Monday, April 29, 2024

    PM : MM 40

    PM : MM EPILOGUE

    PM : MM 39 2

    PM : MM 39 1

    PM : MM 38 2

    Puthumanam : Marumanam

    PM : MM 38 1

    அத்தியாயம் - 38_1 மறு நாள், திங்கட்கிழமை, சிவா தாமதமாக எழுந்து கொண்டான். எப்போதும் போல் எழுந்து கொண்ட கௌரி, சாவித்திரி அம்மா வருவதற்கு முன் அவள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தாள். அவர் வந்தவுடன், சிவா இன்னும் எழுந்திருக்காததால்,  குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கூடத்திற்குத் தயார் செய்தாள். பேருந்து நிறுத்ததில் விட அவளுக்கு நேரமில்லாததால்,...

    PM : MM 37 2

    அத்தியாயம் - 37_2 “எனக்குச் சிவா தம்பி நிறைய உதவி செய்திருக்கு கௌரி..இப்போவும் மனோகரைக் கூட வைச்சுக்கிட்டு அவனுக்கு வழி காமிச்சுக்கிட்டு இருக்கு..சின்னவளை இரண்டு வயசுலேர்ந்து நான் தான் வளர்க்கறேன்…எனக்கு ஆயுசும், ஆரோக்கியமும் போட்டிருந்தா, இரண்டு பேருக்கும் நல்லது, கெட்டது தெரியறவரைக்கும் அவங்களுக்குத் துணையா இருக்கணும்னு நினைச்சுப்பேன்..அப்பப்போ உடம்பு பிரச்சனை செய்யும் போது  இதுங்க இரண்டு...

    PM : MM 37 1

    அத்தியாயம் - 37_1 அவள் மாமியாரை முறைத்துக் பார்த்துக் கொண்டிருந்த கௌரி, கோபத்தை துறந்து சிந்தனைவயப்பட்டாள். அப்போது தீபாவும் சூர்யாவும் அம்மா என்று அழைத்து அவளருகே வர, அவர்களை விலக்கி விட்டு, அவர்களிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவள் படுக்கையறைக்குச் சென்றாள். உடனே குழந்தைகளின் முகம் வாடிப் போக, அதைப் பார்த்து சாவித்திரி அம்மா வேதனையடைந்தார். ...

    PM : MM 35 2

    அத்தியாயம் - 35_2 “நம்ம வீட்டு ஆளுங்களுக்குக் கௌரியை அறிமுகம் செய்து வை.” என்று மனைவிக்குக் கட்டளையிட்டார் ராஜேந்திரன். உடனே கௌரியை அவருடைய புகுந்த வீட்டு உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சாந்தி.  சின்னவள் சூர்யா கௌரியுடனேயே இருக்க, பெரியவள் தீபா, மேக்னாவோடு சுற்றிக் கொண்டிருந்தாள்.  ஜமுனாவும் விஜியும் நகமும் சதையும் போல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர்.  விஜியின்...

    PM : MM 35 1

    அத்தியாயம் - 35_1 அந்த விடியற் காலை வேளையில், வெளிச்சம் வர இன்னும் சில நிமிடங்கள் இருக்க, சாந்தியின் புது வீட்டின் கிருஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீபா, சூர்யாவுடன் வந்தனர் சிவாவும் கௌரியும்.  கடந்த இரண்டு நாள்களாக, சிவாவுடன் பேசி, சாந்தியின் வீட்டிற்கு எப்போது வரப் போகிறான், என்ன சீர் செய்யப் போகிறான் என்று...

    PM : MM 34

    அத்தியாயம் - 34 இப்போது சிவா வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது கௌரிக்கு.  அந்த நினைப்பை மெய்ப்பிப்பது போல் அழைப்பு மணி ஒலித்தது.  வாசலில் நின்று கொண்டிருந்த சிவாவை மானிட்டரில் பார்த்து,”மாமா, வந்திட்டாங்க.” என்றான் விஜய். “நிஜமவா?” என்று கேட்டு சில நொடிகள் காத்திருந்த கௌரி, எதற்கு அழைப்பு மணி அடித்தான் என்று புரிந்தவுடன், அவனிடம் சாவி...

    PM : MM 33 2

    அத்தியாயம் - 33_2 அடுத்த நாள் காலை கரெக்ட்டாக பதினொரு மணிக்கு சிவாவின் வீட்டிற்கு வந்தார் சாந்தி.  வாசலில், அழைப்பு மணி ஒலித்தவுடன், சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, ஓடிப் போய் மானிட்டரைப் பார்த்து,” அத்தை.” என்று கத்தினாள். அவள் கத்தலைக் கேட்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்த கௌரி, டீ ஷர்ட், பேண்ட் அணிந்திருந்தாள். ...

