Saturday, May 4, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 136 2

    “நஸ்ரியா! நீ வந்ததை நான் கவனிக்கலயே!” “நான் கவனிச்சேனே! நீ புது அழகோட ஜொலிக்கறே! முகத்துல சந்தோசம் மின்னுது.” “வானிலை நல்லா இருக்கே, அதனால இருக்கலாம்.” “போயேன்! ஆர்யன் சார் உன்னை மகிழ்வா வச்சிருக்கார், அதான் காரணம்.” “அப்படியா?” என அவள் வெட்கப்பட, அவளின் வெட்கத்தை ரசித்தபடி ஆர்யன் கதவருகே வந்து நின்றான், எப்போதும் போல. “ஆமா, எனக்கு உங்களை பார்த்தா...

    PKV 136 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 136 ஜவேரியா ஒளித்துவைத்த இடத்திலிருந்து அவளின் போனை எடுத்த சல்மா, அதில் கரீமா பேசிய ஒலிப்பதிவை தேட, ரொட்டிகளை பிரித்து வெண்ணெய் தடவியபடியே குலாம் அவளை மறைத்துக்கொண்டு நின்றாள். சல்மா அதை கண்டுபிடித்த பின்னர் குலாம் அவளின் அலைபேசி எண்ணை அதில் இட, ஒலிப்பதிவு இடமாற்றமாகிக் கொண்டிருந்தது. “சீக்கிரம்!” என...

    PKV 135 3

    மறந்துவிட்ட தன் செல்பேசியை எடுக்க வந்த ஆர்யன், வரவேற்பறையில் நின்று ருஹானா போன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டான். “........இதான் பர்வீன் அம்மா நடந்தது. நீங்களும் எங்க கல்யாணம் நிஜம்ன்னு சொன்னீங்க, இப்போ இவரும் அப்படியே சொல்றார். ஆனா நான் என்ன செய்றது? எல்லாமே வேகமா நடந்தது. ஃபார்மாலிட்டிக்காக நிக்காஹ் செய்தோம். மத்தவங்க போல எங்களுக்கு எதுவும் நடக்கல....

    PKV 135 2

    கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, திரும்பி பார்த்த ஆர்யன் பேருவகை கொண்டான். படுக்கையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்த ருஹானாவின் கையில் ஒட்டி தைக்கப்பட்ட சிவப்புநிற இதயத்தின் வடிவிலான தலையணையும் இருந்தது. “நேரமாகிடுச்சே! நான் உங்க படுக்கையை தயார் செய்றேன்” என்று அவள் சொல்ல, உள்ளத்தின் பூரிப்பில் அவன் நகராது நின்றான். “நீ திரும்பி வந்திட்டே!” “ஆமா, வந்துட்டேன்!” ஆர்யனின் பார்வை...

    PKV 135 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 135 கடத்தல்காரர்களிடமிருந்து தகவல் வந்தால் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு தன்வீர் பிடிபட்டவனோடு காவல்நிலையம் சென்றுவிட, கரீமாவிற்காக கவலைப்பட்ட ஆர்யனுக்கு ருஹானா நம்பிக்கை அளிக்க, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ருஹானா தயக்கமின்றி தன் கையை பற்றுவது கண்டு வியந்த ஆர்யனுக்கு அவள் துணையில்லாமல் சிரமமான இக்காலத்தை கடந்திருக்க முடியாது எனவும்...

    PKV 134 3

    இருட்டில் உருவம் தெரிய ஆர்யன் விளக்கை போட்டு பார்க்க, ருஹானா கண்ணீருடன் அமர்ந்திருப்பது கண்டு பதறியவன் “ஏன் அழறே?” என்று வினவ, அவள் அதற்கு பதில் சொல்லாமல் “அம்ஜத் அண்ணா தூங்கிட்டாரா?” என கேட்டாள். அவன் ஆமென தலையசைத்தான். “நீங்க உங்களையே குற்றம் சாட்டிக்காதீங்க. நீங்க நல்ல சகோதரன். உங்க கூட இருக்கறவங்க எப்பவுமே துன்பப்பட...

    PKV 134 2

    ஜவேரியா சல்மாவிடம் “பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க. இன்னைக்கு சாயந்தரம் பணத்தை வாங்கிட்டு உன் அக்காவை ஒப்படைச்சிடுவோம்” என்று சொல்ல, அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இல்ல, இல்ல, இன்னும் ஒரு நாள் போகட்டும்.” “அதுவரைக்கும் உங்க அக்காவை வச்சி ஊறுகாயா போடுறது? இன்னும் என்ன செய்ய சொல்றே? அவ கை, காலை உடைக்கவா?” “என்ன செய்யணும்னு நான் சொல்றேன்.” ------- அம்ஜத்...

