Vizhi Veppach Salanam
சலனம் – 22
“தமிழு.’’ அருள் தன் கையை பிடித்து இழுத்து நிறுத்தவும் தான், தன் செயலின் வீரியம் அமுதனுக்கு உரைத்தது. அவன் அப்படியே திகைத்து நிற்க, “நாம இப்படி போகணும்.’’ என்று பற்றிய கைகளை விடாது அவனை வாயிலை நோக்கி வழி நடத்தி வந்தார்.
ரியாசும் சற்றே கலவையான உணர்வுகளில் இருந்தான். இராணி தான் வரிசையில்...
சலனம் – 18
அந்த அறையில் நிசப்தம், அசௌகர்யமான மௌனமாய் சூழ்ந்திருந்தது. நடக்கும் நிகழ்வுகளை நம்ப முடியா பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான் ரியாஸ். அருள் அம்மாவை இதுவரை சாதாரண இல்லத்தரசியாய் மட்டுமே பார்த்திருக்கிறான்.
வாழ்வில் முதன் முறையாக அவரை உடல் முழுக்க மூளை கொண்ட வழக்கறிஞராக காண்கிறான். ரியாஸ் சேலம் சென்ற போது, அவனை வரவேற்றவரிடம், முதலில் தயங்கினாலும்,...
சலனம் – 13
“நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.
வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்.
பண்பு வேண்டும் பணிவும் வேண்டும்...
அன்பு வேண்டும் அறிவும் வேண்டும்...’’
அமுதன் வீட்டு மொட்டை மாடியில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் நிறைய செடி கொடிகள்.. அதன் மேலே ரியாஸ் அவச அவசரமாய்...
சலனம் – 25
இசையின் குடும்பம் உற்சாகமாய் விளையாட்டில் ஆழ்ந்திருக்க, வாயில் மணி அழைத்து அவர்களை கலைத்தது. கணவன், மற்றும் மகள்களின் அருகே அமர்ந்து அவர்களை சுவாரசியமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, ஷாலினி யார் வந்திருப்பது என்று காண எழுந்து சென்றார்.
ஆனால் அப்பொழுதும் மற்ற நால்வரும் தங்கள் கவனத்தை வேறு எதிலும் திசை திருப்பமாமல் சுண்டாட்ட...
ரியாசின் வாகனத்தில் இருவரும் முதலில் கவியை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு, அதன் பிறகே, தங்கள் ஊர் சுற்றலை துவக்கினர். நண்பர்கள் விழாக்களில் சந்தித்துக் கொண்டால் இப்படி வெளிக் கிளம்புவது அவர்கள் வழக்கம்.
ரியாஸ் ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஊர் திரும்பியிருந்தான். இருவருக்கும் பகிர்ந்து கொள்ள...
என்னதான் இருவரும் மழைக் கவச உடைகள் அணிந்து இருந்தாலும், பயணத்தில் இருவரும் முழுதாய் நனைந்து இருந்தார்கள். வீட்டிற்குள் நுழைந்ததும், தன்னுடைய அறைக்குள் சென்று உலர்ந்த உடையுடன் வெளியேறியவன்,
“இசை.. இது என்னோட புது நைட் ட்ரஸ். டீசன்ட்டா தான் இருக்கும். ஹாலை ஓட்டி இருக்க பாத்ரூம் நான் யூஸ் பண்றதே இல்ல. உள்ள ஒரு மெழுகுவர்த்தி...
சலனம் – 17
தெருவில் இறங்கி நடந்த ராகவி, விறு விறுவென நடந்து சிறுவயதிலிருந்து எப்போதும் விருப்பமாய் செல்லும் பெருமாள் கோவில் வாசலில் சென்று நின்றாள்.
இரண்டரை கிலோ மீட்டர்கள் அனாயசமாய் நடந்து வந்திருந்தாள். அப்போது தான் கோவிலில் பெருமாளுக்கு நெய் வேத்தியம் செய்து சர்கரைப் பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
வரிசையில் நின்று அதை ஆவலோடு வாங்கிப் புசித்தவள்,...
