Monday, April 29, 2024

    Nin Mel Kaathalaagi Nindraen

    "நீ யாருனு சொன்ன ?" "லிங்கம் அய்யா. குவாரி வச்சிருக்காருல. " "உன்ன இப்படிப் பண்ண சொன்னது யாரு ?" "அதோ நிக்கிறாரே! அவருதான்" என மச்சக்காளையைக் கை காட்ட, அங்கோ மச்சக்காளை லிங்கத்துடன் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். "டேய் பொய்ச் சொல்லாதடா!" எனக் கதிரவன் கூற, "இல்ல சார்! சாமி சாத்தியமா நிசந்தே சொல்றேன். அவரு தான் சொந்த மச்சானுக்கு...
    காதல் சங்கமம் - 32 வீட்டை திறந்தவுடன், சரிவர ஆட்கள் போய் வந்து இல்லாததால் தூசியாக இருக்க, விழி கொஞ்சமும் யோசிக்காமல் சுத்தம் செய்து ராஜனின் படத்திற்கு விளக்கை ஏற்றினாள். மனைவியின் ஒவ்வொரு செய்கையையும் கண்ணெடுக்காமல் கதிரவன் பார்த்துக்கொண்டிருக்க, விழிக்கு பார்வையை ஏறெடுத்து பார்க்க முடியாத அளவிற்கு நாணம் ஒட்டிக்கொண்டது. இருவரும் ராஜனிடம் மனதார ஆசி வேண்டிய...
    "கதிர், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்த தாமஸ் சொன்னாரு. என்னால நம்பவே முடில. நீங்க சொல்லவே இல்லையே" எனக் கேட்க, சிறிது தயங்கினாலும் பின் தெளிவான குரலில், "ஆமா சார். சொல்ல கூடிய சூழல்ல நடக்கல. ஒருவிதக் கட்டாயத்துல நடந்தது. அத பத்தி மேற்கொண்டு பேச வேணாம்னு நானா யார்கிட்டையும்...
    உடனடியாக மறுநிமிடமே, "இப்போ மட்டும் என்ன  அதே தைரியம் இப்பவும் இருக்கே. என்ன கல்யாணம் பண்ணிகிட்டத்தலையும் சரி. இப்ப இவனுங்கள மறுபடியும் அடி பிண்ணியத்திலையும் சரி" என அவனது மனம் மெச்சுதலாக எண்ண, அவனது மதியோ, "ஓ அதுனாலதான் பொண்டாட்டின்னு உரிமையா சொன்னியா ?" என இடையில் புகுந்து கேள்வி எழுப்ப. அதற்கு அவனிடம்...
    குரோதம்- 33 அதிர்ச்சியுடன் விழி பார்த்துக்கொண்டிருக்க, "நல்லா கணக்கு போட்ட மருமக பொண்ணே. ஆனா உன்னோட கணக்கு என்னோட பொண்டாட்டிகிட்டவேணும்னா சரியா இருக்கலாம். என்கிட்ட தப்புக் கணக்கா போய்டுச்சே. பாவம்தான்... இனி உங்க இரெண்டுபேரோட குடுமியும் என்னோட கைல. இப்பவே அந்த லிங்கத்துட்ட போறேன். அட எதுக்குன்னு பாக்குறீங்களா ? இப்பவே சொல்லிட்டா சப்புன்னு போய்டும். அங்க...
    நின்மேல் காதலாகி நின்றேன் கனலியே  -30 சார் என்ற அழைப்புடன் நெய்தல் பன்னைக்கு வந்து நின்றான் மாரிமுத்துவின் வாக்குமூலத்தைப் படம்பிடித்த காமெரா மேன். "என்னையா சார்னு சொன்ன? மேல சொல்லு?" என்ற படி பாண்டி பந்தாவாகக் கேட்க, "கதிர் சார்கிட்ட இத கொடுக்க வந்தேன். அவரு இல்லைங்களா ?" "இல்லை! வெளில போயிருக்காரு. என்கிட்ட கொடு. கொடுத்திடறேன்" "அதுவந்து சார். அவருகிட்டத்தான்...
    அன்பா ? வம்பா ?  24 தோள்களைத் தொட்டவுடன் சட்டென்று விழி திரும்பி பார்க்க அங்கே பாண்டியும் சக்கரையும். எப்போதும் எதற்கும் கவலை பட்டு பார்த்திராத அவர்களை முதன் முறையாக அப்படிப் பார்த்தது விழிக்கு என்னவோ போலிருந்தது. "என்னாச்சு அண்ணா? பாண்டி அண்ணா...
