Wednesday, April 24, 2024

    Vizhi Veppach Salanam

    Vizhi Veppach Salanam 27 1

    சலனம் – 27  ரியாசின் திருமணம் கலகலப்பாய் நடந்தேறிக் கொண்டிருந்தது. இஸ்லாம் வழித் திருமண வைபவத்தில் கவியின் சொந்தங்கள் அதிகம் பங்கேற்க மாட்டார்கள் என்றே ரியாஸ் எண்ணியிருந்தான்.  ஆனால் அவர்கள் அந்த எண்ணத்தை பொய்ப்பித்து, நடைபெற்ற ஒவ்வொரு சம்பர்தாயத்தையும் ஸ்ரத்தையாய் கேட்டறிந்து கொண்டிருந்தார்கள். கவி இயல்பாய் ரியாசின் தாய் ஹசீனவோடு ஒன்றிவிட்டாள்.  உம்மா முகம் திருப்பிக் கொண்டால் என்ன...

    Vizhi Veppach Salanam 26 1

    சலனம் – 26  அடித்து செல்லும் பேரருவியில் சிக்குண்ட நிலை அமுதனுக்கு. தாயின் கேள்விகளை முழுதாக உள்வாங்கி அவன் ஒரு முடிவெடுப்பதற்குள் ஒரு மணி நேரத்தில் அருள் ஊருக்கு கிளம்பியிருந்தார்.  செல்லும் முன், “உன் லைப் உன் கைல. எப்பவும் என்னை சந்தோசப்படுத்தனும்னு எதுவும் செய்யாத. உனக்கு எது சந்தோசத்தை தருமோ அதை செய்.’’ என்று விட்டு...

    Vizhi Veppach Salanam 26 2

    ரியாசின் கல்யாண விடயம் அவர்கள் அலுவலகத்தில் கசிந்ததும், ஒட்டு மொத்த அலுவலகமே அவனை ஓட்டி தள்ளியது. எந்நேரமும் ரியாசின் முகம் லேசாய் சிவந்த வண்ணத்தில் தான் இருந்தது.  ‘இது தான் புது மாப்பிள்ளை கலை போல’ என்று அமுதன் கூட அந்த முகத்தை மகிழ்வாய் ரசித்திருந்தான். ரியாஸ் திருமண செய்தி அறிந்த நான்காம் நாள் பிரகாஷ்...

    Vizhi Veppach Chalanam 25 2

    அவளின் மேலே தன் ஊடுருவும் பார்வையை நிலைக்க விட்டவர், “அந்த போட்டோவை மேகசின்ல வர யார் காரணம் தெரியுமா...?’’ என்று அருள் நிறுத்த, ரியாசின் இதயம் ஒரு நிமிடம் லயம் தப்பி துடித்தது.  ‘இவங்க பையன் காதலை சேர்த்து வைக்க கடைசியா என்னை பலி கொடுக்கப் போறாங்க போலையே...!’ என ரியாஸ் உள்ளுக்குள் அலறிக் கொண்டிருக்கும்...