அமுதனின் குடியிருப்பு, பதினைந்து நிமிடங்களில் வந்துவிட, காலத்தை சபித்த அமுதன் இசையை தேநீர் அருந்த தன் இல்லத்திற்கு அழைத்தான். இசை மறுக்க தான் நினைத்தாள்.
ஆனால் அவளுக்குமே யாருமற்ற தனிமையில், அமுதனின் கரத்தில் சில நொடிகளேனும் செலவழிக்க தோன்றியது. ஆக அமைதியாய் அமுதனின் சொல் கேட்டு அவன் வீட்டை நோக்கி நடந்தாள்.
கைகள் கோர்த்து, அமுதனின் வீடிருக்கும்...
கடந்த பத்து நாட்களாய் சுற்றி சுற்றி சுழன்றடித்திருந்த மழை சாரல், தூறல் என்று கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. எப்படியும் வெள்ளம் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடும்.
ஆனால் அது ஏற்படுத்தி செல்லும் பொருளாதார பாதிப்புகளை கடக்க, ஓரிரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று மனதிற்குள் அமுதன் நினைத்துக் கொண்டான்.
இவர்கள் பொருளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு...
சலனம் – 8
“ஏ டயரு இன்னும் கொஞ்சம் வேகமா சுத்துடா எரும. இப்ப தான் ரெண்டு டம்ளர் ஜூஸ் குடிச்ச இல்ல. சுத்து.. சுத்து சுத்து....’’ இசை அந்த குட்டிப் படகில் நடு நாயகமாய் அமர்ந்திருக்க, செல்வம் அந்த படகை சுழற்றி விட்டுக் கொண்டிருந்தான்.
இசை வாயின் மேல் கரம் குவித்து. “ஊ..’’ என்று ஒலி...
சலனம் – 15
அந்த தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டு புடவை சரசரக்க அங்கும் இங்கும் கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தார் மரியபுஷ்பம். ஒற்றை மகனின் திருமண வைபவத்தில் அவர் முகம் அத்தனை பூரித்திருந்தது.
ஜோசப் இருதயராஜ் மண மகனுக்குரிய கம்பீர உடையில் இருக்க, ஆலின்லீத்தியால் என்று திருச்சபையில் இரண்டு நாட்களுக்கு முன் ஞானஸ்நானம் பெற்று பெயரோடு...
சலனம் – 23
அமுதன் அழைத்த அலைபேசியை அப்படியே மௌனத்தில் ஆழ்த்திவிட்டு யாழிசையின் முகம் பார்த்தான். அவள் முகமோ கசப்பான உணர்வுகளை பிரதிபலித்து நின்றது.
அவள் ஏன் தன்னிடம் அப்படி ஒரு முகபாவத்தை வெளிப்படுத்துகிறாள் என புரியாத அமுதன் அவள் முகத்தையே பார்த்திருக்க, “நான் இப்படியெல்லாம் உங்ககிட்ட கெஞ்சுவேன்னு நினச்சி தான நீங்க அப்படி ஒரு காரியத்தை...
சலனம் – 27
ரியாசின் திருமணம் கலகலப்பாய் நடந்தேறிக் கொண்டிருந்தது. இஸ்லாம் வழித் திருமண வைபவத்தில் கவியின் சொந்தங்கள் அதிகம் பங்கேற்க மாட்டார்கள் என்றே ரியாஸ் எண்ணியிருந்தான்.
ஆனால் அவர்கள் அந்த எண்ணத்தை பொய்ப்பித்து, நடைபெற்ற ஒவ்வொரு சம்பர்தாயத்தையும் ஸ்ரத்தையாய் கேட்டறிந்து கொண்டிருந்தார்கள். கவி இயல்பாய் ரியாசின் தாய் ஹசீனவோடு ஒன்றிவிட்டாள்.
உம்மா முகம் திருப்பிக் கொண்டால் என்ன...
சலனம் – 11
சொகுசு வசதிகள் அத்தனையும் தன்னகத்தே கொண்ட அந்த சிற்றுந்து மெல்ல மெல்ல மலைகளின் இளவரசனின் உடல் மீது ஊர்ந்து ஊர்ந்து ஏறிக் கொண்டிருந்தது.
