Friday, April 26, 2024

    Anbum Arivum Udaithaayin

    கூடவே, மனதில் 'நாளைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாளா இருக்கு, ஸ்டோர் வீட்டுக்கு போயி விளக்கேத்திட்டு வரலாமா?', என்று கமலம்மா கேட்டது ஓடியது. அது விளக்கேற்றுவது மட்டுமல்ல குடிபோவது என்பது புரிந்து மெளனமாக இருந்தாள். வீட்டின் லேண்ட் லைனில் அழைப்பு வந்தது, சுசித்ரா எடுத்து, "ஹலோ", என்றாள். "..." "சொல்லுங்க மாமா" "..." "சரி மாமா, தோ இப்போவே போயி எடுத்து வைக்கறேன்,...
    அத்தியாயம் 19 காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு பாவனை. அமைதியாக காரில் அமர்ந்தவளுக்கு பேச ஏதுமில்லை. 'என்னை போ வென்று சொல்லிவிட்டானே? அப்போது நான் அவனுக்கு தேவையில்லாதவளா? இப்போது சில...
    "ம்ம். போட்டுட்டு கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதானே?", என்று வார்த்தைகளை விட்டவன், காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான். கதவின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை கழுவி பின், அறிவழகியை நோக்கி கைநீட்ட, அவள் திரு திருவென விழித்தாள். அவன் இவள் மடியிலிருந்த பார்சலைப் பார்க்க, "ஓஹ். சாரி மறந்துட்டேன்", என்று அவசரமாக பிரித்து...
    அத்தியாயம் 18 இறை தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியேறி அனைவரும் காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்பொழுதும் ஆகாஷே அன்பரசனின் அருகே அமர்ந்தான். சிறிது நேரத்தில் சுசித்ராவிடமிருந்து  போன் வந்தது. "மாமா, ஆஷி தூங்கிட்டானா? பசங்க தொந்தரவு பண்றாங்களா?", என்று கேட்டாள். "அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜாலியா பாட்டுப் பாடிட்டு வந்தாங்க" "புடவை குடுத்துட்டீங்களா?" "ம்ம். கொடுத்தாச்சு. இப்போ வீட்டுக்கு...
    அத்தியாயம் 17 அனைவரும் சரியென்றால் போதுமா? அன்பரசனின் எண்ணம் என்னவோ? அவனது துளைத்தெடுக்கும் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றுகிறதே தவிர அவன் மனவோட்டம் என்ன என்று அறிவழகியால் கிஞ்சித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தயாராகி வருகிறேன் எனறு மாடிக்கு சென்றவன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவான், இந்த ஸ்ரீஜா பிரச்சனையை வேறு இருக்கிறது, என்ன...
    அத்தியாயம் 17 2 ப்ரவீனாவின் வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. ஸ்ரீஜா குடும்பத்தின் சச்சரவு கொஞ்ச நேரத்தில் ப்ரவீணா கணவன் மற்றும் மாமனார் மாமியார் வருகையில் சரியாகிவிட, விழா பரபரப்பு, அதன் உற்சாகம் அனைவரையும் தொற்றியது. வந்திருந்த சொந்தங்களில் அநேகருக்கு அறிவழகியைப் பற்றி தெரியுமாதலால் எதுவும் சொல்லவில்லை, தவிரவும், காலையில் அனைவரும் கூடத்தில் குழுமி இருந்தபோது...
    "வந்து இன்னொரு விஷயம்... கமலா அத்தை அவங்க ப்ராப்பர்டியை மருமகளுக்கு எழுதி வைக்கப் போறாங்களா என்ன?" "என்னது? அப்படிலாம் ஏதுமில்லையே? உனக்கு யார் சொன்னா அப்படி எந்த ஏற்பாடும் நான் பண்ணலையே?", என்று கண்ணன் பதிலளித்தான். "இல்ல, இங்க அந்த அரேன்ஞ்மென்ட் பண்ணிருக்காங்க, அத்தை அநேகமா மதியம் வருவாங்கன்னு நினைக்கறேன்" "சே சே, சித்தப்பாக்கு தெரியாம...?", கண்ணன் குழப்ப...
