Thursday, May 16, 2024

    PM : MM 40

    PM : MM EPILOGUE

    PM : MM 39 2

    PM : MM 39 1

    PM : MM 38 2

    Puthumanam : Marumanam

    PM : MM 23

    அத்தியாயம் - 23 அந்தப் பெட்டியுடன் வீட்டினுள் சென்ற கௌரியைப் பின் தொடர்ந்தான் சிவா.  பெருக்கித் துடைத்து சுத்தமாக இருந்தது வரவேற்பறை. வரவேற்பறையின் சுவரையொட்டி அந்தப் பெட்டியை வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கௌரி.  வெகு நாள்களுக்குப் பின் சிவாவுடன் இந்தத் தனிமைச் சந்திப்பு என்று எண்ணியபடி சமையலறைக்குள் சென்றவள், முகம், கழுத்து, அவள் உடுத்தியிருந்த குர்த்தி ஈரமாவதைப்...

    PM : MM 22 2

    சிவாவிற்கும் அவன் அம்மாவிற்கும் நடுவே நடந்து கொண்டிருந்த யுத்தத்திலிருந்து விலகியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மகேஷிற்கு. திடீர் திடீரென்று விஜிக்கு இரத்தக் கொதிப்பு பிரச்சனை ஏற்பட்டதால் ஆஸ்பத்திரி, மருத்தவர் என்று மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான் மகேஷ்.  கல்யாணத்திற்குச் சில நாள்களுக்கு முன் விஜியை இரண்டு நாள்களுக்கு மருத்துவமனையில் கண்காணிக்க  வேண்டிய சூழ் நிலை...

    PM : MM 22 1

    அத்தியாயம் - 22 பல வருடங்களாக ஒரு பொருளை ஓர் இடத்தில் பார்த்துப் பழகிய கண்களுக்குத் திடீரென்று அதே இடத்தில் ஒரு புதுப் பொருளைப் பார்க்கும் போது ஆவல், ஆசை, பிரமை, பிடித்தமின்மை என்று பழைய பொருளுடன் இருந்த ஈடுபாட்டைப் பொறுத்து பலவிதமான உணர்ச்சிகள் எழும்.  திடீரென்று காயத்ரியின் இடத்தில் கௌரியைக் குழந்தைகள் ஏற்றுக் கொண்ட...

    PM : MM 21

    அத்தியாயம் - 21 அம்மா என்றால் என்ன? பாசம் பொழியும் பாட்டியிடம் அம்மாவைப் பார்க்கும் பேரன்கள். கொஞ்சும் மழலையில் பேசும் பேத்தியிடம் அம்மாவைக் காணும் தாத்தாக்கள்.  அதட்டி உருட்டும் அக்காவிடம் அம்மாவைப் பார்க்கும் தம்பிகள். அன்பைக் காட்டும் தங்கையிடம் அன்னையைக் காணும் அண்ணன்கள். மலர்க் கண்களை விரித்து அப்பா என்று அழைக்கும் மகளிடம் தாயைப் பார்க்கும்...

    PM : MM 20

    அத்தியாயம் - 20 “அப்போ உங்க வீட்லேர்ந்து கௌரி ஆபிஸ் ஒரு மணி நேரம்.” என்றாள் மாலினி. அதைக் கேட்டு சிவாவின் முகத்தில் வந்த உணர்வுகளைச் சரியாகப் படித்த மாலினிக்கு அவன் அந்தக் கோணத்தில்  யோசிக்கவே இல்லையென்று தெரிந்தது.  “உங்களோட புதுக் கடை இந்த ஏரியாலே தான் இருக்கணும்னு சொல்றது சரி ஆனா உங்க வீடும் இங்கே...

    PM:MM 19

    அத்தியாயம் - 19 மறு நாள் காலை எட்டரை மணி போல் அவள் வீட்டில் இருந்தாள் மாலினி.  அவள் நேரில் வருகை புரிவாள் என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை.  அந்த நேரத்தில் சிதார்த்துடன் வீட்டுப் பக்கத்திலிருந்த பூங்காவிற்குச் சென்றிருந்தார் ராம கிருஷ்ணன்.  முந்தைய இரவு சிவாவை முதலில் கௌரியின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கேயிருந்து சிவா அவன்...

    PM:MM 18 2

    அத்தியாயம் - 18_2 மேகலா, ராம கிருஷ்ணனின் வீடு தனி வீடு.  வீட்டிற்கு முன்புறம் சுற்றுச் சுவரை ஒட்டி வரிசையாக  தென்னை மரங்கள் இருந்தன.  அதைத் தாண்டி போர்டிக்கோ, சின்ன வரண்டா.  கேட்டின் முன்னே ஸ்கூட்டியை கௌரி நிறுத்தியவுடன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அவினாஷ்.  அதற்குள் ஸ்கூட்டியிலிருந்து இறங்கி அதை உள்ளே...