    Vizhi Veppach Chalanam 25 1

    சலனம் – 25  இசையின் குடும்பம் உற்சாகமாய் விளையாட்டில் ஆழ்ந்திருக்க, வாயில் மணி அழைத்து அவர்களை கலைத்தது. கணவன், மற்றும் மகள்களின் அருகே அமர்ந்து அவர்களை சுவாரசியமாய்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, ஷாலினி யார் வந்திருப்பது என்று காண எழுந்து சென்றார்.  ஆனால் அப்பொழுதும் மற்ற நால்வரும் தங்கள் கவனத்தை வேறு எதிலும் திசை திருப்பமாமல் சுண்டாட்ட...
    அடுத்து இசையும் தன் பணியை தொடர, தங்கள் வீட்டை உறவினர் ஒருவரின் மேற்பார்வைக்கு விட்டவர், சென்னையில் வாடகை வீடு பார்த்து தங்கள் இருப்பிடத்தை அங்கே மாற்றினார். அந்த யோசனையை அவருக்கு வழங்கியதே ஷாலினி தான்.  ஷாலினி இசையுடன் மேலே விழுந்து பழகவில்லையே தவிர, அவள் தேவைகளை யாரின் கவனத்தையும் கவராமல் அமைதியாய் கவனித்துக் கொண்டார்.  அதுவே இசையை...
    சலனம் – 24 அமுதனுக்கு அன்றைய பொழுது வழமையாய் தான் விடிந்தது. தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காபி கோப்பையை வாங்கியவன், அதை பருகும் போது, தன்னுடைய அலைபேசியை எடுத்து நோண்ட துவங்கினான்.  அவன் அலைபேசியையில் இணைத்ததும், ‘டிங்’ என்ற ஒலியோடு நிறைய புலன செய்திகள் எட்டிப் பார்க்க, வரிசையாய் ஒவ்வொன்றாய் திறந்து பார்த்து வந்தவன், இசை...
    சலனம் – 23  அமுதன் அழைத்த அலைபேசியை அப்படியே மௌனத்தில் ஆழ்த்திவிட்டு யாழிசையின் முகம் பார்த்தான். அவள் முகமோ கசப்பான உணர்வுகளை பிரதிபலித்து நின்றது.  அவள் ஏன் தன்னிடம் அப்படி ஒரு முகபாவத்தை வெளிப்படுத்துகிறாள் என புரியாத அமுதன் அவள் முகத்தையே பார்த்திருக்க, “நான் இப்படியெல்லாம் உங்ககிட்ட கெஞ்சுவேன்னு நினச்சி தான நீங்க அப்படி ஒரு காரியத்தை...
    “வா... அண்ணாத்தை...! அமெரிக்கா பூட்டன்னு கேள்விப்பட்டேன். ஆனா படா மாஸா திரும்பி வந்து கீறப்பா. எனக்கு சென்ட் கின்ட் எதுனா வாங்கின்னு வந்தியா.’’ என்றான்.  “சென்ட் தானே வாங்கிட்டா போச்சு. சரி ஏற்பாடுலாம் எப்படிடா போகுது. எல்லாம் முடிஞ்சதா.’’ எனக் கேட்டான்.  “எல்லாம் ரெடியா கீதுபா. அந்த சேனல்காரனுங்க வரத்து ஒண்டி தா பாக்கி. சரி தர்பூஸ்...
    சலனம் – 22 “தமிழு.’’ அருள் தன் கையை பிடித்து இழுத்து நிறுத்தவும் தான், தன் செயலின் வீரியம் அமுதனுக்கு உரைத்தது. அவன் அப்படியே திகைத்து நிற்க, “நாம இப்படி போகணும்.’’ என்று பற்றிய கைகளை விடாது அவனை வாயிலை நோக்கி வழி நடத்தி வந்தார்.  ரியாசும் சற்றே கலவையான உணர்வுகளில் இருந்தான். இராணி தான் வரிசையில்...
    சலனம் – 21  தன்னைக் காண வந்த அமுதனை தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அணைத்துக் கொண்டார் ரத்தோட். “வெல்கம் பேக் அமுதன்.’’ என்று.  அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர், மீண்டும் அமர்ந்த பின், “ரொம்ப அழகாயிட்ட மேன்.’’ என்று தமிழை வழக்கம் போல உடைக்க, அவரின் பாராட்டில் லேசாய் முகம் சிவந்தவன், “தாங்க்ஸ் சார்.’’ என்றான்.  அவன்...
    சலனம் – 20  ஆறு மாதங்களுக்குப் பின்.  விமான நிலையத்தின் பரிசோதனை பகுதியிலிருந்து வெளிவந்த அமுதனை ரியாசிற்கு ஒரு நிமிடம் அடையாளமே தெரியவில்லை. அருகில் அமுதன் நெருங்கி வர பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான்.  இருவரின் அணைப்பின் அழுத்தமும் உணர்த்தியது அவர்களுக்கான நட்பின் இறுக்கத்தை. நண்பனை சற்று தள்ளி நிறுத்தி மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், “ஆளே மாறிட்டடா...
