Tamil Novels
அத்தியாயம் பதினான்கு :
சற்று நேரத்தில் தெளிந்து விலகியவளிடம், “நம்ம பிரிவு நமக்கு மனக் கஷ்டத்தைக் குடுத்திருக்கு தான் .. ஆனா லைஃப்ல நம்ம ரெண்டு பேருமே நல்லா ஷைன் பண்ணியிருக்கோம் .. நம்ம வேலைல, அதே சமயம் வாழ்க்கையில கூட. அந்த சமயம் கல்யாணம் பண்ணியிருந்தா இவ்வளவு சக்சஸ் இந்த நேரத்துக்கு வந்திருக்காது. இன்னும்...
மது – 9
அழைப்பது ரிஷி என்று அனைவர்க்கும் தெரியவும், அனைவரின் முகத்திலுமே ஒரு ஆவல்.. ஒரு எதிர்பார்ப்பு... ஒரு சிறு கோவமும் கூட.. இங்கிருந்து தான் கிளம்பிப் போனான்.. ஆனால் ஒருவார்த்தை எங்களிடம் பேச தோன்றவில்லையே என்று..
கல்யாணியின் கண்கள் லேசாய் கலங்கியதுவோ என்னவோ, சாம்பசிவம் தன் உணர்வுகளை வெளிக்காட்ட பிடிக்காமல்...
அத்தியாயம் பதிமூன்று :
பூரணியின் மகளுக்கு மொட்டை அடித்துக் காது குத்தும் நாள் அன்று, வீட்டினர் பரபரப்பாக கோவிலுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். ஜனனி அன்று காலையில் தான் வீட்டிற்கு வந்திருந்தாள். அங்கே சென்னையில் இருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரம்.. நாங்கள் வந்து கொள்கிறோம் என்று சொல்லியிருந்தனர். அதனால் பூரணி வீட்டினர் அவர்களின் உறவுகளோடு...
அத்தியாயம் பதிமூன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தை நான் மற்றவர்களுக்கு
தெரியாமல் நடத்தி நடத்தி ஓய்ந்து விட்டேன்
நான் ஓயும்போது தான் இது ஓயுமோ
தெரியவில்லை. வாழ்க்கை எனக்கு
என்ன வைத்திருக்கிறது என்று.???
ஜெயாம்மா நடந்ததை எல்லாம் ராமகிருஷ்ணன் தாத்தாவிடம் சென்று சொல்லி கொண்டிருந்தார்.
“ஏதோ அவன் இனிமேலாவது சந்தோஷமா இருந்தா சரி. நாம எவ்வளவு தான் நல்லா...
அத்தியாயம் – 3
பிரியன் கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்திருந்தான். நடந்துவிட்ட நிகழ்வுகளை அவனால் மாற்ற முடியாது தான் ஆனால் சரிசெய்ய முடியுமே!!
அந்த எண்ணத்தில் தான் அவன் தொலைத்ததை தேடிச் சென்றான். அது லேசில் கிட்டாது என்று தெரிந்தும் சென்றான் தான்.
கடைசியில் தன்னால் தானே எல்லாம் என்ற குற்றவுணர்வு அவனுக்கு எழாமலில்லை. இதற்கெல்லாம் காரணமாயிருந்தவர்கள் மட்டும்...
அத்தியாயம் பன்னிரண்டு :
காலையில் வேகமாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் ஜனனி.. அன்று ஒரு கான்ஃபரன்ஸ் கால் இருந்தது.. இருபத்தி ஆறு வயது முடிய இன்னும் ஒரு நான்கைந்து மாதங்கள் இருந்தன..
அவள் இருப்பது ஹைதராபாத்தில்.. ஆம்! அவள் பணி அங்கே தான் இந்த இரண்டு மாதங்களாக.. முதலில் சேர்ந்த பொழுது சென்னை வாசம்.. பிறகு நிகழ்ந்த...
அத்தியாயம் பன்னிரெண்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
ஏன் எனக்குள் இந்த யுத்தம் யோசிக்கறேன்
யாரோடு என்றும் யோசிக்கிறேன்
முடிவில்லா யுத்தமாகி போகுமோ என்று பயம்
உன்னை பார்த்த பின்பு நீ முடித்துவிடுவாய்
என்று தோன்றுகிறது
செய்வாயா பெண்ணே. நீ.??
“வாங்க உட்காருங்க!”, என்றார் பாஸ்கர்.
“வணக்கம் தம்பி!”, என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டவர்கள், தாங்கள் அவரின் மகனின் திருமணத்தை தெரியப்படுத்தி அழைக்க வந்திருப்பதாக கூறினர்.
மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார்...
மது – 8
தொலைபேசியை எடுப்பதா இல்லை வாசல் கதவை திறப்பதா?? எதை முதலில் செய்வது என்று மதுபாலா கொஞ்சம் யோசித்தாலும், அழைப்பது யாராக இருந்தாலும் திரும்பவும் அழைப்பர் என்றும் தோன்ற, நேராக சென்று வாசல் கதவைத் திறக்க, அங்கே சைலேந்திரன் நின்றிருந்தார்..
“சைலேந்தர்...” என்று ஆச்சர்யமாய் அவரைப் பார்த்தவள், “கம் கம்..” என்று அவரை உள்ளே...
அத்தியாயம் பதினொன்று :
“வெல்கம் டு ஸ்வாதி பாலகிருஷ்ணன் ரெட்டி!” என்ற எழுத்துக்கள் அந்த லையன்ஸ் க்ளப் வளாகத்தில்… வைக்கப்பட்டிருக்க.. அங்கே பெண்களுக்கான ஒரு தன்னம்பிக்கை கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதன் தலைமைப் பேச்சாளராக ஸ்வாதி அழைக்கபட்டு இருந்தார்.
பாந்தமாய் கரைகள் அற்ற ஒரு பட்டுப் புடவையில், நான்கைந்து வயதில் ஒரு மகனோ மகளோ இருப்பவர்...
அத்தியாயம் பதினொன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்தில் நான் என்னுடன்
போராடும்பொழுது என்
நிழலை பிடித்ததாய் நினைத்தேன்,
அதுவும் என் கையினில் தான் இருந்தது,
பிடித்ததாய் நினைத்தது,
பிடிக்க முடியாததாய் இருந்தது,
நான் பிடிக்க முயற்சிக்கும் போதும்
எனக்கு தெரியவில்லை,
நான் பிடித்த பிறகு தெரிந்தது,
நான் என்னை பிடிக்க முடியாதது,
நான் பிடிக்கமுடியவில்லை, தோற்றேன்.
என்னை பிடிக்க முடியவில்லை, வென்றேன்.
கட்டுபடித்தியும் முடியாமல் கண்களில் கண்ணீர் துருத்தி வழிய ஆரம்பித்தது
திருநீறு உறுத்துவது...
அத்தியாயம் – 2
வதனா தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ‘எப்படி?? எப்படி?? இந்த தகவல் மீடியாவிற்கு சென்றது. போதாதிற்கு இந்த படம், இது யார் கொடுத்திருப்பார்??’
‘இவனை யார் இங்கே வரச்சொன்னது, இவ்வளவு நாள் தொலைந்து தானே போயிருந்தான். அது போல் தொலைந்து போயிருக்கக் கூடாதா’ என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவன் மேல்.
எதையோ அவசரமாய்...
அத்தியாயம் பத்து :
என்ன பேசியும் வாசுவினால் ஸ்வாதியை சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவர் எடுத்துச் சொன்ன விதமே, “காதல் தப்பென்று என்னால் சொல்ல முடியாது! ஏனென்றால் அந்தக் காதல் தான் என்னை... உன் தந்தையை இப்படிப் பார்த்துக்கொள்ள வைக்கிறது”
“ஆனால் இது உனக்கு காதல் சொல்லும் வயதும் அல்ல.. ஒரு பெண்ணை பார்த்துக் கொண்டு குடும்பத்தை...
அத்தியாயம் பத்து:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் நடப்பது
எனக்கு உன்னுடனா இல்லை
எனக்கு என்னுடனா
இதுவும் எனக்கு நானே கேட்கும் கேள்வி
கேள்விகளை எனக்கு நானே கேட்கிறேன்
விடை தருவாயா பெண்ணே ??. நீ.
அபியை தேடி. பார்த்திபனின் கண்கள் தான் களைத்து போயின. ஆனால் அவள் கண்களில் படவில்லை.
வேணுகோபாலன் இதற்கிடையில் ராமகிருஷ்ணனையும் ஜெயாம்மாவையும்...
அத்தியாயம் ஒன்பது :
“என்ன பெண் பார்க்க வருகிறார்களா? அதன் பின் நிலை கொள்ளவில்லை வாசுதேவனுக்கு.. அவன் முன் காதல் சொல்ல முடியாமல் நின்ற காரணங்கள், அவனின் பொறுப்புகள், எல்லாம் பின்னுக்கு ஓடி விட்டன.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.. எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்று ஆவல் உந்த,
பெண் பார்க்க மாலையில் தானே வருவார்கள் என்று தோன்ற,...
