Advertisement

சலனம் – 10 
“ஹாய் யாழிசை..!’’ தன் முன்பு கேட்ட குரலில் இசை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே புன்னகை மன்னனாய் ரியாஸ் நின்றுக் கொண்டிருந்தான். யாரோ என்ற குழப்பத்தில் சுருங்கிய முன் நெற்றி விரிய, முகம் மலர புன்னகைத்தாள். 
“ஹாய் பாஸ்..! என்ன அதிசயமா ஸ்க்ரூ டிபார்ட்மென்ட் தேடி டெஸ்ட்டர் வந்து இருக்கு..?’’ என்று ஆச்சர்ய பாவனையில் விழிகளை விரித்தாள். 
“யம்மாடி..! ஏய் நான் ஒல்லியா இருக்கேன்னு என்னை டெஸ்டர்ன்னு நக்கல் அடிக்கிறியா.. இல்ல டெஸ்டிங் டிபார்ட்மென்ட்னு சிம்பாலிக்கா சொல்றியா தெரியலையே தாயே…! கொடுக்கு வெளிய நீட்டிட்டு இருக்கும் போது தெரியாம வந்துட்டேன் போலையே.’’ ரியாஸ் புலம்புவது போல நக்கல் அடிக்க, ரியாசின் பின்னால் தோழிக்கான காபி கோப்பையை சுமந்து வந்த கவி, இசையின் மலர்ந்த முகம் கண்டு ஆச்சர்யம் கொண்டாள். 
“என்னடா இது… நான் போகும் போது மழையில முங்கின சென்னை மாதிரி சோக போஸ் கொடுத்துட்டு இருந்தா .. இப்ப என்னடான்னா கப்பை கைல வாங்கின சென்னை சூப்பர் கிங்க்ஸ் மாதிரி இளிச்சுட்டு இருக்கா. ஒரு வேலை ரியாஸ பார்த்து இப்படி பீல் ஆகுறாளா…? இவன் ஒன்னும் அவ்ளோ வொர்த் பீஸா எனக்கு தெரியலையே… ம்ம்ம்…. என்னடா நடக்குது இங்க…?’’ 
கவி தன் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க, கவியின் வருகை உணர்ந்த ரியாஸ் திரும்பினான். கவி முன்னே செல்ல வழிவிட்டவன், “வந்துட்டாங்கமா உங்க பொண்ணு தோழி… காபி கப்போட.. ஆனாலும் உக்காந்த இடத்துலயே ப்ரேக் எடுக்கவும் ஒரு குடிப்பினை வேணும் இல்லையா கவி..?’’ என்று தன பேச்சில் கவியை இழுத்தான். 
ஏற்கனவே மனதிற்குள் பட்டிமன்றத்தில் இருந்தவள், “இந்த வெட்டுக்கிளி இங்க எதுக்கு வெட்டியா சுத்துதுன்னு தெரியலையே ஆண்டவா..!’’ என்று  உள்ளுக்குள் அவனை காய்ச்சியவள், வெளியே மேலோட்டமாய் பதில் பேசாது சிரித்துவிட்டு தன் இருப்பிடம் நோக்கி நகர்ந்தாள். 
ஆனால் தோழிக்கும் சேர்த்து இசையே பதில் பேசினாள். “ஏன் டெஸ்டிங் சார்… நீங்களும் உங்க தோழரை வாங்கிட்டு வந்து தர சொல்லி உக்காந்த இடத்துல காபி குடிக்கிறது. யாரு கேக்கப் போறா..?’’ என்றவள் தன் காபி கோப்பையை ரசித்து அருந்த தொடங்கினாள். 
கையும் முகமும், காபிக் கோப்பையில் கவனமாய் இருந்தாலும், அவள் காதுகளோ ரியாஸ் உதிர்க்கும் வார்த்தைகளுக்காய் காத்திருந்தது. அவளும் மூன்று நாட்களாய் அலுவலகத்தில் எல்லா இடங்களிலும் சுற்றி சுற்றி தான் வருகிறாள். ஆனால் அவன் இருக்கும் தடயமே தென்படவில்லையே. 
