Nin Mel Kaathalaagi Nindraen
"சொல்லுங்க அண்ணே"
சிறி தயக்கத்தோடு, "நம்ம விழியோட வீட்டுலயும் பேசுங்க. அன்னைக்கு நடந்ததுல எனக்குச் சுத்தமா சம்மதம் இல்ல. இந்தப்புள்ள முகத்தைப் பார்த்து கூடப் பேச பிடிக்கல. ஆனா இந்தப் புள்ள வந்த இத்தனை மாசத்துல எம்புட்டோ மாறிடுச்சு.
இப்ப கூடத் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனதுக்குக் காரணம் எம்மருமவளும் தான். அப்படியிருக்க, அது மட்டும் பெத்தவங்ககூடப்...
உடனடியாக மறுநிமிடமே, "இப்போ மட்டும் என்ன அதே தைரியம் இப்பவும் இருக்கே. என்ன கல்யாணம் பண்ணிகிட்டத்தலையும் சரி. இப்ப இவனுங்கள மறுபடியும் அடி பிண்ணியத்திலையும் சரி" என அவனது மனம் மெச்சுதலாக எண்ண, அவனது மதியோ, "ஓ அதுனாலதான் பொண்டாட்டின்னு உரிமையா சொன்னியா ?" என இடையில் புகுந்து கேள்வி எழுப்ப. அதற்கு அவனிடம்...
நினைவெல்லாம் கதிரவன் - 7
"என்னடி சொல்லுற? மறுபடியும் சொல்லு" என வாயை பிளந்தபடி வினவினாள் முல்லை கொடி.
"ஹ்ம்ம் சொல்லிட்டா போச்சு... நான் அவரை இன்னும் பக்கத்துல இருந்து காதலிக்கப் போறேன்" என மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறினாள்.
"ஏ புள்ள, கொஞ்சம் முன்னாடி கூடக் காதல் இல்லனு சொன்ன. இப்ப எப்படி...
அவளது மனமோ, "இந்த வீட்டோட எஜமானி. ஆனா அவுங்க இங்க வேல பாக்குறதுக்குனே பொறப்பெடுத்தத போல இப்படி மாங்கு மாங்குனு வேல பாக்குறாங்களே. எத்தனை வருசமா இவுங்க இப்படி இருக்காங்க ? இத மொதல்ல மாத்தணும். " என எண்ணி வருந்தியது.
மேலும் பெண்களைப் பற்றித் தன் தந்தை கூறியதை நினைத்துக்கொண்டாள்.
"பெண்கள் எப்பவும் அவுங்களோட தைரியத்தையும்...
ஊர் பஞ்சாயத்து– 9
கதிரவனை அருகிலிருந்து பார்க்க முடிந்த குதூகலத்தில் கனல் விழி துள்ளி குதித்தபடி மனதில்," இன்னும் நாலுநாள் இருக்கு. அதுக்குள்ள அவரை இன்னும் தெருஞ்சுக்கணும். முடிஞ்சா ஒரே ஒரு வார்த்தையாவது பேசணும்" என எண்ணம் கொள்ள, அதைத் தடை செய்யவென வந்தது கந்தசாமியிடமிருந்து அழைப்பு.
"மச்சா, தேவிக்கு உடம்பு சுகமில்லை. கொஞ்சம் விழியை...
காதலின் கண்ணாமூச்சி -28
காதல் கண்ணாமூச்சியோ ?
கொண்டவனிடம் மட்டும் சொல்லாமல்
கொண்டாடுகிறாள் ஊர் உலகோடு
அவனோடு உண்டான காதலை
லிங்கத்திடம் முறையிட மகேஷ் மற்றும் சுந்தரின் பெற்றோரும் உறவினரும் வந்திருந்தனர்.ஆனால் அடாவடியாக இல்லை, அமைதியாகவே; அவர்களின் விண்ணப்பம் இந்தப் பிரச்சனையைக் காவல் நிலையால் நீதி மன்றம் என்று எடுத்துச் செல்லாமல் ஊர் பஞ்சாயத்தில் வைத்து முடித்துக்கொள்வோம் என்பதே.
ஒருவேளை...
தாயும் மகனும், தந்தையும் மகளும் - 18
பார்வதி போட்டதைப் போட்டபடி கிளம்ப, பாரிஜாதம் பார்வதியின் வழியை மறித்து நின்றிருந்தார்.
