Saturday, April 27, 2024

    'மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!'

    சமையல் அறையில் செந்தமிழினி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, பூனை நடை நடந்து உள்ளே வந்த அத்வைத், அவளைப் பின்னால் இருந்து அணைத்தபடி கன்னத்தில் முத்தமிட்டு, “குட் மார்னிங் பொண்டாட்டி.. இங்க என்ன செய்துட்டு இருக்கிற?” என்று கேட்டான். புன்னகையுடன், “இந்த கன்னம்!” என்றபடி மறு கன்னத்தையும் காட்டினாள். விரிந்த புன்னகையுடன் மறு கன்னத்திலும் முத்தமிட்டவன், “என்ன இது!...
    இரவு ஏழு மணிக்கு அத்வைத் மற்றும் செந்தமிழினி அவர்கள் தங்க இருக்கும் உல்லாச விடுதிக்கு வந்தனர். சிறு சிறு குன்றுகளின் மீது ஒவ்வொரு குடிலும் மற்றவரின் தனிமையை கெடுக்காத வகையில் அமைந்து இருந்தது. இவர்களின் குடில் மற்ற குடில்களை விட சற்று உயரத்தில் வண்ணப்பூக்களின் நடுவே, அழகாக அமைந்து இருந்தது. ஓட்டுக் கூரையின் மீது வித்யாசமான...
    வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்த அத்வைத்திடம் துருவ், “அன்னைக்கு ரெஸ்டாரென்ட்டில் சொன்னதை தமிழ் நிஜமாவே செஞ்சி விடுவாளோடா!” என்று சிறு கலவரத்துடன் கேட்டான். அத்வைத் புரியாமல் பார்க்க, துருவ், “இல்லை.. முதல் இரவில் உனக்கே இந்த நிலைமைனா.. அதான்..” என்று இழுத்து நிறுத்த, அத்வைத் கொலை வெறியுடன் அவனை முறைக்கவும், “ஆல் தி பெஸ்ட்டா.” என்ற படி, ஓடி...
    மரகதம், “வீட்டில் ஏன் சொல்லலை?” என்று கேட்டார். “யதுவை நல்லபடியா பெத்துத் தரத்துக்கு அவ போட்ட கண்டிஷன் டைவர்ஸ் தான்.. அப்போ எனக்கு அவளோட காதலை பத்தி தெரியாததால, அவ மனசை மாத்திரலாம்னு நினைத்து சரி சொன்னேன்.. வீட்டில் யாருக்கும் தெரியாது.. அப்புறம் அவ காதலனோட உதவியில் வீட்டில் யாருக்கும் தெரியாம டைவர்ஸ் அப்ளை செய்து,...
    அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஏழு வருஷம்! உங்க நினைப்பிலேயே, நான் இங்கே உருகிட்டு இருக்க.. நீங்க ஈசியா என்னைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டீங்க இல்ல! உங்களை எங்கே தேட, எப்படி தேடனு தெரியாம எவ்ளோ தவிச்சேன் தெரியுமா! உங்களுக்கு கல்யாணம்னு தெரிந்ததும் எவ்ளோ துடி துடிச்சேன் தெரியுமா! அப்போ கூட ‘நான் உங்களை காதலிச்சா நீங்களும்...
    அத்வைத்தின் சத்தத்தில் யாதவுடன் வெளியே வந்த தமிழ், “அப்படியே கீழ போடுங்க அத்தான்.. வரப் போற நம்ம கல்யாணத்தை பத்தி சொல்லாம, இந்த தடிமாட்டு தாண்டவராயனுக்கு பொண்ணு பார்க்கணும்னு கவலைப் படுறாங்க” என்றாள். ‘நான் என்னடி செய்தேன்!’ என்பது போல் அருள்மொழி தங்கையை பாவமாகப் பார்க்க, கீழே இறங்கி இருந்த மரகதம், “அண்ணன்னு மரியாதை இல்லாம பேசின!...
    இதே நேரத்தில் வெளியே வீட்டின் வாயிலில் அருள்மொழி அத்வைத்தைப் பார்த்து, “ரொம்ப முறைக்காதடா.. அம்மாவை சமாதானம் செஞ்சு, நல்ல செய்தியோடு உன்னை வந்து பார்க்கலாம்னு நினைத்தேன்.” என்றான். “நீங்கள்ளாம் பெரிய ஆள்.. எங்களை மாதிரியா!” “டேய்.. நான் தான் சொல்றேனே!” “பேசாதடா.. சென்னை வந்திருக்கிறேன்னு ஒரு போன் கூட செய்ய முடியலை.” என்றவன், “துருவுக்கு போன் போட முடியுது.....
