Advertisement

அத்தியாயம் –2
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்தார்கள் செல்லக்கிளியும்,தனலட்சுமியும்,…இருவரும் நெருங்கிய தோழிகள்…ஒரே தெருவாசிகள்
..அதோடு,செல்லக்கிளியின்,வீடுகளுள்,ஒன்றில்,வாடகைக்கு குடியிருப்பவள்…வீட்டில் தனலட்சுமி ,அவள் கணவன் உலக நாதன் இருவரும் தான்….பிள்ளைகள் கிடையாது…..சமீபத்தில்தான் குடிவந்தார்கள்.
..எனினும்,செல்லக்கிளியின்,மனதிற்க்கு நெருக்கமானவளாக மாறி விட்டாள்…..இருவரும் உணவு முதல் உணர்வு வரை பகிர்ந்து கொள்வார்கள்…இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதாம்….ஆகையால்,இருவரும் அக்கா என்றே அழைத்துக் கொள்வார்கள்..
.சாமி தரிசனம் முடித்து வெளிப்ப்ரகாரம்  வந்து அமர்ந்தார்கள்…மனம் கழுவிட்டாற் போல சலனமின்றி இருந்தது…கோவிலில் தந்த பிரசாதத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தார்கள்…
‘’ இன்னிக்கு என்ன கறி உங்க வீட்டுல’’—தனம்…
‘’ ரசம் வச்சி புடலங்கா கூட்டு வச்சேன்…நீங்க?’’
‘’அதையேன் கேக்கறீக…எங்க வீட்டுக்காரவுக, எனக்கொரு கல்யாண வீடு இருக்கு…எனக்கு சேத்து சோறு வைக்காதன்னு சொல்லிட்டு போனாக…நானும் எனக்கு மட்டும் எலுமிச்சை சாதம் கெளறி,சாப்ட்டு, கை கழுவுதேன்…இவுக மொட்டுப் போல வந்து நிக்காக..கல்யாண வீட்டுல கூட்டம்,,,வரிசையில நின்னாத்தான் பந்தியில உக்காரலாம்…அதான் சாப்பிடல…என்ன வச்சிருக்க அப்பிடிங்காக…’’
‘’அடக் கடவுளே ….பெரிய வயித்தெரிச்சலால்ல ஆயிருக்கும்’’
‘’ஆமாக்கா…அப்பிடித்தான் ஆயிட்டு…அப்பறம்,ரெண்டு தோசை சுட்டு குடுத்தேன்…பொடி வச்சி சாப்டாக’’
‘’ஐய்யோ….என்கிட்டயாது கேட்டுருக்கலாம்லா’’
‘’அப்பிடித்தான் நெனச்சேன்,,,,பெறவு.மல்லிகாக்கா படக்குன்னு,ஏதாவது சொல்லிருமோன்னு பேசாம இருந்துட்டேன்’’
‘’அதுவுஞ்ச் சரிதான்…அவுக அப்டி ஆளு மொகம் பாக்காம பேசக்கூடியாவுகதான் …’’என்ற செல்லக்கிளியின் முகம் வாடிவிட்டது…இருவரும் சிறிது நேரம் அமைதி காத்தார்கள்…
‘’நமக்காவது,குடும்பம்,குட்டி,வரவு செலவுன்னு,ஏதாவது மண்டையிடி இருக்கு…எங்க மதினிக்கென்ன…சந்தோசமா பேசி பழகி இருக்காலாம்லா …’’
‘’காரணமே அதுதாங்க்கா’’
‘’என்னக்கா சொல்லுதீக’’
‘’ஊரு ஓலகத்தப்போல,நமக்குன்னு ஒரு குடும்பம் இல்லியேன்னு அவுகளுக்கு ஒரு ஆதங்கம்..அதனாலதான் கண்ணுல கண்டவுகளை எல்லாம் வெடூ வெடுன்னு பேசுதாக’’
‘’யாரு வேண்டாம்னா? குடும்பத்தோட இருக்க வேண்டியதுதான…ஓதறிட்டு ஓடியாராட்ட என்ன?’’
