Advertisement

அத்தியாயம் ஒன்பது:

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்

இந்த யுத்தம் விரோதத்தினால்

மட்டுமல்ல அன்பினாலும் வரும்

நேற்று உனக்கு என் அன்பு புரியவில்லையே

என்று வருத்தப்பட்டேன்

இன்று உனக்கு புரியவைக்க முடியவில்லையே

என்று வருத்தபடுகிறேன்

அன்பு செலுத்துபவர்களிடம்

அந்த அன்பை புரியவைக்காவிட்டால்

அந்த அன்பை செலுத்துவதில் என்ன பயன் ?? 

எனக்கு நானே கேட்கிறேன்.??

தாத்தாவிற்கு பேத்தியிடம் பேசிய பிறகு என்ன முடிவு எடுப்பதென்பதே தெரியவில்லை. இது வயதின் கோளாறு என்பதா? இல்லை பைத்தியக்காரத்தனம் என்பதா? துணை போவதா? எதிர்த்து நிற்பதா? ஒண்றுமே புரியவில்லை அவருக்கு, நொந்து விட்டார்.

யோசித்து யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம். தனது மகளிடம்  பேசினால். அவள் அதற்கு மேல் குதித்தாள். “அப்படி அவ இஷ்டத்துக்கு எல்லாம் விடமுடியாது பா. பைத்தியம் பிடிச்சிடிச்சு அவளுக்குன்னு நினைக்கிறேன்”.

“ஒரு கல்யாணத்தை நிறுத்தின புண்ணியத்தை வேறு கட்டிட்டு இருக்கா! எம் பொண்ணா இப்படின்னு நானே நொந்து போயிருக்கேன். இதுல மேல மேல வந்து அந்த பையனை பார்க்கலாமான்னு கேட்காதீங்க. இப்போ அவ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு”.

“அது வரைக்கும் அந்த பையனுக்கு அவங்க கல்யாணம் பண்ணாம இருக்கனுமே”, என்றார் கவலையோடு.

“அப்பா.!”, என்று கடிந்த கலாவதி. “பேத்திய விட அந்த பையன் பைத்தியம் உங்களுக்கு தான் முத்திடுச்சுன்னு நினைக்கிறேன். போங்கப்பா போய் வேற வேலை இருந்தா பாருங்க”, என்றார்.

“என் பேத்திய பார்கறதை விட எனக்கு என்ன வேலை”, என்று நினைத்தவர்.

ஒன்றும் பேசாமல் தன் சம்பந்தி வேணு கோபாலனியிடம்,அவரது மனைவியிடமும்  வந்தவர். “உங்க பேத்தி இப்படி சொல்லுறா! என்ன செய்யலாம்?”, என்று கேட்டார். அவருக்கு ஒரு விஷயத்தை எடுத்துவிட்டால் முடித்துவிட வேண்டும் ஆறப்போடமாட்டார்.

அந்த பெரியவர்களும் மூன்று குழந்தைகளை பெற்று வளர்த்திருந்த போதும், இந்த மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொண்டதில்லை.

“உங்களுக்கு தெரியாததென்ன அண்ணா. பக்கத்துக்கு வீட்ல சம்பந்தம் பேச போய் முன்ன நின்னதால இது வரைக்கு என் பொண்ணு எங்க வீட்டுக்கு வரதில்லை. நாங்க செத்தா தான் அனுப்புவாங்கலோ என்னமோ. என் கண்ணுக்குள்ளயே நிற்கரா இந்து!”, என்றார் சத்திய மூர்த்தியின் அன்னை.

“போனதை பேசி பிரயோஜனமில்லை, ஆகவேண்டியதை பார்ப்போம்! நான் வேண்டும்னா அவங்களோட இப்போ பேசிப்பார்கட்டுமா”, என்றார்.

“என்ன சொல்லி தேற்ற முடியும். கடந்த வருடங்களை யாராலும் திரும்ப கொண்டுவர முடியாது”.  