"அண்ணி, கதிரவண்ட பேச போறீங்களா?"
"ஆமா அண்ணி"
"சந்தோசம். ஆனா அவனை நான் பண்ணின கொடும கொஞ்சமா நஞ்சமா, இப்ப கூட அண்ணனுக்காத்தான் ஒத்துக்கிட்டேன். நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா சத்தியமா சொல்லுறே, கல்யாணம் கட்டிகிட்ட புறவு...
யாரிவளோ-2
கண்ணீராலே பூக்கின்றவள் தான்
பெண்ணென்ற எண்ணத்தை
கையோடு கொய்து செல்கிறாள்
பெண்ணவளின் தைரியத்தாலே - கனல்விழியை முதன் முதலில் பார்த்த கதிரவன்.
அனைத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களும் மாணவிகளும் தம் தம் பள்ளியின் சார்பாகவும் வகுப்பின் சார்பாகவும் கூடியிருக்க, பெண்கள் கூட்டத்தை அரும்பு மீசை கொண்ட காளை கூட்டங்கள் அந்தந்த வயதிற்கே உரிய ஆர்வ பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வரிசை வரிசையாக மரப்பலகை...
மகனோ தந்தையோ -5
"அய்யா கதிரு... என்னய்யா நடக்குது இங்க? நீ எதுக்குயா ஊரவிட்டு போவணு ?" எனக் கேட்க, "அம்மா நீ எதுக்குப் பஞ்சாயத்துக்கு வந்த? உன்னோட தலகட்டு தலைவர பாரு...பாத்தே உன்ன பஸ்பமாக்கிடுவாரு போல. மொத கிளம்பு. மிச்சத்தை நாளைக்குத் தோப்பு வீட்ல பேசிகலாம்" என தாழ்வான குரலில் முணுமுணுத்தபடி அவரை அங்கிருந்து...
பவள மல்லி - 31
ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் பாண்டி. "டேய் இப்ப என்னத்துக்கு இவ்ளோ சீன் போடற ?" என்றபடி வந்தமர்ந்தார் சக்கரை. "டேய் எம்புட்டு பெரிய விஷயம் நடந்து போச்சு...கவலைப்படாம எப்படி டா இருக்கச் சொல்லுற ?" எனக் கேட்க, "அப்படி என்ன நடந்துச்சு...?" எனச் சக்கரை யோசிக்க, பற்களைக் கடித்தபடி பாண்டி,...
இருமனமும் திருமணமும் – 22
"ஒரு நிமிஷம்" எனக் கனத்த அமைதியில் ஊடுருவிய குரல் பார்வதியுடையது. கந்தசாமி என்ன என்பதாய் நின்றிருக்க, அவரது தோரணையே எதையும் கேட்கவோ பேசவோ விருப்பம் இல்லாததைக் காட்டவே,
அதைப் புரிந்துகொண்ட பார்வதி, "அண்ணே! உங்கள நிப்பாட்டுனது விளக்கம் சொல்லவோ விளக்கம் கேட்கவோ இல்ல" என ஆரம்பிக்க,
பாரிஜாதம் இடை புகுந்து,...
கந்தசாமி சென்றுவிட, விழி தூணின் மீது சாய்ந்து இலக்கே இல்லாமல் தூரத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.
அதே சமயம் பார்வதி பாரிஜாதத்திடம் தாலியை பற்றிக் கேட்க, மச்சக்காளை பாரிஜாதத்தைத் தேடி அந்த வழியே வந்துகொண்டிருந்தார். அப்போது சரியாகப் பாரிஜாதம் சற்று முன் மாறனை வைத்துப் பேசிக்கொண்டிருந்த இடமான ஓட்டுவீட்டிற்குள் நுழைய அதைப் பார்த்துவிட்ட பார்ஜிதாமோ,
"கோவில் பின்னாடி...
சாந்தினி - 11
அடுத்தடுத்து வந்த நாட்கள் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது. விழி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு சென்றிருந்தாள். தேவியின் உடல் நலமும் தேறியிருந்தது. கதிரவனின் இறால் பண்ணை வேலை ஐம்பது சதவீத நிறைவு பெற்றிருந்தது.
இப்படியே நாட்கள் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்க, கனல் விழியன் நெஞ்சில் கதிரவனின் மீதான காதல் பிறந்து...
பூக்கரமோ பூகம்பமோ – 3
வளைக்கரத்தில் வன்மையா ?