‘’ஏங்க்கா?  மாமியார் கொடுமையா?’’
‘’ஐயோ…ஆமான்னு சொன்னா என் வாய் அழுகிரும்க்க்கா …தங்கமான மனுசங்க…கூட்டுக் குடும்பம்தான்…ஆனா,அப்பிடித்தான் தாங்குனாக,எங்க மதினிய’’
‘’ஆங்…அப்பிடியா?’’
‘’ஆமா…தூத்துக்குடியிலதான கட்டிக் குடுத்திருந்தோம்…மாப்ளைக்கு ஸ்பிக்குல நல்ல வேலை…குவார்ட்டர்ஸெல்லாம் உண்டு…வீட்டை விட்டு வெளியில வந்தா,செடியும் கொடியுமா சோலையா இருக்கும்…மாப்ளையும் அமைதியான குணம்,,,கொறை சொல்ல ஒண்ணுமில்ல…’’
‘’வேற என்னதான் வேணுமாம் இவுகளுக்கு’’
‘’வேண்டாம்னு சொன்னதுதான்‌ பிரச்சின’’
‘’புரியலியே’’
‘’கோவில்ல உக்காந்திருக்கோம்…சூசகமாச் சொல்லுதேன்…புரிஞ்சுகிடுங்க…இவுக ரொம்ப சுத்தம் பார்ப்பாக…அதனால புருசன கிட்டயே நெருங்க விடல…..மொதல்ல,விஷயம் வெளித்தெரியாமத்தான் இருந்துது…கத்திரிக்கா முத்தினா கடைத் தெருவுக்கு வந்துதான ஆகணும்…’’
‘’ஆமா,,,எத்தன நாளைக்கி இதெல்லாம் மூடி வைக்க முடியும்‌.?’’
‘’ஆமா..எங்க மதினி மாப்ள வீட்டுக்கு ஒரே புள்ள…அவுகளும், பேரன் பேத்திய பாக்கணும்னு ஆசப்படுவாகள்ல …’’
‘’ஆமா..அது நியாந்தான்…அவுக சும்மா இருந்தாலும் சுத்தி இருக்கவுக சும்மா இருக்க மாட்டாகளே’’
‘’ஆமா.. நாம நாலு பேரை கேக்கறோம்லக்கா..அது போலதான…அப்பிடியும் இப்பிடியுமா ஒரு வருஷம் ஓடிட்டு….எங்க மதினி வீட்டுலேர்ந்து,எங்க அத்தை,மாமாவை வந்து பாத்துப் பேசுனாக…வீடு வாசல்னு ஒரு பொறுப்பில்லாம இருக்கா மல்லிகா..அதாவது பரவால்ல..புள்ள குட்டின்னு வந்தா சரியாயிரும்னு வச்சிக்கிடலாம்….எங்க புள்ளையோட சேர்ந்து வாழவாவது வேண்டாமா?நீங்களே நியாயத்த சொல்லுங்க அப்பிடின்னுட்டாக,,,,’’
‘’அட பொம்பள….இப்பிடியுமா இருப்பா ?’’