“பிரயோஜனமில்லை வேண்டாம்”, என்றார் வேணு கோபாலன். “கல்யாணம் தான் செஞ்சு வைக்க முடியும். அது நிலைக்கறது நிலைக்காததும் அதற்குபிறகு முழுமையாக பொண்ணு கையிலையும் மாப்பிளையும் கையிலயும் தான் இருக்கு. அவங்க ரெண்டாவது பையன் கல்யாணம் முறிஞ்சதுக்கு அவன் தான் காரணாமா இருப்பான்றது தான் என் எண்ணம்”.

“ஒரு வேலை நாங்க கேட்டுட்டா என்ன பண்றதுன்னு தான் எங்க பொண்ணை இத்தனை வருஷமா இங்க வீட்டுக்கு அனுப்பாம வெச்சிருக்காங்களோ என்னவோ? கேக்கறவங்க கூட சிரிப்பாங்க, இருபத்தஞ்சி வருஷத்துக்கும் மேலா இங்க அனுப்பாம வெச்சிருக்காங்க! முதல்ல எங்கையாவது கல்யாணத்துல கண்லயாவது பார்த்துப்போம். எங்க பேரன் கல்யாணதுக்காவது வந்து கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன். அதுக்கு கூட கூப்பிடலை. எங்க சீர் கூட வேண்டாம்னு ஒதிக்கிட்டாங்க. இப்போ அது கூட அதிகமா நேர்பட மாட்டேங்குது”.

“எங்களுக்கு நித்யாவை தெரியும். சத்யா பிரின்ட்! அவனோட வருஷக்கனக்கா பார்த்திருக்கிறோம். அப்படியிருக்கும் போது.”, என்று இழுத்தவர். “ஏதோ விடுங்க, நடந்திடுச்சி, அதுக்காக எங்க பொண்ணை இத்தனை வருஷம் அனுப்பாம இருக்கிறாங்க”, என்று குறைபட.

“விடுங்க! இந்த முறை நான் ஒரு முயற்சி செய்யறேன்”, என்றவர். அபிராமி பேசியதை கூறியவர். “நான் அந்த பையைனை பத்தி விசாரிக்கறேன். உங்களுக்கும் எனக்கும் த்ருப்தினா ஜாதகம் வாங்கட்டுமா”, என்றார்.

இத்தனை வருடங்களாக ஒரே ஊரில், சத்தியமூர்த்தியின் மகள் குடும்பமும் திருச்சி, மாமனார் குடும்பமும் திருச்சி, இருந்தாலும் கண்டு கொள்ளாதவர். இப்பொழுது தனது பேத்திக்காக சமாதானம் பேசுகிறேன் என்கிறார்.

“என்னவோ சம்பந்தி, எங்க பசங்களுக்கு நாங்க கல்யாணம் பண்ணிட்டோம்! பேத்தி கல்யாணத்தை அவங்க அப்பா அம்மா கையிலையே விட்டுடறேன். அவங்க என்ன முடிவெடுத்தாலும், எனக்கு சரி. எங்களுக்கு மட்டும் என்ன வேண்டும் எங்க குழந்தைங்க சந்தோஷம் தான்”, என்றார் வேணுகோபாலன்.

பிறகு. “முதலில் அவ ஜாதகத்தை பார்ப்போம். எப்படி இருக்குன்னு பார்த்துட்டு, அவளுக்கு இப்போ கல்யாணம் பண்ற அனுகூலம் இருக்கா, பார்த்துட்டு பின்ன முடிவெடுக்கலாம்”, என்றார்.

அதுவும் சரியாக படவே. பின்பு அபிராமியின் ஜாதகம் பார்க்கலாம் என்று ஏகமனதாக பெரியவர்களால் முடிவெடுக்க பட்டது. 

ஆரம்பத்திலேயே இவ்வளவு சிக்கல் என்பதால் திருமணத்தை ரேகா வீட்டினர் நிறுத்தியிருந்தனர்.

பார்த்திபன் ஓரளவுக்கு எதிர்பார்த்தான் தான். இந்த பெண் பண்ணி வைத்த வேலைக்கு யாரு ஒத்துகொள்வார்கள்? என்று தெரியும். 

