Advertisement

நின்மேல் காதலாகி நின்றேன் கனலியே  -30
சார் என்ற அழைப்புடன் நெய்தல் பன்னைக்கு வந்து நின்றான் மாரிமுத்துவின் வாக்குமூலத்தைப் படம்பிடித்த காமெரா மேன்.
“என்னையா சார்னு சொன்ன? மேல சொல்லு?” என்ற படி பாண்டி பந்தாவாகக் கேட்க,
“கதிர் சார்கிட்ட இத கொடுக்க வந்தேன். அவரு இல்லைங்களா ?”
“இல்லை! வெளில போயிருக்காரு. என்கிட்ட கொடு. கொடுத்திடறேன்”
“அதுவந்து சார். அவருகிட்டத்தான் கொடுக்கணும் சொல்லிருக்காரு” எனத் தயங்கியபடி கூற, “டேய் ! என்னையும் என் மாப்பிள்ளையும் வேற வேறன்னு பிரிக்கப் பார்க்கிறியா ? அடே அந்த அரிவாளை எடுங்கடா” என ஆட்டம் போட, நமக்கெதுக்குடா வம்பு என்ற பாவனையில் அவன் சிடியை கொடுத்துவிட்டு செல்ல, “நம்மள பார்த்துப் பயப்படறான் ? லூசா இருப்பானோ” என அதிமுக்கிய சிந்தனையுடன் அதை பையிலிருந்து வெளியே எடுத்துக் கை விரலில் மாட்டிக்கொண்டு, “பார்க்க பொரட்டா போல வட்டமா இருக்கே… ஐயோ ரொட்டியை நினைச்சதும் பசி வந்திடுச்சே” எனப் புலம்பியபடி சீடியை அப்படியே மேஜை மீது வைத்தான்.
“என்னடா பண்ணிட்டு இருக்க? இந்தா சாப்பிடு” எனக் கூறியபடி கையில் ஒரு பார்ஸலுடன் அடுத்து வந்து நின்றான் சக்கரை.
“வா மாப்பி. பொரட்டாவா கொடு கொடு. டேய் எனக்கொரு விஷயம் சொல்லு.இந்தக் கதிரவன் மாப்பு ஏதோ சி.பி.ஐ. ல சேர்ந்த மாதிரி நேத்திருந்து சுத்திக்கிட்டு இருக்கான். உனக்கெதுவும் தெரியுமா ?” எனக் கேட்டபடி, சக்கரை கொண்டு வந்த பரோட்டா பார்ஸலை பிரித்தபடி, “டேய்…சக்கர இப்ப சொல்றேண்டா. நான் கேட்காமலே ரொட்டி கொண்டுவந்த நீ தான் என் உயிர் பிரண்டன் மச்சான்”
“இதென்னடா பிரண்டன்?”
“பிரண்டும் நண்பனும் சேர்ந்து பிரண்டன் மாப்பு. புதுசா கண்டுபிடிச்சேன். இப்படி இன்னும் புதுசு புதுசா கண்டுப்பிடிக்கலாம்னு இருக்கேன்.”
“ஏண்டா இந்தக் கொலவெறி?”
“என்னது கொலைவெறியா? இது சயின்டிஸ்ட் ஆகணும்ங்கிற வெறிடா”
“ஹ்க்கும்… நீ சாதாரணமா பேசுறதே சகிக்கல. இதுல சைட்டிஸ்ட்டா வேற ஆகாதடா ?”
“டேய்…….
சுடச்சுட சுடுறது வட
நான் புதுசா யோசிக்கிறதுக்கு
போடமுடியாது தட
பரப்பிக்கிடத்துக்குப் பலகாரம் – அத சாப்பிட்டுக்கிட்டே
பாண்டி எடுக்கப்போறான் புது அவதாரம்” என ரொட்டியை கையில் வைத்துக்கொண்டு கூற,
“ஆமா இப்ப எதுக்கு இந்தப் புது அவதாரம்? நான் தெருஞ்சுக்கலாமா ?” என சக்கரை வினவினான்
“கண்டிப்பா! அந்த மிட்டாய் பிள்ளை இங்கிலிஷ், நான் தமிழ். அவளும் நானும் நாங்களாகத் தான் இந்தப் புதுப் புது வார்த்தைகள்”
“மிட்டாய் பிள்ளையா..?” எனப் புரியாமல் சக்கரை கேட்க,
“பாப்பின்ஸ் டா…சேனாதிபதி சார்கூட வந்துச்சே”
“அடே! அவ பாப்பி டா. “
“அது என்னமோ மாப்பி, திங்கிற ஐட்டமா இருந்தா மனசுல பபுள்கம் மாதிரி பச்சக்குனு ஒட்டிக்கிது. பாப்பியோ காப்பியோ… எதோ ஒன்னு. ” எனப் பாவமாகக் கூற, அவர்களின் உரையாடலின் தலைவியே அங்கு வந்து நின்றாள்.