இரண்டு நாள் விடுப்பில், நன்றாக அமர்ந்து யோசித்ததில் தான் நடந்து கொண்டது மிகவும் அதிகப்படி என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். ஆக அவனை நேரில் கண்டு ஒரு மன்னிப்பை வேண்டவும் முடிவு செய்திருந்தாள். ஆனால் தொடர்ந்து வந்த நான்கு நாட்களிலும் அவன் ஒரு நாள் கூட அவள் கண்களில் தென்படவே இல்லை. 
‘ஒ.. இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறதா..?’ தனக்குள் சிரித்துக் கொண்ட ரியாஸ், ‘என் பிரண்டு அங்க கதறிட்டு இருக்கான். ஜாலியா காபி குடிச்சிட்டு நீ கேள்வி கேட்டா உனக்கு நான் பதில் சொல்லணுமோ. இப்ப பத்த வைக்குறேன் பாரு இந்த பரட்டை..’ என்று தனக்கு தானே மனதிற்குள் கெத்து வசனம் பேசிக் கொண்டவன் வெளியில், 
“உங்களுக்கு விசயமே தெரியாத இசை. ஏற்கனவே என் மச்சான் கெத்து. இப்ப புது மாப்பிள்ளை வேற. காபிய என் மண்டையில வேணா கவுப்பான். பொறுப்பா உங்க பிரண்டு மாதிரி டேபிளுக்கு எல்லாம்… வாய்ப்பில்லை ராசா தான்.’’ என்று சொல்லிவிட்டு பெரிதாய் சிரித்தான். 
இவன் சிரிக்கவும், பக்கத்து இருக்கையில் இருந்த கவி அவனை ஓரப் பார்வையில் முறைக்க துவங்கியிருந்தாள். “ஆண்டாவா இந்த விளக்கமாத்து குச்சி சிரிப்பு காதை குடையுதே. யாராச்சும் வந்து இவன்கிட்ட இருந்து என் பிரண்டை காப்பாத்தனும் ஆண்டவா..” என்று மனதிற்குள் அவசரமாய் மனதிற்குள் கடவுளிடம் மனு கொடுத்தார். 
பாவம் அவள் அறியாதது, ‘நானே இவனை வைத்து தான் காய் நகர்த்த வேண்டும். நீ சற்று பொறுத்துக் கொள் குழந்தாய்.’ என்று கடவுள் அவள் மனுவை அடுத்த நொடி நிராகரித்தது.    
புது மாப்பிள்ளை என்ற வார்த்தையில், அதிர்ந்த இசை, காபியை தன் மேல் லேசாய் சரித்துக் கொண்டாள். “ஷிட்..’’ என்றபடி தன் இருக்கையில் இருந்து எழுந்தவள், 
“சாரி…’’ என்று பொதுப்படையாக ரியாசிடம் வேண்டிவிட்டு, கழிவறை நோக்கி நடந்தாள். அவளின் முகத்தில் அதிர்வை கண்ட ரியாசின் முகத்தில் மின்னல் வந்திருந்தது. 
‘கண்டிப்பா.. சம்திங்… சம்திங் இருக்கும் போலையே…கண்டுபிடிப்போம்.’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், தன் இருப்பிடம் நோக்கி திரும்பும் போது, கவி தன்னை முறைப்பதை கொஞ்சமும் உணராது, ‘ஈ’ என்று அவளிடம் இளித்து வைத்தான். 
உடையில் சிதறியிருந்த காபி துளிகளை கழுவி முடித்தவள், முகத்தை நன்றாக நீரடித்து கழுவினாள். அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை கண்டு கசப்பாய் புன்னகைத்தாள். 