திருமணத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல். அதற்கு காரணம் அபிராமி என்பது போல ரேகாவின் அண்ணன் சந்தர்ப்பம் கிடைக்கும் அத்தனை இடங்களிலும் சொல்லி கொண்டிருந்தான்.

அதுவும் எல்லாரும் ஒரே சமூக பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் அவனுக்கு இந்த விஷயத்தை பேச மிகவும் சுலபமாகி போனது. இந்த மாதிரியான நமக்கு தேவையில்லாத விஷயங்களை எப்பொழுதும் கண் காது மூக்கு வைத்து பேசு மக்கள்.

கடைசியாக அபிராமியை பார்த்திபன் ஏமாற்றி விட்டான். அவனுக்கு திருமண நிச்சயம் நடக்க போவதால் அபிராமி கையை அறுத்து கொண்டாள் என்று பறந்து. விரிந்து. திரிந்து. வந்தது, வார்த்தைகளும் வாக்கியங்களும்.  

திருமணம் நின்றது ஜெயாமாவுக்கும் ராமகிருஷ்ணன் அப்பாவுக்கும் ரொம்ப வருத்தம். அவர்களுக்காக இவன் போலியாக வேறு உற்சாகமாக காட்ட வேண்டி வந்தது. இந்த நடிப்பு அவனுக்கு மிகவும் புதிது. தன் இயல்பும் அல்ல இது, என்று தெரிந்தவனுக்கு தன் இயல்பை மீறி செயல்பட வைக்கும் அபிராமியின் மேல் எரிச்சல் வந்தது.

இப்படி கோபப்பட வைப்பதற்காக. அதற்காக. இதற்க்காக. எதற்க்காக. என்று தெரியாமலேயே அபிராமியை. அவள் இவனை நினைப்பதைவிட அதிகமாக அவனை அறியாமலேயே நினைக்க ஆரம்பித்தான்.

யாரும் அந்த வீட்டுடன் தொடர்பு இல்லை என்பதால் அவள் ஏதோ அசம்பாவிதமாக செய்திருக்கிறாள் என்று தெரியும். என்ன என்று தெரியாது? அவள் கத்தினாள். ஹாஸ்பிடல் கொண்டு சென்றிருக்கிறார்கள், தற்கொலை முயற்சியாக தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தது தான்.

அவளுக்காக பிரார்த்தித்தான் கூட தான். மற்றபடி நன்றாக ஆகிவிட்டாளா தெரியாது? அன்றிலிருந்து அதிக நேரம் அவளை தான் நினைத்து கொண்டிருந்தான். அதனால் நிச்சயம் நின்றது கூட பெரிதாக அவனுக்கு தோன்றவில்லை.

காலையில் செடிகளுக்கிடையில் இருக்கும் போது அவனை அறியாமல் பார்வை மேலே பார்க்கும். அவள் மேல் கோபம், எரிச்சல் அதிகமாக இருந்தாலும்.

அவளுடைய செய்கைகளால் அதிகமாக அவனை அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிந்து கொள்ள தேடவைத்தாள் அபி. அவள் குரலையும் அதன் பிறகு அவன் கேட்கவேயில்லை.

ஜெயாம்மாவும் அபிராமியை பற்றி பேசாமல் மெளனம் சாதித்தார். 

அங்கே ஜெயம்மா வேறு நித்யாவிடம். “இந்த பொண்ணு இப்படி அப்படின்னு ஏதோ சொல்லி கல்யாணம் நின்னுடுச்சு”, என்று மிகுந்த வருத்தத்தோடு அபிராமியை பற்றி சொன்னார்.

இங்கே ஒரு பக்கம் நித்யா வேறு சத்யமூர்த்தியிடம். “என்ன சத் நடக்குது? என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணிட்டா? நான் அவகிட்ட பேசறேன்” என்று கேட்க அபி அவரிடம் பேச ஒத்துக்கொள்ளவில்லை.