“ஹாய்…” என்றபடி வந்தவள் பாப்பியே!
சக்கரை வரவேற்பாக, ‘வாங்க மேடம்’ எனக் கூற, பாண்டியோ அவளைப் பார்த்தது பார்த்தபடி கைகளில் இருந்த பரோட்டாவை அப்படியே கீழே போட்டவன் எழுந்து நின்று உலகத்தை வாயில் காட்டும் மாயக்கண்ணனாய் ‘ஆ’ வென்று வாய் திறந்து நின்றிருந்தான்.
நழுவி விழுந்த பரோட்டா சீடியின் மீது விழ, அதைக் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.
“ஹெலோ மாஸ் பாண்டி” எனக் கை நீட்ட, வேகமாக வேஷ்டியில் கைகளைத் துடைத்தவன் “ஹலோ” என்றான் வாயெல்லாம் பல்லாக.
பாப்பியின் உரையாடல் ஆங்கிலத்திலே இருந்தது. அவள் ஆங்கிலத்தில், “மாஸ் பாண்டி…” என்று அழைத்து, என்ன எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள் எனக் கேட்க, இவனுக்கோ முழுவதுமாகப் புரியாமல் போனாலும் அவளின் செய்கைகளை வைத்து, “மானம் போச்சுடா சோமாசு” எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, ”ச்சா சா..நான் சோமசு இல்ல . மாஸ்…மாஸ் பாண்டி. பாண்டி மொதல்ல வீட்டுக்கு போய் உன்னோட பேரு மாஸ் பாண்டினு மனப்பாடம் பண்ணனும்” எனச் சொல்லிக்கொண்டான்.
மனதோடு சொல்லிக்கொண்டதை மறைத்து, வெளியே, “நோ…ஐ ஈட் நோ. ஐ கிவ் பரோட்டோ ஒர்க்கர் ஈட்” எனத் தட்டு தடுமாறி கூற, பாப்பியோ சிரித்தபடி, ஆங்கிலத்தில்,
“கிரேட்…யூ கன்டினியூ டிஸ்” எனக் கூற, “ஓகே சோர் சோர்” எனச் சுயூரை அப்படிக் குறிப்பிட்டபடியே மேற்கொண்டு அவனுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனைத்தையும் எடுத்து மீண்டும் இலையில் வைத்துப் பொட்டலம் கட்ட, பரோட்டாவோடு சேர்த்து சீடியும் அதில் கட்டப்பட்டது.
பாப்பியோ நான் ஒன்று சொல்லவா என்று ஆங்கிலத்தில் வினவினாள்.
மறுபடியும் சுயர் என்பதைப் பாண்டி வேகமாக, “சோர்” எனக் கூற, பாப்பி வாய்விட்டு சிரிக்க, சக்கரையோ மனதில், “டேய் அது சோறு இல்ல டா..சுயர்” என கிண்டலடிக்க
எனக்கு ஓரளவு தமிழ் புரியும். ஓரிரு வார்த்தைகள் தடுமாறி பேசவும் தெரியும். பெரிதாகவோ நீளாமாகவோ வேகமாகவோ பேசினால் மட்டும் புரியாது. அதனால் தமிழிலே கொஞ்சம் மெதுவாகக் கூறினால் புரிந்துகொள்வேன். பாவம் ஆங்கிலம் இன்னும் கொஞ்சகாலம் உயிரோடு இருக்கட்டுமே, விட்டுவிடுங்கள் என்று கூற,
இப்போதோ சக்கரை வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, பாப்பியும் புன்னகை முகமாகவே நிற்க, பாண்டியோ சக்கரையைப் பார்த்து பல்லை நறுநெறுவென்று கடித்தபடியும் பாப்பியை பார்த்துச் சங்கடமாகச் சிரித்தபடியும், “சரி பாப்பின்ஸ்” எனச் சொல்லி வைத்தான்.
அதற்கும் பாப்பி சிரித்தபடி, “ஐ லைக் டிஸ் நேம் ” எனக் கூறிவிட்டு சக்கரையுடன் பண்ணையில் பதப்படுத்தப்பட்ட இறாலை பார்க்க சென்றாள்.
‘மாட்டுக்கு பருத்திக்கொட்டை
என்னோட மானம் போச்சு இவகிட்ட’ என வருத்தமாக நினைக்க நினைக்க பாண்டியினுள் பசி புயல் கிளம்பியது.
