Puthumanam : Marumanam
அத்தியாயம் - 28
ஆசை, விருப்பம். கனவுகளின் அஸ்திவாரம். நியாயமானதாக இருக்கும் வரை வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக மாற்றக்கூடியது. பேராசையாக, பெருவிருப்பமாக மாறும் போது வாழ்க்கையைச் சிதைக்கிறது. அதற்குக் காரணம் மனிதர்களா? சூழ் நிலைகளா? இல்லை இரண்டுமா?
சிவாவின் இரண்டாவது மனைவியான கௌரியை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடந்து கொண்ட விஜி, திடீரென்று அவளுடைய வாழ்க்கையைக் கௌரியுடன் ஒப்பிட்டுப்...
அத்தியாயம் - 33_1
நான்காம் நாள் காலையில், குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லும் முன், சாமி அலமாரியில் புதிதாக மாட்டியிருந்த காயத் ரியின் படத்தை வணங்கி விட்டுச் சென்றனர். அதைப் பார்த்து, கௌரியை நினைத்து ஆச்சர்யமானது சாவித்திரி அம்மாவிற்கு.
“காயத் ரியோட ஃபோட்டோ எல்லாத்தையும் சிவா தம்பி அலமாரி உள்ளே வைச்சவுடனே நிம்மதியா இருந்திச்சு..குழந்தைங்க இரண்டு பேரும்...
அத்தியாயம் - 33_2
அடுத்த நாள் காலை கரெக்ட்டாக பதினொரு மணிக்கு சிவாவின் வீட்டிற்கு வந்தார் சாந்தி. வாசலில், அழைப்பு மணி ஒலித்தவுடன், சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, ஓடிப் போய் மானிட்டரைப் பார்த்து,” அத்தை.” என்று கத்தினாள்.
அவள் கத்தலைக் கேட்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்த கௌரி, டீ ஷர்ட், பேண்ட் அணிந்திருந்தாள். ...
அத்தியாயம் - 35_2
“நம்ம வீட்டு ஆளுங்களுக்குக் கௌரியை அறிமுகம் செய்து வை.” என்று மனைவிக்குக் கட்டளையிட்டார் ராஜேந்திரன்.
உடனே கௌரியை அவருடைய புகுந்த வீட்டு உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சாந்தி. சின்னவள் சூர்யா கௌரியுடனேயே இருக்க, பெரியவள் தீபா, மேக்னாவோடு சுற்றிக் கொண்டிருந்தாள். ஜமுனாவும் விஜியும் நகமும் சதையும் போல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். விஜியின்...
அத்தியாயம் - 12
அவினாஷ் சொன்னது நிஜமானது. இருளைப் பிளந்து கொண்டு விடியல் வெளியே வந்த நானோ நொடி காட்சிகளுக்கு சாட்சியானவன், இதுபோல் இனியொரு தூங்கா இரவையும் விடியலையும் அவனால் கையாள முடியாது என்று உணர்ந்து, அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் மனதோடு ஒரு தீர்மானத்திற்கு வந்தான் சிவா. அதன் பின் அன்று காலை அவனே குழந்தைகளைப்...
அத்தியாயம் - 27_1
வரவேற்பறையில் படுத்திருந்த ஜமுனாவும் உறங்கவில்லை. புதுக் கடை, புது வீடு என்று புதுசாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் கௌரி எதற்காக இரண்டு குழந்தைகளின் தகப்பனான சிவாவை மணக்க வேண்டுமென்று யோசனையில் இறங்கினார்.
அதே சமயம் சமையலறையில் யோசனையில் இருந்த சாவித்திரி அம்மா ஒரு முடிவுடன் வரவேற்பறைக்கு வந்தார். அங்கே கண் மூடிப் படுத்திருந்த ஜமுனாவி...
அத்தியாயம் - 38_2
அன்று மாலை சாவித்திரி அம்மா கொடுத்த டீ, டிஃபன் இரண்டையும் மறுத்து விட்டார் ஜமுனா. வெங்கடாசலம் எத்தனை முறை கெஞ்சியும் ஜமுனா மசியவில்லை. இரவு உணவை இரண்டு முறை சாப்பிடுபவருக்கு டிஃபனைத் தியாகம் செய்ய மனம் வரவில்லை. அதனால் அவருக்குக் கொடுத்த டீ, டிஃபன் இரண்டையும் மறுக்காமல் சாப்பிட்டார் வெங்கடாசலம். மதியம்...