    நான்கு சக்கர வண்டியின் முன் பக்கம் கைகளை கட்டியபடி, முறைப்புடன் செந்தமிழினி அமர்ந்து இருக்க, புன்னகையுடன் அத்வைத் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். செந்தமிழினி கோபத்துடன், “இப்போ எங்க போறோம்னு சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று கேட்க, அத்வைத் புன்னகையுடன் கண்ணடித்தபடி, “உன்னை கடத்திட்டுப் போறேன்” என்றான். முறைப்புடன், “நிஜமாவே அதைத் தான் செய்துட்டு இருக்கிறீங்க” என்றாள். “நானும் அதைத் தானே...
    அனைவரின் மனமும் சற்றே நெகிழ்ந்த நிலையில் இருக்க, பேரன் ஊட்டிவிட ஆறுமுகம் உண்டார். சில வாய் உணவை வாங்கிய பின் அவர், “போதும் சாமி.. நீங்க சாப்பிடுங்க” என்றார் கரகரத்த குரலில். குழந்தை தட்டை காட்டி, “சப்பாத்தி இல்லையே!” என்றான். “இதோ தாத்தா தரேன்” என்றவர் தனது தட்டில் இருந்து ஊட்ட, அவன், “அம்மா யது பிக் பாய்..” என்று...
    அறை வாயிலுக்கு முதுகு காட்டி தரையில் ஒற்றை காலில் முட்டி போட்டு அமர்ந்தபடி கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுச் சாமான்களை எடுத்துக் கொண்டிருந்த செந்தமிழினி, “யது கண்ணா எப்போதுமே விளையாடி முடிச்சிட்டு, டாய்ஸ் எடுத்து வச்சிரணும்.. வாங்க.. வந்து, எடுத்து வைக்க. அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்றாள். யாதவ் அவள் அருகே வரவில்லையே என்ற நினைப்புடன்...
    சில நொடிகள் அணைத்தபடி அமைதியாக இருந்தவள் பின், “யது கண்ணா, அம்மா சொன்னா கேட்பீங்க தானே!” என்றாள். குழந்தை அவளை அணைத்தபடியே, “ஹ்ம்ம்” என்றான். “முகத்தை மட்டும் நிமிர்த்தி, அம்மாவைப் பாருங்க” என்றாள். குழந்தை அவ்வாறே செய்யவும் அவன் நெற்றியில் முத்தமிட்டவள், “நல்லா கவனீங்க.. அம்மாவையும் யது கண்ணாவையும் யாருமே பிரிக்க முடியாது.. அம்மா அதுக்கு விடவே மாட்டேன்.”...
    அடுத்த நாள் காலையில் செந்தமிழினி கண் விழித்ததும் கண்டது, தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த அருள்மொழியைத் தான். உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்த படி, “டேய் அண்ணா!” என்றாள். அவளைப் பார்த்து புன்னகைத்தாலும் வருத்தமான குரலில், “சாரிடா..” என்று ஆரம்பிக்க, அவனது பேச்சை இடையிட்டு, “காலையிலேயே வயலின் வாசிக்காதடா” என்றவள், “இது பாட்டெடு கொண்டாடு மொமென்ட்” என்றாள். எழுந்து சென்று, கைபேசியை ஒலி...
    அத்வைத், “சொல்லுடா” என்றதும், அமைதியான குரலில் அனைத்தையும் சொல்லி முடித்தவன், “ஒழுங்கு மரியாதையா என்னோட தங்கச்சியை சரி செய்ற!” என்றான். “என்னோட மனைவியை சரி செய்ய நீ சொல்லணும்னு இல்லை, மச்சான்.” என்றவன் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து இருந்தான். செந்தமிழினியை கைபேசியில் அழைத்த அத்வைத்,  அவள் அழைப்பை எடுத்தும், “என்னாச்சுடா?” என்றான். “அருள் பேசினானா?” “ஹ்ம்ம்.. ஏன்டா..”...