    PM:MM 18 1

    அத்தியாயம் - 18_1 அவள் வீட்டிலிருந்து அனைவரும் சென்ற பின் ஏனோ கௌரியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அதை நிலைப்படுத்தும் முயற்சியில் அத்தனை வீட்டு வேலகளையும் பரபரவென செய்து முடித்தாள். ஆனால் அவள் மனதின் அலைபுறதல் நிறக்கவில்லை. நம்பிக்கையில்லையா என்று கேட்ட சிவாவினாலா? இல்லை விவரம் கேட்டுக் கொள்ளாத மாலினியாலா? இல்லை அழுதுக் கொண்டே...

    PM : MM 17

    அத்தியாயம் - 17 “ரியலி.” என்றாள் திரையில் தெரிந்த மாலினி. அவினாஷும் நித்யாவும் சற்றுமுன் தான் கௌரியின் கல்யாண விஷயத்தை மாலினிக்குத் தெரியப்படுத்தியிருந்தனர். அதைக் கேட்டு அந்தப் புறம் திரையில் தெரிந்த நான்கு பேரில் மூன்று முகங்களில் சந்தோஷம்.  மாலினியின் முகத்தில் மட்டும் தீவிர சிந்தனை.  சிவாவிற்கு அடுத்து தீபா அமர்ந்திருக்க அவளருகே அமர்ந்திருந்த கௌரியின் மடியில் இருந்த...

    PM:MM 16

    அத்தியாயம் - 16 நேரம் காலம் பார்க்காமல், உயர்வு தாழ்வை பொருட்படுத்தாமல் அன்பையும் காதலையும் பலமுறை, பல விதங்களில் வெளிப்படுத்துவதால் தான் அது அழிவேயில்லாமல் காலம் காலமாய் இந்த அவணியில் பல பரிமாணங்களில் வலம் வருகிறது.  அதிகமாக வெளிபடுத்தப் படாத காதலும் அன்பும் சந்தேகத்தை, சஞ்சலத்தைக் கிளப்புகிறது.  அது பலமுறை வெளிப்படும் போது ஒவ்வொரு முறையும்...

    PM:MM 15

    அத்தியாயம் - 15 அவினாஷின் முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சிவாவைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடி வந்த சித்தார்த்,”இந்தாங்க.” என்று அவன் கையிலிருந்த சின்ன பையைக் கௌரியிடம் கொடுத்தான்.  அதனுள்ளே பிரபலமான பேஸ்ட் ரி கடையின் பெட்டி இருந்தது.  சிவாவின் குழந்தைகளுக்கு என்று புரிந்து கொண்ட கௌரி அதை பிரிஜில் வைக்கச் சென்றாள். அவள்...

    PM : MM 14

    அத்தியாயம் - 14 “மகேஷ் உங்க தம்பியா? கடைலே உங்க அப்பாவும் தம்பியும் பணம் போட்டிருக்காங்களா?” என்று அவள் ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு விவரங்கள் அறியமுற்பட்டாள் கௌரி. “ஆமாம்.. என்னோட தம்பி..ஆரம்பித்தலே அப்பா கொஞ்சம் பணம் கொடுத்தார்..அதை அப்போவே திருப்பிக் கொடுத்திட்டேன்..தீபா பிறந்த பிறகு காயத்ரியோட நகையை வைச்சு கடையை மாத்தி அமைச்சு ஸ்டெஷனரி சாமான் விற்க...

    PM:MM 13

    அத்தியாயம் - 13 அன்று இரவும் சிவசங்கருக்குத் தூங்கா இரவாகிப் போனது.  எப்படி அத்தனை பணத்திற்கு ஏற்பாடு செய்யப் போகிறோம்? யாரிடம் கேட்பது என்ற கவலையில் விடிந்த பின்னும் விழித்திருந்தான். அந்த எண்ணமே அவனுக்கு மனச் சோர்வை ஏற்படுத்த சாவித்திரியம்மாவிற்காக வாசல் கதவைத் திறந்து விட்டு வந்தவன் மறுபடியும் படுக்கையறையில் முடங்கிக் கொண்டான். குழந்தைகள் இருவரையும் எழுப்பி...