அத்தியாயம் - 30_1
மனமாற்றம். காலம், நேரம் மாறுவது போல் மனமாற்றத்தையும் இயற்கை நிகழ்வாக எடுத்துக் கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தாமல், தடைச் செய்யாமல் இருந்தால், ஒரே இடத்தில் அடைப்பட்டுக் கிடக்கும் உணர்வுகள், சிறைப்பட்டுக் கிடக்கும் சிந்தனைகள், விடுதலை பெற்று, எல்லைகளைக் கடந்து, காலத்தால் அழியாதச் சாதனைகளைப் படைத்து, புதியதோர் உலகத்தை உருவாக்க முடியும்.
எப்போதும் மாறிக்...
அத்தியாயம் - 39_2
அப்பா, பெரிய மகளின் பேச்சில் கலந்து கொள்ளாமல், சூர்யாவை எழுப்பும் முயற்சியில் இறங்கினாள் கௌரி. அவள் லேசில் விழிப்பதாக இல்லை. அதனால், அவளைப் பாத் ரூமிற்கு அழைத்துச் சென்று முகத்தைக் கழுவி விழிப்பு நிலைக்குக் கொண்டு வந்தாள். பாத் ரூமிலிருந்து வந்தவுடன், மறுபடியும் தூங்க வேண்டுமென்று சிணுங்கியவளை, கௌரி அதட்ட, பெரிதாக...
புதுமணம் : மறுமணம்
அத்தியாயம் - 1
“வயிறு வலிக்குது.” என்றது வலியுடன் ஒரு குரல்.
“இப்படி உட்காரு..கொஞ்சம் முன்னாடி வா..” என்று இரண்டாவது குரல் கட்டளையிட,
“விழுந்திடுவேன்.” என்றது முதல் குரல்.
“என்னைப் பிடிச்சுக்கோ.” என்றது இரண்டாவது குரல்.
சிறிது மௌனத்துக்குப் பிறகு,
“போயிட்டேன்.” என்றது சிறிது நிம்மதியுடன் முதல் குரல்.
“தண்ணீர் ஊத்தறேன்.” என்றது இரண்டாவது குரல். சில நொடிகள் கழித்து,
“ஜட்டி ஈரமாயிடுச்சு.”...
அத்தியாயம் - 24
நாள்தோறும் உதிக்கும் சூரியனை வைத்துப் பொழுதுகளை, வேளைகளைத் தேதிகளாகப் பிரித்து, இயற்கையின் செயல்பாட்டை நொடிதோறும் உணர்த்தும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை மாதம், நாள், கிழமை, நட்சத்திரம், திதி என்று வரிசைப்படுத்தி நம் நினைவு அடுக்குகளில் பதித்துக் கொள்கிறோம். அந்த நினைவுகளில் ஏதாவது ஒன்று தவறாகிப் போனால், பிறந்த நாளன்று பரிசிற்காகக் காத்திருந்து...
அத்தியாயம் - 3_1
“ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன்..முகூர்த்தம் சரியான டயத்துக்கு நடந்திச்சு ஆனா முகூர்த்தச் சாப்பாடுதான் லேட்டாயிடுச்சு..இன்னைக்கு நான் உங்களைக் காக்க வைச்சிட்டேன்..ஸாரி” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த கௌரி பச்சை நிறப் பட்டுப் புடவையில் இருந்தாள். காதில் ஜிமிக்கி, கழுத்தில் கனமானத் தங்கச் சங்கிலி, கைகளில் தங்க வளையல்கள், தலையைப் பின்னி மல்லிகைப் பூ...
சிவாவிற்கும் அவன் அம்மாவிற்கும் நடுவே நடந்து கொண்டிருந்த யுத்தத்திலிருந்து விலகியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மகேஷிற்கு. திடீர் திடீரென்று விஜிக்கு இரத்தக் கொதிப்பு பிரச்சனை ஏற்பட்டதால் ஆஸ்பத்திரி, மருத்தவர் என்று மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான் மகேஷ். கல்யாணத்திற்குச் சில நாள்களுக்கு முன் விஜியை இரண்டு நாள்களுக்கு மருத்துவமனையில் கண்காணிக்க வேண்டிய சூழ் நிலை...