    PKV 134 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 134 “ஆர்யன்! வந்துட்டியா? நான் உனக்கு ஒன்னு காட்டணும். வா வா! இந்த பூச்செடி பார்த்தியா? இது உறைஞ்சி போய் வாடி இருந்ததுல? இப்போ பாரு! புது துளிர் விட்டுருக்கு” என்று அம்ஜத் மகிழ்ச்சியோடு அழைக்க, ஆர்யனும் ஆவலோடு அருகே சென்றான். “தெரியுது அண்ணா!” “இந்த செடி பிழைச்சிடுச்சி. நீ...

    PKV 133 3

    “குட்மார்னிங் சித்தி! சாக்லேட் அக்கா பத்தி சித்தப்பா சொன்னார். நீங்க வருத்தமா இருக்கீங்கன்னு சொன்னார். எனக்கும் அவங்களை பிடிக்குமே! எனக்கும் கவலையா தான் இருக்கு. ஆனா அவங்க சீக்கிரமா குணமாகிடுவாங்க, சித்தி! நாம அவங்களுக்காக துவா செய்வோம்.” அணைத்துக்கொண்டு முத்தமிட்ட இவானின் கன்னத்தில் ருஹானா தானும் முத்தம் தந்தாள். “கண்டிப்பா செய்வோம் கண்ணே!” “வாங்க சித்தி! நாம...

    PKV 133 2

    “ஹல்லோ மிஷால்! என்ன நடந்தது? இங்க எனக்கு ஒண்ணுமே ஓடல! ஆர்யன்ட்ட என்ன சொன்னே?” “கரீமா மேம்! நான் உங்களை காட்டிக்கொடுக்கல. உங்களை பத்தி அவன்கிட்டே எதுவும் சொல்லல.” “நன்றி மிஷால்! நீ இவ்வளவு நல்லவனா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல. நம்ம எல்லாருக்கும் நல்லது செய்திருக்கே! என் பேரை சொல்றதால யாருக்கும் எந்த பயனும் இல்ல. ஆனாலும்...

    PKV 133 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 133 ஆர்யனின் அலுவலகத்தில் மிஷாலை ஒரு நாற்காலியில் அமரவைத்து இருவர் பிடித்துக்கொண்டிருக்க, கோபமாக உள்ளே நுழைந்த ருஹானாவை பார்த்ததும், மிஷால் திமிறி “ருஹானா!” என எழ முயன்றான். அவனை அவர்கள் அழுத்திப்பிடிக்க, ரஷீத் ருஹானாவின் பின்னால் நின்றான். ஆர்யன் வாசலிலேயே நின்று கொண்டான். மிஷாலை வெறுப்புடன் நோக்கிய ருஹானா “நீ...

    PKV 132 3

    காலையில் அறைக்குள் வந்த இவான் “சித்தப்பா! நீங்க ஏன் கவலையா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். சித்தி சொல்லிட்டாங்க. உங்க சண்டைக்கு நீங்க தான் காரணமா?” என்று கேட்டான். “உன் சித்தி சரி தான் சிங்கப்பையா!” “சித்தப்பா! நான் கூட நஸ்ரியா அக்கா கூட ஒரு தடவை சண்டை போட்டேன். அப்புறம் அவங்க கிட்ட ஸாரி சொல்லிட்டு கையை...

    PKV 132 2

    படுக்கையறையிலிருந்து ஆடையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பும் ருஹானாவை வழிமறித்த ஆர்யன் “எனக்கு தெரியும், நீ என்மேல கோபமா இருக்கே! நான் உன்னை புண்படுத்திட்டேன். ஆனா நாம பேசணும்!” என்றான் உறுதியாக. “சரி, பேசலாம்!” என அவள் அனுமதி கொடுக்க, மிகுந்த தயக்கத்துடன் ஆர்யன் “நான்....” என தொடங்க, கோபத்துடன் ருஹானா இடைமறித்தாள். “இல்ல, இந்த முறை நீங்க...