அதற்குள் செமஸ்டர் ஹாலிடேஸ் முடிந்து காலேஜ் மறுபடியும் திறக்க ஜெயந்தியுடன் காலேஜ் சென்றாள்.

அபிராமி பார்த்திபன் வீட்டின் புறம் திரும்ப கூட இல்லை. ஆனால் ஜெயந்தி திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே சென்றாள். அவளுக்கு பார்த்திபன் அபியை பார்க்கிறானா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

பார்த்திபன் தென்படவில்லை. அபியும் பார்க்கவில்லை.

“என்ன நடக்குது?”, என்றே ஜெயந்திக்கு புரியவில்லை. அபியிடம் பேசவே பயமாக இருந்தது. முன்பெல்லாம் வளவள வென்று பேசும் அபி இப்போதெல்லாம் யோசித்து யோசித்து ஒன்றிரண்டு வார்த்தை மட்டுமே பேசினாள். அந்த நிகழ்ச்சியை பற்றியோ. பார்த்திபனை பற்றியோ. அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசயியலவில்லை.

அபிக்குமே அவள் மாற்றம் ஏன் வந்தது என்று அவளுக்கே புரியவில்லை. முன்பு போல் எல்லோருடனும் பேச அவளுக்கு வரவேயில்லை. அம்மா அப்பாவிடம் கூட அவளையறியாமல் ஒரு ஒதுக்கம் வந்தது. இயல்பாக இருக்கக்கூடாது என்று இல்லை, அவளால் முடியவில்லை என்பது தான் உண்மை

“தான் செய்த காரியத்தினால் வந்த அவமான உணர்வா, பார்த்திபன் நினைவா.”. அவளாலேயே பிரித்தறிய முடியவில்லை. அவள் அம்மா அவளிடம் நெருங்க முற்பட்டாலும் அவளுக்கு ஒரு ஒதுக்கமே வந்தது.

கண்ணுக்குள் வைத்து பார்த்துகொண்டவர்கள் என்று புரிந்தாலும். தன் செயலில் தானே வெட்கி அவர்களுடன் முன்பு போல் இருக்க முடியவில்லையா அவளுக்கே தெரியவில்லை.

இல்லை தேவையில்லாமல் தன்னை பற்றி மற்றவர்கள் பேசும்படி நடந்துகொண்டோமா அவளுக்கே தெரியவில்லை.

அவளுக்கு அந்த ஞாபகம் வராத மாதிரி தான் அவள் அன்னையும், தந்தையும், மற்றவர்களும் பார்த்துகொண்டார்கள். யாரும் அதை பற்றி மறந்தும் திரும்ப பேசவில்லை.

அவளுடைய ஜாதகத்தை எடுத்துகொண்டு ஊருக்கு போன தாத்தா, அங்கே அவருக்கு தெரிந்தவர்களிடம் பார்க்க. இங்கே வேணுகோபாலனும் தன் பேத்தியின் ஜாதகத்தை தூக்கி கொண்டு அலைந்தார்.

அலைந்தவருக்கு ஜாதகத்தை பற்றி மட்டும்மல்ல வேறு பல விஷயங்களும் தெரிய வந்தன.

ஜாதகத்தை பார்த்த வரைக்குமே கங்கன பொருத்தம் வந்துவிட்டது. திருமணத்திற்கு பார்ப்பதென்றால் பார்க்கலாம் என்று கூறினர். இன்னுமொருவர் இப்பொழுது செய்தால் தான் இல்லையென்றால் வருடக்கணக்கில் தள்ளிபோகும் என்று கூறினர்

இவள் ஒருபக்கம் கலகலப்பு இல்லாமல் கடமையைக் கருதி காலேஜ் சென்றது போலவே தோன்றியது. அந்த இரண்டு நாட்களில் போகும் கோவிலுக்கெல்லாம் வந்து கண்ணில் பட்ட பார்த்திபன் தற்பொழுது கண்ணில் படவேயில்லை.

