில் படிப்பவர்கள் வெவ்வேறு வகுப்பாக இருந்தாலும், யாது காஷ்வியின் சகோதரன் என்று சண்டை போடுவதும் விபு தோழன் என்று சண்டை போடுவதும் அவர்களுக்குள் வழக்கமான ஒன்று. 
பாடசாலை விட்டால் விபுவும், காஷ்வியும் ஒன்றாக கம்பனிக்கு வந்து விடுவார்கள். தந்தையர்கள் இருவரும் வீடு செல்லும்வரை ஹோம் ஒர்க் செய்வது விளையாடுவது என்று பொழுதை கழித்து விட்டு வீடு செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் விபு கிருஷ்ணா வீட்டில் இருப்பான் அல்லது காஷ்வி அர்ஜுன் வீட்டில் இருப்பாள் கூடவே யதுவும். கிருஷ்ணாவும் கோதையும் பெங்களூர் செல்வதாக கூறவும் விபு காஷ்வியோடு தானும் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்து வந்து விட்டான். மூவரையும் பார்க்கும் பொழுது தனக்கு மாலினியையும், அர்ஜுனையும் தன்னையும் பார்ப்பது போல் இருப்பதாக கிருஷ்ணா அடிக்கடி கோதையிடம் கூறலானான்.
மாலையில் குடும்பமாக கோவிலுக்கு சென்று வந்தவர்கள் கேக் வெட்டி கல்யாண நாளையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
குழந்தைகளை அழைத்துக்கொண்டு அபரஞ்சிதாவும் கண்ணபிரானும் தங்களது அறைக்கு சென்றிருந்தனர்.
“என்ன அக்காவும் தங்கச்சியும் ஒரே புள்ளயோட நிறுத்திடீங்க? அடுத்த புள்ளய எப்போ பெத்துக்க போறீங்க?” என்று வடிவுப்பாட்டி ஆரம்பிக்க
“ஆமா இவ பத்துப்புள்ள பெத்து போட்டா பாரு, ஒத்த புள்ளையா எங்க அம்மாவ பெத்துட்டு எங்கள அதட்டுது” என்று கோதை முறைக்க, ராதை புன்னகைத்தாள்.
“என்னங்கடி” என்று வடிவு முறைக்க
“அந்த வேலய என் புருஷன் பாத்துப்பான்னு சொல்ல வேண்டியதுதானே குட்டிமா…” என்றவாறு வந்த யுவன் “வா வா போலாம்” என்று ராதையை இழுத்துக்கொண்டு சென்று விட்டான்.
“நீ என்னடி சொல்ல போற?” வடிவுப் பாட்டி கோதையை முறைத்துக் கொண்டு நிற்க
“அடுத்த மாசமே ரெண்டாவது தேனிலவுக்கு போலாம்னு இருக்கேன் பாட்டிமா… போயிட்டு வந்து நல்ல செய்தி சொல்லுறோம். இல்லையாடா பூ…” பாட்டிக்கு பதில் சொல்லி மனைவியை காப்பாற்றி விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தான்.
“நிஜமாவா? நாம மீண்டும் ஹனிமூன் போறோமா?” கோதை ஆவலாக கேட்க
பாட்டியிடம் அவளை காப்பாற்ற சொன்ன பொய் என்று கூட புரிந்துக் கொள்ளாமல் பேசுகிறாள் என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட கிருஷ்ணா, இந்த எட்டு வருடங்களில் அவளை அழைத்துக் கொண்டு எங்கேயும் செல்லவில்லை என்பதால் அவளின் ஆர்வத்தை பார்த்து “ஹா… சப்ரைஸா கூட்டிட்டு போலாம்னு இருந்தேன். பாட்டியால எல்லாம் போச்சு” என்று சமாளித்தான்.
இந்த எட்டு வருடங்களில் கோதை கிருஷ்ணாவை முழுமையாக புரிந்து கொண்டிருந்தாள். கணவனின் முகம் பார்த்தே அவன் சொல்வது பொய் என்றும் சமாளிக்கிறான் என்று கண்டு கொண்ட கோதை அவனை விடாது, “இந்த தடவ நான் ஆசைப்பட்ட இடத்துக்குத்தான் போகணும்” என்று திட்ட மிட ஆரம்பித்தாள்.
மனைவி சொல்லே மந்திரம் பொய்யை உண்மையாக்க வேண்டியதுதான் என்று எண்ணிய கிருஷ்ணாவும் வேறு வழியில்லாது அவள் சொல்வதற்கு தலையசைக்கலானான்.
கிருஷ்ணாவை போல் பொய் சொல்லி சமாளிக்கும்  கணவர்கள் ஏராளம். கணவன் பொய் சொல்லிறான் என்று தெரிந்தது சத்தம் போட்டு சண்டை போடாமல் சாமார்த்தியமாக சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ளும் கோதை போன்ற மனைவிகள் புத்திசாலிகள்.
“யோவ் புருஷா ஹனிமூன் போய்தான் அடுத்த புள்ளய பத்தி யோசிப்பியா? இன்னிக்கிதான் உன் பொண்ணு தொல்லை இல்லாம இருக்கு, இன்னைக்கே யோசிக்கலாமே” என்று கண்சிமிட்டி சிரித்தாள்.
“என் பொண்ணு உனக்கு தொல்லையா?” என்றவன் அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு “சொல்லுடி…” என்றவாறே தன் உதடுகளால் கன்னம் தீண்ட 
“பின்ன தூங்க போனா நடுல படுத்துகிட்டு உன் மேல கால போட்டுக்கிட்டுதான் தூங்குவா. உன் கன்னத்துல கூட அவ முன்னாடி முத்தம் கொடுக்க முடியல சண்டைக்கு வந்துடுவா” என்றவள் கைகளை கணவனின் தோளில் மலையாக கோர்த்தவாறே முறைத்தாள்.
இப்பொழுது மகளை பற்றி பேசி மனைவியை சீண்டினால் இந்த இரவு சண்டையில்தான் முடியும் என்று புரிந்து கொண்டவன் அதற்கு மேல் அவளை பேச விடாது அவள் இதழ்களை தீண்டலானான்.
கிருஷ்ணா கோதையை சரியாக புரிந்து வைத்திருந்தான். கோதையும் கிருஷ்ணாவை சரியாக புரிந்து வைத்திருந்தான். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் வாழ்வே இன்பம்தான்.
அவர்களை தொல்லை செய்யாமல் வாழ்த்தி விடைபெறுவோமாக
நன்றி
வணக்கம்

Advertisement