    அவளது மனமோ, "இந்த வீட்டோட எஜமானி. ஆனா அவுங்க இங்க வேல பாக்குறதுக்குனே பொறப்பெடுத்தத போல இப்படி மாங்கு மாங்குனு வேல பாக்குறாங்களே. எத்தனை வருசமா இவுங்க இப்படி இருக்காங்க ? இத மொதல்ல மாத்தணும். " என எண்ணி வருந்தியது. மேலும் பெண்களைப் பற்றித் தன் தந்தை கூறியதை நினைத்துக்கொண்டாள். "பெண்கள் எப்பவும் அவுங்களோட தைரியத்தையும்...
    பவள மல்லி - 31 ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் பாண்டி. "டேய் இப்ப என்னத்துக்கு இவ்ளோ சீன் போடற ?" என்றபடி வந்தமர்ந்தார் சக்கரை. "டேய் எம்புட்டு பெரிய விஷயம் நடந்து போச்சு...கவலைப்படாம எப்படி டா இருக்கச் சொல்லுற ?" எனக் கேட்க, "அப்படி என்ன நடந்துச்சு...?" எனச் சக்கரை யோசிக்க, பற்களைக் கடித்தபடி பாண்டி,...
    யாரிவளோ-2 கண்ணீராலே பூக்கின்றவள் தான் பெண்ணென்ற எண்ணத்தை கையோடு கொய்து செல்கிறாள் பெண்ணவளின் தைரியத்தாலே - கனல்விழியை முதன் முதலில் பார்த்த கதிரவன். அனைத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களும் மாணவிகளும் தம் தம் பள்ளியின் சார்பாகவும் வகுப்பின் சார்பாகவும் கூடியிருக்க, பெண்கள் கூட்டத்தை அரும்பு மீசை கொண்ட காளை கூட்டங்கள் அந்தந்த வயதிற்கே உரிய ஆர்வ பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக மரப்பலகை...
    "சொல்லுங்க அண்ணே" சிறி தயக்கத்தோடு, "நம்ம விழியோட வீட்டுலயும் பேசுங்க. அன்னைக்கு நடந்ததுல எனக்குச் சுத்தமா சம்மதம் இல்ல. இந்தப்புள்ள முகத்தைப் பார்த்து கூடப் பேச பிடிக்கல. ஆனா இந்தப் புள்ள வந்த இத்தனை மாசத்துல எம்புட்டோ மாறிடுச்சு. இப்ப கூடத் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனதுக்குக் காரணம் எம்மருமவளும் தான். அப்படியிருக்க, அது மட்டும் பெத்தவங்ககூடப்...
    விழியின் பார்வையில் காதல்  – 26 "மாமா" என ஓசைவராமல் உதடைசித்து மெல்ல முணுமுணுத்துக்கொண்டவள், வேகமாகக் கைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, "மாமா... மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. அப்பா எப்படி இருக்காங்க மாமா ? ஹெலோ மாமா இருக்கீங்களா ?" என எதிர்முனையில் முருகேசன் பேசும் முன்பாகப் படபடவென்று பேச, "பாப்பா ஏன்மா...
    ஹீரோவோ வில்லனோ  - 29 லிங்கத்தை வழி அனுப்பிய பாரிஜாதம் வன்மம் கலந்த முறுவல் இருந்தபோதும் இரண்டு மனம் கொண்டு தவித்தபடி அப்படியே கொல்லைக்கு வர, அதுவோ கேட்பார் யாருமின்றித் தனித்துக் கிடந்தது. எப்போதும் கட்டிக்கிடக்கும் மாடும் கன்றும் கூட இல்லாமல் கிணத்துமேடும் சலவைக்கல்லுமென வெறிச்சோடி காணப்பட்டது. யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மச்சக்காளைக்கு அழைத்தவர், மறுபுறம் அழைப்பை...