அவனது மனமோ, “ரொம்ப அசிங்கமா போச்சு. இந்த துக்கத்தை மறைக்க துயரத்தை தொடக்க நான் உடனே சாப்பிட்டாகணும். இந்த ரொட்டி வேற என்ன வா வா னு கூப்பிடுதே… சாப்பிடறப்ப வந்துட்டா என்ன பண்றது ?’’ என பலவாறாக யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
அதே நேரம், கதிரவனின் பாதையில் எதிர்பட்டாள் முல்லை.
“அண்ணே! எப்படி இருக்கீங்க” தயக்கத்துடனே ஒலித்தது முல்லையின் குரல். அவனின் திருமணத்திற்குப் பிறகு இன்று தான் முதன் முதலாகப் பேசுகிறாள். அவ்வப்போது விழியிடம் பேசினாலும் எப்படி அவள் கழுத்தில் அந்தத் தாலி வந்ததென்ற உண்மையைக் கனல் விழி முல்லையிடம் கூடச் சொல்லவில்லை. அதே சமயம் கதிரிவனுக்கு அப்போது நிச்சயமாக விருப்பம் இல்லையென்று அவன் இயந்திர கதியில் மாங்கல்ய நாண் பூட்டியதிலிருந்து முல்லை உணர்ந்துகொண்டாள். அதனால் அவனுடன் பேச தயக்கம்.
ஆனால் சமீபமாக, முருகேசன் முல்லையிடம் கதிர் மனம் மாறியிருக்கிறான் என்று கூறவே, அது முல்லைக்கு இலேசான தையிரியத்தை அளிக்க, கோவில் சென்றுவிட்டு வருகின்ற வழியில் அவனைப் பார்த்தவள் மெல்ல பேச துணிந்தாள்.
“ஹ்ம்ம் நல்லா இருக்கேன் முல்லை… நீ எப்படி இருக்க மா?”
“அப்பாடா…இப்பதான் எனக்கு மூச்சே வருது. எதுவும் கோபத்துல வெடுக்குனு பேசிபுடுவீங்களோனு பயமா இருந்தது. நல்லா இருக்கேன் அண்ணே.
என்ன இப்படிக் கால் நடையா போறீங்க ? இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி இருப்பீங்க ? ஒரு பைக் வாங்கலாம்ல அண்ணா. கெத்தான பெரிய வண்டியா வாங்குங்க” எனக் கூற,
“எல்லாம் நம்ம ஊரு தான முல்லை. வெளியூருக்கு பஸ்ல போவேன். அதுனால யோசிச்சதில்லை. சரி வாங்குவோம். நீ சொல்றது சரிதான். ஆமா அது என்ன கெத்தா வாங்க சொல்லுற ? சாதா வண்டியெல்லாம் வாங்க கூடாதா ?”
“ஹக்கும் நல்லா கேட்டீங்க போங்க. விழி எப்பவும் நீங்க கெத்து கெத்துனு மூச்சுக்கு முன்னுரு முறை சொல்லுவா. அப்போ வண்டியும் அப்படி வாங்குனா தான நல்லா இருக்கும்… அதா சொன்னேன் அண்ணா” எனக் கூறிவிட்டு மெல்ல, “அண்ணே விழி எப்படி இருக்கா ?” எனக் கேட்க, கதிரவனோ “ஹ்ம்ம் நல்லா இருக்கா” என்பதோடு முடித்துக்கொள்ள, அவர்களருகில் அழையா விருந்தாளியாய் வந்து நின்றார் ரோசா.
“அடடா அண்ணனு தங்கச்சியும் ரோட்ல நின்னா பேசுறது. கல்யாணம் எப்படி நடந்தாலும் பொண்ணெடுத்த வீட்டு பொண்ண வீதில நிக்க வச்சா பேசுவ கதிர் தம்பி ?”
“அயோ…அக்கா. அண்ணே பேசல. நானேதான் நின்னு பேசுனே”
“அப்படியா? அப்போ உங்க அண்ணே உண்ட மூஞ்சி கொடுத்துக்கூட நல விசாரிக்கலியா ? என்னடா இது காலக் கூத்தாவுல இருக்குது ? சரி அது கிடக்கட்டும், கதிர் தம்பி நீயும் பொஞ்சாதியும் சேர்ந்து மயிலை காப்பாத்துனீங்களாம் ?
பரவாயில்லையே! திருட்டுத்தனமா கடல்ல சுத்தத்தான் செய்வீங்கன்னு பார்த்தா நல்லதும் பன்னீருக்கீங்க” என எகத்தாளமாகக் கூறியபடி மேற்கொண்டு அவர்களின் வாயை பறிக்க முயல ,
“அக்கா…வீட்ல உம்ம வீட்டுக்காரர் இருக்காரா?” எனக் கதிர் திடீரென்று கேட்க, எதுக்கு என்பதாய் அவருடைய பாவனை இருந்தது.
