Puthumanam : Marumanam
அத்தியாயம் - 3_2
காயத்ரி என்னைப் போல குடும்பப் பின்னணிலேர்ந்து வந்ததுனாலே என்னோட அப்படியே செட்டாகிட்டா..என் வருமானத்திற்கு ஏற்ற மாதிரி நாங்க சில சமயம் வாழ்க்கையை நடத்தினோம் சில சமயம் மாற்றிக்கிட்டோம்.. காசை எப்படிக் காப்பாத்தனும், எப்படிச் செலவழிக்கணும்னு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கலே..
இப்போ அவ இல்லைன்னாலும் அது எதுவும் மாறலை.. என்னோட இரண்டு குழந்தைகளை...
அத்தியாயம் - 2_1
சிவாவின் குடும்பம் அவள் கண்களிலிருந்து மறைந்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் கௌரி. அவன் குழந்தைகளோடு அவளைச் சந்திக்க வருவானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய தேவையைப் பூர்த்தி செய்ய அவளால் இயலாது என்று தெரிந்த பின்னும் எதற்காக இந்தச் சந்திப்பு? கடந்த சில வாரங்களாக அவனை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று அவளைச்...
அத்தியாயம் - 39_1
அந்த ஹோட்டல் மதுரை நகரத்தின் மேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் இருந்தது. சிவாவும் குழந்தைகளும் அங்கே போய்ச் சேர்ந்த போது பிற்பகல் ஒரு மணி. அங்கேயிருந்து கௌரிக்கு ஃபோன் செய்தான் சிவா. அவன் அழைப்பு ஏற்கப்படவில்லை. அதற்குக் காராணம் அவனுடன் பேசும் மன நிலையில் அவள் இல்லையா இல்லை வேலையில் பிஸியா...
அத்தியாயம் - 37_2
“எனக்குச் சிவா தம்பி நிறைய உதவி செய்திருக்கு கௌரி..இப்போவும் மனோகரைக் கூட வைச்சுக்கிட்டு அவனுக்கு வழி காமிச்சுக்கிட்டு இருக்கு..சின்னவளை இரண்டு வயசுலேர்ந்து நான் தான் வளர்க்கறேன்…எனக்கு ஆயுசும், ஆரோக்கியமும் போட்டிருந்தா, இரண்டு பேருக்கும் நல்லது, கெட்டது தெரியறவரைக்கும் அவங்களுக்குத் துணையா இருக்கணும்னு நினைச்சுப்பேன்..அப்பப்போ உடம்பு பிரச்சனை செய்யும் போது இதுங்க இரண்டு...
அத்தியாயம் - 2_2
அதற்குமேல் அவர்கள் இருவரையும் மௌனம் சூழ்ந்து கொள்ள அமைதியாக கௌரி காரை செலுத்த மூன்று பேரும் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர். அதைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்த கௌரி அவள் வீட்டிற்கும் செல்லும் பாதையிலிருந்து விலகி சிவாவின் வீடு நோக்கிப் பயணமானாள். அரைமணி நேரம் கழித்து காரை நிறுத்தி விட்டு தூங்கிக்...
அத்தியாயம் - 35_2
“நம்ம வீட்டு ஆளுங்களுக்குக் கௌரியை அறிமுகம் செய்து வை.” என்று மனைவிக்குக் கட்டளையிட்டார் ராஜேந்திரன்.
உடனே கௌரியை அவருடைய புகுந்த வீட்டு உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சாந்தி. சின்னவள் சூர்யா கௌரியுடனேயே இருக்க, பெரியவள் தீபா, மேக்னாவோடு சுற்றிக் கொண்டிருந்தாள். ஜமுனாவும் விஜியும் நகமும் சதையும் போல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். விஜியின்...
அத்தியாயம் - 38_1
மறு நாள், திங்கட்கிழமை, சிவா தாமதமாக எழுந்து கொண்டான். எப்போதும் போல் எழுந்து கொண்ட கௌரி, சாவித்திரி அம்மா வருவதற்கு முன் அவள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தாள். அவர் வந்தவுடன், சிவா இன்னும் எழுந்திருக்காததால், குழந்தைகள் இருவரையும் பள்ளிக்கூடத்திற்குத் தயார் செய்தாள். பேருந்து நிறுத்ததில் விட அவளுக்கு நேரமில்லாததால்,...