‘’நடந்திருக்கே.எங்க மதினி வாய் தெறந்து வீட்டுல எதுவும் சொல்லல..அவுக புகுந்த வீட்டுக்காரக சொல்லித்தான் எங்களுக்கு விஷயமே தெரியும்….எங்க அத்தை மாமா நல்லவுகதான்,,,பழி பாவத்துக்கு அஞ்சி வாழற வுகதான்…மகளுக்கு.நல்லதனமா. எவ்வளவோ எடுத்து சொல்லி பாத்தாக..அழுது விழுந்து பாத்தாக,,,நாலு பேரை வச்சி புத்தி சொன்னாக….ஒண்ணும் எடுபடல…விட்டு குடுத்துப் போகணும் அப்பிடீங்கற எண்ணமே இல்லாம கல்லா,வைரமா இருந்துட்டாக எங்க மதினி…அதுக்கப்புறம்.மதினி மாப்ள வீட்டுக்கும் போகவுமில்ல….அவுக,தேடி வரவுமில்ல..காலம் ஓடிப்போச்சு…’’என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் செல்லக்கிளி…
‘’இப்பிடி ஒத்த கட்டையா வாழணும்னு,அவ தலையில எழுதியிருக்கு போல….என்னத்த சொல்ல…பாவம்…பெத்தவுகளுக்கு தீராத வேதனை’’
‘’ஆமா,,,சீறும் சிறப்புமா கட்டிக் குடுத்த மக இப்பிடி வாழாவெட்டியா வந்து நின்னுட்டாளேன்னு மனசு நொந்து எங்க மாமா நெஞ்சு வலி வந்து போய் சேர்ந்துட்டாக….எங்க அத்தை பக்க வாதம் வந்து ரெண்டு வருஷம் படுக்கையில,கெடந்துட்டு ,அவுக மண்டைய போட்டாக,,…லெச்சுமீக்கா, இதுல என்ன வேடிக்கைன்னா,சுத்தி இருக்கவுக தான் கவலைப் படுதாக….மதினிக்கி அந்த சிந்தனையே கெடையாது…எப்பிடியோ,நாளையும் பொழுதையும்,கழிச்சிக்கிட்டுருக்காக,,,’’
‘’சரிக்கா…கெளம்புவோம்…வீட்டுக்கு வீடு வாசப்படி. …அன்னு எழுதுன எழுத்தை அழிச்சா எழுதப்போறான்? ’’என்றவாறு எழுந்தாள் தன லட்சுமி..
’’அத சொல்லுங்க…உங்க கிட்ட மனசு விட்டுப் பேசுனது பாரம் குறஞ்சாப்புல இருக்கு…போவோம் …பை எடுத்துக் கோங்க’’ என்றபடி இருவரும்.கோவில் வாசலுக்கு வர.எதிர்ப்பட்டாள் மீனா…தெருவில் பெட்டிக்கடை வைத்திருக்கும்,செந்திலின் மனைவி….இவர்களுக்கு,இரண்டு பெண் பிள்ளைகள்…
‘அக்காமாரூ ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தாப்புல இருக்கு….கோவிலுக்கு வந்தீகளா’’
‘’ஆமா மீனா..நீ ஏன் இம்புட்டு லேட்டா வார?’’
‘’அவுக சாமான் வாங்க திருனவேலி போயிருந்தாக…இப்பதான் வந்தாக….அந்தால வாரேன்…கடைக்கு ஆள் வேணுமில்ல’’
‘’அது சரி…பிள்ளைக சொகமா”
‘’ஆமா..நல்லாருக்காக ….பெரியவளுக்குப் படிப்பு முடிஞ்சிது….ஒரு கடையில கணக்கு எழுதப் போறா….சின்னவ,பத்து படிக்கா…’’
‘’பரவால்ல,,,எப்பிடியோ கஷ்டப்பட்டாலும்,பிள்ளைகல படிக்க வச்சிட்ட மீனா’’ என்றாள் தன லட்சுமி..
‘’ஆமாக்கா..நாம என்ன சொத்து சொகமா வச்சுருக்கோம்…படிப்பைத்தான் குடுக்கலாம்…என்னக்கா..நான் சொல்லுதது சரிதான?’’
‘’வாஸ்தவம் மீனா…சரி நீ உள்ள போயி சாமி தரிசனம் பண்ணு…நடை சாத்திரப் போறாக…நாங்களும் வீட்டுக்கு கெளம்புதோம்’’ என்றபடி மீனாவிடம் விடை பெற்று ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

Advertisement