கதிரவனே தொடர்ந்து, கை முஷ்டியை மடக்கி அடிப்போது போன்ற பாவனையில் வைத்துக்கொண்டு, “அவரைக் கொஞ்சம் தோப்பு வீட்டுக்கு என்ன பாக்க வர சொல்றீகளா ? தனியா . அவருகிட்ட உனக்குச் சொல்லி தர சொல்லி சொல்ல நிறைய விஷயம் இருக்குது” எனக் கூற, கதிரவனின் உடல் மொழியில் என்ன புரிந்துகொண்டாரோ, “இல்ல தம்பி. அவருக்குச் சோலி கிடக்கு. அட! பாத்தியா மறந்துட்டே. எனக்கும் சோலி கிடக்கு. நான் வாரேன்” என உளறிவிட்டு அவசர அவசரமாக இடத்தைக் காலி செய்தார்.
ஹா ஹா….என்ற சிரிப்புடன், “சூப்பர் அண்ணா. அன்னைக்குத் தற்செயலா போனத இந்த ரேடியோ அக்கா இம்புட்டுப் பெருசா கத கட்டுதே. சொல்லப்போனா தப்பு என் மேலதான். நான் என்னோட மாமாகூடப் பேசணும்னுதான் என்ன விட்டுட்டு அவ மட்டும் சிலுவை தாத்தா கூட வந்தா.
உங்க பிறந்தநாளுன்னு ஆசையா வந்தா ஊர்ல இருந்து. உங்கள பாக்கமுடிலனு வருத்தம் வேற. ஆனா நல்ல வேலையா உங்க கூடப் படகு சவாரியே பண்ணிட்டா.
என்ன.. லாஸ்ட்ல தான் இந்த அக்கா புகுந்து ஆட்டைய கிளச்சிடுச்சாமே. அன்னைக்கு உண்மையிலயே இவுங்ககிட்ட பொய் சொன்னது நான் தான் அண்ணா. விழி சொல்லல. நான் சொன்னதுக்குகூட என்ன திட்டுனா.
அதே நேரம் கீழே, விழியின் பின்னே நிழலாகக் கதிரவன் செல்ல, விழி தாழ்வாரத்திற்குள் நுழைந்தாள். நான்கு ஜன்னல்களும் திறந்திருந்தால் அந்த அறையில் விளக்கு ஏரியாதது ஒரு குறையாக இல்லை. மேகம் அவ்வப்போது மறைத்து விலகும் மெல்லிய நிலவின் வெளிச்சம் ஜன்னல் வழி உடலை துளிர்த்த குளிர்காற்று, நாசியை வருடிய மண் வாசனை என அனைத்தையும் ரசித்தபடி நினைவுகளில் கதிரவனைச் சுமந்தபடியே நிஜத்தில் பின் வருபவனைக் கவனிக்காமல் உழ நுழைந்தாள்.
அந்தக்காலத்தில் கட்டப்பட்ட பலவீடுகளில் பெரும்பாலும் தாழ்வாரத்தின் நிலை சற்று உயரத்தில் சிறியதாக அமைத்திருப்பார். கூடவே நிதானமான அளவில் ஓட்டையும் (பொந்து) வடிவமைத்தே காட்டியிருப்பார். நெல் , மிளகாய் போன்ற பொருட்கள் மூடை கணக்கில் மொட்டை மாடியில் உளரவைக்கும் பொழுது, அவை காய்ந்த பிறகு அனைத்தையும் மூட்டை கட்டி மீண்டும் படியில் இறக்கி கொண்டு வந்து தாழ்வாரத்தில் போடுவதற்குப் பதிலாக, அந்தப் பொந்தின் வழி அப்படியே சிறுக சிறுக தள்ளிவிட, சின்னச் சிறிய குன்றை போல நெற்மணிகள் தாழ்வாரத்தில் குவிந்துவிடும். குவிந்ததைப் பன்னை ஆட்கள் மூட்டை கட்ட, தாழ்வாரத்திற்கு அடுத்தாற் போல் உள்ள நிலவறையில் பக்குவப்படுத்தி வைத்துவிடுவார்கள். மற்ற நேரங்களில் அந்தப் பொந்தின் வாயில் திறந்திருக்கக் கூடாது என்பதற்காகச் சல்லடை கம்பி வட்டவடிவில் அடைத்து அதற்கு மேலே கல்லினால் ஆனா சிறிய மூடி கொண்டு மூடிவிடுவர். இந்தப் பொந்து மாடியில் தரையோடு தரையாகவே இருக்கும். அமைக்கப்பட்டிருக்கும் இடமும் மற்ற இடங்களை விடவும் சற்று தாழ்வாக இருக்கும்.

Advertisement