    காதலின் கண்ணாமூச்சி -28 காதல் கண்ணாமூச்சியோ ? கொண்டவனிடம் மட்டும் சொல்லாமல் கொண்டாடுகிறாள் ஊர் உலகோடு அவனோடு உண்டான காதலை லிங்கத்திடம் முறையிட மகேஷ் மற்றும் சுந்தரின் பெற்றோரும் உறவினரும் வந்திருந்தனர்.ஆனால் அடாவடியாக இல்லை, அமைதியாகவே; அவர்களின் விண்ணப்பம் இந்தப் பிரச்சனையைக் காவல் நிலையால் நீதி மன்றம் என்று எடுத்துச் செல்லாமல் ஊர் பஞ்சாயத்தில் வைத்து முடித்துக்கொள்வோம் என்பதே. ஒருவேளை...
    மாப்பிள்ளையின் தங்கையான பாரிஜாதத்தையும் வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லாத மச்சக்காளையையும் அழைத்துவிட்டிருந்தார். பாரிஜாதத்திடம் பக்குவமாக விஷயத்தை எடுத்து கூறி, லிங்கத்திற்குச் சம்மதமா என்று கேட்க, பாரிஜாதம் மறுநாளே வந்து, "அண்ணனுக்குப் பரி பூரணச் சம்மதம். அண்ணி வயித்துல இருக்குற குழந்த எங்க குடும்பத்தோட மூத்த வாரிசு" எனச் சத்தியம் செய்து கூற, ராஜன்...
    பாரிஜாதத்தின் திட்டம் -25 "யாரு இப்படிக் கதவை தட்றது?" எனப் பார்வதி கேள்வியாகக் கேட்க, விழி, "தட்டல அத்த. உடைக்கிறாங்க. வேற யாரா இருக்கும் எல்லாம் என்னோட சின்னமாவா தான் இருக்கும்" என நக்கலாகக் கூறியபடி சென்று கதவை திறக்க, அங்கே பாரிஜாதமே. விஷம பார்வையுடன் நின்றிருந்தார். "நான் சொல்லல. இந்த அம்மாவத்தான் இருக்கும்னு" என வார்த்தையாக...
    சோமாஸ் (எ) மாஸ் பாண்டி  -27 "இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு மச்சான் அத்தனை மயிலும் காலி" என ஒருவன் கூற, மற்றொருவனோ, "ஒன்னும் பிரச்சன்னை வந்திடாதுல" என யோசனையாகக் கேட்க, "இல்லவே இல்லை, சுளுவா முடிச்சிடலாம். வந்துட்டு இருக்கானே ஏழுமலை, அவன் கொண்டு வர மருந்து வீரியம் ஜாஸ்தி. கொஞ்சம் இந்தத் தானியத்தோட கலந்து...
    கனல்விழியின் கதிரவன் -21 அக்க்ஷதை பூமழை மணமக்களின் மீது பொழிய கைகளில் திருமாங்கல்யத்துடன் கதிரவன் சாந்தினியின் முகம் பார்த்திருக்க, சற்று முன்பு பார்வதி பூஜையில் வைத்திருந்த பரம்பரை தாலியை தன் நெஞ்சில் சுமந்தபடி வந்து நின்றாள் விழி. மாப்பிளை தாலி கட்டுவதைப் பார்க்க ஆவலாக இருந்த மக்கள்,...
    திருமாங்கல்யம் – 20 மறுநாள் காலை பெரியவீட்டில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பெரிய சப்தத்துடன் ஒலித்த திரைப்படப் பாடல்களில் தான் பொழுதே விடிந்தது. ஊரே வண்ண வண்ண துணி உடுத்தி அலங்கரித்துக்கொண்டு திடீரென்று அறிவிக்கப்பட்ட கல்யாணத்திற்குப் படை எடுக்க, மதுரையிலிருந்து வந்த பேருந்தும் கனல்விழி தன் தந்தையுடன் வந்த பேருந்தும் ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில்...
    பூக்கரமோ பூகம்பமோ – 3 வளைக்கரத்தில் வன்மையா ? மைவிழியில் எரிமலையா ? பெண்ணவள் சீற்றம்கொள்ள ஆழ்கடலும் அடக்கம் கொள்ளும் "டேய் பாண்டி, ஏண்டா அவரோட வம்பு வளக்குற" எனக் கேட்டபடி வந்தான் கதிரவன். "என்ன நடந்துச்சுனு தெரியாம அட்வைஸ அள்ளி விடாத. கொஞ்சமாச்சு மிச்ச வையேன் மாப்பு. நாளைக்குப் புள்ளகுட்டி பொறந்தா அதுகளுக்கு மிச்ச மீதி...
    error: Content is protected !!