மைவிழியில் எரிமலையா ?
பெண்ணவள் சீற்றம்கொள்ள
ஆழ்கடலும் அடக்கம் கொள்ளும்
"டேய் பாண்டி, ஏண்டா அவரோட வம்பு வளக்குற" எனக் கேட்டபடி வந்தான் கதிரவன்.
"என்ன நடந்துச்சுனு தெரியாம அட்வைஸ அள்ளி விடாத. கொஞ்சமாச்சு மிச்ச வையேன் மாப்பு. நாளைக்குப் புள்ளகுட்டி பொறந்தா அதுகளுக்கு மிச்ச மீதி...
"கதிர், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்த தாமஸ் சொன்னாரு. என்னால நம்பவே முடில. நீங்க சொல்லவே இல்லையே" எனக் கேட்க, சிறிது தயங்கினாலும் பின் தெளிவான குரலில், "ஆமா சார். சொல்ல கூடிய சூழல்ல நடக்கல. ஒருவிதக் கட்டாயத்துல நடந்தது. அத பத்தி மேற்கொண்டு பேச வேணாம்னு நானா யார்கிட்டையும்...
கல்யாணவீட்டின் கலாட்டாக்கள் -8
"நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு? எதுக்கு இந்தக் கொலவெறி" எனப் பாண்டி கேட்க,
சக்கரையும் அதையே ஆமோதித்தான்.
"இப்ப ரெண்டுபேரும் ஏன் பேய உளவு பாக்க சொன்னமாரி பதறுறீங்க?" எனக் கேட்க,
"பேய கூடப் பாத்துடலம்மா. ஆனா இந்தச் சாமியார பாக்குறது ரொம்பக் கஷ்டம். அதுவும் அவன் கூட இருந்துகிட்டே அவன் போறவர...
நின்மேல் காதலாகி நின்றேன் கனலியே -30
சார் என்ற அழைப்புடன் நெய்தல் பன்னைக்கு வந்து நின்றான் மாரிமுத்துவின் வாக்குமூலத்தைப் படம்பிடித்த காமெரா மேன்.
"என்னையா சார்னு சொன்ன? மேல சொல்லு?" என்ற படி பாண்டி பந்தாவாகக் கேட்க,
"கதிர் சார்கிட்ட இத கொடுக்க வந்தேன். அவரு இல்லைங்களா ?"
"இல்லை! வெளில போயிருக்காரு. என்கிட்ட கொடு. கொடுத்திடறேன்"
"அதுவந்து சார். அவருகிட்டத்தான்...
ஏன் நீ பொய்யே பேசமாட்டியானு நான் ஓட்டுனேன்.
அதுக்கு அவ சொன்னா, 'பொய் எப்பவும் எனக்குப் பிடிக்காது. ஆனா சில நேரத்துல ஒரு பொய் உயிரையோ வாழ்க்கையையோ மாணத்தையோ காப்பாத்தும்னா அப்ப பொய் சொல்றது தப்பே இல்ல' அப்படினு டீச்சர் போலப் பாடம் எடுத்து என்ன கொன்னுட்டா.
அயோ நான் பாட்டுக்கப் பேசிக்கிட்டே இருக்கேன். உங்களுக்குச் சோலி...
விழியின் பார்வையில் காதல் – 26
"மாமா" என ஓசைவராமல் உதடைசித்து மெல்ல முணுமுணுத்துக்கொண்டவள், வேகமாகக் கைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, "மாமா... மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. அப்பா எப்படி இருக்காங்க மாமா ? ஹெலோ மாமா இருக்கீங்களா ?" என எதிர்முனையில் முருகேசன் பேசும் முன்பாகப் படபடவென்று பேச, "பாப்பா ஏன்மா...
திருமாங்கல்யம் – 20
மறுநாள் காலை பெரியவீட்டில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பெரிய சப்தத்துடன் ஒலித்த திரைப்படப் பாடல்களில் தான் பொழுதே விடிந்தது. ஊரே வண்ண வண்ண துணி உடுத்தி அலங்கரித்துக்கொண்டு திடீரென்று அறிவிக்கப்பட்ட கல்யாணத்திற்குப் படை எடுக்க, மதுரையிலிருந்து வந்த பேருந்தும் கனல்விழி தன் தந்தையுடன் வந்த பேருந்தும் ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில்...