    அத்தியாயம் 16 அன்பரசனின் பாறை போல இறுகிப் போன முகத்தைப் பார்த்த அறிவழகிக்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது. கூடவே அவனின் ஏளனம் போல வந்து போன ஒரு அடங்கிய சிரிப்பு, ஏனென்று புரியாவிட்டாலும் அறிவழகியின் இதயத் துடிப்பை பல மடங்கு அதிகரிக்க செய்தது. அடுத்து அன்பரசனின் பார்வை, அறிவழகிக்கு அருகே திகைப்புடன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த,...
    "இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல 'என்னால கேவலப்பட முடியாது'ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க", என்று குரல் கமற எஸ்தர் கூற.. அவரை இழுத்து அருகில் அமர வைத்து, "தரு, நான் எப்படா அவளை விட்டுத்தா -ன்னு சொன்னேன்? கொஞ்சம்...
    அத்தியாயம் 15 "அவதான் சொல்றான்னா உனக்கெங்க போச்சு அறிவு?, யார் சொன்னாலும் போய் கையெழுத்து போட போவாளா?", அடிக் குரலில் சுதர்ஷன் தருவுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். சரியாக சொல்வதென்றால், மனைவியை திட்டிக் கொண்டிருந்தான். "இல்லங்க, கண்ணன் தெரிஞ்சவர்தான், கூடவே கமலம்மாவும் போன்ல பேசினாங்க" "எப்படி இவளை காண்டாக்ட் பண்ணுனாங்க? இவ நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்?.." "அது.. பிரவீனாக்கு...
    அத்தியாயம் 14 1 அலைபேசியில் நேரம் பார்த்து இந்தியாவில் காலை ஐந்து மணி சுமார் இருக்கும் என நினைத்தவள், திரை பார்க்க அது மூர்த்தி ஆபிஸ் என்று உமிழ்ந்தது.  பார்த்தவள் எடுக்காமல் விட்டு விட்டாள், ஆமாம் யாரென்று அவளை அறிமுகப்படுத்திக் கொள்வாள்?, 'வீட்டுக்கு உன்னைப் பற்றி எதுவும் கூறாமல் வந்தேன்', என்று அவன் கூறியது வேறு...
    அத்தியாயம் 14 2 வீட்டுக்கு சென்ற அறிவழகி நேராக சமையலறைக்குள் சென்று ஒரு அலமாரியை திறந்தாள். ஒற்றை ஊதுபத்தி ஸ்டாண்ட், சிறியதாக இரண்டு வெள்ளி விளக்குகள், காஞ்சி பெரியவர் வணங்கியபடி இருக்கும் காமாட்சியம்மன் படம் அலமாரியின் நடுவே இருந்தது. கூடவே எண்ணெய், திரிநூல்கண்டு, சந்தனப்பொடி, குங்குமம், திருநீறு டப்பாக்கள் இருந்தது. அதீத கடவுள் நம்பிக்கையும், சடங்குகளும் அவளுக்கு...
    டீயை குடித்துக் கொண்டே, "லாக் டவுன் போய்ட்டு இருக்கு, பாசிட்டிவ் கேஸசும் அதிகமாயிட்டே இருக்கு. இன்னுமொரு எக்ஸ்டென்சன் பண்ணுவாங்கனு தோணுது. ஹ்ம்ம். லோயர் & மிடில் கிளாஸ் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரில. எங்க தமிழ்நாட்ல அம்மா மெஸ் இருக்கு, சோ சாப்பாட்டுக்கு பிரச்னையில்லாம எதோ போகுது, மத்த ஸ்டேட் மக்கள நினைச்சா... " "ம்ம்....
    அத்தியாயம் 13 வாசலில் காலிங் பெல் கேட்டு, கதவருகே சென்று ஸ்பை ஹோல் வழியாக, வந்திருந்தது யார் என பார்த்தாள். சுதர்ஷன் நின்றிருந்தான். கதவை திறந்து நொடி, "பியூட்டிமா", என்று சுதர்ஷனின் கையிலிருந்த பேசியின்  பேஸ்டைம் வீடியோ காலில் அக்ஷி சிரித்தாள். அறிவழகி "ஹே.. அக்ஷி..." என்று சிரித்து சுதாவின் மொபைலை வாங்கிக்கொண்டு பேசி, "வா...