    இரண்டு ஒலித்தத்தையும் கேட்ட அருள் மொழியின் மனதில் முதலில் தோன்றியது, பிரம்மிப்பும் பெருமையும் தான். அதன் பிறகே ‘இதை எப்படி தாய் தந்தையிடம் புரிய வைக்கப் போகிறோம்.’ என்று மனதினுள் அலறினான். ஒருவாறு திடத்தை வரவழைத்துக் கொண்டு இரண்டு ஒலித்தத்தையும் புலனம் மூலம் தந்தைக்கு அனுப்பி விட்டு அழைத்தான். அப்பொழுது தான் செந்தமிழினி அத்வைத் கல்யாணத்தை பற்றி...
    மங்களம், “அதையும் மீறி கல்யாணம் நடந்துட்டாலும்.. நாம சொல்லிட்டே இருந்தா, குழந்தை மனசில் ஒரு விரிசல் விழும்.. அதைப் பெருசாக்கி அவளை வெறுக்கிற மாதிரி செய்து, நம்ம கைக்குள்ள போட்டுட்டாப் போதும்” என்றார் “ப்ச்.. கல்யாணமே முடிஞ்சிருச்சுனா, அதுக்கு அப்புறம் அவங்க எக்கேடோ கெட்டுப் போனா நமக்கு என்ன?” “அது எப்படி என்னை மீறி அவங்க சந்தோஷமா...
    யாதவ், “நாம பஸ்ட்ல இருந்து சேர்ந்து பார்ப்போமா?” என்று கேட்டான். அவள், “இன்னொரு நாள் முதல்ல இருந்து பார்க்கலாம்.. இப்போ, கிளைமாக்ஸ்  மட்டும் பார்ப்போம்.. ஓகே.” “ஓகே” இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தனர். அவள் படத்தின் காட்சிகளை பற்றி சிரித்துப் பேசிய படி  பார்க்க, குழந்தை  அதை வெகுவாக ரசித்து மகிழ்ந்தான். இதுவரை யாரும் அவனுடன்  இப்படி...
    வேணுகோபால், “என்னமா! அவங்க போனதில் இருந்து யோசிச்சிட்டே இருக்க? இதுவரை நீ இப்படி இருந்தது இல்லையே!” என்று மரகதத்தைப் பார்த்து கேட்டார். கணவரைப் பார்த்த மரகதம், “இதில் யோசிக்க வேண்டியது நிறைய இருக்குதே!” என்றார். “பொண்ணு கொடுக்கிறதா இருந்தாத் தானே நிறைய யோசிக்கனும்!” என்று அவர் கூற, மரகதம் சிறு ஆச்சரியத்துடன் பார்த்தார். வேணுகோபால், “ஒருமுறை செய்த தப்பை நான்...
    அம்பிக்கா  கோபத்துடன், “என்ன  இல்லை! அதான் எங்க உறவே வேணாம்னு முடிவு செய்து விட்டீங்களே!” என்றவர் அப்பொழுது அங்கே வந்த ஆறுமுகத்தைப் பார்த்து முறைத்தார். சரோஜினி, “அய்யோ! அப்படி எல்லாம் இல்லை மச்சினி” என்று பதற, அம்பிகா அண்ணனையும் அண்ணன் மனைவியையும் முறைத்தபடி, “இனி எங்க உறவு தேவை இல்லைன்னு முடிவு செய்து தானே வெளியே பொண்ணு...
    அருள்மொழியை அழைத்த செந்தமிழினி அவன் அழைப்பை எடுத்ததும், “அண்ணனாடா நீ? அத்தான் விஷயத்தைத் தவிர வேற எதையாவது உன் கிட்ட மறைச்சு இருப்பேனா! அது கூட நீ நேரிடையா கேட்டு இருந்தா சொல்லி இருப்பேன்.. ஆனா நீ! நான் எவ்ளோ முறை கேட்டேன்! பெரிய அன்னை சொல் தட்டாத தவப்புதல்வன் இவரு..” என்று ஆரம்பித்து...
    மரகதம் கணவரிடம், “இன்னைக்கு மாமா நம்ம கூட இல்லைனா, அதுக்கு இவங்க பேசின அந்தப் பேச்சு தானே காரணம்! கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, மாமா இறந்ததைச் சொன்னப்பவும், திரும்பவும் இப்படித் தானே பேசினாங்க.. போதாதுக்கு மாமா இறந்ததுக்கு மச்சினியை அனுப்பக் கூட இல்லையே! இப்படி ஒரு வாய்ப்பு, எனக்குக் கிடைக்கும்னு நான் நினைக்கவே...
    error: Content is protected !!