மேலே வாகனம் ஏற, ஏற, கீழே இருக்கும் கட்டிடங்களும், வாகனங்களும் சாலைகளும், நவ ராத்திரி கொலுவில் அடுக்கி வைத்திருக்கும் பொம்மைகள் போல தோற்றமளிப்பதை ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தாள் யாழிசை.
அவளோடு...
சலனம் – 9
இசை அந்த இற்றுப் போன பழைய நாட் குறிப்பேட்டை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மின் அஞ்சல் வழியே அலுவகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தாள்.
ஊரிலிருந்து வந்த கவி, அலுவலகம் கிளம்பும் வரை சாதாரணமாய் இருப்பதை போல காட்டிக் கொள்ள அரும்பாடு பட்டுப் போனாள். ஆனால் அவள் உள்ளமோ நடந்ததை எண்ணி சதா ரணமாய்...
சலனம் – 20
ஆறு மாதங்களுக்குப் பின்.
விமான நிலையத்தின் பரிசோதனை பகுதியிலிருந்து வெளிவந்த அமுதனை ரியாசிற்கு ஒரு நிமிடம் அடையாளமே தெரியவில்லை. அருகில் அமுதன் நெருங்கி வர பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான்.
இருவரின் அணைப்பின் அழுத்தமும் உணர்த்தியது அவர்களுக்கான நட்பின் இறுக்கத்தை. நண்பனை சற்று தள்ளி நிறுத்தி மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், “ஆளே மாறிட்டடா...
சலனம் – 10
“ஹாய் யாழிசை..!’’ தன் முன்பு கேட்ட குரலில் இசை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே புன்னகை மன்னனாய் ரியாஸ் நின்றுக் கொண்டிருந்தான். யாரோ என்ற குழப்பத்தில் சுருங்கிய முன் நெற்றி விரிய, முகம் மலர புன்னகைத்தாள்.
“ஹாய் பாஸ்..! என்ன அதிசயமா ஸ்க்ரூ டிபார்ட்மென்ட் தேடி டெஸ்ட்டர் வந்து இருக்கு..?’’ என்று ஆச்சர்ய பாவனையில்...
பின் கதையுரை
அமுதனின் வீடு அத்தனை கொண்டாட்டமாய் இருந்தது. இசையின் இரட்டை சகோதரிகள் தங்கள் கைகளுக்கு எட்டிய இடங்களில் எல்லாம் பலூன்களை கட்டிக் கொண்டிருந்தனர்.
அருள் அம்மா, “அந்த ‘ஆ’ எழுத்து இன்னும் கொஞ்சம் மேல வரணும்டா’’ என ரியாசை வேலை வாங்கிக் கொண்டிருக்க, நான்காவது முறையாக கோணத்தை மாற்றிய ரியாஸ், “இவன் புள்ள பர்த்டே பார்டி...
சலனம் – 19
பானுமதியின் இல்லத்தை அடையும் போது, யாழிசை அழுது சிவந்த விழிகளோடு பானுமதியின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்தாள். இவரை கண்டதும் எழுந்து அவள் உள் சென்றுவிட, ராஜ் அமைதியாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
அவரை வாங்க என்று வரவேற்றவர், அருந்த நீர் கொடுத்து உபசரித்த பின், கவலைக் குரலில், “இப்படி ஆகும்னு நினைக்கவே...
சலனம் – 24
அமுதனுக்கு அன்றைய பொழுது வழமையாய் தான் விடிந்தது. தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காபி கோப்பையை வாங்கியவன், அதை பருகும் போது, தன்னுடைய அலைபேசியை எடுத்து நோண்ட துவங்கினான்.
அவன் அலைபேசியையில் இணைத்ததும், ‘டிங்’ என்ற ஒலியோடு நிறைய புலன செய்திகள் எட்டிப் பார்க்க, வரிசையாய் ஒவ்வொன்றாய் திறந்து பார்த்து வந்தவன், இசை...