    "இன்னமும் மிஸ்ஸர்ஸ். அன்பரசனா இருக்கறதுகூட உன்னோட தனிப்பட்ட விஷயம்தானா?", கேள்வி எறிந்தான். "ஆமா, ஆசைப்பட்டு இல்ல, மாத்த முடியாதுங்கிற கட்டாயத்தினால கூட அப்படி இருக்கலாமில்லயா?" "அப்டின்னா?" கண்மூடி பெருமூச்சோடு, "ஹும். என்னோட பாஸ்போர்ட் உள்பட எல்லா ஐ டி லையும் நான் மிஸ்ஸர்ஸ் அன்பரசனாத்தான் இருக்கேன், மாத்தணும்னா ப்ரூஃப் வேணும், எங்கிட்ட அது இல்ல." "ஓஹ்", என்று நிதானித்து, "கட்டாயத்துனால...
    அத்தியாயம் 12 அன்பரசன் "சோ, நாம ...", பேசிக்கொண்டே எழ நினைத்தவனால் முடியவில்லை. அவனது கண்ணிமைகள் பாரமாக இருக்க, முயன்று கண்களை திறந்தான். எதிரே இருந்த அறிவழகி எங்கே? இதென்ன? நான் படுத்துக்கொண்டு இருக்கிறேன்? டைனிங் டேபிளில் சாப்பிட்டபடி அல்லவா பேசினோம் இருவரும்? இல்லை, இது படுக்கையறை. சே, கனவு. இத்தனை நேரம் அவளுடன் பேசியது...
    அத்தியாயம் 11 1 அறிவழகிக்கு அலுவலகத்தில் நுழையும்போதே, மார்டினஸ்-ன் ஞாபகம் வந்தது. 'ஐயோ, வீட்ல இருக்கிற இம்சை போதாதுன்னு இவன் வேற குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேப்பானே?',  என்று பெருமூச்சு விட்டாள். டிமோத்தி மார்டினஸ், உடன் பணி புரிபவன், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், இவளை டேட்டிங்-க்கிற்கு அழைக்க, தான் திருமணமானவள் தவிரவும் தனக்கு அதில்...
    "அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சேஃபா சீக்கிரமா குட்டி பாப்பாவோட வீட்டுக்கு வர பாரு." "நீ வேணா பாரேன், நிச்சயமா ரெண்டே நாள்ல வந்துடுவேன்", சிரித்தபடி காரில் ஏறும் தோழியைப் பார்த்தாள். போனமுறை அக்ஷி பிறப்பதற்கு டெலிவரிக்கு செல்லும் முன் எத்தனை அழுகை?. ம்ம். பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பலம் அல்லது பெரியவர்களின் ஆசி,...
    ரெக்லைனரில் படுத்திருந்த அறிவழகி, டேபிளில் இருந்த அன்பரசனின் பேசியிலிருந்து பார்வையை திருப்பி, மணி பார்த்தாள். அதிகாலை நான்கு இருபது என்று சுவர்கடிகாரம் காட்டியது. அது இந்தியாவில் நன்பகல் நேரம், அழைப்பை அசட்டை செய்து திரும்பி படுத்து விட்டாள். ஜெட் லாக்-கிலும், நேற்றைய மனக் குழப்பத்திலும் உறங்கியும் உறங்காமல் படுக்கை அறையில் இருந்த அன்பரசன்,  அவனது பேசியின்...
    அத்தியாயம் 9 1 கூடத்தில் சோஃபாவைச் சாய்த்து படுக்கையாக நீட்டி, அதில் படுத்திருந்த அறிவழகியின், மனம் அவளையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. 'அவன் சாதாரணமாகத்தான் தாழ் குறித்துக் கேட்டான், ஏன் நான் வசமிழந்தேன்? ஏன் கோபம் வந்தது?',  'யார் என்ன பேசினாலும், எது வரினும், உணர்ச்சி வசப்படக் கூடாது என்ற என் தீர்மானம் எங்கே போயிற்று?',...
    error: Content is protected !!