    PM : MM 33 1

    அத்தியாயம் - 33_1 நான்காம் நாள் காலையில், குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லும் முன், சாமி அலமாரியில் புதிதாக மாட்டியிருந்த காயத் ரியின் படத்தை வணங்கி விட்டுச் சென்றனர்.  அதைப் பார்த்து, கௌரியை நினைத்து ஆச்சர்யமானது சாவித்திரி அம்மாவிற்கு. “காயத் ரியோட ஃபோட்டோ எல்லாத்தையும் சிவா தம்பி அலமாரி உள்ளே வைச்சவுடனே நிம்மதியா இருந்திச்சு..குழந்தைங்க இரண்டு பேரும்...

    PM : MM 32

    அத்தியாயம் - 32 குழந்தைகள் இருவரையும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு பத்து நிமிடத்தில் வீடு திரும்பினான் சிவா.  அவசரத்தில் அவனுடைய சாவியை எடுத்துச் செல்லாததால், அழைப்புமணியை அழுத்தி விட்டு வாசலில் காத்திருந்தான். அந்த நேரத்தில் கௌரி குளித்துக் கொண்டிருந்ததால் வாசல் கதவைத் திறக்க அவளால் வர முடியவில்லை.  இன்றைக்கு தாமதமாக வேலைக்கு வந்திருந்ததால்,...

    PM : MM 31 2

    அத்தியாயம் - 31_2 அதே விலையில் பென்சில் பவுச், ஸ்டெஷனரி செட், எரேசர் பேக், பல வடிவங்களில் ஷார்ப்னர் பேக், கலர் பென்சில், பென் பேக் என்று வெரைட்டியாகக் கொண்டு வந்து போட்டான் சிவா.  அதற்குப் பின் பார்ட்டிகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கத்தன. அதனால் பொறுமையிழந்த சிவா, கௌரியைக் காரணம் காட்டி விழாக்களுக்குப் போவதைக் குறைத்தான்.  கௌரி...

    PM : MM 31 1

    அத்தியாயம் - 31_1 வினாக்களும், விளக்கங்களும் தேவையில்லை என்ற நிலையை இருவரும் அடைந்திருந்ததால் சிவாவிற்கும் கௌரிக்கும் இடையே வாக்குவாதங்கள் அதிகமாக எழவில்லை.  பெற்றோர் ஆனபின், வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷங்கள், சஞ்சலங்களுக்கு குழந்தைங்கள் தான் காரணமாகிறார்கள். இங்கே இருவரும் கணவன், மனைவி ஆகும் முன் அம்மா, அப்பாவாக உணர்ந்து செயல்பட ஆரம்பித்ததால், எந்தப் பிரச்சனையானலும், எங்கே சுற்றினாலும்,...

    PM : MM 30 2

    அத்தியாயம் - 30_2 “சுப்ரமணி ஸர்கிட்டே நல்ல நாள் பார்க்கச் சொல்லியிருக்கேன்..முதல்லே நம்ம கல்யாணத்தைப் பதிவு செய்யணும்..அப்புறம்  கடையை உன் பெயர்லே..வியாபாரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்னதாப் பூஜை..” என்று அடுக்கிக் கொண்டு போனதை நம்ப முடியாமல்,“எனக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான்.” என்றாள் கௌரி. அதைக் கேட்டு இந்த வீட்டிற்கு அவளை முதன்முதலில் அழைத்து வந்த...

    PM : MM 30 1

    அத்தியாயம் - 30_1 மனமாற்றம். காலம், நேரம் மாறுவது போல் மனமாற்றத்தையும் இயற்கை நிகழ்வாக எடுத்துக் கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தாமல், தடைச் செய்யாமல் இருந்தால், ஒரே இடத்தில் அடைப்பட்டுக் கிடக்கும் உணர்வுகள், சிறைப்பட்டுக் கிடக்கும் சிந்தனைகள், விடுதலை பெற்று, எல்லைகளைக் கடந்து, காலத்தால் அழியாதச் சாதனைகளைப் படைத்து, புதியதோர் உலகத்தை உருவாக்க முடியும்.  எப்போதும் மாறிக்...