அத்தியாயம் - 3_1
“ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தேன்..முகூர்த்தம் சரியான டயத்துக்கு நடந்திச்சு ஆனா முகூர்த்தச் சாப்பாடுதான் லேட்டாயிடுச்சு..இன்னைக்கு நான் உங்களைக் காக்க வைச்சிட்டேன்..ஸாரி” என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த கௌரி பச்சை நிறப் பட்டுப் புடவையில் இருந்தாள். காதில் ஜிமிக்கி, கழுத்தில் கனமானத் தங்கச் சங்கிலி, கைகளில் தங்க வளையல்கள், தலையைப் பின்னி மல்லிகைப் பூ...
அத்தியாயம் - 33_2
அடுத்த நாள் காலை கரெக்ட்டாக பதினொரு மணிக்கு சிவாவின் வீட்டிற்கு வந்தார் சாந்தி. வாசலில், அழைப்பு மணி ஒலித்தவுடன், சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, ஓடிப் போய் மானிட்டரைப் பார்த்து,” அத்தை.” என்று கத்தினாள்.
அவள் கத்தலைக் கேட்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்த கௌரி, டீ ஷர்ட், பேண்ட் அணிந்திருந்தாள். ...
அத்தியாயம் - 4
“அப்பா, அப்பா” என்று விடாமல் சிவாவை அழைத்துக் கொண்டிருந்தாள் தீபா. அவள் அழைத்தது சிவாவிற்குக் கேட்காததினால், குழந்தைகள் விளையாடுமிடத்தில் அவளோட விளையாடிக் கொண்டிருந்த சூர்யாவை தனியே விட்டு விட்டு வெளியே நின்று கொண்டிருந்த சிவாவின் அருகே வந்தவளை, “எதுக்கு இப்போ வெளியே வந்த..பாத் ரூம் போகணுமா?” என்று கேட்டான் சிவா.
அதற்குள் தீபாவைப்...
அத்தியாயம் - 6
கௌரி லக்ஷ்மி, சிவசங்கர் இருவரும் கௌரி சங்கர், கௌரியின் சங்கரானதை உணரவில்லை.
இவங்க எதுக்கு இப்போ ஆஸ்பத்திரி வராங்க? அவினாஷ் அண்ணன் கேட்டா என்ன பதில் சொல்றது? கமெரா போட்டுக் கொடுக்கறத்துக்கு இவங்க வருவாங்களா இல்லை ஆள் அனுப்புவாங்களா? அது விஷயமா வீட்டுக்கு வந்தா என்ன செய்யறது? அண்ணனுக்கு இது தெரிய வந்தா...
அத்தியாயம் - 21
அம்மா என்றால் என்ன? பாசம் பொழியும் பாட்டியிடம் அம்மாவைப் பார்க்கும் பேரன்கள். கொஞ்சும் மழலையில் பேசும் பேத்தியிடம் அம்மாவைக் காணும் தாத்தாக்கள். அதட்டி உருட்டும் அக்காவிடம் அம்மாவைப் பார்க்கும் தம்பிகள். அன்பைக் காட்டும் தங்கையிடம் அன்னையைக் காணும் அண்ணன்கள். மலர்க் கண்களை விரித்து அப்பா என்று அழைக்கும் மகளிடம் தாயைப் பார்க்கும்...
சிவாவிற்கும் அவன் அம்மாவிற்கும் நடுவே நடந்து கொண்டிருந்த யுத்தத்திலிருந்து விலகியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மகேஷிற்கு. திடீர் திடீரென்று விஜிக்கு இரத்தக் கொதிப்பு பிரச்சனை ஏற்பட்டதால் ஆஸ்பத்திரி, மருத்தவர் என்று மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான் மகேஷ். கல்யாணத்திற்குச் சில நாள்களுக்கு முன் விஜியை இரண்டு நாள்களுக்கு மருத்துவமனையில் கண்காணிக்க வேண்டிய சூழ் நிலை...