    PKV 132 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 132 ருஹானாவிற்கு பிடித்ததை செய்து அவளது துயரத்தை மறக்கடிக்கமுடியும் என தப்புக்கணக்கு போட்டு ஆர்யன் செயல்பட, விதி வேறுவிதமாக விளையாடியது. ருஹானா உள்ளே வரவும் புன்னகையோடு அவளை பார்த்த ஆர்யன், மாலையில் பார்த்த அவளின் முகமலர்ச்சி இப்போது அடியோடு காணாததை கண்டு திகைத்தான். தளர்ந்த நடையுடன் அவள் நெருங்க,...

    PKV 131 3

    “ருஹானா! உன்னோட புத்தகம் எத்தனை தேடியும் கிடைக்கவே இல்ல.” “அடடா! அதோட பதிப்பும் நிறுத்திட்டாங்களே தன்வீர்! புது புத்தகமும் வெளிவராதே!” “சித்தி! அது கதை புத்தகமா?” “ஆமா அன்பே! அதிலிருந்து உனக்கு கதை படிச்சி சொல்லணும்னு நான் ஆசைப்பட்டேன்.” “அது என்ன கதை சித்தி?” “ஒரு சின்னப்பொண்ணு தன்னோட உடைந்த இதயத்தின் பாகங்களை தேடி உலகம் பூரா சுத்தி வருவா, கண்ணே!” “எல்லா...

    PKV 131 2

    ஆர்யன் வீடு திரும்பவுமே சமீராவிடமிருந்து அவனுக்கு குறுஞ்செய்தி வந்தது. ‘ருஹானா கவலையா இருக்கறது போல எனக்கு தெரியுது. நீங்க தான் அவங்களை துன்பப்படுத்தி இருப்பீங்க. அவங்க மனசை மாத்தி சந்தோசமா வச்சிக்கோங்க!’ ஆர்யன் ருஹானாவிடம் சென்று “நான் உன்கிட்டே ஒன்னு சொல்லணும்” என்று தயக்கமாக சொன்னான். “இவானை பற்றி தானே?” “இல்ல.. இது வேற” என்று சொன்ன ஆர்யனின்...

    PKV 131 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 131 வாசற்கதவை திறந்த ருஹானா அங்கே நின்ற ஆர்யனின் தோழி சமீராவை பார்த்து திகைத்தாள். “சர்ப்ரைஸ்!” என்று கத்திய சமீரா, சத்தம் கேட்டு அங்கே வந்த ஆர்யனோடு சேர்த்து ருஹானாவையும் இருகைகளாலும் கட்டிக்கொண்டாள். “நான் உங்களை ரொம்ப மிஸ் செய்தேன்!” ருஹானாவின் அண்மையில் ஆர்யன் தடுமாற, ருஹானா “அழகான சர்ப்ரைஸ்!...
    சரமாரியாக அம்புகளை விட்டு முடித்த ஆர்யன் அறைக்கு திரும்ப, சோபாவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் ருஹானாவை பார்த்தான்.  “நான் தப்பு செய்திட்டேன். ஆரம்பத்துல இருந்தே அந்த ஃபைல்ல இருந்ததை நான் நம்பியிருக்கக் கூடாது. என்னோட இருட்டுப் பக்கத்துல உன்னை இழுத்துட்டேன். உன்னை நான் நம்பல. அவநம்பிக்கையால உனக்கு நான் கொடுமை செய்திட்டேன். வருத்தம் தெரிவிக்க...
    அவளை ஆர்யன் குண்டுகட்டாய் வெளியே தூக்கிவந்தான். வாசலில் போலீசை பார்த்ததும் பீதியான சல்மா வீட்டிற்குள் ஓடிப் போக முயற்சி செய்ய, ஆர்யன் அவளை பிடித்து காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தான். ரஷீத்துடன் நின்ற காவல் அதிகாரிகளையும் காவல் வண்டியையும் எதிர்பாராத கரீமா அதிர்ந்து நின்றாள். சல்மாவை மாளிகையை விட்டு ஆர்யன் அனுப்புவான். அதன்பின் தான் பார்த்துக் கொள்ளலாம்...
    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 130 மூடியிருந்த ஆர்யனின் மேசையின் இழுப்பறை சாவியை ருஹானா அங்குமிங்கும் தேட, அது எழுதும் பலகைக்கு அடியிலேயே இருந்தது. சாவிகொண்டு திறந்து அங்கிருந்த எல்லா கோப்புகளிலும் அவசரமாக தேடினாள். அவளுக்கு கிடைத்த ஒரு புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தாள். பர்வீன் வீட்டிலிருந்து அவளது அன்னையின் படத்தோடு கொண்டுவரப்பட்ட அவளது சிறுவயது படம்தான்...
    error: Content is protected !!