    PM : MM 12

    அத்தியாயம் - 12 அவினாஷ் சொன்னது நிஜமானது. இருளைப் பிளந்து கொண்டு விடியல் வெளியே வந்த நானோ நொடி காட்சிகளுக்கு சாட்சியானவன், இதுபோல் இனியொரு தூங்கா இரவையும் விடியலையும் அவனால் கையாள முடியாது என்று உணர்ந்து, அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் மனதோடு ஒரு தீர்மானத்திற்கு வந்தான் சிவா.  அதன் பின் அன்று காலை அவனே குழந்தைகளைப்...

    PM 11 1

    அத்தியாயம் - 11_1 ராம கிருஷ்ணன் அங்கிளின் கோபத்தில் சுப்ரமணி ஸர் ஸரிலிருந்து சர்ரென்று சறுக்கி அவன், இவன் என்று ஆனாதைப் பார்த்து அதற்கு மேல் அவரிடம் முறையிட முற்படாமல் அவள் வாயை மூடிக் கொண்டாள் கௌரி. ஒரு வருடத்திற்கும் மேலாக அவள் வீட்டில்  தனியாக இருந்தது அவள் அம்மாவின் பிரிவை இன்னும் ஆழமாக அவளை...

    PM 11 2

    அத்தியாயம் - 11_2 “ஆமாம்..இரண்டு முறை போனேன்..பூட்டி இருந்திச்சு..கார், ஸ்கூட்டி, இரண்டும் பார்க்கிங்லே இல்லை..சுப்ரமணி ஸர் வீட்டுக்குப் போய் விசாரிச்சேன்..அவங்க மனைவி சொன்னாங்க இந்த வீட்டை வாடகைக்கு விட்டிட்டு மேகலாவோட  மக வீட்டுக்குப் பூனாக்கு போகப் போறாண்ணு.” என்று சொன்னவன் குரலில் ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டு கொண்டான் அவினாஷ். “ஆமாம்..இனி பூனா தான்..அந்த வீட்டை வாடகைக்கு...

    PM 10

    அத்தியாயம் - 10 மாலினி, விட்டல் பற்றி நினைத்துக் கொண்டிருந்த கௌரியை நிகழ்விற்குக் கொண்டு வந்தான் வரவேற்பறைக்குள் நுழைந்த அவினாஷ்.   ”கௌரி, உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்.” என்றான். “அப்போ ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி இன்னொரு நாள் என்னை அழைச்சிட்டுப் போங்க.” “மாட்டேன்..எத்தனை முறை வீட்டுக்கு வான்னு உன்னைக் கூப்பிட்டேன் நீ வரவேயில்லை..அம்மா கூப்பிட்ட உடனே வந்திட்ட.” “இப்போ ரொம்ப பிஸியான...

    Puthumanam 9

    அத்தியாயம் - 9 மாலினியின் கேள்விக்கு “ஆமாம்” என்று தலையசைத்தாள் கௌரி. உடனே, “உள்ளே வா” என்று மாலினி அழைக்க, வாசலை விட்டு அகலாமல், “அக்கா, அம்மாவைக் கூப்பிடுங்க கா.” என்றாள். “நீ உள்ளே வா.” என்று கௌரியின் கையைப் பிடித்து அவளை வீட்டினுள் இழுத்து வாசல் கதவைச் சாத்தினாள் மாலினி. இதுவரை அவள் கையைப்பிடித்து  அவளை வீட்டிற்கு வெளியே தள்ளியவர்களை...

    PM : MM

    அத்தியாயம் - 8 ஒரே கணத்தில் கண் விழித்து அதைக் கண்கள் மூலம் அறிவித்து ஒரே நேர்த்தில் ஆரம்ப நிலையை அடைந்திருந்த இருவரின் குண்டலினியும் ஒரு சொல், அதே பொருள் என்று ஒரே அலைவரிசையில் இருந்ததால் கௌரியும் சிவாவும் பரஸ்பர விலகலைச் சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டனர். அடுத்து வந்த வார நாள்களில் அலுவலகத்திலிருந்து வீடு வந்து...

    Puthumanam : Marumanam 7

    அத்தியாயம் - 7 குண்டலினி விழிப்பு நிலையில் இருவரும் தொடுதிரையாக மாறிய மாயாஜாலத்தை அவர்கள் விழித்திரை வெளிப்படுத்திய அந்த நொடியில் அவர்களின் இணைப்பைத் துண்டித்து ஓர் அடி விலகி நின்று கொண்டனர். அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்,”ஸர், நீங்க வர்றீங்களா?” என்று மின் தூக்கியின் உள்ளேயிருந்து குரல் வந்தது.   அதற்குச் சிவா மௌனம் காக்க,”அவங்க வரலை....நீங்க...
    error: Content is protected !!