Advertisement

அத்தியாயம் – 40
கௌரியும் சிவாவும் பக்கத்து கட்டிலில் படுத்துறங்கி கொண்டிருந்தது தூக்க கலக்கத்தில் விழித்துக் கொண்ட சூர்யாவின் கண்களுக்குத் தெரியவில்லை. அவளுக்கு அவசரமாக பாத் ரூம் போக வேண்டியிருந்தது. பரிச்சயமில்லாத ஹோட்டல் அறை பயத்தைக் கொடுக்க,”அம்மா” என்று சத்தம் போட்டாள் சூர்யா.
அந்தக் கூச்சலில் பதறியடித்துக் கொண்டு எழுந்து கௌரி, சூர்யாவிடம் வந்த போது, மேல் சட்டை மட்டும் அணிந்திருந்தாள். அதுகூட இல்லாதவன் போர்வைக்குள் அடங்கிக் கொண்டான்.
“என்ன டா?” என்று விசாரித்த கௌரியிடம்,”பாத் ரூம்.” என்று இரு கைகளையும் நீட்டி, தூக்கிச் செல்லக் கட்டளையிட்டாள். கிடுகிடுவென்று சூர்யாவின் ஜட்டியை அவிழ்த்து, ஒரே ஓட்டமாக, ஹோட்டலின் படுக்கை ஈரமாகும் முன், அவளைப் பாத் ரூமில் சேர்ப்பித்தாள் கௌரி.  
பாத் ரூம் வெளிச்சத்தில் அவளைச் சூர்யா உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கௌரி கவனிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவளைப் படுக்கையில் கொண்டு விட்ட கௌரியிடம், அவள் ஜட்டியை அணிந்தபடி”நீங்க போகலையா?” என்று கேட்டாள் சூர்யா.
இந்த நேரத்தில் எங்கே போகவில்லையா என்று கேட்கிறாள்? அவள் கேட்டது புரியாமல்,”எங்கே?” என்று கேட்டாள் கௌரி.
“பாத் ரூம்.” என்று சொன்னதோடு நிறுத்தாமல், “பேண்ட் காணோம்.” என்று சூர்யா சுட்டிக் காட்டியவுடன் தான், தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டவளுக்கு ‘ஐயோ’ என்றானது. அதைக் கேட்டு அடுத்த கட்டிலில் போர்த்திப் படுத்திருந்த சிவா, லேசாக சிரித்தது, கௌரிக்கு நன்றாக கேட்க,”அது காணாமப் போகலை..இங்கே தான் இருக்கும்..பாத் ரூம் போகத்தான் அவிழ்தேன்.” என்று பொய் சொன்னவள், அதை மெய்ப்பிக்கும் பொருட்டு பாத் ரூம் போய் வந்தாள்.  
அதன் பின் பத்து நிமிடம் போல் சூர்யாவுடன் இருந்தவள், அவள் மறுபடியும் தூங்கி விட்டாள் என்று உறுதியானவுடன், விளக்கைப் போடாமல், இருட்டில் வட்ட மேஜை நோக்கிச் சென்றாள்.  அங்கே சிவாவிற்காக ஆர்டர் செய்திருந்த பாராட்டாவைத் தட்டில் போட்டுக் கொண்டு, அங்கேயே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.  மலபார் பரோட்டா, குர்மாவின் வாசனையில், கணவனும், போர்வையை அகற்றி விட்டு, அவன் வேஷ்டியைச் சுற்றிக் கொண்டு மனைவி இருக்கும் இடம் வந்தான்.
“அது எனக்குப் பிடிச்சது..என்னோடது.” என்றான் சிவா.
“பசிக்குது.” என்றாள் ஏற்கனவே இரவு உணவை முடித்திருந்தவள்.  அது ஏன் என்று உணர்ந்த கணவன், இனி அவளைப் பசியோடு தான் வைத்திருக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்தான்.  அவள் அருகில் அமர்ந்து, அதே தட்டிலிருந்து சாப்பிட ஆரம்பித்தவன், ஒரு வாய்ச் சாப்பிட்ட பின்,”இது மலபார் இல்லை..மதுரை.” என்றான்.