“அவ்ளோ தான் இசை.. ஆம்பளைங்க லவ்… வாழ்க்கை முழுக்க என் கூட வரியான்னு என்னை கேட்டு ஆறு நாள் முடியல. ஐயா அதுக்குள்ள புது மாப்பிள்ளையாம். பாட்டி சொல்றது எல்லாம் சரி தான் இல்ல. புருஷன் செத்தா பொண்டாட்டி மூளி. பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்பிள்ளை. அதுக்குள்ள அவன் மனசுல இருந்த உனக்கு பாடை கட்டிட்டானே இசை.’’ என்று தனக்குள் மறுகியவள், வெளியில் காட்டிக் கொள்ள தெளிந்த முகத்துடனே வெளியேறினாள். 
அன்றைக்கு மாலை ரியாஸ் கவியிடம் வந்து நின்று, “உங்க கூட கொஞ்சம் பேசணும். எங்க மீட் பண்ணலாம்.’’ என்று கேட்ட போது உண்மையில் கவி மிரண்டு போய்விட்டாள். 
“எதுக்கு.. ஏன்.. என்னாச்சு..?’’ என்று கவி பீதிபடிந்த முகத்தோடு வினவ, ரியாஸ் அவள் முகம் காட்டிய தோரணையில் பொங்கி சிரித்தான். 
“ஹா.. ஹா… கவி என்ன இது இப்படி ஒரு ரியாக்சன். கூல். எனக்கு ஏற்கவே ஆள் இருக்கு. நீங்க வேற பயந்து என்னை பயம் காட்டாதீங்க. நான் உங்களை தனியா மீட் பண்ண கூப்பிட்டது உங்க பிரண்ட் இசை பத்தின விஷயம். இப்போதைக்கு இது போதும். நைட் ஒரு ஏழு மணிக்கு பீச்ல மீட் பண்ணலாமா..? நம்பி வாங்க உங்களை பத்திரமா திருப்பி அனுப்புறேன்.’’ என்றுவிட்டு ரியாஸ் கோடாய் புன்னகைத்தான். 
‘சரி’ என்றதின் அடையாளமாய் கவி தலையை மட்டும் உருட்டி சென்றாள். ‘என்னடா இது இந்தப் பொண்ணு உத்து பாத்தே நம்மளை சாச்சிடும் போல. பேகம் கையில வாக்குவம் கிளீனரை தூக்கிட்டு துரத்துமே. அதனால அப்படியே சைட்டோட நிப்பாட்டிகுவோம். அதுதான் நமக்கு வசதி.’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் வெளியே சத்தமாக, 
“ஒரு லட்டு பிகரு நோ சொன்னா.. நீ அட்டு பிகரை காதலி… கட்சி தாவல் இங்கே தர்மமடா.. ஹோ ஹோய்..’’ என்று பாடிக் கொண்டே தன் பல்சரை நோக்கி நடந்தான்.     
கடற்கரை வழக்கப்படி ரியாசும், கவியும் ஆளுக்கு ஒரு சுண்டல் பொட்டலத்தை கையில் ஏந்தியபடி அந்த கடற்கரை மணலில் அமர்ந்தார்கள். 
சூரியன் முழுதாக மறைந்திருக்க, நிலா அப்போது தான் தன் ஆதிக்கத்தை வான் வெளியில் துவக்கியிருந்தது. 
இரண்டு நிமிடங்கள் பொதுப்படையான விடயங்களை பேசிய ரியாஸ், பிறகு அமுதன் தன்னிடம் ஒப்புவித்த அத்தனையும் ஒற்றை வரி விடாமல் கவியிடம் சமர்ப்பித்து இருந்தான். 
கவி தன் கையிலிருந்த சுண்டலை மறந்து, வாய் திறந்து ரியாசின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். தான் ஊரில் இல்லாத ஒரு பத்து நாளில் தோழியின் வாழ்வில் இத்தனை விஷயங்கள் நடந்திருக்கிறதா என்று மலைத்துப் போனாள். 