அத்தியாயம் ஒன்பது:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் விரோதத்தினால்
மட்டுமல்ல அன்பினாலும் வரும்
நேற்று உனக்கு என் அன்பு புரியவில்லையே
என்று வருத்தப்பட்டேன்
இன்று உனக்கு புரியவைக்க முடியவில்லையே
என்று வருத்தபடுகிறேன்
அன்பு செலுத்துபவர்களிடம்
அந்த அன்பை புரியவைக்காவிட்டால்
அந்த அன்பை செலுத்துவதில் என்ன பயன் ??
எனக்கு நானே கேட்கிறேன்.??
தாத்தாவிற்கு பேத்தியிடம் பேசிய பிறகு என்ன முடிவு எடுப்பதென்பதே தெரியவில்லை. இது வயதின் கோளாறு என்பதா? இல்லை...
அத்தியாயம் எட்டு :
வாசு ஜனனியையே சிறிது நேரம் பார்த்திருந்தவன், தெளிந்த மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான். தனது கைகளை ஜனனியின் கைகளிடம் இருந்து உருவிக் கொண்டவன்.. கூடவே “சாரி” என,
“எதுக்கு சாரி? என் ஃபோன் எடுக்காததுக்கா” என்றாள் இலகுவாகவே ஜனனி.
“இல்லை” என்பதுப் போல தலை அசைத்தவன்.. “ஐ லவ் யு சொல்வேன்னு சொன்னதுக்கு”...
அத்தியாயம் எட்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம் என்னுள் தொடங்கிய நாள்
நான் உன்னை என்னுள் உணர்ந்த நாள்
அந்த நாளில் இருந்து நான் நானாக இல்லை
யாருக்கும் என்னை பிடிக்கவில்லை
உனக்கும் என்னை பிடிக்கவில்லை
பைத்தியமானேனா, உன்னால் ஆக்கப்பட்டேனா.
ஆகும் என்பார் ஆகாது, ஆகாதென்பார் ஆகும்.
உன்னை நினைத்து நினைத்து நித்தம்
என்னுள் நடக்கும் யுத்தம் இதுமாதிரிதான்.
கீறியது தான் தெரியும், அது ஆழமாக இறங்கிவிட்டது....
அத்தியாயம் ஏழு :
வாசுவிற்கு மனது குழப்பமான குழப்பம் தான், ஜனனி வேண்டும் என்று மனது சொல்ல.. “இது சரிவராது உனக்கு! இப்பொழுது வயதும் அல்ல.. சூழலும் அல்ல.. அம்மா ஒத்துக் கொள்ளவே மாட்டார்!” என்று என்று அறிவு அடித்துச் சொன்னது. ஒரு வாரமாக இந்த குழப்பம் தான் ஜனனியிடம் பேசிய நாளாக.
ஜனனி திரும்பக் கூப்பிடுவாளோ...
அத்தியாயம் ஏழு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
எனக்குள் நடக்கும் இந்த யுத்தம்
உன் ஒரு பார்வையில் வெளியே தெரிந்துவிடுகிறது
மறைத்தாலும் மறைவதில்லை
எனக்கு புரிந்தாலும் உனக்கு புரிவதில்லை
உனக்கு புரிய வைக்க முடியுமா
எனக்கு தெரியவில்லை?
அபி உள்ளே நுழைந்தவுடனே பார்த்துவிட்டான் பார்த்திபன்.
“அந்த போனை எடுத்து அவ கிட்ட கொடுத்து அனுப்பு”, என்றான் செந்திலை பார்த்து.
அபி, செந்திலை விடுத்து அவனிடத்தில் வந்தவள். “நான் உங்களை பார்க்க...
மது – 7
ஒரு மாதம் கடந்திருந்தது..
இமைகள் நொடிக்கும் பொழுது போல வேகமாய் கடகடவென்று கடந்துவிட்டது இந்த ஒருமாதம்.. ஆனால் இருவரைத் தவிர..
ஒன்று ரிஷி.. மற்றொன்று மதுபாலா..
ரிஷி சுவிஸ்ஸர்லாந் வந்தும் மாதம் ஒன்றாகியிருக்க, அவனால் மதுபாலாவின் நினைவில் இருந்து மட்டும் வெளிவரவே முடியவில்லை.. புது சூழல்.. புது ஆட்கள்.. அவன் விரும்பிய வேலை.. அவன் விரும்பிய...