அதே நிலையே அவனுக்கும், அவள் கண்ணில் படவேயில்லை. அவனையறியாமல் அவன் கண்களில் தேடல் துவங்கியது. ( தேடி தேடி தேடி தேடி செல்வோமா., தேடல் துவங்கியதே ??????? )

அபிராமியும் படிப்பில் தன்னை தொலைக்க விரும்பினாள். முடியவில்லை. சிறிது நேரத்திற்கு மேல் புத்தகத்தை வைத்து இருக்க முடியவில்லை. அவளை உணர்ந்த அவளின் அம்மா. “அபி டான்ஸ் கிளாஸ் இல்லைன்னா கீ போர்டு கிளாஸ் போறியா”, என்றார்.

“உனக்கு ஒரு ரிலாக்ஸாக இருக்கும்”, என.

“எனக்கு என்ன ஆச்சு? ரீலாகஸ் ஆக.”, என்று திருப்பினாள்.

“உனக்கு என்ன அச்சுன்னு எனக்கு தெரியலை அபி. நீ முன்ன மாதிரி சிரிக்கலைன்னா கூட பரவாயில்லை. ஆனா என்னோட சண்டை கூட போடறதில்லை. இந்த மாதிரி நீ இருக்கறதுக்கா நாங்க இருக்கோம்! நீ டல் ஆனாதுல இருந்து. அப்பா ஸ்ரீகாந்த் எல்லாரும் டல் ஆகிட்டாங்க”,

“வீடு! வீடு மாதிரியே இல்லை! உன்னை பற்றி ஆயிரம் தப்பு சொல்ற உன் தாத்தாவும் பாட்டியும் கூட வாய் திறக்க மாட்டேங்கறாங்க”, என்று நீளமாக பேச.

“நீ இப்படி பேசினா, நான் கிளாஸ் சேர்ந்துக்கறேன், டான்ஸ் போறேன்”, என்றாள் அபிராமி.

“சரி இங்க மெயின் ரோட்ல ஒரு கதக் ஸ்கூல் இருக்கு போறியா. உனக்கு தான் பரதநாட்டியம் தெரியுமே”,

“போய் பார்க்கிறேன். பிடிச்சா போவேன்! இல்லைனா நின்னுடுவேன்!”, என்றாள்.

ஏதோ ஒரு வகையில் அவள் மூட் டைவர்ட் ஆனால் போதும் என்று, அவள் அன்னையும் மண்டையை மண்டையை ஆட்டினார்.

ஒரு சிறு புன்முறுவலோடு “என் காலை விட. உன் தலை நல்லா டான்ஸ் ஆடுதும்மா.”, என்று சொன்னவுடனே பழைய அபியே திரும்பி விட்டது போல் மிகவும் சந்தோஷமாகி விட்டது கலாவதிக்கு. 

திருச்சியில் இருந்து திரும்ப வந்த தாத்தா இந்த ஜாதக விஷயத்தை வேணு கோபாலனிடம் பகிர்ந்து கொள்ள. அவரும் சில ஒத்த கருத்துகளை பகிர்ந்து கொள்ள.

சத்திய மூர்த்தியையும் கலாவதியையும் வைத்து பேசினர்.

“என்ன செய்யலாம்? அதிகமா யாரும் பேசலைன்னாலும். இந்த மாதிரி இவ பண்ணினது தெரிஞ்சோ தெரியாமலோ வெளில தெரிஞ்சிடுச்சு. பக்கத்துக்கு வீட்டு அந்த பையனோட பொண்ணு வீட்டுக்காரங்க கல்யாணத்தை நிறுத்தினது மட்டுமில்லாம நம்ம பொண்ணோட சேர்த்து இஷ்டத்துக்கு பேசி அதனாலதான் நாங்க கல்யாணத்தை நிருத்திடோம்னு சொல்லுறானுங்கலாம். பார்க்கறவங்க எல்லாம் என்னை துக்கம் விசாரிக்கறாங்க”,

“அந்த பொண்ணு வீட்ல போய் சண்டை போடவும் முடியலை, இன்னும் அதிகமா பேசுவாங்க”, என்றார் வேணுகோபாலன்.