சற்று நேரம் மௌனமாய் கடல் அலைகளை வேடிக்கைப் பார்த்தவள், “இதுல நாம என்ன பண்ண முடியும் சார். இசை பேசின விதம் வேணா தப்பா இருக்கலாம். ஆனா அவ சொன்ன விஷயம் எனக்கு சரின்னு தான் தோணுது. அவ வளர்ந்த சூழல் வேற. கண்டிப்பா இது ஒத்து வரும்னு எனக்கும் தோணல.” என்றாள். 
அவளை ஒரு புன்சிரிப்போடு ஏறிட்ட ரியாஸ், “எந்த காலத்துல இருக்கீங்க கவி. சக மனுசங்க மேல வர அன்பு, எல்லாத்தையும் தாண்டின ஒரு விஷயம். அதுவும் வாழ்கை துணைன்னு முடிவு பண்ணி வர அன்பு… அது எந்த விசயத்தையும் தன் துணைக்காக விட்டுக் கொடுத்து அனுசரிச்சி போகும்.’’ என்றவன் தானும் சற்று மௌனத்தில் ஆழ்ந்தான். 
பின்பு ஆற்றாமை நிறைந்த குரலில், “ஆனா சின்ன சின்ன விசயத்துக்காக அந்த அன்பை மனசுக்குள்ள பூட்டி வச்சி, நாடகமா வெளிய ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்தா அதை விட பெரிய வலி இந்த உகலத்துல வேற இல்ல கவி. இசைக்கு அமுதன் மேல நாட்டம் இல்லைன்னு நினைக்குறீங்களா… இருக்கு. அதை வெளிக்காட்டமா இதோ இப்ப நீங்க சொன்ன மாதிரி ஒத்து வராதுன்னு நினச்சி ஒதுங்கி போறாங்க. இதனால வலியை அனுபவிக்க போறது அவங்க மட்டும் இல்ல. அவங்களோட சேர்ந்து என் நண்பனும் தான். என்னோட பிரண்ட் வாழ்க்கை முழுக்க வலியை சுமந்துட்டு அலையப் போறதை உங்களைப் போல என்னால பார்க்க முடியாது கவி..’’ அந்த வார்த்தைகளை உதிர்க்கும் போது அப்படி ஒரு பிடிவாதம் அவன் குரலில். 
ரியாசின் முகத்தை திரும்பிப் பார்த்தவள், அதில் என்ன கண்டாளோ உடனே, “சரி..! நான் என்ன செய்யணும் சொல்லுங்க செய்றேன். ஆனா என்னால இசையை கட்டாயப்படுத்த எல்லாம் முடியாது. முடிவு எப்பவும் அவ விருப்பம் தான் என்றாள்.’’ 
கவியை பார்த்து புன்னகைத்தவன், “உங்களை யாரும் கட்டயாம் எல்லாம் படுத்த சொல்லலை. அதுக்கு அவசியமும் இல்லை. அவங்க ஏன் அமுதனை ரிஜக்ட் பண்ணாங்கன்னு தெரிஞ்சிட்டு வந்து சொல்லுங்க. சரி பண்ண கூடிய விசயமா இருந்தா சரி செய்வோம். அவ்ளோ தான். அப்படியே அவங்க வீட்டு ஆளுங்க.. யார் கால்ல விழுந்தா காரியம் நடக்கும் இது எல்லாமும் தெரிஞ்சி சொன்னா நல்லா இருக்கும்.’’ என்றான். 
“ஓகே சார்..! டைம் ஆச்சு. நான் கிளம்புறேன். மறுபடி நாம ஒரு இரண்டு நாள் கழிச்சி இதே இடத்துல மீட் பண்ணுவோம். நான் அதுக்குள்ள முடிஞ்ச அளவு இசையை பத்தி தெரிஞ்சிக்கிறேன்.’’ என்றவள் எழுந்து தன் உடையில் ஒட்டியிருந்த மண் துகள்களை தட்டினாள். 