“மெனுலே மலபார்ன்னு தான் எழுதியிருந்திச்சு…முன்னே பின்னே சாப்பிட்டு இருந்தா தானே எது மலபார், எது மதுரைன்னு எனக்கு வித்தியாசம் தெரியம்.” என்றாள் மனைவி.
“சரி..இனி ஞாயிற்றுக் கிழமை நைட் நம்ம வீட்லே மலபார் பரோட்டா தான்.” என்றான் பெருந்தன்மையுடன் கணவன்.
அவ்வளவு தானா என்று கணவனை மனைவி பார்க்க, அதை உணர்ந்த என்ன என்று அவன் கேட்க, அப்போது லேசாக சூர்யா திரும்பி படுக்க, கணவன், மனைவி இருவருமே அமைதியாயினர்.  ஆனாலும்,
“உங்களாலே சூர்யாகிட்டே என் மானம் போயிடுச்சு.” என்று சின்ன குரலில் சீறினாள் கௌரி.
 “இனி உஷரா இருந்துக்கோ.” என்று அசால்ட்டாக பதில் அளித்தான் சிவா.
“இனி அவ இராத்திரி எழுந்திரிச்சா நீங்க தான் அவளைப் பாத் ரூமிற்குக் கூட்டிட்டு போகணும்..இந்த மாதிரி வேஷ்டி இல்லைன்னா ஒரு போர்வையைச் சுத்துக்கிட்டு கூட்டிட்டு போங்க..நீங்க தான் அதுக்கு பொறுப்பு.” என்று கண்டிஷன் போட்டாள் கௌரி.
“சரி…செய்யறேன்..ஆனா அந்த மாதிரி நான் ஒருமுறை தூக்கத்திலேர்ந்து விழிச்சிட்டா என்னைத் திரும்ப தூங்கப் பண்றது உன் பொறுப்பு.” என்று பொறுப்பாக கவுண்டர் கண்டிஷன் போட்டான் சிவா.  அவன் சொன்னது புரியாமல் ஒரு நொடிக்கு யோசித்தவள், அது புரிந்தவுடன்,”உங்களை” என்று கத்த, அதைக் கேட்டு மறுபடியும் சூர்யா புரண்டு படுக்க, கணவன், மனைவி இருவரும் அதற்கு மேல் சத்தம் செய்யாமல் உண்டு முடித்துப் படுக்கைக்கு வந்தனர்.
சிங்கிள் கட்டிலில் எப்படி இருவர் ஒருவராவது என்ற சோதனைகளுக்குப் பிறகு இளைப்பாறிக் கொண்டிருந்த போது,”ஞாயிற்றுக் கிழமை இராத்திரி மெனுவை மாற்ற வேணாம்.” என்றாள் கௌரி.
“ஏன்?”
“நம்ம வீட்லே சாப்பிட வேணாம்.  மலபார் பரோட்டாவை மலபாருக்குப் போய்ச் சாப்பிடலாம்.” என்றாள் கௌரி.
மஞ்சத்தில் மனைவி கேட்பதை மறுக்கும் சக்தி அந்த மகேசனுக்குக் கூட கிடையாது.  அதனால்,” சரி, சரி” என்று தலையசைத்தான் சிவா.  
“அடுத்தமுறை நீங்க தானே டி ரீட் கொடுக்கப் போறீங்க..அதான் இப்போவே இடத்தை தேர்ந்தெடுத்திட்டா மற்றதையெல்லாம் முடிவு செய்ய சுலபமா இருக்கும்..கொஞ்சம் நிறைய செலவாகும்..எத்தனை சேர்த்து வைச்சிருக்கீங்க..அடுத்த வருஷமே மலபார் போக பிளான் செய்யலாமா?” என்று ஆர்வத்துடன் அடுத்த விடுமுறைக்கு திட்டம் போட்டாள் கௌரி.