“யார் பேசறது? ஆள் யாருன்னு காட்டுங்க! உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்!”, என்று கலாவதியின் அப்பா கோபப்பட.

“பொண்ணுங்க விஷயம். நம்ம கோபப்படா நமக்கும் அசிங்கம்! அவங்களுக்கும் அசிங்கம்! நஷ்டபடறது நம்ம! தேவையில்லாம ஊர் வாயை இன்னும் நாம் கிளப்பிவிடுவோம்”, என்றார் வேணுகோபாலன்.

“அப்போ என்ன தான் பண்ணலாம்?.”,

“ஒண்ணு இதை இப்படியே விட்டுடலாம்! ஆனா நாளைக்கு நம்ம வேற மாப்பிள்ளை, நம்ம பொண்ணுக்கு பார்க்கும் போது இந்த விஷயம் மாப்பிள்ளையா வரபோறவனுக்கு தெரிஞ்சா. நம்ம அபியோட வாழ்கை எப்படி இருக்கும்னு தெரியாது”,

இந்த விஷயம் அபிராமியின் அன்னைக்கும் தந்தைக்கும் புதிது. கலாவதி அதிகம் வெளியே போகாதவர். சத்தியமூர்த்தி பழகும் ஆட்கள் வேறு. அதனால் இந்த செய்திகள் அவரை கவலைகுள்ளாக்கியது.

மகனின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த தந்தை.    

“ராமகிருஷ்ணன் கிட்ட பேசி நான் அந்த பையன்  ஜாதகம் வாங்கட்டுமா”, என்றார் வேணுகோபாலன். “இனியும் பையன்னு சொன்னா நல்லா இருக்காது. அவன் பேர் என்ன?”, என்க.

எல்லாரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

அங்கே நித்யாவோடு பழகுகிறார்கள் என்பதையும் ஒரு காரணமாக வைத்துதான் சத்யமூர்த்தி குடும்பத்தை சென்னை வரவைத்தார் வேணுகோபாலன். இன்று.

அவர் தான் அந்த வீட்டின் உறவை முறித்தார். இன்று அவரே பார்க்கலாம் என்கிறார்.

சத்திய மூர்த்தி ஆச்சர்யமாக பார்த்து. “பார்த்திபன் பா பேரு”, என்றார்.

“விரோதம் பாராட்டி போகிற காலத்துக்கு, நான் என்ன கொண்டு போக போறேன்”, என்றார் வேணுகோபாலன்.  

“நானே ராமகிருஷ்ணன்  கிட்டயும் அவர் மனைவி கிட்டயும் பேசி ஜாதகம் வாங்கறேன். என் பேத்தி வாழ்க்கை என் கௌரவம், பிடிவாதம் இதை விட முக்கியம்”, என்றார். 

இதை எல்லோரிடமும் சொல்லி செய்தார். அவர் சொல்லாமல் செய்த விஷயம். பார்த்திபனை அபிராமிக்கு பார்க்கலாம் என்று முடிவெடுத்த சமயமே ஒரு டிடேக்டிவ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு பையனை பற்றி நன்கு விசாரித்துவிட்டார்.

ஏனென்றால் நித்யாவும் பார்த்திபனின் அப்பாவும் ஏன் பிரிந்தார்கள் என்று தெரியாது. அவன் தந்தை ஏதாவது தகாத செயல்களில் ஈடுபட்டு அந்த பழக்கம் மகனுக்கும் இருந்தால் நன்றாக விசாரித்துவிட்டார்.

யாருக்கும் அது தெரியக்கூடாது என்பதற்காக தான் பையனின் பெயர்கூட தெரியாதவர் போல காட்டி கொண்டார்.

கிடைத்த முடிவு பையன் சொக்க தங்கம் என்பதே. குறை சொல்ல முடியாதவன்., உழைப்பாளி. நம்பி பெண்ணை கொடுக்கலாம்.

இது அறியாதவளாக அபி, காலேஜ். டான்ஸ் கிளாஸ். என்று இருக்க.

அபி கண்ணில் படுகிறாளா என்று பார்த்திபனின் கண்கள் தேட.

Advertisement