அத்தியாயம் - 35_1
அந்த விடியற் காலை வேளையில், வெளிச்சம் வர இன்னும் சில நிமிடங்கள் இருக்க, சாந்தியின் புது வீட்டின் கிருஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீபா, சூர்யாவுடன் வந்தனர் சிவாவும் கௌரியும். கடந்த இரண்டு நாள்களாக, சிவாவுடன் பேசி, சாந்தியின் வீட்டிற்கு எப்போது வரப் போகிறான், என்ன சீர் செய்யப் போகிறான் என்று...
அத்தியாயம் - 3_2
காயத்ரி என்னைப் போல குடும்பப் பின்னணிலேர்ந்து வந்ததுனாலே என்னோட அப்படியே செட்டாகிட்டா..என் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி நாங்க சில சமயம் வாழ்க்கையை நடத்தினோம் சில சமயம் மாற்றிக்கிட்டோம்.. காசை எப்படிக் காப்பாத்தனும், எப்படிச் செலவழிக்கணும்னு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கலே..
இப்போ அவ இல்லைன்னாலும் அது எதுவும் மாறலை.. என்னோட இரண்டு குழந்தைகளை...
அத்தியாயம் - 16
நேரம் காலம் பார்க்காமல், உயர்வு தாழ்வை பொருட்படுத்தாமல் அன்பையும் காதலையும் பலமுறை, பல விதங்களில் வெளிப்படுத்துவதால் தான் அது அழிவேயில்லாமல் காலம் காலமாய் இந்த அவணியில் பல பரிமாணங்களில் வலம் வருகிறது. அதிகமாக வெளிபடுத்தப் படாத காதலும் அன்பும் சந்தேகத்தை, சஞ்சலத்தைக் கிளப்புகிறது. அது பலமுறை வெளிப்படும் போது ஒவ்வொரு முறையும்...
அத்தியாயம் - 11_2
“ஆமாம்..இரண்டு முறை போனேன்..பூட்டி இருந்திச்சு..கார், ஸ்கூட்டி, இரண்டும் பார்க்கிங்லே இல்லை..சுப்ரமணி ஸர் வீட்டுக்குப் போய் விசாரிச்சேன்..அவங்க மனைவி சொன்னாங்க இந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு மேகலாவோட மக வீட்டுக்குப் பூனாக்கு போகப் போறாண்ணு.” என்று சொன்னவன் குரலில் ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டு கொண்டான் அவினாஷ்.
“ஆமாம்..இனி பூனா தான்..அந்த வீட்டை வாடகைக்கு...
அத்தியாயம் - 17
“ரியலி.” என்றாள் திரையில் தெரிந்த மாலினி.
அவினாஷும் நித்யாவும் சற்றுமுன் தான் கௌரியின் கல்யாண விஷயத்தை மாலினிக்குத் தெரியப்படுத்தியிருந்தனர். அதைக் கேட்டு அந்தப் புறம் திரையில் தெரிந்த நான்கு பேரில் மூன்று முகங்களில் சந்தோஷம். மாலினியின் முகத்தில் மட்டும் தீவிர சிந்தனை.
சிவாவிற்கு அடுத்து தீபா அமர்ந்திருக்க அவளருகே அமர்ந்திருந்த கௌரியின் மடியில் இருந்த...
அத்தியாயம் - 21
அம்மா என்றால் என்ன? பாசம் பொழியும் பாட்டியிடம் அம்மாவைப் பார்க்கும் பேரன்கள். கொஞ்சும் மழலையில் பேசும் பேத்தியிடம் அம்மாவைக் காணும் தாத்தாக்கள். அதட்டி உருட்டும் அக்காவிடம் அம்மாவைப் பார்க்கும் தம்பிகள். அன்பைக் காட்டும் தங்கையிடம் அன்னையைக் காணும் அண்ணன்கள். மலர்க் கண்களை விரித்து அப்பா என்று அழைக்கும் மகளிடம் தாயைப் பார்க்கும்...
அத்தியாயம் - 26_2
முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ஜமுனாவும் அவர் திட்டத்தைச் செயல்படுத்தினார். அதன் விளைவாக ஜமுனா, சாவித்திரி அம்மா இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பும் பகையும் அதிகமானது. கடைசி பந்தியில் மனோகரும் சாவித்திரி அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த பொருள்களைச் சேகரித்து, அந்த இடத்தை முடிந்த அளவு சுத்தப்படுத்திக்...