ரியாசும் எழுந்து அவளை போலவே பின்பக்கம் தட்டி விட்டு, “ஓகே கவி. சீக்கிரம் நம்ம பிரண்ட்ஸ் லைப் செட்டில் ஆக உழைப்போம்.’’ என்றபடி அவளின் புறம் கைகளை நீட்டினான். 
அவளும் ஒரு புன்னகையோடு, அவனின் கரம் பற்றி குலுக்கிவிட்டு, “பிரண்ட் லைப் இருக்கட்டும். உங்க லைப் செட்டில்மென்ட் எப்ப…! அதான் ஆளும் ரெடியா இருக்கே. சட்டு புட்டுன்னு மேரேஜ் பண்ணா எங்களுக்கு பிரியாணி கிடைக்குமில்ல.’’ என்றபடி வெளியே நடந்தாள். 
‘ஆள் இருந்தா நான் ஏன்மா உன்ன பீச்சுக்கு வர சொல்லி மொக்கப் போட போறேன்.’ என்று மனதிற்குள் கவுன்டர் கொடுத்துக் கொண்டவன், “அதெல்லாம் இன்னும் ஒரு ஒன் இயர் ஆகும் கவி. அவங்க இப்ப தான் பைனல் இயர் ஸ்டடிஸ்ல இருக்காங்க.’’ என்று ஒரு பிட்டை போட்டு வைத்தான். 
“ஓ..’’ என்றவள், அதன் பிறகு மௌனியாகிவிட, ரியாஸ் மாறிவிட்ட அவள் முக பாவங்களையே கவனித்திருந்தான், ‘இதேதுடா வம்பா போச்சு…’ என்பது போல். 
அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவர்களின் சந்திப்பு வழமையானது. கவி எத்தனை தான் இசையிடம் பேச்சுக் கொடுத்தாலும் அவளைப் பற்றி முழுதாய் அவளால் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. 
“இவ்ளோ தான் சொன்னா..!’’ என்று  கவி புலம்புவதும், “சரி விடுங்க..!’’ என்று நம் ரியாஸ் அவளுக்கு கசாட்டா வாங்கி தந்து அவள் உண்ணும் அழகை ரசிப்பதும் வாடிக்கையானது. 
அந்த வாரம் அவர்கள் அலுவகம் வெற்றிகரமாய் பெரிய ப்ராஜக்ட் ஒன்றை செய்து முடித்தது. மேலிடத்திலிருந்து பாராட்டுகள் வந்து குவிய, ரத்தோட், அந்த குழு முழுமைக்கும் பரிசளித்து கௌரவப்படுத்த விரும்பினார். 
அது குறித்து அவர் ரியாசோடு கலந்துரையாட, “சார்…! என்ன தான் நாங்க எல்லாம் டீம்ல இருந்தாலும்.. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் டெக்னிகல் ஹெட்டா இருக்க அமுதன் தான். சோ கண்டிப்பா நாம அவரை சர்ப்ரைஸ் பண்ணனும். இந்த வீக் என்ட் செலிபிரேசன் மீட்டிங்கை ஏற்காட்டுல வைக்கலாம் சார். எல்லா டீம் மெம்பர்சுக்கும் சின்னதா கிப்ட் கொடுத்து ஹானர் பண்ணிட்டு.. ரிட்டர்ன் வரும் போது அப்படியே சேலம்ல இருக்க அமுதன் வீட்டுக்கு போலாம். இந்த சன்டே அவருக்கு பர்த்டே. அங்க வச்சி நாம எல்லாரும் அவர் பார்த்டே செலிபரேட் பண்ணா ரொம்ப சந்தோசப்படுவார் சார்..! என்றான். 
ரத்தோட்டிற்கும் ரியாசின் யோசனை பிடித்திருக்க ஒப்புக் கொண்டார். இதில் ரியாஸ் அறியாது ஒன்று பிரச்சனைகளுக்கு வெளியே நிற்கிற அமுதனை வம்படியாய் தூக்கிப் போய் பிரச்சனைகளின் உள் தள்ளப் போகிறோம் என்பதை தான். 
சலனமாகும். 

Advertisement