இதுவரை அவளுக்காக அவன் செலவு செய்தது கல்யாணத்தின் போது மட்டும் தான்.  சில மாதங்களாக, கடையிலிருந்து கிடைக்கும் லாபத்தை அவினாஷிற்கு அனுப்பி வைக்கிறான். ஒரு மாதத்தில் எத்தனை சேமிக்க முடியும் என்று யோசித்தவன், அந்த யோசனையின் முடிவில்,
“நம்ம கல்யாணத்துக்கு என்ன வாங்கின? எனக்கு சொல்லவே இல்லையே.” என்றான்.
‘இவனுக்குக் கண்ணில்லையா.  என்ன வாங்கிக்கிட்டேண்ணு தெரியலையா’ என்று கோபமான கௌரி,
‘நீங்க கேட்டாச் சொல்லியிருப்பேன்..நீங்க கேட்கலை..நான் சொல்லலை..இப்போவும் அதைப் போட்டுக்கிட்டு தான் இருக்கேன்..உங்க கண்ணுக்குத் தான் தெரியலை.” என்றாள்.
உடனே, அவளைத் தலையிலிருந்து கால் வரை ஊன்றிக் கவனித்தவன் கண்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் பெருமானம் உள்ள பொருள் தென்படவேயில்லை.
அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று உணர்ந்தவள்,
“அதே போல இன்னொன்னு வாங்கிக் கொடுத்தா என்னென்னு காட்டறேன்.” என்றாள்.
அவளைத் தலை முதல் கால் வரை மீண்டும் சோதனை செய்தவன்,”டி ஷர்ட் மட்டும் தான் போட்டிருக்க..இது முப்பதாயிரம் கிடையாது.” என்றவுடன்,  அவள் தலையில் அடித்துக் கொண்டாள் கௌரி.
உடனே, “சரி..வாங்கித் தரேன்.” என்றான் சிவா.
அவள் இடது கையை அவன் முன் நீட்டினாள். அதை உற்றுப் பார்த்தவனுக்கு, அவளுடைய மோதிர விரலில், மெலிதான தங்கக்கம்பியில், வெள்ளைக் கல் வைத்த மோதிரம் தென்பட்டது.  அதை வெடுக்கென் பிடித்து, இழுத்து,  நம்பமுடியாமல் பார்த்தவன்,”இதுவா முப்பதாயிரம்? முப்பது ரூபா மாதிரி இருக்கு.” என்று கூச்சலிட்டான்.
“ஷ்ஷ்..கத்தாதீங்க..குழந்தைங்க முழிச்சிடப் போறாங்க….இந்தக் கல் வைரம்..கம்பி பதினாலு கரெட் தங்கம்..விலை முப்பதாயிரம்.” என்று விவரமாக விளக்கினாள் கௌரி.
அவள் நீட்டிக் கொண்டிருந்த இடதுக் கை மோதிர விரலை எடுத்து அவன் வாயில் வைத்தான் சிவா. உடனே, அதை இழுத்துக் கொண்டு,”என்ன செய்யறீங்க.” என்றாள் படபடப்புடன்.
“தங்கமான்னு சோதிச்சுப் பார்த்தேன்.” என்றான்.
“தங்கத்தை சோதிக்க, உரசித் தான் பார்ப்பாங்க.” என்றாள் கௌரி.
“அது கடைலே…கட்டிலே எல்லாத்தையும் சுவைச்சு தான் பார்க்கணும்.” என்றான் கணவன்.
அவன் கொடுத்த விளக்கத்தை ‘ஹாங்’ என்று கேட்டுக் கொண்டிருந்த மனைவியிடம்,”பசிக்குது.” என்றான் ருசிக் கண்டிருந்த கணவன்.
அதைக் கேட்டு மெல்லிய புன்னகையுடன்,”எனக்கும்” என்றாள் அவனின் தீஞ்சுவைக்கு அடிமையாகியிருந்த  மனைவி. 
புதுமணம் : மறுமணம்
தேடல் :  தேவை
கனவு : நிஜம்
ஆசை :  அனுபவம்
இரண்டும் இணைந்து, இச்சை பசியைத் தீர்த்துக் கொள்ள, மீண்டுமொரு,  தீண்டல், தேடல் முயற்சி ஆரம்பமானது. 
*****ஆரம்பம்*******

Advertisement