    சலனம் – 19  பானுமதியின் இல்லத்தை அடையும் போது, யாழிசை அழுது சிவந்த விழிகளோடு பானுமதியின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்தாள். இவரை கண்டதும் எழுந்து அவள் உள் சென்றுவிட, ராஜ் அமைதியாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.  அவரை வாங்க என்று வரவேற்றவர், அருந்த நீர் கொடுத்து உபசரித்த பின், கவலைக் குரலில், “இப்படி ஆகும்னு நினைக்கவே...
    சலனம் – 18  அந்த அறையில் நிசப்தம், அசௌகர்யமான மௌனமாய் சூழ்ந்திருந்தது. நடக்கும் நிகழ்வுகளை நம்ப முடியா பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான் ரியாஸ். அருள் அம்மாவை இதுவரை சாதாரண இல்லத்தரசியாய் மட்டுமே பார்த்திருக்கிறான். வாழ்வில் முதன் முறையாக அவரை உடல் முழுக்க மூளை கொண்ட வழக்கறிஞராக காண்கிறான். ரியாஸ் சேலம் சென்ற போது, அவனை வரவேற்றவரிடம், முதலில் தயங்கினாலும்,...
    சலனம் – 17  தெருவில் இறங்கி நடந்த ராகவி, விறு விறுவென நடந்து சிறுவயதிலிருந்து எப்போதும் விருப்பமாய் செல்லும் பெருமாள் கோவில் வாசலில் சென்று நின்றாள்.  இரண்டரை கிலோ மீட்டர்கள் அனாயசமாய் நடந்து வந்திருந்தாள். அப்போது தான் கோவிலில் பெருமாளுக்கு நெய் வேத்தியம் செய்து சர்கரைப் பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  வரிசையில் நின்று அதை ஆவலோடு வாங்கிப் புசித்தவள்,...
    அதுவும் அவரின் மாமியார் வாய் சொல்லுக்கு பயந்து மூன்றே மாதத்தில் குழந்தையை தன் அன்னை வீட்டில் ஒப்படைத்து இருந்தாள். ராஜ் ஆறு மாதம் ஒருமுறை இரண்டு வருடங்கள் வந்தவன், தாயின் இறுதி ஆசைப்படி ஷாலினியை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டான்.  மாமனின் மனக்கவலை நன்றாக அறிந்தவள் ஆகையால், எதிர்பார்ப்பில்லா அன்பை பொழிந்து அவன் வாழ்விலும் வசந்தத்தை...
    சலனம் – 16  தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையை ஒருவாரு ஏற்று வாழப் பழகிக் கொண்டாள் ராகவி. மாமியாரிடம் அன்பு செலுத்த கற்றுக் கொண்டிருந்தாள்.  அவர்களுக்கு திருமணமாகி ஒருவாரம் உடனிருந்த ராஜ், தன் தாய் தனக்கு எத்தனை முக்கியம் என்பதை அவளுக்கு அப்படி உணர்தியிருந்தான். ஆம் மரிய புஷ்பத்தின் வாழ்க்கை அத்தனை கடினமானது.  சிறுவயதில் கணவன் இறந்துவிட, இரங்கல் பார்வைகளை...
    சலனம் – 15 அந்த தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டு புடவை சரசரக்க அங்கும் இங்கும் கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தார் மரியபுஷ்பம். ஒற்றை மகனின் திருமண வைபவத்தில் அவர் முகம் அத்தனை பூரித்திருந்தது.  ஜோசப் இருதயராஜ் மண மகனுக்குரிய கம்பீர உடையில் இருக்க, ஆலின்லீத்தியால் என்று திருச்சபையில் இரண்டு நாட்களுக்கு முன் ஞானஸ்நானம் பெற்று பெயரோடு...
    சலனம் – 14  ரியாஸ் முகத்தில் அப்படியொரு ரௌத்திரத்தை கவி இதற்கு முன் கண்டதே இல்லை. உடலெல்லாம் நடுங்கிப் போய் நின்றுக் கொண்டிருந்தாள். ரியாசிடம் தன்னிலை விளக்கம் கூட கொடுக்க முடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.  “உனக்கு படிச்சி படிச்சி சொன்னேன் கவி. இசைக்கு பிடித்தம் இருந்தாலும் ஒதுங்கி ஒதுங்கி போகுது, என்ன காரணம் தேடுன்னு. ஆனா நீ...
    அமுதன் தாயை தொடர்ந்து இறங்க, “அது என்ன நெத்தியில முட்டிக்கிறது.’’ என்றாள் அறியும் ஆவலில். முகம் கனிய அவளை நோக்கியவன், “எங்க பாசையில சாரி கேட்டேன். உன்ன அம்மாகிட்ட பிடிச்சி கொடுத்தேன்ல அதுக்கு. அம்மா உடனே அக்சப்ட் பண்ணிட்டாங்க. அதான் திரும்ப முட்டிட்டு போறாங்க.’’ என்றவன்,  “வா போய் வாஷ் பண்ணலாம்.. இல்லனா அம்மா சொன்ன...
    error: Content is protected !!