அத்தியாயம் - 5
“என்னையா என்ன டா வேணும்னு கேட்கறா? என்று நம்பமுடியாமல்,”என்ன சொன்ன?” என்று குழப்பமும் கோபமுமாகக் கேட்டான் சிவா.
அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”எதுக்கு பெல் அடிச்சீங்க?” என்று அர்த்தமில்லாமல் கேட்டாள் கௌரி.
“என்ன இப்படி முட்டாள்தனா கேட்கறா? என்ன ஆச்சு இவளுக்கு?” என்று கௌரியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன்,”வாசல்லே கமெரா இல்லை அப்போ பெல்...
அத்தியாயம் - 30_2
“சுப்ரமணி ஸர்கிட்டே நல்ல நாள் பார்க்கச் சொல்லியிருக்கேன்..முதல்லே நம்ம கல்யாணத்தைப் பதிவு செய்யணும்..அப்புறம் கடையை உன் பெயர்லே..வியாபாரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சின்னதாப் பூஜை..” என்று அடுக்கிக் கொண்டு போனதை நம்ப முடியாமல்,“எனக்கு எல்லா நாளும் நல்ல நாள் தான்.” என்றாள் கௌரி.
அதைக் கேட்டு இந்த வீட்டிற்கு அவளை முதன்முதலில் அழைத்து வந்த...
அத்தியாயம் - 31_2
அதே விலையில் பென்சில் பவுச், ஸ்டெஷனரி செட், எரேசர் பேக், பல வடிவங்களில் ஷார்ப்னர் பேக், கலர் பென்சில், பென் பேக் என்று வெரைட்டியாகக் கொண்டு வந்து போட்டான் சிவா. அதற்குப் பின் பார்ட்டிகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கத்தன. அதனால் பொறுமையிழந்த சிவா, கௌரியைக் காரணம் காட்டி விழாக்களுக்குப் போவதைக் குறைத்தான். கௌரி...
அத்தியாயம் - 20
“அப்போ உங்க வீட்லேர்ந்து கௌரி ஆபிஸ் ஒரு மணி நேரம்.” என்றாள் மாலினி. அதைக் கேட்டு சிவாவின் முகத்தில் வந்த உணர்வுகளைச் சரியாகப் படித்த மாலினிக்கு அவன் அந்தக் கோணத்தில் யோசிக்கவே இல்லையென்று தெரிந்தது.
“உங்களோட புதுக் கடை இந்த ஏரியாலே தான் இருக்கணும்னு சொல்றது சரி ஆனா உங்க வீடும் இங்கே...
அத்தியாயம் - 8
ஒரே கணத்தில் கண் விழித்து அதைக் கண்கள் மூலம் அறிவித்து ஒரே நேர்த்தில் ஆரம்ப நிலையை அடைந்திருந்த இருவரின் குண்டலினியும் ஒரு சொல், அதே பொருள் என்று ஒரே அலைவரிசையில் இருந்ததால் கௌரியும் சிவாவும் பரஸ்பர விலகலைச் சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டனர்.
அடுத்து வந்த வார நாள்களில் அலுவலகத்திலிருந்து வீடு வந்து...
அத்தியாயம் - 37_1
அவள் மாமியாரை முறைத்துக் பார்த்துக் கொண்டிருந்த கௌரி, கோபத்தை துறந்து சிந்தனைவயப்பட்டாள். அப்போது தீபாவும் சூர்யாவும் அம்மா என்று அழைத்து அவளருகே வர, அவர்களை விலக்கி விட்டு, அவர்களிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவள் படுக்கையறைக்குச் சென்றாள். உடனே குழந்தைகளின் முகம் வாடிப் போக, அதைப் பார்த்து சாவித்திரி அம்மா வேதனையடைந்தார். ...
அத்தியாயம் - 26_2
முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ஜமுனாவும் அவர் திட்டத்தைச் செயல்படுத்தினார். அதன் விளைவாக ஜமுனா, சாவித்திரி அம்மா இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பும் பகையும் அதிகமானது. கடைசி பந்தியில் மனோகரும் சாவித்திரி அம்மாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த பொருள்களைச் சேகரித்து, அந்த இடத்தை முடிந்த அளவு சுத்தப்படுத்திக்...