    PM : MM 29

    அத்தியாயம் - 29 சிவாவின் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருக்க அந்த அழைப்பை ஏற்க வேண்டுமா? என்று சிவாவும் கௌரியும் ஒரே போல் யோசித்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்கு முன் பாத் ரூமில், பாத் ரோப் மட்டும் அணிந்து கொண்டிருக்கிறாள் என்ற கௌரியின்  விளக்கத்தைக் கேட்டு, அதை  உறுதி செய்து கொண்டவுடன் அவனுள் ஏற்பட்ட மாற்றத்தை கையாள முடியாமல்,...

    PM : MM 28

    அத்தியாயம் - 28 ஆசை, விருப்பம்.  கனவுகளின் அஸ்திவாரம். நியாயமானதாக இருக்கும் வரை வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக மாற்றக்கூடியது. பேராசையாக, பெருவிருப்பமாக மாறும் போது வாழ்க்கையைச் சிதைக்கிறது. அதற்குக் காரணம் மனிதர்களா? சூழ் நிலைகளா? இல்லை இரண்டுமா? சிவாவின் இரண்டாவது மனைவியான கௌரியை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொண்ட விஜி,  திடீரென்று அவளுடைய வாழ்க்கையைக் கௌரியுடன் ஒப்பிட்டுப்...

    PM : MM 27 2

    அத்தியாயம் - 27_2 இன்று காலை வரை, கல்யாணம் முடிந்த பின், அவர்கள் அனைவரும் மகேஷின் வீட்டிற்குச் செல்வதாக தான் பிளான். மகேஷின் குடும்பத்துடன் அங்கே சில மணி நேரங்கள் இருந்து விட்டு இவர்கள் நால்வர் மட்டும் இங்கே வர திட்டமிட்டு இருந்தனர்.  எந்த நேரத்திலும் பால், பழம் சடங்கு பற்றி பேச்சே எழவில்லை. அதனால்...

    PM : MM 27 1

    அத்தியாயம் - 27_1 வரவேற்பறையில் படுத்திருந்த ஜமுனாவும் உறங்கவில்லை.  புதுக் கடை, புது வீடு என்று புதுசாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் கௌரி எதற்காக இரண்டு குழந்தைகளின் தகப்பனான சிவாவை மணக்க வேண்டுமென்று யோசனையில் இறங்கினார். அதே சமயம் சமையலறையில் யோசனையில் இருந்த சாவித்திரி அம்மா ஒரு முடிவுடன் வரவேற்பறைக்கு வந்தார்.  அங்கே கண் மூடிப் படுத்திருந்த ஜமுனாவி...

    PM : MM 26 2

    அத்தியாயம் - 26_2 முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ஜமுனாவும் அவர் திட்டத்தைச் செயல்படுத்தினார்.  அதன் விளைவாக ஜமுனா, சாவித்திரி அம்மா இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பும் பகையும் அதிகமானது. கடைசி பந்தியில் மனோகரும் சாவித்திரி அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த பொருள்களைச் சேகரித்து, அந்த இடத்தை முடிந்த அளவு சுத்தப்படுத்திக்...

    PM : MM 25

    அத்தியாயம் - 25 கடல் அலைகள் கதிரவனோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த விடியற் காலை வேளையில், குழந்தைகள், பெரியவர்களின் சிரிப்பும் கூச்சலும் அலையோசையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தது.  அத்தனை ஆரவாரத்திற்கு நடுவில், மேகலாவின் மடியில், அமைதியாகக் தூங்கிக் கொண்டிருந்தாள் அனன்யா.  அவர்கள் அனைவரும் கடற்கரைக்கு வந்து ஒரு மணி நேரமாகியிருந்தது. உறக்கம் கலையாமல் தூங்கிக் கொண்டிருந்த சின்ன குழந்தைகளை...

    PM : MM 24

    அத்தியாயம் - 24 நாள்தோறும் உதிக்கும் சூரியனை வைத்துப் பொழுதுகளை, வேளைகளைத் தேதிகளாகப் பிரித்து, இயற்கையின் செயல்பாட்டை நொடிதோறும் உணர்த்தும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை மாதம், நாள், கிழமை, நட்சத்திரம், திதி என்று வரிசைப்படுத்தி நம் நினைவு அடுக்குகளில் பதித்துக் கொள்கிறோம். அந்த நினைவுகளில் ஏதாவது ஒன்று  தவறாகிப் போனால், பிறந்த நாளன்று பரிசிற்காகக் காத்திருந்து...
    error: Content is protected !!